Tuesday, November 30, 2010

போலி குசும்பன் -விளக்கம்

என் பெயரில் சிலர் சவுக்கு தளத்திலும், ஒரு சில ஆபாச தளங்களிலும் கமெண்ட் போடுகிறார்கள், சவுக்கு தளத்தில் தொடர்ந்து உன் பெயரில் கமெண்ட் வருகிறது என்றார்கள் . போய் பார்த்தேன் ஆபாசமாக எதுவும் இல்லை என்றாலும், அது நான் இல்லை என்பதை சொல்லவே இந்த பதிவு.

ஏதும் எனக்குன்னு அரசியல் நிலைபாடு இருக்குன்னு காட்ட முயற்சியா அல்லது எதுக்குன்னு புரியவில்லை. நான் நண்பர்கள் பதிவை தவிர வேறு எங்கும் கமெண்ட் போடுவது இல்லை.

Wednesday, November 24, 2010

போச்சே போச்சே...அனுஜன்யா திரும்பி வாங்க!

நேற்று மாலை அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் லாம்சி பிளாசாவுக்கு சென்றேன், மால் நடுவில் ஸ்டேஜ் போட்டு இருந்தார்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு என்ன விசயம் என்றேன்... இம்ரான் கானும், தீபிகா படுகோனும் வருகிறார்கள் என்றார்கள். ஆஹா தீபிகா படுகோனா என்று ஆர்வத்துடன் காத்திருந்தேன். பத்து நிமிடத்தில் ஸ்டேஜுக்கு அனைவரும் வந்தார்கள். ஒரு நிமிடத்துக்கு மேல் அங்க என்னால் நிற்க முடியவில்லை. தீபிகா படுகோனை அவ்வளோ பிடிக்கும் ஆனால் நேரில் பார்த்ததும் ச்சை என்று ஆகிவிட்டது:(( டக்குன்னு கிளம்பி வந்துவிட்டேன்.

லவ் ஆஜ்கல் என்கிற ஒரு படம் தீபிகா படுகோனுக்காகவே குறைந்தபட்சம் 30 தடவைக்கு மேல் டிவிடி தேய தேய பார்த்துவிட்டு, இப்ப ஹார்ட் டிஸ்கில் அந்த படத்தை வெச்சிருக்கேன்.



எனக்கு இந்த பாடத்தில் வரும் Chor Bazaari பாட்டை பார்க்கும் பொழுது எல்லாம் ஒரு சந்தோசம் வரும். பஞ்சாபிகள் எதையும் ரசனையோடு செய்பவர்கள், நமக்கு எல்லாம் ரொம்ப சந்தோசம் வந்தால் என்ன செய்வோம் என்று யோசிச்சோம் என்றால் எப்பொழுதும் போல் தான் இருந்திருப்போம். ஆனால் பஞ்சாபிகள் பல்லே பல்லே பல்லே என்று ஆட ஆரம்பிச்சிடுவார்கள். அது ரோடாக இருந்தாலும் சரி கவலையே பட மாட்டார்கள். பஞ்சாபி பெண்களும் அதுமாதிரிதான், அவர்களையும் ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும்? அதுக்கு சில புள்ளி விவரங்களை சொல்லவேண்டும்... பஞ்சாபி பெண்கள் பற்றி புள்ளி விவரங்களை சொன்னால் அடி விழும் என்பதால் நம்ம திரும்ப ஆட்டம் பற்றியே பேசுவோம். கல்லூரியில் படிக்கும் பொழுது கடைசியாக சாந்தி தியேட்டரில் நண்பர்களுடன் ஆடியது...அதன் பிறகு வாய்ப்பு கிடைக்க வில்லை.

ஊருக்கு வரும் பொழுது தேணாம்படுவை தப்பு செட்டு காரர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிட்டு ஆடனும் என்று ஆசை...(முன்னாடி துண்டு விரிச்சி கூட வைக்கலாம் தப்பு இல்ல)
*********
போன வாரம் நண்பன் ஒருவன் போன் செஞ்சான், மச்சான் நீ மாமா ஆக போற டா என்றான். அட பாவி வேலையில் பிரச்சினை அதுக்காக இப்படியாடா சொல்லுவ என்றேன். ச்சே லூசு நான் அப்பா ஆகபோறேன் டா என்றான். அடங்கொன்னியா கல்யாணம் ஆகி 50 நாள் கூட ஆகவில்லையே டா என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.


முதல் வருட கல்யாண நாளை புள்ளையோட கொண்டாட போகும் நண்பா நீ வாழ்க வாழ்க என்றேன்...ஹி ஹி ஹி என்றான்.


குழந்தை பிறந்த பிறகு அவனோட நிலமைய நினைச்சேன்...நான் ஹி ஹி ஹி என்றேன்.


**********
கல்யாணம் என்றது இந்த கல்யாணம் ஆகி குட்டி போட்ட சீனியருங்க அட்வைஸ் செய்வாங்க பாருங்க அய்யெய்யோ...தாங்க முடியாது.


மச்சான் முதல் ராத்திரியே பாஞ்சிடாத..பொறுமையா டீல் செய்யனும் என்று சொல்லுவான் ஒருத்தன்.


இன்னொருத்தன் மச்சான் முதல் ராத்திரியே சக்சஸ்புல்லா முடிச்சிடு அப்புறம் காலம் முழுக்க நம்ம சொன்ன பேச்சிதான் கேட்பாங்க என்று சொல்லுவான் இன்னொருத்தன். (இந்த லாஜிக் படி பார்த்தால் உலகத்தில் 99% கேஸ் பெயிலியர் கேஸ்தான்).


குறைந்தது ஒருவருசம் குழந்தை பிறப்பை தள்ளி போட்டுக்குங்க. என்று சொல்லுவானுங்க.


மச்சான் எப்பவும் நீ சொல்றத கேட்கிற மாதிரி வெச்சிக்க, கிரிப்ப விட்டுவிடாதடா அப்புறம் காலம் முழுக்க ஆமாம் சாமி போடவேண்டியிருக்கும். கொஞ்சம் இடம் கொடுத்தா அவ்வளோதான் ஆளை காலி செஞ்சிடுவாங்க. இது இன்னொருத்தன்.


மச்சான் இன்னும் மூனு மாசம் டைம் இருக்கு, ஜிம்முக்கு எல்லாம் போ...பிட்டா வெச்சிக்க. ஜல்லி கட்டுக்கு போய் காளைய அடக்க ட்ரைனிங் கொடுப்பது மாதிரியே டிப்ஸ் கொடுப்பாய்ங்க.


எல்லாத்தையும் நோட் செஞ்சு வெச்சிக்கிட்டாலும் புது பொண்டாட்டி பக்கத்துல வந்ததும் இந்த பிக்காலி பயலுவோ சொன்னது எல்லாம் எங்க நினைவுக்கு வரும்?


*****
இது அனுஜன்யா திரும்பி வரவேண்டும் என்பதுக்காக எழுதியது...
அனுஜன்யா திரும்பி வாங்க...

Saturday, November 20, 2010

மன்மோகன் சிங் ஸ்பெசல் 20-11-2010

(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)
மன்மோகன்: CNN IBNல்லிருந்து ஒரு பத்துபதினைஞ்சு பேரு...சுத்தி நின்னுக்கிட்டு கும்முகும்முன்னு கும்மினானுங்க...நானும் அதோட முடிஞ்சிதுன்னு நினைச்சிக்கிட்டு கிளம்ப நினைச்சேன்...

வடிவேலு: அப்புறம்?

மன்மோகன்: இவிங்க கேள்வி கேட்டு டயர்ட் ஆகி...மத்த நியுஸ் சேனல் காரனுங்களுக்குபோன் போட்டு..இங்க ஒரு ஆளு வசமா சிக்கியிருக்காரு வாங்கன்னு கூப்பிட்டானுங்க...

வடிவேலு: அப்புறம்?

மன்மோகன்: ஒரு நூறு நூத்தியைம்பது பேரு திபுதிபுதிபுன்னு ஓடி வந்து கேள்வி கேட்டுகும்மியடிச்சு அங்கியிருந்து பார்லிமெண்டுக்குள்ள தூக்கி போட்டானுங்க அங்க ஒரு 200 எம்.பிங்க ஒருநாள் இல்ல ரெண்டு நாள் இல்ல 7 நாள் ஓயாமா கேள்வியா கேட்டு அடிச்சானுங்க...அப்புறம் அங்கியிருந்து ஒரு ஆட்டோவுல ஏத்தி சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பினானுங்க...

வடிவேலு: அப்புறம்...

மன்மோகன்: அங்க ஒரு மூனு நாளு ஜட்ஜுமாருங்க கேள்வி மேல கேள்வியா கேட்டு ஓயாம அடிச்சாங்க...

வடிவேலு: இவ்வளோ நடந்திருக்கு...நீங்க ஒன்னுமே செய்யலையா?


மன்மோகன்: அவிங்க கேள்வி கேட்டு கும்மும் பொழுது ஒருத்தன் சொன்னான்...எவ்வளோகேள்வி கேட்டு அடிச்சாலும் நம்ம பிரதமரு தாங்குறாரு..இவரு ரொம்ப நல்லவருன்னு..இதுமாதிரிஒரு பிரதமர பார்த்ததில்லைன்னு சொல்லிட்டான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


வடிவேலு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


*************************



(படம் பெரிதாய் தெரிய படத்தின் மேல் கைய வெச்சி எலியை ஒரு குத்து குத்தவும்)

விவேக்: சொல்லுங்க எசமான் சொல்லுங்க...


மன்மோகன்: என்ன சொல்லனும் விவேக்?


விவேக்: நீதிமன்றம் நாக்கை புடுக்கிக்கிற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்குதே...


மன்மோகன்: அதுக்கு?


விவேக்: என்ன செய்யப்போறீங்க? என்ன பதில் சொல்லப்போறீங்க?


மன்மோகன்: இதுவரைக்கும் என்னபதில் சொல்லியிருக்கேன்? என்ன செஞ்சிருக்கேன்?


விவேக்: ஒன்னியும் செஞ்சது இல்ல...


மன்மோகன்: அதேதான் இதுக்கும் கூடியிருக்கும் கூட்டத்துக்கிட்ட போய் சொல்லு...
*****************

நண்பேண்டா!

செய்தி: பரிட்சை எழுதி முடிச்ச ஸ்கூல் பிள்ளையை போல் உணருகிறேன்.




இதை வெச்சி நம்ம கும்மி....


நீதிபதி: போன வாரம் கேள்வி கேட்டு இருந்தோமே பிரதமரிடம் பதில் வந்துச்சா?




வக்கீல்: வந்திருக்கு எசமான், ஆனா அதுல 5 கேள்விக்கு 4 கேள்விக்கு அவுட் ஆப் சிலபஸ் என்றும் ஒரு கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டேன் என்றும் பதில் எழுதியிருக்கிறார் எசமான்.




**************

நீதிபதி: பிரதமர் ஏதோ கடிதம் அனுப்பியிருகிறாராம்...எங்கே அந்த கடிதத்தை படிங்க...



வக்கீல்: டியர் சார், ஐ ஆம் சபரிங் பிரம் பீவர் ப்ளீஸ் கிராண்ட் மீ டூ டேஸ் லீவ்.


யுவர்ஸ் & எவ்வரிபடி

ஒபிடீயண்ட்

மன்மோகன் சிங்


*************

நீதிபதி: யாருய்யா அது வாசலில் முட்டி போட்டுக்கிட்டு நிற்பது உள்ளே வரசொல்லு...



வக்கீல்: நம்ம பிரதமருதான் ஐயா...உள்ளே வந்தா கேட்ட கேள்விக்கு பதில் எங்கேன்னு நீங்க திரும்ப கேள்வி கேட்பிங்கன்னு பயந்து வெளியில் முட்டி போட்டுக்கிட்டு நிற்கிறார்.

