Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, September 29, 2009

சிரிக்க! சிந்திக்க அல்ல!

புளியமரத்துக்கு பக்கத்துல இருக்குற ஒத்த கீத்துக்கொட்டாதான் எங்கூரு பஸ்ஸ்டேண்டு. அதுல இத்துப்போன தகரத்துல எந்த காலத்திலயோ எழுதுன பயணியர் நிழற்குடை போர்டுங்கற பேர சொமந்துக்கிட்டுருக்குது.போனமுறை தேர்தலப்போ வச்ச தண்ணிக்குடம் மண்பானை ஒடஞ்சு அங்கயே கிடக்கும். ஆனா ஒருநாளைக்கு நாலு தரம் ரோட்டுல மண்ணள்ளி தூத்திக்கிட்டு வர்ற பஸ்ஸுல ஏறதுக்கு எவனும் இருக்கறதுதான் கெடயாது.

பஸ்டேண்டுக்கு எதிர்க்க இருக்கற பொட்டிக்கடையை தண்டல்ல எடுத்து, சக்தி சின்னதா கெரசின் ஸ்டவ் வச்சு டீக்கடையும் சேத்து நடத்திட்டு இருக்கான். ராத்திரில படுத்துக்கறதுக்காக வச்சிருக்கற ரெண்டு கட்ட பெஞ்சுல ஒண்ண எடுத்து வெளில டீ சாப்பிட வர்றவங்களுக்குன்னு போட்டு வச்சிருப்பான். சில சமயம் சும்மா உக்காந்து பெஞ்சை தேச்சுட்டு போறவங்கள அடுத்த முறை உக்காரும்போதே எவனையோ திட்டுற கணக்கா சக்தி காறித்துப்புறதால அங்க உக்கார்றதுக்கு முன்னாடியே டீ சொல்லிட்டுத்தான் பெஞ்சுல உக்காருவாங்க.

சக்தியோட கடைக்கு தவறாம வர்ற ஆளுங்கள்ல முக்கியமானவன் கா.கா.பீ அவுங்க அப்பா அம்மா வெச்ச பேரு சுரேஸ்.ஆனா காலோஜூக்கு படிக்கப்போன பொறவுதான் ”ஸ்” வட மொழி எழுத்து என்பதை கண்டுபிடிச்சு இவனா இவனுக்கு வச்சுக்கிட்ட புதுப்பேரு. காகாபீ.

பழைய பேரு தேவலையா இருக்குதேன்னு யோசிக்கறவங்க காகாபீயோட அர்த்தம் கேட்டு மூக்குல விரலை வச்சு மூடிக்கிட்டு போவானுங்க. கார்லஸ் கார்மன் பீக்ஸ்கன் என்று மூன்று வெளிநாட்டு புரட்சி கதை எழுதறவங்க பேர சேத்து வெச்சுக்கிட்டு சுருக்கமா கேகேபீன்னு சொல்லிக்குவான். கே.கே.பீன்னாலும் காகாபீன்னாலும் மூஞ்சை சுளிக்குற ஊரா இருக்குறதால இவன் வருத்தப்படாதது ஆச்சரியம்தான். சிலசமயம் K.K.P சொன்னேன் என்று ஒரு சிகரட் வாங்கி வான்னு அடிக்கடி சின்னப்பசங்கள அனுப்பி வைக்கறப்ப அவங்க மூலமா கே.கே.பீ காக்காப்பீயா கொடி கட்டி பறந்துச்சு.

காகாபீ என்றதும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வர்றது அவன் கையில் தெனமும் வச்சிருக்கற விதவிதமான தடியான பொஸ்தவம். ஒருநா கருப்பு சட்டை, தலையில் தொப்பி போட்டு தாடியோடு வாயில் அப்பத்தா குடிக்கும் சுருட்டோடு ஸ்டைலா போஸ் கொடுக்கும் ஒருவரோட அட்டை படம் இருக்கும், அடுத்த நாள் தொங்கு மீசை, வெட்டருவா மீசை என்று வித விதமான வெளிநாட்டுக்காரங்க போட்டோ அட்டை படமாக இருக்கும் புத்தங்கள் கையில் தவறாமல் இருக்கும். பேசுறப்ப சாதாரணமா வார்த்தையால த்தோயோளி, மானா பூனான்னு வார்த்தையை போட்டுத்தான் ஆரம்பிப்பான்.அந்த வகையில் முதல் புரட்சிக்கி வித்திட்டவன்.

கீழத்தெரு வடக்கு வூட்டுக்கார பய மாரி ஏழாவது வரைக்கும் படிச்சுட்டு அப்பனாத்தா பேச்ச கேட்டு படிப்ப விட்டவன். மாடுமேச்சுக்கிட்டு இருக்கான். சொந்தமா அடுத்த வருடத்திலாவது ஒரு எருமை மாடு வாங்கிடனும் என்று நோக்கத்துல இருக்கறதப் பாத்து அவன் மாமனே ஒரு மாட்டை இனாமா கொடுத்து அவர் பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுத்தாரு. மாரி காகாபீயோட கொஞ்சம்நாள் ஸ்கோல்ல சேர்ந்து படிச்சதால நெறய்ய படிச்ச காகாபீக்கு ரசிகனாக மாறிட்டான்.

டீக்கடைக்கு காகாபீ வந்து உக்காந்திருக்கும்போது ஒடனே மாரி எழுந்து நின்னுப்பான். நிக்கலைன்னா டீ காசு மாரி தலையில வுழுந்துடும். ஆனா வுடாம காகாபீ, ”எலேய் மாரி! எதுக்கு எந்திருக்கிற.. நீயும் மனுசன். நானும் மனுசன். எதுக்கு இதெல்லாம், கைகட்டுறதுங்கறது அடிமைத்தனம்டா,குனியறது ஒரு குறீயிடுடா. அது இதுன்னு பேசிக்கிட்டே இருப்பான். ஒருதரம் மாரி கையில் வச்சிருந்து சினிமாப்படம் பாத்துட்டு இருந்த ஒத்தைப்பேப்பரை பார்த்துட்டு ”இந்த பேப்பர் பீ தொடைக்கக்கூட லாயக்கு இல்லை”ன்னு ஆரம்பிச்சு இந்தப்பேப்பரை நடத்துறவரை பத்தி அந்தப்பேச்சு பேசினான். அன்னிலேந்து வெறுங்கையில போண்டா தின்னாலும் திங்கறான் அந்த பேப்பரை வச்சி மடிச்சு கொடுத்தா தொடுறது போண்டாவை தொடுறது இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதியாலதான் இந்தியா குட்டிச்சுவராப் போனதாவும் அவர்களை அடிச்சு துரத்தினால் தான் நாடு வெளங்கும்ன்னும் காக்காப்பீ அடிக்கடி சொல்லுவான்.

