Wednesday, June 30, 2010

பதிவர்கள் போட்டோ டூன்ஸ்

ஆஆஆஆஆஆஆதி ( பெயர்காரணம் விளங்கியது)& அப்துல்லா
சஞ்சய் & சோசப்பு
மங்களூர் சிவா, வெங்கி,வெயிலான், திரும்பவும் அதே கிராதகன் & பரிசல்


எல்லோரையும் அண்ணன் தங்கச்சியா நினைக்க சொன்னார் விவேகானந்தர், நம்ம பரிசல் அனைவரையும் வாசகரா நினைப்பார்.
வால்பையன் & மங்களூர் சிவா
வால்டர் வெற்றிவேல் விஜயகுமார் மாதிரியான கதிர் அண்ணா & நந்து

வெங்கி

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சார்லி முட்டை முட்டை முட்டை கோடு கோடு கோடுன்னு ஒரு நோட் முழுவது எழுதுவாரே அதுமாதிரி!

கார்க்கி & உள்ளே எந்த தோழின்னு தெரியல


Tuesday, June 29, 2010

பஸ்ஸ் மொக்கைகள்

கலைநயத்தை காட்ட இவிங்களுக்கு வேற இடமே இல்ல போல ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்தேன், உச்சா போவ இடத்தை தேடி கண்டுபிடிச்சு கதவ திறந்துக்கிட்டு போனா படத்தில் வட்டம் போட்டு காட்டியது போல பானை நிறைய இருந்துச்சு என்ன டா இது இதுலயா ஒன்னுக்கு அடிக்கனும் அதுவும் உயரமா இருக்கே எக்கிக்கிட்டு முக்கி முக்கி அடிக்கனும் போலயேன்னு கொஞ்சம் உள்ளார எட்டிபார்த்தேன் அங்க இந்த வாஷ்பேசின் எல்லாம் இருந்துச்சு.. சரின்னு இன்னும் கொஞ்சம் உள்ளார போய் பார்த்தேன் அங்கதான் சரியான இடம் அதுக்கு பக்கத்துலேயும் அங்க அங்க இந்த பானை, அவசரத்தில் எவனாவது அதில் உச்சா அடிச்சு வைக்காம இருந்தா சரின்னு போன வேலைய நிம்மதியா முடிச்சுட்டு திரும்பி வந்தேன், கிரியேட்டிவா திங் செய்யுறேன் என்று நம்மள சுத்தவுடுறாய்ங்க ராஸ்கல்ஸ்!
*********************
மார்னிங் டவுட்#
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை எனக்கு சின்ன வயசிலேயே புரிய வைக்கதான் நான் எழுதிய எக்ஸாமில் எல்லாம் அப்படி மார்க் போட்டாங்களோ டீச்சர்?
****************

தாடி, மொட்டை தலை, லுங்கி ஆகியவற்றை தடை செய்தாலே தமிழ் படங்கள் வெற்றி பெற ஆரம்பிச்சிடும் போல! விட்டா திரிஷா, அசின் இவிங்களுக்கும் தாடி வெச்சி, குளிக்காத பரட்டை தலையோடு லுங்கியையும் கட்டிவிடுவானுங்க போல! என்ன கொடுமை சாமி!


# தமிழ் பட ட்ரைலர்ஸ் பாதிப்பு # நேட்டிவிட்டி கதை அலர்ஜி

*******************
செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் உலக கால்பந்தாட்ட போட்டியை நடத்தி அனைவரின் கவனத்தையும் அதன் மீது திருப்புவதன் மூலம் மாநாட்டு புகழை சீர்குலைத்துவிடலாம் என்று நினைத்தார்கள் அதையு ம் மீறி தமிழன தலைவர் வெற்றி முரசு கொட்டிவிட்டார் என்று "அரசவை கவிஞர்கள்" மாநாட்டில் கவிதை பாடவில்லையா?

**********************

டிக் டிக்!

யாரது?

திருடன்!

என்னவேண்டும்? (ங்கொய்யா திருடன் என்று சொல்லியும் என்னவேண்டுமா?)
நகைவேண்டும்
என்ன நகை

கலர் நகை

என்ன கலர்...

கருப்பு கலர்.........

