Showing posts with label அய்யனார். Show all posts
Showing posts with label அய்யனார். Show all posts

Wednesday, July 15, 2009

கொடுத்து வெச்சு இருக்கனும்!!!

இது நான் செஞ்ச அமிர்தம் (ரவா இட்லி) போட்டோ!
மனைவி வீட்டில் இல்லாத பொழுதுதாவது நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று உங்களுக்கு தோனுமா? அப்ப உங்களுக்குதான் இந்த பதிவு.



மனைவி எங்கேயும் என்னை விட்டு போவது இல்லை ஆனா அவுங்க அம்மா அப்பா தங்கச்சிக்கிட்ட மட்டும் போனில் பேச மொபைல் எடுத்துக்கிட்டு மாடிக்கு போவாங்க அந்த கொஞ்ச நேர கேப்தான் கிடைக்கும் என்று சொல்பவரா நீங்க? அப்ப உங்களுக்கு இந்த பதிவு மேட்ச் ஆவும்.



அவுங்க அம்மா வீட்டுக்கு போனில் பேச ஆரம்பிச்சா குறைஞ்சது ஒரு 2 மணி நேர கேப் உங்களுக்கு கிடைக்கும் அது போதும் சூப்பரா ரவா இட்லி செய்ய!



ரவா இட்லி செய்வது எப்படி?



இரண்டு டம்ளர் ரவாவை பொன் நிறமாக வறுக்கவும் கொஞ்சம் அசந்தாலும் ரவா நம்ம கலருக்கு வந்துடும் ஜாக்கிரதை! மனைவி இல்லாதப்ப ராவா மட்டும் தான் அடிக்க தெரியும் ரவா எல்லாம் வறுக்க தெரியாதுன்னா ஒன்னும் செய்யமுடியாது. உங்களை எல்லாம் உருட்டி உருட்டி அடிக்கனும்!



ஒரு கேரட்டை எடுத்து நைஸாக சிப்ஸ் கட்டரில் வைத்து சீவிக்கவும், ஒரு நாலு பச்சை மிளகாயை எடுத்து சின்னதாக வெட்டிக்கவும், கொஞ்சம் கொத்தமல்லி இலை, பீன்ஸ் ஒரு ரெண்டு பீன்ஸ் அதையும் சின்ன சின்னதாக வெட்டிக்கனும். (மெல்லிசாக என்பதைதான் சின்னதாகன்னு சொல்லி இருக்கேன்)



அடுப்பில் சட்டியை வைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, கடலைபருப்பு போட்டு வறுத்து பின் அதோடு வெட்டி வைத்த காய்கள் அனைத்தையும் போட்டு கொஞ்சம் வதக்கிக்கவும். பின் அது ஆறியதும் வறுத்துவெச்ச ரவாவோடு உப்பு போட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தயிர்(புளிக்காத தயிர்) சேர்த்து பிசையவும். பின் அதோடு ஒரு பாக்கெட் Eno கொட்டி பிசையவும்


இட்லிமாவு பதம் வந்ததும் தயிர் சேர்ப்பதை நிறுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும் ரவா ஊறி கொஞ்சம் கெட்டியாக இருக்கும் பின் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் தயிர் போட்டு குழைத்துவிட்டு இட்லி தட்டில் கொஞ்சம் நெய் ஊற்றி அதன் மேல் மாவை ஊற்றவும். வெந்ததும் எடுத்துவிடவும்.



அப்படியே சுட சுட சாப்பிட்டா சும்மா கும்கதான்னு இருக்கும் தொட்டுக்க தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.





தேவையானவை:
ரவா இரண்டு டம்ளர்
பச்சை மிளகாய் 4
பீன்ஸ் 2
கேரட் 1
மிளகு
கடலைபருப்பு
தயிர்
Eno


டிஸ்கி: மங்களூரான், சஞ்சய் போன்ற ஆட்கள் அவசியம் செய்யவேண்டிய டிபன் ஐட்டம்!


டிஸ்கி2: சக்திவேல் போன்றவர்கள் கமெடி பதிவு எழுதும் பொழுது நாம எல்லாம் என்ன எழுதுவது அதான் சமையல் குறிப்பு பதிவு! ஒரே ஒரு பதிவின் மூலம் பதிவுல சூட்டை குறைத்த அண்ணன் சக்திக்கு ரசிகர்மன்றம் துபாயில் ஆரம்பிச்சாச்சு என்பதை உங்களுக்கு சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்!

Monday, June 8, 2009

அய்யனாருக்கு ஆண் குழந்தை



ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எங்க கட்டபுள்ளைக்கு ஒரு குட்டி புள்ள பிறந்து இருக்குதுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ...