ஒருதரம் மாரி ”யாரு இவரு? சுருட்டு குடிக்கிறவரு” ஒரு பில்டர் சிகரெட் வாங்க கூட காசு இல்லாதவரும் இம்மாம் பெரிய புக்கு எழுதியிருக்கிறாரு என்று காகாபீ கையில இருந்த பொஸ்தக அட்டையில் இருக்கறவரைப் பத்திக் கேட்டதும் சத்தம் போட்டு சிரிச்சான் காக்காப்பீ. சிரிச்சுக்கிட்டே ”ம்ம்ம் இவரை பத்தி தெரியாததால் தான்டா இன்னும் உன் தெருவுல எல்லா வூடும் அப்படியே குடிசையா இருக்கு”ன்னான்.

”ஏனுங்க! இவரு இலவச வீடு கட்டிதர்றாரா”ன்னதும் காக்காப்பீ சிரிச்ச சிரிப்பு மாரியை என்னமோ செய்தாலும் அதுக்கப்புறம் அவன்கிட்ட பொஸ்தவம் பத்தி எதுவும் பேசுறது இல்லை.

காக்காபீக்ட்ட ஒரு பத்து நிமிசம் பேசினால் அதில் ஒரு நொடிக்கு குறைச்சல் இல்லாம ஈயம்,ஈசம்,அடிமை, இதுல்லாம வேறு ஏதும் இருக்காது.மாரிக்கு கா.கா.பீ என்றாலே ஒரு புரட்சியாளன் அல்லது தேவதூதன் ரேஞ்சுக்கு அவனை வைத்திருந்தான். காரணம் கா.கா.பீ ஒருதரம் பேசுறப்ப கட்டினா உங்க சாதி பொண்ணைதான்டா மாரி கட்டுவேன், இல்ல பைபாஸ் ரோட்டில் இராத்திரி நிக்கும் ஒருவளை சீக்கு இல்லாதவளா பார்த்துதான் கட்டுவேன் என்று சொன்னது கூட காரணமாக இருக்கலாம்.

நேத்தைக்கு மொத நாள், பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு இலை வாங்கிட்டு வரச்சொல்லி மாரியை டவுனுக்கு அனுப்பினாரு காரைவீட்டுக்காரர். மாரி சைக்கிளில் டவுனுக்குப் போனவன் வெய்யிலுக்கு சாஸ்தியா இருந்ததால சர்பத் குடிக்க ஒரு கடைக்கு போனான். அந்த நேரத்துல எதிர்க்க காகாபீ மெத்தை வீட்டுக்குள் நுழையும் முன்னாடி கையில் இருந்த தடி பொஸ்தவத்தை பக்கத்து பொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு வராண்டாவில் நின்னான்,நேர்ல பார்த்தா காறித்துப்பி செருப்பால அடிக்கணும்ன்னு சொன்ன சாதிக்கார ஆளு முன்னாடி கும்பிடு போட்டுட்டு, அவர் ஏதோ சொல்ல சொல்ல கை கட்டி குனிந்து நின்று கேட்டுக்கிட்டு தலையாட்டி இருந்தான் காகாபீ.

புரட்ச்சியாம் புண்ணாக்காம் போங்கடா மயிறாண்டிகளா...என்று முனுமுனுத்துக்கிட்டு சர்பத்தை குடிச்சு முடிச்சான் மாரி

Sunday, April 5, 2009

சொடலையின் லீலை

அவன் பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் எம்.ஜி.ஆர் பேசுவது போல இருக்கும், சொடலை என்கிற அவன் பெயரை சொதலை என்றுதான் சொல்வான் இருபது வயது ஆன அவன். பேச்சு கொஞ்சம் சரியாக வராது. ட வரிசை சுத்தமாக வராது ட வரும் இடத்திலும் மற்றும் பல இடங்களில் எல்லாம் "த" வரிசைதான்.

உடல் உறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்காது,வீட்டில் கடைசியாக பிறந்தவன் என்பதாலும் ஒரே ஆண் மகன் இப்படி பிறந்துவிட்டானே என்று இவன் அம்மா வேண்டாத கோயில் இல்லை போகாத அரசு மருத்துவமனை இல்லை கடைசியாக காதில் போட்டு இருந்த கம்மலை விற்று சென்னை போய் வந்த பிறகு இனி விக்க ஒன்று இல்லை என்று ஆன பிறகுதான் அவள் பஸ் ஏறுவது நின்றது.இப்பொழுது கம்மல் இருந்த இடத்தில் கவரிங் தோடு போட்டு பார்த்து ஒத்துக்காமல் ஓட்டை துந்துவிடாமல் இருக்க ஓட்டையில் ஒரு வெளக்கமாத்து குச்சு சொருகி இருக்கும் தங்கமாள் தான் அவன் அம்மா!