அடியேய் நான் தான் உன்னை பிடிக்கனும் நீ ஏன்? என்னை பிடிச்ச? நீ அவுட்

நான் கருப்பு கலரைதான் தொட்டுக்கிட்டு இருக்கேன் நான் எப்படி அவுட் ஆவமுடியும்...

அவ்வ்வ்வ்

டமார்!

பொம்பள்புள்ளைங்க கூட விளையாடும் பொழுது அடா அடா என்னா ஜாலி என்னா ஜாலி! அப்ப அப்ப கைகலப்பில் முடியும்... ஒரு பொம்பள புள்ள கையால அடி வாங்கிட்டோமேன்னு ஈகோவினால் திரும்ப இழுத்துபோட்டு சாத்து சாத்துன்னு சாத்தியது எல்லாம் இப்பொழுதும் நினைவு இருக்கு...ஒரு வாரம் முறுக்கிட்டு பேசாம திரியுங்க...அப்புறம் பழம் உட்டுவிடும்.

டிஸ்கி: இதில் இருந்து தெரியும் நீதி 1) முளைக்கும் பொழுதே ஆண் என்ற ஈகோ இருக்கு.
2) பொண்ணுங்க கூட சண்டை பிடிக்காம ஒத்துமையா இருக்கவே முடியாது.

**********************

குழந்தை ஆம்பிள்ளை பிள்ளையா பிறப்பதில் ஒரு வசதி புதுசா பொம்மை எதுவும் வாங்க வேண்டி இருக்க மாட்டேங்குது, எது கொடுத்தாலும் அதை வைத்து விளையாடுவது இல்லை, பிறந்ததிலிருந்து கூடவே இருக்கும் அட்டாச் மெண்ட் டாயை வெச்சி விளையாட்டு, விட்டா பிச்சி எடுத்துடுவான் போல, ஆகையால் அதிகமான நேரம் மூடியே வெச்சிருப்பது மாதிரி ஆகிடுது. சின்னபுள்ளைக்கு இன்பெக்சன் ஆயிடும் என்பதால் அப்பப்ப காத்தோட்டமா விட்டா பய புள்ள கை டக்குன்னு அங்க போய்விடுது:)

ரெண்டு நாளைக்கு முன்னாடி கையில் கட்டி இருந்த முடி கயிறு லூசா இருந்ததால் கழட்டிவிட்டான் அதை எடுத்து சும்மா ஜாலியா அவன் லுல்லாவில் கட்டிவிட்டு டிங் டாங் பெல் பாடிகிட்டு இருந்தேன்:) மனைவி வந்து பார்த்துட்டு செம திட்டு:((

************************
ஒரு குடும்ப தலைவனாய் என்னை உணரவைப்பது வைக்கிங் பனியன் ஜட்டிகள்!

#பொம்மிஸ் நைட்டி விளம்பரம் தாக்குதல் எபக்ட்#

செம்மொழி போட்டோ டூன்ஸ் 29-6-10

















Tuesday, June 22, 2010

நாயர் கடையை நாடி வடை டப்பாவை தேடி மூக்குபிடிக்க தின்!

அன்பின் சஞ்சய்

ஒரு கை நிறைய சோத்து உருண்டைய அள்ளி தின்னும்பொழுது ஒன்றிரண்டுகல்லு வருகிறது என்பதுக்காக மொத்த சாப்பாட்டையும் நீ ஒதுக்கிவிடுவதில்லை அல்லவா? அதுபோலதான் ஒரு முறை வடை ஊசி விட்டது என்பதுக்காக வடை தின்னமாட்டேன் என்பது சரியில்லை.

மேலும் நீ ரசித்து/ உறிஞ்சு குடிச்ச பாயசம் போன்றவையாவது மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டும். இங்க பசியோடு காத்திருப்பவர்கள் ஏராளம் அதுக்காச்சும் மிச்சம் வை. ருசியாக இருப்பது என்பதுக்காகவும் ஓசியில் கிடைக்குது என்பதுக்காகவும் வயிறு முட்ட தின்னுவிட்டு பின் வயித்துவலியால் அவதிபடுவது மனித இயல்பு. இதுமாதிரி அனுபவம் இல்லாத மனிதனே இல்லை எனலாம். இதுக்கு நீயே வாழும் உதாரணம்.

