Thursday, October 4, 2007

என்னிடம் ஐ லவ் யூ சொன்ன அரபி பெண்!!!!

இன்னைக்கு காலையில் 8 மணிக்கு ஆபிஸ் கிளம்பி வந்த பிறகு, ஷேக் ஷாயித் ரோட்டில் ஒரு மீட்டிங்குக்கு போக வேண்டி இருந்தது, நம்ம டிரைவரிடம் சொன்னேன் அங்க போகனும் என்று சரி என்று சொல்லி வண்டியை எடுத்தான், சர் என்று வேகமாக எடுத்து போய் T -ஜாயினில் லெப்ட் எடுக்க போனான் பாதியில் வண்டியை ஆப் செஞ்சுட்டான் படு பாவி, பாதி வண்டி அதாவது நான் உட்காந்து இருக்கும் சீட் வரை அடுத்த டிராக்கில் இருக்கு மீதி இந்த டிராக்கில் இருக்கு, அந்த ரோட்டில் வேகமாக வந்த பிளாக் லேண்ட் கூரூஸர் காரில் இருந்த ஒரு அரபி பெண் சடார் என்று கீரீச் என்று சத்தம் கேட்கும் படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினாள், புண்ணியவதி மோதி இருந்தா பாலுதான், ஒரு நிமிசம் கலங்கி போய்டேன் மேலே போண பாட்டி எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க, அடேய் இன்னும் லைப்ல ஒன்னுமே பார்கவில்லை,வீட்டுக்கு ஒரே புள்ளை இப்படி என்னை அநியாயமா சாக அடிக்க பார்த்தானே என்று அவனை திட்டினேன். அன்னைக்கே ஆசிப் சொன்னார் உன் டிரைவர் டிரைவிங் சரி இல்லையா பார்த்து ஒழுங்கா ஓட்ட சொல்லுன்னு. எங்க பய புள்ள கேட்டாதானே!!! அய்யா தங்கம் என்னை திரும்ப ஆபிஸிலேயே விட்டு விடு, நான் இன்னொருத்தவன் வந்த உடன் போய்கிறேன் என்று சொல்லி விட்டு திரும்ப ஆபிஸ் வந்துட்டேன்!!!

சரி இதில் எங்கய்யா அரபி பொண்ணு ஐ லவ் யூ சொன்னா என்று தானே கேட்கிறீங்க?

வெயிட் வெயிட்...

அவ பிரேக் போட்ட உடன் கார் மேல ஏதும் மோதி இருக்கான்னு பார்க்க கார் கண்ணாடியை இறக்கினேனா? அப்ப அந்த அரபி பொண்ணு அரபியில் கொஞ்சம் சத்தமா ஏதோ என்னை பார்த்து சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

உனக்கு தான் தமிழை தவிர வேற ஒன்னுமே தெரியாதே அது எப்படி ஐ லவ் யூ சொன்னுச்சுதானே என்று கேட்கிறீங்க?

இருங்க மக்கா...

வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!

34 comments:

said...

//வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் கனி இருக்கும் பொழுது எதுக்கு காயை எடுத்துக்கனும் என்று சொல்லி இருக்கார் அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!//

aaha.. imbuttu nallavara neenga?

said...

"aaha.. imbuttu nallavara neenga?"

என்னங்க இத்தனை நாள் இது தெரியாமையா இருந்தீங்க!!!

said...

அய்யோ பாவம்... :(

said...

"முத்துலெட்சுமி said...
அய்யோ பாவம்... :("

யாருங்க?:(((

Anonymous said...

பலரும் இப்படி அன்புடன் வாழ்த்த வாழ்த்துக்கள்

said...

நீங்க தான் ... ஏன்னா ஒருவேளை இந்த குழந்தை முகத்தை பார்த்ததும் உண்மையிலேயே அந்தபொண்ணு அப்படி சொல்லிருந்தாலும்.. பேந்த பேந்த முழிச்சிட்டு.. பரவாயில்லைன்னு கிளம்பி வந்துருவீங்களே ... அதை நினைச்சேன்... அதான் பாவம்ன்னேன்.

said...

"இனியவன் said...
பலரும் இப்படி அன்புடன் வாழ்த்த வாழ்த்துக்கள்"

ஏன் இப்படி ஒரு வாழ்தோடு விட்டு விட்டீங்க, முத்தம் (அடி) வாங்கவும் வாழ்த்தவேண்டியதுதானே, இனியவன்:))

நன்றி வருகைக்கு!!!

said...

அண்ணா!
அது-அதுன்னுல எதுவும் - என்னா சொல்லியிருக்குமுன்னா..!

