தமிழ்மணத்தில் புதிதாக எழுத வந்து இருப்பவர்களுக்குக்கும் , எழுத வரலாமா வர வேண்டாம என்றவர்களுக்கும் இந்த பதிவு.
தமிழ்மணத்தின் நீண்ட நாள் வாசகராக இருப்பீர்களேயானால் உங்களுக்கு இப்பொழுது நடந்து வரும் சண்டைகள், கருத்து மோதல்கள், அறிக்கை போர்கள் உங்களுக்கு புரியும்.
சில வருடங்களுக்கு முன் தமிழ்மணத்தில் சாதி மோதல் நடந்தது, பின் கொஞ்ச நாட்கள் மத சண்டை, பின் தனி நபர் தாக்குதல், பின் குழு சண்டை, என்று தொடர்ந்து சண்டைகள் இருந்துதான் வருகிறது.
இந்த சண்டைகள் சீசன் பிசினஸ் போல ஒரு சில காலம் தொடர்ந்து வந்து பின் மறைந்து விடும். சிலருக்கு இது ”சீன்” பிசினசாக இருப்பதால் இது போல் இன்னும் பல சண்டைகள் வரும்.
இதோ இப்பொழுது தமிழ்மணம் அதிகார மையமாக செயல் படுகிறதா என்று சுந்தர் எழுதிய காமகதைகளை தூக்கியதால் வந்த பிரச்சினை, செல்வராஜ் அவர்கள் எழுதிய பதிவுக்கு பின் சூடு குறைய தொடங்கி விட்டது என்று நிம்மதிபெரு மூச்சு விட்டீர்கள் என்றால் நீங்கள் இன்னும் கற்றுக்க வேண்டியது நிறைய இருக்கு. அனைந்த நெருப்பையும் ஊதி ஊதி நெருப்பாக்கும் பலர் இங்கு இருக்கிறார்கள்.
நமக்கு வரும் பத்து பின்னூட்டத்துக்கே பதில் சொல்ல நேரம் இல்லாமல் நாம் அடுத்த வேலையை பார்க்க போகும் பொழுது நிர்வாகிகளின் நிலையை நாம் உணர்ந்தோம் என்றால் பிரச்சினை இல்லை.
இதோ செல்வராஜ் பதிவில்
கருத்து மோதலில் ஈடுபட்ட நண்பர்கள் சுந்தர், அய்யனார், வளர் அவர்களின் பின்னூட்டம்
//7வளர்மதி
நன்றி திரு. செல்வராஜ்,
உங்களது விளக்கம் முதல் வாசிப்பில் திருப்தி தருவதாகவே இருக்கிறது.
சுந்தரின் கதைகளுக்கு மூன்று ஸ்டார்கள் வைத்தது triple x என்று பட்டம் கட்டுவதுபோல இருந்ததாலேயே நான் உடனடியாக எதிர்வினையாற்றுவது என்று முடிவு செய்து எழுதினேன்.
மற்றது உங்களதும் பிற நிர்வாகத்தினரது சூழல்கள், வேலைப்பளுக்கள் அனைத்தும் புரிந்துகொள்ளக் கூடியதே. எனினும் இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால், நீங்களே குறிப்பிட்டதுபோல குட்டையைக் குழப்புவர்களது அவதூறுகளைத் தவிர்த்திருக்கலாம்.
என் போன்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்ததையும் தடுத்திருக்கலாம்.
மிகுந்த நன்றிகள்.
அன்புடன்வளர் …//
//அய்யனார்
/இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால்/இதுதான் என்னுடைய ஆதங்கமாகவும் இருந்தது..வேலைப் பளு நேரமின்மை என்பவைகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்.அந்தந்த நிமிடத்தின் உணர்வுகள் அந்தந்த நிமிடத்திற்கானவை..உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..//
//ஜ்யோவ்ராம் சுந்தர்
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே… உங்கள் உணர்வை (போலவே சுந்தரவடிவேலின் பின்னூட்டத்தையும்).
நான் தமிழ்மணம் குறித்தோ அல்லது அதன் நிர்வாகிகள் குறிந்தோ ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்… சில சமயம் கோபத்தில் / ஈகோவில் இம்மாதிரித் தவறுகள் நிகழ்வது சகஜம் என்பதை நீங்களும் உணர்வீர்கள்தானே… மற்றபடி, யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது என் நோக்கமில்லை.
என் பதிவை மொத்தமாக நீக்கியிருந்தாலும் இத்தனை மாதங்கள் என் இடுகைகளைத் திரட்டியதற்கு தமிழ்மணத்திற்கு நான் நன்றியுடையவனாகத்தான் இருப்பேன்.//
இதோ நாளை முதல் இவர்கள் அனைவரும் சகஜமாக எழுத ஆரம்பித்து விடுவார்கள், படித்து கொண்டு இருந்த நீங்களும் நானும் தான் ஏன் இப்படி அடிச்சிக்கிட்டாங்க என்று மண்டை குழம்பி போவோம்.
தமிழ்மண சண்டைகள் முடிந்த பின் தான் பதிவு எழுத வருவேன் என்று நீங்கள் இருந்தால் எப்ப அலை ஓய்கிறது எப்ப மீன் பிடிக்கிறது.
எழுத வாங்க அதுக்கு முன்
நான் இங்கு சாதி, மதம், தனி நபர் தாக்குதலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியோடு வாங்க.
டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?
Showing posts with label கோவி.கண்ணன். Show all posts
Showing posts with label கோவி.கண்ணன். Show all posts
Wednesday, July 16, 2008
Subscribe to:
Comments (Atom)

