Monday, December 22, 2008

டரியள் டக்ளஸும் பின்னே ஞானும்!

காங்கிரஸ் தல : தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்சிகளையும் தமிழக காங்கிரசார் நன்கு அறிவர்!

டரியள் டக்ளஸ்: ஓ அப்படியா இருங்க உங்கள் அறிவு திறனை சோதிக்கும் வகையில் ஒரு கேள்வி, வேளச்சேரி அம்மன் திருவிழா நிகழ்சியில் மூன்றாவதாக ஜிமிக்கி சட்டை போட்டுகுத்தாட்டம் போட்ட நடிகை யாரு? எங்கே சொல்லுங்க பார்க்கலாம்.

காங்கிரஸ் தல :நமது கட்சி மேலிடமும் இச்சம்பங்களை கூர்ந்து கவனித்து வருகிறது!

டரியள் டக்ளஸ்: ரொம்ப கூர்ந்து பார்த்தா கண் வலி வந்துடும் கொஞ்சம் கண்ணை சிமிட்டிக்க சொல்லுங்க!

காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!

டரியள் டக்ளஸ்: அப்படி போனது உங்க தப்பு, E.C.R வழியில் சென்றால் நல்லா பீச் காத்தும் வாங்கலாம், பசிச்சா திங்க சுண்டலும் வாங்கலாம்!

காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!

டரியள் டக்ளஸ்: என்னங்க இதுக்கு எல்லாம் கவலைபட்டுக்கிட்டு பாதி புஷ் ஆகிட்டீங்க இப்ப எல்லாம் ஷூவால் அடி வாங்குவதுதான் பேசன்!

காங்கிரஸ் தல :சத்தியமூர்த்தி பவனுக்கு தாக்க வருபவர்கள் தைரியமிருந்தால் தேதி சொல்லிவிட்டு வரட்டும் அப்படி வந்தால் அவர்களை நாங்கள் நேருக்கு நேர் சந்திக்க தயார்!

டரியள் டக்ளஸ்: அவுங்க என்னா வசந்த பவனுக்கு காப்பி சாப்பிட நண்பர்களோடவா வராங்க தேதி டைம் எல்லாம் சொல்லி வர!
அப்புறம் கிட்ட வாங்க ஒரு ரகசியம் முதலில் வாசனை நேருக்கு நேர் சந்தியுங்க அப்புறம் பேசுவோம்!

*********************பின்னே ஞானும்**********************************
போன வாரம் ஒரு மாலை நேரம் நானும் மனைவியும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றோம் அவர் கொஞ்சம் உறவு முறையில் கூட வரும், ஆனால் அத்தனை பழக்கம் கிடையாது. இங்கு வந்த பிறகுதான் பழக்கம் என் ஊருக்கும் அவர் ஊருக்கும் குறைந்தது ஒரு 10கிமீ தூரம் இருப்பதால் கொஞ்சம் தூரத்து சொந்தம் என்று கூட சொல்லலாம்.

அவருடைய அப்பாவும் ஊரில் இருந்து வந்து இருக்கிறார், அவர் அப்பாவிடம் இவரும் நம்ம ஊர் பக்கம் தான் என்று சொல்ல அவர் ஊர் பெயரை கேட்க நானும் சொன்னேன் பின் அப்பா பெயரை தாத்தா பெயரை எல்லாம் கேட்டார் சொன்னேன் பின் மனைவியிடம் மனைவி படிச்சது என்ன ஊர் என்று கேட்க ஊர் பெயரை சொன்னதும் அதற்கு அவர் அந்த ஊரில் என் சாதி பெயரை சொல்லி “--------” குடும்பங்களுமா இருக்கு? யார் பொண்ணுமா நீ என்று கேட்க, மனைவிக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை, நான் உடனே அவுங்க “...........” இல்லை அவுங்க வேறு என்று சொன்னேன்.

டக்கென்று ஒரு நிமிடம் பேசாமல் இருந்தவர், நானும் சாதி எல்லாம் பார்ப்பது இல்லை இதை எல்லாம் ஆதரிப்பவன் என்றார். இரண்டு மணி நேரம் 28 நிமிடம் பலான பலான மேட்டரை காட்டிவிட்டு கடைசி 2 நிமிடம் இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று மெசேஜ் சொல்லும் படம் போல!பேசியது எல்லாம் சாதியை பற்றி பேசிவிட்டு கடைசியில் நானும் சாதி எதிர்பாலன் என்று சப்பைகட்டு வேறு! பெருசுங்களா கொஞ்சம் திருந்துங்க!

இதை எழுதும் பொழுது சில பதிவர்கள் நினைவுக்கு வந்தார்கள் அவர்கள் எழுதும் பொழுது எல்லாம் கீபோர்ட் தேய சாதி எதிர்ப்பை பற்றி எழுதிவிட்டு, பழகும் பொழுது என்னை பார்த்து கேட்ட முதல் வார்த்தை நீ என்னசாதி?

சாதிய ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் என்று கூப்பாடு போடும் ஆட்கள்தான் சாதிய பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அது சரியா!

29 comments:

said...

நீங்க கலாய்க்கிற சாதி'தானே??? :)

said...

Well said!!!

said...

சர்தான் தல..

said...

இந்த மாதிரி பெருசுங்கள திருத்தவே முடியாது குசும்பன். இணையத்தில எழுதுற சில சிறுசுங்களும் அப்படிதான்.

இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி. லூசுல விடுங்க.

இப்படி கோவப்படுறீங்க ஒரு வேளை நீங்க "********" ஜாதியா இருப்பீங்களோ?

said...

நான் அசைவம் சாப்பிடுவதும் என் மனைவி சைவம் சாப்பிடுவதும் பார்த்து இப்படி சில சந்தேகங்களை எழுப்புபவர்கள் உண்டு, ஆனால் நேரடியாக என்ன சாதி என்று கேட்டதில்லை. அதற்கு பதிலாக ஊர் பெயரைச் சொன்னால் "நீங்க அந்தக் கட்சி உறுப்பினரா?" என்று குறிப்பிட்ட கட்சியின் பெயரைச் சொல்லிக் கேட்பார்கள்.

தலைப்பில் ஒரு சின்ன தவறு இருக்கோன்னு தோணுது. மூன்றாவது நபராக உங்களைச் சேர்த்துக்கொண்டால் "பின்னே ஞானும்" என்பது சரி (உதா: வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்"). "டரியல் டக்ளஸும் ஞானும்" என்பதே சரியாக இருக்கும்ன்னு தோணுது.

said...

சாதிய ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் என்று கூப்பாடு போடும் ஆட்கள்தான் சாதிய பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அது சரியா!
//

unmai, unmai, unmai.

said...

இராம்/Raam said...
நீங்க கலாய்க்கிற சாதி'தானே??? :)//

அதே அதே!!!

******************************
கபீஷ் நன்றிங்கோ!!!
******************************
நன்றி தாமிரா
*****************************
நான் ஆதவன் said...
இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி//
இது எப்ப நடந்துச்சு?:)))
****************************
வணக்கம் KVR கட்சி பெயரை வைத்து எல்லாம் ஜாதியை ஒரு சில பகுதியில் தான் கண்டுபிடிக்க முடியும், எங்க தஞ்சாவூர் பக்கம் முடியாது.

நீங்க சொன்னது சரிதான்! வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும் (நீங்க இல்லை என்னை சொல்லிக்கிட்டேன்) என்றுதான் வரனும் ஆனா வாசந்தியும் லஷ்மியும் எப்பவருவாங்க?:))))))

****************************
புதுகை.அப்துல்லா நன்றி!

Anonymous said...

வேதனையான செயல்..

said...

இராம்/Raam said...
\\\
நீங்க கலாய்க்கிற சாதி'தானே??? :)
\\\

ரிப்பீட்டு...:)

said...

\\
என் ஊருக்கும் அவர் ஊருக்கும் குறைந்தது ஒரு 10கிமீ தூரம் இருப்பதால் கொஞ்சம் தூரத்து சொந்தம் என்று கூட சொல்லலாம்.
\\

அட இதத்தான் தூரத்து சொந்தம்னு சொல்றாய்ங்களோ...;)

said...

டரியல்: கலகல

பின்னே ஞானும்: பொறுக்கல... லூஸுல விடுங்க தல...

said...

சாதி இரண்டொழிய வேறில்லை - இட்டார் - இடாதோர் - அவ்வளவே
ட/ட நல்லாவே இருக்கு

said...

கல கல கலக்கல் ...

said...

சாதியப் பற்றி பேசியே பாலாப் போறாங்க

said...

உண்மை தான்...
கண்ணா பின்னாவென்று வழி கிழி மொழிகிறேன்

said...

//பெருசுங்களா கொஞ்சம் திருந்துங்க!//

சிறுசுங்கள திருந்த விட்டாலே போதும்.

said...

சாதிய அடையாளம் ஒழிப்பது கண்டிப்பாக இப்போதைக்கு முடியாது.ஆனால் அனைத்து சாதியும் சமம் என்ற நிலையை அடைய வைத்தாலே பெரிய வெற்றிதான்.

said...

சூப்பர்!

சரியான குட்டு வைத்த குசும்பன் வாழ்க!

said...

//நானும் சாதி எதிர்பாலன் என்று சப்பைகட்டு வேறு! //
சாதியை எதிர்ப்பவர் தான் .. பிற சாதியை

Anonymous said...

//சாதிய ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் என்று கூப்பாடு போடும் ஆட்கள்தான் சாதிய பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அது சரியா! //

நூறு சதவீதம் சரி

said...

சாதிகள் இல்லையடி பாப்பா

said...

//காங்கிரஸ் தல : தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்சிகளையும் தமிழக காங்கிரசார் நன்கு அறிவர்!//

நிஜமாத் தான் சொல்ரிங்களா?

said...

இனிமே யாராவது என்ன சாதின்னு கேட்டா ஆண்சாதின்னு சொல்லிருங்க!

said...

வேதம் புதிது பாலத் தேவர் கதை தான் :))

said...

:) அவர் ரொம்ப நேரம் ஜாதி பத்தி பேசினாரா... அதெல்லாம் சொல்லவே இல்லையே பதிவில் சொல்லி இருந்தால்**** என்னன்னு கண்டுபிடிச்சிருக்கலாம்..

said...

அவரை நீங்க ஏன் அவ்வளவு நேரம் பேசவிட்டீங்க?!

said...

/இராம்/Raam said...

நீங்க கலாய்க்கிற சாதி'தானே??? :)
/

ரிப்பீட்டேய்...!

said...

:)
-----
:(

said...

Well said!!!