Tuesday, October 26, 2010

என்னா பாஸ்டா ஓடுது....

ஏய் ஓடிவா ஓடிவா உன் புள்ள உள்ள இருந்துக்கிட்டு என்னை உதைக்கிறான் பாரு என்று கைய புடிச்சு வயித்து மேல வெச்சிக்கிட்டு தெரியுதா...உன்னை மாதிரியே வாலா இருக்கும் போல உள்ள அந்த உதை உதைக்குதுன்னு சொல்லியது...


ஸ்கேன் செய்யும் பொழுது என்னையும் உள்ளே வரசொல்லி இதோ பாருங்க கைய கால எப்படி ஆட்டுது பாருங்க அப்பாவுக்கு ஹாய் சொல்றான் போல என்று டாக்டர் சொல்லியது...


என்னங்க டாக்டர் சொன்ன தேதிக்கு முன்னாடியே வந்துடுங்க, உங்களை பார்த்துட்டுதான் நான் வார்டுக்குள்ளே போவனும், அதுமாதிரி புள்ளைய நீங்கதான் கையில வாங்கனும், சீக்கிரம் வந்துடுங்க என்று ஏர்போர்ட்டில் சொல்லிவிட்டு சென்றது...


அக்டோபர் 20 ஆம் தேதி காலை 4 மணிக்கு குழந்தைய எடுத்துக்கிட்டு வந்து என் கையில் கொடுத்தது, எல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கு. நாட்கள் எத்தனை சீக்கிரமாக ஓடுகிறது. போனவாரம் பையனின் முதல் பிறந்தநாளை கொண்டாடினோம். நண்பர்கள் பலரும் வந்து வாழ்த்த நல்லபடியாக நடந்து முடிந்தது.


குடும்பத்தோடு வந்திருந்த நண்பர்களிடம் ஒரு 15 கேள்வி அடங்கிய பேப்பரை கொடுத்து பதில் சொல்ல சொல்லியிருந்தோம்... அதில் ஒரு கேள்வி எந்த கிழமையில் திருமணம் நடந்ததுன்னு, அதுக்கு நண்பர் ஒருவர் வியாழக்கிழமை என்றும், அவரோட மனைவி ஞாயிறு என்றும் சொல்லியிருந்தார். அப்ப வியாழக்கிழமை கல்யாணம் செஞ்ச பொண்டாட்டி எங்கேன்னு ஆசிப் அண்ணாச்சி புடிச்சி ஓட்டிக்கிட்டு இருந்தார். இன்னொருவர் முதன் முதலாக கொடுத்த கிப்ட்டுக்கு தப்பா பதில் சொல்லியிருந்தார் அவர் முதலிரவின் பொழுது ஒரு கோல்ட் ரிங் வாங்கி கொடுத்திருக்கிறார் அதையே மறந்துட்டாரே வீட்டுக்கு வரட்டும் கவனிச்சிக்கிறேன் என்று ஒருவர் சொல்லிக்கிட்டு இருந்தார்... ஏதோ நம்மளால் முடிஞ்சது என்று சந்தோசமாக இருந்துச்சு.


வந்திருந்த கிப்ட்டில் இருந்த ஒரு மீன் பொம்மைய வெச்சி பயபுள்ள விளையாண்டுக்கிட்டு இருந்தான் அந்த மீன் வாய திறந்து திறந்து மூடும் நானும் அவனை அந்த மீன் கடிக்க வரமாதிரி விளையாட்டு காட்டிக்கிட்டு இருந்தேன் சிரிச்சி விளையாண்டுக்கிட்டு இருந்தான்... மீன் குஞ்ச கடிக்கபோவுதுன்னு கடிக்க வுட்டேன் அதன் பிறகு குஞ்சான மூடிக்கிட்டு ஓடி வந்து என் மேல உட்காந்துக்கிட்டு அந்த பொம்மைய வெச்சி விளையாடவே மாட்டேன்னுட்டான்:))


என் பிறந்தநாளாகட்டும்,திருமணநாளாகட்டும், பையன் பிறந்தநாளாகட்டும் எல்லாத்துக்கும் இன்றுவரை முதல் ஆளாக வாழ்த்துவது காயத்ரி சித்தார்த். இந்த முறை அவன் பிறந்தநாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பே இங்கிருக்கும் quickdubai என்ற ஆன்லைன் கிப்ட் ஷாப்பிங் மூலம் ஒரு கிப்ட் வவுச்சர் அனுப்பியிருந்தார்கள், அந்த ஆளும் போன் செய்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது அட்ரஸ் சொல்லுங்க என்றான், என்னடா பார்சல் யார் அனுப்பியதுன்னு சொல்லு என்றேன் அதெல்லாம் சொல்லமுடியாது உங்க அட்ரஸ் சொல்லுங்க என்றான், அப்ப அந்த பார்சலை நீயே வெச்சிக்க எனக்கு வேண்டாம் என்று சொல்லி போனை கட் செய்துவிட்டேன், பிறகு திரும்ப இரண்டு முறை அதே நம்பரிலிருந்து கால் வந்தது எடுக்கவில்லை, கொஞ்ச நேரம் கழித்து வேற மொபைல் நம்பரிலிருந்து கால் வந்தது எடுத்தேன், சார் உங்களுக்கு உங்க நண்பர் ஒருவர் கிப்ட் அனுப்பியிருக்கிறார் சர்பிரைஸாக இருக்கட்டும் என்றுதான் பேரை சொல்லவில்லை அட்ரஸ் சொல்லுங்கள் என்றான், பிறகு சொன்னேன். வந்து கொடுத்துவிட்டு சென்றான்.

***********



வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கதவை திறக்கங்காட்டியும் ஓடி வந்து காலை கட்டிக்கிட்டு ஷூவை கூட அவுக்க விடமாட்டான், தூக்கி கொஞ்ச நேரம் விளையாண்டு விட்டு கீழே விட்டால் தான் பேசாமல் இருக்கிறான், அதுமாதிரி தூங்கும் பொழுதும், சாப்பிடும் பொழுதும் அப்பா மேல லவ்வுன்னா லவ்வு அப்படி பொங்குது பயபுள்ளைக்கு, சாப்பிடும் பொழுது மடிமேல ஏறி நின்னு வாயை புடிச்சு நோண்டி கைய தட்டிவிட்டு ஒருவழி செஞ்சிடுவான், ஏதும் அவனுக்கு திங்க வத்தல் அல்லது அப்பளம் கொடுத்தா ஆசையா வாயில் கொண்டு வந்து ஊட்டி விடுவான், ஆவ்வ்வ்ன்னு கவ்வி அதை தின்னுட்டா கை விரலை திருப்பி திருப்பி பார்ப்பான் கையில் கானும் என்றதும் அவ்வ்வ்ன்னு அழ ஆம்பிச்சிடுவான் திரும்ப கையில் ஒரு பீஸ் வத்தலை கொடுக்கனும் சரி நாம தின்னாதானே அழுவுறான்னு திங்காம சும்மாச்சுக்கும் திங்கிற மாதிரி ஆக்டிங் கொடுத்தா அதுக்கும் அழகை ....பாசக்கார பய உட்டுட்டு சாப்பிட மாட்டேங்கிறானேன்னு சொல்லிக்கிட்டு சாப்பிடுவேன்.

நைசா கப்போர்டை திறந்து வெச்சிட்டு அவனுக்கு வா வான்னு சைகை காட்டிட்டு வெளியில் வந்துடுவேன் பயபுள்ள போய் கிளி ஜோசியக்காரன் கிளிமாதிரி மடிச்சி வெச்சிருக்கும் டிரசை ஒன்னு ஒன்னா எடுத்து கீழே போட்டுவிட்டு அந்த ட்ரே காலியானதும் சமத்தா வந்துடுவான், அவன் அம்மா வந்து பார்த்துட்டு காச்சு மூச்சுன்னு கத்திக்கிட்டு இருக்கும் நாங்க சமத்தா சாஞ்சாடம்மா சாஞ்சாடு விளையாண்டுக்கிட்டு இருப்போம். இன்னும் கொஞ்சம் பெருசா ஆகவுட்டு கிச்சனுக்கு போய் அரிசியையும் உளுந்தையும் எப்படி மிக்ஸ் செய்யனும் என்று சொல்லிதரனும்.

Sunday, October 24, 2010

ஒரு பதிவரின் பேட்டி- பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!







டிஸ்கி1 : ஜிடாக்கில் வாசகர் கடிதம் அனுப்பி போட்டோ டூன்ஸ் போட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு பதிவு எழுத சொன்ன வாசகர் அப்துல்லாவுக்கு இந்த பதிவு.

(டேய் சாட்டில் அவர் சொன்னது வாசகர் கடிதம் என்றால் எவனும் தப்பிதவறி SMS அனுப்பினா என்னடா சொல்லுவ? ஹி ஹி அது வாசகர் அனுப்பிய தந்தின்னு சொல்லுவோமுல்ல)

*****************
டிஸ்கி: முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பேட்டியை படித்தபின்பு வரப்போகும் எதிர்பதிவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல...

கேள்வி: நீங்கள் பத்தாவதில் வாங்கிய மார்க் எத்தனை?
பதில்: யோவ் என்ன கேள்வி இது? பதிவரை பேட்டி எடுக்க வந்துட்டு மார்க் எத்தனை என்று
எல்லாம் கேட்டுக்கிட்டு..

கேள்வி: டென்சன் ஆகாதீங்க 10வதில் வாங்கிய மார்க்கை வெச்சிதான் நீங்க லோக்கலா, STDயா?இல்ல ISDயான்னு முடிவு செய்வோம்...ப்ளீஸ் பதில் சொல்லுங்க.
பதில்: பத்தாவதுல ஜஸ்ட் பாஸ், 12வதுல பெயில்...

கேள்வி: ஆஹா அப்ப நீங்க படு லோக்கலாக இருப்பீங்கபோலயிருக்கே...
நீங்க ஏதும் மெடல் வாங்கியிருக்கீங்களா?
பதில்: ஆங் போன முறை நடந்த ஒலிம்பிக்கில் கோல்ட் மெடலும் இந்த முறை நடந்த காமன்வெல்த்தில் 5 கோல்ட் மெடலும் வாங்கியிருக்கேன்...நல்லா கேட்கிறய்யா கேள்வி.

கேள்வி: இல்ல சார் உங்களுக்கு தெரியாமலே உங்களுக்குள் திறமை இருந்திருக்கும் அதை யூஸ் செஞ்சு ஏதும் வாங்கியிருப்பிங்க யோசிச்சி பாருங்க...
பதில்: ஆங் இப்ப நினைவு வருது...5 வது படிக்கும் பொழுது என் கூட படிச்ச பொண்ணு குண்டு கவிதா அது என்னை போடா கருப்பாண்டின்னு சொல்லிட்டுன்னு அதை அடி அடின்னு அடிச்சு கீழ தள்ளி போட்டு கும்மு கும்முன்னு கும்மி கன்னத்தில் கடிச்சி வெச்சிட்டேன்.அதுக்காக எங்க கிளாஸ் சார் ராம் என்னை அடி அடின்னு அடிச்சு என் சிலேட்டில் இனி நான் யாரிடமும் சண்டை போட மாட்டேன் என்று எழுதி அதுல ஒரு சணல் கட்டி என் கழுத்தில் மாட்டி கிளாஸ் ரூமுக்கு வெளியில் நிக்க வெச்சாரு...அல்லாரும் ரொம்ப பெருமையா பார்த்துக்கிட்டு போனாங்க.


கேள்வி: நீங்க மெடல் வாங்கிய கதை போதும், ஏதும் கப்பு வாங்கியிருக்கீங்களா? பதில்: எழுதிய எல்லா செமஸ்டரிலும் கப்பு வாங்காம இருந்ததே இல்ல, ஆங்கிலத்தில் கப்பு கன்பார்ம்...