அய்யனார்-கல்பனா தம்பதிகளுக்கு இன்று(9/6/2009) காலை 8.30 மணிக்கு ஆண் மகன் பிறந்து இருக்கிறான். சுகப்பிரசவம் இருவரும் மிக நலமாக இருக்கிறார்களாம்.

குழந்தை அப்பா போல் இல்லாமல் அம்மா போல் இருப்பதாக வரும் செய்திகள் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. அப்படியே அம்மா போலவே வளர வாழ்த்துவோம்!

Wednesday, February 18, 2009

காத்துவாங்கும் கடைக்காரனும் -பின்நவீனத்துவ பீரங்கியும்!

என்னடா குசும்பா ரொம்ப சோகமாக இருக்க என்ன பிரச்சினை? என்று கேட்டப்படியே உள்ளே வந்தார் அய்யனார்.

இல்லய்யா ஒன்னும் இல்ல போஸ்ட் போட்டா ஒருத்தரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க, பின்னூட்டமும் வருவது இல்லை, கூட்டமும் கூடுவது இல்லை காத்துவாங்கும் கடைக்காரன் ஆகிவிட்டேன் கூடிய சீக்கிரம் கடைய இழுத்து மூடிவிடலாமான்னு கூட தோனுது!

டேய் மண்டையா இதுக்கெல்லாம் கவலைப்பட்டு ஒன்றும் ஆவப்போவது இல்லை. எப்படி எழுதினா கூட்டம் கூடும் என்று சொல்றேன். என்று என்னை அழைத்துக்கொண்டு கடற்கரை பக்கம் போனார்.போய்இருவரும் அப்படியே வெளியே போய் ஒரு புல் தரையில் அமர்ந்தோம்.

டேய் நீ இதுவரை எழுதி இருக்கிறது எல்லாமே மொக்கை இப்படி எல்லாம் எழுதினா ஒரு பயபுள்ளையும் மதிக்கமாட்டானுங்க! அப்ப அப்ப லைட்டா பின்நவீனத்துவம் எழுத ஆரம்பி என்றார் அதற்கு நான் யோவ் நீ வேற எனக்கு பின் நவீனத்துவம் என்றால் என்னான்னே தெரியாது! அதைப்போய் எழுது எழுதுன்னுன்னு சொன்னா? நான் என்ன செய்வேன்.

டேய் பின்நவீனத்துவம் என்பது ஒன்னுமில்லை!--அய்யனார்.
ரைட்டு விடு ஒன்னும் இல்லாததை பற்றி எழுதி ஒன்னும் ஆகப்போவது இல்லை--நான்

டக்கென்று கீழே இருந்து ஒரு புல்லை புடுங்கி இது என்ன இதைப்பற்றி என்ன எழுதுவாய் என்றார்? அதற்கு நான் இந்த புல்லை பற்றி எழுத என்னா இருக்கு? புல்ல அறுத்து மாட்டுக்கு போட்டா மாடு பால் கொடுக்கும் அதை வேண்டும் என்றால் எழுதலாம்.

அதற்கு டேய் இப்படி எல்லாம் எழுதினா ஒருத்தனும் படிக்கமாட்டானுங்க! இதை எப்படி எழுதனும் தெரியுமா

தரையில் சிறிதும் பெரிதுமாய்
குறிகள் நீட்டிக்கொண்டு
இருக்கின்றன இரவில் நிலவை புணர!

இப்படி எழுதிட்டு ஏங்கும் ஆண் குறி என்று தலைப்பு வெச்சேன்னா பதிவு பிச்சுக்கிட்டு போகும்.

யோவ் என்னய்யா செக்ஸ் பாட்டு எழுத சொல்லுற என்று கேட்டதுக்கு டேய் இதுல எங்க செக்ஸ் வந்துச்சு,இது செக்ஸ் பாட்டு இல்லடா புனைவு இந்த புல்லை குறியாக நினைச்சு பாரு கவிதை புரியும்.

டக்கென்று எழுந்திரிச்ச என்னை ஏன் டா எழுந்திருச்சுட்ட என்றார், இதுக்கு மேல இந்த புல்லு மேல உட்கார என்னமோ மாதிரி இருக்கு வா அங்கபோய் மணல் மேட்டில் உட்காரலாம் என்று அழைத்து போனேன். டேய் இங்க பாருடா எதை பற்றி எழுதினாலும் ஒரு பிரமாண்டம் இருக்கனும்..என்று அவர் சொல்ல

எனக்கு தெரிஞ்சு பிரமாண்டம் என்றால் நமீதாதான் என்று சொல்ல அதுக்கு அவர் என் காதில் சொன்னதும் அந்த மணல் மேட்டிலும் உட்கார என்னமோ மாதிரி இருந்தது சரி வா நடந்துக்கிட்டே பேசுவோம் என்று அழைத்துச்சென்றேன்.

