Tuesday, November 30, 2010

போலி குசும்பன் -விளக்கம்

என் பெயரில் சிலர் சவுக்கு தளத்திலும், ஒரு சில ஆபாச தளங்களிலும் கமெண்ட் போடுகிறார்கள், சவுக்கு தளத்தில் தொடர்ந்து உன் பெயரில் கமெண்ட் வருகிறது என்றார்கள் . போய் பார்த்தேன் ஆபாசமாக எதுவும் இல்லை என்றாலும், அது நான் இல்லை என்பதை சொல்லவே இந்த பதிவு.

ஏதும் எனக்குன்னு அரசியல் நிலைபாடு இருக்குன்னு காட்ட முயற்சியா அல்லது எதுக்குன்னு புரியவில்லை. நான் நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை.

Wednesday, November 24, 2010

போச்சே போச்சே...அனுஜன்யா திரும்பி வாங்க!

நேற்று மாலை அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் லாம்சி பிளாசாவுக்கு சென்றேன், மால் நடுவில் ஸ்டேஜ் போட்டு இருந்தார்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு என்ன விசயம் என்றேன்... இம்ரான் கானும், தீபிகா படுகோனும் வருகிறார்கள் என்றார்கள். ஆஹா தீபிகா படுகோனா என்று ஆர்வத்துடன் காத்திருந்தேன். பத்து நிமிடத்தில் ஸ்டேஜுக்கு அனைவரும் வந்தார்கள். ஒரு நிமிடத்துக்கு மேல் அங்க என்னால் நிற்க முடியவில்லை. தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( டக்குன்னு கிளம்பி வந்துவிட்டேன்.

லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு, இப்ப ஹார்ட் டிஸ்கில் அந்த படத்தை வெச்சிருக்கேன்.எனக்கு இந்த பாடத்தில் வரும் Chor Bazaari பாட்டை பார்க்கும் பொழுது எல்லாம் ஒரு சந்தோசம் வரும். பஞ்சாபிகள் எதையும் ரசனையோடு செய்பவர்கள், நமக்கு எல்லாம் ரொம்ப சந்தோசம் வந்தால் என்ன செய்வோம் என்று யோசிச்சோம் என்றால் எப்பொழுதும் போல் தான் இருந்திருப்போம். ஆனால் பஞ்சாபிகள் பல்லே பல்லே பல்லே என்று ஆட ஆரம்பிச்சிடுவார்கள். அது ரோடாக இருந்தாலும் சரி கவலையே பட மாட்டார்கள். பஞ்சாபி பெண்களும் அதுமாதிரிதான், அவர்களையும் ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும்? அதுக்கு சில புள்ளி விவரங்களை சொல்லவேண்டும்... பஞ்சாபி பெண்கள் பற்றி புள்ளி விவரங்களை சொன்னால் அடி விழும் என்பதால் நம்ம திரும்ப ஆட்டம் பற்றியே பேசுவோம். கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை.

ஊருக்கு வரும் பொழுது தேணாம்படுவை தப்பு செட்டு காரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிட்டு ஆடனும் என்று ஆசை...(முன்னாடி துண்டு விரிச்சி கூட வைக்கலாம் தப்பு இல்ல)
*********
போன வாரம் நண்பன் ஒருவன் போன் செஞ்சான், மச்சான் நீ மாமா ஆக போற டா என்றான். அட பாவி வேலையில் பிரச்சினை அதுக்காக இப்படியாடா சொல்லுவ என்றேன். ச்சே லூசு நான் அப்பா ஆகபோறேன் டா என்றான். அடங்கொன்னியா கல்யாணம் ஆகி 50 நாள் கூட ஆகவில்லையே டா என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.


முதல் வருட கல்யாண நாளை புள்ளையோட கொண்டாட போகும் நண்பா நீ வாழ்க வாழ்க என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.


குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்...நான் ஹி ஹி ஹி என்றேன்.


