Wednesday, December 30, 2009
ரசித்து சிரிக்கவைக்கும் கலக்கல் பார்ட்டி!!!
அவருடைய ட்விட்டுகளை பார்த்தால் உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும், அவருடைய ட்விட்டுகள் சில கீழே இருக்கிறது, இவைகள் நான் மிகவும் ரசித்தவை... அவருடைய ட்விட்டர் முகவரி http://twitter.com/writerpayon
என் மகன் பகுத்தறிவுவாதியாகி விடுவானோ என்கிற பயத்தில் தினமும் அவனுக்கான காம்ப்ளானில் ஒரு சிட்டிகை விபூதி கலக்குகிறேன்.
பெண்கள் பேசும்போது மார்பை பார்க்கும் ஆண்களை தூற்றாதீர்கள். உலக சினிமா ஓடும்போது கீழே சப்டைட்டிலை பார்க்கிறோமல்லவா, அதுபோலத்தான் இதுவும்.
என் சமகால மனைவி எனக்களிக்கும் வேதனைகளை புரிந்துகொள்ள மட்டுமாவது இன்னொரு மனைவி இல்லாமல் வேலைக்கு ஆகாது போலிருக்கிறது.
சாருவின் வாசகர்களுடைய சராசரி வயது குறைந்துகொண்டே வருகிறது. விரைவில் அவர் குழந்தைகள் எழுத்தாளர் ஆகிவிடப் போகிறார்.
முட்டையிலிருந்து கோழியை படைப்பதா, கோழியிலிருந்து முட்டையை படைப்பதா? கடவுளின் முதல் சிக்கல்.
மாலை நேரங்களில் சற்று குளிராக இருக்கிறது. இருந்தாலும் உலகம் வெப்பமாதலை அலட்சியப்படுத்துவதற்கில்லை.
நாங்கள் சிறிது கண்ணியத்தை காப்பாற்றிக்கொள்ள முயல்கிறோம். சும்மாவிற்காகவா சமுராய் படங்களை பார்க்கிறோம்?
மனைவியுடனான தகராறுகளை கவனமாக கையாள வேண்டும். கரணம் தப்பினால் சரணம்.
மழை வந்தாலே வாசகர்கள் பயந்து சாகிறார்கள். நான் அதை வர்ணித்து மரண மொக்கை போடுவேனோ என்று.
காலை தெருவில் கொட்டாவி அடக்க கைதூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைபாட்டை தெளிவுபடுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது.
இமய மலை உருகிப் போவதற்குள் ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். ஆனால் இந்த மழையில் எங்கே போக முடிகிறது. #ஹோபன்கேகன்
புத்தக வெளியீடு என்றால் லாரியில் அனுப்பியது போல் வந்துவிடுகிறார்கள் கூட்டமாய். இங்கே என்ன அவிழ்த்துப் போட்டா ஆடுகிறோம்? வருகைக்கு நன்றி
என் மகன் எனக்கு சரியான இலக்கிய வாரிசாக வருவான் என தோன்றுகிறது. "அர்த்தம்னா என்னப்பா அர்த்தம்?" என்று கேட்கிறான்.
சுவற்றோரம் சமகால தனித்துவ எறும்பு வரிசை. நம்மிடம் இல்லாத ஒழுங்கு, அழகு என நினைத்துக்கொண்டேன், அவற்றின் மேல் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றியபடி.
என் ரேஞ்சிற்கு எனது அறையை யூனியன் பிரதேசமாக அறிவித்து அதற்கென்று தனி சீதோஷ்ண நிலையை ஒதுக்கீடு செய்வதுதான் நியாயம்.
புத்தக கடையில் ஒரு சிறுவன் கையில் நான் எழுதிய ஒரு குழந்தைகள் புத்தகம். அவன் பின்னட்டையை திருப்பி என் படத்தை பார்ப்பதற்குள் நடையை கட்டினேன்.
இன்று என் திருமண நாள். கொண்டாட மனைவி என் மாமியார் வீடு செல்கிறார். மாமனாரோ இங்கு வருகிறார். நானும் அவரும் கோவிலுக்கு போவதாக திட்டம்.
எம்ஜிஆரும் ரஜினிசாரும் பல பத்தாண்டுகளில் எட்டிய உயரத்தை ஒரு பத்தாண்டில் எட்ட முயன்றால் என்ன ஆகும் என்பதற்கு அஜித்தும் விஜயும் படிப்பினைகள்.
இவை நான் ரசித்த சில ட்விட்டுகள் மட்டுமே. இன்னும் பல இருக்கிறது அவருடைய பக்கத்தில்!
Monday, December 28, 2009
நாட்டாமைகள் அங்கீகார ஆணையம்
பொதுசனம்: நா.அ.ஆ வினால் யார் யார் எல்லாம் அங்கிகாரம் பெறலாம் அதுக்கு அடிப்படை தகுதி என்ன?
நா.அ.ஆ குழு: முதலில் வலைப்பதிவு இருப்பது ஒரு பேசிக் தகுதியாக இருந்தாலும் அதுமட்டுமே தகுதியாகிவிடாது, ஆகவே விருப்பம் உள்ளவர்கள் அப்ளிகேசன் அனுப்பினால் அவர்களின் வயது, பொறுமை, ஆகியவற்றை சோதித்து பார்த்துவிட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுப்போம். பின்அவர்கள் நாட்டாமைகள் ஆகலாம்.
Monday, December 21, 2009
எத்தனை பேரு திட்டப்போறாங்களோ?
(பயபுள்ள அவன் தூங்கும் பொழுது வீட்டில் இருக்கிறவங்களை சைலண்ட் மோடிலும், முழுச்சிருந்தா வைப்ரேசன் மோடிலும் தான் வெச்சு இருக்கான். முழுச்சிருந்தாலே அழுகைதான்:)
Sunday, December 20, 2009
என்ன கொடுமை சரவணன் இது?
அண்ணாச்சி வீட்டு கதவில் ஆரம்பிச்சு, பாத்ரூம் வரை அண்ணாச்சி அழைக்கிறார் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. ஒரு அண்ணாச்சியை பார்ப்பதே கஷ்டம் திரும்பிய பக்கம் எல்லாம் அண்ணாச்சி போஸ்டர் என்றால் சொல்லவா வேண்டும்?...திரையை சுற்றி சீரியல் லைட்,ஹோம்தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் என்று கலக்கலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
டேஸ்டி பிரியாணி என்றாலே அவ்வளோ அருமையான சுவையாக இருக்கும், அன்றும் அங்கிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, அனைவரும் சாப்பிட்டு விட்டு சுல்தான் பாய் வருவதுக்காக காத்திருந்தோம். கூட்டம் வரும் வரை நியூஸ் ரீல்ஓட்டுவது போல், போன வாரம் தேவாவின் இன்னிசையில் அண்ணாச்சி பாடிய பாட்டை போட்டார்கள், அதன் பிறகு ஜெஸிலா அவர்கள் பேசிய பட்டிமன்றத்தில் பேசிய வீடியோவும் போட்டார்கள். எதுக்கு கை தட்டுகிறோம் என்றுதெரியாமல் கை தட்டிக்கிட்டே இருந்தோம்!