நடந்துக்கிட்டே டேய் முதலில் எழுதக்கூடாதது எழுதக்கூடியது என்று எல்லாம் எதுவும் இல்லை, எதைப்பற்றி வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம். இதைதான் எழுதனும் என்று இருக்கும் கட்டை அவிழ்க்கனும்! அல்லது கட்டுடைக்கனும்!அதுக்கு பேருதான் புனைவு.

புரிஞ்சு போச்சு முடிச்ச அவிழ்கனும் என்று சொல்ற கரீட்டா? என்று கேட்ட என்னை முறைச்சு பார்த்துவிட்டு டேய் இங்க பாருடா கொஞ்ச நாட்களுக்கு முன் எங்க வீட்டு பால்கனிக்கு புறா வந்துச்சு அதை பற்றி எப்படி எழுதினே தெரியுமா? என்று கேட்டுவிட்டு அவர் சொன்ன தலைப்பை கேட்டதும் நல்ல வேளை உங்க வீட்டுக்கு மயில் வரவில்லை என்றேன்.

டேய் உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா! புனைவு என்பது என்னன்னா?

இரு இரு நான் சொல்றேன்
1) படிக்கிறவனுக்கு ஒன்னும் புரியக்கூடாது
2) கொஞ்சம் கிளு கிளுப்பா கெட்டவார்த்தை எல்லாம் இருக்கனும்
3)சொல்ல வருவதை நேரா சொல்லக்கூடாது,சொன்னவனுக்கும் என்ன சொன்னோம் என்று தெரியக்கூடாது, கேட்டவனுக்கும் ஒன்னும் புரியக்கூடாது.
4) தமிழுக்கே அகராதி தேடும் அளவுக்கு கடினமான வார்த்தைய யூஸ் செய்யனும்!
இதானே இரு நானே ஒரு புனைவு கவிதை எழுதுகிறேன் என்று எழுத ஆரம்பிக்க...

டேய் என்னை கொஞ்சம் அனத்த விடுடா என்று அய்யனார் பாய்ஸ் விவேக் போல கத்த... நான் தூக்கத்தில் இருந்து விழித்தேன்.

மக்களே இந்த கனவு நான் கண்டது இன்று காலை 4 மணிக்கு விடியல் காலை கனவு பலிக்குமாமே, அது நிஜமா? அப்படி நிஜம் என்றால் நான் புனைவு எழுதுவது போல் கண்ட கனவு நடக்காமல் இருக்க ஏதும் பரிகாரம் இருக்கா?

Wednesday, September 3, 2008

மீண்டும் மீண்டும் சிரிப்பு + காமெடி டைம்!

நேற்று அய்யனார் விசா மாற்றும் விசயமாக இந்தியா செல்ல இருப்பதால் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதா என்று கேட்க்க அவருக்கு போன் செய்தால் ஆபிஸ் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்தது, சரி மொபைலை ஆபிஸில் கொடுத்துவிட்டார் போல இருக்கு என்று நினைத்து அவருடைய பழய மொபைலுக்கு போன் செய்தால் ஒரு பெண் எடுத்து ஹலோ என்றது அட என்ன இது மனைவியும் இங்கு வரவில்லை குரலும் பிலிப்பைன் தேசத்து அழகி குரல் போல இருக்கே! அடடா அடர்கானக புலி அங்க உலாவுதோ என்று ஒரு டவுட் வந்தது, அதனால் ஹலோ அய்யனார் இருக்காரா என்று கேட்டதுதான் தாமதம்...

#### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** இப்படி கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுச்சு அட என்ன ஏதுன்னே சொல்லாம இப்படி திட்டினா எப்படி சொல்லிட்டு திட்டுன்னு கேட்டா இனி எவனாவது போன் செஞ்சிங்க அய்யானார் இருக்காரான்னு போலீஸ்க்கு போவேன் என்று சொல்லிட்டு கட் செஞ்சுட்டு.

நான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு சீரிய கொள்கையோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் ஆள். எப்படி இதை அப்படியே விட்டு விடுவது.

உடனே அபி அப்பாவுக்கு போன் போட்டு என்ன அபி அப்பா நம்ம தோஸ்த் ஒருத்தர் ஊருக்கு போறார் அவரைவழி அனுப்பதான் போக முடியாது அட்லீஸ்ட் போன் செஞ்சாவது பேசலாம்ல்ல என்று கேட்க பழய நம்பர் கொடுப்பா என்று அபி அப்பா கேட்க , முன்பு அவர் வைத்து இருந்த நம்பர் தான் என்று சொல்ல சரி செய்கிறேன் என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து அபி அப்பா என்ன குசும்பா வேற யாரோ எடுக்கிறாங்க என்ன விசயம் என்று கேட்க, அதை எல்லாம் விடுங்க இப்படி இப்படி எல்லாம் திட்டினாங்களா என்று என்னிடம் இருந்த லிஸ்டை வைத்து சரிபார்த்து கேட்க அவரோ ச்சே ச்சே அவுங்க அப்படி யாரும் இல்லை என்று சொல்லிட்டு வெச்சுட்டாங்க என்று சொன்னார். எங்களுக்கா தெரியாது அந்த அம்மணி எப்படி திட்டி இருக்கும் என்று.

