Tuesday, December 23, 2008
என் அம்மாவுக்காக பிராத்தனை!!!
Monday, December 22, 2008
டரியள் டக்ளஸும் பின்னே ஞானும்!
டரியள் டக்ளஸ்: ஓ அப்படியா இருங்க உங்கள் அறிவு திறனை சோதிக்கும் வகையில் ஒரு கேள்வி, வேளச்சேரி அம்மன் திருவிழா நிகழ்சியில் மூன்றாவதாக ஜிமிக்கி சட்டை போட்டுகுத்தாட்டம் போட்ட நடிகை யாரு? எங்கே சொல்லுங்க பார்க்கலாம்.
காங்கிரஸ் தல :நமது கட்சி மேலிடமும் இச்சம்பங்களை கூர்ந்து கவனித்து வருகிறது!
டரியள் டக்ளஸ்: ரொம்ப கூர்ந்து பார்த்தா கண் வலி வந்துடும் கொஞ்சம் கண்ணை சிமிட்டிக்க சொல்லுங்க!
காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!
டரியள் டக்ளஸ்: அப்படி போனது உங்க தப்பு, E.C.R வழியில் சென்றால் நல்லா பீச் காத்தும் வாங்கலாம், பசிச்சா திங்க சுண்டலும் வாங்கலாம்!
காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!
டரியள் டக்ளஸ்: என்னங்க இதுக்கு எல்லாம் கவலைபட்டுக்கிட்டு பாதி புஷ் ஆகிட்டீங்க இப்ப எல்லாம் ஷூவால் அடி வாங்குவதுதான் பேசன்!
காங்கிரஸ் தல :சத்தியமூர்த்தி பவனுக்கு தாக்க வருபவர்கள் தைரியமிருந்தால் தேதி சொல்லிவிட்டு வரட்டும் அப்படி வந்தால் அவர்களை நாங்கள் நேருக்கு நேர் சந்திக்க தயார்!
டரியள் டக்ளஸ்: அவுங்க என்னா வசந்த பவனுக்கு காப்பி சாப்பிட நண்பர்களோடவா வராங்க தேதி டைம் எல்லாம் சொல்லி வர!
அப்புறம் கிட்ட வாங்க ஒரு ரகசியம் முதலில் வாசனை நேருக்கு நேர் சந்தியுங்க அப்புறம் பேசுவோம்!
*********************பின்னே ஞானும்**********************************
போன வாரம் ஒரு மாலை நேரம் நானும் மனைவியும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றோம் அவர் கொஞ்சம் உறவு முறையில் கூட வரும், ஆனால் அத்தனை பழக்கம் கிடையாது. இங்கு வந்த பிறகுதான் பழக்கம் என் ஊருக்கும் அவர் ஊருக்கும் குறைந்தது ஒரு 10கிமீ தூரம் இருப்பதால் கொஞ்சம் தூரத்து சொந்தம் என்று கூட சொல்லலாம்.
அவருடைய அப்பாவும் ஊரில் இருந்து வந்து இருக்கிறார், அவர் அப்பாவிடம் இவரும் நம்ம ஊர் பக்கம் தான் என்று சொல்ல அவர் ஊர் பெயரை கேட்க நானும் சொன்னேன் பின் அப்பா பெயரை தாத்தா பெயரை எல்லாம் கேட்டார் சொன்னேன் பின் மனைவியிடம் மனைவி படிச்சது என்ன ஊர் என்று கேட்க ஊர் பெயரை சொன்னதும் அதற்கு அவர் அந்த ஊரில் என் சாதி பெயரை சொல்லி “--------” குடும்பங்களுமா இருக்கு? யார் பொண்ணுமா நீ என்று கேட்க, மனைவிக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை, நான் உடனே அவுங்க “...........” இல்லை அவுங்க வேறு என்று சொன்னேன்.
டக்கென்று ஒரு நிமிடம் பேசாமல் இருந்தவர், நானும் சாதி எல்லாம் பார்ப்பது இல்லை இதை எல்லாம் ஆதரிப்பவன் என்றார். இரண்டு மணி நேரம் 28 நிமிடம் பலான பலான மேட்டரை காட்டிவிட்டு கடைசி 2 நிமிடம் இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று மெசேஜ் சொல்லும் படம் போல!பேசியது எல்லாம் சாதியை பற்றி பேசிவிட்டு கடைசியில் நானும் சாதி எதிர்பாலன் என்று சப்பைகட்டு வேறு! பெருசுங்களா கொஞ்சம் திருந்துங்க!
இதை எழுதும் பொழுது சில பதிவர்கள் நினைவுக்கு வந்தார்கள் அவர்கள் எழுதும் பொழுது எல்லாம் கீபோர்ட் தேய சாதி எதிர்ப்பை பற்றி எழுதிவிட்டு, பழகும் பொழுது என்னை பார்த்து கேட்ட முதல் வார்த்தை நீ என்னசாதி?
சாதிய ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் என்று கூப்பாடு போடும் ஆட்கள்தான் சாதிய பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அது சரியா!
Sunday, December 21, 2008
இனியும் நான் எழுதனுமா?



கடைசி போட்டோவில் புதுகை அப்துல்லா பக்கத்தில் இருப்பது யார் என்று சொல்பவர்களுக்கு இரவு கழுகு என்று பட்டமும் ஒரு டார்ச் லைட்டும் பரிசாக வழங்கப்படும்!
போட்டோவில் அப்துல்லா மட்டுமே இருக்கிறார் போன்ற பின்னூட்டங்கள் போடுபவர்கள் டரியள் ஆக்கபடுவீர்கள்!
குசும்பனை விசாரித்ததாக சொல்ல சொல்லி அப்துல்லாவிடம் சொல்லி அனுப்பிய ரமேஸ் வைத்யா, பரிசல் அவர்களுக்கு மிக்க நன்றி!
Sunday, November 30, 2008
உலகிலே எந்த ஊர் பெண்கள் அழகு!

*******************************************************************************
மேலும் இந்த விவாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக போன வாரம் ஒரு கணவன் மனைவிக்குள் நடந்த உண்மை சம்பவத்தையும் சொல்கிறேன்!
மனைவி: என்னங்க! (பொதுநலன் கருதி விகுதி மாற்றப்பட்டுள்ளது).
கணவன்: என்னம்மா!
மனைவி: இத்தனை வருசமா இங்கிருக்கீங்க,உங்களுக்கு இங்க ரொம்ப பிடிச்சது என்னனு சொன்னீங்கன்னா நான் வாங்கி தருவேன்ல்ல!
கணவன்: இரவின் இருட்டில் இந்த கருப்பு கலர் லேண்ட் கூருசர் காரில் உள்ளே இருக்கும் சிறு வெளிச்சத்திலும் பெளர்ணமி நிலவு போல் ஜொளிக்கும் படி முகம் மட்டும் தெரிய வலம் வரும் அரபி பெண்களின் அழகு ரொம்ப பிடிக்கும், இதுல பியூட்டியே பேக்ரவுண்டும்கருப்பு, காரும் கருப்பு, அவுங்க டிரஸும் கருப்பு!.....
மனைவி: #%~@$#$ எதாலோ அடிக்க அந்த கணவன் கையில் கட்டு!
(என்னது என் கையில் இருக்கும் கட்டு ஏனா? அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை,என் கையில் இருப்பது ராக்கெட் லாஞ்சரை தடுத்த பொழுது ஏற்பட்ட சிறு காயம்!ராக்கெட் லாஞ்சர் தீவிரவாதிகள்கையில் மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களே உங்களை நினைச்சா பாவமாக இருக்கு!)
************************************************************************
சென்னையில் மழை பெய்தால் இனி பதிவர்கள் என்ன செய்யவார்கள்!
வெண்பூ வீட்டில்:
என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு வெளியே நீங்க தொவைச்சு காயப்போட்ட டிரஸ் எல்லாம் நனைச்சுடப்போவுது சீக்கிரம் எடுத்து வந்து அயர்ன் செஞ்சு வெச்சுடுங்க! டீயை அப்புறம் ஆத்தி தரலாம் சீக்கிரம் போங்க!
டீயை பொருப்பாக ஆத்திக்கிட்டு இருந்த வெண்பூ அலறி அடிச்சுக்கிட்டு என்னது மழை தூறுதான்னு கேட்டுகிட்டு செல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!....