**********
கல்யாணம் என்றது இந்த கல்யாணம் ஆகி குட்டி போட்ட சீனியருங்க அட்வைஸ் செய்வாங்க பாருங்க அய்யெய்யோ...தாங்க முடியாது.


மச்சான் முதல் ராத்திரியே பாஞ்சிடாத..பொறுமையா டீல் செய்யனும் என்று சொல்லுவான் ஒருத்தன்.


இன்னொருத்தன் மச்சான் முதல் ராத்திரியே சக்சஸ்புல்லா முடிச்சிடு அப்புறம் காலம் முழுக்க நம்ம சொன்ன பேச்சிதான் கேட்பாங்க என்று சொல்லுவான் இன்னொருத்தன். (இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்).


குறைந்தது ஒருவருசம் குழந்தை பிறப்பை தள்ளி போட்டுக்குங்க. என்று சொல்லுவானுங்க.


மச்சான் எப்பவும் நீ சொல்றத கேட்கிற மாதிரி வெச்சிக்க, கிரிப்ப விட்டுவிடாதடா அப்புறம் காலம் முழுக்க ஆமாம் சாமி போடவேண்டியிருக்கும். கொஞ்சம் இடம் கொடுத்தா அவ்வளோதான் ஆளை காலி செஞ்சிடுவாங்க. இது இன்னொருத்தன்.


மச்சான் இன்னும் மூனு மாசம் டைம் இருக்கு, ஜிம்முக்கு எல்லாம் போ...பிட்டா வெச்சிக்க. ஜல்லி கட்டுக்கு போய் காளைய அடக்க ட்ரைனிங் கொடுப்பது மாதிரியே டிப்ஸ் கொடுப்பாய்ங்க.


எல்லாத்தையும் நோட் செஞ்சு வெச்சிக்கிட்டாலும் புது பொண்டாட்டி பக்கத்துல வந்ததும் இந்த பிக்காலி பயலுவோ சொன்னது எல்லாம் எங்க நினைவுக்கு வரும்?


*****
இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழுதியது...
அனுஜன்யா திரும்பி வாங்க...

Saturday, November 20, 2010

மன்மோகன் சிங் ஸ்பெசல் 20-11-2010

(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)
மன்மோகன்: CNN IBNல்லிருந்து ஒரு பத்துபதினைஞ்சு பேரு...சுத்தி நின்னுக்கிட்டு கும்முகும்முன்னு கும்மினானுங்க...நானும் அதோட முடிஞ்சிதுன்னு நினைச்சிக்கிட்டு கிளம்ப நினைச்சேன்...

வடிவேலு: அப்புறம்?

மன்மோகன்: இவிங்க கேள்வி கேட்டு டயர்ட் ஆகி...மத்த நியுஸ் சேனல் காரனுங்களுக்குபோன் போட்டு..இங்க ஒரு ஆளு வசமா சிக்கியிருக்காரு வாங்கன்னு கூப்பிட்டானுங்க...

வடிவேலு: அப்புறம்?

மன்மோகன்: ஒரு நூறு நூத்தியைம்பது பேரு திபுதிபுதிபுன்னு ஓடி வந்து கேள்வி கேட்டுகும்மியடிச்சு அங்கியிருந்து பார்லிமெண்டுக்குள்ள தூக்கி போட்டானுங்க அங்க ஒரு 200 எம்.பிங்க ஒருநாள் இல்ல ரெண்டு நாள் இல்ல 7 நாள் ஓயாமா கேள்வியா கேட்டு அடிச்சானுங்க...அப்புறம் அங்கியிருந்து ஒரு ஆட்டோவுல ஏத்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினானுங்க...

வடிவேலு: அப்புறம்...

மன்மோகன்: அங்க ஒரு மூனு நாளு ஜட்ஜுமாருங்க கேள்வி மேல கேள்வியா கேட்டு ஓயாம அடிச்சாங்க...

வடிவேலு: இவ்வளோ நடந்திருக்கு...நீங்க ஒன்னுமே செய்யலையா?