ஒழுங்கா வேலை செய்யும் ஆட்களுக்கே என்பது ரூபாய் சம்பளத்துக்கு அறுபது ரூபாய் கொடுக்கும் கருப்பையா பண்ணையில் தான் வேலை இவனுக்கும் இவன் குடும்பத்துக்கும்.இவனுக்கு வேலை என்றால் சும்மா உப்புக்கு சப்பாணி வேலை, முடியவில்லை என்றாலும் அடுத்தவர்கள் செய்யும் வேலையை தன்னாலும் செய்யமுடியும் என்று காட்டுவதற்காகவே, கஷ்டப்பட்டும் வேலை செய்ய முயற்சி செய்வான் சொடலை, நெல் அறுவடையின் பொழுது கதிர் அறுக்க போனால் மற்றவர்கள் பத்து அடி போனால் இவன் ஒரு அடியிலேயே நின்று, ஒரு கையில் பிடித்த கதிரை இன்னொறு கையால் மரம் அறுப்பது போல் அறுப்பான், இவன் உலுக்கும் உலுப்பில் பாதி நெல் கொட்டிவிடும், இருந்தாலும் ஒண்ணும் சொல்லமாட்டார்கள் மற்றவர்கள், அதுபோல் இரு கைகளாலும் சேர்த்து ஒன்றாக கீழே கிடக்கும் நெல்லை குவிக்கமுடியாது ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு பக்கம் நிற்கும்.எல்லோருக்கும் ஐந்து மரக்கா கூலி என்றால் இவனுக்கு இரண்டு மரக்கா கூலி! ”எநாதூ எக்கு மத்தும் இதண்து மரக்கா மத்...” மற்றவர்களுக்கு மட்டும் ஐந்து மரக்கா நெல் கொடுக்குறீங்க? என்று அவன் சொல்லி கேட்பதுக்கு கூட பொறுமை இல்லாமல் போதும், போதும் நீ கிழிச்ச கிழிக்கு என்று விரட்டிவிடுவார் கங்காணியார்.

அந்த சமயத்தில் அவன் கண்களில் தெரியும் தோல்வியோ அல்லது இயலாமையோ அதை வார்தைகளில் சொல்லமுடியாது.ஒரு முறை ரோட்டில் ஓஓஓஓன்னு அழுதுக்கிட்டு இருந்தவனை ஏன் என்று கேட்டேன் கீழே கிடந்த பொட்டுகடலையை காட்டினான். கைகளில் தோல் வயன்றிருந்தது போல இருந்தது, என்னடா என்று கேட்டதுக்கு ”அம்ம பொத்துகதலை வாங்கி வத சொன்னது கீதே போத்துத்தேன்” என்று சொன்னான் ஏன் டா கை எல்லாம் தேஞ்சு இருக்கு என்றதுக்கு,கீழே ஓரமாக கொஞ்சமே கொஞ்சமாக குவிஞ்சு கிடக்கும் பொட்டுகடலைய காட்டினான். இருவிரல்களால் பொறுக்கமுடியாததால் தர தரன்னு கைய தரையில் போட்டு தேச்சு குவிச்சு வெச்சு இருந்தது புரிஞ்சுது. சரி இது வேண்டாம் மண்ணாகி விட்டது வேறு வாங்கி தருகிறேன் என்று சொல்லி அழைத்து சென்று பொட்டு கடலையும், அவனுக்கு திங்க ஏதும் வேண்டுமா என்று கேட்டதுக்கு ஐந்து பைசாவுக்கு தேன் மிட்டாய் வேண்டும் என்றான்,அதை வாங்கி கொடுத்ததும் சந்தோசமாக சென்றான்.

அன்றில் இருந்து என்னை கண்டதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான் அண்ணே..! அண்ணே..! என்று!மற்றவர்கள் போல அலட்சியம் காட்டாமல் அக்கறையோடு பேசியதோ,அல்லது தேன்முட்டாயோ தெரியவில்லை! ரொம்ப பாசமாக இருக்க ஆரம்பித்தான், சில நேரங்களில் நண்பர்களோடு இருக்கும் பொழுது அவன் பேசுவது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும்,ஒரு சமயம் அவனை கிண்டல் செய்ததை நான் கோவமாக திட்டியதில் இருந்து அவர்களும் இவனை கிண்டல் செய்வதை நிறுத்தினர்.

ஒரு முறை அவனிடம் என்ன வேலைக்கு போய் வருகிறாய்..? என்றேன். அவனும் “என்ண்ணா பாத்தாஆ தெயில சொங்கல் சூளைக்கு” என்றான். தெரியலை என்றேன்.பின் அடுத்த நாள் வரும் பொழுது செங்கல் பொடியில் விழுந்து பிரண்டது போல் சிகப்பாக வந்து நின்றான், சொடலை சொல்லமலேயே நான் செங்கல் சூளைக்கு போய் வருகிறாயா..?என்றதும் ரொம்ப சந்தோசம் தானும் வேலை செய்ததை சொல்லாமல் கண்டு பிடித்தது அவனுக்கு பெருமையாக இருந்திருக்கவேண்டும், அதுபோல் ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு மாதிரி வந்து நின்றான், சாந்து வேலை என்றால் சேறோடு,எரு அடிப்பது என்றால் சாணியோடு இப்படி எந்த பாகுபாடும் கிடையாது,அவனை பார்த்ததும்என்ன வேலைக்கு சென்று வருகிறான் என்பதை கண்டுபிடிப்பதே அன்று அவன் வேலை செய்ததுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆனது.அதனால் எந்த வேலைக்கு சென்றாலும்அதன் மேல் ஒரு முறை விழுந்து புரண்டுதான் வருவான்.

ஒரு நாள் நண்பர்களோடு நான் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது ஓடி வந்தான்; வந்தவன் ”அண்ணே னேத்து பண்ணஆரும் நதவாள் அமுடாவும் மோத்தார் செத்துக்குள்ளமுண்தகத்தையாக கிதந்தார்கள்” என்று சொன்னதும் அவன் என்ன சொல்லவருகிறான் என்று எனக்கு புரிந்தது பண்ணையார் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி என்று பலர் சொல்லி கேள்விப்பட்டு இருந்ததால் அவன் சொன்னது டக்கென்று புரிஞ்சது , மற்றவர்கள் என்னது ”முண்தகத்தையா” அப்படின்னா என்றார்கள் அம்மன குண்டியாக என்று சரியாக சொல்லி புரியவைத்தான், டேய்..! சும்மா எல்லாரிடமும் சொல்லிக்கிட்டு இருக்காத பேசாம போ.. என்று சொன்னதும் ஏன்னா..! என்றான், போடா பேசாம போ..! என்றேன் கோவமாக.