பிறகு 2 மணிக்கு படம் ஆரம்பம் ஆனது. நான் ஊரில் இல்லாதப்ப என்னை விட்டு சுற்றுலா சென்ற குறையை சுற்றுலாவுக்கு வராதவர்களுக்கு சமர்பனம் செய்து அதை போக்கிவிட்டார் கீழை ராசா. பாட்டுக்கு பாட்டு போட்டியில் ஆசாத் பாய் பாடி முடிச்சதும் "என்ன கொடுமை சரவணன்" இது என்று பிரபு பேசும் டயலாக் பக்காவாக பொருந்தியது, சிரிக்காதவர்களையும் சிரிக்கவைக்கும். அடுத்து பிரியாணி சட்டியை தூக்கிக்கிட்டு போகும் பொழுது "எங்கே செல்லும் இந்த பாதை?..." பாட்டும், கார்த்தி பேசும் பொழுது "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்" டயலாக்கும் பக்கா மேச்சிங்.. மிகவும் அருமையாக இருந்தது...
இந்த முறை புதிதாக பலர் அபு அப்ஸர், ஹூசைனம்மா, கலைச்சாரல் மலிக்காவும்,அப்துல்மாலிக் ஆகியோர் வந்திருந்தனர், ஆனால் படம் முடிஞ்சதும் பலரும் எஸ்கேப் ஆகியதால் சரியாக யாரிடமும் பேச முடியவில்லை...
Wednesday, December 2, 2009
என்ன கொடுமை இது யுவன்?
யாரு பெத்த புள்ளையோ? (தனியாக வந்திருந்த பாக்கிஸ்தானி)
சிம்புவுக்காக என்ட்ரி மியுசிக் ”வல்லவன் வல்லவன்” என்று ஒரு இரண்டு நிமிடங்கள் போட்டபிறகு வந்து ”நலம் தானா நலம் தானா” பாட்டை பாடினார், பிறகுஅவரே திரும்ப லூசு பெண்ணே பாட்டையும் பாடிவிட்டு பை சொல்லிவிட்டு கிளம்பினார். ரொம்ப எதிர்பார்த்த ”வேர் ஈஸ் த பார்ட்டி” பாட்டை வேறு ஒருவர் பாடினார்...ரொம்ப அடக்கமாகவே வந்துரொம்ப அடக்கமாகவே பேசினார் சிம்பு.
(இவரு பாடினாலே நல்லா இருக்கும்!)
ரொம்ப அட்வான்ஸ் டெக்னாலஜியோடு புரோகிராம் நடத்தனும் என்று வந்திருக்கிறார், அதே டெக்னாலஜிதான் காலைவாரிவிட்டு விட்டது.
ஊரில் நடக்கும் லக்ஷ்மன் சுருதி, வானம்பாடிகள் போன்றோர்களின் நிகழ்ச்சி கூட அருமையாக இருக்கும்.
1) என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் முன்கூட்டியே வந்து ரிகர்சல், ஆடிசன் எல்லாம் பார்க்கவில்லை என்றால் இப்படிதான் சொதப்பும்.
2) கூட்டம் இல்லாததால் ஏதோ கடமைக்கே என்று நிகழ்ச்சியை நடத்தியது போன்று ஒரு உணர்வு, காம்பியரிங் யாரும் இல்லை, யார் பாட்டு பாடுகிறார்கள், அடுத்த பாட்டு என்ன போன்று எந்த அறிவிப்பும் கிடையாது. மூன்று தேவதைகள் பாடினார்கள் அவர்கள் பெயர் கூட தெரியவில்லை. (தேவதைகள் ஆல்வேஸ் மேட் இன் கேரளா என்று தனியாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.)
3)மிகவும் ரசனையாக இருந்தது பாட்டுக்கு ஏற்றமாதிரி பின்னாடி ஸ்கிரீனில் வந்த கிராப்பிக்ஸ் காட்சிகள், அத்தனை அழகு.
டிஸ்கி: கெஞ்சினேன், கதறினேன் டேய் கொடுத்த காசில் பாதியாச்சும் திரும்ப கொடுங்கடா போய்விடுகிறேன் என்று பாவி பசங்க கொடுக்கவே இல்ல:(
Wednesday, November 25, 2009
கும்மு கும்மி வாழ்த்தலாம் வாங்க!
புனைப்பெயர்: நாட்டாமை
வயது: இன்றோடு 60 (அனுஜன்யாவுக்கு நான்கு வயது இளையவர்)
தொழில்: நோட்டு அச்சடிப்பது.
உபதொழில்: சஞ்சய்க்கு பொண்ணு தேடுவது.( வயதான காலத்திலும் கஷ்டமான வேலை)
நண்பர்கள்: அண்ணாச்சி என்று அழைப்பவர்கள்
எதிரிகள்: அங்கிள் என்று கூப்பிடுபவர்கள்
பிடித்தது: சின்னபசங்க வெயிலான்,செல்வேந்திரன், அகல்விளக்கு இவர்களோடு ஊர் சுற்றுவது.
பிடிக்காதது: எல்லோரையும் போல ஆதியின் பதிவுகள். (அப்பாடா ஒரு ஆள் காலி)
சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு வீட்டுக்காரன் என்று பெயர் வாங்கியது. (புதுவீடு கட்டி குடிபோனது)
நீண்டகால சாதனை: தொழிலதிபராக இருப்பது
நீண்டநாள் ஆசை: மும்பை போகும் பொழுது கவிதை சொல்லாமல் இருக்ககூடிய அனுஜன்யாவை பார்க்கனும் என்பது.
சமீபத்திய ஆசை: அழகுகுட்டி குசும்பனை பார்க்கனும் என்பது
மேற்கண்ட படத்தில் இருப்பவர் இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வாங்க வாங்க கும்மலாம்...
Tuesday, November 24, 2009
கார்ட்டூன் குசும்பு 25-11-2009
பஜ்ஜி சாப்பிட பேப்பர் சப்ளை செய்யும் தமிழகதலைவரின் கடிதம்!
Sunday, November 22, 2009
ப்ளைட் வாங்க போனேன்! படங்களுடன்(அபாயகுறி)
ஏகப்பட்ட கெடுபிடி ஜட்டியோடு நிக்க விடாத குறையாக செக் செய்தார்கள். ச்சே என்னடா இதுன்னு நொந்துக்கொண்டே போனேன். பிறகுதான் தெரிந்தது ஏன் அப்படி கெடுபிடி என்று. உலகில் இருக்கும் பல நாடுகளின் விமானங்கள், போர் விமானங்கள் என்று அனைத்திலும் நாம் ஏறி பார்க்கலாம் என்பதால் தான் அப்படி கெடுபிடி. பல அரபிகள் பிடிச்ச பிளைட்டை பேசி விலைக்கு வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்த ஏர் ஷோ 5 மணி வரை நடந்தது, நின்ன இடத்தில் இருந்து சுற்றுவட்டாராம் அதிர கிளம்பும் அமெரிக்க போர் விமானம், அவனோட கண்போலவே இனிக்கியோண்டு சைனா ப்ளைட் இவர்கள் வானில் போட்ட ஆட்டம் பார்க்க அதிரடியாக இருந்தது.
