Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Sunday, August 2, 2009

டட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி

டட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி ஸ்கூலில் படித்ததை நினைக்கும் பொழுதே ஒரு சிறு புன்னகை வருகிறது, எத்தனை இனிமையான காலங்கள்.எங்கள் ஊரில் இருக்கும் சுத்துவட்டராத்துக்கும் அல்லது பதினெட்டு பட்டிக்கும் ஒரே ஸ்கூல் சுவாமி தயானந்தா மேல் நிலைப்பள்ளி சுருக்கமாக சு.த.மே.நி.பள்ளி சுற்றிலும் இருக்கும் கிராம மக்கள், ஏழை குடும்பங்களின் குழந்தைகளுக்குதரமான கல்வி இலவசமாக வழங்கி வருகிறது.

ஒன்னாவது முதல் ஐந்தாவது வரை கீத்து கொட்டகைதான் அதன் பிறகு 6 வது முதல் ஒட்டு கட்டிடம் அதனால் எப்படா அந்த கிளாசுக்கு போவோம் என்று இருக்கும். கரு நீலகலர் டவுசர், வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்க சீருடை,ஆனால் எப்பொழுதும் அது வெள்ளை கலராக திரும்பி போனது இல்லை, சர்ப் எக்சலுக்கு வரும் விளம்பரத்தில் சிறுவன் மழை சேறு எல்லாம் அப்பி போவது போல் அது எப்பொழுதும் ஒரு வித காக்கி கலரில் தான் இருக்கும்.

காலையில் பள்ளிக்கூடத்துக்கு போவதும் திரும்ப வருவதுமே ஒரு ஜாலிதான் கொஞ்ச நாள் வரை ஆள் வைத்து சைக்கிளில் விட்டு வர செய்தவர்கள் இனி தேவை இல்லை இது ஊரை வித்துட்டு வந்துடும் என்பதாலோ என்னவோ கொஞ்ச நாட்களில் நிறுத்திவிட்டார்கள், அதனால் என்ன நடராஜாதான், ஜிப் வெச்ச ஜோல்னா பையை முதலில் முன்பக்கமாக கழுத்தில் தொங்கவிட்டு அதன் இரு பக்கத்தையும் கைகளுக்கு இடையில் அழுத்தி பிடிச்சுக்கிட்டு பையே அப்படியே பின்னாடி கழுத்து வழியா போட்டால் ஷோல்டர் பேக் மாதிரி ஆயிடும் அதுமாதிரி போட்டுக்கிட்டு போவோம் நடையில் ஒரு அலட்சியம் ஒரு ஸ்டைல் இருக்கும் அவை பெரும்பாலும் ரஜினியை இமிடேட் செய்வது போல் இருக்கும், சில சமயம் அந்த வழியாக வரும் மாட்டு வண்டியில் பைய மாட்டிவிட்டு அந்த வண்டி பின்னாடி வவ்வால் மாதிரி தொங்கிக்கிட்டு வருவோம்.

பள்ளிகூடத்தில் பேசிய பேச்சுக்கள்
டேய் நீ உட்டியாடா? இல்லடா, நீ உட்டியா?இல்லடா டேய் நீ உட்டியா?இப்படி ஒரு விசாரனை போகும், எவனும் ஒத்துக்கமாட்டானுங்கஇங்க வாங்கடா இப்ப பாரு கண்டுபிடிக்கிறேன் வட்டமா நில்லுங்கடான்னு நிக்க வெச்சு வரிசையா இப்படி சொல்லனும் ”ஆடு, மாடு, பசு,குசு” அவ்வ் என்னிடமே முடியும், இல்ல இல்ல திரும்ப கடைசியா ஒரு தடவை என்று இந்த முறை உசாரா அடுத்தவனிடம் இருந்து திரும்ப ஆரம்பிக்கும் ”ஆடு, மாடு, பசு, குசு” டேய் நீதான் டா விட்டவன் என்று யாரையோ ஒருவனை குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு அடுத்த வேலைய பார்க்க போய்விடுவோம், லேசா சத்தம் மட்டும் வந்து இவன் தான் என்று தெரிஞ்சிடிச்சிஅவன் அவ்வளோதான் காலி அடுத்த ஒருவன் என்னைக்கு இவனை விட கொஞ்சம் சத்தமாக விட்டு மாட்டுறானோ அதுவரை அவன் பெயர் குசுவண்டி அல்லது குசுவுனி!