முக் மாஃபி அப்படின்னுத்தான் சொல்லியிருக்கும்!
இந்த மாதிரி எவ்ளோ ஐ லவ் யூவை நானும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே ரீசிவ் பண்ணியிருக்கேன் தெரியுமாஆஆஅ???!!

said...

"முத்துலெட்சுமி said...
நீங்க தான் ... ஏன்னா ஒருவேளை இந்த குழந்தை முகத்தை பார்த்ததும் உண்மையிலேயே அந்தபொண்ணு அப்படி சொல்லிருந்தாலும்.. பேந்த பேந்த முழிச்சிட்டு.. பரவாயில்லைன்னு கிளம்பி வந்துருவீங்களே ... அதை நினைச்சேன்... அதான் பாவம்ன்னேன்."

எல்லோரும் நல்லா ஒரு நாலுதடவை திரும்ப திரும்ப படிங்க, அப்படியாசும் உண்மை உங்க மண்டையில் ஏறட்டும்:)

Anonymous said...

முத்தம் (அடி) வாங்கவும் வாழ்த்தவேண்டியதுதானே, இனியவன்

vaazhthi vitta pochee..

mutha mazhayil unakku moocheee mutti mayakkam pottu vizha

(poraamaithaan.. arabi ponnukitta neenga mattum thittu vaangi irukeengala.. athuthaan)

said...

"ஆயில்யன் said...
அண்ணா!
அது-அதுன்னுல எதுவும் - என்னா சொல்லியிருக்குமுன்னா..!

முக் மாஃபி அப்படின்னுத்தான் சொல்லியிருக்கும்!
இந்த மாதிரி எவ்ளோ ஐ லவ் யூவை நானும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே ரீசிவ் பண்ணியிருக்கேன் தெரியுமாஆஆஅ???!!"

அட நம்ம தோஸ்த்!!! வாங்க வாங்க!!! அது என்னா மாஃபி ? குல்பி மாதிரி பேரு நல்லா இருக்கு!!!

said...

ஹாஹா.... :))

அந்த பொண்ணு எப்பிடியிருந்துச்சு குசும்பா?? :))

said...

"இராம்/Raam said...
ஹாஹா.... :))

அந்த பொண்ணு எப்பிடியிருந்துச்சு குசும்பா?? :))"

தம்பிக்கு பர்த்தா போட்டா எப்படி இருக்கும், அதுபோல:)))

said...

i love u

இதுக்கு என்ன அர்த்தம் எடுப்பீங்க?

said...

U too telling ... I love u 2 that arabi girl yes or no !!!!

said...

சித்த"ஆப்பு" உனக்கும் கல்யாணம் ஆசை வந்துடுச்சுன்னு இப்படி எல்லாம் பதிவு போட்டு தான் சொல்லானுமா! ;)

said...

//அது என்னா மாஃபி ? குல்பி மாதிரி பேரு நல்லா இருக்கு!!!//

ஆமாண்ணே எனக்கும் கூட சொன்னப்ப குல்பி மாதிரிதான் இனிப்பா இருந்துச்சு (இருக்காதா பின்னே அரபியாச்சே..!) அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன் அர்த்தத்தை
புத்தி இல்லாதவனாம்ல

said...

இந்தப் பதிவை அரபியில் மொழிபெயர்த்து, இலவச நியூஸ்பேப்பர்கள் அனைத்திலும் வெளிவரச்செய்துவிடுகிறேன்.

பிறகு முத்தமழை பொழிய கோடிக்கணக்கான அரபுவனிதையர் குசும்பனை நாடிச்செல்வது திண்ணம். போதுமா?

said...

ங்கொய்யால, அவ வண்ட வண்டயா திட்டினத என் கிட்ட சொல்லி அழுதுட்டு இப்ப பதிவு போட்டாச்சா!:-))

Anonymous said...

நல்லவேளை அந்த கார்ல ஐ லவ் யூ சொன்னவங்க பொண்ணு. அதே ஒரு ஆம்பளையா இருந்திருந்தா

said...

//அதனால் புரியாத பாசையில் ஒரு பெண் திட்டினால் அதை ஏன் திட்டாக எடுத்துகனும்... நம்மை பார்த்து ஐ லவ் யூ சொன்னதாக கூட எடுத்துக்கலாமே!!!//

உங்க கால கொஞ்சம் காட்டுங்க குசும்பன்...

said...

//
ஹாஹா.... :))

அந்த பொண்ணு எப்பிடியிருந்துச்சு குசும்பா?? :))

தம்பிக்கு பர்த்தா போட்டா எப்படி இருக்கும், அதுபோல:)))
//

இது மேட்டரு

said...

அந்த அரபி பெண் என்னா சொல்லியிருப்பான்னு எங்களுக்கெல்லாம் நல்லாவே கேட்குது... :)

said...

நினைப்பு பொழப்ப கெடுக்காம இருந்தா சரி தான்....

said...

