Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Tuesday, March 31, 2009

காமத்தில் இருந்து கடவுளுக்கு

ஓஷோவை பற்றி எனக்கு அறிமுகம் கொடுத்தது என் சித்தப்பா, ஒஷோவை எல்லோரும் செக்ஸ் சாமியார் என்று சொல்வாங்க ஆனால் நிஜம் அதுவல்ல, அவரின் புத்தங்களை படிஎன்று சித்தப்பா கொடுத்த அறிமுகத்தினால் ஓஷோவின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்தது, ”நான் உனக்கு சொல்கிறேன்” என்ற புத்தகம்.

பைபிள் வாசகத்துக்கு இவர் கொடுக்கும் விளக்கங்களால் கவரப்பட்டு இவரை பற்றிய புத்தங்களை தேடி, தேடி வாங்கினேன் ஒரு கட்டத்தில் ஓஷோவின் புத்தங்களுக்குமட்டும் என்று ஒரு அலமாரி ஒதுக்கும் படி ஆனது! அடிக்கடி திரும்ப திரும்ப படிக்கும் புத்தங்கள்

1)காமத்திலிருந்து கடவுளுக்கு

2)நான் உனக்கு சொல்கிறேன் 1&2

3)புத்தரின் பக்தி சூத்திரம்

என் அறை என் கம்யூட்டர் டெஸ்க்டாப் என்று, எங்கும் ஓஷோவின் படங்கள் நிறைய ஆரம்பித்த நேரம் வீட்டில் கொஞ்சம் கலவரமாக பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஆன்மீகம் என்றால் சாமியாராய் போவது மட்டும் தான் தெரியும்! ஒரு முறை அம்மாவே கேட்டுவிட்டார் என்னடா..? இப்படியே போனால் சாமியாரா போய்டுவே போல் இருக்கிறதே என்று.

காமத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்த்த மனிதர்களில் ஒருவர்! அல்லது ஒருவரே ஒருவர் என்றும் சொல்லலாம் ஓஷோவை! அவரின் ”காமத்திலிருந்து கடவுளுக்கு...!” என்ற புத்தகம் ஒன்று போதும் காமத்தை பற்றி சரியான விளக்கம் கிடைக்க,காமத்தை பற்றி பேசினால்பாவம் என்று நினைக்கும் கால கட்டத்தில் சாமியார் ஆன்மீக குரு என்று அழைக்கப்படும் ஒருவர் செக்ஸை பற்றி பேசுவது என்பது அத்தனை எளிது அல்ல.அதில் அவர் சொல்லியதில் இருந்து சில...ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும்.

அதுபோல் தான் காமமும், காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றியநினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களால் காமத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றால், உள்ளே அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும் அதனாலேயே சதா காமத்தை அடக்குவதை பற்றியும் அதுக்கு எதிராக கருத்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறார். வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும் என்கிறார். அதுபோல, உடலுறவு கொள்ளும் கணம் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை ”நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்த கணத்தை நீட்டிக்கமுடியாது தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும் என்று கொடுக்கும் விளக்கம். காமத்தை பற்றி ஒரு புதிய பார்வையை கொடுக்கும்!

மேலும் இந்த புத்தகத்தில் எங்கும் ஆன்மீகத்தை பற்றியோ கடவுளை பற்றியோ எதுவும் இல்லாததால் நாத்தீகர்கள் கூட படிக்கலாம் இதை.

ஓஷோவை சாமியாராக அனுகவேண்டாம் ஒரு ஆசிரியராக அனுகவும் எவ்வித முன் முடிவுகளும் இல்லாமல் காமத்திலிருந்து கடவுளுக்கு புத்தகதை வாங்கி படியுங்கள் காமத்தை பற்றி பல புரிதல் கிடைக்கும். ஏன் மனிதனுக்கு காமம் மேல் அத்தனை ஆசை என்று.