பரிசல் வீட்டில்:
என்னங்க மழை தூறல் போடுற மாதிரி இருக்கு நம்ம இரண்டு குழந்தைங்களையும் ஸ்கூலில் இருந்து அழைச்சுட்டு வாங்க என்ன இன்னும் சின்னபுள்ளமாதிரி குவீஸ் கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருக்கீங்க!!!
என்னது மழை பெய்கிறதா! அவரும் மொபைல் போனை எடுத்துக்கிட்டு ஓடுகிறார்!
தாமிரா வீட்டில்:
என்னங்க மழை வரமாதிரி இருக்கு, நீங்க பிழிஞ்சு வெச்ச வடாம் நனைஞ்சுட போவுது கொஞ்சம் எடுத்துட்டு வந்துடுங்க!
தாமிரா: என்னது மழை வரமாதிரி இருக்கா! அவரும் செல்போனை எடுத்துகிட்டு வெளியே ஓடுகிறார்!
தாமிரா: மழை வருவது போல் இருக்கு நீ அங்க தனியா இருக்க வேண்டாம்! நாளை மனைவி ஊருக்கு போக போறாங்க வேண்டும் என்றால் இங்க வந்துடு, நாம சேர்ந்து இருக்கலாம், கூச்சப்படாத உடம்ப பார்த்துக்க மழையில் நனையாத, ஏதும் வேண்டும் என்றால் என்னிடம் தயங்காம கேளு! அடிக்கடி போன் செய்!
இவர் பேசியது மனைவி காதி விழுந்துவிடுகிறது!
மனைவி: ஹலோ நில்லுங்க நான் மழையில் நனைஞ்சா கூட இவ்வளோ கவலை படமாட்டீங்க அது யாரு போன்ல!
தாமிரா: அது அது வந்து பிரண்டும்மா!
மனைவி: எனக்கு தெரியாம அது யாரு பிரண்ட்டு! என்ன பேரு!
தாமிரா: அதிஷா!
மனைவி: என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணை நான் இல்லாதப்ப வீட்டுக்கு வா கூட தங்கலாம் என்று கூப்பிவீங்க! எவ அவ திரிஷா மாதிரி இருப்பாளோ! உங்களை எல்லாம்.... என்று ஆயுதத்தை எடுக்க போகும் பொழுது எஸ்கேப் ஆகிறார்!
மற்ற இருவரும் யாரிடமோ பேசிட்டு வீட்டுக்குள் வருகிறார்கள் தங்கமணிகள் முறைக்க மற்ற இருவரும் சொல்கிறார்கள் நீ வேறம்மா வீட்டில் வாங்கும் திட்டு பத்தாதுன்னு மழை பெய்த பொழுது ஏன் போன் செய்யலைன்னு தூ ஆட்டிக்கிட்டு வந்துட்டானுங்கன்னு அதிஷா பதிவு போட்டு திட்டுவார் அதான் பேசிட்டுவந்துட்டேன் என்கிறார்கள்! (இது புரியவில்லை என்றால் லிங்கை கிளிக் செஞ்சு படிங்க புரியும்).
இனி மழை பேஞ்சா அதிஷா நினைவு வரவில்லை என்றால் நீங்களும் டரியள் ஆக்கப்படுவீர்கள்!!!
************************************************************
தலைவர் தங்கபாலு :புலிகளால் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
டரியள் டக்ளஸ்: உங்களை எல்லாம் பூனை கூட பிறாண்டாது போய் தைரியமா தூங்குங்க!
Saturday, November 29, 2008
இழவு வீட்டிலுமாடா அரசியல் செய்வீங்க!!!
பாடுபவர்: மன்மோகன்
சரணம்: தீவிரவாத்திற்கு எதிரான போர் தொடரும்! தீவரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! தீவிரவாதத்தை இந்த அரசு வேறோடு அறுக்கும்! இந்த நாசவேலைக்கு காரணம் பாக்கிஸ்தான்! உயிர் இழந்தவர்களுக்கு 5 லட்சம் நஷ்ட ஈடுவழங்கப்படும்.
கீறல் விழுந்த ரெக்காட் ஆகையால் மேற்கொண்டு பாட முடியாமல் அதே சரணமே ரிப்பீட்டாகிக்கிட்டு இருக்கு.
***********************************************
தாளம்: டம் டம்
பாடுபவர்: சிவராஜ் பாட்டில்
சரணம்: தீவிரவாதிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தபடும், உளவுதுறை செயல்பாடு திருப்திகரமாகவே இருக்கிறது, இதற்காக பதவி விலகவேண்டியது இல்லை!
***********************************************
தாளம்:சங்கே முழங்கு
பாடுபவர்: அத்வானி
சரணம்: ஆளும் காங்கிரஸ் கட்சி அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பொடா தேவை, சிவராஜ் பாட்டீல் பதிவி விலகவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவோம்!
இதுவும் கீறல் விழுந்த ரெக்காட் ஆகையால் மேல் சொன்ன ராகத்தையே திரும்ப திரும்ப படிச்சுக்கவும்.
*******************************************
நாட்டுல என்ன பிரச்சினை நடந்தால் நமக்கு என்ன என்று தமிழக தலைவர்கள் பாடும் பாட்டு!
தாளம்: அதிரடிக்காரன்
பாடுபவர்: ஜெ.ஜெ
பாட்டை எழுதியவர்: யாரோ
சரணம்: மைனாரிட்டி தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது, நயவஞ்சக பேய் கருனாநிதி மீது மான நஷ்டவழக்கு தொடரப்போகிறேன்.
*****************************************
தாளம்: ஜின் ஜாக்
பாடுபவர்: வைகோ
சரணம்: சகோதரி சொன்னதுக்கு ரிப்பீட்டேய்!
*****************************************
தாளம்: டிரம்ஸ்
பாடுபவர்: கலைஞர்
சரணம்: நாளை ஈழ தமிழர் நலன் காக்க 10001 முறையாக அனைத்துகட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது அனைவரும் வந்து வழக்கம் போல் காப்பி டீ குடித்துவிட்டுசெல்லவும்!
******************************************
தாளம்: கமான் இந்தியா
இசை கருவிகள்: பேட் & பால்
பாடுபவர்கள்: இந்திய தேசத்து தூண்கள்
ராகம்: சோகம்
சரணம்: மும்பையில் குண்டு வெடிப்புக்காக எல்லாம் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது எல்லாம் சரி இல்லை, இந்தியாவை ஜெயிக்க முடியாவில்லைஅதுக்கு சாக்காக இதை வைத்து ஊருக்கு போய்விட்டார்கள்.
********************************************************************
மும்பை சம்பவத்துக்கு பாக்கிஸ்தான் அமைப்புகளின் சம்மந்தம் இருப்பதன் ஆதாரங்களை,பாக்கிஸ்தான் அரசிடம் சமர்ப்பிக்க போகிறோம்! :
சிவராஜ் பாட்டில்

டரியள் டக்ளஸ்: ஆதாரங்களை சமர்பிக்கும் பொழுது கொஞ்சம் சாப்ட்டான பேப்பரில் ஆதாரங்களை சமர்பியுங்கள் தலைவர்களே, பேப்பர் மொட மொடப்பா இருந்தா அவுங்களுக்கு தொடைக்கும் பொழுது வலிக்கும்!!!
*******************************************************************
இவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்!!!
கச்சா எண்ணெய் விலை சரிவு!!!விளக்கெண்ணெய் விக்கிற விலையில் தலைக்கு ரொம்ப அவசியம் பாரு என்று மனைவியின் வசவை காதில் வாங்கியபடி எடுத்த பாட்டிலை பத்திரமாக திருப்பி வைக்கும் குப்பனுக்கு மிகவும் சந்தோசமான செய்திதான் கச்சா எண்ணெய் விலை சரிவு!
தங்கம் விலை சரிவு!!!போன குறுவைக்கு விதை நெல் வாங்க வைத்த இரண்டு வயது மகளின் தொங்கட்டானின் வட்டிஇதன் மூலம் குறைந்து நாளைக்கே மீட்டுவிடலாம் என்ற சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் முனியாண்டிக்கு சந்தோசமானசெய்திதான் தங்க விலை சரிவு!
சென்செக்ஸ் 100புள்ளிகள் உயர்வு!!!போன வருடம் ஆரம்பித்த சரிவு, இதோ இரண்டு நாட்களாக பெய்யும் மழையினாலும் தொடர்ந்து சரிவையே சந்தித்தித்து வரும் தன் வீட்டு மண் சுவரைகவலையோடு எதிர் வீட்டு திண்ணையில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் குருவம்மாளுக்கு சந்தோசமான செய்திதான் சென்செக்ஸ் 100புள்ளி உயர்வு!!!