"மிதக்கும்வெளி said...
i love u
இதுக்கு என்ன அர்த்தம் எடுப்பீங்க?"

இதுக்கு நீங்க என்ன ரெண்டு சாத்து சாத்தி இருக்கலாம் அப்படின்னு எடுத்துப்பேன்.

said...

"தேவ் | Dev said...
U too telling ... I love u 2 that arabi girl yes or no !!!!"

ஹி ஹி அப்படி எல்லாம் சொல்ல முடியாதே!!!


கோபிநாத் said...
சித்த"ஆப்பு" உனக்கும் கல்யாணம் ஆசை வந்துடுச்சுன்னு இப்படி எல்லாம் பதிவு போட்டு தான் சொல்லானுமா! ;)


"உனக்கும்" என்றால் அல்ரெடி உனக்கும் வந்துட்டுச்சா? இல்லை என்றால் நீ உனக்கு என்று அல்லவா சொல்லி இருக்கனும்:)

said...

"ஆயில்யன் said...
"அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டேன் அர்த்தத்தை புத்தி இல்லாதவனாம்ல"

ஆஹா இந்த உண்மை எப்படி அவுங்களுக்கு தெரிஞ்சது இது எல்லாம் இந்த ஓட்ட வாய் அபி அப்பா வேலையாகதான் இருக்கும்:))


பினாத்தல் சுரேஷ் said...
இந்தப் பதிவை அரபியில் மொழிபெயர்த்து, இலவச நியூஸ்பேப்பர்கள் அனைத்திலும் வெளிவரச்செய்துவிடுகிறேன்.

பிறகு முத்தமழை பொழிய கோடிக்கணக்கான அரபுவனிதையர் குசும்பனை நாடிச்செல்வது திண்ணம். போதுமா?////

நான் நல்லா இருக்கனும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு அலையும் மக்களில் நீங்களும் ஒரு ஆளா??? நல்லா இருங்க நல்லா இருங்க!!!

said...

"அபி அப்பா said...
ங்கொய்யால, அவ வண்ட வண்டயா திட்டினத என் கிட்ட சொல்லி அழுதுட்டு இப்ப பதிவு போட்டாச்சா!:-))////

ஹி ஹி:)))

சின்ன அம்மிணி said...
நல்லவேளை அந்த கார்ல ஐ லவ் யூ சொன்னவங்க பொண்ணு. அதே ஒரு ஆம்பளையா இருந்திருந்தா/////

இருந்திருந்தா என்ன ஒரு பதிவு வந்து இருக்காது:)))) ஆம்பிள்ளை திட்டினா அதபோய் வெளியில் சொல்லுவாங்களா? ச்ச்சேசே

said...

k4karthik said...
///உங்க கால கொஞ்சம் காட்டுங்க குசும்பன்...////

ஹி ஹி குழந்தையும் தெய்வம் தான் என்று நீங்க ரொம்பதான் புரிஞ்சுவெச்சு இருக்கீங்க:)))

said...

மங்களூர் சிவா said...
//
ஹாஹா.... :))

அந்த பொண்ணு எப்பிடியிருந்துச்சு குசும்பா?? :))

தம்பிக்கு பர்த்தா போட்டா எப்படி இருக்கும், அதுபோல:)))
//

இது மேட்டரு////

என்னங்க தம்பியை போய் மேட்டரு என்று சொல்றீங்க:)))

said...

நிலவு நண்பன் said...
அந்த அரபி பெண் என்னா சொல்லியிருப்பான்னு எங்களுக்கெல்லாம் நல்லாவே கேட்குது... :)///

நீங்க இங்க இருந்த ஆள் அதனால் உங்களுக்கு நல்லாவே தெரியும்!!! ஆனா என்ன சொல்லி இருப்பாங்க என்பதை வெளியில் சொல்லிடாதீங்க!!!

said...

நாகை சிவா said...
நினைப்பு பொழப்ப கெடுக்காம இருந்தா சரி தான்....///

பழைய நினைப்புடா பேராண்டி பழைய நினைப்புடான்னு ஒரு பாட்டு இருக்கு புலி:))) அதுபோல் தான்:)

said...

:)))....

!#$$^%*())*(%$@$@$^#%$@$#

இது இங்க பேசுற பாஷை. என்னப் போட்டிருக்குன்னு கண்டுபிடிங்க பாப்போம்...

said...

"ஜி said...
:)))....

!#$$^%*())*(%$@$@$^#%$@$#

இது இங்க பேசுற பாஷை. என்னப் போட்டிருக்குன்னு கண்டுபிடிங்க பாப்போம்..."

G ரொம்ப அழகானவர், அறிவானவர் அப்படின்னு சொல்லுறாங்க:)
கரெக்ட்டா!!!