இது சரியாவராது திட்டும் வாங்கனும் வாங்கிய திட்டை அப்படியே சொல்லவும் செய்யனும் அப்படி யாரு மாட்டுவா என்று யோசிக்க
உடனே நினைவுக்கு வந்தவர் சென்ஷி.

சென்ஷிக்கு போன் போட்டேன் ஏற்கனவே சென்ஷி என்னிடம் இருந்து வாங்கிய ஆப்பினால் இரண்டு நாட்கள் மொபைலை தொடாமலேயே இருந்தார். அதனால் எப்பொழுதும் நான் போன் செஞ்சாலே உசாரா இருப்பதாக அவருக்கு ஒரு நினைப்பு . அதனால் இந்த முறை வேறு முறையில் டீல் செய்யனும் என்று...

இனி பேசியது அப்படியே!!

நான்: டேய் நீ எல்லாம் ஒரு பிரண்டா?

சென்ஷி: ஏன் மச்சான் திட்டுற? ஏன்?

நான்: நம்ம ஆளு ஒருத்தன் ஊருக்கு போறார், அதுவும் விசா கேன்சல் செஞ்சுட்டு, ஒருத்தராவது போன் செஞ்சு அவரிடம் பேசினீங்களா? அப்படி என்னய்யா தப்பு செஞ்சார்? பின் நவீனத்துவ கவிதை, கதை எழுதினா தப்பா என்று கேட்க?

சென்ஷி: இல்லடா மச்சான் கோவ படதா, அவரு மொபைலை ஆபிஸில் சரண்டர் செஞ்சுடுவேன் என்றார் அதான் செய்யவில்லை!

நான்: ஏன் உன்னிடம் அவரு பழய நம்பர் இல்லையா? அதுக்கு செய்வது என்று கேட்க?

சென்ஷி: ஆமாண்டா மச்சான் இருக்குடா, மச்சான் அப்ப அப்ப நீ சில நல்ல காரியம் செய்யுறடா! ரொம்ப தேங்க்ஸ்டா, உன்னை போய் நான் தப்பா நினைச்சிட்டேன் டா!

நான் : சரி சரி என்னிடம் பேசி டைத்தை வேஸ்ட் செய்யாத அய்யனாரிடம் பேசு என்றேன்.

(கொஞ்சம் நேரம் கழித்து)

சென்ஷி: டேய் மச்சான் நம்பர் சரிதானே போனை எடுக்கவே மாட்டேங்கிறார், இதோட மூன்று முறை செஞ்சுட்டேன் ?

நான்: பேக்கேஜ் செக்கிங் செஞ்சுக்கிட்டு இருப்பார், கொஞ்ச நேரம் கழித்து முயற்சி செய்! (அப்பொழுது அய்யனார் வீட்டில் படுத்து இருந்த விசயத்தை சொல்லவே இல்லை).

சென்ஷி: சரி டா மச்சார், அப்படியே கோபி நம்பரையும் அவருக்கு மெசேஜ் செஞ்சுடுறேன் !

நான்: முடிஞ்சா கோபியையும் பேச சொல்!

சென்ஷி: சரிடா மச்சா பேசிட்டு அப்புறம் பேசுறேன்.

ஒரு 20 நிமிடம் கழித்து சென்ஷியிடம் இருந்து போன்.

சென்ஷி: ஹலோ! ஏன் டா ஏன்?

நான்: இது இது எல்லாம் வாங்கினீயா? (லிஸ்டை சரி பார்த்தேன்) நான் வாங்காததும் அதில் இருந்தது.

சென்ஷி: டேய் நான் திட்டுவாங்கினது கூட பெருசா தெரியலை, அந்த நம்பரில் இருந்து போன் வந்துச்சு பாவம் ஊருக்கு போறவன் எதுக்கு காசை வேஸ்ட் செய்யனும் என்று கால் கட் செஞ்சுட்டு, நான் என் மொபைலில் இருந்து போன் போட்டு திட்டுவாங்கினேன் டா!

நான்: ஏன்னா நீ ரொம்ப நல்லவன் என்று சொல்ல.

அப்ப அழுதுக்கிட்டே போனை வெச்சுட்ட சென்ஷியிடம் பேச திரும்ப போன் செஞ்ச்சாலே எடுக்க மாட்டேங்கிறார், அழுதுக்கிட்டு இருக்கார் யாராவது போன் போட்டு ஆறுதல் சொல்லுங்களேன்:) சென்ஷி நம்பர் யாருக்கும் வேண்டும் என்றால்என்னை தொடர்பு கொள்ளவும்!