ஓபாமாவால் அவுட் சோர்சிங்குக்கு ஆபத்து வராது நிதியமைச்சர்!!!
இந்த வாக்குறுதியை கேட்டு சந்தோசமாக கடலில் மீன் பிடிக்க செல்லும் செல்லமுத்துவுக்குயாராவது சொல்லுங்களேன் அவுட்சோர்சிங் என்பது வேறு என்று!!!
************************************************************
நன்றி: இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று டைட்டில் மட்டும் போடாமல் சண்டை அனைத்தையும் லைவ் ரிலேவாக போட்டு
தீவிரவாதிகளுக்கு துனை போன இந்தியாவின் தூண்களாகிய மீடியாக்களுக்கும், ஒப்பாரி வீட்டிலும் மும்பை செய்திகளை 12 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் படித்ததன் மூலம் உங்களை நம்பிக்கை பெற்ற ஒரே நாளிதழ் என்று தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்ட நாளிதழகளுக்கும் நன்றி நன்றி நன்றி!
Tuesday, November 25, 2008
வாங்க வாங்க நர்சிம்மை கலாய்கலாம்!
இனி மீதி அங்கே!
சஞ்சய் போகவேண்டிய ரயில் ரத்தாகிவிட சரி வர லேட் ஆகும் என்று நர்சிமிடம் போன் செஞ்சு சொல்லிடலாம் என்று போன் செஞ்சு பேசுகிறார்!
சஞ்சய்: அண்ணே நான் வர இருந்த டிரெயின் கேன்சல் ஆகிட்டு அடுத்த டிரையின் புடிச்சு வர எப்படியும் 5 மணி நேரம் தாமதம் ஆகும்!
நர்சிம்: இப்பதான் நான் ஆபிசில் இருந்து வந்தேன் எப்படியும் நான் கிளம்பவும் 5 மணி நேரம் ஆகும், நான் கூட எங்கே உங்களை அழைக்க வரமுடியாதோ என்று பயந்துக்கிட்டே இருந்தேன்! நல்லவேளை டிரையின் கேன்சல்!
சஞ்சய்: (குழப்பத்துடன்) அண்ணே நான் காலையில் தான் அங்கு வருவேன்!
நர்சிம்: அதனால் என்ன நடுவே 10 மணி நேரம் தானே இருக்கு, பேசிக்கிட்டே இருந்தா எப்படி நான் உங்களை அழைக்க ரெடி ஆகனும் போனை வையுங்க!
சஞ்சய்: குழப்பத்துடனே போனை வைக்கிறார்!
காலை மணி 5...
சஞ்சய்: என்னன்னே என்னை ரிசிவ் செய்யதான் வந்தீங்களா இல்லை ஏதும் போர்ட் மீட்டிங்குக்குபோறீங்களா?
நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!
நர்சிம் வீட்டில் காலை டிபனை முடித்துவிட்டு அடுத்து மதியம் சாப்பாட்டுக்கு வெண்பூ வீட்டுக்கு போக கிளம்பும் பொழுது அப்துல்லாவுக்கு போன் போட்டு அண்ணே வெண்பூ வீட்டில் மதியம் சாப்பாடு போகலாமா!
அப்துல்லா: இல்ல மாம்ஸ் எனக்கு இன்னை 12th எக்ஸாம் இருக்கு, எழுத போகனும்!
சஞ்சய்: ஆஹா மாம்ஸ் என்ன மாதிரியே தான் நீங்களூம் இன்னும் 12th பாஸ் செய்யமா தொழிலதிபர் ஆகிட்டீங்களா?
அப்துல்லா: யோவ் மாம்ஸ் நான் உன்ன மாதிரி இல்லைய்யா, நான் மத்தவங்களுக்காக எழுதப்போறேன்!
நர்சிம்: சஞ்சய் நீங்க டீவி பார்த்துக்கிட்டு இருங்க நான் போய் குளிச்சுட்டு ரெடி ஆகிவந்துடுறேன் வெண்பூ வீட்டுக்கு போகலாம்!
சஞ்சய்: குளிக்கதானே போறீங்க அதுக்கு எதுக்கு இதை எல்லாம் எடுத்துட்டு போறீங்க?
நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!
சஞ்சய்:இதோ குளிக்க போறேன் என்று போனார் மணி 2 ஆகுது லேட் ஆனா எல்லா பிரியாணியையும் வெண்பூவே காலி செஞ்சுடுவார் வருவாரா மாட்டாரா,போய்பாத்ரூம் கதவை தட்டலாமா என்று யோசயில் கதவின் அருகில் போகிறார்!
நர்சிம்: போகலாமா மாம்ஸ்!
சஞ்சய்: அந்த கோலத்தில் நர்சிம்மை பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் போகலாம் என்று போகிறார்!
வெண்பூ வீட்டில் சாப்பிட்டு விட்டு மொக்கை போட்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு கிளம்பும் பொழுது மாம்ஸ் கொஞ்சம் பொருங்க ரெடி ஆகி வந்துடுறேன் என்றுகிளம்பி போகும் நர்சிம்மை டரியளாக பார்க்கிறார் சஞ்சய்!
பதிவர் சந்திப்பில் மழை பெய்து நனைந்த பிறகு வீட்டுக்கு வந்தபின் சஞ்சய் நர்சிம் மாம்ஸ் பக்கத்து கடையில் போய் டீ சாப்பிட்டுவிட்டு அப்படியே ஸ்டேசன் போய்டலாமாஎன்று கேட்டதும் இருங்க அப்ப டிரஸ் சேஜ் செஞ்சுட்டு கிளம்பி வந்துடுறேன் என்று போகிறார்...
திரும்பி வந்து பார்த்தால் சஞ்சயை காணவில்லை அங்கு ஒரு கடிதம்...
அன்புள்ள அண்ணன் நர்சிம்
5மணிக்கு அழைக்க வரும் பொழுது அப்படி வந்தீங்க ஒத்துக்கலாம்,
ரேமாண்ட் மாடல் கணக்கா பாத்ரூமில் இருந்தும் வெளியே வரும்பொழுது டக் இன் செஞ்சு வந்தீங்க பொருத்துக்கிட்டேன், பீச்சுக்கு போகும் பொழுதும் அப்படியே வந்தீங்க கண்ரோல் செஞ்சுக்கிட்டேன் இதுக்கு மேல எனக்கு என்னால முடியல நான் கிளம்புறேன் போகும் முன் ஒரு சின்ன வேண்டுகோள்.
டக்கின் செய்யுங்க வேண்டாங்கல ஆனா நைட் 10மணிக்கு படுக்க போகும் பொழுதும் எல்லாம் டக்கின் செய்யாதீங்க!
அளவில்லா கோரிக்கையோடு
சஞ்சய்

காலை 5 மணிக்குஇரவு 10 மணிக்கு மழையில் நனைந்தபின்பும்
இலவச இணைப்பு:
முன்பு நட்சட்திரமாக இருந்த ஒருவரின் கெட்டப்பை கலாய்த்து போட்ட பழய பதிவு
Sunday, November 23, 2008
கார்ட்டூன்+ டரியல் 25-11-2008






டரியல் டக்ளஸ்: இது யுவராஜ்க்கு பாராட்டா இல்லை ஆப்பா?ஒன்னுமே புரியலையே!!!
Wednesday, November 19, 2008
சென்னை பதிவர்கள் சந்திப்பின் பின்னனி!






இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்பூவுக்கு இந்த பதிவின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்!!!
ஆதங்கம்: ஜ்வோராம் சுந்தர் சந்திப்புக்கு வராமல் போய்விட்டாரே, வந்திருந்தால் தர்பூஸ் என்ன பலாபழத்தையே கடத்தி இருக்கலாம்!!
Friday, November 14, 2008
வாரணம் பூஜ்ஜியம்
சரி கதைக்கு என்ன...
ஹீரோவுக்கு டிரெயினில் ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோயின் மேலே லவ்வுன்னா லவ்வு கண்ணுமண்ணு தெரியாத லவ்வு, உடனே லவ்வை சொல்லுகிறார் ஹீரோயினும் இது சும்மா அட்ராக்சன்தான் இது லவ்வு இல்ல முதல்ல நாம பழகனும் புரிஞ்சுக்கனும் எங்க அப்பாவுக்கு உன்னை பிடிக்கனும் உங்க வீட்டில் என்னை பிடிக்கனும் என்று எல்லாம் டயலாக், பின் டக்குன்னு ஒரே ஒரு பாதி பாட்டில் வீடு கட்டும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிடுகிறார் சூர்யா. பின்மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்ற காதலியை தேடி அங்கு போகிறார், அங்கு இருவருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது.