ஒரு பிக்பாக்கெட் திருடனுக்கு கூட சிறையில் சோறுபோட்டு வடையும் தருகிறது, நீ வடையை தின்னமாட்டேன் என்று சொல்வது என்னமோ மாதிரி இருக்கிறது.போனவாரம் எங்க வீட்டில் செஞ்ச இந்த ஊசிபோன வடையை எல்லாம் எலிக்கு வைக்கலாம் என்றால் பூனை இருப்பதால் எலி இல்லை, ஆகவே நீ வந்து தின்னே ஆகவேண்டும்.

சாப்பிட்ட சாப்பாடு ஜீரனம் ஆகவில்லை என்றால் ஒரு Eno குடிச்சுவிட்டு வயிறை சுத்தப்படுத்திக்கிட்டு அடுத்த பந்திக்கு முன்னேறும் சிறப்பு மனிதனுக்கே உண்டு.

வடை உனக்கு (உண்டு) வா
மீஞ்சு போன வடையுடன்
குசும்பன்

பி.கு: நிச்சயமாக இந்த பதிவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வரும். சோத்து பண்டாராம், சமையல்காரன், அழகில் சிறந்தவன், வயிற்றை பெருத்தவன்,பசிக்காதவன் போல் நடிப்பவன், டமரா செட், லோட்டா போன்ற வார்த்தைகளில் தொடங்கி தமிழின் அனைத்து கெட்டவார்த்தைகளும் வரும்.இருந்தாலும் இங்க நான் பதிப்பிக்க காரணங்கள் பின் வருவன.

1) அதிகமாக சாப்பிடுபவனை நிறுத்த இடையில் கொடுக்கப்படுவதே ஊசி போன வடை.அதை உனக்கு கொடுத்து உட்சபட்ச தண்டனையான பேதியும் வரவெச்சாச்சு. அதுவே போதும் இனி உன் சாப்பாட்டு அளவை குறைக்க. ஆகவே இனி மீதமாகும் வடைகளை காலி செய்ய நீ திரும்ப வடை சாப்பிட வேண்டும்.

2) நான் சந்திக்கும் டீ கடை நாயர் , முனியாண்டி விலாஸ் ஓனர் அனைவரும் வடை தின்ன சஞ்சய் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை சட்டத்துக்கு பயந்து உன்னை பகிரங்கமாக கூப்பிட பயப்படுகிறார்கள்.

3) இவ்வளோ பிரச்சினைகளுக்கும் இடையில் கடந்தவாரம் நீ தின்ன பஜ்ஜிகளின் எண்ணிக்கை 555, ஆக நீ தின்னுவது குறையவே இல்லை, வடைக்கு பதில் இப்ப பஜ்ஜி.

4) நாயர்கடையை நாடி வடை டப்பாவை தேடி மூக்குபிடிக்க தின்!

Monday, June 14, 2010

விஜய் அஜித் கார்ட்டூன்ஸ்15-6-2010










*****************


ஜாமீனில் கடந்தவாரம் தான் வெளியே வந்தார் நம்ம நித்தியானந்தா, வந்ததும் உடனே அக்னி வளையத்துக்குள் அமர்ந்து தவம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன.



இதுமாதிரி பொய் தவம் செஞ்சா பொசுக்குன்னு குஞ்சாமணி கருகிபோய்விடுவது போல் வரம் கொடு சாமின்னு எல்லோரும் கூட்டு பிராத்தனை செய்வோம்.



நம்ம நித்தி வெளியே வந்து தவத்தில் எல்லாம் உட்கார ஆரம்பிச்சிட்டார், அப்ப அடுத்த சீடி ரிலீஸ் எப்பன்னு சன் டீவியும் நக்கீரனும் ஆவலுடன் வெயிட்டிங்காம்.



நான் தான் முதலில் பட விமர்சனம் எழுதுவேன் என்று கேபிள் & உண்மை தமிழனுக்குள் போட்டியாம்.



அடுத்தபட ஹீரோயின் பெயர் எஸ்ஸில் ஆரம்பிக்குமா இல்ல Qவில் ஆரம்பிக்குமா என்று இப்பொழுதே பெட்டிங் நடக்க ஆரம்பிச்சு விட்டதாம்.