12 பேர் வரை பயணம் செய்யக்கூடிய ஹெலிகாப்டர், உள்ளே இருக்கும் பெண்ணையும் சேர்த்து கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டானுங்க அதனால் இதை வாங்கவில்லை.
எங்க ஆரம்பிச்சு எங்க துடைச்சு முடிப்பதுன்னு தெரியலையே, ஒட்டகத்துக்கு பதிலா திடிர் என்று ப்ளைட்டை கொடுத்தா என்ன செய்வேன் அவ்வ்வ்வ்வ்
வெளியில் அம்புட்டு காத்தாடி வெச்சு இருக்கானுவோ, உள்ளார ஒன்னு கூட இல்ல அதான் இதையும் வாங்கவில்லை, அமெரிக்க போர் விமானம்.
அழகிய லைலா டன் டன் டன் மன்மத புயலா டன் டன் டன்(இப்படிதானே ரம்பா அம்மாம் பெரிய காத்தாடிக்கு முன்னாடி நின்னு ஆடும்) அதான் நானும் அப்படி நின்னு பார்த்தேன்!
Wednesday, November 18, 2009
வலைப்பதிவர்களின் டீலா நோ டீலா! (கேம் ஷோ)
வால்பையனுக்கு ரூல்ஸை சொல்லுகிறார் ரிஷி, இங்க பாருங்க இந்த பக்கம் புகையிலை, பீடி, சிகரெட், பில்டர், கஞ்சா, சாராயம், கள்ளு, பீர், ஒயின், விஸ்கி, பிராந்தி, ஓட்கா, டகிளா,ஷாம்பெயின் என்று ஒவ்வொரு பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியிலும் ஒன்னு ஒன்னு இருக்கும். நீங்க ஒரு பெட்டிய எடுத்து இங்க வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் ஓப்பன் செய்ய சொல்லனும். அப்படி ஓப்பன் செய்யும் பொழுது டீல் பேசுவோம், உங்க பெட்டியில் விலை அதிகமான ஷாம்பெயினும் இருக்கலாம், இல்ல பீடி கட்டும் இருக்கலாம். உங்க லக்கை பொருத்து.
ரிஷி: இப்ப முதல் ரவுண்ட்
வால்: எனக்கு ஒரு லார்ஜ்
ரிஷி: யோவ் இது விளையாட்டோட முதல் ரவுண்ட், இப்ப என்ன செய்யனும் நீங்க அங்க நிக்கிற பொண்ணுங்க கையில் இருக்கும் பெட்டியை ஓப்பன் செய்யனும்!
வால்: முதலில் அவுங்களை எனக்கு பாலோயரா ஆக சொல்லுங்க அப்புறம் நான் அவுங்க பாலோயரா ஆகி அப்புறம் ஓப்பன் செய்கிறேன், எனக்கு பாலோயரா இல்லாதவங்க பொட்டிய எல்லாம் நான் ஓப்பன் செய்வது இல்லை!
ரிஷி: நீங்க ரூல்ஸை பாலோ செய்யாததால் உங்களை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறேன்.
வால்: ஹல்லோ அப்ப முதலில் ரூல்ஸை என்னை பாலோ செய்ய சொல்லுங்க, நான் உடனே ரூல்ஸை பாலோ செய்யுறேன், இதுதான் என் கொள்கை!
ரிஷி: ஆண்டவா...........
அடுத்து தண்டோரா!
ரிஷி: சார் உங்களை அறிமுக படுத்திக்குங்க!
தண்டோரா: என் அடுத்தவரி பெயர் அடுத்தவரி தண்டோரா அடுத்தவரி ஆச்சரியகுறி.
ரிஷி: என்ன சார் அது அடுத்தவரி அடுத்தவரின்னு சொல்றீங்க?
தண்டோரா: என் பெயரை கவிதையா சொன்னேனுங்க, எழுதும்பொழுது என்றால் ஒரு Enter தட்டி தட்டி கவிதையா மாத்திடுவேன், பேசும்பொழுது இப்படி சொன்னாதானே கவிதைன்னு புரியும்.
ரிஷி: என்ன கொடுமை சார் இது?
தண்டோரா: ஆஹா பின்னூட்டம் வேற போட்டுவிட்டீங்களா?
ரிஷி: என்னது பின்னூட்டமா?
தண்டோரா: ஆமா நான் சொன்ன கவிதைக்கு நீங்க சொன்ன பின்னூட்டம் என்ன கொடுமை இது! இதையும் கவிதையா என்ன அடுத்த வரி கொடுமை அடுத்தவரி இது அடுத்தவரி கேள்விகுறின்னு சொல்லி இருந்தீங்கன்னா நீங்களும் கவிஞரா ஆகி இருக்கலாம்.
ரிஷி: ஆஹா வேண்டாம் சார் வாங்க ஆட்டத்துக்கு போகலாம். இப்ப அங்க நிக்கும் பொண்ணுங்க கையில் இருக்கும் பொட்டிய எதையாவது ஒன்னை ஓப்பன் செய்ய சொல்லுங்க.
தண்டோரா: மூன்றாவது அடுத்தவரி வரிசையில் அடுத்தவரி இரண்டாவதாக அடுத்தவரி நிற்கும் அடுத்தவரி பெண்ணின் அடுத்தவரி கையில் அடுத்தவரி இருக்கும் அடுத்தவரி பெட்டி அடுத்த வரி எண் அடுத்தவரி இருபத்தி அடுத்தவரி மூன்று அடுத்தவரி திறங்க.
ரிஷி: போன் ரிங் ஆகிறது... சார் இப்ப கால் வந்துச்சு... நீங்க இதுமாதிரி கவிதை சொல்லாம இருந்தா இப்பவே ஷாம்பெயின் பாட்டிலை உங்களுக்கு தருவதாக சொல்லுகிறார், சொல்லுங்க டீலா, நோ டீலா!
தண்டோரா: டீ அடுத்தவரி
ரிஷி: அய்யய்யோ
****************
கேபிள் சங்கர்
ரிஷி: மனசுக்குள்(ஆஹா இவரிடம் அறிமுக படுத்திக்க சொல்லலாமா வேண்டாமா? இவரும் அவரை போல் கவிஞரா இருந்துட்டா?)
(கேபிள் சங்கர், ரிஷியிடம் இன்னொரு சேர் கொண்டு வர சொல்லுங்க என்கிறார், ரிஷி இல்ல சார் நீ மட்டும் தான் இதில் கலந்துக்கமுடியும் வேறு யாரும் ஹெல்புக்கு எல்லாம் வெச்சுக்க கூடாது என்கிறார், இல்லை இல்லை எனக்குதான் இன்னொரு சேரும் என்று சொல்லியபிறகு அவர் கொண்டு வந்த சேரில் தன் தொப்பையை பார்க் செஞ்சுட்டு ஆரம்பிக்கிறார்)
கேபிள்: ஹல்லோ இரண்டாவது வரிசையில் மூன்றாவதா நிற்க்கும் பியூட்டி உன் தலை முடியில் இரண்டு முடி லைட்டா கலைஞ்சு போய் இருக்கு பாரு, அந்தா நாலாவது பொண்ணு மேக்கப் கொஞ்சம் ஹார்டா இருக்கு பாருங்க அதை கொஞ்சம் டச்சப் செய்யுங்க, அந்த கடைசி வரிசையில் நிக்கும் இரண்டாவது பொண்ணு சூப்பரா இருக்கு அதை முதல் வரிசைக்கு கொண்டு வாங்க, மூன்றாவது வரிசையில் இருக்கும் பெண் மேல் படும் லைட்டிங் கொஞ்சம் அவுட்டாப்போக்கசில் இருக்கு அதை கொஞ்சம் சரி செய்யுங்க....