இப்படியே சொல்லி இருந்தால் நாம் காலம் காலமாக பார்க்கும் விஜய் படம் ஆகி இருக்கும் இது கெளதம் மேனன் படம் ஆச்சே அப்படியே நடுவில் அப்பா சூர்யா காதல் கதையும் வருகிறது அப்ப இது வித்தியாசமான படம் தானே!
அதன்பின் அமெரிக்காவில் ஒரு டிவிஸ்ட் அதன் பிறகு கதை எங்கேங்கோ பிரேக் இல்லாத தண்ணி லாரி மாதிரி போகிறது அப்படி போகும் பொழுது பார்க்கும் நம் மீதே ஏறி போவதுதான் கொடுமை!
சில சில இடங்களில் அப்பா சூர்யாவோ அல்லது குட்டி சூர்யாவை போலவோ உங்கள் வாழ்கையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம் அந்த ஜில் அனுபவத்துக்காக மூனு மணிநேரம் எல்லாம் உட்காந்து படத்தை பார்க்க முடியாது.
இயக்குனர் டச்:
1) சிம்ரன் சூர்யாவிடம் சொல்வது: நான் போற இடம் எல்லாம் உங்க அப்பா நான் அழகாக இருப்பதாக் சொல்ல சொல்லியபோது இருந்த கோபம் உங்க அப்பாவை நேரில் பார்த்ததும் அந்த கோவம் போச்சு ஏன்னா உங்க அப்பா ரொம்ப ஹேன்சம் என்று சொல்லும் பொழுது திரையில் ஈஈஈ என்று இளிச்சிக்கிட்டு இருக்கும் சூர்யாவை பார்த்தும் சிரிப்புதான் வந்தது.
2) அமெரிக்காவில் வைத்து சூர்யாவை லவ்வுவதாக சமீரா ரெட்டி சொன்னதும் சூர்யா கொடுக்கும் ரியாக்சன்
3) கேம்புக்கு வரும் ரம்யாவிடம் சூர்யா லவ்வை சொன்னதும் ரம்யா கொடுக்கும் ரியாக்சன். (லவ்வுவதாக சொன்னபிறகு Sure என்று கேள்வி வேறு விட்டா கோடிஸ்வர் நிகழ்சிமாதிரி காண்பிடண்ட்? என்று எல்லாம் கேள்வி கேட்கும் போல!)
***********************************************************************
நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?
சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!
டிஸ்கி: பதிவை வகை படுத்த வில்லை முதலில் படம் ஆர்ட் படமா? பீரியட் படமா? அவார்ட் படமா? ஆக்சன் படமா என்று கெளதம் வகைப்படுத்தட்டும் பின் நான் இது படமான்னு வகைப்படுத்துறேன்.(படம் இம்புட்டு மொக்கையாக இருந்தாலும் மிகவும் சந்தோசமாகவே படம் பார்த்தேன் அதை பார்த்த நண்பர் எப்படி இப்படி உற்சாகமாக இருக்கீங்க என்றதுக்கு ஆஸ்கார் ரவிசந்திரன் எஸ்கேப் ஆகி அழகிரியை மாட்டிவிட்டாரே அதை நினைச்சு பார்த்தேன் ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றேன்!)
Sunday, November 9, 2008
லேட்டஸ்ட் கார்ட்டூன்ஸ் 10-11-2008







தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன், வெண்பூ இருவரும் அங்கு போகாததால் மிரட்டும் போலீஸ் மாமா!!!
Wednesday, November 5, 2008
டரியல் டக்ளஸ்---5-11-2008
டரியல் டக்ளஸ்: ஒழுங்காக மின்சாரமே கொடுக்காத உங்களுக்கு எதை துண்டிப்பது???
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக பேசுவது குற்றம் என்றால் என்னையும் கைது செய்யலாம்--- பாரதிராஜா
டரியல் டக்ளஸ்: நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.
புதுவை தலைமை ஜூடிசியம் மாஜிஸ்திரேட்டாக பொங்கியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டரியல் டக்ளஸ்: அநியாயத்தை கண்டா ரொம்ப பொங்கிடுவாரோ!!!
அ.தி.மு.க மற்றும் தி.மு.கவோடு கூட்டணி கிடையாது- சரத்குமார்
டரியல் டக்ளஸ்: என்னங்க இப்படி சொல்லீட்டீங்க இத கேட்டு அம்மாவும், ஐயாவும் சாப்பிடாமதூங்க முடியாம தவிக்கிறாங்க, கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க!
நான் இங்கே புறப்பட்டு வந்த பொழுதுகால் இடறி அதன் காரணமாக வலது காலில்எட்டு அங்குல நீளத்திற்கும் இரண்டு அங்குலஅகலத்துக்கும் காயம் ஏற்பட்டது!
டரியல் டக்ளஸ்: நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு...கோவி.கண்ணனுக்கு போட்டியாக! (இவரு சொன்ன டீட்டெயிலு)
இப்படி சொன்னாலும் சொல்வார்கள்
ஜெ.ஜெ: தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க நான் காலையில் விமானத்தில் ஏறும் பொழுதே படிக்கட்டில் ஸ்லிப் ஆகும்படி செய்தது என்னை கொல்லபார்த்தது விடுதலைபுலிகள் தான். இது உளவு துறைக்கும் தெரியும்!
சு.சாமி: விமான படிக்கட்டில் விளக்கெண்ணெய தடவிதான் ஜெ.ஜெவை கீழ விழவைத்து கொல்ல முயற்சி செய்தார்கள், படிக்கட்டில் எண்ணெய் தடவியதன் வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
வைகோ: என்னை கைது செய்து சிறையில் அடைத்து, பின் சகோதரி ஸ்லிப் ஆகும் படி செய்தது எல்லாம் திட்டம்மிட்ட சதி, என்னை கைது செய்ததை விட சகோதரிக்கு அருகில் இருந்து சகோதரியை கவனிச்சுக்க முடியவில்லையே என்ற வருத்தம் தான் என்னை கொல்கிறது!
Sunday, November 2, 2008
மூட் இல்லாததால் தாமதமாய்...
Wednesday, October 29, 2008
சிக்ஸ் பேக் முயற்சியில் சில ஸ்டார்ஸ்- ஒரு காமெடி!!!

ஜே.கே.ரித்தீஸ் அறையில்...ரித்தீஸிடம்
அண்ணே நீங்க நாயகன் படத்தில் ஒருவன் முதுகில் ஊஞ்சலாடியதை கண்டு உலகமே மெரண்டு போய் கிடக்கு அண்ணே அதை அப்படியே மெயிண்டெயின் செய்யனும், ஈக்குச்சி போல உடம்பு இருக்கிறவனுங்க எல்லாம் சிக்ஸ் பேக்கோடு நடிச்சு மிரட்டுரானுங்க அதுபோல நீங்களும்
சிக்ஸ் பேக்கோட நடிக்கனும்...
ஜே.கே: நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்!
இப்படி சொன்னா எப்படின்னே அப்புறம் உங்க எதிர்கால அமெரிக்க முதல்வர் ஆகும் கனவு கலைஞ்சுடும் அண்ணே!
ஜே.கே: சிக்ஸ் பேக்கும் என் அமெரிக்க முதல்வர் கனவுக்கும் என்ன சம்மந்தம்?
அண்ணே அர்ணால்டு சிக்ஸ் பேக்கோடு நடிச்சதால் தான் அவரு அழகில் அனைவரும் மயங்கிட்டாங்க அதனால் தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு பிரதமர் ஆகி இருக்கார், நீங்களும் அவரை போல் நடிச்சீங்க புஷ் போல நீங்களும் அடுத்த அமெரிக்க முதல்வர் ஆகிடுவீங்க.
ஜே.கே: அப்படியா இருடே இதோ வருகிறேன்,என்று வெளியே ஓடிப்போய்
திரும்ப வருகிறார்..
இதோ பாருடா சிக்ஸ் பேக்
1) இது ஸ்கூல் பேக்
2) இது டிராவல் பேக்
3) இது ஹேண்ட் பேக்
4) இது ஷோல்டர் பேக்
5) இது லெதர் பேக்
6) இந்தாடா கடைசியா கேரி பேக்
எடுத்து மாட்டுங்கடா என் மேலே. இப்ப வந்துச்சா சிக்ஸ் பேக் என் மேலே!!!