மன்மோகன்: அவிங்க கேள்வி கேட்டு கும்மும் பொழுது ஒருத்தன் சொன்னான்...எவ்வளோகேள்வி கேட்டு அடிச்சாலும் நம்ம பிரதமரு தாங்குறாரு..இவரு ரொம்ப நல்லவருன்னு..இதுமாதிரிஒரு பிரதமர பார்த்ததில்லைன்னு சொல்லிட்டான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


வடிவேலு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


*************************(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)

விவேக்: சொல்லுங்க எசமான் சொல்லுங்க...


மன்மோகன்: என்ன சொல்லனும் விவேக்?


விவேக்: நீதிமன்றம் நாக்கை புடுக்கிக்கிற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்குதே...


மன்மோகன்: அதுக்கு?


விவேக்: என்ன செய்யப்போறீங்க? என்ன பதில் சொல்லப்போறீங்க?


மன்மோகன்: இதுவரைக்கும் என்னபதில் சொல்லியிருக்கேன்? என்ன செஞ்சிருக்கேன்?


விவேக்: ஒன்னியும் செஞ்சது இல்ல...


மன்மோகன்: அதேதான் இதுக்கும் கூடியிருக்கும் கூட்டத்துக்கிட்ட போய் சொல்லு...
*****************

நண்பேண்டா!

செய்தி: பரிட்சை எழுதி முடிச்ச ஸ்கூல் பிள்ளையை போல் உணருகிறேன்.
இதை வெச்சி நம்ம கும்மி....


நீதிபதி: போன வாரம் கேள்வி கேட்டு இருந்தோமே பிரதமரிடம் பதில் வந்துச்சா?
வக்கீல்: வந்திருக்கு எசமான், ஆனா அதுல 5 கேள்விக்கு 4 கேள்விக்கு அவுட் ஆப் சிலபஸ் என்றும் ஒரு கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டேன் என்றும் பதில் எழுதியிருக்கிறார் எசமான்.
**************

நீதிபதி: பிரதமர் ஏதோ கடிதம் அனுப்பியிருகிறாராம்...எங்கே அந்த கடிதத்தை படிங்க...வக்கீல்: டியர் சார், ஐ ஆம் சபரிங் பிரம் பீவர் ப்ளீஸ் கிராண்ட் மீ டூ டேஸ் லீவ்.


யுவர்ஸ் & எவ்வரிபடி

ஒபிடீயண்ட்

மன்மோகன் சிங்


*************

நீதிபதி: யாருய்யா அது வாசலில் முட்டி போட்டுக்கிட்டு நிற்பது உள்ளே வரசொல்லு...வக்கீல்: நம்ம பிரதமருதான் ஐயா...உள்ளே வந்தா கேட்ட கேள்விக்கு பதில் எங்கேன்னு நீங்க திரும்ப கேள்வி கேட்பிங்கன்னு பயந்து வெளியில் முட்டி போட்டுக்கிட்டு நிற்கிறார்.

Monday, November 8, 2010

குபாமா வருகை ஸ்பெசல்!

கூபாலபுரம்:
பகத்ரட்சகன் ஓடிவருகிறார்: தலைவரே குபாமா அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார், எங்கே திரும்பினாலும் அவரை பற்றிதான் செய்தியாக இருக்கிறது அவரை சென்னைக்கு வரவழைச்சி அவர் தலைமையில் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம் என்றால் இந்த தேர்தலில் நம்மை அடிச்சிக்கமுடியாது...வரவேற்புரையில் வாசிக்க கவிதையும் எழுதிட்டேன்.

"வெள்ளை மாளிகையில்
குடியிருக்கும் கறுப்பு நிலாவே
வா வா
குடிசையில் குடியிருக்கும்
சூரியனை வாழ்த்த
வா வா"

குலைஞர்: தம்பி நீ ஏன் இன்னும் சினிமாவில் பாட்டு எழுதாமல் இருக்கிறாய் என்கிற வருத்தம் எனக்கு இதயத்தில் முள்ளாக குத்துகிறது.

(முள்ளுவாங்கி வேனுமா முள்ளுவாங்கி..)