ரம்பா டான்ஸ் ஆடினால் தான் தவத்தை கலைக்க முடியும் என்று சொல்லிட்டு சாமி தவத்தில் உட்காந்த பிறகு அந்த ரம்பாவோடு நானும் ஆடுவேன் என்று பாரு அடம்பிடிக்கிறாராம் அதோடு பிராக்டிஸிலும் இருக்கிறார்.






நித்தி தவம் செஞ்ச அக்னி வளையம்
******************

Sunday, June 13, 2010

கல்லூரி கலாட்டா போட்டோஸ்

பிளாக் & வெயிட் போட்டோவிலும் பயபுள்ள என்னா கலரா இருக்கு!

அத்தை பையன் பாரி, நான், சுரேஷ்


5 வருடம் வளர்த்த சடை முடியோடு நான், அருகில் வினோத், சுரேஷ், இட்லி குண்டன் செந்தில்


கல்லூரி விழாவில்ஆட்டம் நானும், சுரேஷும்


ஹிட்லர் மீசை,ஆட்டு தாடி, காதில் வைர தோடு:))



நண்பர்கள் தூங்கும் பொழுது அவிங்களுக்கு நான் மேக்கப் செஞ்சு எடுத்த போட்டோஸ்



பாலாஜி
டேவிட்

கார்த்தி

கோபால்

ஒருத்தனை தவிர மீதி அல்லாரும் கண்ணாடி போட்டுக்கிட்டு போஸ்! ஜன்னலில் எட்டிபார்க்கும் பசங்ககூட கண்ணாடியோடு.

(ஆல் இந்தியா டூர் போன பொழுது எடுத்தது, அனைத்தும் திருடியவை)
டிஸ்கி: ஆனந்தவிகடனில் எதிர்காலத்தில் ஸ்டார் பழய ஆல்பம் பகுதியில் போட போட்டோ கேட்டா அப்ப எடுத்துக்கொடுக்க வசதியாக இந்த போஸ்ட்:)))

Saturday, June 12, 2010

போபால் கார்ட்டூன்ஸ் 13-6-2010

என்னமோ ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சம்பவம் நடந்த மாதிரி இவிங்க கொடுக்கும் பில்டப்பு! தாங்க முடியலடா சாமி!

டக்கு புக்குன்னு ஏதாவது செஞ்சு நியுஸ் டாப்பிக்கை மாத்திடனும்!

சார் இப்பதான் நடந்தது என்னன்னு படிச்சிக்கிட்டு இருக்கார்! பாவம் இவருக்கு இதுமாதிரி ஒன்னு நடந்ததே தெரியாது போல!
எது விலை ஏறினா என்ன? குறைஞ்சா என்ன? கிரிக்கெட் மூலம் பணம் வருதா அது போதும்!
செய்தி: கொலை செய்த தேடப்படும் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா பத்திரமாக கொழும்பு போய் சேர்ந்தார்.
டரியள் டக்ளஸ்: இது எல்லாம் என்னா மேட்டர்! 20 ஆயிரம் பேர் இறந்ததுக்கு காரணமான ஆண்டர்சனை தனி விமானத்திலேயே அனுப்பிய ஆளுங்க நாங்க, இது தெரியாம டக்ளஸ் அவசரப்பட்டு போய்விட்டார். கொஞ்சம் சொல்லியிருந்தா நாங்களே தனி விமானத்தில் கொண்டு போய்விட்டிருப்போம்!

Tuesday, June 8, 2010

சமாதானம் செய்- பாரு ஆடும் புதிய படம்!

(http://charuonline.com/blog/?p=642 இதை பார்த்துட்டு படிச்சா புரியும்)

நம்ம பாரு "சமாதானம் செய்" என்று பஸ்கின் இயக்கும் படத்தில் ஒருபாடல் காட்சியில் ஆடுகிறார், அதை அவர் வலைப்பக்கத்தில் எழுதியதும் தமிழ் இலக்கிய சூழலே கலேபரம் ஆகிறது.

