Monday, October 22, 2007

என்னை டென்சன் ஆக்கும் சில விசயங்கள்

ஒவ்வொருவருக்கு சில விசயங்கள் பிடிக்காது, அதை பார்த்தால் சுல் என்று கோவம் தலைக்கு ஏறும் அது போல் எனக்கு தலைக்கு ஏறும் சில ...

1) டாக்டர் என் பெயர் ....வயது 26 கடந்த வருடம் திருமணம் ஆனது இந்த வருடமே எனக்கு குழந்தை பெற்றுக்கனும் என்று ஆசை ஆனால் கணவருக்கு இல்லை இதுக்கு என்ன செய்வது?

நான் திருமணம் ஆகி கணவனை பிரிந்து இருக்கும் பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழியின் கணவன் என்னை அடைய முயற்ச்சிக்கிறார், நாம் ஓடி போய் விடலாம் என்று சொல்கிறார் என்ன செய்வது நான்?

இது போன்ற கேள்விகள் படிக்க நேரும் பொழுது

2) ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவ போகும் பொழுது நமக்கு முன்பு இருப்பவர் கை கழுவி பல் விளக்கி, முகம் கழுவி விட்டா குளிச்சிடுவார் போல இருக்கும் அப்பொழுது ஏன் இங்கயே குளிச்சிட்டு போங்க என்று ஒரு துண்டை எடுத்து கொடுக்கனும் போல இருக்கும். அப்பொழுதும்...

3) ஹலோ பெப்ஸி உமாவா? அய்ய்யோ எத்தனை நாள உங்க கிட்ட பேசனும் என்று...இருங்க எங்க அம்மா பேசனும் என்கிறாங்க, இருங்க என் தம்பி பேசனும் என்கிறான்....என்னால நம்பவே முடியலைங்க உங்க கிட்ட பேசுகிறேன் என்று...குரல்களை காதில் கேட்கும் பொழுது

4) அட்டு பிகரு உலக அழகி ரேஞ்சுக்கு ரவுசு கொடுக்கும் பொழுதும்.

5) பாரு அந்த பொண்ணு என்னமா மார்க் வாங்குறா நீயும் தான் இருக்கீயே என்று சொல்லும் பொழுதும்.

6) தான் ஏறி உட்கார்ந்த உடன் எல்லா ஸ்டாப்பிலும் நிறுத்தும் பஸ் டிரைவரிடம் சண்டை போடும் ஆட்களை பார்க்கும் பொழுதும்.

7) சில்லரை இல்ல இறங்கு என்று சொல்லும் நடத்துனரை பார்க்கும் பொழுதும்.

8) கரெக்ட்டா நான் கைய உட்டு ரெண்டு டிக்கெட் என்று சொல்லும் பொழுது ஹைவுஸ் புல் என்று போர்ட் மாட்டும் பொழுதும்.

கோவம் வரும். அது போல் உங்களுக்கு எப்பொழுது கோவம் வரும்?

டிஸ்கி: தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும் என்று பின்னூட்டம் போட்ட ரிலீஸ் செய்ய மாட்டேன் ஆமா.

37 comments:

said...

//தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும்//

எனக்கென்னமோ இது தம்பிக்கு எச்சரிக்கை மாதிரி தெரியில! எடுத்துக்கொடுக்கற மாதிரியே இருக்கு!

பட்! மொத்ததுல நல்லவே கோவப்படுறீங்க!!??

said...

ஆசையாய் பின்னூட்டம் போட்டு ரிலீஸ் செய்யலைன்னா

said...

ஒரு நண்பரிடம் தெரிந்தவரிடம் நிஜ வாழ்க்கையில் அல்லது இணையத்தில் உரையாடிக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நம் கருத்தை வைத்து அவர்கள் அலசும் போதோ எனக்காக அவர்கள் சிந்திப்பதும், அவர்கள் முடிவு எடுப்பதும் செம கடுப்பு!

இதை விட கடுப்பே இல்லைன்னு சொல்லலாம்!!!

மவனுங்க அந்த சமயத்துல கையில கெடைச்சானுங்கனா, வெட்டியே போட்டுடுவேன்!

;-D

said...

ஆயில்யன் said...
எனக்கென்னமோ இது தம்பிக்கு எச்சரிக்கை மாதிரி தெரியில! எடுத்துக்கொடுக்கற மாதிரியே இருக்கு!///

இல்லீங்க ஆயில்யன் தம்பியை பத்தி உங்களுக்கு தெரியாது...