ரிஷி: சார் நிறுத்துங்க...சார் நிறுத்துங்க
கேபிள்: கொஞ்சம் லைட்டிங்கில் கிரீன் டோன் இருக்கிறமாதிரி பார்த்துக்குங்க...அப்புறம் கடைசியில் நாலாவதா நிக்கிறபொண்ணு பிரா கொஞ்சம் வெளியில் தெரியுது இன்னும் நல்லா தெரியுற மாதிரி அட்ஜெஸ் செய்யுங்க..
ரிஷி: சார் நீங்க டைரக்டரா?
கேபிள்: ஆமாம், இதுவரை ஒரு 20 இங்கிலீஸ் படம், ஒரு 30 தமிழ்படம், ஒரு 10 தெலுங்குபடம்...
ரிஷி: இவ்வளோ படம் டைரக்ட் செஞ்சு இருக்கீங்களா? சார் பிளீஸ் சார் எனக்கு அடுத்த படத்தில் சான்ஸ் கொடுங்க சார்...
கேபிள்: இதுக்கு எல்லாம் விமர்சனம் எழுதி இருக்கிறேன்னு சொல்ல வந்தேன்...முதலில் நீங்க மூனு நாளா டாய்லெட் போகாதவன் போல மூஞ்ச வெச்சுக்கிட்டு டீலா நோ டீலான்னு கேட்பதைமாத்தனும், தானாவே உங்களுக்கு சான்ஸ் தேடிவரும்.
ரிஷி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*********************
பைத்தியக்காரன்
ரிஷி: சார் வணக்கம்
பைத்தியக்காரன்: வணக்கம்மா! நல்லா இருக்கியாம்மா?
ரிஷி: நல்லா இருக்கேன் சார்! ஆட்டத்துக்கு போகலாமா சார்?
பைத்தியக்காரன்: இரும்மா, (பொண்ணுங்களை பார்த்து) ஏம்பா கையில் இருக்கும் பொட்டிய மூடி வெச்சுக்கிட்டு மத்ததை எல்லாம் திறந்து வெச்சு இருக்கீங்களே? இது நல்லாவா இருக்கு?கொஞ்சம் ஒழுங்கா உடம்பை மூடுவது போல் ட்ரஸ் போட கூடாதாப்பா?
ரிஷி: மனசுக்குள் (என்ன இவரு என்னை என்னமாங்கிறார், பொண்ணுங்களை என்னப்பா என்கிறார்) சார்...
பைத்தியக்காரன்: மன்னிக்கனும், நான் விளையாட வரவில்லை என் கருத்தினை இங்கு பதிவு செய்யவே வந்தேன். இது என்னோட கருத்து மட்டுமே, கருத்தினை யார் மேலும் நான் திணிக்கவில்லை, கருத்து சொல்வது என் கடமை அதை கேட்பதும் கேட்காமல் போவதும் உங்கள் உரிமை. நன்றி வருகிறேன்.
ரிஷி: நன்றி நான் சொல்லனும் சார்! ரொம்ப நன்றி!(நல்லவேளை போர்வையோட வந்து எல்லோரையும் போத்திவிட்டு போகாம போகிறாரே)
Monday, November 16, 2009
ச்சீ ச்சீ ஊரா இது!
சரி இதை விடுங்க நம்ம மேட்டருக்கு வருவோம்... நண்பர்களை சீண்டுவதில் இருக்கும் சுகமே சுகம் தான்.
சென்னை வந்ததும் போன் செய்டா வந்து பிக்கப் செஞ்சுக்கிறேன் என்று நண்பன் சொல்லி இருந்தான், சரி என்று இறங்கியதும் போன் செஞ்சேன் ஒரு 5 நிமிடத்தில் வந்துவிட்டான். ஏறி கொஞ்ச தூரம் போனதும் மச்சான் கொஞ்சம் ஏசியை ஆன் செய்யேன் ரொம்ப புழுக்கமா இருக்கு என்றேன், என்னமோ கெட்ட வார்த்தையில் திட்டியது போல் முறைச்சான், ஏன்டா நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று முறைக்கிற ஏசி ஒர்க் ஆவாதா என்றேன், டேய் ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கிட்டு வா இல்ல வாயிலேயே குத்து வாங்குவ என்றான், என்னடா இது இப்படி வன்முறையா பேசுற ஏசி போடமுடியும் இல்ல முடியாதுன்னு சொல்லு அதுக்கு எதுக்கு அடிப்பேன் உதைப்பேன் என்று சொல்லிக்கிட்டு என்றேன், ஓரம் கட்டி நிறுத்திவிட்டு இங்க இறங்கி வீட்டு அட்ரஸுக்கு ஆட்டோ புடிச்சு வா அப்பதான் நீ சரி வருவ என்றான், சரி ஆட்டோவிலாவது ஏசி இருக்குமா என்றேன்..%#$^$%$%^$^$@@$@@$@ திட்டிக்கொண்டேதிரும்ப பஜாஜ் பல்சரை ஸ்டார்ட் செஞ்சான்:)
மறுநாள் பஸ்ஸில் போகும் பொழுது மழை பேஞ்சு தண்ணி உள்ளே ஒழுகியது, அவனுக்கு போன் போட்டு ரெயின் கம்மிங் இன் சைட் பஸ் யா! இட்ஸ் டூ பேட் யா, நான் இப்ப என்ன செய்ய என்றேன், ங்கொய்யாலே அப்படியே பஸ்ஸில் இருந்து கீழே குதிச்சு சாவுடா என்றான். :((
பைக் எடுத்துக்கிட்டு கோயிலுக்கு போக சொன்னான், போகும் பொழுது ஹெல்மெட்டை கொடுத்து போட்டுக்க என்றான், கையில் ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டு அதை இப்படியும் அப்படியும் பார்த்தேன், டேய்............ ஒரு மயிறும் நீ கேட்காத கேட்ட அதாலேயே அடிவாங்குவ, இதுல ஏசி எல்லாம் இருக்காது வேண்டும் என்றால் போட்டுக்கிட்டு போ இல்ல போய் ட்ராப்பிக் போலீஸ் கிட்ட 200ரூபாய் பைன் கட்டு என்றான். ஓ ஒன்லி 15திர்ஹாம் பைன் தானா? இன் துபாய்ன்னு... ஆரம்பிக்கங்காட்டியும் அடிக்க வந்ததால் எஸ்கேப் ஆயிட்டேன்...