(பாரு போனில்)

பாரு: யா!யா நைவ் ஐ ஆம் ஆக்ட்டிங் இன் தமிழ் மூவி யா, நேம் ஈஸ் "சமாதானம் செய்", யா யா ஆக்ஸ்வலி நான் பிரான்ஸ் படத்தில் தான் ஹீரோவா நடிக்கிறதா இருந்தேன், பட் இந்த பஸ்கின் பாய் ஓவர் கிரையிங் யா! டெய்லி டெய்லி காலிங், டெய்லி டெய்லி கிரையிங்! அதான் போனா போவுதேன்னு நடிச்சிக்கொடுக்கிறேன். யூ நோ சம்திங், உலகத்திலேயே முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் முதல் தமிழ் எழுத்தாளன் மீ ஒன்லி யா!

பஸ்கின்: சார் சாட் ரெடி!

பாரு: கான்பிரன்ஸ் கால் பிரம் ஹிட்ச்காக் & டொராண்டினோ , ஐ வில் கம் வெரி சூன்.

(கால் வராத போனில் ரொம்ப நேரம் பேசினா வெடிக்கிறமாதிரி செல்போன் கண்டுபிடிடா சங்கிலிமுருகா!)

*************
செய்தி கசிந்த பயமோகன் ஏரியா கலவரம் ஆகிறது...

பயமோகன்: ஹல்லோ பாஸ்டன் கோலா, சுட்டிபயல் ஒரு ஒன் இயர் அமெரிக்காவில் இருக்கிற மாதிரிகொஞ்சம் ஏற்பாடு செய்யுங்க எவ்வளோ செலவு ஆனாலும் பார்த்துக்கலாம், வேலைய VRS கொடுத்துடப்போறேன்.. நாசாவில் தெரிஞ்சவங்க யாரும் இருந்தா சந்திரமண்டலம் போக எவ்வளோ ஆகும் என்றும் கேட்டு சொல்லுங்க!

சுட்டிபயல்: என்ன ஆச்சு பாஸ் ஏன் இந்த பயம்!

பயமோகன்: மேட்டர் வெரி சீரியஸ், நடக்கப்போகும் அசம்பாவிதங்களை தாங்கிக்கும் சக்தி எனக்கு இல்ல!
*******************
புஸ்.ரா வீட்டில் போன் ரிங் ஆவுது...

புஸ்.ரா: (கை நடுங்கியபடியே போனை அட்டன் செய்கிறார்...)

எதிர்முனையில்.. புஸ்.ரா நான் பாரு பேசுறேன், சீக்கிரம் கிளம்பி கோலிவுட் வாங்க,நான் அல்ரெடி பஸ்கின் கிட்ட யூ ஆர் மை வெரி குட் பிரண்டுன்னு சொல்லியிருக்கேன், வாங்க உங்களுக்கும் ஒரு வேசம் வாங்கி தருகிறேன்.

புஸ்.ரா: (ஹீரோ வேசம் கேட்டதுக்கே குரூப் டான்ஸர் ஆக்கிட்டாங்க, இதுல எனக்கு வேசமாஆஆஆஆ (நன்றி சு.க) காலையில் இருந்து கொஞ்சம் பேதியாஇருக்கு அப்புறம் வருகிறேன்.

(இன்கம்மிங்கை கட் செய்யுங்கடா காலையில் இருந்து இது 100வது போன்)

************
அதன் பிறகு ஒரு சில மாதம் கழித்து அவரோட வெப்சைட்டில்...

அந்த ஒரு நிமிடம் நீங்கள் திரையில் வருவதை பார்க்கவே நான் படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாளிலேயே 200வது முறை பார்த்துவிட்டேன், என் கண்கள் இப்பொழுதுதான் பிறவி பயன் அடைந்தன. இதை தங்கள் வலைதளத்தில் போட்டால் நான் மிகவும் மகிழ்வேன்.

சந்திரமண்டலத்தில் இருந்து
சந்திரா

டியர் சந்திரா,
அந்த ஒரு நிமிடம் என்பது சொல்வதுக்கு ஈசியாக இருக்கும் ஆனால் 60வினாடிகள் 600 மைக்ரோவினாடிகள் 6000 டபுள்மைக்ரோ வினாடிகள் அத்தனை நீளமான காட்சியில் நடித்த முதல் எழுத்தாளன் நான் தான். அந்த ஒரு நிமிடம் காட்சிக்காக இதுவரை 500 முறை படத்தை பார்த்ததாக ஒரு வாசகி கடிதம் எழுதியிருக்கிறார், உங்களை மாதிரி ரசிகர்கள் எனக்கு இருக்கும் வரை கவலை இல்லை.