கேள்வி: என்னது ஆங்கிலத்தில் கப்பு வாங்குனீங்களா? அப்படி கப்பு வாங்கிய நீங்களா, ஒரு வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்கிறீர்கள்? எப்படி இந்த மாற்றம்? எப்படி முடிந்தது?
பதில்: என்னய்யா இது எல்லாம் ஒரு மேட்டரா? முன்னாடி எல்லாம் அவிங்க இங்கிலீஸில் பேசினா நான் அங்கிருந்து நைசா ஓடிவிடுவேன்... பார்த்தேன் எவ்வளோ நாள்தான் ஓடுவதுன்னு திருப்பி இங்கிலீஸில் பேச ஆரம்பிச்சேன், நான் பேசுற இங்கிலீஸை பார்த்து அவன் அவன் கல்ல கண்ட நாய் மாதிரி ஓட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

கேள்வி: உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்கள் பற்றி?
பதில்: *$#@#@#%%$^**^&^^$%$$##

கேள்வி: என்ன சார் இப்படி திட்டுறீங்க...
பதில்:பேட்டி எடுக்கவே ஆள் இல்லாம என்னை நானே பேட்டி எடுத்துக்கிட்டு இருக்கேன் இப்ப வந்து வாசகர் கடிதம் அது இதுன்னுக்கிட்டு...

Monday, October 11, 2010

இது வேற ஆட்டோகிராப்!


நம்ம பயபுள்ளைங்க எதுல ஒத்துமையா இருக்குதோ இல்லீயோ ஒரு விசயத்துல இல்ல ஒன்னுக்கு விசயத்தில் ஒத்துமையா இருப்பாய்ங்க... ஸ்கூலுக்கு போகும் பொழுது தலையில் புத்தகமட்டைய மாட்டிக்கிட்டு எவனாவது ரோட்டு ஓரமா ஒன்னுக்கு அடிக்க ஆரம்பிச்சா எல்லோரும் பக்கத்துல பக்கத்துல நின்னுக்கிட்டு சொய்ங்ங்ங்ங்ன்னு பம்பு செட்டை திறந்துவிட்டு விடுவானுங்க...

அப்படி ஒருநாள் ஸ்கூலுக்கு போகும் பொழுது ஆரம்பிச்ச விளையாட்டுதான் ஒன்னுக்கு அடிக்கும் பொழுது நம்ம பேரை எழுதுவது...இந்த விளையாட்டும் படிப்படியா டெவலப் ஆனதுன்னு நினனக்கிறேன்... சும்மா ஒன்னுக்கு சொய்ங்ங்ன்னு அடிக்காம அதுல வட்டம் போடுவது, அலைகள் போடுவது, அப்புறம் எவன் முக்கி முக்கி ரொம்ப தூரம் ஒன்னுக்கு அடிக்கிறான் என்ற விளையாட்டுகளின் அடுத்த கட்டமாகதான் இந்த பேர் எழுதும் விளையாட்டு வந்துச்சு.


இந்த விளையாட்டு ஆரம்பச்சதிலிருந்து தண்ணிய நிறையா குடிச்சிட்டு ஒன்னுக்கு போகாம அடக்கி வெச்சிக்கிட்டு ஊட்டுக்கு போகும் பொழுது பேர் எழுத ஆரம்பிப்போம். இதுலயும் நான் ஜெயிக்க முடிஞ்சது இல்ல... ஏன்னா சரவணவேல் என்கிற பேரை எழுத ஆரம்பிச்சி "ண" வில் ரெண்டு சுழி முடிக்கங்காட்டியும் டேங் காலி ஆகிடும் முக்கி முக்கி அடிச்சாலும் "ண" வை தாண்ட முடிஞ்சது இல்ல. அப்புறம் பேரை சுருக்கி சரவணன் என்றும் முயற்சி செய்து பார்த்தேன் சுழி போடும் பொழுதே டேங் காலி ஆகிடும்...இதுல எப்பவும் ராமு தான் ஜெயிப்பான். எந்த பிரச்சினையும் இல்ல வெறும் கோடுதான் "மு" வுக்கு மட்டும் கொஞ்சம் கஷ்டப்படனும் ஆனா சித்திரமும் கைபழக்கம் என்பதுபோல் பழக பழக் வந்துவிடும்.


இதுல முக்கியமா ஒவ்வொரு எழுத்து எழுதி முடிச்சதும் தம் கட்டி பம்பு செட்டை நிறுத்தி நகர்ந்து நின்னுதான் அடுத்த எழுத்த எழுத ஆரம்பிக்கனும் இல்லாட்டி பேர் எழுதும் பொழுது எல்லா எழுத்தும் ஜாயிண்ட் ஆயிடும். அதும் நம்ப பேரை எழுதும் பொழுது "ன்"க்கு புள்ளி வைக்க தம் கட்டி "ன"வுக்கு மேல சரியா குறி பார்த்து புள்ளி வைக்கனும். இது எல்லாம் சரியா வராதுன்னு பேரை இங்கிலீஸில் எழுதலாம் என்று முடிவு செஞ்சு என் பேரை சுருக்கி SVEL ஆக்கிய பிறகுதான் போட்டியில் ஈசியா ஜெயிக்க முடிஞ்சுது. சில சமயம் பேரு எழுதும் பொழுது ஓவரா ஆட்டி பக்கதுல இருக்கவன் மேல எல்லாம் பட்டு விடும்... சண்டையில் கிழியாத சட்டை எங்கே கிடைக்கும் என்பது மாதிரி போட்டின்னு வந்துட்டா இது எல்லாம் சகஜம் என்று போய்க்கிட்டே இருக்கனும்.


அப்புறம் ஒன் டேவை 20 20 ஆக்கியது போல அப்புறம் போட்டிய வேற மாதிரி மாத்தினோம்... மண் சுவத்துல எவன் போர்சா அடிச்சி செங்கல் தெரியவைக்கிறான் என்று போட்டி வைக்க ஆரம்பிச்சோம்... போற வழியில் இருக்கும் மண்சுவத்து வீட்டு சந்தில் நின்னு சொய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு அடிச்சு யாரு பெருசா செங்கல் தெரிய வைக்கிறாங்கன்னு நடக்கும் போட்டிய ஒரு பத்து நாள் கூட நடத்த முடியாம போச்சு...வீட்டுக்கு சொந்தகாரன் பார்த்து கம்பு எடுத்து அடிக்க வந்ததில் ராமு கீழே விழுத்து முட்டி பேர்ந்து போச்சு அதிலிருந்து அந்த விளையாட்டு நிறுத்தப்பட்டுவிட்டது.


அப்புறம் செடியில் இருக்கும் பழுத்த இலைய குறிபார்த்து அடிப்பது, பாஸா பெயிலா பூ மேல குறிபார்த்து அடிப்பதுன்னு பலவகையில் இந்த விளையாட்டு டெவலப் ஆனது. சில சமயம் முக்கி முக்கி அடிக்கிறோம் என்ற விளையாட்டில் அந்த பக்கம் போற ஆளுங்க மேல பட்டு திட்டுவாங்கியதும் உண்டு.அப்புறம் குழிப்பறிச்சு அதுல அடிச்சு குட்டி குட்டி குளம் ஏற்படுத்தி அப்பவே நாங்க முன்னோடியா இருந்திருக்கோம் என்று நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))

Wednesday, September 22, 2010

கல்மாடி ஸ்பெசல் போட்டோ டூன்ஸ் 22-9-2010

மேலே இருக்கும் படம் கொசுறு!


போட்டி நடக்கபோற மாதிரியே பில்டப் கொடுக்கிறாரு பாரேன்!
கோட்டுல பாக்கெட்டை இனிமே கொஞ்சம் பெருசா வைக்க சொல்லனும்!

இதேதான் வேணுமா? தீப்பந்தம் எல்லாம் வெச்சிக்கமுடியாதா?
பில்டிங்கும் ஸ்ட்ராங்கு இல்ல! பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கு இல்ல!
அடுத்த பாலம் விழும் பொழுது நாய் ஒன்னுக்கு அடிச்சதால் பில்லர் கரைஞ்சு போய் விழுந்துசுன்னு நெக்ஸ்ட் டைம் சொல்லிடலாம்...





Sunday, September 19, 2010

ஹல்லோஓஓஓ பிரதர் மார்க் இருக்காரா?

முன்குறிப்பு:

ஒருபடத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் கேண்டினில் உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க, வடிவேலு ரூட் விடும் பொண்ணு வந்ததும், வடிவேலு போனை எடுத்து ஹலோ துபாயா? பிரதர் மார்க் இருக்காரா? என்னது நீதான் பேசுறீயா? ஹேய் How r u man?why r u crying யா?லீவ் இட்! பீ ஹேப்பி! கூல் டவுன் கூல் டவுன்! என்று சொல்லிட்டு போனை வெச்சதும் என்னடான்னு பிரபுதேவா கேட்ப்பார். அதுக்கு வடிவேலு சொல்லுவார் ஒன்னுமில்லை துபாயில் இருந்து என்னோட பிரதர் மார்க் பேசினான், அவனுக்கு துபாயில் 20 பெட்ரோல் கிணறு இருக்கு,டோட்டலா பயர் ஆயிட்டாம். ஆப்ட்ரால் 20 கோடிதான் லாஸ்ப்பா! அதுக்கு போய் சின்ன குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு இருக்கான். HEY MONEY COME TODAY GO TOMMOROW YA !இவ்வளோ பெரிய கோடிஸ்வரன் வீட்டில் பிறந்துட்டு இதுக்கு போய் அழலாமா 20 கோடிங்கிறது டிப்ஸ் கொடுக்கும் காசு என்றதும் அருகில் இருக்கும் பிரபுதேவா அப்படியே கிராமத்தில் கியுவில் நின்று ரேசனில் வாங்கிய மண்ணென்னெய் கீழே கொட்டியதும் டேய் அஞ்சுக்கும் பத்துக்கும் கொட்டு அடிச்சிஆடி பாடி எவ்வளோ கஷ்டப்பட்டு சம்மாரிச்ச காசுடா என்று இந்த எண்ணெய் இருந்தால் தான் டா எங்க ஊட்டுல அடுப்பு எரியும் என்று அடிச்சிக்கிட்டு அழும் வடிவேலுவை நினைச்சி பார்ப்பார்...அதுமாதிரி...இங்க நீங்க யாரை வேண்டும் என்றாலும் மனசுக்குள் நினைச்சிக்குங்க... (இதுக்கு பேருதான் வாசகருக்கு கொடுக்கும் சுதந்திரம்)


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க் இந்த மாத கலா கபோதி சிற்றிதழ் இன்னும் வரவில்லை ya ! ரெண்டு நாள் ஆச்சு எப்பொழும் ஒவ்வொரு மாசமும் 3 தேதிக்குள் வந்துடும்! ஆனா இந்த மாசம் தேதி 5 ஆவுது, என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. போன் செஞ்சும் கேட்டுவிட்டேன்,போன வாரமே அனுப்பிட்டோம் என்று சொல்லுறாங்க!, போஸ்ட் மேனை புடிக்கதான் வெயிட்டிங், அதுல ஸ்பானீஸ் மொழி சிறுகதைகளை மொழிபெயர்த்து போடுவாங்க பாரு சான்சே இல்ல, அதுக்காகதான் அந்த சிற்றிதழுக்கு 20,000 ஆண்டு சந்தா கட்டியிருக்கேன் என்றால் பார்த்துக்கேயன். என்னது சிற்றிதழுக்கு 20,000மாவா? அட நீ வேற 20,000 என்பது எங்க ஊட்டுல ஒரு நாளைக்கு நாங்க வாங்கும் புக்கோட மதிப்பு yaa!.


