Wednesday, October 3, 2007

ராமர் பாலத்தை காப்பது எப்படி? சில யோசனைகள்

இப்ப பார்த்தீங்கன்னா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் ஒரெ தொடர்பு இந்த ராமர் பாலம்தான் அதுதான் பிரிஞ்சு இருக்கும் இலங்கையையும் இந்தியாவையும் ஒன்று சேர்கிறது, இப்படி முக்கியமான அந்த பாலத்தை (????) இடிப்பதால் தினமும் அவ்வழியே வாக்கிங், ஜாக்கிங் எல்லாம் போய் வரும் ஆமை, நத்தை எல்லாம் பாதிக்க கூடும் ஆகையால்
இது கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிரானது என்று இல. கனேசன் அறிக்கை கொடுக்கலாம்.


இப்ப பிரச்சினை என்னன்னு பார்தீங்கன்னா, பாலம் லைட்டா ஒரு 100 அடி தண்ணியில் மூழ்கி இருக்கு அதான் பிரச்சினை, அதை மேலே தெரியும் படி செய்துவிட்டால் பிரச்சினை இல்லை, ஆகையால் இந்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு புரண்டு, ஆளுக்கு "ஒரு கைபிடி மண்" என்ற திட்டதில் சேர்ந்து, ஒரு கைபிடி மண்ணை தூக்கி கடலில் போட்டோம் என்றால் பாலம் வெளியில் தெரிய ஆரம்பித்துவிடும். இப்படி இராம கோபாலன் அறிக்கைவிடலாம்.


இராமர் பாலம் விடுதலை புலிகள் ஆயுதங்களை கடத்தி வரும் பொழுது அது இடைஞ்சலாக இருக்கிறது, அதற்காக தான் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு அதை இடிக்க திட்டம் போடபட்டது அதற்கான ஆதாரம் என் கையில் இருக்கிறது. இப்படி சுப்பிரமணி சாமி அறிக்கை விடலாம்!!!


தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே விமானபோக்குவரத்தை நிறுத்தவேண்டும் அந்த வழியேதான் அனுமன் பறந்து போனார் அவர் பறந்து போன வழியில் பிளைட்டை விடுவது அவரை இழிவுபடுத்தும் செயல் ஆகும், அதுமட்டும் இன்றி பாலத்தை இடிக்க நினைக்கும் அனைவருடைய தலை முடியை கொண்டுவருபவர்களுக்கு புது விக் வழங்க படும். இப்படி வேதாந்தி அறிக்கை விடலாம்.


முன்பு பாலம் கட்டுகிறேன் என்று சொல்லி என் கல்யாணமண்டபத்தை இடித்தவர்தான் இந்த பாலு, இப்பொழுது அதே பாலு ஒரு பாலத்தை இடிக்கிறார், இவர் ஆட்சியில் இருக்கும் வரை இப்படிதான் ஏதேனும் நடக்கும், என் கையில் ஒரு முறை ஆட்சியை கொடுத்து பாருங்க புது ராமர் பாலம் கட்டி அதில் ஷூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்தாலே தமிழ்நாடு வல்லரசாக மாறிவிடும் அப்படி ஒரு திட்டம் என்னிடம் இருக்கு ஆங்ங்ங்!!!



இது நான் மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவு!!!


கடைகாரர்: ஐயா தெய்வமே! எப்படி இருக்கீங்க! எங்க இந்த பக்கம்?

ராமர்: நாங்க அடிக்கடி இலங்கைக்கை போக வர பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பாலத்தை இடிக்க போவதாக செய்தி வந்தது, அதான் பாலத்தின் கன்ஸ்ட்ரக்சன் இன்சினியர் அனுமனையும் கூப்பிட்டு வந்தேன்.

அனுமன்: நியாமா பார்த்தா அந்த பாலத்தை இடிக்க வேண்டிய அவசியேமே இல்லை, கொஞ்சம் தள்ளி நோண்டிக்கலாம், அதுக்காக ஒரு மாற்று வரைவு திட்டத்தை தயாரிச்சி இருக்கோம் அப்படின்னு ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அத டி.ஆர்.பாலு கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு இப்படி வந்தோம்.

கடைகாரர்: தெய்வமே எனக்கு ஒரு டவுட், லாஸ்ட் டைம் நீங்க பாலம் கட்டிக்கிட்டு இருக்கும் பொழுது டையர்டா, தாகமாக இருக்குன்னு சொன்னப்ப ஓனான் ஒன்னுக்கு அடிச்சு கொட்டாங்கிச்சில கொடுத்துச்சு என்றும் அணில் தான் ரொம்ப ஹல்ப் பண்ணிச்சு என்று பாராட்டி முதுகுல கோடு போட்டிங்க என்று சொல்லுறாங்கலே நிஜமா??

ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.

10 comments:

said...

அருமையான பதிவுய்யா, கண்டிப்பா சூடா ஆகும், பாறேன் உமக்காகவே நானும் ஜூடா வரணுமின்னு ஒரு மொக்கை போட்டேன், ஆனா நீர் இப்போ வந்த இட்லிவடை பதிவால உலக சூப்பரா ஆயிட்டய்யா! வாழ்த்துக்கள்!

said...

:)))

said...

\\ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.\\

கலக்கிட்டிங்க அண்ணே.... ;))))

Anonymous said...

nalla pathivu

Anonymous said...

good criticism...... bex. it is from Mr.Kusumbar...so it must be like like that...

said...

ஏன் இந்த கொலவெறி??

said...

"அபி அப்பா said...
அருமையான பதிவுய்யா, கண்டிப்பா சூடா ஆகும், பாறேன் உமக்காகவே நானும் ஜூடா வரணுமின்னு ஒரு மொக்கை போட்டேன், ஆனா நீர் இப்போ வந்த இட்லிவடை பதிவால உலக சூப்பரா ஆயிட்டய்யா! வாழ்த்துக்கள்!"

வாங்க கையில் சிக்காமயா போய்விடுவீங்க!!!!

said...

நாகை சிவா said...
:)))

October 3, 2007 4:20 AM


கோபிநாத் said...
\\ராமர்: நிஜம்தான், இப்ப எங்க பசிக்கு வெள்ளேரி பிஞ்சு கொடுக்கல! உன் முதுகுல ரோடு போட்டுவிடுவோம்.\\

கலக்கிட்டிங்க அண்ணே.... ;))))

நன்றி புலி & கோபி

said...

mathi said...
nalla pathivu////

நன்றி மதி


Anonymous said...
good criticism...... bex. it is from Mr.Kusumbar...so it must be like like that...///

நன்றி அன்னானி

said...

லொடுக்கு said...
ஏன் இந்த கொலவெறி??
///

சும்மாதான்:)))