Thursday, May 5, 2011

US ஸ்டைலில் இந்தியா அட்டாக் கார்ட்டூன்

Wednesday, May 4, 2011

படம் எடுக்கப்போகும் பதிப்பகம்.

கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் பா.ராகவன் உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி ஒரு லேப்டாப்பை வெச்சிக்கிட்டு இருக்கார்...அது ஹோம்மினிஸ்டர் லேட்டஸ்டா அப்ரூவ் செஞ்ச லேப்டாப். சைஸ் ரொம்ப சின்னது என்பதால் அவரோ உள்ளங்கையிலேயே அடங்கிவிடுகிறது.அதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு ஆன்லைனில் காத்திருக்கார்.கே.வி.ஆர் ஆன்லைனில் வந்ததும் அவரிடம் ஹாய் சொல்றாரு...

கே.வி.ஆர் உனக்குள் பல திறமை இருக்கு...உன்னால படம் எடுக்கமுடியும்...நீ என்ன செய்யிற....ஓட்டகம் மேய்பது எப்படி? என்ற படத்தை டைரக்ட் செய்யிற...
உனக்கு 90 டேஸ் தான் டைம்...அதுக்குள்ள முடிச்சிக்கொடு...ப்ரீவியூ பார்த்துட்டு ரிலீஸ் செஞ்சிடலாம்....

அடுத்து துபாயில் பினாத்தலார் லைனில் வருகிறார்...திரும்பவும் அதே பிட் உனக்குள் பல திறமை இருக்கு...உன்னால படம் எடுக்கமுடியும் இன்னும் இரண்டு வருசத்துல தமிழ்மாநாடு வருது...அந்த நேரத்தில் சிந்துனமணி வரலாற்றை படமா எடுக்குறோம் நீதான் டைரக்ட் செய்யிற...சீக்கிரம் டைரக்ட் செஞ்சி அனுப்பு....

பினாத்தல்: யாரை ஹீரோவா போடுவதுன்னு முதலில் ஒரு பிளாஸ் பைல் செஞ்சி அனுப்புறேன்...அதுல வரும் கோட் நம்பரை எனக்கு அனுப்பினா நாம முடிவு செஞ்சி படத்தை ஆரம்பிச்சிடலாம்...

பா.ரா:சரி சரி ஆனா பழக்கதோசத்துல கதை எப்படியிருக்கும் என்று பிளாஸ் பைல் செஞ்சி ஓப்பனிங் ஷோ வசூலை கெடுத்துடாத...

அடுத்து ஆன்லைனில் அதிஷா வருகிறார்....அதிஷா ஹவ் டூ பிகம் ரிச் மேன் இன் 30 டேஸ் என்று ஒரு படம் இருக்கு...

அதிஷா: சார் அது வேல்ட் அரவுண்ட் இன் 30 டேஸ்...இல்லையா இது வேற படம்...அந்த படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்யிறோம் இந்தா டோரண்ட் லிங் இதை வெச்சி டவுன் லோட் செஞ்சி இதை அப்படியே தமிழில் எடுத்துக்கிட்டு வா பார்க்கலாம்...

அப்துல்லா சிரிசிரின்னு சிரிச்சிக்கிட்டே இருக்காரு....அதைப்பார்த்த வெண்பூ என்ன ஆச்சி இப்படி சிரிக்கிறீங்க...இல்லய்யா பா.ரா ஆன்லைனில் வந்தாரு...அவரு சொல்றாரு.......

வெண்பூ: இருங்க இருங்க மீதிய நான் சொல்றேன்...

உனக்குள் பல திறமையிருக்குன்னு சொல்லியிருப்பாரே...

“ஆமாம்”

உன்னால ஒரு சூப்பரா ஒரு படம் எடுத்து தரமுடியும் என்று சொல்லியிருப்பாரே!

“ஆமாம்”

பிளாக்ள டைம் வேஸ்ட் செய்யாத இன்னும் ரெண்டு மாசம் தான் டைம் அதுக்குள்ள ஒரு இங்கிலீஸ் படத்தை பார்த்து அப்படியே ட்ரான்ஸ்லேட் செஞ்சிக்கிட்டு வான்னு சொல்லியிருப்பாரே

“ஆமாம்” எப்படி இது எல்லாம் சரியா சொல்ற...

என்கிட்டயும் அதைதானே சொன்னார்.

அடுத்து கேபிள் சங்கரிடம்...நாங்க படம் எடுக்கலாம் என்று இருக்கிறோம்.

கேபிள்:சார் ஏற்கனவே ஒன்லைன் போட்டு வெச்சிருக்கேன் சார், முழு சூட்டிங்கும் சிங்கப்பூரில் ஒரே செட்டியூலில் எடுத்து முடிச்சிடலாம் சார், ஹேண்டிகாம்லேயே ரிச்சா எடுத்துடலாம் சார்...

பா.ரா: இல்ல கேபிள் அதெல்லாம் வேண்டாம்...நீங்க கிழக்குக்கு படம் எடுத்துக்கொடுப்பது எப்படின்னு ஒருபுக்கு மட்டும் எழுதிக்கொடுங்க...

பா.ரா அசிஸ்டெண்ட் ஓடிவருகிறார்..சார் ஜெயமோகன் எடுத்த ஏழாம்உலகம் என்று ஒரு படம் நல்லாயிருக்காம்...நாம வாங்கிடலாமா?