(கடைசிவரை அய்யனார் புது நம்பர் என்னிடம் இருந்தது சென்ஷிக்கு தெரியாது, தெரிஞ்சா ரொம்ப பீல் செய்வார்)

Tuesday, June 3, 2008

A டன்டனக்கா A டனக்குனக்கா A டன் டன்

1001

பூரியை பொறித்து எடுக்கும்
முயற்சிகள்
தோல்வியில் முடிந்தன.
உருண்டையாய் உருட்டிவைக்கப்பட்ட
கோதுமை மாவில்
இருந்து சப்பாத்தியை வரவழைக்க
முடிந்தது.

படிந்திருந்த மாவின் இடுக்கிலிருந்து
பிரித்து எடுக்க முடியவில்லை
பூரிக்கான உருண்டை முனையை
குண்டன் ஒருவனின் டுர்ர்ர்ர்
காற்று மாவினை அகற்றியதில்
மாவின் நுனியை பற்றிவிட
முடிந்தது
பூரி கேட்ட என் வீட்டுகாரிக்கு
பசியான அத்தருணத்தில்
என்னால் இயன்றது
வெறும் மாவுமட்டுமே!!!

-----------------------***********-----------------------
1002
லோக்கல் பஸ் ஸ்டாண்டில்
நோட்டிஸ் ஒட்டாதே ஏரியாவில்
எனக்கு முன்னால் அவள்
நோட்டிஸ் ஒட்டிக்கிட்டு இருந்தாள்
பான்பராக்கினால்
சிவந்து இருந்தது
அவள் உதடு.

ஒட்டிமுடித்துவிட்டு நகரும் பொழுது
பாத்தேன் “ரகசிய இரவுகள்”
போஸ்டரை
கண்ணை இமைக்காமல் வெறித்து
பார்த்துகொண்டு இருந்தபொழுது
குனிந்து என் முகத்தின் அருகே
காறி துப்பியபடி போன
சைனாகாரியின் அரை கால் டவுசர்
என் பேண்ட் அளவே இருந்தது.

-----------------------***********-----------------------

1003
தமிழர்களே தமிழர்களே
என்னை தூக்கி கடலில் போட்டாலும்
கட்டுமரமாய் மாறி மிதப்பேன்
என்மேல் நீங்கள் ஏறி
மீன்பிடிக்க போகலாம்
மீன் பிடிக்காதவர்கள் விவேகானந்தர்
பாறைக்கும் போகலாம்.

-----------------------***********-----------------------
பின்னூட்டம்

ஐயோ ராம் சுந்தர்.சி

வெறும்மாவா (இல்லை அரைத்தமாவா?)
வெறும் மாவே பிடித்துஇருக்கிறது.

வைத்தியகாரன்

கால்கழுவ போகும் குளக்கரையில் கன்றாவியாய் தங்களை சந்திப்பதில்மகிழ்ச்சி.

கோழிவாத்

வந்தாச்சு இம்சை வந்தாச்சு:(((

வளர்சூரியன்

முதலில் வந்து இருக்கும் சப்பாத்தி மாவு அருமையாக இருக்கிறது,
இரண்டாவது “இரகசிய இரவுகள்” படம் சுமார் ரகமே!

டிஸ்கி: இந்த பதிவு புரியாதவர்கள் இங்கு (எச்சரிக்கை அது அய்யனாரின் வலை பக்கம், நீங்கள் அங்கு போவது உங்கள் சொந்த ஆர்வத்தினாலேயே, அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், இழப்புகளுக்கும் எவ்விதத்திலும் நான் பொறுப்பு இல்லை) போய் இதை படித்துவிட்டு வந்தால் புரியும், அதில் எனக்கு புரியாத 3 வது கவிதையை உல்டா அடிக்கமுடியாத என் தோல்வியை ஒத்துக்கிறேன்.

Sunday, October 7, 2007

பதிவர்கள்+ வாசகர்களுக்கு ஒரு போட்டி!!!

வலைபதிவர் என்றால் அட்லீஸ்ட் ஒரு போட்டியாவது நடத்தி இருக்கவேண்டுமாம், அப்படிதான் மூத்த வலை பதிவர்கள் சொன்னார்கள், ஒரு போட்டி ஒன்னு நடத்தி அதில் பங்கு பெறும் ஆட்களுக்கு பரிசும் கொடுக்கனுமாம், அப்படி கொடுத்தால் தான் வலைபதிவராக சேர்த்துக்குவாங்கலாம். நானும் எழுத ஆரம்பித்து 7 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் இது வரை ஒரு போட்டி கூட வைக்கவில்லை எனவே என்னை வலைபதிவராக சேர்த்துக்கமாட்டேன் என்று சொன்ன மூத்த பதிவர்களுக்காக இந்த போட்டி!!!