பட்! மொத்ததுல நல்லவே கோவப்படுறீங்க!!??

:))))))

said...

முரளி கண்ணன் said...
ஆசையாய் பின்னூட்டம் போட்டு ரிலீஸ் செய்யலைன்னா////

யாருக்கு போட்டு ரிலீஸ் செய்யவில்லை, சொல்லுங்க போய் கும்மி அடிச்சிடலாம்:)))

said...

மாசிலா said...

//மவனுங்க அந்த சமயத்துல கையில கெடைச்சானுங்கனா, வெட்டியே போட்டுடுவேன்!
;-D///

அண்ணே நீங்க இம்புட்டு நல்லவரா? அவ்வ்வ்வ்வ்

said...

எனக்கும் மொக்கை இடுகைகளைக் கண்டால் 'குப்பை' போடுகிறார்கள் என்று சொல்ல கோவம் கோவமாக வரும் !
:))

//4) அட்டு பிகரு உலக அழகி ரேஞ்சுக்கு ரவுசு கொடுக்கும் பொழுதும்.//

ஏன் இந்த கொலவெறி. அழகு என்பதன் இலக்கணம் என்ன ?
:)

said...

உங்களுக்கு கோபம் வருமா? ஆச்சரியமா இருக்கே!!!

said...

கோவி.கண்ணன் said...
எனக்கும் மொக்கை இடுகைகளைக் கண்டால் 'குப்பை' போடுகிறார்கள் என்று சொல்ல கோவம் கோவமாக வரும் !
:))///

கரீட்டா சொல்றீங்க:))

//4) அட்டு பிகரு உலக அழகி ரேஞ்சுக்கு ரவுசு கொடுக்கும் பொழுதும்.//

ஏன் இந்த கொலவெறி. அழகு என்பதன் இலக்கணம் என்ன ?
:)///

கண்டிப்பாக கருப்பையோ சங்கவை போன்றவர்களையோ அட்டு பிகர் என்று சொல்ல மாட்டேன்.

அழகு எப்பொழுதும் அலம்பல் செய்யாது அமைதியாக இருக்கும். அது போல் பிகருகளை கண்டால் கோவம் வரும்.:)))

said...

இது மாதிரி ஒரு மொக்கை பதிவப் போட்டுட்டு பின்னூட்டமே வராம ஜிமெயில் இன்பாக்ஸை ctrl+r அடிக்கும் போது சேர்க்கலையே?

said...

லொடுக்கு said...
உங்களுக்கு கோபம் வருமா? ஆச்சரியமா இருக்கே!!!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்:) ( இப்யாவது தெரியுதா?)

said...

2 மைல் நீளத்துக்குப் பெரிய்ய பதிவு போடுறவங்களயும், பின்னூட்டத்துல போடவேண்டியத எல்லாம் பதிவாப் போடுறவங்களையும் பார்த்தா பயங்கர கோவம் வரும்... :((
:)

said...

உங்க பதிவோட தலைப்பப் பார்த்து ஏமாந்து வேகவேகமா உள்ளவந்து பதிவைப் படிக்கும்போது.

;))

said...

தமிழ் பிரியன் said...
இது மாதிரி ஒரு மொக்கை பதிவப் போட்டுட்டு பின்னூட்டமே வராம ஜிமெயில் இன்பாக்ஸை ctrl+r அடிக்கும் போது சேர்க்கலையே?///

ஹி ஹி என் எல்லா பதிவும் அப்படிதான் ஆனா பின்னூட்டம் ஏதோ ஒன்னு ரெண்டு வருவதால் அந்த டென்சன் இல்லை:)

said...

ஜெகதீசன் said...
2 மைல் நீளத்துக்குப் பெரிய்ய பதிவு போடுறவங்களயும், பின்னூட்டத்துல போடவேண்டியத எல்லாம் பதிவாப் போடுறவங்களையும் பார்த்தா பயங்கர கோவம் வரும்... :((
:)///

என் மேல அப்படி எல்லாம் கோப பட கூடாது நண்பரே!!!:)

said...

பொன்வண்டு said...
உங்க பதிவோட தலைப்பப் பார்த்து ஏமாந்து வேகவேகமா உள்ளவந்து பதிவைப் படிக்கும்போது.

;))///

நன்றி பொன்வண்டு:)

said...

//தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும்//

கதிர்தானே சொல்லகூடாது நாங்க சொல்லல்லாம்ல??

said...