பதிவர் ஆகும் முன்பு:


மச்சி டேய் இந்த வாரம் குமுதம் பார்த்தியா? அதுல நடு பக்கத்தில் போட்டு இருக்கான் பாரு ஒரு போட்டோ,அவ்வளோ அருமையா இருக்கு மச்சி, குமுதம் வாங்குவதே அந்த நடுபக்க மேட்டருக்குதான் ங்கொயாலே கொடுத்தகாசு வேஸ்டா போகல.


**********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! இந்த உயிர்மை, மணல்வீடு, உயிர் எழுத்து,மீட்சி, அன்னம் விடு தூது, ழ, மணிக்கொடி, எழுத்து இவை எல்லாம்நான் விரும்பி படிக்கும் சிற்றிதழ்கள், இதுல என்ன பிரச்சினைன்னா முன்னாடி வந்துக்கிட்டு இருந்த ஃ, அமீபா,காலக்குறி எல்லாம் இப்ப வருவது இல்ல அதுல வரும் சிறுகதை, கவிதையை படிக்க எத்தனை லட்சம் வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.திரும்பி இவை எல்லாத்தையும் அச்சில் பார்க்க முடியுமான்னு ஏக்கமா இருக்கு. மீதி இருக்கும் சிற்றிதழ்களையாவது காக்கவேண்டும். எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து இந்த வார இதழ்கள்,ஜன ரஞ்சக பத்திரிக்கைகள் அட்டைப்படத்தை கூட பார்த்தது இல்லை.


பதிவர் ஆகும் முன்பு:


மச்சி நம்ம மாதவன் புக் சர்க்குலேசன் ஆரம்பிச்சிருக்கான் டா, போனவாரம் வந்த ராணி,முத்தாரம்,குமுதம்,ஆனந்தவிகடனை எல்லாம் இந்த வாரம் கொடுப்பான், ஒவ்வொரு புத்தகத்துத்தையும் ரெண்டு நாள் வெச்சிக்கலாம். நமக்கு என்னா அதில் வரும் சினிமா மேட்டரையும், கிசுகிசுவையும் படிக்க அரை நாள் போதுமே.அதுனால படிச்சி முடிச்சிட்டு உடனே கொடுத்து விடுவேன்..மாசம் 30 ரூபாய் தான்.


*********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! இரண்டுநாள் லீவு போட்டு விட்டு பெங்களூரில் இருந்து சென்னையில் நடக்கும் புத்தககண்காட்சிக்கு சென்றேன் இந்த முறைவாங்கிய இலக்கிய நாவல்கள், 1. ஜெயமோகனின் கொற்றவை2. ஜே.டி. குரூஸின் ஆழி சூழ் உலகு3. சாரு நிவேதிதாவின் ராசலீலா4. கோணங்கியின் பிதிரா5. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்6. ஜே. டி. குரூஸின் கொற்கை7. *100.சுந்தரராமசாமி கதை கட்டுரை முழுத் தொகுப்பு ரஷ்யாவில் ஒரு உலக புத்தக கண்காட்சி இந்த மாசம் கடைசியில் இருக்காம் போய் வர டிக்கெட் புக் செஞ்சிட்டேன்.


பதிவர் ஆகும் முன்பு:


மச்சி ரெண்டு நாளைக்கு முன்னாடி சரோஜாதேவியும் மருதத்தையும் பிரண்டு ஒருத்தன் கொடுத்தான் என்னாமா இருந்துச்சு தெரியுமா?அதுமாதிரி எழுத சரோஜாதேவியை தவிர வேற யாராலையும் முடியாதுடா...நோட்டுக்குள் மறைச்சி மறைச்சி எடுத்து வரங்காட்டியும் ரொம்பகஷ்டமா போச்சுடா மாமா!பழவந்தாங்கலில் ஒரு பழய புத்தக கடையில் இந்த புக்கை எல்லாம் எடை போட்டு விக்கிறானாம் ரொம்ப சல்லிசா வாங்கலாமாம் பிரண்டு ஒருத்தன் சொன்னான் இந்த வாரம் போகனும்...


**********


பதிவர் ஆன பிறகு எழுதும் கவிதை!

ஹேய் பிரதர் மார்க்! ஒரு கவிதை எழுதியிருக்கேன் கேளேன்!

அகிரா,பிரஸ்ஸோன் மற்றும்
மொராக்கோ சகோதரர்களிடம்
சிக்கியிராத
தஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவை
ஒளிப்படச் சுருளில்
பொதிந்துவைக்க
குளிர் விரவிய
தெருக்களில் மிதந்தபடி
விரல்சுடும் சிகரெட்டை
காற்றில் சுண்டி விடுகிறான்
பொறிகளை
சிதறவிட்டு
மெல்ல அணைகிறது
கங்கு.


பதிவர் ஆகும் முன்பு எழுதிய கவிதை:

கவிதை தலைப்பு: ஸ்டிக்கர் பொட்டு!

நிலவில்
ஒட்டியிருக்கும்
நட்ச்சத்திரம்!


கவிதை தலைப்பு: அம்மாவாசை

இன்று என்
தேவதை
வீட்டை விட்டு
வெளியே வரவில்லை!

*********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! கடந்த வாரம் பார்த்த குவாண்டினின் டெரோண்டோவின் Death Proof படம் பார்த்தேன் அதுல வரும் பெண்கள் எனக்கு கிறக்கத்தையளிக்கின்றனர். மழை பெய்யும் மது விடுதியில் விடாது குடித்தபடி, சதா பேசியபடி, சிரித்தபடி, உரக்க கெட்ட வார்த்தைகளை சிதறிவிட்டபடி, சக பெண்களை பிட்ச் யாக்கிபடி, லாப் நடனமாடி, காரில் புணர்ந்து, மூக்கு முட்டக் குடித்து, சைக்கோ ஒருவனின் கார் மோதி சிதறிப்போகும் பெண்கள் என் ஒழுங்கீனங்கள் பற்றிய குற்ற உணர்வுகளை மழை நீர்ப்போல் கழுவிச் சென்றுவிடுகின்றனர். வரும் விடுமுறையில் குவாண்டி டெரோண்டோ, கிம்கிடுக் ஆகியோரின் படங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்த்து முடிச்சிடனும்.


பதிவர் ஆகும் முன்பு:


நண்பன்: மச்சி உலகப்படம்ன்னா என்ன டா? போனவாரம் நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டரில் பார்த்தோமேடா? சிராக்கோன்னு ஒரு படம் அதுதான் உலகப்படம், பிட்டே போடனும் என்ற அவசியம் இல்லாம படம் முழுக்க பிட்டாவே இருந்துச்சு பார்த்தியா? அதுதான். இந்த வாரம் ஏதோ பிரெஞ் மொழி படம் ஒன்னு ரிலீஸ் ஆவபோவுதாம் என் பிரண்டு அங்கிருக்கும் ஆப்புரேட்டருக்கு தெரிஞ்சவன் செம கில்மாவா இருக்காம் முதல் ஷோவே போய்விடனும்.


************


பதிவர் ஆன பிறகு:


ஹல்லோ பிரதர் மார்க், ஆக்ஸ்வலி நான் தமிழ்படம் பார்ப்பதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு, பிரண்டு ஒருத்தன்ரொம்ப தொல்லை செஞ்சானேன்னு யாவரும் நலம் படம் பார்த்தேன் பிசி ஸ்ரீராம் கேமிரா ஆங்கிள் சரியில்லை சுத்த வேஸ்ட், அதுமாதிரி மணிரத்தனம் என்றுயாரோ ஒருத்தர் ரொம்ப நல்லா தமிழ்படம் எல்லாம் எடுப்பார் என்று அவரோட பட DVDயை கொடுத்தான் படமா அது லைட்டிங் சரியில்லை...


பதிவர் ஆகும் முன்பு:


பதிவரின் நண்பர்( டேய் அக்காவோட நிச்சயத்துக்கு போட்டோ எடுடான்னு சொல்லி கேமிராவை கொடுத்தா பரிசம் போட்டவங்க தலையையும் காணும், உட்காந்திருக்கும் அக்கா மூஞ்சும் தெரியவில்லை யாரைடா போக்கஸ் செஞ்ச? இல்ல உன்கிட்ட போய் கொடுத்தேன் பாரு என்னை சொல்லனும்)


*********


பதிவர் ஆன பிறகு:


ஹேய் பிரதர் மார்க்! கடந்தவாரங்களில் என் எழுத்தை பாரட்டி வந்த கடிதங்களை எல்லாம் உனக்கு படிச்சிக்காட்டினேன் நினைவு இருக்கா?... ஆப்பிரிக்காவில் இருந்து உராங் உட்டான் எழுதிய கடிதம், அண்டார்ட்டிக்காவிலிருந்து பாண்டா எழுதிய கடிதம். இந்த வரிசையில் துபாயிலிருந்து குசும்பன் எழுதிய இந்த "வரம் கடிதம்..." உங்கள் எழுத்தை படித்தால் தான் காலையில் எனக்கு கக்காவே போவுது, மஜாமல்லிகா சைட்டுக்கு அடுத்து அடிக்கடி பார்க்கும் பிளாக் உங்களுடையதுதான்" சென்னை வரும் பொழுது உங்களை ஒரு முறையாவது தொட்டு பார்த்துவிடனும் என்று என் ஆசை, உங்க எழுத்தை Phd, செய்யனும்என்று நினைக்கிறேன் அது முடியாவிட்டால் உங்க எழுத்தை பிரிண்ட் எடுத்து அட்லீஸ்ட் பச்சடி செய்தாவது தினம் தினம் கொஞ்சம் சாப்பிடுவேன் இது என் தாய்மொழி மீது சத்தியம். விரைவில் உங்களுக்கு துபாய் ஷேக் சாயித் ரோட்டில் ஒரு கட் அவுட்வெச்சி அதுக்கு பாலாபிஷேகம் செய்யலாம் என்று இருக்கிறேன். உலகிலேயே முதன் முறையாக பத்து கோடி ஹிட் வாங்கிய பதிவர் ஒருவருக்கு கட் அவுட் வெச்சாங்க என்ற பெருமை உங்களுக்கு கிடைப்பதை விட அதை வெச்சவன் என்ற பெருமையை எனக்கு நீங்கள் தரவேண்டும். அதுக்கு உங்கள் அனுமதி வேண்டும்.


பதிவர் ஆகும் முன்பு: வாரமலர் அன்புடன் அந்தரங்கத்துக்கு எழுதிய கடிதம்:


அன்புள்ள வாரமலர் அந்தரங்கம் அக்கா,


நான் எதிர் வீட்டில் இருக்கும் ராணி என்ற பெண்ணை 2 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறேன், போன வாரம் நாங்கள் இருவரும் தனிமையில் இருக்கும் பொழுது முத்தம் கொடுத்துவிட்டேன், பின்பு எப்பொழுதும் அதே நினைப்பாக இருக்கிறது, படிக்க முடியவில்லை தூங்க முடியவில்லைஆனால் இரண்டு நாட்களாக என்னிடம் பேசமாட்டேங்கிறாள் செத்தே விடலாம் போல இருக்கிறது.வீட்டில் யாரும் இல்லாத பொழுதுதான் பேச முடியும் என்கிறாள், தினம் அவளிடம் பேசனும் இல்லை என்றால் எனக்கு பைத்திய்யம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. அதனால் எங்கயாவது அவளோடு ஓடிவிடலாமா? 11 வது படிச்சிக்கிட்டு இருக்கேன் எனக்கு கலெக்டர் வேலை கிடைக்குமா? அரசு சலுகை ஏதும் கிடைக்குமா?

Wednesday, September 15, 2010

கருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார்

கருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார் வழங்கும் குறும்பட விமர்சனம்.