அப்படி என்ன போட்டின்னு நீங்க எல்லாம் ஆர்வமாக இருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்...

கேளடி கண்மணி படத்தில் SPB ஒரு பாட்டை பாடும் பொழுது இடையில் மூச்சுவிடாமல் பாடுவார் அது போல் நீங்க செய்யவேண்டியது ஒரு பதிவின் தலைப்பை நான் இங்கு கொடுத்து இருக்கிறேன் அதை நீங்க மூச்சு விடாமல் ஒரே தடவையில் படித்து அதுக்கு அர்த்தம் சொல்லவேண்டும்...

அப்படி என்னய்யா பெரிய புடலங்காய் தலைப்பு இங்க குடு நான் படிச்சு காட்டுகிறேன் என்று உதார் விட்ட அபி அப்பா, படிச்சு முடிச்சதும் மயக்க நிலைக்கு சென்று விட்டார். (முகத்தில் தண்ணி தெளித்து கோலம் போட்ட பிறகுதான் முழித்தார், என்ன தண்ணி தெளித்தோம் என்பது ரகசியம்)

இதோ அந்த தலைப்பு...


ஏதோ ஒரு புள்ளியில் அய்க்கியமாவதற்கான முஸ்தீபுகள் என்பதைத் தவிர்த்து நமது பறத்தல்களுக்கு வேறெந்த பெயர்களுமில்லை :

இதே தலைப்பை நானோ அல்லது அபி அப்பாவோ ரெண்டு பதிவுகளாக போட்டுவிடுவோம் இவர் என்னடான்னா இம்மாம் பெரிய தலைப்பை வைத்து இருக்கிறார்.... வாங்க வந்து கும்முங்க(குமுறுங்க).

டிஸ்கி: மேலே நான் கொடுத்து இருக்கும் தலைப்பு அய்யனாரின் பதிவு தலைப்பு. அது பார்க்க மட்டும், அதை கிளிக் செஞ்சு பதிவை நீங்க படிக்க நேர்ந்தால் அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல!!!

பரிசு: அய்யனார் எழுதிய கவிதைகளின் மொத்த தொகுப்பும் மெயிலில் அனுப்ப படும்.

Tuesday, September 4, 2007

கலாட்டா போட்டோ!!!

போட்டோ குசும்பு!!! திரும்பவும் வேற யாரு நம்ம அய்யனார் தான். அது என்னவென்று தெரியவில்லை, அய்யனாரை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் அந்த நாள் முழுமை அடைவது இல்லை:)))





Sunday, September 2, 2007

அய்யனாருக்கு என் கண்டனம்...

அய்யனார் நீங்கள் எழுதும் கவிதை புரியாது என்பது தெரிந்தும் அதை படித்து , அதை புரிந்துகொள்ள நான் எடுத்த முயற்சிகள் ஏராளம்.
நீங்கள் எதிர் வினை என்று எழுதினால் நான் சம வினை என்று எழுதி அதுக்கு விளக்கம் கொடுத்தேன். இப்படி நான் பல பதிவுகள் உங்களுக்காக போட்டு இருக்கிறேன் ,அப்படி இருக்கும் பொழுது.. நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள்?????

நான் மூன்று நாள் லீவில் இருக்கும் பொழுது, வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-
என்று வரிசையாக 5 பதிவுகள் போட்டால் நான் எப்படி ஓவர் டைம் செய்துதான் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும். இப்படி எனக்கு அதிக வேலை கொடுக்கும் உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

ஏன் இப்படி செஞ்சீங்க விளக்கம் கொடுங்க!!!


டிஸ்கி: எங்களுக்குள் ஏதும் பிரச்சினை என்று நினைச்சீங்களா மக்களே!!! அப்படி ஏதும் வராது. ஏன்னா நான் அய்யனாரை எப்படி வேண்டுமானாலும் கலாய்ச்சிக்கலாம் என்று அவருடன் *ஒரு வருட அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறேன்.

நான் உங்க கூட *அக்ரிமெண்ட் போட ரெடி!!! நீங்க உங்க பெயரையும் கெடுக்க சாரி சாரி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் மெயில் அனுப்பவும்.

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

இப்படிக்கு
அக்ரிமெண்ட் போட்டு கலாய்போர் சங்கம்
துபாய்

Tuesday, August 21, 2007

கோபமுடன் புனிதர்களுக்கு = (சமவினை)

வம்பு, தும்பு, சந்தோசம், பிறப்பு விளிம்பிற்க்கு தானாகபோகும் வாழ்வின் அவலம்இவை எல்லாத்தையும் படித்துக்கொண்டோ அல்லது வீசிடி போட்டி டிவியில் முனியாண்டிவிலாஸ்ஆட்டுகால் சூப் குடித்துக்கொண்டோ சந்திரன் வழுக்கை மண்டை உச்சியில் விழுந்த தேங்காய் போல் மிகச் சக்தி வாய்ந்த புனிதர்கள் ஆரம்பித்த குழுமம் தான் கோபமுடன் என எனக்கு தெரியும்.