மனசுக்குள் (அண்ணே உங்களு சினிமான்னா என்னானு தெரியாதுன்னே நினைச்சேன் ஆனா சிக்ஸ் பேக்ன்னாலும் என்னன்னு தெரியாதா அவ்வ்வ்வ்)
ஜே.கே: ஏய் யாருடா அங்க இந்த ஸ்கூல் பேக் ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் கொடுத்துச்சு அதுக்கு வாங்கி கொடுங்கடா 1000 ஸ்கூல் பேக், டிராவல் பேக் கொடுத்தவனுக்கு வாங்கி கொடுங்கடா ஒரு பஸ்!இப்படி அடுத்த அடுத்த கட்டளைகளை போட்டுக்கிட்டு இருக்கார் ரித்தீஸ் (2011 முதல்வர் நம்பர் 12).
***********************************************************************
எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் நீங்க தான் என் அடுத்த படத்தில் ஹீரோ படம் பேரு புளு பிலிம்..
என்னங்க புளு பிலிம் என்று வெச்சா வரி சலுகை கிடைக்காது நீலப்படம் என்று வெச்சுடலாம்...
தயாரிப்பு: அதுவும் சரிதான் நீலப்படம் என்றே வெச்சுடலாம், ஆனா நீங்க இந்த படத்தில் சிக்ஸ் பேக்கோடு வரும் போல ஒரு ”சீன்” வைக்கனும்...
எஸ்.ஜே: அதுக்கு என்னா ஒரு நாள் டைம் கொடுங்க உங்க எதிர்ப்பார்பை நிறைவேற்றுவது போல சிக்ஸ் பேக்கோடு வருகிறேன்...
மறுநாள் காலை சார் இதோ பாருங்க சிக்ஸ் பேக்கோடு வந்து இருக்கேன்...
இது நமீதா ”பேக்”..
இது ஸ்ரேயா ”பேக்”...
இது அசின் ”பேக்”...
இது திரிஷா ”பேக்”...
இது நயன் தாரா ”பேக்”...
இது பிரியாமணி ”பேக்”... என்று கிளேவில் செஞ்ச நடிகைகளின் ”பேக்”கை காட்டுகிறார். கதைப்படி ஹீரோவுக்கு காலையில் ஒரு பேக் இருக்கும் மாலை ஒரு பேக் இருக்கும் இப்படி ஒன்னு ஒன்னா மாறும் என்று கதைய வெச்சு கலக்கிடலாம்...
ஆஹா நீ எப்பவும் இப்படிதானா!!! என்று ஓடுகிறார் தயாரிப்பு.
********************************************************
அடுத்து டி.ஆர். வீட்டில் சார் உங்க பையன புது படத்தில் புக் செய்ய வந்து இருக்கோம்...
டி.ஆர்: சரி முதலில் கதைய சொல்லுங்க, புடிச்சா கால் ஷீட் வாங்கி தருகிறேன்...
சார் கதைப்படி உங்க பையன் ஒரு பாடி பில்டர் அவரிடம் பாடிய பில்ட் பண்ண வரும் ஹீரோயினுக்கும் கசமுசா ஆகிடுது... இதுல முக்கியமே உங்க பையன் தனுஷ்க்கு இருந்தது போல் சிக்ஸ் பேக் வேண்டும்...
டி.ஆர்: சினிமாவுக்காக அவனுக்கு வந்தது
சிக்ஸ் பேக்..
சிம்பு சினிமாவிலேயே இருக்கு பேக்கு.
அவன் வளந்த பின் வந்தது சிக்ஸ் பேக்
இவன் பிறப்பிலேயே ஒரு பேக்கு.
எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு
இதை தெரியதவனை எல்லாம் போட்டு தாக்கு.
ஏ டன் டனக்கா ஏ டனக்குனக்கா!
Tuesday, October 28, 2008
சும்மா டைம் பாஸ் மச்சி!!!
சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும்
தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்
இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.
அலையடித்து பறக்கும் கல்லூரி பெண்கள் கூந்தல்களை ரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்என் தலையில் அடித்த வண்ணகலவை வெளுத்து போய்விடும் என்ற அச்சம் மிகுகிறது...
இரவுப் பனியில் குளித்தெழுந்து தலை துவட்டாத ஈரத்தில்
இதழ் மலரக் காத்திருக்கும் ரோஜாக்களைப் பார்த்து
புன்னகைக்கவும் மறந்து போய் இன்று
ஒரு நாள் மட்டும்தானே இந்த அழகு எனகவலை தொற்றிக் கொள்கிறது
காலை சவரில் நனைந்து தலை துவட்டிய துண்டில்
ஒட்டிக்கொண்டு வரும் சாயத்தை பார்த்து
அழவும் மறந்து போய் இன்னும் எத்தனை நாள் தான்
இந்த சாயம் நிற்கும் என்ற பயம் தொற்றி கொள்கிறது!!!
ஓயாத உன் பேச்சொடு கலந்து வரும் புன்னகையில்
அதிக பங்களிப்பு இதழ்களுக்கா விழிகளுக்கா என
ஆராயவும் மனமின்றி இது எனக்கானதா என
ஏக்கமே நிலை தடுமாறச் செய்கிறது
காற்றோடு கலந்து வரும் ஈர பதத்தில்
கூட சாயம் வெளுத்துவிடுமோ என பயம் அது பற்றி
ஆராயவும் முடியவில்லை அது போல் முடி
எனக்கு வாய்க்காதா என்று ஏக்கம் வருகிறது
இருப்பை மறந்த தேடலில்
கரைந்து ஓடும் கால வெளியில்
தொலைந்து போவது
என் சுயம் மட்டுமே
வெளுப்பை மறைக்கும் முயற்சியில்
கரைந்து ஓடும் சாயங்கள் மழையில்
மற்றவர்களுக்கு தெரிந்து போவது
என் சொட்டை தலையும்
அதில் வெள்ளை முடியும் மட்டுமே!!!
டிஸ்கி : வழக்கம் போல் எதிர் கவிதை கண்மணி அக்கா கவிதை கருப்பில் இருப்பது.
*************************************************************************
சிகப்பு கலரில் இருப்பது கண்மணி எழுதிய கவிதை அதற்க்கு கீழே இருப்பது நான் எழுதிய எதிர் கவுஜ:)
ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]
ஓஹோ வரவில்லை....(தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்)
உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.
தடுக்கி விழுவோம் என அஞ்சியிருந்தால்
அஞ்சு பாபி ஜார்ஜ் ஓடாமலே இருந்திருக்க கூடும்.
உடைவோம் என நினைத்திருந்தால்
எனக்கு பிடித்த முட்டை
கோழி வயிற்றிலேயே இருந்திருக்க கூடும்.
முட்டை வெளியே வந்தும் இருக்காது
வந்து என் கையில் சிக்கியும் இருக்காது.
உடைந்து முட்டைகள் வெந்து தணிந்து
ஆம்லேட் ஆவதுபோல.
வாந்துமுட்டையும், ஆமை முட்டையும்
மண்ணுக்குள்ளே இருந்திருக்கும்.
இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.
இந்த ஆம்லேட்டை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
அதை எடுத்து சாப்பிடும் வரை
சாப்பிட்ட பிறகோ என்னையே வெறுத்து கொள்கிறேன்
காரணமே தெரியாமல்..
வெந்த முட்டைகளை விட வேகாத ஆப் பாயில்கள்
ருசி அதிகம்.
கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது
கவனமாக திருப்பி போடப்பட்ட ஆம்லேட்டுகளில்
பச்சைமிளகாய் எங்கேனும் ஒளிந்துருக்குமா
என பார்பதும்
அதன் மேல் மிளகு தூள் தூவபட்டு இருக்குமா
எனத் தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது.
இலையுதிர் காலங்களுக்குப் பிறகு
வசந்தம் வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை
எனக்கு முன் ஆடர் செய்த ஆம்லேட்டுக்கு பிறகு
ஆப்பாயில் வந்துதானே ஆகவேண்டும்
காத்திருக்கிறேன் வரும் வரை...(சாப்பிடாமல்)
டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை
டிஸ்கி: எனக்கான ஆப்பாயில்
***************************************************
முதல் முறையாக சும்மா ஒரு மீள் பதிவு.
Friday, October 24, 2008
தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்!!!
