
(தேர்தல் சமயத்தில் எழுதியது... இருந்தாலும் அடுத்த தேர்தலுக்கு உதவும்)
தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று நூறு பக்கம் கொண்ட தேர்தல்அறிக்கை வெளியிடுகிறார்,பின் பொது கூட்டதில் பேசிகிறார் என்று செய்தி வெளியாகிறது.அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை,இருந்தாலும் மணம் தளராத கேப்டன் மாலை மூன்று மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.
முதல் பக்கம் வழக்கம் போல் நான் ஆட்சிக்கு வந்தால் என்று ஆரம்பித்து,
சர்வதேச தீவிர வாதி ஓசமா பின்லேடனையும் ,பாகிஸ்தான் போய் தாவூத் இப்ராகிமையும் பிடிப்பேன். பால்,பேப்பரை போல் ரேசன் உங்க வீடு தேடி வர வழைப்பேன்.
ஊழல் இல்லாமல் நேர்மையான ஆட்சியை தருவேன்.இது போல் நூறு வாக்குறுதிகளை கொடுத்து இருக்கிறார், கடைசியாக நான் முதல் அமைச்சர் ஆனால் இனி படங்களில் நடிக்காமல் உங்களுக்கு சேவை செய்வதே என் வேலையாக இருக்கும், இல்லை என்றால் தோல்விகளுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் மேலும் ஒரு வருடத்துக்கு 100 படம் என்று அடுத்த தேர்தலுக்குள் சுதேசி போல் 100 படத்தில் நடித்து பணம் சேர்த்து என் சொந்த பணத்தை எடுத்து கொண்டு திரும்ப வருவேன் .
இந்த செய்தி காட்டு தீ போல் பரவுகிறது, கேப்டன் முதல் அமைச்சர் ஆனால் இனி படத்தில் நடிக்கமாட்டார் என்று.எதோ புரட்சி நடந்தது போல் மக்கள் அனைவரும் கேப்டனுக்கு தான் வாக்களிக்க போவதாக பேசிக்கொள்கிறார்கள்,அது மட்டும் இன்றி பொது கூட்டத்திற்க்கும் வரலாறு காணாத கூட்டம்.இதை அறிந்த தமிழ் நாடு உளவு துறை போயஸ் கார்டனுக்குள் பயந்து பயந்து உள்ளே நுழைகிறது.
அம்மா கோபத்தில் எப்படி இது போல் நடந்தது பொது கூட்டத்துக்கு கூட ஏதோ மாநாடு போல் எப்படி இவ்வளவு கூட்டம் வரும் என்று முன் கூட்டியே தெரியாமல் போனது எப்படி என்கிறார்,அவருக்கே இது தெரியாது அம்மா.என்கிறார்கள், அப்பொழுது வைகோவும் வருகிறார் என்ன அம்மையாரே நீங்க எல்லாம் பார்த்துகொள்விர்கள் என்றுதான் நான் இங்கு வந்தேன் இப்ப என்ன டா என்றால்ஒரே ஒரு தேர்தல் அறிக்கையால் தமிழ்நாட்டையே தன் பக்கம் திருப்பி விட்டு விட்டாரே அப்படி என்னதான் நல்லது செய்ய போகிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்று உளவு துறையை பார்த்து கேட்கிறார், அவர்கள் தயங்கி தயங்கி முதல் அமைச்சர் ஆனால் இனி படத்தில் நடிக்காமல் மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொல்லி இருக்கிறார், இல்லை என்றால் வருடத்திற்கு 100 படம் வீதம் நடித்து பணம் சேர்த்து கொண்டு திரும்ப வருவேன் என்று சொல்லி இருக்கிறார் இதனால் தான் அனைவரும்ஒரே நாளில் மாறி விட்டனர்,
சரி சரி இதை எப்படி மாற்றுவது என்று எனக்கு தெரியும் நீங்க எல்லாம் போங்க ,நம்ம ஆதரவு வார இதழ், நாள் இதழ் ஆட்களை எல்லாம் கூப்பிடுங்க என்கிறார்,அதற்கு உளவு துறை தயங்கி தயங்கி அப்படி இப்பொழுது யாரும் இல்லை அம்மா, அவர் முதல் அமைச்சர் ஆக வில்லை என்றால் திரும்ப அவர் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் எழுத வேண்டி இருக்கும் என்ற பயத்தி எல்லாரும் அவர் பக்கம் போய் விட்டனர் என்கிறனர்.கோபத்தின் உச்சிக்கே சென்ற அம்மா போனில் யாரிடமோ பேசிகிறார்.