யாராவது மொட்டை போட்டுக்கிட்டு வந்துட்டா இந்த ரைம்ஸ் கண்டிப்பா இருக்கும்
“மொட்டையும் மொட்டையும்
சேர்ந்துக்கிச்சாம்
முருங்க மரத்துல ஏறிக்கிச்சாம்
கட்டெறும்பு கடிச்சிச்சாம்
வால் வால்ன்னு கத்துச்சாம்”

அதுபோல் எவனாவது டூ விட்டால் போடா இவரு பேசலைன்னா எங்க ஊட்டு கோழி முட்டைவுடாது பாரு போடா! அதுபோல் அடுத்த வார்த்தை ”டேய் அன்னைக்கு நான் வாங்கி கொடுத்த முறுக்கு, ஐஸ் எல்லாம் வாங்கி கொடுடா, சூடு சொரனை வெட்கம் மானம் இருந்தா எல்லாம் இப்ப வந்தாவனும்.”

”டூ டூ டுப்பாக்கி
போலீஸ் காரன் பொண்டாட்டி
சவுக்கார கட்டி
கொண்டுவாடி ரொட்டி” இது டூ விடும் பொழுது பாடப்படும் ரைம்ஸ்.

டூ விட்டவனோடு எவனும் சேரக்கூடாது டேய் அவன் என் கூட சண்டை இனி அவன் கிட்ட பேசுனா என்கிட்ட பேசாத! நீ என் ஆளா அவன் ஆளா? இப்படி கட்சி பிரிப்பது என்று ஜாலியாக இருக்கும்.

எவனாவது விளையாட்டில் தோற்றுவிட்டால்
”தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி தொட நடுங்கி
எறுமை மாட்டு மயிர் புடுங்கி” இப்படி ஒரு ரைம்ஸ்

சிலேட்டு குச்சி, பேனா கானும் என்றால் டேய் எடுத்தவன் கொடுத்துடுங்க இல்ல இப்ப வீட்டப்பத்தி கன்னாபின்னான்னு திட்டப்போறேன் என்றதும் வரும், அதுபோல் என்ன டா நீ எடுத்தியா என்று கேட்டா இல்ல வேணும்னா நீ எடுத்தவனை திட்டிக்க என்பார்கள்.

ஏப்ரல் ஒன்னாம் தேதி யாரு சட்டையிலாவது மை, காக்கா பீன்னு சொல்லி ஏமாற்றி விட்டு ஏமாந்தியா ஏப்ரல் ஃபூல் என்று கோரஸ் பாடுவது, எவன் மேலயாவாது காக்கா ஆய் போய்ட்டுன்னா மற்றவர்கள் கொடுக்கு வெச்சுக்கனும் இப்படி சின்ன சின்ன சேட்டைகள் நிறைந்தது பள்ளி நினைவுகள்.

தொடர் எழுத அழைத்த கலையரசனுக்கு நன்றி! மேலும் ஸ்கூல் சேட்டைகள் பற்றி முன்பு எழுதியது ஜாலியாக இருக்கும்

http://kusumbuonly.blogspot.com/2009/04/blog-post.html

http://kusumbuonly.blogspot.com/2007/11/blog-post_11.html

நானே மிகவும் தாமதமாக விளையாட்டில் பங்கெடுப்பதாலும், நண்பர்கள் பலர் தொடர்விளையாட்டால் டயர்ட் ஆகி இருப்பதாலும் நான் யாரையும் கூப்பிடவில்லை! மன்னிக்கவும்!

Friday, November 2, 2007

வீர வணக்கம் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் மறைந்த புலிகளுக்கு.

1984 ஆம் ஆண்டு முதல்... தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.1

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.


2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள் 1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான "தவளை நடவடிக்கை"யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்."

ஒயாத அலைகள் - 03" நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

நவ. 5 ஆம் நாள் வரை தமிழீழ தேசிய துக்க நாளாக பிரகடனம்
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவையிட்டு எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தேசியத் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.வன்னிப் பெருநிலம் எங்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு- சிவப்பு- மஞ்சள் கொடிகளையும் கட்டி வருகின்றனர்.