இருதினங்கள் கழித்து பண்ணையார் வீட்டு செப்டிக்டேங்கில் குப்புற படுத்த நிலையில் மிதந்தான் அம்மணகுண்டியாக சொடலை, லூசு பய சுத்தம் செய்யுடா..! என்றேன் டவுசரையும் அவுத்து வெச்சுட்டு குதிச்சு இருக்கான் பாரு லூசு பய என்றார் பண்ணையார். கட்டி தூக்க கயிறு எடுக்க உள்ளே சென்ற பொழுது பண்ணையார் கட்டில் கீழே கிடந்தது சொடலையின்
கிழிந்த காக்கி டவுசர்.

சில மாதங்களில் எனக்கு பெங்களூரில் வேலை கிடைக்க குடும்பம் முழுவது பெங்களூருக்கு மாற்றம் ஆனது. வருடத்துக்கு ஒரு முறைமட்டும் அப்பா போய் வீட்டை எல்லாம் பார்த்துவிட்டு வருவார். எட்டு வருடங்களுக்கு பிறகு இன்றுதான் கோயில் திருவிழாவுக்கும் அண்ணன் மகள் காது குத்து விசேஷத்தை குல தெய்வ கோவிலில் வைக்கவேண்டும் என்பதாலும், ஊருக்கு நான் வர நேர்ந்தது.

துர்ர்ர் துர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொடலை போலவே ”டு” வராத அதே போல் உடல் அசைவுகளோடு ஒரு சிறுவன் ஓடிக்கொண்டு இருந்தான்! அச்சு அசலாக சொடலை தெரிந்தான்..!

யார் இவன் என்று கேட்டதுக்கு அவன் பண்ணையாரின் மகன் என்று மாரி சொன்னான்.

நான் சிரித்தேன் அதன் அர்த்தம் புரியாமல் மாரி விழித்தான்!

Sunday, August 3, 2008

மக்களே உசார் உசார் புது வித வைரஸ் வருகிறது

இதுவரை மக்கள் கூடும் இடங்களில் மட்டுமே நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த தீவிரவாதிகள், உலகிலேயே முதல் முறையாக புதுவித வைரஸ் மூலம்...

மீதி செய்தி கடைசியில்

காட்சி 1- கதிர் வீடு

பரபரப்பாக அந்த அறை முழுவதும் தேடிக்கொண்டு இருந்தான் கதிர் எங்கே இங்க வெச்சு இருந்தது எங்கே போய் இருக்கும்? ராத்திரி எல்லோரும் படுத்த பிறகுதானே பார்த்துவிட்டு யாரு கண்ணிலும் பட கூடாது என்று இங்க ஒளிச்ச்ய் வைச்சிருந்தேன்.அப்படி இருந்தும் எப்படி? ச்சே விடியகாலையில எல்லோரும் கல்யாணத்துக்கு போறாங்களேன்னு அலட்சியமாக இருந்தது எவ்வளோ பெரிய தப்பாக போய் விட்டது!

ஒரு வேளை வேலைக்காரி எடுத்து போய் இருப்பாளோ இருப்பாளோ? பின் பக்கத்து வீட்டு ஸ்கூல் பையன் காலையில் பேப்பர் எடுக்க வந்தான் ஒருவேளை அவன் எடுத்து போய் இருப்பானோ!அய்யய்யோ அப்படின்னா அவன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்னை பற்றி என்னா நினைப்பார்கள்! அம்மாவோடு வேற நல்லா பேசிக்கிட்டு இருப்பார்களே!இல்லையே அவன் திரும்ப பேப்பர் கொடுக்கவரும்பொழுது ஒண்ணும் அவனிடம் ஒரு பதட்டம் இல்லையே!

காட்சி 2- பாபு வீடு

டேய் பாபு! உன்னை எல்லாம் என்னமோ நினைச்சுக்கிட்டு இருந்தேன்! நீ...! இப்படி மட்டமான பையனாக இருப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை!
டேய்..! வயசுக்கு வந்த தங்கச்சி, இரண்டு வயசே ஆனா அக்கா குழந்தை, வயசான பாட்டி, தாத்தா எல்லாம் வீட்டில் இருக்கும் பொழுதுஎப்படிடா இப்படி செய்ய உனக்கு மனசு வந்துச்சு.

அம்மா.... தப்பா....நினை...

ச்சே பேசாதடா உன்னை பார்க்கவே அருவெறுப்பா இருக்கு.

தலையில் கை வைத்துகொண்டு உட்கார்ந்த பாபு ,கோபங்கொண்டு ஒரு முடிவோடு பையில் அதை எடுத்து வைத்துகொண்டு பாக்ஸரை ஒரு உதை உதைத்தான்... டுர்ர்ர்ர்ர்ர்ர் என்று பயங்கர வேகத்தோடு உறுமியபடி கதிர் வீட்டை நோக்கி சென்றான்.

காட்சி 3 - கதிர் வீடு

ச்சே..! உன்னை எல்லாம் நண்பன் என்று சொல்லிக்கவே வெட்கமாக இருக்கு,எப்படிடா இப்படி உனக்கு மனசு வந்தது என்று DVDயை கதிர் முகத்தில் தூக்கி எறிந்தான் பாபு. அட்டையில் "இருமுனை தாக்குதல்" குழந்தைகளுக்கான ஆங்கில படத்தின் தமிழ் பெயர், உள்ளே இருந்து கீழே விழுந்தது "அந்த" DVD.

மீதி செய்தி:



புதுவித வைரஸ் மூலம்... CD,DVDக்களை போட்டதும் டீவி, DVD பிளேயரை நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்து எடுத்துக்கொள்கிறது அதனால் அந்த அந்த DVDக்களில் இருக்கும்படம் ஓடி முடியும் வரை சத்தத்தை குறைக்கவோ கூட்டவோ, அல்லது நிறுத்தவோ முடிவது இல்லை, இதில் கொடுமையின் உச்சகட்டமாக குருவி, குசேலன் ஆகிய படங்களை இரு முறை பதிவு செய்யப்பட்ட DVDக்களையும் மாற்று பெயர்களில் உலவ விட்டு இருக்கிறார்கள்.