1) பாலபாரதி-மலர்வனம் லஷ்மி
2) அய்யனார்-கல்பனா
3) குசும்பன் - மஞ்சு
4) மங்களூர் சிவா- பூங்கொடி
5) இம்சை அரசி - மோகன்
அனைவருக்கும் வாழ்த்து சொல்லலாம் வாங்கோ!
டிஸ்கி : வேறு யாருக்கும் ரகசிய திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள். (சஞ்சய்க்கு அல்ல)
மற்றும் அனைத்து வலையுலக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். (நன்றி பைத்தியக்காரன்)
துயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு!!!
சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசு
அனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர் பயிற்சிக்காக வந்தவர் என்று சொல்வார், அங்கு அவர் அண்ணன்,அண்ணி இருவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும் அங்க தமிழ் ஆட்களை கண்டால் சிங்களருக்கு பிடிக்காது மிகவும் கொடுமை படுத்துவார்கள்
என்று சொன்னது நினைவு இருக்கிறது. மேலும் அங்கு நடக்கும் சண்டைகள் பற்றி விளக்கமாக சொல்வார். அவர் கண் புருவத்தின் மேல் கருப்பாக காச்சி போய் இருக்கும் என்ன என்றால் துப்பாக்கி டிரிகர் குறிபார்க்கும்
பொழுது அது கண்ணை அழுத்தி அழுத்தி அந்த இடம் காய்சிபோய்விடும் என்றார். இதனால் தான் பலரும் போலீஸில் பிடிபடுவார்கள் என்று சொல்வார்.
துபாயில் இருந்து டிராண்சிட் பிளைட்டில் வந்த பொழுது 4 மணி நேரம் ஸ்ரீலங்காவில் இருக்க நேரிட்டது, தாழ்வாக விமானம் பறந்த பொழுது அந்த நாட்டின் அழகு ஈடு இனை இன்றி இருந்தது. சண்டை மட்டும் இல்லை என்றால் சுற்றுலா தலங்களில் முதன்மையாக வருவாய் ஈட்டும் வாய்பு உள்ள நாடு!
2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
தமிழீழம் சீக்கிரம் மலரவேண்டும் ஆனால் அப்படி மலரும் பொழுது தமிழ் மக்கள் அதை கொண்டாட இருக்கவேண்டும்,இப்பொழுது நடக்கும் சண்டைகளை பார்த்தால் குறைந்தது அதிகார பகிர்வு மூலம் அதிகாரத்துக்கு வந்தாவது உயிர்பலியை தடுக்கவேண்டும்.
3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
http://www.lankasrinew.com/
4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
அரசியல் அரசியல் அரசியல்!, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் கொடுக்கும் குரல்கள் சீசன் பிஸினஸ் போல் சீசன் அரசியல்!
5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
சொல்ல வார்தைகள் ஏதும் இல்லை! காலேஜில் படிக்கும் பொழுது பிரபாகரன் படத்தை வீட்டில் ஒட்டி வைத்திருந்தேன் அந்த அளவுக்குஅவரை பிடிக்கும், சில வருடங்களுக்கு முன்பு பிரபாகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வின் பொழுது அவருடைய செக்யூரிட்டி இருவர் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு இருந்தார்கள் அது எக்ஸ்ரே கிளாஸ் என்றும் அது போல் இந்திய தலைவர்களுக்கு கூட பாதுக்காப்புகிடையாது என்றும் சொன்னார்கள், அப்பொழுதும் முதன் முதல் வான் வழி தாக்குதல் நடத்திய பொழுதும் இருந்த மகிழ்ச்சி, பெருமை எல்லாம்கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது, இப்பொழுது எதைப்படித்தாலும் புலிகளுக்கு பின்னடைவு என்றே செய்திகள் வருகிறது.தமிழ்ச்செல்வன் இல்லாத குறை நன்றாக தெரிகிறது. பழயபடி புலிகளின் கை விரைவில் ஓங்க வேண்டும்.
மூன்று பேரை அழைக்கவேண்டும் என்பது தூயாவின் கட்டளை!
1) இலங்கை அரசியலை பற்றி மிகுந்த அனுபவம் உடையவரும், பிரபாகரனை நேரில் சந்தித்தவருமான ஆசிப் அண்ணாச்சியின் அப்பா திரு. அப்துல் ஜப்பார் http://smabduljabbar.blogspot.com/ (அண்ணாச்சி அப்பாவுக்கு கேள்வியை அனுப்பி பதில் வாங்கி போடுங்க, அவுங்க அனுபவத்தில் சொல்வது சிறந்ததாக இருக்கும்).
2) பினாத்தல் சுரேஸ் அவர்கள் இவரின் அரசியல் நிலைப்பாடு வித்தியாசமாக இருக்கும்.
3) பாரி அரசு அரசியல் பதிவுகளில் அதிரடி போடும் இவர் கொஞ்சம் நாட்களாக எழுதாமல் இருக்கிறார் அவரும் இதைப்பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.
Wednesday, October 22, 2008
கார்ட்டூன்ஸ் + டரியல் டக்ளஸ் 23-10-08




Tuesday, October 21, 2008
டரியல் டக்ளஸ்! + தன்னிலை விளக்கம்
டரியல் டக்ளஸ்: போன் செஞ்சா கஸ்டமர் நீங்கதான் எங்கள் தெய்வம் உங்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்கிறது ரெக்கார்ட் செஞ்ச ஒரு பெண் குரல் ஒரு அவசரத்துக்குபோன் செஞ்சப்ப 200 முறையாக!
டரியல் டக்ளஸ்: 300 யூனிட்டுக்கு மேல உபயோகிச்சா 50% அதிகம் வசூலிக்கப்படுமாம், முதலில் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் கொடுத்தா நாங்க 50% அதிகம் மீட்டருக்கு மேல போட்டுக்கொடுக்கிறோம்!
*********************************************************************
நண்பர் ஒருவர் நேற்று ஆன் லைனில் வந்தார் அடிக்கடி வராதவர் வந்து இருக்காரே என்று ஒரு ஹாய் சொன்னேன், அவர் உடனே என்னய்யா குசும்பா இன் விசிபிள் மோடில் இருக்க யாருக்கு பயந்துக்கிட்டு என்றார்?
நான் சொன்னேன் பயம் எல்லாம் இல்லை நான் ஆன் லைனில் இருந்தாலும் யாரும் என்னிடம் பேசபோவது இல்லை, ஆன் லைனில் இருந்தும் யாரும் பேசமாட்டேங்கிறாங்களே என்று எதுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு அதான் இன் விசிபிளில் இருந்தாலாவது அதனால் தான் பேச மாட்டேங்கிறாங்க போல என்று மனச தேத்திப்பேன் என்றேன்.
நண்பன் என்னது யாரும் உன்னிடம் பேசமாட்டேங்கிறாங்களா என்றார்?
இல்லை இல்லை அப்படி சொல்லமுடியாது உன்னை மாதிரி வேலை, வெட்டி இல்லாதவங்க யாரும் அப்ப அப்ப பேசுவாங்க என்றேன்.
அதன் பிறகு அவரும் பேசவில்லை:((
என் மெயில் ஐடி kusumbuonly@gmail.com நீங்க சாட் செய்ய ரெடியா:))))
***************************************************************
இன்று பிளீச்சிங் பவுடர் பற்றி ஒரு மொக்கை போட்டு இருந்தேன் அதுபோல் நேற்று இரவே பதிவு வந்துவிட்டது என்றார்கள் அதான் அதை டெலிட் செஞ்சுட்டேன்.
Sunday, October 19, 2008
கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும் இந்த பதிவு!
சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?
மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான் என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம், போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம் வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள் (கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது கண்டிப்பாக சாம்பார்தான்.
ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.


நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல் கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.

இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி பிரச்சினை இல்லை.
சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ் கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன் புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.
சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)
ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!
கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு என்ற அவசியம் இல்லை).
வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல் இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து போய்விட்டது)
இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
Wednesday, October 15, 2008
நேற்று நடந்த அனைத்துகட்சி கூட்டம் ஒரு கற்பனை!!!
ஜீ.கே.மணி: ஏற்கனவே தாங்கள் கேட்டுக்கொண்ட படி தந்தி அனுப்பும் போராட்டம் என்ன ஆனது அதுக்கு வெள்ளை அறிக்கை தரவேண்டும் என்று தமிழ் குடிதாங்கி கேட்க சொல்லி இருக்கிறார்.