கோபு தந்த குட்டியை பிடித்து கொண்டு போனால் அங்கு ஒரு மாடு கட்டபட்டு இருந்தது,அதற்கு யூசுப் புல் வைத்து கொண்டு இருந்தார், என்னடா இவரு எல்லாம் மாட்டுக்கு புல் வைக்கிறாரா? என்ற ஆச்சர்யம் முதலில் எழுவே இல்லை!

அறிவுசூரியன் எழுதிய நாலு பக்கங்கள் கிழிக்கபட்டதுக்கு காரணம் எனக்கு இனிப்பை தந்தது. ஏன் ஏன்றால் அந்த பக்கத்தில் லட்டு இருந்தது ,தமிழை இங்குபில்லரில் வைத்து பாதுகாக்கும் இப்புனிதர்களின் பணி வாழ்க. தவறான நாலுபக்கம் என்று கிழிக்கபட்ட பக்கங்களை இங்கு வைக்கிறேன். கோபமுடன் பற்றியெல்லாம் சமவினையாற்ற என் வலைபக்கம் இருப்பிடமே!!!

-------------------X X X(அதான் சிம்பாளிக்கா சொல்றோம்ல்ல)---------------
கோணி இப்பொழுது ஆங்கில சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றார் ஆனால் அதே சம்பளம் தான் அந்த கம்பெணி கொடுப்பதாக தனியாக புலம்பினார்.ஏதோ "தெரிந்தும் தெரியாமலும்" எழுத வந்துவிட்டார்.

ஒரு டீச்சர்

+ குறி

- குறி

x குறி

% குறி

என்று வகுப்பில் குறி சம்மந்தபட்ட பாடத்தை எப்படி எடுக்கலாம். இது சம்மந்தமாக அவர் எழுதியதுதான் பிரச்சினையாகி இருக்கிறது, நிஜமாகவே கோணி கணக்கு வாத்தியார் அல்ல யாரும் திடிர் என்று 100323 x 1212121 பதில் என்ன வரும் என்று கேட்டுவிட்டால் அவர் கணக்கு வாத்தியாரை கேட்டே பதில் சொல்ல வேண்டி வரும். ஆகையால் இனி அவர் தெரிந்தும் தெரியாமலும் எழுதகூடாது.

-------------------XXX-------------------------






மேலே உள்ள செங்குத்தாக இருக்கும் எழுத்துக்கள் அய்யனார் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது.


டிஸ்கி: இது அய்யனாரின் எதிர் வினைக்கு, எதிர் வினை ஆகையால் இது சம வினை.

குறிப்பு: அய்யனாரின் அன்புடன்1 புனிதர்களுக்கு எதிர்வினையை படித்து இருந்தால் மட்டுமே இது புரியும்.

Saturday, August 18, 2007

புலி தோல் போர்திய பசு

காமெடியனாக இருப்பதில் இருக்கும் ஒரு கஷ்டம் சில விசயங்கள் சீரியசாக பேசும் பொழுதுமற்றவர்கள் அதையும் நகைசுவையாக எடுத்து கொள்வதுதான், ஒன்றுக்கு மூன்று முறை இல்லை நிஜமாகதான் சொல்கிறேன் என்று சொன்னாலும் அது மற்றவருக்கு நகைசுவையாகதான் தெரியும் பொழுதுகொஞ்சம் வலிக்கதான் செய்கிறது. இதை அதுபோல் எடுத்துகொள்ளாதீர்கள்.

முதன் முதலாக உன்னிடம் பேசிய நாளை நினைவில் வைத்து கொள்ளவில்லை ஆனால் என்ன பேசினேன் என்று நினைவு இருக்கிறது, அன்று எனக்கு தெரியவில்லை உன்னுல் விழபோகிறேன் என்று!
வழக்கம் போல் கிண்டலுடனே ஆரம்பித்த நம் அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து இன்று ஒரு புயலை போல் மையம் கொண்டு உள்ளது.

நம் சமுதாயத்துக்கு ஒரு நடிகன் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும், அரசியல்வாதி என்றால் இதைதான் செய்யவேண்டும் என்று ஒரு சட்டதிட்டங்களை வைத்து இருக்கிறார்கள், அதுபோல் ஒரு கவிஞன் என்றால்"அன்பே" "அமுதே" என்றுதான் எழுதவேண்டும் என்ற சட்டத்தை உன்மீதும் வைத்து பொருத்த முயலும் அதை நீ உன் வார்தைகளால் உடைக்கிறாய் பொறுத்துகொள்ள முடியாதவர்கள் உன்னை சாடுகிறார்கள்.