ஒருநாள் மதியம் சாப்பிட்டு விட்டு தட்டை வெச்சுக்கிட்டு மச்சான் டஸ்ட்பின் எங்க இருக்குடா என்றேன்.... ஹி ஹி திட்டியதை சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு.
ஊருக்கு கிளம்பும் பொழுது டேய் போன் செஞ்சு எத்தனை முறை கேட்டேன் என்னடா வேண்டும் என்னடா வேண்டும் என்று ஒன்னும் வேண்டாம் வேண்டாம் என்ற... என்றேன். இங்கயே எல்லாம் கிடைக்குதுடா அதான் வேண்டாம் என்றேன் என்றான். சரி அப்ப எனக்கு தெரியாம எடுத்து வெச்சுக்கிட்ட என்னோட ரெண்டு பழய ஜட்டிய கொடுத்துடுடா என்றேன்.... அதன் பிறகு சென்சார்.
நம்மை டரியள் ஆக்கியதையும் சொல்லனுமுல்ல...போன முறை ஊருக்கு போய் இருந்தப்ப வெச்சு இருந்த மோட்ரலா மொபைலை பார்த்துட்டு என்னடா துபாயில் இருந்து வர இன்னும் இந்த டப்பா மொபைல வெச்சுக்கிட்டு இருக்க ஒரு நல்ல மொபைலா வாங்க கூடாது என்று ஊர்ல இருக்கும் பயபுள்ளைங்க துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டுங்க. இந்த முறை வாங்கி இருந்த நோக்கியா E71யை பார்த்துட்டு, அங்க எல்லாம் சைனா மொபைல் யூஸ் செய்யலாமா? இங்க தடை செய்ய போறாங்களாம் என்றார்கள். இல்லடா பாரு இது சைனா மொபைல் இல்ல என்றேன் அட நோக்கியா மாதிரியே டூப்ளிகேட் மாடலா இது? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிவர்கள் சந்திப்பு!
மழையினால் உலகபடம் பதிவர்களோடு பார்க்க இருந்தது ஒத்திவைக்கப்பட்டது,அதன்பிறகு ஊருக்கு கிளம்பும் முதல் நாள் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று நர்சிம்மை சந்திச்சேன்:), (நனாவுக்கு நனா), ஒரு செட் வடை சாப்பிட்டு சந்திப்பை முடிச்சோம், மொழி படத்தில் பிகரை பார்த்தா தலையில் பல்பு எரியனும் என்று சொல்வது போல் ஒருவர் தொடர்ந்து 4 முறைக்கு மேல் போன் செஞ்சு சந்திக்கனும் என்றால் மூக்கின் மேல் பல்பு எரியனும் என்று ஸ்ரீ ஸ்ரீ சுந்தரானந்த சுவாமிகள் சொல்லிக் கொடுத்ததுக்கு இனங்க, மூக்குக்கு மட்டும் ஹெல்மெட் கிடைக்குமா என்று தேடி கிடைக்காததால் வாங்கி போன சரக்கோடு தண்டோரா ஆபிஸுக்கு சென்றேன், அங்கு ரமேஷ்வைத்யா அண்ணன்,கேபிள் சங்கர் இருவரும் வந்தார்கள், பிறகு ஜாக்கி சேகர் வந்தார், இன்னொருவர் வந்தார்.
நான் வாங்கிக்கொண்டு போய் இருந்த சரக்கு ஒரிஜினலா என்று கேபிளும், தண்டோராவும் டெஸ்ட் செஞ்சார்கள் எனக்கு கொடுத்தார்கள் இல்லை பழக்கம் இல்லை என்றேன்,சரி டீ,காபியாவது குடிங்க என்றார்கள் இல்லை அதுவும் பழக்கம் இல்லை என்றேன், குடிச்சுக்கிட்டு இருந்த கிளாஸை கீழே வெச்சுட்டு இதையாவது குடிப்பீயா என்றார்கள் தண்ணியை காட்டி ம்ம்ம் என்றேன், மனசுக்குள்ளேயே திட்டி இருப்பார்கள்.
அப்படியே பேச்சு ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்யும் பதிவர்கள் பக்கம் சென்றது, ஆஹா நமக்கு நேரம் சரி இல்லை போல என்று பம்மிக்கிட்டு இருந்தேன். ரமேஷ் வைத்யா ”ன்” போட வேண்டிய இடத்தில் shift அமுக்கி ”ண்” போடும் ஆட்களை உதைக்கனும் என்றார், ம்ம்கும் அப்படியே நீங்க உதைச்சுட்டாலும் வலிச்சுடும் என்றும் மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன்.
அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி T.நகர் சென்று அருளானந்தம் மெஸ்ஸில் சாப்பிட்டோம். கேபிளார் ஸ்டேசன் வரை கொண்டு வந்து விட்டு சென்றார். அங்கிருந்து ஊருக்கு சென்றேன்.
Saturday, October 24, 2009
அப்பா-டா!!!
ஒரு புதுவரவு அதுவும் முதல் வரவு வீட்டில் எத்தனை மகிழ்ச்சியை கொண்டுவருகிறது. நான் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்ட மாதிரியே ஆண் குழந்தை, அடிக்கடி மனைவி சொல்வார்கள் சண்டை போட்டு விளையாட ஆண் பிள்ளை வேண்டும் என்று கேட்கும் ஒரே ஆள் நீங்கதான் என்று.
சொந்த சகோதரனுக்கு, சகோதரிக்கு குழந்தை பிறந்தது போல் தொலை பேசியில் பேசிய அனைத்து நண்பர்கள் குரலிலும் தெரிந்தது அத்தனை அன்பு. மறக்காமல் அனைவரும் கேட்ட முதல் கேள்வி பையன் உன் கலரில் இல்லைதானே என்று:) நல்லா இருங்க மக்கா!:)
மகனுக்கு இனியன் என்ற பெயரை முடிவு செய்து இருக்கிறோம். தூய தமிழில்தான் பெயர் வைக்கனும் என்று கொள்கை எல்லாம் இல்லை, முதலில் கருவில் இருக்கும் பொழுதே முடிவு செய்து இருந்த ஹர்ஷன் என்ற பெயர் எங்களை தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை. ஆகையால் பெயரை மாற்றிவிட்டோம். பெயர் வைக்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் தான், அதற்கு முன்பு நண்பர்களிடம் சொல்லிவிடலாம் என்று உங்களுக்கு சொல்லிவிட்டேன். மற்றபடி இனியன் சொன்ன பேச்சு ஒழுங்காக கேட்கும் பிள்ளையாக இருக்கிறான்.
தம்பி நிப்பாட்டாம ஒரு ஒரு மணி நேரம் அழுவுடா என்றால் சரியாக செய்கிறான்.
தம்பி இரவு எல்லாம் முழிச்சுக்கிட்டு அம்மாவை தூங்கவிடாம பார்த்துக்கடா குட்டி என்றால் சரியாக செய்கிறான்.
ஒழுங்கா பால் குடிக்காம அடம்பிடிடா என்றால் சரியாக செய்கிறான். இப்படி சொல்வதை எல்லாம் கொஞ்சம் கூட தவறு இல்லாமல் சரியாக செய்கிறான்.