இதையடுத்து தமிழகஅரசு போர்கால அடிப்படையில் கீழ்பாக்கம் மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்களையும் படுக்கைகளையும் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tuesday, July 15, 2008

அவனுக்கு வயது 10 அவளுக்கு வயது 32

எனக்கு பக்கத்து வீட்டு நொண்டி அக்காவோடு விளையாடுவது என்றால் மிகவும் பிரியம் அப்பொழுது எனக்கு வயது 10 நொண்டி அக்காவுக்கு வயது 32. நொண்டி என்றால் கை கால் ஊனம் இல்லை சிறு வயதில் மாங்கா பறிக்க மா மரத்தில் ஏறி கீழே விழுந்து கை முறிந்து அதுக்கு டாக்டரிடம் அப்பொழுது காட்டாமல் நாட்டு மருத்துவர் கட்டு போட்டதால் வலது கை ”ட” னா வடிவத்தில் இருக்கும். ஏன் எல்லாரும் நொண்டி வீடுன்னு சொல்லுறாங்க என்று கேட்டபொழுது அக்கா என்னிடம் இதை சொன்னால் அவளால் கையை நீட்டவோ மடக்கவோ முடியாது. அதனாலயோ என்னவோ இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சில சமயம் அழுது கொண்டு இருப்பாள் என்னக்கா என்றால் சொன்னா உனக்கு புரியாது விடு என்று சொல்லி விடுவாள்.

அது போல் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் அக்கா வீட்டில் இருக்கும் லெட்சுமி என்கிற பசு மாடு. பசு மாடு என்றாலே சாந்தமாக இருக்கும் ஆனால் இது கொஞ்சம் முரடு, நொண்டி அக்காவையும், என்னையும் தவிர வேறு யாரையும் அருகில் சேர்க்காது வேறு யார் வந்தாலும் முட்ட வரும்.

அன்று அது போல் அக்காவோடு விளையாடி கொண்டு இருக்கும் பொழுது லேசா மழை தூறல் போட வீட்டுக்குள் வந்து பரமபதம் விளையாடி கொண்டு இருந்தோம், அப்பொழுது லெட்சுமி பெருங்குரலெடுத்து ”ம்மே” என்று தொடர்ந்து கத்த நான் அக்காவிடம் அக்கா லெட்சுமி கத்துதுவாக்கா போய் புல்லு கொடுத்துவிட்டு வருவோம் என்றேன். இல்லை அக்கா முன்னாடியே லெட்சுமிக்கு புல்லு கொடுத்துவிட்டேன் அது சும்மா மழைக்காக கத்துகிறது என்று சொல்லி விட்டு,அவுங்க அம்மா காதில் ஏதோ சொல்ல,

அவுங்க அம்மா திண்ணையில் உட்காந்து இருந்த புருசனிடம் ரெண்டு நாளா சொல்லுறேன் லெட்சுமி ஈத்தடிக்குது, ஈத்தடிக்குதுன்னு நாளைக்காவது காளைக்கு கூட்டிட்டு போங்க என்று சத்தம் போட்டாள்.

”என்னாடி மாட்டை நானா இழுத்துக்கிட்டு போக முடியும் முனியனிடம் சொல்லி இருக்கேன் வந்து கூட்டிட்டு போவான்.”

”ம்கும் நல்ல ஆளு பார்த்து சொல்லி இருக்கீங்க அவனுக்கு என்னா வீடா,வாசலா இல்லை நம்ம வீட்டு மாட்டை மட்டும்தான் கவனிச்சுக்கிறானாஅவனுக்கு ஊர்ல இருக்குற எல்லா வீட்டு மாட்டையும் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும், அவன் எப்ப வந்து எப்ப கூட்டிட்டு போக போறானோ!”

அப்பொழுது அந்த வழியா புல்லு கட்டை தூக்கிட்டு வந்த முனியனிடம்

“எலேய் முனியா ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கேன் லெச்சுமிய கோனார் வீட்டு காளைக்கிட்ட கூட்டிட்டு போன்னு, நாளை காலை சீக்கிரமா வந்து முதலில்அதை பாருடா, முதல் மாடா நம்ம மாடு இருக்கனும் அப்பதான் சட்டுன்னு புடிக்கும்”

”சரிங்கய்யா கருக்கலங்காட்டியும் வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு போனான் முனியன்.

பின் சில மாதம் கழித்து

ஒரு மாலை நேரத்தில் ஊர் மக்கள் எல்லோரு கூடி இருக்க.

“எனக்கு அப்பவே தெரியும்ய்யா இந்த பய நொண்டி ஊட்டுக்கு அடிக்க போய் வரும்பொழுதே” ஒரு பெருசு.

“அப்பவே அரசல் புரசலா காதுல விழுந்துச்சு, கையும் களவுமா புடிக்கனும் என்றுதான் காத்து இருந்தேன் இன்னைக்கு வசமா மாட்டினாங்க”

பெருமிதத்தில் இன்னொரு பெருசு.

கையால் கயிறு கட்ட பட்டு முனியன் தலை குனிஞ்சு ஒரு பக்கமும், வாய் ஓரத்தில் இரத்தம் வழிந்து அழுதுகொண்டு வீங்கிய மூஞ்சோடு நொண்டி அக்காவும் நிற்க,அதை பார்த்த அக்கா ஏம்மா அழுறாங்க என்று கேட்ட என் வாய் பொத்தபட்டது.

”இதுக்கு மேல அவனை அடிச்சா செத்துகித்து போய் விடுவான் இனி அவன் ஊருகுள்ள இருக்க கூடாது அவ்வளோதான்” போங்க போங்க எல்லாம் போங்க என்று மீசை தாத்தா சத்தம் போட்டார்.

எல்லாம் முனு முனுத்தபடி கிளம்பி போனார்கள்.


காலை பக்கத்து வீட்டில் இருந்து அய்யோன்னு பெருங்குரல் கேட்க வீட்டில் இருந்த எல்லோரும் ஓடினார்கள், நானும் பின்னாடியே ஓடினேன் அங்கு மா மரத்தில் நாக்கு தள்ளி மாடு கட்டும் கயித்தில் தொங்கி கொண்டு இருந்தாள் நொண்டி அக்கா. ஒரு சிறு கூட்டம் குளக்கரைய நோக்கி ஓட அங்கு குள கரையில் வாயில் நுரை தள்ளி அசைவற்று கிடந்தான் முனியன் உடலை புரட்டி போட்ட பொழுது நெஞ்சில் ராசாத்தி என்று பச்சை குத்தி இருந்தது, நொண்டி அக்காவின் பெயர் ராசாத்தி என்று அவர் அப்பாவுக்கே தெரியாது.

