Tuesday, June 8, 2010

சமாதானம் செய்- பாரு ஆடும் புதிய படம்!

(http://charuonline.com/blog/?p=642 இதை பார்த்துட்டு படிச்சா புரியும்)

நம்ம பாரு "சமாதானம் செய்" என்று பஸ்கின் இயக்கும் படத்தில் ஒருபாடல் காட்சியில் ஆடுகிறார், அதை அவர் வலைப்பக்கத்தில் எழுதியதும் தமிழ் இலக்கிய சூழலே கலேபரம் ஆகிறது.

(பாரு போனில்)

பாரு: யா!யா நைவ் ஐ ஆம் ஆக்ட்டிங் இன் தமிழ் மூவி யா, நேம் ஈஸ் "சமாதானம் செய்", யா யா ஆக்ஸ்வலி நான் பிரான்ஸ் படத்தில் தான் ஹீரோவா நடிக்கிறதா இருந்தேன், பட் இந்த பஸ்கின் பாய் ஓவர் கிரையிங் யா! டெய்லி டெய்லி காலிங், டெய்லி டெய்லி கிரையிங்! அதான் போனா போவுதேன்னு நடிச்சிக்கொடுக்கிறேன். யூ நோ சம்திங், உலகத்திலேயே முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் முதல் தமிழ் எழுத்தாளன் மீ ஒன்லி யா!

பஸ்கின்: சார் சாட் ரெடி!

பாரு: கான்பிரன்ஸ் கால் பிரம் ஹிட்ச்காக் & டொராண்டினோ , ஐ வில் கம் வெரி சூன்.

(கால் வராத போனில் ரொம்ப நேரம் பேசினா வெடிக்கிறமாதிரி செல்போன் கண்டுபிடிடா சங்கிலிமுருகா!)

*************
செய்தி கசிந்த பயமோகன் ஏரியா கலவரம் ஆகிறது...

பயமோகன்: ஹல்லோ பாஸ்டன் கோலா, சுட்டிபயல் ஒரு ஒன் இயர் அமெரிக்காவில் இருக்கிற மாதிரிகொஞ்சம் ஏற்பாடு செய்யுங்க எவ்வளோ செலவு ஆனாலும் பார்த்துக்கலாம், வேலைய VRS கொடுத்துடப்போறேன்.. நாசாவில் தெரிஞ்சவங்க யாரும் இருந்தா சந்திரமண்டலம் போக எவ்வளோ ஆகும் என்றும் கேட்டு சொல்லுங்க!

சுட்டிபயல்: என்ன ஆச்சு பாஸ் ஏன் இந்த பயம்!

பயமோகன்: மேட்டர் வெரி சீரியஸ், நடக்கப்போகும் அசம்பாவிதங்களை தாங்கிக்கும் சக்தி எனக்கு இல்ல!
*******************
புஸ்.ரா வீட்டில் போன் ரிங் ஆவுது...

புஸ்.ரா: (கை நடுங்கியபடியே போனை அட்டன் செய்கிறார்...)

எதிர்முனையில்.. புஸ்.ரா நான் பாரு பேசுறேன், சீக்கிரம் கிளம்பி கோலிவுட் வாங்க,நான் அல்ரெடி பஸ்கின் கிட்ட யூ ஆர் மை வெரி குட் பிரண்டுன்னு சொல்லியிருக்கேன், வாங்க உங்களுக்கும் ஒரு வேசம் வாங்கி தருகிறேன்.

புஸ்.ரா: (ஹீரோ வேசம் கேட்டதுக்கே குரூப் டான்ஸர் ஆக்கிட்டாங்க, இதுல எனக்கு வேசமாஆஆஆஆ (நன்றி சு.க) காலையில் இருந்து கொஞ்சம் பேதியாஇருக்கு அப்புறம் வருகிறேன்.

(இன்கம்மிங்கை கட் செய்யுங்கடா காலையில் இருந்து இது 100வது போன்)

************
அதன் பிறகு ஒரு சில மாதம் கழித்து அவரோட வெப்சைட்டில்...

அந்த ஒரு நிமிடம் நீங்கள் திரையில் வருவதை பார்க்கவே நான் படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாளிலேயே 200வது முறை பார்த்துவிட்டேன், என் கண்கள் இப்பொழுதுதான் பிறவி பயன் அடைந்தன. இதை தங்கள் வலைதளத்தில் போட்டால் நான் மிகவும் மகிழ்வேன்.