நன்றி Lankssri

Sunday, August 5, 2007

இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

அன்புள்ள அண்ணி
இதோ இன்றோடு இரண்டு வருடம் ஆகிவிட்டது. உங்கள் முகத்தை பார்க்காமல் நாட்களை ஓட்டிவிட்டேன். உங்கள் முகத்தை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. இன்று நீங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்பதால்.

அவன் என்னிடம் தயங்கி தயங்கி சொன்னான் உங்கள் காதலை பற்றி. அண்ணி பெயர் என்ன என்று கேட்ட பொழுது சமீரா பானு என்றான், என்ன டா எப்படி டா மதம் விட்டு மதம் கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்களா என்றதற்கு அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

முதன் முதலாய் உங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க அழைத்து வந்த பொழுது நீங்கள் முகத்தைமறைக்க முயன்றீர்கள், அப்பொழுது உங்களை தடுத்து இவன் எனக்கு தம்பி இது போல் மீண்டும்
ஒரு முறை செய்யாதே என்றான். அப்பொழுது கேட்டிர்கள் "ஏங்க கொஞ்சம் இவங்க கிட்ட சொல்ல கூடாதா இந்த அடிதடி எல்லாத்தையும் விட சொல்லி. இத பாருங்க கையில் எப்படி அடி பட்டு இருக்கு என்று அவன் அடி பட்ட கையை காட்டினீர்கள்" நேற்று நடந்த சண்டையே எனக்காகத்தான் என்று எப்படி நான் உங்களிடம் சொல்ல முடியும்.

அன்று தேதி சரியாக தெரியவில்லை டேய் மாப்பிள்ள பானுவ கல்யாணம் செஞ்சுக்கலாம் என்று நினைக்கிறேன் அவுங்க வீட்டுல ஓக்கே சொல்லிட்டாங்க இதுக்கு மேல காத்திருக்க முடியாதுன்னுட்டாங்க. அடுத்த மாசம் அவுங்க அப்பா இந்தியா வருகிறார் அப்ப கல்யாணம் வைக்கனும் என்கிறார்கள். என்ன சொல்கிறாய் என்றான். எப்படி டா இன்னும் நீயும் செட்டில் ஆகல முஸ்லீமா மாறி கல்யாணம் செஞ்சா பின்னாடி நம்ம வீட்டில் பிரச்சினை என்றேன். அதெல்லாம் பார்த்துக்கலாம் என்றான்.

சரி டா அண்ணனுக்கு தெரிந்தால் என்றதற்கு அவன் ரிலீஸ் ஆகி வருவதற்கு இன்னும் ஒரு 6 மாசம் ஆகும் அத பிறகு நாகூர் போய் கல்யாணம் நம்ம வீட்டுல தங்கச்சி கல்யாணம் முடியும் வரை சொல்லவேண்டாம், அதன் பிறகு சொல்லிக்கலாம் பானு கல்யாணத்துக்கு பிறகு அங்கேயே இருக்கட்டும் என்றான்.

அன்று மதம் மாறும் சடங்குகள் முடிந்த பின் அன்று உங்கள் கல்யாணம் நடந்தது. வீட்டுக்கும் வந்தோம், அவன் வீட்டில் என்னோடு ஊட்டிக்கு போவதாக சொல்லிவிட்டு இரவு உங்கள் வீட்டுக்கு வந்து விட்டு விட்டு ஏதோ பெரிய சாகசம் நடத்தியது போல் மகிழ்ச்சியோடு திரும்பினேன்.
அந்த மகிழ்ச்சி 1 வருடம் கூட நிலைக்க வில்லை ஆகஸ்ட் 6 காலை 11.30 மணிக்கு நண்பனிடம் இருந்து போன், மாப்பிள்ளை நம்ம நம்ம செந்தில் பானு, வீட்டுக்கு போய்ட்டு திரும்ப வரும் பொழுது .........

உன் காதல் கல்யாணம் சீக்கிரம் முடிந்தாலும் நீ செய்து வைத்த காதல் திருமணங்களில் இன்னும் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய டா என் அருமை நண்பனே.

(என்றும் உன் நீங்காத நினைவுகளுடன், பூண்டி கல்லூரி நண்பர்கள்).

Thursday, August 2, 2007

வார்தைகள் இல்லை

ஆசிப் அண்ணாச்சி என்ன சொல்வது, எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.