அங்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவருகிறார் வெண்ணீர்செல்வம். அவர் பின்னாடியே பங்கோட்டையன்,எல்லாம் ஓடி வருகிறார்கள்.
வெண்ணீர்செல்வம் குஷிகலாவிடம் மேடத்தை பார்க்கனும் என்கிறார்.
குஷிகலா: மேடம் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர் ஆகி ரெஸ்ட் எடுக்கிறாங்க இப்ப அவங்களை டிஸ்டர்ப் செஞ்சா ரொம்ப கோவப்படுவாங்க அவுங்க கண் முழிச்சு யாரை பார்க்கிறாங்களோ அவுங்களுக்கு பீஸ் புடுங்கிடுவாங்க.
வெண்ணீர்செல்வம்: மனசுக்குள் (ஒருநாள் கூட உங்க முகத்தில் முழிக்கலையா)
பரவாயில்லை சின்னமேடம் நாங்க வெயிட் பண்ணுறோம், மேடம் வரப்ப வரட்டும். என்று காலை போனவர்கள் மதியம் வரை காத்திருக்கிறார்கள் மதியம் சாப்பிட எழுந்தவரிடம், குஷிகலா இதுபோல் வந்து இருக்காங்க என்றதும் எதுக்கு பர்மிசன் இல்லாம இவங்களை எல்லாம் உள்ளே விட்ட!
பயலலிதா:என்ன இப்ப தலைபோற காரியம் எதா இருந்தாலும் ரெண்டு மாசம் வெய்யில் எல்லாம் குறையவிட்டு பார்த்துக்கலாம்.
குஷிகலா: இல்ல மேடம் என்னான்னு சும்மா கேட்டுக்கிட்டு அனுப்பிடுங்க...என்று சொல்லி சமாதானபடுத்தி அழைத்து வருகிறார் குஷிகலா.
மேடத்தை பார்த்ததும் எல்லாம் ஒரு நாலு அடி உயரம் கம்மி ஆகி பம்மி நிற்கிறார்கள், மேடம் வந்ததும் வெண்ணீர் செல்வம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கிறார்..
குஷிகலா: இருங்க வெண்ணீர் ஏன் இவ்வளோ அவசரப்படுறீங்க, இப்பதான் மேடம் அங்கிருந்து நடந்து வந்திருக்காங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.அப்புறம் சேதிய சொல்லுங்க.
ஒரு பத்து நிமிடம் கழிச்சு ம்ம்ம் என்று பயலலிதா சொன்னதும்..
வெண்ணீர்செல்வம்: (ஸ்கூலில் ஒன்னாம் வாய்பாடு ஒப்பிக்கும் மாணவன் போல் எழுந்து கை கட்டி நின்று )மேடம் மேடம் இந்த தேர்தல் கமிசன் நம்மை கேட்காம திடிர் என்று 5 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிச்சுட்டாங்க,நாம கூட்டணி தலைவர்கள் கூட பேசி முடிவெடுத்து அவுங்களுக்கு எந்த தொகுதின்னு பங்கீடு முடிவுசெ .........
பயலலிதா முறைக்க
இல்ல இல்ல நாம முடிவெடுத்து கூட்டணி தலைவர்கள் கிட்ட இவுங்கதான் உங்க கட்சி வேட்பாளர் என்று சொல்லிடலாம், அதுதானே நம்ம வழக்கம். எப்பொழுதும் போல பைகோவும், கோமதாஸும் ஒன்னும் சொல்லாம வாங்கிப்பாங்க. ஆளும் கட்சிக்கு நாம யாருன்னு காட்டனும்.
குஷிகலா: வெண்ணீர் மைனாரிட்டிய விட்டுவிட்டிங்க
வெண்ணீர்: ஆளும் மைனாரிட்டி அரசுக்கு நாம யாருன்னு காட்டனும் என்று திருத்தி சொல்கிறார்
பயலலிதா: வாட்? திரும்ப தேர்தல்? என்ன மேன் இப்பதானே இரண்டு மாசம் முன்னாடி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து செஞ்சு, ஹெலிபேடில் இருந்து மேடைக்கு நடந்து எல்லாம் போய் ரொம்ப டயர்டா இருக்கேன் இப்ப திரும்ப தேர்தலா? என்னால திரும்ப இந்த வெய்யிலில் எல்லாம் பிரச்சாரம் செய்ய முடியாது..
பங்கோட்டையன்: ஆமாம் மேடம் , இந்த தேர்தல் கமிசன் சரி இல்லை நம்ம கிட்ட ஒரு வார்த்தையும் கேட்க மாட்டேங்கிறாங்க, நாம ஆட்சிக்கு வந்ததும் இவுங்க பவரை புடுங்கனும்.
வெண்ணீர்: மேடம் வரவர நம்ம கட்சி எம்.எல்.ஏ எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது ஏதாச்சும் செய்யனும்...
பயலலிதா: என்னமேன் இந்த 5 சீட் ஜெயிச்சா நான் என்ன திரும்ப சி.எம் ஆக முடியுமா? இல்லீல்ல அப்புறம் எதுக்கு அலட்டிக்கனும் பேசாம தேர்தலை புறக்கனிச்சுடலாம்...
வெண்ணீர்: சரிங்க மேடம் அப்ப அப்படியே பைகோ,கோமதாஸ் இவங்களுக்கும் போன் போட்டு சொல்லிடவா?
பயலலிதா: தேவை இல்லாம எதுக்கு மேன் ரெண்டு கால் வேஸ்ட் பன்னுற பேப்பரில் நியுஸ் கொடுத்துடுங்க அத பார்த்து தெரிஞ்சுக்கிட்டும்.
வெண்ணீர்: சரிங்க மேடம்