Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Wednesday, July 15, 2009

கொடுத்து வெச்சு இருக்கனும்!!!

இது நான் செஞ்ச அமிர்தம் (ரவா இட்லி) போட்டோ!
மனைவி வீட்டில் இல்லாத பொழுதுதாவது நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று உங்களுக்கு தோனுமா? அப்ப உங்களுக்குதான் இந்த பதிவு.



மனைவி எங்கேயும் என்னை விட்டு போவது இல்லை ஆனா அவுங்க அம்மா அப்பா தங்கச்சிக்கிட்ட மட்டும் போனில் பேச மொபைல் எடுத்துக்கிட்டு மாடிக்கு போவாங்க அந்த கொஞ்ச நேர கேப்தான் கிடைக்கும் என்று சொல்பவரா நீங்க? அப்ப உங்களுக்கு இந்த பதிவு மேட்ச் ஆவும்.



அவுங்க அம்மா வீட்டுக்கு போனில் பேச ஆரம்பிச்சா குறைஞ்சது ஒரு 2 மணி நேர கேப் உங்களுக்கு கிடைக்கும் அது போதும் சூப்பரா ரவா இட்லி செய்ய!



ரவா இட்லி செய்வது எப்படி?



இரண்டு டம்ளர் ரவாவை பொன் நிறமாக வறுக்கவும் கொஞ்சம் அசந்தாலும் ரவா நம்ம கலருக்கு வந்துடும் ஜாக்கிரதை! மனைவி இல்லாதப்ப ராவா மட்டும் தான் அடிக்க தெரியும் ரவா எல்லாம் வறுக்க தெரியாதுன்னா ஒன்னும் செய்யமுடியாது. உங்களை எல்லாம் உருட்டி உருட்டி அடிக்கனும்!



ஒரு கேரட்டை எடுத்து நைஸாக சிப்ஸ் கட்டரில் வைத்து சீவிக்கவும், ஒரு நாலு பச்சை மிளகாயை எடுத்து சின்னதாக வெட்டிக்கவும், கொஞ்சம் கொத்தமல்லி இலை, பீன்ஸ் ஒரு ரெண்டு பீன்ஸ் அதையும் சின்ன சின்னதாக வெட்டிக்கனும். (மெல்லிசாக என்பதைதான் சின்னதாகன்னு சொல்லி இருக்கேன்)



அடுப்பில் சட்டியை வைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, கடலைபருப்பு போட்டு வறுத்து பின் அதோடு வெட்டி வைத்த காய்கள் அனைத்தையும் போட்டு கொஞ்சம் வதக்கிக்கவும். பின் அது ஆறியதும் வறுத்துவெச்ச ரவாவோடு உப்பு போட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தயிர்(புளிக்காத தயிர்) சேர்த்து பிசையவும். பின் அதோடு ஒரு பாக்கெட் Eno கொட்டி பிசையவும்


இட்லிமாவு பதம் வந்ததும் தயிர் சேர்ப்பதை நிறுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும் ரவா ஊறி கொஞ்சம் கெட்டியாக இருக்கும் பின் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் தயிர் போட்டு குழைத்துவிட்டு இட்லி தட்டில் கொஞ்சம் நெய் ஊற்றி அதன் மேல் மாவை ஊற்றவும். வெந்ததும் எடுத்துவிடவும்.



அப்படியே சுட சுட சாப்பிட்டா சும்மா கும்கதான்னு இருக்கும் தொட்டுக்க தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.





தேவையானவை:
ரவா இரண்டு டம்ளர்
பச்சை மிளகாய் 4
பீன்ஸ் 2
கேரட் 1
மிளகு
கடலைபருப்பு
தயிர்
Eno


டிஸ்கி: மங்களூரான், சஞ்சய் போன்ற ஆட்கள் அவசியம் செய்யவேண்டிய டிபன் ஐட்டம்!


டிஸ்கி2: சக்திவேல் போன்றவர்கள் கமெடி பதிவு எழுதும் பொழுது நாம எல்லாம் என்ன எழுதுவது அதான் சமையல் குறிப்பு பதிவு! ஒரே ஒரு பதிவின் மூலம் பதிவுல சூட்டை குறைத்த அண்ணன் சக்திக்கு ரசிகர்மன்றம் துபாயில் ஆரம்பிச்சாச்சு என்பதை உங்களுக்கு சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்!

Thursday, September 13, 2007

ங்கொக்கமக்கா!!! ரவா தோசை --- (கொஞ்சம் வித்தியாசமாக)

மக்களே நான் கடந்த முறை செய்த முட்டை மசாலா சமையல் குறிப்பை யாரும் டிரை செஞ்சு பார்த்திங்களா இல்லையான்னு தெரியவில்லை, ஆனால் எந்த புகாரும் வரவில்லை அதனால் யாருக்கும் சேதாரம் இல்லை என்று நினைத்து தைரியமாக அடுத்த சமையல் டிப்ஸ்.

முதலில் வைரமுத்து பாடல் தோன்றிய கதை என்று சொல்வது போல், இந்த ரவா தோசை தோன்றிய கதை.


