Wednesday, August 25, 2010

என்ன கொடுமை சரவணன்?

நேற்று நண்பரின் வீட்டுக்கு சென்று இருந்தோம். அங்கிருந்து நானும் நண்பரும் கடைக்கு சென்று விட்டு திரும்ப போய் காரை ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது, கார் கீயை லாக்கில் இருந்தே எடுக்க முடியவில்லை, பார்க்கிங் செய்திருந்த ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லை, ரொம்ப நேரம் காத்திருந்து பிறகு ஒரு சேட்டன் வந்தார் அவரிடம் கெஞ்சி கூத்தாடி அண்ணே கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கொஞ்சம் என்னன்னு பாருங்க என்றேன். அவரும் உள்ளே உட்காந்து சீட்டை கொஞ்சம் முன்னாடி இழுத்து அட்ஜஸ் செய்துவிட்டு ஸ்டார்ட் செய்தார், கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அண்ணே என்னன்னே பிரச்சினை என்ன செஞ்சிங்க என்றேன்...ஒன்னுமில்லை சீட்டை அட்ஜஸ் செஞ்சேன் என்று சொல்லிட்டு போய்விட்டார்...அஜித் படத்தில் கருணாஸ் ஆட்டோவில் ஏம்பா போன முறை என் ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செஞ்ச அதுல ஒரு நியாயம் இருந்துச்சு... இந்த முறை பக்கத்து ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செய்யுறீயேன்னு சொல்லும் காமெடி நினைவுக்கு வந்தது.****************

நண்பர்களை விடுமுறையில் சந்தித்த பொழுது குடும்பத்தோடு வந்திருந்த நண்பர் வீட்டுக்கு கிளம்பினார், அவரோட இரண்டு வயது பையனை கூப்பிட்டு
மாமாவுக்கு டாட்டா சொல்லிட்டு வா போகலாம் என்றார். அவனும் டாட்டா காட்டுவது போல் கையை ஆட்டினான், அவர் ஒழுங்கா வாயை திறந்து டாட்டா சொல்லிட்டு வா என்றார், அவன் உடனே ஆஆஆஆன்ன்னு வையை திறந்து வெச்சிக்கிட்டு டாட்டா காட்டுவது போல் கையை ஆட்டினான்.. எல்லோரும் சிரித்ததும் வெட்கம் வந்து ஓடிவிட்டான்.


************

சுதந்திர தினத்து அன்று மக்கள் டீவியில் ஒரு நிகழ்ச்சியில் சுதந்திரம் கிடைத்த பொழுது காந்தி எங்கிருந்தார் என்று கேள்வி பொது மக்கள், மாணவர்களிடம் கேட்கப்பட்டது. எங்கிருந்தார் என்று தெரியவில்லை என்று அல்லது எதாவது ஒரு இடத்தின் பெயரை சொல்லியிருந்தாலவது பரவாயில்லை, செத்து போய்விட்டார் என்று சொன்னார்கள் பலர் :((

அதுமாதிரி தேசியகீதத்தை எழுதியவர் யார் என்று கேட்டார்கள் தமிழில் சாலமன் பாப்பையா என்றார்கள்... அடங்கொன்னியா:(

*************

அப்ப அப்ப நடக்கும் நண்பர்களோட சந்திப்புகள், பதிவர் சந்திப்புகள் மூலம் விடுமுறை தினம் உற்சாகமாக போகும், ரமதான் மாதம் என்றால் நண்பர்கள் கொடுக்கும் இப்தார் விருந்துகளினால் மிகவும் உற்சாகமாக போவும், நோம்பு ஆரம்பித்த முதல் வாரமே பதிவர்களுக்கு ஆசிப் அண்ணாச்சி வீட்டில் புகாரி பிரியாணியோடு இப்தார் அண்ணாச்சி & கோவால் கொடுக்கப்பட்டது. நம்ம ஊரில் நோம்பு நேரத்தில் பள்ளி வாசலில் கொடுக்கும் கஞ்சி போன்ற சுவையோடு இங்கே ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது. அதுபோல் நாளை (27 -8) அன்று அண்ணாச்சி தலைவராக இருக்கும் அமீரக தமிழ் மன்றம் சார்பாக ஒரு இப்தார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இப்படி வாரம் வாரம் இப்தார் கொடுப்பதுக்கு பதில் இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்:))


29 comments:

said...

ரைட்டு தல...

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க குசும்பன் அண்ணே. இங்க சவுதியிலயும் நண்பர்கள் அக்பர், ஸ்டார்ஜன் புண்ணியத்துல இப்தார் விருந்து களைகட்டுது.

டெய்லி கொடுத்தா நல்லாத்தான் இருக்கும்.

said...

//அண்ணே என்னன்னே பிரச்சினை என்ன செஞ்சிங்க என்றேன்..//
ஸ்டீரிங் வீல் லாக் ஆகி இருந்திருக்கும். வண்டி புச்சா? :))

said...

அமீரகப் பதிவர்கள் கொண்டாட்டமாக இருக்கீங்க! இஃப்தார் மாதம் முழுதும் கிடைக்க வாழ்த்துக்கள்.

:)

ஸ்ரீ....

said...

// ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது, கார் கீயை லாக்கில் இருந்தே எடுக்க முடியவில்லை//

கார்க்'கீ 'ன்னாலே பிரச்சனதான்னு சொல்லுறீங்க.. புரியுது ..

said...

//ஒன்னுமில்லை சீட்டை அட்ஜஸ் செஞ்சேன் என்று சொல்லிட்டு போய்விட்டார்//

எப்புடி?

said...