சந்திரமண்டலத்தில் இருந்து
சந்திரா

டியர் சந்திரா,
அந்த ஒரு நிமிடம் என்பது சொல்வதுக்கு ஈசியாக இருக்கும் ஆனால் 60வினாடிகள் 600 மைக்ரோவினாடிகள் 6000 டபுள்மைக்ரோ வினாடிகள் அத்தனை நீளமான காட்சியில் நடித்த முதல் எழுத்தாளன் நான் தான். அந்த ஒரு நிமிடம் காட்சிக்காக இதுவரை 500 முறை படத்தை பார்த்ததாக ஒரு வாசகி கடிதம் எழுதியிருக்கிறார், உங்களை மாதிரி ரசிகர்கள் எனக்கு இருக்கும் வரை கவலை இல்லை.

***********
அன்பின் பாரு உங்களுக்கு தெரியுமா நான் என் கணவருக்கு தெரியாமல் கேமிராவில் நீங்கள் வரும் பாட்டை மட்டும் ரெக்கார்ட் செய்து ரசித்து வருகிறேன், அதை பார்க்காமல் என்னால் தூங்கவே முடியவில்லை. ஒரு நிமிடம் என்றாலும் அதில் 60 விதமான முகபாவங்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது பரவசம் அடைகிறேன்.

ஜப்பானில் இருந்து
ஜக்கமா

டியர் ஜக்கமா
60 வினாடிகள் 60 விதமான முகபாவங்களை அப்படி எளிதாக 50வருடமாக நடிக்கும் நடிகர் கூட நடித்துவிட முடியாது என்று குமரிமுத்துவே பாராட்டினார், ஒவ்வொரு எக்ஸ்பிரசனுக்கும் தியேட்டரில் விசில் சத்தம் சுவரை பிளக்கிறது என்று பல புகார்கள் வருகின்றன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இயக்குனர் அந்த காட்சியில் உடலை வருத்திக்கிட்டு நடிப்பதை பார்த்துவிட்டு பாரு வேண்டும் என்றால் சொல்லுங்கள் டூப் போட்டுக்கலாம் என்றார், அதுமட்டும் இல்லாமல் சேலம் சித்தவைத்தியர் இதுபோல் ரிஸ்க் எடுத்து நடிச்சால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். ஆனால் எனக்கு எதை செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்யனும் என்பதால் அப்படி ஒன்றி நடித்தேன். உங்களை போன்றோர் அதை ரசித்து சொல்லும் பொழுது பட்ட கஷ்டங்கள் தூசு என்று புரிகிறது. இன்னொன்னு உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்கிறேன் நான் வரும் காட்சியின் பொழுது பரவசத்தில் உட்சம் அடைந்ததாக பலபேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

*********
பாரு சார், நான் ஜோதி தியேட்டரின் ஆப்புரேட்டர், 30 வருடமாக இந்த துறையில் இருக்கிறேன், எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ,ரஜினி, விஜய் படங்களை எல்லாம் நான் போட்டு இருக்கிறேன், முதல் காட்சியில் அவர்கள் தோன்றும் பொழுது ரசிகர்கள் செய்யும் ஆட்டம் அதிரும், நாள் ஆக ஆக குறையும் உங்கள் படம்ரிலீஸ் ஆகி இன்றோடு 100வது நாள் இன்றுவரை நீங்கள் திரையில் வரும் காட்சியின் பொழுது ரசிகர்கள் அடிக்கும் விசில் சத்தமும் அதிகம் ஆகி நேற்று சுவரில் விரிசலே விழுந்துவிட்டது. இதுவரை இப்படி ஒரு ஓப்பனிங் நான் யாருக்கும் பார்த்தது இல்லை, நீங்கள் தொடர்ந்து பல வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.
இப்படிக்கு


டியர் ... (உங்கள் பெயர் இல்லை, கை ரேகை தான் இருக்கிறது) இருந்தாலும் உங்களிடம் முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், நாயா?பேயா? நிகழ்ச்சியில் என்னை நெருக்கி மன்னிப்பு கேட்கவைத்த தாபி நாத் நினைவுக்கு வருகிறார், இருந்தாலும் இது நான் மனம் வருந்தி கேட்கும் மன்னிப்பு, சுவரில் விழும் விரிசலுக்கு என் ரசிகர்கள் என் வங்கி கணக்கு பணம் அனுப்புவார்கள் சரி செய்து கொடுத்துவிடுகிறேன். மற்றபடி நீங்கள் சொன்ன நடிகர்களால் தான் தமிழ் சினிமாவே சீரழிந்து கிடக்கிறது அவர்கள் வரிசையில் என்னை வைக்காதீர்கள். இதுவரை பிரான்ஸ், கொரியா படங்களை உங்கள் திரையரங்கில் ரிலீஸ் செய்யாததால் உங்களுக்கு அவர்களை பற்றி தெரியவில்லை. பிரான்ஸில் இருந்தும் இதுபோல் கடிதம் வந்திருக்கிறது.