மங்களூர் சிவா said...
//கதிர்தானே சொல்லகூடாது நாங்க சொல்லல்லாம்ல??///

உங்களுக்கான பதில் மாசிலா பின்னூட்டத்தில் கடைசி மூன்று வரியில் இருக்கு:)))சிவா

said...

எலே மொக்கராசு!
இதெல்லாம் நார்மலாவே எல்லா பயலுவலுக்கும் வரும். என்னமோ உனக்கு மட்டும்தான் வரும்னு சொல்ற மாதிரி சொல்ற?

எனக்கு ஏன்யா கோவம் வரும். நம்மளோட ப்லாக் பாத்தில்ல என்ன போட்டுருக்கு?

said...

லிஸ்டு ரொம்ப சின்னதா இருக்கே.
பகுதி - II எப்ப போடப் போறீங்க.

எனக்கும் இந்த விஷங்களில் கோபம் வரும்.

said...

தம்பி said...
எலே மொக்கராசு!
இதெல்லாம் நார்மலாவே எல்லா பயலுவலுக்கும் வரும். என்னமோ உனக்கு மட்டும்தான் வரும்னு சொல்ற மாதிரி சொல்ற?

எனக்கு ஏன்யா கோவம் வரும். நம்மளோட ப்லாக் பாத்தில்ல என்ன போட்டுருக்கு?//


என்ன தம்பி முன்னுக்கு பின் முரனா பேசுற முதலில் கோவம் வரும் என்கிறாய், அடுத்த வரியில் என் பிளாக்கை பார்கல என்ன போட்டு இருக்குன்னு சொல்ற அதில் அன்பு மட்டும் என்று போட்டு இருக்கு...

சரி முடிவா சொல்லு உனக்கு கோவம் வருமா வராதா?:)

said...

வெங்கட்ராமன் said...
லிஸ்டு ரொம்ப சின்னதா இருக்கே.
பகுதி - II எப்ப போடப் போறீங்க.

எனக்கும் இந்த விஷங்களில் கோபம் வரும்.///

அம்புட்டுதேன்:)

said...

டிஸ்கி போடறதுக்காக பதிவு போடறியா இல்ல பதிவு போடறோமேன்றதுக்காக டிஸ்கி போடறியா?

நீ பதிவு போடும்போதெல்லாம் எனக்கு கோவம் வருதே அதுக்கென்ன செய்றது?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

//
மவனுங்க அந்த சமயத்துல கையில கெடைச்சானுங்கனா, 'வெட்டி'யே போட்டுடுவேன்!
//
மாசிலாவோட பின்னூட்டத்தில கடைசி 3 லைன் இதுதான்.

நான் பின்னூட்டம் போட்டா

'வெட்டி'

என்னய்யா பாவம் செஞ்சார். அவர போட்டுருவேன்கிற???
ஏன் இந்த மர்டர் வெறி???

:-) :-) :-)

said...

இலைக்கார சகோதரரையும் லக்கிலுக்கையும் இணைத்து பேசுவது எனக்கு செம கடுப்பு அப்பு!

தங்கத்தாரகை, மின்மினி மேனி, ஜகத்தல பிரதாபி வருங்கால உலக ஐ.நா.சப்பை தலைவி ஷெல்வி செயாவை குறை கூறுவது என செம கடுப்பு அப்பு!

குஜராத பேமஸ் மோடி மஸ்தான் பார்த்தாலே செம கடுப்பு அப்பு!

said...

ஹா..ஹா..... ஹீ..ஹீ....ஹாஆஆஆஅஹா..

உங்க பதிவ படிசப்பரம் ரொம்ப நேரம் என்னோட ரூமிலிருந்து ,இப்பிடித்தான் சத்தம் கேட்டதா.. பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றாங்க..அருமை..
தொடர்க குசும்பு..

Anonymous said...

தம்பி கதிர்!!! என் பதிவை, அல்லது போட்டோவை பார்க்கும் பொழுது கோவம் வரும் என்று பின்னூட்டம் போட்ட ரிலீஸ் செய்ய மாட்டேன் ஆமா.
thambikkum...kusumbarukkum.. ennaa y aam porutham..(8) ettam porutham..
appadi ennappa pankaali chandai..
sari sari.. vasakarkalukku..naeram pokuthu ungkal lolaaiyai padithu..
aanaa thambi nallavaruppa

said...

கூடவே சினிமா தியேட்டரில் பார்த்தால் எங்க படம் பாக்க வந்தீங்களா....