கலைஞர்: தந்திகள் லட்சகணக்கில் கழக தொண்டர்களும், பொதுமக்களும் திருவிழா கூட்டல் அலையலையாய் அஞ்சல் அலுவலகத்துக்கு சென்று தந்தி அனுப்பினார்கள், ஆனால் அதில் சிறு பிழை நடந்துவிட்டது, அனுப்பியவர்கள் அனைவரும் தமிழிலேயே அனுப்பிவிட்டார்கள் பிரதமருக்கு தமிழ்படிக்க தெரியாது, அனுப்பியவர்களுக்கு ஹிந்தி தெரியாது, இதுவே கனிமொழி அமைச்சர் ஆகி இருந்தால் அவருக்கு அனைத்தையும் கவிதை நடையில் மொழிப்பெயர்த்து படிச்சு காட்டி இருப்பார், அதனால் கனி மொழிக்கு விரைவில் அமைச்சர் பதவி வாங்கியபின் அனைத்து தந்திகளையும் படிச்சு காட்டி அவசர நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்புமணி: புகைப்பிடிப்பது குற்றம் என்று சொல்லி இங்கு புகையை தடை செய்து இருக்கிறோம், ஆனால் இலங்கையில் ஆயிரம் ஆயிரம் குண்டுகள் போட்டு அந்த புகையினால் பலர் உயிர் இழக்கிறார்கள், ஆகவே பொது இடத்தில் குண்டு போடக்கூடாது என்று நாங்கள் ஆட்சிக்கு வரும் பொழுது ஒரு சட்டம் போடுவோம்.
கலைஞர்: அன்பு தம்பி இலங்கையில் புகையால் தமிழர்கள் மடிவதில்லை சிங்களரோடு இருக்கும் பகையால் தான் மடிகிறார்கள்!
வரதராஜன்: இதுக்காகதான் நாங்கள் அனு ஆயுத ஒப்பந்ததுக்கு எதிப்பு தெரிவித்தோம், அந்த ஓப்பந்தத்தில் இருக்கும் 123 என்ன சொல்லுதுன்னா அதில் இந்தியா கையெழுத்து போட்டபின் இலங்கைக்கு தமிழர்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்துக்கு எதிர்த்து குரல் எழுப்புவதை அது தடை செய்யும்.
கலைஞர்: வரது அதில் இருந்து வெளியே வாங்க ஒப்பந்தம் எல்லாம் முடிஞ்சு கையெழுத்தும் போட்டு முடிச்சாச்சு!!!
வரதராஜன்: என்னது கையெழுத்து போட்டுவிட்டாங்களா? (என்பதையே திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருக்கிறார்!)
கலைஞர்: காங்கிரஸ் சார்பில் ஒன்னும் கருத்து சொல்லவில்லையே!
காங்கிரஸ்1: அன்னை சோனியா...
காங்கிரஸ்2: இருங்க நாங்க சொல்றோம்...
காங்கிரஸ்3: என்னைதான் பேச சொல்லி இருங்காங்க ...........
காங்கிரஸ்4: உனக்கு என்னய்யா பேச தெரியும்..............
காங்கிரஸ்5: ராகுல் காந்தி என்ன சொல்லி அனுப்பி...
டம் டும் டிஸ்யும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(சண்டை)
கலைஞர்: அமைதி அமைதி இலங்கை வாழ் தமிழர் நலன் காக்க கூடிய இடத்தில் நாமே அடிச்சுக்கலாமா? சகோதரயுத்தம் வேண்டாம் காங்கிரஸ் சார்பா நானே கருத்து சொல்லிக்கிறேன் நீங்க எல்லாம் பேசாம வேடிக்கை பாருங்க.
G.K.மணி: எங்கள் கருத்து எங்கள் தலைவர் கருத்து என்னவென்றால் கொழும்பு விரிவாக்க பணியை நிறுத்தவேண்டும் மீறி அரசு விரிவாங்கம் செய்ய நினைத்தால் ஆங்காங்கே போராட்டம் நடைப்பெறும்.
கலைஞர்: என்னது கொழும்பு விரிவாக்க பணியா? என்ன மணி சொல்றீங்க.
G.K.மணி: தவறு நடந்துவிட்டது தலைவர் வைத்து இருக்கும் ரெடிமேட் அறிக்கை இது, அரசு திட்டம் எது வந்தாலும் அதை எதிர்க்க வைத்து இருந்த அறிக்கைமாடல் இது, சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்பதை மட்டும் மாற்றி துனை நகரம், என்று மாற்றி அறிக்கை கொடுப்போம். அதோ போல் தவறு நடந்துவிட்டது.
கலைஞர்: திருமா நீங்க சொல்லுங்க
திருமா: வாழ்க தமிழ், தமிழுக்காக வாழும் கலைஞர் வாழ்க!!!
கலைஞர்: இதையேதான் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கீங்க இங்க வேறு ஏதாவது சொல்லுங்க.
திருமா: வேறு ஏதுமா? ம்ம்ம் எழுதிக்கிட்டு வரவில்லையே!
அன்புமணி: மக்கள் வணக்கம், தமிழ்பேசு தங்ககாசு.....
கலைஞர்: என்ன அன்புமணி ?
அன்புமணி: மன்னிக்கவும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்சி நிரலை படிச்சிட்டேன்.
கலைஞர்: 8 மணிக்கு முன்பு கூட்டத்தை முடிக்கவேண்டும் 8.30க்கு ஒரு கேசட் வெளியீட்டு விழாவும் அதன் பிறகு மானாட மயிலாடவும் இருக்கு பார்க்க போகனும்.ஆகையால் அனைவரது கோரிக்கையும் ஏற்று பிரதமருக்கு அனைவரும் SMS அனுப்புவோம் என்று முடிவு எடுக்கப்படுகிறது.
அன்புமணி: அய்யய்யோ அப்பா திட்டுவார் அவரு சொன்னதை சொல்லாமல் விட்டால், அவரு இன்னும் இருவாரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டஎங்கள் கட்சி எம்.பிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று சொல்ல சொன்னார்.
ஜி.கே.மணி: தம்பி அப்பா கொடுத்த பேப்பரில் எங்கள் கட்சி எம்.பிகள் என்றுதானே இருக்கு, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட என்று வார்த்தை இல்லையே!
அன்புமணி: சும்மா இருங்க உங்களுக்கு என்னா நீங்க எம்.எல்.ஏ அப்படி சொல்லாம விட்டா என்னையும் நாளை ராஜினாமா செய்யசொல்லிடுவார்!
கலைஞர்: என்ன சோதனை இது ஏதோ ஒரு கூட்டம் கூடி ஒரு கடிதம் எழுதலாம், இல்ல எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என்று பயங்கர போராட்டங்களை அறிவிக்கலாம் என்று நினைச்சால் இப்படி ஒரு குண்ட தூக்கி போடுகிறார்களே! அவ்வ் இருந்தாலும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட என்று ஒரு வார்த்தைய சேர்த்து இருக்கிறார். கனிமொழி தப்பிச்சாங்க!!!
கலைஞர்: வரும் அண்ணா பிறந்நாள் அன்று இதை அறிக்கையாக தரலாமா தம்பி!!!
சரி என்று சொன்ன அன்புமணி இல்லை இல்லை இப்பொழுதே அறிவிக்க சொல்கிறார் அப்பா, இனி அடுத்த வருடம் தான் அண்ணா பிறந்தநாள் வரும் அதுக்குள் மத்திய அரசு 5 ஆண்டு முடிவடைந்துவிடும் என்கிறார்.
வேறு வழி இல்லாமல் இதை அறிக்கையாக தருகிறார் கலைஞர்.
அனைத்து கட்சி தலைவர்களும் தடை இல்லாமல் இரு மணி நேரம் மின்சாரம் வழங்கிய அமைச்சரை பாராட்டிவிட்டு வெளியே வருகிறார்கள்.
வீரமணி: வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கவேண்டிய முடிவை தலைவர் கலைஞர் எடுத்து இருக்கிறார், அதுக்காக அவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும்.
Tuesday, October 14, 2008
தவறு மேல் தவறு செய்யும் பரிசல்காரன்!!!
தாங்கள் செய்த தவறுகள் லிஸ்ட் இதோ!!!
1) தாங்கள் எழுதும் பதிவுகள் வர வர பெரிதாகிகொண்டே போகிறது.
2) அப்படி எழுதிய பதிவை என்னை படிக்க வெச்சது( என்னை எழுத அழைத்ததால்)
3)படிக்க வெச்சது மட்டும் இன்றி இம்மாம் பெரிய பதிவை என்னை எழுத வெச்சது.