சத்துமாசுப்பிரமணியம்: தலைவரே அந்த விழாவில் நானும் என்னோட மாணவர்களும் நம்மோட பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் விதமாக ஒரு 10000 பேர் ஆடலாம் என்று நினைக்கிறோம், அவுங்க குடும்பத்துக்கு டான்ஸ் என்றால் ரொம்ப பிடிக்குமாம் முப்பையில் பள்ளி குழந்தைங்க கூட எல்லாம் ஆடியிருக்காங்க. ம்ம் என்று சொல்லுங்க எல்லோரையும் வரவழைச்சிடலாம்.

குலைஞர்: குபாமாவும் நானும் பட்டு வேஷ்டி சட்டையில் சேம் பிஞ்சில் வருவோம்...


பனிமொழி: தலைவரே குபாமா மனைவிய வெச்சி மெரினா பீச்சில் பன்னாட்டுகலை இலக்கிய விழான்னு ஒன்னு நடத்திடுவோம், 5 நாள் விழா ஒவ்வொரு நாளும் ஒரு கலை நடனம் என்று கலக்கிடலாம், அப்ப அப்ப நடுவில் என்னோட கவிதை தொகுப்பை குபாமா மனைவிக்கு படிச்சி காட்டி அவுங்களை உரைஎழுத சொல்லிடலாம்.

குலைஞர்: இதோ இப்போவே பிரதமருக்கு கடிதம் எழுதிடுறேன்..

பனிமொழி: என்கிட்டேயேவா?

குலைஞர்: ச்சே ச்சே பழக்கதோசத்தில் சொல்லிட்டேன், இதோ போன் போட்டு பேசுறேன் குபாமாவை இங்க்க அனுப்ப சொல்லிடுவோம்.


(செல்போன் அடிக்கிறது குலைஞர் பேசுகிறார்)

ம்ம்

ம்ம்

ம்

சரிப்பா பார்க்கிறேன்...

வெச்சிடுப்பா...

பகத்ரட்சகன்: என்ன ஆச்சி தலைவரே ஏன் இப்படி டல் ஆயிட்டீங்க? யார் போனில்?

குலைஞர்: சென்னைக்கு வருவதுக்கு முன்னாடி குபாமாவை மதுரைக்கு அனுப்பிவைக்கனுமாம், அங்க நிகழ்ச்சிய முடிச்சபிறகுதான் சென்னைக்கு அழைச்சிக்கிட்டு போகனுமாம்...

ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே!

*******************

கோயஸ்கார்டனா அல்லது வடநாடான்னு சரியாக தெரியவில்லை ஏதோ ஒரு இடத்தில் நடக்கிறது...


குஷிகலா: யக்கோ யக்கோவ் அமெரிக்காவிலிருந்து குபாமா வந்திருக்கிறாராம், அவர வெச்சி நாம வடசென்னையில் கொசு ஒழிப்பு போராட்டம், மதுரையில் பொதுகழிப்பறையில் சரியில்லாத பராமரிப்புன்னு பெரிய லெவலில் போராட்டம் நடத்தி நம்ம யாருன்னு காட்டனும் யக்கா..

பயலலிதா: ஆஹா சூப்பர் ஐடியா, ஒழுங்கா சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு வரனும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிடு இல்லாட்டி அதிபர் பதவியிலிருந்து தூக்கிடுவேன் என்று சொல்லிடு..

குஷிகலா: யக்கா அவரு என்ன நம்ம பைகோவா சொன்ன இடத்துக்கு நமக்கு முன்னாடியே போய் நின்னுக்கிட்டு கோஷம் போட்டுக்கிட்டு இருக்க இவரு குபாமா அதுவும் நம்ம கட்சியில்
அவரு இல்ல அவரை எப்படி பதவியிலிருந்து தூக்க முடியும்?

பயலலிதா: என்னது குபாமா நம்ம கட்சியில் இல்லையா? நம்ம கட்சியில் தான் இருக்கீங்கன்னு சொல்லி ஒரு போன் போட்டு சொல்லிட்டு கட்சி உறுப்பினர் கார்ட் அனுப்பிடு. முக்கியமா ஒரு கூட்டம் மதுரையில் இருக்கனும்.