பெண்களை பற்றியும் மதுவை பற்றியும் எழுதுவதால் நிஜத்திலும் அப்படிதான் என்று முடிவு கட்டும் மக்களை பார்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது வாய் வழியாக அல்ல! ஏன் ஒருவன் வெளிப்படையாக இருந்தால் அவன் மோசமானவனாகதான் இருக்கவேண்டுமா? என்ன? உன் வெளிபடையான பேச்சுதான் எனக்கு மிகவும்பிடித்தது. உண்மையாக பழகியவர்களுக்கு தெரியும் நீ நல்லவன் என்று.

எனக்கும் தெரியும் நீ நல்லவன் என்று!!! நீ வெறும் புலி தோல் போர்திய பசுதான் என்று வேறு யாருக்கு தெரியவேண்டும்?

......................அய்யனாருக்கு

Tuesday, August 7, 2007

கட்டுடைக்கும் சுகுணாதிவாகர்,அய்யனாருக்கு ஒரு பகிரங்க சவால்

நான் அடிக்கடி நம்ம அய்யனாரிடம் பேசும் பொழுது கேட்பேன் என்ன அய்யானார் நீங்கள் எழுதும் கவிதைகள் பல புரியாமையும், புரியும் வார்தைகள் கொஞ்சம் மோசமாகவும் இருக்கிறதே என்று கேட்டால் அவர் சொல்லும் பதில் நான் சுகுணா திவாகர், எல்லாம் ஒரெ (ரு) மாதிரியாகதான் எழுதுவோம். நாங்க எல்லாம் கட்டுடைக்கும் ஆளுங்கள் என்பார்.
அதனால் அவர்களுக்கு நான் வைக்கும் சவால்..

இது நம்ம கவிதாயினி காயத்ரி தலைக்கு பொருந்தாத கீரிடம் என்று எழுதிய விமர்சனத்துக்குகாக ஆட்டோ அனுப்பி சரியாக கவனித்தார் ஒரு சக பதிவர்.
அதனால் அவர் இருக்கும் நிலை. சுகுணா திவாகர் நீங்க இந்தியாவில் இருப்பதால் முடிந்தால் இந்த கட்டை உடையுங்கள் பார்கலாம்,

வெறும் கையால் முடியவில்லை என்றால் சுத்தியல், கடப்பாறை எல்லாம் எடுத்துக்கலாம் ஆட்சேபனை இல்லை எங்களுக்கு தெரிய வேண்டியது நீங்கள் எப்படி கட்டுடைப்பீர்கள் என்றுதான்.

அய்யனார் இனி உங்களுக்கு அடுத்த சவால். எங்க இந்த கட்டை வெறும் கையால் உடைக்கனும் அப்பதான் நாங்க நீ கட்டுடைக்கும் ஆள் என்று ஒத்துகொள்வோம்...


(சுகுணா திவாகர் கோச்சுக்கமாட்டீங்க என்று நினைக்கிறேன்:)

Thursday, July 5, 2007

அய்யனாரின் மகிமை

இது நம்ம அய்யனாரின் மகிமை. நம்ம தம்பியும், காயத்ரியும் அழுது புரண்டு கேட்டுக்கிட்டதால் அவரின் மகிமையை உங்களுக்கு உனர்த்த கடமை பட்டு இருக்கிறேன்..
இந்த படம் கவிதை சொல்லும் முன்பு:

பொம்மை: யப்பா யாருப்பா நீ


அய்யனார்: நான் தான் அய்யனார்

பொம்மை: என்ன கிண்டலா அய்யனார் என்றால் சிலையாக தானே இருக்கனும்...

அய்யனார்: அட போய்யா நீ வேற நான் மண் சிலையாக எல்லாம் இருந்து இருக்கிறேன்.

பொம்மை: சரி என்ன செய்யுறே...

அய்யனார்: தனிமையின் இசைன்னு வலை பதிவு ஒன்னுல கவிதை எழுதிக்கிட்டு இருக்கேன்.

பொம்மை: எங்க ஒரு கவிதை சொல்லு பார்கலாம்

அய்யனார்: இப்ப லேட்டஸ்டா

குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின் மீது
படிந்திருக்கும் புனிதங்களைஎதைக்
கொண்டழிப்பதெனத் தெரியவில்லை

இந்த படம் கவிதை சொன்ன பிறகு

அய்யனார்: அடச்சே எங்கப்பபா இங்கதானே நின்னுக்கிட்டு இருந்தானுங்க....

அசரி: கொடுத்த வச்ச பொம்மைங்க ஓடி போச்சு...பாவம் வலை பதிவர்கள்...