பதிவுலகில் ஒரு உண்மை தமிழன் போதும், இது எச்சரிக்கை.
இனி உங்கள் கேள்விகளுக்கு பதில்
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது நினைவு இல்லை வீட்டுக்கு அருகிலேயே சித்தப்பாவின் டூரிங் டாக்கிஸ் இருந்ததால் தினம் படம் தான்.நினைவு தெரிந்து பார்த்த படம் என்று சொல்வதை விட விவரம் தெரிஞ்சு பார்த்த முதல் படம் ஹை ஹீல் கேர்ள்ஸ் கும்பகோணம் விஜயாவில், படம் பேருக்கு ஏத்தமாதிரி கணுக்காலுக்கு மேல கூட காட்டவில்லை. தியேட்டரில் மூட்டைபூச்சி கடி அதனால் வீக்கத்தை உணர்ந்தேன்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
குசேலன் -ஷார்ஜா கான்கோர்டில்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
திருட்டு வீ.சி.டியில் படம் பார்ப்பது இல்லை அதனால் காத்திருந்து பொல்லாதவன் படம் ஒரிஜினல்பிரிண்டில் பார்த்தேன். என்ன உணர்ந்தேன் என்றால், வயிறு புல் ஆனது போல் உணர்ந்தேன் மனைவி போட்டு கொடுத்த கார்ன் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பார்த்ததால்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா!
வீரம் விளைஞ்ச மண்ணு- எப்படி தாக்கினுச்சின்னு சொல்றேன். அன்று வழக்கம் போல் காலேஜ்க்கு போய் எல்லா புரொபசரும்ஒழுங்கா வந்து இருக்காங்களான்னு ஸ்டாப் ரூமில் எட்டி பார்த்தா அம்புட்டு பேரும் லீவ் எடுக்காம கரீட்டா வந்து இருக்காங்க, இதுகதைக்கு ஆவாது எல்லாரும் வந்து இருக்காங்க பிளேடு போட ஆரம்பிச்சா தாங்காது வாங்கடா படத்துக்கு போகலாம் என்று கிளம்பி போனோம். நான் பேசிக்கா நடக்க அலுப்பு படும் சோம்பேறி,அதனால் ரயிலை விட்டு இறங்கியதும் தஞ்சை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இருக்கும் ராஜராஜன் தியேட்டருக்கு போகலாம் விஜயகாந்து படம் ரிலீஸ் ஆகி இருக்கு போகலாம் என்றேன், நாங்க மொத்தம் 20 பேர் சரி என்று வந்தார்கள் படம் போட்டு அரை மணி நேரம் கூட ஓடவில்லை,அத்தனை பேரும்போட்டு கும்மி எடுத்தானுங்க. அன்னைக்கு விட்டது விஜயகாந்து படம் பார்ப்பதை.ரொம்ப தாக்கிடுச்சு:(
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
பாபா படத்து பொட்டிய தூக்கிட்டு போய் பா.ம.க செய்த ரகளை.படம் ஓடக்கூடாது என்பதற்கா ஏன் அம்புட்டு வெயிட்டை தூக்கிட்டு ஓடினார்கள் என்று தெரியவில்லை, பெட்டிய தூக்கிட்டுஓடாமல் இருந்தாலும் ஓடி இருக்காது.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு படத்தில் சிம்புவும், ஹீரோயினும் கடலுக்குள் நின்று டாண்ஸ் ஆடும் பொழுது ஒருவர் மேல தண்ணிய வாயில் இருந்து பீச்சி அடித்து எச்சி துப்பி விளையாடுவாங்க,கரீட்டா அவுங்க எச்சி துப்பி விளையாடும் தொழில்நுட்பம் ரொம்ப தாக்கியது.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அட தமிழ் சினிமா பற்றி வாரமலரி வரும் துணுக்கு மூட்டை, சினி கூத்து, குடும்ப மலரில் வரும் சினி சிப்ஸ் எல்லாம் கரீட்டா படிச்சுவிடுவேன். நம் பிளாக்கர் தமிழ் சினிமா அவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்கிறேன்.
7.தமிழ்ச்சினிமா இசை?
ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும், மற்றப்படி ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா என்ற ரீதியிலான கும்மாங்குத்து பாடல்களே அதிகம் விரும்பி கேட்பேன். சமீபத்தில் மந்ரா என்று(படம் பெயர் என்று நினைக்கிறேன்) “செல்லப்பிள்ளை” என்று ஒரு பாட்டு டிவீயில் பார்த்தேன் அடா அடா என்னா ஆட்டம் , அடிக்கடி அதோட டிக்கியில் கொசு கடிச்சுது போல அடிக்கடி டிக்கியில் அடிச்சு அடிச்சு டான்ஸ் ஆடினது பாருங்க ம்ம்ம் செம பாட்டு செம டான்ஸ்!(கடைசி வரை அந்த கொசு அடிப்பட்டுதா இல்லையான்னு தெரியலை) பாட்டை பற்றி விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தமிழ் தவிர உலக மொழிப்படம் என்றால் காலேஜ் படிக்கும் காலத்தில் சைனீஸ்,ஜப்பானீஸ்,ரஷ்யா,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று பல உகல படங்களை பார்த்து இருக்கிறேன்.எல்லாமே செம தாக்குதான்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
(ஒரு நேரத்தில் ஒரு கேள்வி கேட்டாலே பேபேன்னு முழிக்கும் ஆள் இப்படி வரிசையா கேட்டா எப்படி?)
நேரடி தொடர்பு இருந்தது, சேது படத்து தயாரிப்பாளர் குடும்ப நண்பர் அதுக்காக படம் எடுத்தது எங்கள் ஊரில் தான் 6 மாதம் அவர்களோடுதான் இருந்தேன். அதை மீண்டும் செய்வீர்களா? பாலா திரும்ப எங்க ஊருக்கு படம் எடுக்க வந்தால் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? இப்ப தமிழ் மேம்பட பிளாக் எழுதுவது போலவா!!!:)
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
லக்கினம் 4ல் நமீதாவும், 7ல் ஸ்ரேயாவும் இருப்பதாலும் நயன்தாரா திசை நடப்பதாலும் தமிழ்சினிமாவுக்கு உடை பஞ்சம் ஏற்படும்,அதிக பஞ்சம் வர வர ரசிகர்கள் குளுமையாகவே இருப்பார்கள். ராகுவில் ஜே.கே ரித்திஸ் இருப்பதால் அடிக்கடி நல்ல காமெடி படம் கிடைக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நோ பிராபளம், யாரடி நீ மோகினி படத்தில் நடிச்ச அந்த குட்டி பொண்ணு போட்டோவை வெச்ச ஒரு வருடத்தை ஓட்டிவிடலாம்.தமிழர்களுக்கு என்ன ஆகும் பணம் மிச்சம் ஆகும், பொழுது போக்கு ஒன்னும் இல்லாததால் மக்கள் தொகை பெருக்கம் அதிகம் ஆகும்.
இதுபோல் எழுத நான் அழைக்கப்போகும் 5 பேர்
1)அகில உலக குறும்பட வித்தகரும், குறும்பதிவரும் ஆன -- அண்ணன் உண்மை தமிழன் (உங்க பெயருக்கு பின்னாடி நீங்க போடும் நம்பர் தெரியவில்லை கோச்சுக்காதீங்க)
2) சிங்கப்பூர் தமிழ்குடிதாங்கியும், அநியாயத்துக்கு எதிரா பொங்கும் பொங்கல்பாண்டியும், பதிவர் மாநாடு ஆர்கனைசரும், சிங்கப்பூர் பதிவர் சங்க போர் வாளும் ஆன நண்பர்- ஜோசப் பால்ராஜ்
3) இன்று பிறந்தநாள் கொண்டாடும் மது மதி
4) ஷங்கரின் அடுத்தப்படத்துக்கு கேமிரா மேன் ஆக வேலை செய்யப்போகிறவரும், நோய்யினில் விழுந்தவரும், வலையுலக மார்கண்டேயனுமான நந்து தாத்தா of நயன்தாரா
5) ஆராய்சி கட்டுரையும், அறிவியல் சிறுகதையும் எழுதும் இளம் சைன்டிஸ்டும் ,விஜய்க்கு அடுத்தப்படியாக வலையுலகில் டாக்டர் பட்டம் வாங்க தகுதி உடைய ஆளும் ஆன விக்கி என்கிற விக்னேஷ்வரன்