செல்போனில் பேசும் போதும் பக்கத்தில் இருப்பவர்கள் நிலையை சற்றும் நினைக்காமல் கத்தி பேசுபவர்களை காணும் போது....

said...

சிக்னலில் சிவப்பு விளக்குக்கு எல்லாருக்கும் நிக்கும் போது ஏதோ ஹிரோயிசம் போல சிவப்பு விளக்கு எரியும் போது சிக்னலை க்ராஸ் செய்பவர்களை காணும் போது....

வரிசையில் நிற்பவன் எல்லாம் கேணப்பய என்பது போல நடுவில் புகுந்து டிக்கெட்(இன்ன பிற) வாங்கும் ஆட்களை பாக்கும் போது...

இது போல ஏகப்பட்ட இருக்கு விடுங்க ... பொழப்ப கிடக்கு.. நான் கிளம்புறேன்.

said...

அது போல், புரியாத பின் நவீனத்துவ
கவிதைகள் படிக்கும் போதும் கோபம் வரும் என்று சொல்ல மறந்து விட்டீர்களே ? (ஆமாம் இப்போதெல்லாம் அய்யனாரைக் கலாய்ப்பதில்லையே ஏன் ) :)

(அய்யனார் மன்னிக்கவும் : தங்களுக்கு
கோபம் வராது என்று குசும்பர் முன்பே சொல்லியிருக்கார்)

said...

மங்களூர் சிவா said...
///என்னய்யா பாவம் செஞ்சார். அவர போட்டுருவேன்கிற???
ஏன் இந்த மர்டர் வெறி???///

அய்யா நல்லவரே நான் சொன்னது உங்களை!

****************
மாசிலா said...
இலைக்கார சகோதரரையும் லக்கிலுக்கையும் இணைத்து பேசுவது எனக்கு செம கடுப்பு அப்பு!////

:)

தங்கத்தாரகை, மின்மினி மேனி, ஜகத்தல பிரதாபி வருங்கால உலக ஐ.நா.சப்பை தலைவி ஷெல்வி செயாவை குறை கூறுவது என செம கடுப்பு அப்பு!//

நிஜமாவே வா? யாரோ நுறை தவளைன்னு சொன்ன மாதிரி நினைவு:)

குஜராத பேமஸ் மோடி மஸ்தான் பார்த்தாலே செம கடுப்பு அப்பு!/

மீ டூ:)

said...

ரசிகன் said...
ஹா..ஹா..... ஹீ..ஹீ....ஹாஆஆஆஅஹா..

உங்க பதிவ படிசப்பரம் ரொம்ப நேரம் என்னோட ரூமிலிருந்து ,இப்பிடித்தான் சத்தம் கேட்டதா.. பக்கத்து வீட்டுக்காரங்க சொல்றாங்க..அருமை..
தொடர்க குசும்பு..//

நன்றி ரசிகன்.


Anonymous said...
//aanaa thambi nallavaruppa//

அவ்வ்வ்வ்வ்வ்:)

said...

நாகை சிவா said...
கூடவே சினிமா தியேட்டரில் பார்த்தால் எங்க படம் பாக்க வந்தீங்களா....//
:) ஆமாம் புலி கரெக்ட் தான்

செல்போனில் பேசும் போதும் பக்கத்தில் இருப்பவர்கள் நிலையை சற்றும் நினைக்காமல் கத்தி பேசுபவர்களை காணும் போது....

அது சிலரின் இயல்பு, என்ன செய்வது!:(

said...

அ.இப்னுஜுபைர் said...
அது போல், புரியாத பின் நவீனத்துவ
கவிதைகள் படிக்கும் போதும் கோபம் வரும் என்று சொல்ல மறந்து விட்டீர்களே ? (ஆமாம் இப்போதெல்லாம் அய்யனாரைக் கலாய்ப்பதில்லையே ஏன் ) :)///

கொஞ்சம் ரெஸ்ட் அவருக்கு கொடுத்து இருக்கேன், 100 போஸ்டில் 98 போஸ்ட் அய்யனாரை பற்றிதான் இருக்குது உங்களுக்கும் போர் அடிச்சுடும் என்பதால் தான்,
பிறகு இதுதான் தங்களின் முதல் கமெண்ட் என்று நினைக்கிறேன் நன்றி:)

(அய்யனார் மன்னிக்கவும் : தங்களுக்கு
கோபம் வராது என்று குசும்பர் முன்பே சொல்லியிருக்கார்)
நிஜம் இதில் குசும்பு இல்லை!

said...

Kusumban Same Pinch :))

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team