அன்னைக்கு செம பசி வீட்டில் போய் சாதம் வைத்து, குழம்பு வைத்து எல்லாம் சாப்பிடும் அளவுக்கு பொறுமை இல்லை.சரி நூடுல்ஸாவது செய்யலாம் என்று பார்த்தால் அதுவும் இல்லை, சரி என்னதான் செய்யலாம் என்று பார்த்தேன் ரவா இருந்தது சரி ரவா தோசை செஞ்சிடலாம் என்று முடிவு செய்து, அதில் போட என்ன காய்கறி இருக்கு என்று பார்த்தேன் கேரட் மட்டும் இருந்ததுஅதை சின்னதாக வெட்டும் அளவுக்கு பொறுமை இல்லை பக்கத்தில் பார்த்தேன் Knorr veg சூப் மிக்ஸ் இருந்தது, சரி சும்மா போட்டுதான் பார்ப்போமே என்று அதை எடுத்து போட்டு அரிசி மாவு, போட்டு கலக்கி தோசை ஊற்றினேன், ங்கொக்கமக்கா என்று இருந்தது. நண்பன் சொன்னா மச்சி டேய் உன்னை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவடா என்று எப்படி டா இப்படி புதுசு புதுசா என்ன என்னமோ செய்கிறாய் என்றான்...இது போல் ஒரு தோசையை சாப்பிட்டது இல்லை என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான்.


தேவையான பொருட்கள்:


ரவா : 3 கப்

அரிசி மாவு: 1 கப்

கடலை பருப்பு : ஒரு கை பிடி

பச்சை மிளகாய்: 3

இஞ்சி : சிறியது

Knoor வெஜ் சூப் மிக்ஸ்


செய்முறை:

ரவா, அரிசி மாவை தண்னீர் விட்டு கலந்து அதில் கடலை பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாம் வறுத்து போட்டுக்கவும்,பின் knoor வெஜ் சூப் மிக்ஸை போட்டு கலக்கவும். பின் தோசை கல்லை போட்டு தோசை ஊற்றவும்.


(குறிப்பு: தோசை எப்படி ஊற்றுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக டிரைனிங் கொடுக்கபடும்.)


சாப்பிடும் முறை:
பின் ஒரு பிஸை எடுத்து வாயில் போடவும், அங்கிருந்து ங்கொக்கமக்கா என்று சவுண்டு வரும்.


(குறிப்பு: தோசை எப்படி சாப்பிடுவது என்று தெரியாத கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கு இலவசமாக ஊட்டியும் விடபடும்.)


டிஸ்கி: ஜெஸிலா நீங்க இந்த முறை உங்க சமையல் குறிப்பு புத்தகத்தை எடுத்துவிட்டேன் என்று சொல்லமுடியாது.

Sunday, August 19, 2007

கொஞ்சமா நான் வெஜ் --- அடல்ஸ் ஒன்லி

இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசை செல்லா ஒரு நான் வெஜ் பதிவு போட்டார் அவர் எப்படி அப்படி போடலாம் என்று கும்மு கும்மு என்று கும்மி கொண்டு இருக்கிறார்கள். அது அடங்கும் முன்பு நானும் ஒரு நான் வெஜ் பதிவு போட்டு அந்த சூட்டை இன்னும் கொஞ்சம் அதிகபடுத்தலாம் என்று முடிவு செய்து இந்த பதிவு. முட்டை மசலா

தேவையான பொருட்கள்:

முட்டை : 6
பெரிய வெங்காயம்: 4
பச்சை மிளகாய் : 3
பூண்டு :பெரியது 1
இஞ்சி: சிறிதாக ஒன்று
தக்காளி: 3
கொத்தமல்லி: தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள்: இரண்டு சூபுன்
உப்பு தேவைக்கு ஏற்ப.

செய்முறை:
முதலில் வெங்காய்தை நறுக்கி கொள்ளவும், பின் தக்காளியை நடுதண்டு பாகத்தை விட்டு மீதியை வெட்டிக்கவும் (கிட்னியில் கல் உள்ளவர்கள் தவறாமல் செய்யவும்). பின் பச்சை மிளகாயை இரண்டாக வெட்டவும். பூண்டு , இஞ்சை அரைத்து விழுதாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின் வாணலியை சூடாக்கி ஆயில் விட்டு வெங்காயத்தை வதக்கவும் (சிறிது உப்பு போட்டு வதக்கினால் வெங்காயம் உடனே வதங்கி விடும்). பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு. அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுதை போடவும், கூடவே மிளகாய் தூள் ,பச்சை மிளகாய் எல்லாம் போட்டு சூடாக்கவும். பின் வேக வைத்த முட்டையை ஆங்காங்கே கீறி விட்டு
அதில் போடவும். மிளகாய் தூள் வாடை போகும் வரை சூடுபடுத்தவும்.
பின் அறிந்து வைத்த கொத்தமல்லியை போட்டு பறிமாறவும்.


டிஸ்கி: இப்ப தலைப்பு விளக்கம் சொல்லிவிடுகிறேன் முட்டை முழு நான் வெஜ் இல்லை அதனால்தான் கொஞ்சம் நான் வெஞ் என்றேன்.
பிறகு அடல்ஸ் ஒன்லி எதுக்கு என்றால் நான் அடல்ட்தானே நாம் மட்டுமே இதை சமைத்தேன் அதான் அடல்ஸ் ஒன்லி.