குழந்தைகளை லூலுலுலு , டடாடா டா, ஜூஜூஜூ என்று என்ன என்னமோ வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி கொஞ்சுபவர்களை பார்க்கும் பொழுது சிரிப்பாக இருந்தது. இப்பொழுது எனக்கும் எங்கிருந்து அது எல்லாம் வந்தது என்று தெரியவில்லை. அம்மா சமாதான படுத்தும் பொழுது அப்பா அடிச்சாரா செல்லம் இரு இரு நாம அடிச்சிடலாம் என்று மஞ்சுவும், நான் கொஞ்சும் பொழுது அம்மா ங்கா கொடுக்கலீயாப்பா இரு இரு அம்மாவை நாலு போடு போடலாம் என்று நானும்...மாறி மாறி ஒருத்தரை அடிக்க சப்போர்ட்டுக்கு ஆள் சேர்த்துக்கிட்டு இருக்கோம்.
வாழ்த்திபதிவு போட்ட நண்பர்கள் , வாழ்த்து செய்தி அனுப்பியவர்கள், போனில் பேசி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி!
பிறகு அடுத்த வாரம் ஊர் திரும்பியதும் மொக்கைய ஆரம்பிச்சுடலாம்! அதுவரை வெயிட்டீஸ்... தம்பி அழுவுகிறான் அவனை பார்த்துக்க போகிறேன்... ஹி ஹி ஹி பொறுப்பான தகப்பன் என்று எப்படி எல்லாம் உங்களை நம்ப வைக்க வேண்டியிருக்கு!
Tuesday, October 13, 2009
நாளைக்கு சொய்ய்ய்ய்ங்ங்ங்ங்
(பழய பாலுதேவனா இருந்தா என்பது போல் பழய சரவணனா இருந்தா ரவுசு கொடுக்கும் பிகருங்க வீட்டில் இந்த வெடிய கொளுத்தி போட்டு ரப்சர் கொடுக்கலாம்...ம்ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாகாலாம்... அதைபற்றி படிக்க
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
Sunday, October 11, 2009
ஒபாமா ஸ்பெசல் கார்ட்டூன் 12-10-2009
விக்காத பாம் எல்லாம் எப்படி இனி யூஸ் செய்வது?
இதுவரை நாம செஞ்ச ஒரே சமாதானம்!
பயபுள்ளைங்க எப்பவும் இப்படிதான்!
***********************
இலவச இனைப்பு!
(பிரபல பதிவரின் காதலி)
Thursday, October 8, 2009
இதிலிருந்து என்ன தெரியுது???
பத்தாவது படிக்கும் பொழுது ஒருத்தரிடம் டியூசன் போனோம் அப்ப அவரு நடராஜ் என்பவனை கூப்பிட்டு கடைக்கு போ, இதமாதிரி சார் வாங்கி வரசொன்னாருன்னு சொல்லு அவன் ஒரு பொட்டலம் கொடுப்பான் அதை வாங்கிட்டு வா,பிரிச்ச கொன்னேப்புட்டேன் என்று அனுப்புவார். அவனும் ரொம்ப பயந்தபுள்ள ஒழுங்கா வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான், ஒருநாள் அவன் லீவு என்னை கூப்பிட்டு போய்ட்டு வர சொன்னார் போய் கேட்டேன் இதுமாதிரி சார் வாங்கிவர சொன்னாருன்னு,அவனும் என்னத்தையோ ஒரு பேப்பரில் சுற்றி கொடுத்தான், என்னதான் இருக்குன்னு வரும் வழியில் பிரிச்சு பார்த்தேன் அதில் இருந்தது காண்டம் திரும்ப அதே மாதிரி மடிச்சுட்டதா நினைச்சு கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன் வாங்கிட்டு உள்ளே போனவர், என்னை பார்த்து டேய் இதை பிரிச்சியா என்றார் இல்ல சார் என்றேன், டேய் ஒழுங்கா உண்மைய சொல்லு என்றார் இல்ல சார் என்றேன், நாலு அடிய போட்டார் சார் அடிக்காதீங்க அப்புறம் சார் ஏன்டா உன்னை உள்ளே கூப்பிட்டு அடிச்சாரு என்றால் உண்மைய சொல்லிடுவேன் என்றேன். அத்தோட அடிக்கிறத நிப்பாட்டிட்டார். மறுநாள் டியூசனுக்கு போனா அடிபோட்டு நிமித்தினார் அடிக்கும் பொழுது சொன்னார், அடிச்சா சொல்லுவேன் என்று சொன்ன அடிக்காம விட்டேன் அப்படியும் எல்லோரிடமும் சொல்லி ஸ்கூல் வாத்தியார் எல்லாம் கேட்கிறானுங்க பையனை விட்டு வாங்கி வரசொன்னீயா, ஒரே ஒருநாள்தானே உன்னை அனுப்பினேன் என்று போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினார்..
காலேஜ் முடிச்சுட்டு தஞ்சாவூரில் ஒரு கம்பெணியில் மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சேன், எங்க எம்.டி, சரவணன் உங்க காலேஜில் ஒரு செமினார் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் யாரையும் தெரியுமா? பர்மிசன் வாங்கி தரமுடியுமா என்றார், என்ன சார் இப்படி கேட்டுப்புட்டிங்க என்னா நேமு எனக்கு ,எப்ப தேதி வேண்டும் என்று சொல்லுங்க வாங்கி தருகிறேன் என்றேன். இல்ல நீங்க புதுசு எப்படி சொல்லி கேட்கனும் என்று தெரியாது நானும் வருகிறேன் வாங்க போகலாம் என்றார். சரிவாங்க என்று அவரையும் அழைச்சுக்கிட்டு எங்க CS டிப்பார்ட்மெண்ட் HOD ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனேன், எப்பயும் அவரை பார்க்க நாலஞ்சு பேரு நின்னுக்கிட்டு இருப்பாங்க, நானும் மார்கெட்டிங் ஆனதால டை கட்டி ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு அவரு ரூமுக்கு போனேன். எங்க எம்.டியையும் அழைச்சுக்கிட்டு, எதோ எழுதிக்கிட்டு இருந்தவரு என்னை எதிரில் டை எல்லாம் கட்டி பார்த்ததும் என்ன டா டை எல்லாம் கட்டிக்கிட்டு இந்த பக்கம் என்றார், இதமாதிரி மார்க்கெட்டிங்கா ஜாயிண்ட் செஞ்சு இருக்கேன் என்றேன், உனக்கு எல்லாம் எந்த கேன டா வேலை கொடுத்தான் என்றார், சார் இவருதான் சார் என்று டக்குன்னு எங்க எம்.டியை காட்டிட்டேன். அவரும் சிரிச்சுக்கிட்டே ஹி ஹின்னு நின்னார். HODயும் இதை எதிர்பார்க்கல...அப்புறம் ஒருவழியா பேசி டேட் வாங்கி கொடுத்தேன் பேசுறேன்னு வந்தவர் ஒன்னும் பேசல. அதன் பிறகு ரொம்ப நாள் கிண்டலா சொல்லிக்கிட்டே இருந்தார் என்னை உங்க HODக்கு அறிமுகம் செஞ்சு வெச்ச மாதிரி யாரும் இப்படி அறிமுகம் செஞ்சு வெச்சு இருக்கமாட்டாங்க என்று...