ஆதி எடுக்கும் குறும்படங்களில் இருக்கும் ஈயடிச்சாங் காப்பிகளை பத்தி எழுதினாலும் எழுதினேன், ஏகப்பட்ட பாராட்டு கடிதங்கள் வந்து குவிஞ்சிக்கிட்டே இருக்கிறது. இனி அவனுங்களை படம் எடுக்க விடாம எப்படியாவது தடுத்து விடுங்க உங்களுக்கு கோயில் கட்டுகிறோம் என்ற அளவுக்கு நண்பர்கள் சொல்கிறார்கள்.

இனி இந்த புது குறும்படம் கடிதத்தில் வரும் ஈயடிச்சாகாப்பிகளை பட்டியலிட்டு பார்ப்போம்.
1)முதல் சீன் கார்க்கி கட்டை சுவத்து மேல் உட்காந்திருப்பது போல் காட்டப்படுகிறது, இது பாய்ஸ் படத்தை நக்கல் அடிச்சு சந்தானம் & சொட்டை மனோகர் நடித்த லொள்ளு சபாவில் சொட்டை மனோகர் ஒரு சீனில் தனியாக சுவத்து மேல் உட்காந்துக்கிட்டு நண்பர்களுக்காக காத்திருப்பார் அதை அப்படியே உருவி அதே மாதிரி ஹீரோவையும் புடிச்சு சுவத்து மேல உட்காரவெச்சிருக்கார் இந்த குறும்படத்தின் டைரக்டர் ஆதி.
2)அடுத்த சீனில் இலைகளை காட்டுகிறார் இது அப்படியே பாரதிராஜா படத்தில் ஹீரோவை காட்டும் முன்பே மண்வாசனையோடு கிராமத்தை காட்ட எப்பொழுதும் இலைகளை செடி, கொடி, கோழிகளை காட்டுவார் அது அப்படியே இங்கு காப்பி அடிக்கப்பட்டு இருக்கிறது.
3)இதுக்கு அடுத்த சீனில் ஹீரோ ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறார், இந்த சீன் கிங்காங் படத்தில் கிங்காங்கை கூண்டில் அடைச்சு எடுத்துக்கிட்டு போகும் பொழுது ஹீரோயின் வருகிறாளா என்று கிங்காங் கூண்டு கம்பி வழியே அப்படியே பாவமாக பார்க்கும் கிங்காங். அந்த சீனை அப்படியே எடுத்திருக்கிறார். ஹீரோவும் இதுக்காக பலமுறை ஹோம் ஒர்க் செய்து கிங்காங் படத்தை பார்த்திருப்பார் போல அப்படியே அச்சு அசலாக கிங்காங் எக்ஸ்பிரசனை ஹீரோவின் முகத்தில் பார்க்கமுடிகிறது, பார்க்கும் நமக்கு படத்தில் இருப்பது கார்க்கியா அல்லது கிங்காங்கான்னு குழப்பம் வரும் அளவுக்கு அப்பட்டமான காப்பி நடிப்பிலும்.

4) அடுத்த சீனில் மழையையும் மழை பெய்ததால் இலையில் இருந்து சொட்டும் மழைத்துளியையும் காட்டுகிறார், காலங்காலமாக படத்தில் ரேப் நடக்கும் பொழுது மான் மேல் பாயும் புலி போட்டோவையும் பிறகு ரேப் முடிந்த பிறகு இரத்த களறியான மானையும் காட்டுவார்கள், இதே ஹீரோ ஹீரோயின் சம்மதத்துடன் ஜல்சா செய்கிறார் என்றால் மழை பெய்யும் சீனை காட்டுவார்கள் மேட்டர் முடிந்த பிறகு ஓலை குடிசையின் மேல் இருந்து தண்ணீர் சொட்டுவதை காட்டுவார்கள்.அப்படி அந்த சீனை அப்படியே உருவியிருக்கிறார் ஆதி.
5)அடுத்து அடுத்து வரும் சீன்களில் மோட்டுவலை,தாவங்கட்டையை எல்லாம் சொறிந்தும், கட்டிலில் உருண்டு புரண்டு ஹீரோ பேப்பரில் ஏதோ கிறுக்குவது போல் காட்டுகிறார் இதை எல்லாம் காலம் காலமாக ஹீரோ ஹீரோயினுக்கு கவிதை எழுதி கொடுக்கும் காட்சிகளில் இந்த சீன்களை பார்த்திருக்கிறோம். அதே மாதிரி ஹீரோ பரிட்சை அட்டையில் பேப்பரை வைத்து கவிதை எழுதுவது என்று இன்னும் 80களின் படப்பாதிப்பிலிருந்தே வெளியே வரவில்லை. கற்பனை வறட்சி.
6)இந்த சீனில் ஹீரோ கண்ணாடிக்கு முன்னாடி நின்னு தலையை சரி செய்வது போல் காட்டுகிறார், இது எந்த படத்திலிருந்து உருவியது என்று உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியது இல்ல,தனுஷ் ,சோனியா அகர்வால் நடிச்ச துள்ளுவதோ இளமை படத்திலிருந்து இதை பார்த்துவருகிறோம். 7) கண்ணாடிக்கு முன்னாடி நிற்கும்பொழுது போட்டு இருந்தது ஒரு ட்ரஸ் பிறகு கடிதத்தை எடுத்து பார்க்கும் பொழுது வேற ஒரு ட்ரஸ், ஹீரோயின் தலை சீவுவதை எல்லாம் காட்டிவிட்டு டிரஸ் மாத்துவதை மட்டும் காட்டாமல் போகும் எல்லா தமிழ் சினிமாக்களில் இருந்து இந்த சீன் உருவப்பட்டுயிருக்கிறது. இதே ஆங்கிலப்படங்களில் என்றால் சர்வசாதாரனமாக பேசிக்கிட்டே ட்ரஸ் மாத்தும் சீனை காட்டியிருப்பார்கள், இன்னும் இவர்கள் இந்த குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவில்லை.


8)ஹீரோவின் நண்பராக சென் வருகிறார், ஒரு சூப்பர் பிகருக்கு சப்பை பிகர் ஃபிரண்டாக காட்டுவது தமிழ்பட மரபு மட்டும் இல்லை ரியல்டைமிலும் பல சூப்பர் பிகருங்க ஒரு அட்டு பிகரை ஃபிரண்டாக வெச்சிருப்பாங்க அதுபோல் இங்கு மொக்கை ஹீரோவுக்கு, சூப்பர் ஃபிரண்ட்டாக சென் வருகிறார் இங்கு மட்டும் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆதி.

********************************
ஜக்கி குமார்
முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன் ஏன்னா கடைசிவரை யாரும் படிப்பது இல்லை.என்ன சொல்லப்போறேன் என்றால் ஈயடிச்சாங் காப்பி என்பது வேறு, படத்தின் பாதிப்பில் நம்ம நேட்டிவிட்டியை கலந்து கொடுப்பது என்பது வேறு...இதே ஜக்கி குமாரும் ஈயடிச்சாங்காப்பி அடிச்சிருக்கிறேன் நான் ஒன்னும் மகான் அல்ல.ஆனால் தமிழ் பிளாக்கில் புதிய முயற்சியாக ஆதி கொடுப்பதை பாராட்டியே ஆகவேண்டும், குறும்படம் என்றாலே நல்ல ஹீரோ, நல்ல கேமிரா நல்ல இசை எல்லாம் இருக்கவேண்டும் என்ற மரபை உடைத்தவர், திராபை சவுண்ட், மொக்கை ஹீரோ, மொக்கை கதை என்று இவைகளை வைத்தும் படம் என்று ஒன்னுஎடுத்து அதுக்கு குறும்படம் என்றும் பெயர் வைக்கமுடியும் என்று தில்லாக நிரூபித்தவர் நம்ம ஆதி. அதுக்காகவே நாம் ஆதியை பாராட்டிதான் ஆகவேண்டும், இதுவரை குறும்படமே பார்க்காதவங்களையும் பார்க்கவைத்த பெருமையும் இனி அவர்கள் குறும்படம் என்றாலே சொன்னவன் வாயிலேயே குத்தும் அளவுக்கு கொலைவெறியையும் ஏற்படுத்திய பெருமை ஆதியையே சேரும்.

இப்ப அமெரிக்கா காரன் வெஸ்டர்ன் டாய்லட்டில் உட்காந்து போகிறான் நாமும் வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்காந்துதானே போகிறோம் இது காப்பியில்லையா? அதை குறை சொல்கிறோமா? வித்தியாசமாக செய்கிறோம் என்று அதுமேல ஏறி உட்காந்துக்கிட்டா போகிறோம்?

சீனாக்காரன் நூடுல்ஸை வாயால் சாப்பிடுகிறான், அதே நூடுல்ஸை நாமும் வாயல்தான் சாப்பிடுகிறோம் இது காப்பியில்லையா?

திரும்ப திரும்ப சொல்கிறேன் ஈயடிச்சாங் காப்பி என்பது வேறு பில்டர் காப்பி என்பது வேறு.

அப்புறம் இவ்வளோ தூரம் படிச்சிட்டிங்க பார்த்து எதாவது செஞ்சிட்டு போங்க மக்கா! என்னது இது எல்லாம் ஒரு குறும்படம் இதுக்கு எல்லாம் ஒரு விமர்சனம் என்று துப்பிட்டுதான் போவீங்களா கருமம் அதையாவது செஞ்சிட்டு போங்க .எத்தனை நாள் கழிச்சி படிச்சாலும் துப்பிட்டு போக மறக்காதீங்க மக்கா!
இந்த குறும்படத்தை பார்த்து தொலைய http://www.aathi-thamira.com/2010/09/blog-post_14.html

Wednesday, August 25, 2010

என்ன கொடுமை சரவணன்?

நேற்று நண்பரின் வீட்டுக்கு சென்று இருந்தோம். அங்கிருந்து நானும் நண்பரும் கடைக்கு சென்று விட்டு திரும்ப போய் காரை ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது, கார் கீயை லாக்கில் இருந்தே எடுக்க முடியவில்லை, பார்க்கிங் செய்திருந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை, ரொம்ப நேரம் காத்திருந்து பிறகு ஒரு சேட்டன் வந்தார் அவரிடம் கெஞ்சி கூத்தாடி அண்ணே கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கொஞ்சம் என்னன்னு பாருங்க என்றேன். அவரும் உள்ளே உட்காந்து சீட்டை கொஞ்சம் முன்னாடி இழுத்து அட்ஜஸ் செய்துவிட்டு ஸ்டார்ட் செய்தார், கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அண்ணே என்னன்னே பிரச்சினை என்ன செஞ்சிங்க என்றேன்...ஒன்னுமில்லை சீட்டை அட்ஜஸ் செஞ்சேன் என்று சொல்லிட்டு போய்விட்டார்...



அஜித் படத்தில் கருணாஸ் ஆட்டோவில் ஏம்பா போன முறை என் ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செஞ்ச அதுல ஒரு நியாயம் இருந்துச்சு... இந்த முறை பக்கத்து ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செய்யுறீயேன்னு சொல்லும் காமெடி நினைவுக்கு வந்தது.



****************

நண்பர்களை விடுமுறையில் சந்தித்த பொழுது குடும்பத்தோடு வந்திருந்த நண்பர் வீட்டுக்கு கிளம்பினார், அவரோட இரண்டு வயது பையனை கூப்பிட்டு
மாமாவுக்கு டாட்டா சொல்லிட்டு வா போகலாம் என்றார். அவனும் டாட்டா காட்டுவது போல் கையை ஆட்டினான், அவர் ஒழுங்கா வாயை திறந்து டாட்டா சொல்லிட்டு வா என்றார், அவன் உடனே ஆஆஆஆன்ன்னு வையை திறந்து வெச்சிக்கிட்டு டாட்டா காட்டுவது போல் கையை ஆட்டினான்.. எல்லோரும் சிரித்ததும் வெட்கம் வந்து ஓடிவிட்டான்.