***********
அன்பின் பாரு உங்களுக்கு தெரியுமா நான் என் கணவருக்கு தெரியாமல் கேமிராவில் நீங்கள் வரும் பாட்டை மட்டும் ரெக்கார்ட் செய்து ரசித்து வருகிறேன், அதை பார்க்காமல் என்னால் தூங்கவே முடியவில்லை. ஒரு நிமிடம் என்றாலும் அதில் 60 விதமான முகபாவங்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது பரவசம் அடைகிறேன்.

ஜப்பானில் இருந்து
ஜக்கமா

டியர் ஜக்கமா
60 வினாடிகள் 60 விதமான முகபாவங்களை அப்படி எளிதாக 50வருடமாக நடிக்கும் நடிகர் கூட நடித்துவிட முடியாது என்று குமரிமுத்துவே பாராட்டினார், ஒவ்வொரு எக்ஸ்பிரசனுக்கும் தியேட்டரில் விசில் சத்தம் சுவரை பிளக்கிறது என்று பல புகார்கள் வருகின்றன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இயக்குனர் அந்த காட்சியில் உடலை வருத்திக்கிட்டு நடிப்பதை பார்த்துவிட்டு பாரு வேண்டும் என்றால் சொல்லுங்கள் டூப் போட்டுக்கலாம் என்றார், அதுமட்டும் இல்லாமல் சேலம் சித்தவைத்தியர் இதுபோல் ரிஸ்க் எடுத்து நடிச்சால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். ஆனால் எனக்கு எதை செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்யனும் என்பதால் அப்படி ஒன்றி நடித்தேன். உங்களை போன்றோர் அதை ரசித்து சொல்லும் பொழுது பட்ட கஷ்டங்கள் தூசு என்று புரிகிறது. இன்னொன்னு உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்கிறேன் நான் வரும் காட்சியின் பொழுது பரவசத்தில் உட்சம் அடைந்ததாக பலபேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

*********
பாரு சார், நான் ஜோதி தியேட்டரின் ஆப்புரேட்டர், 30 வருடமாக இந்த துறையில் இருக்கிறேன், எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ,ரஜினி, விஜய் படங்களை எல்லாம் நான் போட்டு இருக்கிறேன், முதல் காட்சியில் அவர்கள் தோன்றும் பொழுது ரசிகர்கள் செய்யும் ஆட்டம் அதிரும், நாள் ஆக ஆக குறையும் உங்கள் படம்ரிலீஸ் ஆகி இன்றோடு 100வது நாள் இன்றுவரை நீங்கள் திரையில் வரும் காட்சியின் பொழுது ரசிகர்கள் அடிக்கும் விசில் சத்தமும் அதிகம் ஆகி நேற்று சுவரில் விரிசலே விழுந்துவிட்டது. இதுவரை இப்படி ஒரு ஓப்பனிங் நான் யாருக்கும் பார்த்தது இல்லை, நீங்கள் தொடர்ந்து பல வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.
இப்படிக்கு


டியர் ... (உங்கள் பெயர் இல்லை, கை ரேகை தான் இருக்கிறது) இருந்தாலும் உங்களிடம் முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், நாயா?பேயா? நிகழ்ச்சியில் என்னை நெருக்கி மன்னிப்பு கேட்கவைத்த தாபி நாத் நினைவுக்கு வருகிறார், இருந்தாலும் இது நான் மனம் வருந்தி கேட்கும் மன்னிப்பு, சுவரில் விழும் விரிசலுக்கு என் ரசிகர்கள் என் வங்கி கணக்கு பணம் அனுப்புவார்கள் சரி செய்து கொடுத்துவிடுகிறேன். மற்றபடி நீங்கள் சொன்ன நடிகர்களால் தான் தமிழ் சினிமாவே சீரழிந்து கிடக்கிறது அவர்கள் வரிசையில் என்னை வைக்காதீர்கள். இதுவரை பிரான்ஸ், கொரியா படங்களை உங்கள் திரையரங்கில் ரிலீஸ் செய்யாததால் உங்களுக்கு அவர்களை பற்றி தெரியவில்லை. பிரான்ஸில் இருந்தும் இதுபோல் கடிதம் வந்திருக்கிறது.