**********************************************************************************
டேய் ராஜா இப்பதான் சித்ரா காலேஜ் முடிச்சு இருக்கா அதுக்குள்ள ஏன் டா கல்யாணம் செஞ்சு குடுத்து விடலாம் என்று புடிவாதமா இருக்க, நமக்கு இருக்குற கடனுக்கு அவளும் வேலைக்கு போனா சீக்கிரமா கடனை அடைச்சிடலாம் இல்லை என்றால் நீ மட்டும் தனியா எவ்வளோதான் டா கஷ்ட படுவ கல்யாண செலவுக்கு என்ன செய்வ என்று எவ்வளோ நேரமா கேட்டு கிட்டு இருக்கேன் அப்படி என்னா யோசனை உனக்கு என்று அம்மா சத்தம் போடுவது என் காதில் லேசா விழுந்தது.

நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க என்று ஒத்தை வரியில் பதில் சொல்லி விட்டு, கண்ணை துடைத்து கொண்டு வீடு பின் பக்கம் போனேன் அந்த மா மரத்தை பார்க்க.

Tuesday, December 11, 2007

என்னால் அவள் இரண்டு மாதம் (கொஞ்சம் நான் வெஜ்)

வழக்கம் போல் காலை 8 மணிக்கு ஆபிஸ் வந்து http://www.gmail.com/ என்று அடித்துவிட்டுபின் user name: kusumbuonly password: ****** என்று டைப் செய்து மெயில்செக் செய்வதே முதல் வேலையாக இருக்கும், அதற்கும் காரணம் பிரியாவின் மெயில்.இன்று அவளிடம் இருந்து வந்த மெயிலை பார்த்தவுடன் தூக்கி வாரி போட்டது.

எல்லாம் ஒழுங்காகதான் போய்கொண்டு இருந்தது பிரியாவிடம் இருந்து மெயில் வரும் வரை, நான் யாரோ நண்பர்கள் தான் விளையாடுகிறார்கள் என்று ஆர்வம் காட்டவில்லை, பதிவை பற்றி பாராட்டி மெயில் வந்தால் "நன்றி" என்று ஒரு வார்தையில் பதில் அனுப்புவேன் பின் உங்களிடம் பேச வேண்டும் போன் நம்பர் தரமுடியுமா என்று வந்தது எதுக்கு வீண் செலவு ஆன்-லைனில் வாங்க சாட் செய்யலாம் என்றேன், இல்லை உங்க போன் நம்பர் கொடுங்க என்று பதில் வந்தது பின் நம்பர் கொடுத்த மதியம் +91984......... என்று புதிதாக ஒரு நம்பர் வந்தது எடுத்து பேசினால் நான் தான் பிரியா என்று அறிமுகம் செய்து கொண்டாள் பின் வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பிறகு ஆன் லைனில் வர சொன்னாள் அதைதானே முன்பே நான் சொன்னேன் என்றதற்கு உங்களிடம் இருந்து எதிர்பார்தது போல் மெயில் வரவில்லை சரி நம்பவில்லை போல அதனால் தான் பேசிவிட்டு ஆன் லைனில் வர சொல்லலாம் என்று சொன்னாள். மனதில் இருந்ததை சரியாக சொன்னாள்.

பின் எப்பொழுதும் முதல் ஆளாக பதிவை பற்றி விமர்சனமும் செய்வாள், காலையில் வந்ததும் முதல் மெயில் அவளிடம் இருந்து குட்-மார்னிங் மெயிலும் அதில் கனிவான விசாரிப்பும் இல்லாமல் இருந்தது இல்லை. நாட்கள் ஆக ஆக வாங்க போங்க போய் வா போ அவள் பக்கம் இருந்து.ஒரு நாள் ஏன் இன்னும் வாங்க போங்க என்றே சொல்லிகிட்டு இருக்கே வாடி போடி சொல்லு என்றாள் இல்லை எனக்கு வராது என்று சொல்ல அப்ப இனி பேசமாட்டேன் என்றாள் சரி என்றேன். கட் செய்துவிட்டு போனாள் பின் ஒரு நாள் முழுவதும் சாட்டும் இல்லை, போனும் இல்லை சரி மறுநாள் வருவாள் என்று விட்டுவிட்டேன் ஆனால் இரண்டு நாட்கள் வேலையாக இருந்ததில் மறந்துவிட்டேன். மறுநாள் "வளிடம் இருந்து போன் வந்தது "பேசமாட்டேன் என்றால் போ என்று விட்டுட்டே இல்ல நல்ல பழக்க வழக்கம் உன்னிடம் இருந்து போன் வரும் இல்லை மெயிலாவது வரும் நினைத்து ஏமாற்ந்ததுதான் மிச்சம்" என்று சொல்லிவிட்டு அழுதாள், எனக்கு என்னமோ போல் ஆனது. நான் சொன்ன சமாதானத்தையும் ஏற்கவில்லை போடா என்றால் அப்பொழுது கவனிக்கவில்லை அதன் பிறகு பெண்களுக்கே உரிதான போடா, பிசாசு, பொறுக்கி என்ற அடை மொழிகளோடு அழைக்க ஆரம்பித்தாள் எத்தனையோ முறை சொல்லியும் நான் வாடி போடி சொன்னது இல்லை இப்பொழுது வா போ என்று சொல்வதோடு சரி.