**********
பைலாபுரம் மாம்பழ தோட்டத்தில்...

பன்புமணி பாட்டு பாடிக்கிட்டே வருகிறார் ("நைனா நைனா நைனா நைனா நெஞ்சுக்குள்ள எதோ செய்யுது... அர்ஜெண்டா ஒரு அமைச்சர் போஸ்ட் வாங்கி கொடு...நான் வேலை வெட்டி இல்லாம இருப்பது முறையா....ஓ நைனா நைனா ஓ நைனாஆஆஆஆ")

மகனை பார்த்ததும் வராத செல்போனை காதில் எடுத்து வெச்சிக்கிட்டு பேசுகிறார் பாமதாஸ்..

ம்ம் சொல்லு போ.க.மணி ரெண்டு ரவுண்டு பேச்சு வார்த்தை குபாமாவோட முடிஞ்சிட்டா?, நல்லது! நம்ம பன்புமணிக்கு அமைச்சர் போஸ்டிங் கோரிக்கைக்கு என்ன சொன்னாங்க? இன்னும் ஒருவாரத்தில் தூது வரும் என்று சொல்லியிருக்கங்களா அப்ப ரொம்ப சந்தோசம்.எப்படியும் வாங்கிடலாம் தானே? எழுதிவாங்கிட வேண்டியதுதானே? சரி சரி பார்த்து செய்யுங்க அப்புறம்?.. அப்படியே அங்கிருந்து பயலலிதாவையும் பார்த்துட்டீங்களா? அவுங்க 2017ல் ரெண்டு எம்.பி சீட் தருகிறேன் என்று சொல்லியிருக்காங்களா அப்ப ரொம்ப சந்தோசம்...சரி சரி சீக்கிரம் வாங்க நாம நாளை கல்யாணமண்டபத்துல கூடி கூட்டம் போட்டு எங்க போகலாம் என்று முடிவு செஞ்சிடுவோம்... 2011லிருந்து குபாமாவோட அப்புற 2017ல்லிருந்து பயலலிதா கூட...அப்ப வரும் 10 வருசத்துக்கு பன்புமணிக்கு போஸ்ட்டிங் கன்பார்ம்....அப்படின்னா பக்கள் டீவியில் பன்புமணி தொகுத்து வழங்கயிருந்த பல்விளையாட்டு நிகழ்ச்சி ஷூட்டிங்கை நிறுத்த சொல்லிடலாம்...

(கண்ணா இன்னொரு அல்வா வேனுமா...)

இவர் பேசியதை கவனிச்ச பன்புமணி... (ஜிங்கி ஜிங்கி சொக்கா போட்டு பளபளக்கும் பேண்டு போட்டு பார்லிமெண்ட் போகனும் சின்னதங்கமே....ஜிங்ங் ஜிக்கா ச்சிக்கு ஜிக்கா ஜிக்கு ஜிக்கா)ன்னு துள்ளல் பாட்டு மெட்டை பாடிக்கிட்டே பேண்ட் சர்ட்டை எல்லாம் அயர்ன் செய்ய போகிறார்.

****************
குஜயகாந்த்...குபாமாவிடமிருந்து நமக்கு அழைப்பு வருகிறது, நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் ஏன் ஏன்?

(கூட்டத்திலிருந்து ஒருவன்) இங்கிலிஸ் பேச முடியாதுன்னா?