**********************
டேய் செல்ல ராஸ்கல் இதுவரை என் ரா உளவு துறைக்கு உன்னை பற்றி எத்தனை புகார் கடிதங்கள் வந்திருக்கு தெரியுமா? அவை எல்லாம் நீ நடித்த படத்தினால் தான், நீ திரையில் தோன்றும் பொழுது எல்லாம் விசில் சத்தம் விண்ணை தொடுவதால் விமானிகள் பயந்து போய் உடனடியாக விமானத்தை தரையிறக்கியிருக்கிறார்கள், பலபேர் வீடுகளில் விரிசல்கள், படுவா ராஸ்கல் இதுவரை இப்படி ஒருபுகார் வந்தது இல்லைடா!இருந்தாலும் நான் இதுவரை 500 முறையாவது பார்த்து, இனி ஆடாமல் இருந்தாய் சிறையில் தூக்கி போட்டு முட்டியை பேத்துடுவேன்.

இப்படிக்கு
ரா உளவு துறை


டியர் சார், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, ஏன் பாக்கிஸ்தானில் இருந்து கூட உளவு துறையினரும், போலீஸும் இதுபோல் மெயில் அனுப்பியிருக்கிறார்கள். இன்னொன்னு தெரியுமா? நடிகர்கள் அனைவரும் கலக்கத்தில் இருக்கிறார்களாம். இன்னொரு உட்ச நடிகர் என் ஆட்டத்தை பார்த்து பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருக்கிறாராம், எப்படி என்னால் இப்படி ஆட முடிந்தது என்று, உங்களுக்கு ஒன்று தெரியுமா கேரளா நடிகர்கள் மட்டுமே என்னை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார்கள். பிரான்ஸ் டீவியில் இதுவரை 100023 , அமெரிக்கா ரேடியோவில் 3232322, அண்டார்டிக்கா டீவியில் 234388843 முறையும் இந்த பாடலை ஒளிபரப்பியிருக்கிறார்கள். தமிழ் தொலைக்காட்சிகளில் ம்ம்ம் எல்லாம் பொறாமை அனைவரும் பொறாமை பிடித்தவர்கள். இதுக்காகவே ஒரு ரசிகர் நாம் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்துவிடுவோமா என்று கேட்டு மெயில் அனுப்பியிருக்கிறார்.

(சமாதானம் செய் செய்திகளை வலைப்பதிவர்கள் அனைவரும் அவர் அவர் பக்கத்தில் போட்டு அனைவரையும் சென்று அடையவைக்க வேண்டுகிறேன்)

"நாங்களே இங்க நார் நாரா கிழிஞ்சி கிடக்கிறோம் இதுல உங்களுக்கு விளம்பரமா அடிங்க..."
****************************
ஒருமாசம் டயட்டில் இருந்து 100 முறை டேக் வாங்கி மைக்கேல்சாக்சன், பிரான்ஸ் பிராமோசினான், ஜெர்மனி ஜெர்ஜியா ஆகியோருக்கு நிகராக ஆடிய ஸ்டெப் என்னன்னா? இப்படி புல்லாங்குழலை வாயில் வெச்சிக்கிட்டு இடது காலை அப்படிக்கா கஷ்ட்ப்பட்டு வலதுகாலுக்கு அருகில் கொண்டு வந்து வைக்கனும். மத்தவங்க சுத்தி நின்னு கும்மி அடிப்பாங்க!



***********************
(பாரு வீட்டில் போன் ரிங் ஆவுது)

எஸ் பாருதான் பேசுறேன்.. நோ நோ கால் சீட் எல்லாம் கிடையாது இன்னும் ஒரு பத்துவருசத்துக்கு முடிஞ்சுட்டு!



எதிர்முனையில்: சார் நான் உங்க சைட் அட்மின் தான் பேசுறேன்...



பாரு: ஓ நீங்களா? ம்ம்ம் சொல்லுங்க, என்ன விசயம்?