//அஜித் படத்தில் கருணாஸ் ஆட்டோவில் ஏம்பா போன முறை என் ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செஞ்ச அதுல ஒரு நியாயம் இருந்துச்சு... இந்த முறை பக்கத்து ஆட்டோ கண்ணாடிய அட்ஜஸ் செய்யுறீயேன்னு சொல்லும் காமெடி நினைவுக்கு வந்தது//


இதே தான் எனக்கும்

said...

//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்//

நம்ம பள்ளில எப்பவும் கொடுக்கிறாங்க

said...

பிரசண்ட் சார்.

said...

//அண்ணே கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கொஞ்சம் என்னன்னு பாருங்க என்றேன்

//

அறுக்கத் தெரியாதவன் இடுப்புல ஐப்பத்தெட்டு கதிர்அருவாள்.

said...

//அவரோட இரண்டு வயது பையனை கூப்பிட்டுமாமாவுக்கு டாட்டா சொல்லிட்டு வா போகலாம் என்றார்

//

உனக்கு ரெண்டு வயசுல மாமாவும் தெரியாது, டாட்டாவும் தெரியாது.

said...

//சுதந்திர தினத்து அன்று மக்கள் டீவியில் ஒரு நிகழ்ச்சியில் சுதந்திரம் கிடைத்த பொழுது காந்தி எங்கிருந்தார் என்று கேள்வி பொது மக்கள், மாணவர்களிடம் கேட்கப்பட்டது.

//

இந்தியாவுல இருந்தாரு

said...

//அதுமாதிரி தேசியகீதத்தை எழுதியவர் யார் என்று கேட்டார்கள் தமிழில் சாலமன் பாப்பையா என்றார்கள்...

//
சரியாத்தான சொல்லிருக்காய்ங்க.ஆமா திருக்குறளையும் அவர்தான எழுதுனாரு???

said...

ஸ்டீரிங் வீல் லாக் தான் பிரச்னை தல. எனக்கு நெறைய முறை நடந்துருக்கு. ஸ்டீரிங்கை கொஞ்சம் ஆட்டி கீயை திருப்பினால் கீ ப்ரீ ஆயிடும். Best of luck for next time.

said...

//.. இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும் ..//

:-D)))

said...

//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்:))//

விட்டா வருசம் முழுவதும் ரம்ஜான் மாசமா மாத்த சொல்விங்க போலயே!
பாவங்க அவுங்க!

said...

:-)))))))))

said...

//. நம்ம ஊரில் நோம்பு நேரத்தில் பள்ளி வாசலில் கொடுக்கும் கஞ்சி போன்ற சுவையோடு இங்கே ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திருந்தார்கள் மிகவும் அருமையாக இருந்தது//

ஆமாம் பாஸ் ஆமாம் ! ஊர்ல இருந்தப்ப பக்கதுலயே மசூதியில போயி வாங்கி குடிச்ச ஞாபகத்திலயெ இங்கே இருக்கிற நம்ம ஆளுங்க அம்புட்டு பேர்கிட்டயும் கேட்டுட்டேன் இங்கே அப்படின்னா இன்னான்னு கேக்குறாங்க !

ஒரு வாளி அனுப்பிவுடுங்களேன்! :)

said...

:))

said...

:-)

உங்க தளத்துல பதிவிற்கு இணையாக பின்னூட்டமும் கவரும்.

முதலிடம், இப்ப வரையில் அப்துல்லா.

said...

//
Jack said...

ஸ்டீரிங் வீல் லாக் தான் பிரச்னை தல. எனக்கு நெறைய முறை நடந்துருக்கு. ஸ்டீரிங்கை கொஞ்சம் ஆட்டி கீயை திருப்பினால் கீ ப்ரீ ஆயிடும். Best of luck for next time.
//
This is not an issue or problem. It is a feature. The steering wheel will be locked if you put your key in and steer before igniting. This is to prevent theft.

To unlock it, steer while igniting with key.

said...

இலக்கிய பாதிப்பு ரொம்ப அதிகம்வோய்...

இது குசும்பன் பதிவுதானா?

Anonymous said...

ஸ்டியரிங் வீல் லேசா இடதும் வலதுமா திருப்பினா அன்லாக் ஆகும். இதெல்லாம் ட்ரைவிங்ல பாலபாடம். அதுக்குத்தான் ஒழுங்கா இன்ஸ்ட்ரக்டர் கிட்ட போய் ட்ரைவிங் படிக்கணும்னு சொல்றது.:)

said...

//இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்:)//

குசும்பா..இது ஓவரா தெரில...:))

said...

காந்திஜி சுதந்திரம் கிடைத்த தினம் கல்கத்தாவில் இருந்தார்...அப்துல்லா சொன்னது சரிதான் கல்கத்தா இந்தியாவில் தானே இருக்குது..

said...

பத்து நாளைக்கு ஒரு தடவை தான் எழுத நேரமிருக்கா உங்களுக்கு ?
"என்ன கொடுமை சரவணன்?"

said...

//
பா.ராஜாராம் said..
:-)

உங்க தளத்துல பதிவிற்கு இணையாக பின்னூட்டமும் கவரும்.
முதலிடம், இப்ப வரையில் அப்துல்லா.
//
இப்பவும் அப்துல்லா...

said...

/இரமதான் மாதம் முழுவதும் இப்தார் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லனும்//

இது தான் குசும்பரோட குசும்போ.

பகிட்ந்து கொண்டமைக்கு நன்றி

said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்