சூப்பரு...அதை அப்படியே வாங்கிட்டு டைட்டில் கிராப்பிக்சை மட்டும் ரொம்ப புதுசா செஞ்சி புதுபடம் மாதிரி ரிலிஸ் செஞ்சிடலாம்...


கிழக்கு மார்க்கெட்டிங் டீம் அறிக்கை:

மூன்று மாசம் கழிச்சி....உலக வரலாற்றில் முதல் முறையா ரிலிஸ் ஆகாத படங்களின் டிவிடிகள் நேரடியா உங்கள் அப்பார்மெண்ட் வாசலிலேயே ஸ்டால் போட்டு விற்கப்போகிறோம் குறைந்தது 100 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்றால் எங்களுக்கு தகவல் தாருங்கள். இதைதவிர புதிய முயற்சியாக...ஓடும் பஸ்ஸில் புதுபடம் போடும் திட்டத்தின் கீழ்
பஸ்ஸில் பயணம் செய்யும் ஒவ்வொருவரிடமும் குறைந்த பணம் வாங்கிக்கொண்டு படத்தை போடப்போகிறோம், சோதனை முயற்சியாக ஓடும் ரயிலில் புதுப்படம் போடும் திட்டம் சென்னை டூ டெல்லி எக்ஸ்பிரஸ்ஸில் செயல்படுத்திப்பார்த்தோம் பலத்த வரவேற்பு இருந்தது. இதையடுத்து இத்திட்டத்தை பல இரயில்களில் செயல்படுத்தலாம் என்று இருக்கிறோம்.
அடுத்து பிளைட்டிலும் இந்த திட்டம் தொடரும்...

**************
ஒட்டகத்தை பார்த்திருக்காதவனுக்கு கூட ஒட்டகம் எப்படியிருக்கும் அதை எப்படி வளக்கனும் என்று சொல்லித்தரும் படம் தான் ”ஒட்டகத்தை கட்டிக்கோ” படம், படத்தின் முதல் சீனிலேயே ஒட்டகத்தின் பின்பக்கத்தை காட்டி தமிழ்சினிமா செண்டிமெண்டை உடைச்சிருக்கார் கேவிஆர்... ஒட்டகத்தின் ஒவ்வொரு முடியும் எப்படி பயன்படுத்தலாம் என்பது வரை டீடெயிலா சொல்லிக்கொடுத்து இருக்காங்க. விமர்சனம் பை லக்கி

பா.ரா: ஆமா பத்ரிக்கிட்ட ஒரு படம் எடுக்க சொல்லியிருந்தேனே என்ன ஆச்சு எடுத்தாரா?

ஹரன்: இப்ப வந்துக்கிட்டே இருக்கேன்னு போன் செஞ்சாரு...

பத்ரி: இந்தாங்க பா.ரா என்னோட படம்...

பா.ரா: என்ன படம் பத்ரி? என்ன கதை?

பத்ரி: ”தப்பே செய்யாத ராசா”

பா.ரா: உங்க கடமைக்கு அளவே இல்லையா...ராசாவே அப்ரூவரா மாறி செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போய் 5 வருசம் கழிச்சுமா இன்னும் இதேயே சொல்லுவீங்க...

பத்ரி: இல்ல பா.ரா...இப்ப பாருங்க எல்லாம் சட்டப்படி....

பா.ரா: ஆளை வுடுங்க சாமி........

பத்ரி: இப்ப ஒசாமா ட்வின் டவரை தகர்த்தான் என்று என்ன ஆதாரம் இருக்கு...அதை பேஸ் செஞ்சி ஒருபடம் எடுக்கலாமான்னு இருக்கேன்...ஒசாமா தீவிரவாதியா ஆதாரம் என்ன?

பா.ரா: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*********************

கிழக்கு புரொடெக்சனில் வெளிவர இருக்கும் படங்கள்:

சொக்கன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்...

சத்யராஜ் வெற்றிப்பெற்றது எப்படி!

ரஜினிகாந்த் வெற்றியின் ரகசியம்!

கமல் ஒரு சகாப்தம்!

அமுல் பேபியா குஷ்பூ!


முகில் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்

இராமன்

அக்பர்

ஒளரங்சீப்

ஜான்சிராணி

இரா.முருகன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்

என் டெலிபோன் டைரி

ஆறுவிரல்

நம்பர் 4 விவேகானந்தர் தெரு

மருதன் இயக்கத்தில் வெளிவரப்போகும் படங்கள்

இதோ வருது புரட்சி!

அதோ வந்துட்டு புரட்சி!

புரட்சி வர செய் புரட்சி!

எதையும் புரட்டாத புரட்சி!

*********************
உயிர்மைபதிப்பகம் மனுஷ்ய புத்திரனிடம் கதை சொல்கிறார் எஸ்.ரா...ஒரு கடலை வியாபாரி ஒரு மூட்டைக்கடலையோட வீட்டுக்குப்போறான்....
ஒரு ஒரு கடலையா எடுத்து உடைக்கிறான் உடைக்கிறான் உடைச்சிக்கிட்டே இருக்கேன்...3 மணிநேரம் டீடெயிலா இதைக்காட்டுறோம்.

(இவுங்க ஒரு படம் தான் எடுப்பாங்க ஆனா ஒன்பது வருசம் எடுப்பாங்க)