************

சுதந்திர தினத்து அன்று மக்கள் டீவியில் ஒரு நிகழ்ச்சியில் சுதந்திரம் கிடைத்த பொழுது காந்தி எங்கிருந்தார் என்று கேள்வி பொது மக்கள், மாணவர்களிடம் கேட்கப்பட்டது. எங்கிருந்தார் என்று தெரியவில்லை என்று அல்லது எதாவது ஒரு இடத்தின் பெயரை சொல்லியிருந்தாலவது பரவாயில்லை, செத்து போய்விட்டார் என்று சொன்னார்கள் பலர் :((

அதுமாதிரி தேசியகீதத்தை எழுதியவர் யார் என்று கேட்டார்கள் தமிழில் சாலமன் பாப்பையா என்றார்கள்... அடங்கொன்னியா:(

*************

அப்ப அப்ப நடக்கும் நண்பர்களோட சந்திப்புகள், பதிவர் சந்திப்புகள் மூலம் விடுமுறை தினம் உற்சாகமாக போகும், ரமதான் மாதம் என்றால் நண்பர்கள் கொடுக்கும் இப்தார் விருந்துகளினால் மிகவும் உற்சாகமாக போவும், நோம்பு ஆரம்பித்த முதல் வாரமே பதிவர்களுக்கு ஆசிப் அண்ணாச்சி வீட்டில் புகாரி பிரியாணியோடு இப்தார் அண்ணாச்சி & கோவால் கொடுக்கப்பட்டது. நம்ம ஊரில் நோம்பு நேரத்தில் பள்ளி வாசலில் கொடுக்கும் கஞ்சி போன்ற சுவையோடு இங்கே ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது. அதுபோல் நாளை (27 -8) அன்று அண்ணாச்சி தலைவராக இருக்கும் அமீரக தமிழ் மன்றம் சார்பாக ஒரு இப்தார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இப்படி வாரம் வாரம் இப்தார் கொடுப்பதுக்கு பதில் இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்:))


Monday, August 16, 2010

கார்ட்டூன் 16-8-2010





உங்கள் குடும்பம் எந்த கட்சி மாதிரியானது என்று கண்டுபிடிப்பது எப்படி?


மகன்களால் பிரச்சினையா அப்ப தி.மு.க.



குடும்பஸ்தன் என்று ரேசன் கார்ட் வாங்கிட்டுஅதில் உங்க பேர் மட்டும் இருந்ததால் அங்கீகாரம் கேன்சல் ஆயிட்டா?அப்ப ம.தி.மு.க



குடும்பத்தில் யாரும் உங்க பேச்சையும் மதிப்பது இல்லை குடும்பத்தலைவர் என்ற டம்மி போஸ்டிங்கில் இருக்கீங்களா? அப்ப காங்கிரஸ்

பையனுக்கு எங்கயாவது எப்படியாவது எவன் காலிலாவது விழுந்து அட்மிசன் போட அலையிறீங்களா அப்ப உங்க குடும்பம் பா,ம.க



அடிக்கடி உங்க வீட்டு அம்மணி ரெஸ்ட் எடுக்க அம்மா வீட்டுக்கு போறாங்களா? அப்ப அ.தி.மு.க.



கூட்டணி போட ஆள் கிடைக்காம தனி ஆவர்த்தனம் பாடும் பேச்சிலர் ஆளா? அப்ப நீங்க பிஜேபி



பேருக்கு நீங்கதான் தலைவர், மனைவியும் மச்சானும் தான் உங்களின் ரிமோட் என்றால் அப்ப உங்க குடும்பம் தே.மு.தி.க



கோச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் வந்த பிறகு குடும்பம் நடத்த முடியாம திரும்ப எப்படா வீட்டில் வந்து கூப்பிடுவாங்க தனிகுடும்பத்தை கலைச்சிடலாம் என்று காத்திருந்தா சரத் கட்சி



வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்ல ஊர்ல ஒரு பய நம்ம பேச்ச மதிக்க மாட்டேங்கிறான் என்ற நிலையில் இருந்தா கம்யூனிஸ்ட்

Wednesday, August 4, 2010

மீண்டும் பத்திரிக்கையில் பெயர் மாற்ற மோசடி...

இந்த முறை ஏமாற்றப்பட்டது நான்:((

இதுக்கு முடிவு கட்ட போவது யார்?:((

ஐஸ்வர்யா ராய் அடித்த கல்யாணபத்திரிக்கையில் என் பெயருக்கு பதிலாக அபிஷேக் பட்ச்சன் பெயர் வந்த பொழுது எவ்வளோ மனசு கஷ்டமா இருந்தது தெரியுமா? இதை விவேக் ஓபராய் கூப்பிட்டு சொன்ன பொழுதுதான் தெரியவந்தது. நீங்கள் ஆசை ஆசையாக சைட் அடித்த பிகர் கல்யாண பத்திரிக்கையில் வேற ஒருவர் பெயர் வரும் பொழுது வரும் வலி..அதை அனுபவித்தால் தான் உங்களுக்கு புரியும், அட்லீஸ்ட் பத்திரிக்கையில் இந்த பிகரை குசும்பனிடம் இருந்து ஆட்டைய போட்டேன் என்று ஒருவரி சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை. ஒன்னுமே சொல்லாமல் என்னமோ சொந்தமாக தேத்தி கரெக்ட் செஞ்சு கல்யாணம் செய்வது போல் பத்திரிக்கை அடித்தது மட்டும் அல்லாமல், என் பெயரை வேறு இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். இத்தனைக்கும் அபிசேக் பட்சன் அடிக்கடி பேசுபவர்தான், அப்பொழுதுதாவது சொல்லியிருக்கலாம் உங்க பிகரை ஆட்டைய போட போறேன் என்று.

வேதனையோடு, தாடியோடு
குசும்பன்

பின்னூட்டங்கள்

1 to 25 பின்னூட்டங்கள்: கடுமையான கண்டனங்கள்

26) பல்வெட்டு said: இதுவரை யாரும் எந்த கல்யாணம் ஆன பிகரையும் சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் ஊசி போடும் நர்ஸை சைட் அடிச்சது இல்லையா? இதுவரை யாரும் கல்யாணம் ஆன நடிகையை ரசித்தது இல்லையா? அவர்கள் மட்டுமே இதுக்கு கண்டனம் தெரிவிக்கலாம்!!!


*********
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஊதாப்பூ said: முதல்லயே அபிஷேக் பச்சன் உங்ககிட்ட சொல்லியிருந்தா பரவாயில்லை. விவேக் கூப்பிட்டு சொன்ன பிறகுதான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அப்புறம் நல்லா மாட்டிகிட்ட பிறகு ஆமாம்னு ஒத்துக்கறாரு அபிஷேக். சே, என்ன மனுஷன். என்னுடைய கடுமையான கண்டனங்கள்


***********
கண்ணா K - அபிஷேக் பச்சன் படங்களை புறக்கணிப்போம்.....

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஜிக்கி said : இல்லை கண்ணா, புறக்கணிப்பெல்லாம் பெரிய விஷயம். அபிஷேக் உணர்ந்து திருந்திவிட்டாலே போதும்.


*************

ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஏன், எல்லாரும் கடுமையான கண்டனங்கள்னே சொல்றாங்க. அப்ப லேசான, மந்தனமான கண்டனங்கள் எல்லாம்கூட இருக்கா?

************
கண்ணா K - அபிஷேக் பச்சன் said...
அண்ணே, அந்த இதழில் நன்றி -குசும்பன் என வரவேண்டியது,மிஸ் ஆகி விட்டது.அடுத்த இத்ழில் வரும்.நான் ஆசிரியரிடம் பேசி விடுகிறேன்.விடுபட்டமைக்கு வருந்துகிறேன்.அதே சமயம் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்க வேண்டாம்.நீங்கள் உரிமையாக ஃபோன் பண்ணியே கேட்கலாம்.


************
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - டாக்டர் க்ரூனோ said : அபிஷேக், நீங்கள் இதற்குமுன் திருமணம் செய்திருக்கிறீர்களா? அப்போது எல்லாம் அறிவித்துவிட்டுத்தான் செய்தீர்களா? சரி, குசும்பன் பெயரே பத்திரிகையில் இருந்தாலும், இது தெரியாமல் அவர் வேறு யாரையாவது திருமணம் செய்ய இருந்து அந்தப் பத்திரிகையிலும், குசும்பன் பெயர் போட்டே அடித்துவிட்டால், ஒரே சமயத்தில் இரண்டு இடத்தில் திருமணம் என்றால் குசும்பனை என்ன நினைத்துக் கொள்வார்கள். இது குறித்து நான் முன்னர் எழுதிய பதிவின் சுட்டி .................. இது இவ்வளவு வருடங்கள் சைட் அடித்த உங்களுக்குத் தெரியாது என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது.


************
குசும்பன் kusumbu - அலோ இரண்டாப்பு தமிழ்வாத்தியார் சுப்பையா இருக்காங்களா?

ஆமாம் சுப்பையாதான் பேசுறேன்

அய்யா நான் மும்பையில் இருந்து அபிசேக் பேசுறேன்.. நன்றி குசும்பன் என்று வரவேண்டிய இடத்தில் என் பெயர் வந்துட்டுய்யா..

அதை ஏன்யா என்கிட்ட சொல்ற...

ஆசிரியர் கிட்ட சொல்லிடுறேன் என்று பொதுவுல சொல்லிட்டேன் அதை காப்பாத்தனுமுல்ல ஐய்யா!


************
நடந்து முடிந்த பத்திரிக்கை பிரச்சினையும் என் தரப்பும்....
நேற்றிலிருந்து கண்டனத்தையும், காண்டத்தையும் தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி. தலைவர் பொய் தமிழன் போல் நான் எலி அல்ல, சும்மா சும்மா திரும்ப அதே கமெண்டை காப்பி செய்து ஒவ்வொரு கமெண்டுக்கும் வேற வேற கலர் கொடுத்து வந்தது 50 பின்னூட்டம் என்றால் அதுக்கு 100 பின்னூட்டம் போட்டு விளக்கம்சொல்ல.. ஆகவே தனியா பதிவு போடுறேன்.

நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன்... நான் காப்பி அடிச்சு பாஸ் செய்தவன் என்று, அதுக்காக அப்படியே புக்கில் இருப்பதை போல் படம் 1.1ல் இருப்பது போல் என்று எழுதியது இல்லை, அப்படி எழுதியிருந்தால் அதுக்கு பெயர் ஈ அடிச்சான் காப்பி, நானே சொந்தமாக படம் வரைந்து பாகம் குறிச்சிருக்கிறேன். என் எழுத்தில் வ.சே.சுவும், மா.பொ.சியும் கால் ஆட்டிக்கிட்டு படுத்திருப்பதை உத்து உத்து பார்த்து படிப்பவர்களுக்கு தெரியும்.

கல்யாண பத்திரிக்கை பத்தி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கும் அபிசேக் ..ஒரு வார்த்தை அண்ணே உங்க சைட்டை நான் ஆட்டைய போடுகிறேன் என்று சொல்லியிருந்தா நான் வேண்டாம் என்றா சொல்லபோறேன்.

பலர் நான் மன்னிப்பேன் ..என்று என் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்லியிருக்கிறார்கள் . நான் ஒன்றும் சர்ச்சில் பாவ மன்னிப்பு வழங்கும் பாதர் அல்ல. என் குழந்தைக்கு பாதர்.

சிலர் சொல்கிறார்கள் இது பிரபலம் ஆக செய்யும் ட்ரண்ட் என்று, எல்லோருக்கும் சொல்கிறேன்..பிரபலம் என்றால் என்ன தெரியுமா? முக்காடு போட்டு ஜெயிலுக்கு அழைச்சிக்கிட்டு போனாலும் ஓடி வந்து போட்டோ எடுக்கிறானுங்க பாரு அப்ப சொல்லலாம் நீங்க பிரபலம் என்று.