அட்மின்: திரும்ப சைட்டில் வைரஸ் பிராபிளம், எழுதி வெச்சிருந்த வாசகர் கடிதம் எல்லாம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆட்டோ மேட்டிக்கா ரிலிஸ் ஆயிட்டு.





முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா!

Thursday, June 3, 2010

பதிவர் சந்திப்பு!- பாலபாரதி!- மர்மம்!

யார் இந்த பால பாரதி? இத்தனை நாள் எங்கு போய் இருந்தார்? இப்பொழுது திடீர் என்று பதிவர் சந்திப்பை கூட்ட என்ன காரணம்.நாம் என்ன செய்ய வேண்டும்? அவர் எழுதிய பதிவு http://tinyurl.com/36ejnz5

முதல் கேள்வி யார் இந்த பாலபாரதி?
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே பிளாக் எழுதி தமிழ் வளர்த்தவர் ரொம்ப சீனியர்.பில்லா ரேஞ்சுக்கு இவரு பெரிய பிஸ்தா! பில்லாவுக்கு இவருக்கும் ஒரே வித்தியாசம், பில்லாபயங்கர கருப்பா இருப்பான், இவரு கருப்பா பயங்கரமா இருப்பார்.

இத்தனை நாள் எங்கு போய் இருந்தார்?
ஹி ஹி அண்ணனுக்கு கல்யாணம் இரண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு, அதுக்கு முன்னாடி கொஞ்சமா வீட்டு வேலை இருந்துச்சு, இப்ப வீட்டு வேலை ரொம்ப அதிகம் ஆகிவிட்டதால் எழுத்து உலகு பக்கம் வரமுடியவில்லை. (வேற ரகசியங்கள் பொதுவில் வெளியிடப்பட மாட்டாது!)

இப்பொழுது திடீர் என்று பதிவர் சந்திப்பை கூட்ட என்ன காரணம் ?
இதுவரை அவர் பெயரை குயில்பாலான்னு வெச்சிருந்தார்! கலர் ஒற்றுமைக்காகதானே ஒழியே குரல் ஒற்றுமைக்காக இல்லை என்பதை ஆழமாக பதிவு செய்கிறேன், பேசினாலே தகரடப்பாவை தேய்ப்பது போல் இருக்கும் குரலை வைத்துக்கொண்டு பாடினால் கேட்கவே வேண்டாம், நான் கூட ஒரு முறை இவர் மகிமை பற்றி தெரியாமல் குயில்பாலா என்றால் குரல் இனிமையாக இருக்குமோ என்று நினைத்து பாட்டு பாட சொல்லி கேட்டதில் இருந்து என் இடதுகாது கொஞ்சம் மந்தமாகவே கேட்கிறது. இதுவரை குயில்பாலாவாக இருந்தவர் இப்பொழுது யெஸ்பாலா என்று பெயரை மாற்றிக்கிட்டார், யெஸ்பாலா என்றால் வேறு ஒன்னும் இல்லை வீட்டில் அண்ணி எது சொன்னாலும் யெஸ் சொல்வதால் இவர் இனி யெஸ்பாலாவாகிவிட்டார். ஆகவே பெயர் சூட்டும் வைபோகம் நடைபெற போகிறது.

என்ன செய்யவேண்டும்?
குழந்தை பிறந்தால் பெயர்வைக்கும் பொழுது நாக்கில் தேனால் பெயர் எழுதுவார்கள், அண்ணன் யெஸ்பாலா லெவலுக்கு கோணி ஊசியில் கொஞ்சம் ஆசிட் தொட்டு அவர் நாக்கில் அல்லது அவரவர் விருப்பப்படி "யெய்பாலபாரதி அறிவுடை நம்பி அகப்பெருமாள் சிவசந்திரன்" என்று எழுதலாம். இவரிடம் இருக்கும் ஆண் ஜொள்ளர் லிஸ்டில் உங்கள் பெயர் இல்லை என்று நிருபிக்கவேண்டும் என்றால் தலையில் 5 ரூபாய் சூடம் ஏற்றி ஊதி ஊதி அணைத்துஉங்களை நிருப்பிக்கலாம்.

டிஸ்கி: இது பேட்டி அல்ல, நானே சிந்தித்து எழுதியது.