செய்தி: கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து தனித்து போட்டியிட்டிருந்தால், இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம் அல்லது, 50, 60 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட எதிர்க்கட்சியாக இருந்திருப்போம்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
டக்ளஸ்: சொல்றதுதான் சொல்றீங்க...பிரதமர் ஆகியிருப்போம் என்று சொல்லுங்களேன்.
********
செய்தி: மீண்டும் பேங் கொள்ளையர்கள் சென்னையில் கைவரிசை...
டரியள் டக்ளஸ்: அம்மா கூட இருக்கிறவங்கதான் கொள்ளையடிக்கிறாங்கன்னு அனுப்பிவுட்டா...எங்கிருந்தோ வந்தவனுங்க கொள்ளையடிக்கிறானுங்களே! அவ்வ்வ்வ்வ்
*********
சங்கரன்கோவில்: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை-அழகிரி தகவல்!
ட்விஸ்ட் டிவிஸ்ட்டுன்னு சொல்லுவாங்களே அது இதுதான்.
ட்விஸ்ட் டிவிஸ்ட்டுன்னு சொல்லுவாங்களே அது இதுதான்.
***********
உன்னை எதுக்குவேண்டும் என்றாலும் மன்னிச்சிடுவேன்...ஆனா திருப்பதியில லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்க சந்திரபாபுநாயுடு சொல்லிட்டாருன்னு சொன்ன பாரு அதுக்கு மட்டும் மன்னிக்கவே மாட்டேன் டா...
இதே மாதிரி....
உங்களை பிட்டு படம் பார்த்ததுக்கு அதுவும் சட்டசபையில் கூட்டு சேர்ந்து பார்த்ததுக்கு கூட மன்னிச்சிடுவேன்..ஆனா அந்த வீடியோவை பாலியல் பிரச்சினையில் சிக்கிய பெண்ணுக்கு உதவதான் நாங்க பார்த்தோம் என்று சொல்றீங்கபாருங்க அதை மட்டும் மன்னிக்கவே முடியாதுய்யா!
**************
செய்தி: எங்களால்தான் கல்யாணம் திருமணமாச்சு; ஆசீர்வாதம் வாழ்த்தாச்சு: கருணாநிதி.
ஜெயலலிதா: நோட்டட்! (நெக்ஸ்ட் ஸ்டெப் இனி திருமணம் என்று பத்திரிக்கை அடித்தால் அது செல்லாதுன்னு அறிவிச்சிடவேண்டியதுதாம்)
ஜெயலலிதா: நோட்டட்! (நெக்ஸ்ட் ஸ்டெப் இனி திருமணம் என்று பத்திரிக்கை அடித்தால் அது செல்லாதுன்னு அறிவிச்சிடவேண்டியதுதாம்)
****************