மூனு மாதத்துக்கு ஒருமுறை டாய்ய்ய் நீதானே குசும்பன் என்று கெட்டப்பை மாத்தினாலும் சரியா கண்டுபிடிச்சு கொடுத்த கடனை கேட்கிறார்கள் அதை தவிர வேறு யாருக்கும் என்னை தெரிவது இல்லை.

ஒரு அட்டுபிகரை கரெக்ட் செய்ய குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, டீ அதோடு மட்டும் இல்லாமல் டூரிங்டாக்கிஸ் அழைச்சிக்கிட்டு போவது இடைவேளை நேரத்தில் முறுக்கு, கடலை மிட்டாய் என்று வாங்கி கொடுப்பது ஒருவாரம் போவதோடு செலவும் ஆகிறது.

இதே ஒரு உலகபிகரை கரெக்ட் செய்ய கப்பசினோ, பஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரிம் முதல் ஸ்டார்பக்ஸ் காப்பி வரை செலவு செய்யவேண்டியிருக்கு, மாயாஜால், சத்யம் என்று அழைச்சிக்கிட்டு செல்லும் பொழுது பர்ஸ் காலியாகிடுது, இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு கரெக்ட் செய்வதால் என்ன பலன்? அட பார்றா சூப்பர் பிகருன்னு நம் கூட வரும்பொழுது நாலு பேரு திரும்பி பார்த்தா நமக்கு ஒரு மெதப்பா இருக்கு. இதை தவிர இதில் சாதிக்க ஒன்னும் இல்ல. ஆனா ரொம்ப சுளுவா டக்குபுக்குன்னு யாரோ ஆட்டைய போட்டுவிட்டு நன்றின்னு என் பெயர் கூட போடாம இருப்பது எவ்வளோ கஷ்டமாக இருக்கு தெரியுமா?

இனி இந்த விசயத்தை பற்றி பேசவோ, பாட்டாக பாடவோ விரும்பவில்லை.
நன்றி வணக்கம்! இன்றுடன் இப்படம் கடைசி!

பீ ஹேப்பி!

Wednesday, July 21, 2010

40 அடிக்கு மேல ஊஊஊஊலலல்லா!!


(மிஸ்கின்: கேமிராவை பார்க்காம மேலே பார்த்து லாலாலால்லால்லான்னு வாய் அசைங்க)

அக்பர் என்ன செஞ்சாராம் குளிர் அதிகமான ஒரு மாதத்தில் அரண்மனைக்கு அருகில் இருக்கும் குளத்தில் ஒரு இரவு முழுவதும் யார் கழுத்தளவு தண்ணியில் நிற்கிறானோ அவனுக்கு 1000 பொற்காசுகள் என்று சொன்னாராம். குளத்து தண்ணி ப்ரிஜில் இருந்து எடுத்த தீபிகாபடுகோன் மாதிரி ஜில்ல்ல்ல்லுன்னு இருக்குமாம். பல பேர் போட்டிக்கு வந்துட்டு தோத்து போய்ட்டானுங்க. ஒரே ஒருவன் மட்டும் ஜெயிச்சான், அவனை கூப்பிட்டு பரிசு கொடுக்க போகும் பொழுது நக்கீரர் மாதிரி ஒரு அமைச்சர் குபீர் என்று நடுவில் புகுந்து, நீ இரவு முழுவதும் எப்படி குளிரில் தாக்குபிடிச்ச என்ன செஞ்சே என்று கேட்டாராம், அவனும் அதோ அரண்மனை கோபுரம் மேல் எரியும் விளக்கு ஆடுவதை அசைவதையும் பார்த்துக்கிட்டே இருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, குளிரும் தெரியவில்லை என்றானாம். உடனே அமைச்சர் மன்னா அந்த விளக்கில் இருந்து வரும் சூட்டினை பெற்றே இவன் இரவு முழுவது குளத்தில் தங்கியிருக்கான் என்று சொல்லி பரிசு கொடுக்காம அடிச்சிட்டார்.


கொஞ்ச நாள் கழிச்சு பீர்பால் வீட்டுக்கு அக்பரை விருந்துக்கு அழைச்சிக்கிட்டு போனார்.காலையில் போனவங்களுக்கு நல்லா பசி எடுக்க இஞ்சி கசாயம் கொடுத்துட்டு வேற எதுவும் கொடுக்காமல் விட்டுவிட்டார், நேரம் ஆகிட்டே போகுது சாப்பாடு வருகிறமாதிரி தெரியவே இல்ல, அக்பர் ரொம்ப நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு சாப்பாடு போடுய்யா ரொம்ப பசிக்குதுன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டார்...இவரும் வரும் வரும் என்றார் ரொம்ப நேரம் கழிச்சும் சாப்பாடு வரவில்லை. என்னது இவ்வளோ நேரம் ஆவுது வாங்க மன்னா போய் சமையல் எவ்வளோ முடிஞ்சிருக்கு என்று பார்ப்போம் என்றார் பீர்பால், பின்புறம் போனா மரத்து உச்சி கிளையில் ஒரு பானை கட்டி தொங்குது,கீழே கொஞ்சமா விறகு எரியுது. என்னய்யா இதுன்னா? இதுல எப்படிய்யா சமைக்க முடியும் என்று கேட்டதுக்கு. ஏன் மன்னா ஒருவன் தூரத்தில் இருக்கு விளக்கின் மூலம் சூட்டை பெற்று ஒருவன் குளிரில் தாக்குபிடிக்கமுடியும் என்றால் இதுவும் சாத்தியம் தானே என்றார்...தவறை உணர்ந்தார் அக்பர். குளத்தில் நின்ற ஆளை கூப்பிட்டு 1000 பொற்காசுகளையும் கொடுத்தார்.


ரைட்டு இப்ப எதுக்கு இந்த நீதி கதை எங்களுக்கு எல்லாம் தெரியாது பாருன்னு சொல்றீங்களா?

நானும் அமீரும் நீத்துவும் ஒரு செம துள்ளல் ஆட்டம் போட்டோம் என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொன்னாருப்பா ஒருத்தர். இப்ப என்ன சொல்லியிருக்கிறார் என்றால்

//40 அடி உயரத் தில் ஒரு மரத்தின் மேல் பலகை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதாவது, ஒரு 'ஒய்' வடிவ மரத் தில்... இலை, கிளைகளை எல்லாம் வெட்டிவிட்டு அதை ஒரு மரத் தூண் மாதிரி செதுக்கி இருந் தார்கள். //அங்க ஆடவேண்டும் என்று சொல்லிட்டாங்க:)

ஆடியது எங்கே?? 40 உயர மரத்தின் மேலே...

நீத்து & அமீர் ஆடியது எங்கே? 40 அடிக்கு கீழே...

அவ்வளோதான்பா இந்த கதை:))
(படம் உதவி: ஆனந்தவிகடன்)

Monday, July 19, 2010

பொண்ணுங்கன்னா இப்படிதான்!

முன்குறிப்பு: இந்த பதிவுவை எழுத காரணமாக இருந்த நண்பர் சஞ்சய்க்கு நன்றி! ஊக்கமும் தைரியமும் கொடுத்த நண்பர் ஆதிக்கு நன்றி, அப்ப அப்ப பல ஆலோசனைகள் சொன்ன நண்பர் அப்துல்லாவுக்கும் நன்றி. வரப்போகும் திட்டுகளையும் பாராட்டுகளையும்(வந்தாதானே?:)) இவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன். மூவரும் சரி சமமாக பிரிச்சுக்குங்கோ. (பேரை போல்ட் செஞ்சு எல்லாம் போட்டு இருக்கேன் குறிபார்த்து தாக்குங்கப்பா)

இவர் எழுதிய இந்த பதிவுக்கு எதிர் பதிவுதான் இது.

1)யாராவது டைம் கேட்டா, வேண்டுமென்றே என்னிடம் வந்து டைம் கேட்கிறான் பாரு என்று சொல்லுவாங்க, (ஆனா வேறு யாரும் டைம் கேட்கமாட்டாங்களான்னு உள்ளுக்குள் நினைப்பாங்க)

2)எந்த புத்தகத்தோட அட்டையில் அழகான பையன் போட்டோ இருந்தாலும், அதை அப்படியே கிழிச்சு புள்ளையோட கக்கா துடைக்க யூஸ் செய்வாங்க.

3)விதவிதமான காய்கறிக்களை அப்படி இப்படி பேசி கூடை நிறைய நொப்பி கொண்டு வருவாங்க, ஒன்னுத்தையும் சமைக்க மாட்டாங்க.

4)எங்கயாவது 9 மணிக்கு போகணும் என்றால் முதல் நாள் 9 மணியில் இருந்து எந்த ட்ரஸ் போடனும் என்ற ஆராய்சியில் இறங்கிடுவாங்க. 8.55 வரை முடிவு செய்ய மாட்டாங்க.

5)பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று மொட்டை மாடிக்கு போனா, செல்போன் பேட்டரி லோ ஆகி கத்தும்வரை கீழே வரமாட்டாங்க. வந்ததும் என்ன மொபைல் இது ஒரு 3 மணி நேரம் கூட தொடர்ந்து பேச முடியல என்று திட்டுவார்கள்.

6)பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும் இவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம்.

7)டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும் பொண்ணோட தோடு, நெக்லஸ், புடவை கலரை நோட் செஞ்சுக்கிட்டு மேட்சிங்கா இருக்குல்ல இதுமாதிரி ஒரு செட் வாங்கனும் என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

8)எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா அதை தவிர மீதி எல்லாத்தையும் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு அடுப்பில் சட்டிய வெச்ச பிறகு நினைப்பு வந்து நம்மை கடைக்கு அனுப்புவாங்க.

9)திடிர் என்று புது புது வெரைட்டியா சமைக்க ஆரம்பிப்பாங்க எல்லாம் நாலு வேலைக்குதான், திரும்பவும் போன வாரம் வெச்ச சாம்மாரை பிரிஜில் இருந்து எடுத்து சூடு செஞ்சு கொடுப்பாங்க.

10)குழந்தைக்கு ஹோம் வெர்க் சொல்லி கொடுக்க சொன்னா எல்லா சீரியலும் முடிஞ்ச பிறகு பத்து மணிக்கு நம்மையும் தூங்க விடாம, குழந்தையையும் தூங்க விடாம சொல்லிக்கொடுக்கிறேன் என்று படுத்தி எடுப்பாங்க.

11)அழகா இருக்கும் அசின் கூட இவுங்களுக்கு அட்டுபிகருதான், இதெல்லாம் ஒரு மூஞ்சி இதை எல்லாம் எப்படிதான் ரசிக்கிறார்களோ என்று திட்டிக்கிட்டே, அசின் வரும் சேனலை மாத்துவாங்க.

12) நாம என்னைக்காவது கிரிக்கெட் மேட்ச் அல்லதும் புட் பால் மேட்ச் பைனல் இருக்குன்னு சீக்கிரம் வந்து டீவி முன்னாடி உட்காந்தா, பாருங்க புள்ளை சாப்பிடமாட்டேங்கிறான் கார்ட்டூன் நெட் ஒர்க் வையுங்க என்று சொல்லி குழந்தைக்கு ரொம்ப பொறுப்பா சாப்பாடு ஊட்டுவாங்க.

13) சாம்பார் வைப்பதுக்கே அம்மாவுக்கு போன் போட்டு டவுட் கேட்டு போன் பில்லை ஏத்துவாங்க, ஆபிஸ் வேலையா ஒரு போன் செஞ்சாபோன் பில் நம்மால் ஏறுவது போல் முனுமுனுப்பாங்க.