இதில் இருந்து எல்லாம் என்ன தெரியுது......என்னை மாதிரி எப்பவும் உண்மை பேசிக்கிட்டே இருக்க கூடாதுன்னு தெரியுதா?:)))
Tuesday, September 29, 2009
சிரிக்க! சிந்திக்க அல்ல!
பஸ்டேண்டுக்கு எதிர்க்க இருக்கற பொட்டிக்கடையை தண்டல்ல எடுத்து, சக்தி சின்னதா கெரசின் ஸ்டவ் வச்சு டீக்கடையும் சேத்து நடத்திட்டு இருக்கான். ராத்திரில படுத்துக்கறதுக்காக வச்சிருக்கற ரெண்டு கட்ட பெஞ்சுல ஒண்ண எடுத்து வெளில டீ சாப்பிட வர்றவங்களுக்குன்னு போட்டு வச்சிருப்பான். சில சமயம் சும்மா உக்காந்து பெஞ்சை தேச்சுட்டு போறவங்கள அடுத்த முறை உக்காரும்போதே எவனையோ திட்டுற கணக்கா சக்தி காறித்துப்புறதால அங்க உக்கார்றதுக்கு முன்னாடியே டீ சொல்லிட்டுத்தான் பெஞ்சுல உக்காருவாங்க.
சக்தியோட கடைக்கு தவறாம வர்ற ஆளுங்கள்ல முக்கியமானவன் கா.கா.பீ அவுங்க அப்பா அம்மா வெச்ச பேரு சுரேஸ்.ஆனா காலோஜூக்கு படிக்கப்போன பொறவுதான் ”ஸ்” வட மொழி எழுத்து என்பதை கண்டுபிடிச்சு இவனா இவனுக்கு வச்சுக்கிட்ட புதுப்பேரு. காகாபீ.
பழைய பேரு தேவலையா இருக்குதேன்னு யோசிக்கறவங்க காகாபீயோட அர்த்தம் கேட்டு மூக்குல விரலை வச்சு மூடிக்கிட்டு போவானுங்க. கார்லஸ் கார்மன் பீக்ஸ்கன் என்று மூன்று வெளிநாட்டு புரட்சி கதை எழுதறவங்க பேர சேத்து வெச்சுக்கிட்டு சுருக்கமா கேகேபீன்னு சொல்லிக்குவான். கே.கே.பீன்னாலும் காகாபீன்னாலும் மூஞ்சை சுளிக்குற ஊரா இருக்குறதால இவன் வருத்தப்படாதது ஆச்சரியம்தான். சிலசமயம் K.K.P சொன்னேன் என்று ஒரு சிகரட் வாங்கி வான்னு அடிக்கடி சின்னப்பசங்கள அனுப்பி வைக்கறப்ப அவங்க மூலமா கே.கே.பீ காக்காப்பீயா கொடி கட்டி பறந்துச்சு.
காகாபீ என்றதும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றது அவன் கையில் தெனமும் வச்சிருக்கற விதவிதமான தடியான பொஸ்தவம். ஒருநா கருப்பு சட்டை, தலையில் தொப்பி போட்டு தாடியோடு வாயில் அப்பத்தா குடிக்கும் சுருட்டோடு ஸ்டைலா போஸ் கொடுக்கும் ஒருவரோட அட்டை படம் இருக்கும், அடுத்த நாள் தொங்கு மீசை, வெட்டருவா மீசை என்று வித விதமான வெளிநாட்டுக்காரங்க போட்டோ அட்டை படமாக இருக்கும் புத்தங்கள் கையில் தவறாமல் இருக்கும். பேசுறப்ப சாதாரணமா வார்த்தையால த்தோயோளி, மானா பூனான்னு வார்த்தையை போட்டுத்தான் ஆரம்பிப்பான்.அந்த வகையில் முதல் புரட்சிக்கி வித்திட்டவன்.
கீழத்தெரு வடக்கு வூட்டுக்கார பய மாரி ஏழாவது வரைக்கும் படிச்சுட்டு அப்பனாத்தா பேச்ச கேட்டு படிப்ப விட்டவன். மாடுமேச்சுக்கிட்டு இருக்கான். சொந்தமா அடுத்த வருடத்திலாவது ஒரு எருமை மாடு வாங்கிடனும் என்று நோக்கத்துல இருக்கறதப் பாத்து அவன் மாமனே ஒரு மாட்டை இனாமா கொடுத்து அவர் பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுத்தாரு. மாரி காகாபீயோட கொஞ்சம்நாள் ஸ்கோல்ல சேர்ந்து படிச்சதால நெறய்ய படிச்ச காகாபீக்கு ரசிகனாக மாறிட்டான்.
டீக்கடைக்கு காகாபீ வந்து உக்காந்திருக்கும்போது ஒடனே மாரி எழுந்து நின்னுப்பான். நிக்கலைன்னா டீ காசு மாரி தலையில வுழுந்துடும். ஆனா வுடாம காகாபீ, ”எலேய் மாரி! எதுக்கு எந்திருக்கிற.. நீயும் மனுசன். நானும் மனுசன். எதுக்கு இதெல்லாம், கைகட்டுறதுங்கறது அடிமைத்தனம்டா,குனியறது ஒரு குறீயிடுடா. அது இதுன்னு பேசிக்கிட்டே இருப்பான். ஒருதரம் மாரி கையில் வச்சிருந்து சினிமாப்படம் பாத்துட்டு இருந்த ஒத்தைப்பேப்பரை பார்த்துட்டு ”இந்த பேப்பர் பீ தொடைக்கக்கூட லாயக்கு இல்லை”ன்னு ஆரம்பிச்சு இந்தப்பேப்பரை நடத்துறவரை பத்தி அந்தப்பேச்சு பேசினான். அன்னிலேந்து வெறுங்கையில போண்டா தின்னாலும் திங்கறான் அந்த பேப்பரை வச்சி மடிச்சு கொடுத்தா தொடுறது போண்டாவை தொடுறது இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதியாலதான் இந்தியா குட்டிச்சுவராப் போனதாவும் அவர்களை அடிச்சு துரத்தினால் தான் நாடு வெளங்கும்ன்னும் காக்காப்பீ அடிக்கடி சொல்லுவான்.
ஒருதரம் மாரி ”யாரு இவரு? சுருட்டு குடிக்கிறவரு” ஒரு பில்டர் சிகரெட் வாங்க கூட காசு இல்லாதவரும் இம்மாம் பெரிய புக்கு எழுதியிருக்கிறாரு என்று காகாபீ கையில இருந்த பொஸ்தக அட்டையில் இருக்கறவரைப் பத்திக் கேட்டதும் சத்தம் போட்டு சிரிச்சான் காக்காப்பீ. சிரிச்சுக்கிட்டே ”ம்ம்ம் இவரை பத்தி தெரியாததால் தான்டா இன்னும் உன் தெருவுல எல்லா வூடும் அப்படியே குடிசையா இருக்கு”ன்னான்.