இதற்கிடையில் கலைஞர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார் அவர் பிடிபேன் என்று சொன்ன தீவிர வாதி தாவூத் இப்ராகிமும், இவரை வைத்து படம் எடுத்த இப்ராகிம் ராவுத்தரும் ஒரே ஆள் தான் என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது. இதனால் இவரை பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்கிறார்.
மறு நாள் காலை கேப்டன் வீட்டில் ஸ்டிபன் ஸ்பீல் பெர்க் கேப்டனை பார்க்க கால் கடுக்க காத்து கொண்டு இருக்கிறார். கேப்டன் உதவியாளர் ஓடி போய் இவர் வந்து இருக்கும் விசயத்தை கேப்டனிடம் சொல்கிறார். அவர்தான் ஜீராசிக் பார்க் படத்தை எடுத்தவர் என்று சொல்கிறார்.அதற்க்கு கேப்டன் அவர் எதற்கு என்னை பார்க்க வந்து இருகிறார் என்று கேட்க்க உதவியாளர் மனசுக்குள் ஏதும் கரடியை வைத்து படம் எடுக்க இருக்கும் என்று சொல்கிறார்.
சரி என்று ஸ்டிபனை கேப்டன் சந்திக்கிறார்.
ஸ்டிபன் தான் ஒரு சர்வதேச தீவிரவாதிகளை பற்றி ஒரு படம் எடுக்க போவதாகவும் அதற்க்கு நீங்க தான் பொருத்தமான ஆள் என்றும் இது இரண்டாயிரம் கோடி பட்ஜெட் படம் என்றும் உங்களிக்கு 500 கோடி சம்பளம் ,மற்றும் அமெரிக்காவில் வெளியிடும் உரிமையும் தருவதாக சொல்ல அதை கேட்ட விஜய காந் சிரித்து கொண்டு கேட்டு கொண்டு இருந்தவர் திடிர் என்று சுவற்றில் கால் வைத்து எகிறி அவரை உதைவிடுகிறார்.அடி மேல் அடிவாங்க உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார், (நீங்க நிறைய பணம் கொடுத்தா திரும்ப நடிக்க போய் விடுவீங்க என்று மக்களை நம்ப வைக்கவும் உங்களுக்கு மக்கள் சேவை இரண்டாம் பச்சம்தான் என்றும் நம்ப வைக்க என்னை அன்னை அனுப்பியதாக உண்மைய ஒத்து கொள்கிறார்.)
என்னை மண்னித்து விடுங்கள் என்று அழுகிறார், சரி சரி பிழைத்து போ என்று சொல்கிறார் கேப்டன், ஓட முயற்ச்சி செய்த ஸ்டிபனை தடுத்த கேப்டன் அவர் சட்டை பையில் இருந்த பேனாவை எடுக்கிறார், ஸ்டிபன் பயத்தில் இது இது ...எப்படி உங்களுக்கு தெரிந்தது என்று கேட்க்க .டேய் நான் நான் நரசிம்மாவுல புறா காலில் இருந்த கேமராவையை கண்டு பிடித்த ஆள்டா நீ என்ன பிஸ்கோத்து.என்று விரட்டி விடுகிறார். பின் pen கேமராவை பார்த்து பேச ஆரம்பிக்கிறார் அதை பார்த்து கொண்டு இருந்த அம்மா கோபத்தில் கத்த வைகோ துண்டை தலையில் போட்ட படி விஜயகாந் வீட்டை நோக்கி காரில் போகிறார்.
இப்படி ஒரு அறிவிப்பை கேப்டன் வெளியிட்டால் நீங்க கேப்டனுக்கு ஓட்டுபோடுவீங்களா மாட்டீங்களா?