14) ஒன்னுவிட்ட சித்தி பொண்ணு கல்யாணம் என்றால் ஒருவாரம் லீவ் போட சொல்லியாவது அழைச்சிக்கிட்டு போய்டுவாங்க, நம்ம தம்பி கல்யாணத்துக்கு LKG படிக்கும் பையனுக்குஸ்கூல் லீவ் எடுத்தா பிரச்சினை என்று ஒரு நாள் லீவ் எடுப்பாங்க.

15) அம்மா வீட்டுக்கு போன பிறகு ஒரு நாளைக்கு 10 வேளை மிஸ்டுகால் கொடுத்து, சாப்பிட்டீங்களா, காப்பி குடிச்சிங்களா, அப்படி இப்படின்னு அன்பு மழை பொழிவாங்க, வீட்டில் இருக்கும் பொழுது தலைவலிக்குது காப்பி கொடுன்னு கேட்டா முறைப்பாங்க இப்பதான் அடுப்படியில் இருந்து வந்து உட்காந்தேன் பொறுக்காதேன்னு திட்டுவாங்க.

பின் குறிப்பு: குறைந்தது இதில் 15 விசயமாவது ஒத்துவரவில்லை என்றால் அவுங்களை நல்ல டாக்டரிடம் அழைச்சிக்கிட்டு போவது நல்லது.

பங்கு பிரிக்க முடியாத படி வரும் எதிர்பதிவுகளை அல்லது திட்டுகளை கீழே இருப்பவர்களுக்கும் பகிர்ந்து அளித்துவிடவும்.

(நன்றி தலைப்பில் உதவி - ஆசிப் அண்ணாச்சி)

நன்றி முதல் பாயிண்ட் : பால பாரதி

நன்றி 2 வது பாயிண்ட்: பரிசல்

நன்றி 3 வது பாயிண்ட்: வடகரைவேலன்

நன்றி 4வது பாயிண்ட் : சென்ஷி

நன்றி 5வது பாயிண்ட்: அணில் குட்டி கவிதா

நன்றி 6வது பாயிண்ட்: வெண்பூ & ஜீவ்ஸ்

நன்றி 7 வது பாயிண்ட்: கென் & அய்யனார்

நன்றி 8 வது பாயிண்ட்: சுந்தர்ஜி

நன்றி 9வது பாயிண்ட்: கேவிஆர் ராஜா

நன்றி 10வது பாயிண்ட்: மயில் விஜி & ராம்

நன்றி 11 வது பாயிண்ட் : கண்ணா & சோசப்பு

நன்றி 12 வது பாயிண்ட்: மின்னுது மின்னல் & கார்க்கி

நன்றி 13 வது பாயிண்ட் சந்தோஷ் & மங்களூர் சிவா

நன்றி 14 வது & 15 வது: வலையுலக அனைத்து ஆண் நண்பர்களும்

Sunday, July 18, 2010

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் -ஒரு நினைவு குறிப்பு


http://www.vinavu.com/2010/07/17/uma-shankar-ias/
நேற்று வினவின் இந்த போஸ்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன், தமிழ்மண நட்சத்திர வாரத்தில் கூட உமாசங்கரை பற்றி எழுதவேண்டும் என்று இருந்தேன் ஆனால் முடியாமல் போய்விட்டது.

"உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டார் என்று தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கையும், விசாரணையும் ஏவிவிடப்பட்டது. தற்போது இதற்கு எதிராக உமாசங்கர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். அதில்தான் அரசு கேபிள் டி.விக்காக தான் பரிந்துரைத்த விடயங்களுக்காக பழி வாங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்." இதுதான் உமா சங்கருக்கு பிரச்சினை.

உமாசங்கர் அதிமுக ஆட்சியின் சுடுகாட்டு கொட்டகை ஊழலை அம்பலபடுத்தியவர், இதற்காகவே பந்தாடப்பட்டவர். பின் ஆட்சி மாறியதும் கலைஞர் தன் சொந்த ஊரான திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமித்து அழகு பார்த்தார், அதுவரை வேறு ஏதோ டம்மி போஸ்டிங்கில் இருந்தார். இவரை போல் எங்கள் ஊர் மக்கள் இன்று வரை ஒரு கலெக்டரை பார்த்தது இல்லை.


திருவாரூர் அருகே இருக்கும் குடவாசல் தாலுக்காவை சேர்ந்த திப்பணம்பேட்டை தான் சொந்த ஊர். எங்கள் பகுதி மக்களிடம்
தன்னோட செயல்பாடுகளால் மனதில் நீங்கா இடம்பிடித்தார். திருவாரூரில் ஒரு படம் 10 நாள் ஓடியது என்றால் அது மற்ற ஊர்களில் சூப்பர் டூப்பர் ஹிட் என்று அர்த்தம், அங்கிருக்கும் தைலமை, நடேஷ்,சோழா தியேட்டர்களில் அப்பொழுது அவர்கள் படம் ரிலீஸ் ஆகும் பொழுது வைத்ததுதான் விலை, அதில் ஒரு வசதி எல்லா டிக்கெட்டும் ஒரே விலைதான். எங்கு இடம் கிடைக்குதோ அங்கு சென்று உட்காந்துவிடலாம். விலை அதிகமாக விற்பதை நிறுத்த சொல்லி பார்த்தார் உமாசங்கர், தியேட்டர் அதிபர்கள் கேட்கவில்லை, ஒரு நாள் விஜயகாந்த் படம் ரிலீஸ் என்று நினைக்கிறேன்.. மாறுவேடத்தில் சென்றார் டிக்கெட் வாங்கிய கையோடு விலை அதிகம் விற்ற குற்றத்துக்காக தைலமை தியேட்டரை பூட்டி சீல் வைத்தார். திருவாரூரே அதிர்ந்தது புதுபடம் ரிலீஸின் பொழுது தியேட்டரை சீல் வைப்பதா என்றும் அனைத்து தியேட்டர் நிர்வாகிகளும் சேர்ந்து தியேட்டரை மூடிவிட்டு ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள், உமாசங்கரை மாற்று என்று. அடுத்த சில தினங்களில் உமா சங்கரை மாத்த கூடாது என்று சங்கருக்கு ஆதரவாக போஸ்டர்கள்.


குடவாசல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் குடவாசலில் வசிப்பவர் அங்கேயே அவருடைய கிளினிக் வெச்சிருந்தார், அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு கையெழுத்து போட போவதோடு சரி, யாரையும் கவனிப்பது இல்லை புகார் சென்றது உமா சங்கருக்கு, ஒரு நாள் காலை அய்யா வயிறு வலி என்று கைலி துண்டோடு அரசு ஆஸ்பத்திரியில் நின்றார், டாக்டர் அங்கு இல்லை, டாக்டர் வீட்டுக்கு சென்று கூப்பிட்டார் டாக்டர் இங்கேயே வைத்தியம் பார்த்துக்க சொன்னார், அதே இடத்தில் டாக்டருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழக்கிவிட்டு முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் சென்றார் கைலி துண்டோடு வந்திருந்த உமாசங்கர்.

இப்படி மாறுவேடத்தில் பல இடங்களுக்கு சென்று திருவாரூர் மக்களுக்கு பல நன்மைகள் செய்தார், திருவாரூர் மக்களுக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று வைக்கோலை ரோட்டில் காயப்போடுவது, போகும் வரும் பஸ் அதில் ஏறி போர் அடித்த மாதிரி ஆகிடும் ஆகவே அப்படி போடுவார்கள், பல பஸ்,லாரிகளில் வைக்கோல் சிக்கி பாதி வழியில் நின்று விடுவதாலும், அதனால் விபத்துகள் ஏற்பட்டதாலும் ரோட்டில் இனி அப்படி ஏதும் காயப்போடக்கூடாது என்று அப்படி போட்டால் அபராதம் என்று ரூல்ஸ் போட்டார். பெரும்பான்மையானோர் கேட்டார்கள். அது உமாசங்கர் என்ற ஒரு நல்லவர் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக.

உமாசங்கர் கலெக்ட்டராக இருந்த சமயம் திருவாரூர் பகுதியில் பல நல திட்டங்களை செய்தார் அவை அனைத்தும் முதல்வன் பட அர்ஜுன் செயல்பாடுகள் மாதிரியே இருக்கும்(படம் அப்பொழுது ரிலீஸ் ஆகவில்லை), கலெக்டருக்கு தனி அலுவலகம் வர ஏற்பாடு செய்ததும் அவர்தான் என்று நினைவு அதை முன் மாதிரியாக வைத்துதான் அனைத்து கலெக்ட்டர் அலுவலங்களும் மாறின. ஒவ்வொரு வாரமும் மக்கள் குறை கேட்கும் நாள், அடுத்த ஒருவாரத்துக்குள் அந்த குறை நிறைவேற்றப்படும். யாராலும் எளிதில் சந்திக்ககூடிய கலெக்டராக இருந்தார்.

12வது வகுப்பிலும் கல்லூரியிலும் என்றோ செத்துபோன போர்ட்டான், பேசிக் கம்பியூட்டர் பாட திட்டங்களை மாற்றனும் என்றும் கோரிக்கை வைத்தார். ஏழை மாணவர்களுக்கு மேற்கல்வி படிக்க பல சலுகைகள் வாங்கி தந்தார். அன்றைய தேதியில் ஏதும் ஒரு குறை என்றால் உமாசங்கரிடம் மனு கொடுத்தால் போதும் அது நிறைவேறிவிடும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். திருவாரூரில் இருந்து மாற்றல் ஆக கூடாது என்று மக்கள் சார்பாக பல போராட்டங்கள் நடந்தது.

உமாசங்கருக்கு அன்று அ.தி.மு.க ஊழலுக்கு பதில் இன்று தி.மு.கவின் ஊழல்,ஆட்சிதான் வேற ஆனால் நல்ல மனிதரும் ஊழலும் அப்படியேதான் இருக்கிறது.

எத்தனை தடைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டுவரவேண்டும்.

Tuesday, July 6, 2010

புனைவு ஸ்பெசல் கார்ட்டூன் 6-7-2010




திருவள்ளுவர்: நான் தான் பெரியவன்!
பாரதியார்: இல்லை இல்லை நான் தான் பெரியவன்!
திருவள்ளூவர்: இதுவரை என் திருக்குறளை வைத்து 5 புனைவு வந்திருக்கு, 4 பதிவுகளுக்கு தலைப்பாக ஆகியிருக்கு..
பாரதியார்: முடிவில் நீதி சொல்ல என் பாட்டுதான் உபயோகம் ஆகியிருக்கு...
டிஸ்கி: பிளாக்கரில் பின்னூட்டங்கள் தெரியமாட்டேங்குது, பிளாக்கரை பத்தி ஒரு புனைவு எழுதிட வேண்டியதுதான்.

Wednesday, June 30, 2010

பதிவர்கள் போட்டோ டூன்ஸ்

ஆஆஆஆஆஆஆதி ( பெயர்காரணம் விளங்கியது)& அப்துல்லா
சஞ்சய் & சோசப்பு
மங்களூர் சிவா, வெங்கி,வெயிலான், திரும்பவும் அதே கிராதகன் & பரிசல்


எல்லோரையும் அண்ணன் தங்கச்சியா நினைக்க சொன்னார் விவேகானந்தர், நம்ம பரிசல் அனைவரையும் வாசகரா நினைப்பார்.
வால்பையன் & மங்களூர் சிவா
வால்டர் வெற்றிவேல் விஜயகுமார் மாதிரியான கதிர் அண்ணா & நந்து

வெங்கி

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சார்லி முட்டை முட்டை முட்டை கோடு கோடு கோடுன்னு ஒரு நோட் முழுவது எழுதுவாரே அதுமாதிரி!

கார்க்கி & உள்ளே எந்த தோழின்னு தெரியல