”ஏனுங்க! இவரு இலவச வீடு கட்டிதர்றாரா”ன்னதும் காக்காப்பீ சிரிச்ச சிரிப்பு மாரியை என்னமோ செய்தாலும் அதுக்கப்புறம் அவன்கிட்ட பொஸ்தவம் பத்தி எதுவும் பேசுறது இல்லை.
காக்காபீக்ட்ட ஒரு பத்து நிமிசம் பேசினால் அதில் ஒரு நொடிக்கு குறைச்சல் இல்லாம ஈயம்,ஈசம்,அடிமை, இதுல்லாம வேறு ஏதும் இருக்காது.மாரிக்கு கா.கா.பீ என்றாலே ஒரு புரட்சியாளன் அல்லது தேவதூதன் ரேஞ்சுக்கு அவனை வைத்திருந்தான். காரணம் கா.கா.பீ ஒருதரம் பேசுறப்ப கட்டினா உங்க சாதி பொண்ணைதான்டா மாரி கட்டுவேன், இல்ல பைபாஸ் ரோட்டில் இராத்திரி நிக்கும் ஒருவளை சீக்கு இல்லாதவளா பார்த்துதான் கட்டுவேன் என்று சொன்னது கூட காரணமாக இருக்கலாம்.
நேத்தைக்கு மொத நாள், பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு இலை வாங்கிட்டு வரச்சொல்லி மாரியை டவுனுக்கு அனுப்பினாரு காரைவீட்டுக்காரர். மாரி சைக்கிளில் டவுனுக்குப் போனவன் வெய்யிலுக்கு சாஸ்தியா இருந்ததால சர்பத் குடிக்க ஒரு கடைக்கு போனான். அந்த நேரத்துல எதிர்க்க காகாபீ மெத்தை வீட்டுக்குள் நுழையும் முன்னாடி கையில் இருந்த தடி பொஸ்தவத்தை பக்கத்து பொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு வராண்டாவில் நின்னான்,நேர்ல பார்த்தா காறித்துப்பி செருப்பால அடிக்கணும்ன்னு சொன்ன சாதிக்கார ஆளு முன்னாடி கும்பிடு போட்டுட்டு, அவர் ஏதோ சொல்ல சொல்ல கை கட்டி குனிந்து நின்று கேட்டுக்கிட்டு தலையாட்டி இருந்தான் காகாபீ.
புரட்ச்சியாம் புண்ணாக்காம் போங்கடா மயிறாண்டிகளா...என்று முனுமுனுத்துக்கிட்டு சர்பத்தை குடிச்சு முடிச்சான் மாரி
Sunday, September 27, 2009
ஸ்வைன் ப்ளூ சில சந்தேகங்கள்???
அவரை இங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள், இங்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பது இல்லை என்று சொல்லி அரசு மருத்துமனைக்கு அழைத்து செல்ல சொல்லி இருக்கிறார்கள், அங்கு சென்றதும் டாக்டர்கள் ரொம்ப கூலாக ஒன்னும் பயப்படவேண்டியது இல்லை, தனியாக இவரை ஒருவாரம் வைத்திருங்கள் இந்த மாத்திரைகளை எல்லாம் கொடுங்கள் சாதாரண ப்ளூ மாதிரிதான் இதுவும் சரி ஆகிவிடும். குழந்தைகள், கர்பிணிகளுக்குதான் பாதிப்பு அதிகம் கொஞ்சம் அதிகம் கேர் எடுத்துக்கனும் என்று சொல்லிவிட்டு மாத்திரைகள் கொடுத்து இருக்கிறார்கள், இப்பொழுது ஒருவாரத்தில் நல்ல அவருக்கு பரவாயில்லையாம், அடுத்த வாரத்தில் இருந்து வேலைக்கு வரலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க ஏன் இத்தனை பீதி? எது உண்மை?
இங்கு நேற்றுமுதல் ஒரு லோக்கல் கமெணிக்கு ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார்கள், இங்கு இனி அந்த லோக்கல் கம்பெணிதான் ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்தை தயாரிக்க போகிறது. நம்மை விட மருத்துவதுறையில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று சொல்லமுடியாது அப்படி இருந்தும் இவர்களால் தயாரிக்கும் பொழுது நாம் ஏன் வெளிநாடில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்?
Wednesday, September 23, 2009
கார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்
Friday, September 18, 2009
உன்னைபோல் ஒருவன் - விமர்சனம்
ராகவன் மறாராக மோகன்லால், ஹோம் செகரட்டரியாக லெட்சுமி(கொடுமை), இவர்கள் இருவரும் பேசும் இடங்களில் வசனங்கள் பட்டாசு, இங்கு தியேட்டரில் வசனத்துக்கு கைதட்டல் கேட்டது புதுமையாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இரா.முருகன் வசனத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறார். பிளாக் ஹீயுமர் வகையில் மோகன் லால் லெட்சுமியிடம்பேசும் வசனங்கள் உங்களை அறியாமல் சிரிக்கவைப்பதோடு கை தட்டவும் வைக்கிறது, மிகவும் சென்ஸ்டிவானகளம் இந்த கதை, இதில் கத்தியில் நடப்பதுபோல் வசனங்கள் இரா.முருகனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங், நிச்சயம்இனி அடுத்து பெரிய பெரிய இயக்குனர்களோடு இவர் பணியாற்ற போவது உறுதி. சில இடங்களில் சறுக்கி இருக்கிறார். குஜராத் பிரச்சினை பற்றி தீவிரவாதி பேசும் வசனத்துக்கு தமிழக பி.ஜே.பியில் இருக்கும் நான்கு பேரும் இன்று படத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
வென்ஸ்டேவையும் இதை ஒப்பிட்டு பார்த்து கருத்துசொல்வது தேவையற்றது, தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது, கடைசியாக உங்க பேர் என்ன சொன்னீங்க என்று நஸ்ருதின் ஷாவிடம் கேட்கும் காட்சி சிறப்பாக இருக்கும் இதில்அது மிஸ்ஸிங். படம் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடுகிறது.
சுருதி இசையும் பக்காவாக இருக்கிறது முதல் படம் போல் தெரியவே இல்லை, நடஷா ராஜ்குமார் மோகன் லாலிடம் இங்க தம் அடிக்கலாமா என்று கேட்கும் காட்சி போன்றவை ஒரு தேவையற்ற இடைசொருகள். இதுபோல் சின்ன சின்ன குறைகள் தான்.
கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:), பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரவாதிகளை இடம் மாற்றம் செய்கிறோம் என்றுதமிழில் சொல் CM டீவி பார்த்துக்கிட்டு இருக்கார் என்று சொல்லும் இடம், இனி கடவுள் கையில் தான் இருக்கு என்று மோகன்லால் சொல்லும் பொழுதுCM அடா அடா அவர் ரொம்ப சிக்கலான ஆளாச்சே என்று சொல்லும் இடங்கள் எல்லாம் அருமை. ஆங்கிலத்தில் அதிகம் வரும் வசனங்களை தவிர்த்து இருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.
மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்பது போல் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.