அன்று ஒரு நாள் சாட் செய்யும் பொழுது ஏதாவது ஜோக் சொல்லேன் என்றாள் எனக்கு சைவ ஜோக் எல்லாம் தெரியாது அசைவ ஜோக்தான் தெரியும் அதை எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது என்று சொல்ல பரவாயில்லை சொல்லு என்றாள் அசைவ ஜோக்கில் பேசிக் ஜோக்கான எலி கதையை சொல்ல அதுக்கே விழுந்து விழுந்து சிரித்தாள். இரண்டு மாதம் முன்பு விசா மாற்ற ஊருக்கு வரபோகிறேன் என்று சொல்ல கண்டிப்பாக என் வீட்டுக்கு வரவேண்டும் என்றாள்ஒரு வார லீவில் தான் வருகிறேன்............அந்த ஊருக்கு வருவது என்றால் இரண்டு நாட்கள் ஆகும் முடிந்தால் வருகிறேன் என்றேன் இல்லை நீ வரவேண்டும் இல்லை நடப்பதே வேறு என்றாள்.

ஊருக்கு போய் விட்டு இரண்டு நாள் கழித்து திருப்பதி போவதாக சொல்லி வீட்டில் இருப்பவர்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு அவள் ஊருக்கு சென்றேன் பஸ் நிலையத்தில் இறங்கியதும் கையில் இருந்த பையை யாரோ பிடுங்க திரும்பினால் நீல கலர் சுடிதாரில் ஒரு பெண் டேய் ஜொள்ளா நான் தான் டா பிரியா என்று சொல்ல முதன் முதலாக அவளை பார்த்தேன் மிக அழகாக இருந்தாள் பின் வீட்டு அழைத்து சென்றாள், வீட்டில் யாரும் இல்லை எங்கே என்று கேட்க எல்லோரும் சித்தப்பா பையன் திருமணத்துக்கு போய் இருக்காங்க எல்லாம் இரவுதான் வருவாங்க என்றாள். இதுவே அய்யனாராக இருந்தால் நானும் அவளும் நான்கு சுவரும் ஒரு கதவும் இரு ஜன்னலும் என்று டைட்டில் வைத்து கதை எழுதுவார் என்றேன் சத்தம் போட்டு சிரித்தாள்.

பின் அருகில் வந்து அமர்ந்தாள் ....................................(பதிவு ரொம்ப பெருசாக போவதால் சென்சார்). மாலை புறப்படும் பொழுது இதுபோல் நீ செய்வாய் என்று எதிர்பார்கவே இல்லை என்றாள், பயமாக இருக்கிறது என்றாள் பயப்படாதே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இன்று காலையில் டேய் குசும்பா இது எனக்கு இரண்டாவது மாதம் என்ன செய்யலாம் சொல்லு என்று கேட்டு மெயில் வந்தது அதை படிக்க போய்தான் பழைய நினைப்பு. பதிவு போட்டு இதுக்கு நீதான் காரணம் என்று சொல்லிவிடவா என்றாள்.

அம்மா தாயே என் மானத்தை வாங்கிடாத ஊருக்கு வந்த பொழுது உனக்கு வலை பூ கிரியேட் செய்ததே நான் செய்த பெரியதப்பு என்று பீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன் இதுல வெற்றிகரமாக இரண்டாவது மாதம் என்று போஸ்ட் வேறயா? எழுதி இருப்பது 12 பதிவு அதுல 10 பதிவு மரத்தின் இலை பச்சை, கடல் நீலம், மேகம் கருப்பு என்று கவிதை மீதி 1 அறிமுகம் இன்னொன்னு சமையல் குறிப்பு என்று அம்மா எழுதி தந்தது. நீ மட்டும் பிளாக் எழுத வெச்சது நான் தான் என்று சொன்ன தமிழ் மண மக்கள் என்னை ரவுண்டு கட்டி அடிப்பாங்க.

இன்னொரு திருப்பம்: பஸ் டிரைவர் என்னமா திருப்புகிறார் பாருங்க அது பெரிய திருப்பம்.


சர்வேசன் இதுக்கு மேல திருப்பம் வேண்டும் என்றால் PIT குழுவிடம் சொல்லி பெரிய திருப்பம் உள்ள ரோடா படம் புடிக்க சொல்லுங்க:)))

டிஸ்கி:
1) நான் ஊருக்கு போய் ஒரு வருடம் ஆகிறது, அப்பொழுது நான் வலை பதிவர் இல்லை.

2) நான் இதற்கு முன் எழுதிய கதைக்கான பின்னூட்ட டெம்ளேட் மற்ற பதிவர்களுக்கு உபயோகிக்க தான் என்பதிவில் அல்ல.

Monday, August 6, 2007

தொலைந்து போன......சில

டைட்டில் ஓடுகிறது 11.11.2004 அன்றுகாலை அந்த இடமே பரப்பரப்பாக இருக்கிறது.எல்லோரும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.

மீசைகாரர் எலே அங்க என்ன டா நின்னுக்கிட்டு மச மசன்னுபேச்சு போய் வேலைய கவனிங்கடா, என்று ஓடி ஆடி விரட்டிகொண்டு இருக்கிறது.

வாங்க வாங்க என்று எல்லோருக்கு சிரித்த முகத்துடன் பன்னீர் தெளித்துகல்கண்டு, சந்தனம் கொடுக்கும் பட்டுசேலை கட்டிய பெண்கள்.

குளேசப்பில் அருண் vs புனிதா திருமண நாள் 11.11.2004 இடம்கும்பகோணம் ராணி மஹால், தெர்மாகோல் கொண்டு செய்ய பட்டதட்டி தெரிகிறது.
நேரம் ஆச்சு பெண்னை அழைச்சுகிட்டு வாங்க...
மாங்கல்யம் தந்துநானே .....கெட்டிமேளம் கெட்டிமேளம்.

................................................................................
அப்பா திரும்ப திரும்ப எத்தனை தடவை இதேயே போட்டு போட்டு பார்ப அப்படி என்னத்த இதில இருக்கு...

உங்க அம்மாவின் பணிவு!!!

Tuesday, July 31, 2007

யார் திருந்தவேண்டும்?

"ஏய் செல்வி என்னடி வயல் பக்கமே வராத சின்ன ஐயா அடிக்கடி வயலுக்கு வருகிறார்?"

"எனக்கென்ன தெரியும் நீயே அவருகிட்ட கேளு"

"அடி சிறுக்கி அவருக்கு உன்ன புடிச்சு இருக்குன்னு என் கிட்ட சொன்னதை, உன் கிட்ட சொன்னதே நான் தான் என்கிட்டயேவா?"