குஜயகாந்த்: என் கல்யாணமண்டபத்தை இடிச்சாங்க, படத்தை வாங்கமாட்டேன் என்று சொன்னாங்க, ரோட்டில் ஷூட்டிங் நடத்த முடியாம அரசு பஸ்ஸை ஓடவிட்டு இடைஞ்சல் செஞ்சாங்க...இருந்தும் நம்மோட வளர்ச்சியை தடுக்கமுடியல, நம்மை கண்டு அகில உலகமே பயந்துகிடக்கு...நான் எப்பவும் மக்கள் கூடதான் கூட்டணி

கூட்டம் விசில் அடிச்சி கைதட்டுது

குஜயகாந்த் (இன்னுமாடா மச்சான் இந்த உலகம் நம்மை நம்புது)

குதீஷ்: இது அவிங்க விதி

************
கத்தியமூர்த்திபவன்

களங்கோவன்: குபாமா ஆறு வயசா இருக்கும் பொழுது இந்தியா வந்தப்ப கறுப்பு சட்டை போட்டுக்கிட்டு முன்னாடி போய் நின்னது யாருன்னு வரலாறு மறந்திடுமா? அவர் போகும் இடம் எல்லாம் கறுப்பு கலர் காக்காவை பறக்கவிட்டு எதிர்பு தெரிவிச்சது மறந்திடுமா?

பாசன்: காக்கா கறுப்பாதானே அண்ணே இருக்கும்...

களங்கோவன்: குபாமாவை இன்று அன்னை போனிய்யாஜி அழைத்து வந்ததும் இனிக்க இனிக்க பேசிக்கிட்டு ஒட்டி உறவாட ஓடிவருகிறார்கள், எங்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுங்க எல்லாத்தையும் எச்சி தொட்டு அழிச்சிடுறோம்.

வெண்கலபாலு:அன்னை காட்டிய வழியிலும், இளம் தலைவர் கோகுல்ஜி காட்டியவழியிலும் அமைதியான வழியில் நடப்போம். கூட்டணி பலமாக இருக்கிறது. வாழ்க அன்னை, வாழ்க கோகுல்.

*************
பருமாவளவன்:

தலைவரே குபாமா போஸ்டர் மேல யாரோ சாணி அடிச்சிட்டாங்களாம் அதுக்கு எல்லாம் களங்கோவன் எங்க கட்சி ஆளுங்களை திட்டுறாரு தலைவரே...

குலைஞர்: கோபப்படாதே தம்பி கோபப்படாதே நம்மை பிரிக்க சதி செய்கிறார்கள், உன் கோபத்தை எல்லாம் கடிதமாக எழுதி அன்னை போனீயாஜிக்கு அனுப்பு.

பருமாவளவன்: சரிதலைவரே அப்படியே செய்யுறேன்... ஆமா நான் எப்ப கோவப்பட்டேன்?

போனியாஜி புகழ்பாடி ஒரு பத்துபக்க கடிதம் எழுதும் பொழுது...

பின்னனி பாடல்(சிறுத்தைய புடிச்சி கூண்டில் அடைச்சி மியாவ் மியாவுன்னு கத்த சொல்லும் உலகம், கால புடிச்சு பேனா வெச்சி மன்னிப்பு கடிதம் எழுத சொல்லுகிற உலகம்...சிறுத்தை எப்படி கத்துமய்ய்யா...சிறுத்தை எப்படி எழுதுமய்யா ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ....)

*********
பன்டீவி ஏரியா

பக்சேனா: குபாமாவுக்கு பயங்கர மாஸ் இருக்கும் போல அவர வெச்சி ரோபோ ரிட்டர்ன்ஸ் பார்ட் 2 எடுத்தோம் என்றால் பன் பிக்சர்ஸ் எங்கயோ போய்விடும்...

பலாநிதி: சொல்லாதீங்க செய்ங்க...புடிங்க ஆளை தூக்குங்க...உலகம் முழுவது தியேட்டரை புடிங்க...முதன்முதலாக நிலாவில் வெச்சி கேசட் ரிலீஸ் செய்யுறோம்...செவ்வாய் கிரகத்தில் ஸ்பெசல் ஷோ போடுறோம்... விண்வெளி ஆராய்சிகூடத்திலும் படத்தை ரிலீஸ் செய்யுறோம்...

பக்சேனா: அதுக்கு முன்னாடி பொங்கலுக்கு சிறப்பு நிகழ்சியா குபாமா இந்தியா வந்த விதம் என்று அவரு பேண்ட் சட்டை போட்டதிலிருந்து எல்லாத்தையும் காட்டுறோம்...