"அதான் விசயம் தெரியுதுல்ல அப்புறம் என்ன நையாண்டி"

"அடியே பார்த்துடி புள்ள பட்டணதில் படிச்ச புள்ள கம்பி நீட்டிட போகுது"

"அக்கா ஒரு சந்தேகம்"

"என்னடி?"

"இல்ல ஒரு மாசத்து புள்ள வயித்தை உதைக்குமா?"

"அடியே எடுப்பட்டவளே என்னடி சொல்லுற"

"ஆமாக்கா ஒரு மாசமாச்சு படவே இல்ல"

"டேய் அவருகிட்ட சொன்னியாடி"

"சொன்னேன் வா இப்பவே அம்மன் கோயிலில் வச்சு தாலி கட்டுறேன் என்கிறார்"

“பார்துடி உங்க அப்பா நிதானத்தில் இருக்கும் பொழுது விசயத்தை பக்குவமா சொல்லுடி”

"எப்படியும் இன்னைக்கு ஆத்தா கிட்ட சொல்லிட போறேன்"

..................................................................................................................
"என்ன டா கருப்பா ஊர்ல ஒன்னும் இழவு சத்தமே கேட்கல நீ என்ன விறகு அடுக்கிகிட்டு இருக்க, யாருக்கு?"

நம்ம ராமய்யா பொண்னு செல்வி வயத்து வலி தாங்காம தூக்கு போட்டுக்கிட்டு அதுக்குதான்.

"அட போங்க டா இதோட இந்த வருசத்துல அஞ்சாவது வயத்து வலி சாவு" பெத்த புள்ள சங்க திருக எப்படிதான் மனசு வருதோ " எப்பதான் திருந்த போறானுங்களோ?

யார திருந்த சொல்றீங்க?

Monday, July 30, 2007

காதல் காதல் காதல் கதை

"டேய் பொறுக்கி"

"என்னம்மா"

"எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை டா"

"என்ன? கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா ஆகனுமா? "

பேசுவீயா இது மாதிரி ! பேசுவீயா !

"அடி பாவி சும்மா சொன்னா அதுக்காக இப்படியா வாயிலேயே அடிப்ப ராட்சசி...சொல்லு என்ன ஆசைன்னு. "

"இல்ல உன்ன கல்யாணத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு போய் என் கையால உனக்கு சாப்பாடு பரிமாறி நீ சாப்பிட்டு முடிச்ச இலையில் நான் சாப்பிடனும் டா. "

"சரி வா போகலாம். "

"சீ விளையாடத, அப்பா தோல உறிச்சு உப்பு தடவிடுவாறு. "

"சரி என்ன பண்ணலாம் "

"அடுத்த வாரம் எங்க வீட்டுல எல்லாரும் பெரிய்பா வீடு குடி போறதுக்கு போவாங்க அப்ப எங்க வீட்டுக்கு வா நான் மட்டும் தனியாக தான் இருப்பேன். "

"தனியா இருப்பீயா? அப்ப நான் முதலில்ல்ல்........அய்யோ அம்மா அடிக்காதடி. "



...................................................................................................................
"ஏய் சீக்கிரம் உள்ள வா, யாரும் பார்க்க போறாங்க. "

"ரொம்பதான் டா உனக்கு திமிர் என்னமோ கல்யாணம் ஆன மாப்பிள்ளை மறு வீட்டுக்கு வர மாதிரி அமத்தலா வர்ர. யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க. "

"ஏய் யாருக்கு திமிர் எனக்கா உனக்கா, நானா வர்ரேன்னு சொன்னேன். நீ தானே சாப்பாடு போடனும் ஐயாவோட எச்சி இலையில் சாப்பிடனும் அது இதுன்னு சொல்லி வர சொல்லிட்டு என்ன திட்டுற. "

"பசி உயிர் போகுது முதல்ல சாப்பாடு போடு...இங்க கொடு இலைய நீ போய் மத்ததை எடுத்து வா! "

"முண்டம் இப்படியா டா இலைய போடுவ...ஒரு இலை போட கூட தெரியல புள்ளைக்கு இத எல்லாம் கட்டிக்கிட்ட எப்படி காலம் தள்ள போறேனோ! "

"என்ன டீ இப்படி வச்ச கண்னு வாங்காம பார்கிற... "

"இல்ல இப்படியே உனக்கு காலம் பூரா எந்த பிரச்சினையும் இல்லாம சமச்சு போட்டா எப்படி இருக்கும் என்று நினைச்சேன். "

"அதுக்கு என்ன எங்க வீட்டுக்கு வேலைகாரியா வந்துடு, வச்சு......................... "

"அம்மாமாமா...அடி பாவி அதுக்காக இப்படியா கரண்டியால அடிப்ப. எப்படி வீங்கிடுச்சு பாரு... "

"எங்க...காட்டு... "

"ம்ம்ம் இப்படி அடிபட்டு வீங்கின இடத்தில் முத்தம் கொடுப்பாயா? அன்னைக்கு நீ வாயில் அடிச்சது கூட இன்னும் வீங்கி இருக்கு பாரு. "

"உனக்கு எத்தனை தடவை அடி வாங்கினாலும் புத்தி வராது டா பொறுக்கி. "

............................................................................................................

"டேய் குமார் இந்தா போய் இத அந்த ஆளுக்கிட்ட கொடு. "

"போம்மா எனக்கு வேலை இருக்கு. "

"ரெண்டு புள்ள பெத்தாச்சு ஒரு சல்லி காசுக்கு பிரோசனம் இல்ல இதுல மல்லாக்க படுத்துக்கிட்டு கணவு...வேற "

"அவள் வைத்த வேகத்தில் முகத்தில் தெரித்த காப்பி துளியினை துடைத்து கொண்டு டீவியை போட்டால்.... "

அசின் விஜயிடம் ....டேய் வர்ர வெள்ளி கிழமை வீட்டுக்கு வா சமைச்சு வைத்து இருப்பேன் உனக்காக.

பல கவலைகளையும் மீறி சிரிப்பு தான் வருகிறது.
.........................................................................................................