**********************
டேய் செல்ல ராஸ்கல் இதுவரை என் ரா உளவு துறைக்கு உன்னை பற்றி எத்தனை புகார் கடிதங்கள் வந்திருக்கு தெரியுமா? அவை எல்லாம் நீ நடித்த படத்தினால் தான், நீ திரையில் தோன்றும் பொழுது எல்லாம் விசில் சத்தம் விண்ணை தொடுவதால் விமானிகள் பயந்து போய் உடனடியாக விமானத்தை தரையிறக்கியிருக்கிறார்கள், பலபேர் வீடுகளில் விரிசல்கள், படுவா ராஸ்கல் இதுவரை இப்படி ஒருபுகார் வந்தது இல்லைடா!இருந்தாலும் நான் இதுவரை 500 முறையாவது பார்த்து, இனி ஆடாமல் இருந்தாய் சிறையில் தூக்கி போட்டு முட்டியை பேத்துடுவேன்.

இப்படிக்கு
ரா உளவு துறை


டியர் சார், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, ஏன் பாக்கிஸ்தானில் இருந்து கூட உளவு துறையினரும், போலீஸும் இதுபோல் மெயில் அனுப்பியிருக்கிறார்கள். இன்னொன்னு தெரியுமா? நடிகர்கள் அனைவரும் கலக்கத்தில் இருக்கிறார்களாம். இன்னொரு உட்ச நடிகர் என் ஆட்டத்தை பார்த்து பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருக்கிறாராம், எப்படி என்னால் இப்படி ஆட முடிந்தது என்று, உங்களுக்கு ஒன்று தெரியுமா கேரளா நடிகர்கள் மட்டுமே என்னை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார்கள். பிரான்ஸ் டீவியில் இதுவரை 100023 , அமெரிக்கா ரேடியோவில் 3232322, அண்டார்டிக்கா டீவியில் 234388843 முறையும் இந்த பாடலை ஒளிபரப்பியிருக்கிறார்கள். தமிழ் தொலைக்காட்சிகளில் ம்ம்ம் எல்லாம் பொறாமை அனைவரும் பொறாமை பிடித்தவர்கள். இதுக்காகவே ஒரு ரசிகர் நாம் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்துவிடுவோமா என்று கேட்டு மெயில் அனுப்பியிருக்கிறார்.

(சமாதானம் செய் செய்திகளை வலைப்பதிவர்கள் அனைவரும் அவர் அவர் பக்கத்தில் போட்டு அனைவரையும் சென்று அடையவைக்க வேண்டுகிறேன்)

"நாங்களே இங்க நார் நாரா கிழிஞ்சி கிடக்கிறோம் இதுல உங்களுக்கு விளம்பரமா அடிங்க..."
****************************
ஒருமாசம் டயட்டில் இருந்து 100 முறை டேக் வாங்கி மைக்கேல்சாக்சன், பிரான்ஸ் பிராமோசினான், ஜெர்மனி ஜெர்ஜியா ஆகியோருக்கு நிகராக ஆடிய ஸ்டெப் என்னன்னா? இப்படி புல்லாங்குழலை வாயில் வெச்சிக்கிட்டு இடது காலை அப்படிக்கா கஷ்ட்ப்பட்டு வலதுகாலுக்கு அருகில் கொண்டு வந்து வைக்கனும். மத்தவங்க சுத்தி நின்னு கும்மி அடிப்பாங்க!***********************
(பாரு வீட்டில் போன் ரிங் ஆவுது)

எஸ் பாருதான் பேசுறேன்.. நோ நோ கால் சீட் எல்லாம் கிடையாது இன்னும் ஒரு பத்துவருசத்துக்கு முடிஞ்சுட்டு!எதிர்முனையில்: சார் நான் உங்க சைட் அட்மின் தான் பேசுறேன்...பாரு: ஓ நீங்களா? ம்ம்ம் சொல்லுங்க, என்ன விசயம்?அட்மின்: திரும்ப சைட்டில் வைரஸ் பிராபிளம், எழுதி வெச்சிருந்த வாசகர் கடிதம் எல்லாம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆட்டோ மேட்டிக்கா ரிலிஸ் ஆயிட்டு.

முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா!

53 comments:

said...

:))

செம்ம கலக்கல்..

//நான் வரும் காட்சியின் பொழுது பரவசத்தில் உட்சம் அடைந்ததாக பலபேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.//

சரியா எழுதி வை.. அது உச்சமா இல்லை உச்சாவா?

said...

பாடகி, ஜான்ஸி வஜ்ரம் கூட சேர்ந்து ஆடணும்ன்னு அழுது அடம்பிடிச்சு கதறினதை எழுதாம விட்டதுக்கு கண்டனங்கள்.

said...

Paaru vaazga! Avar pugal suriya mandalam muzuthum onkuka!

said...

// சென்ஷி said...

:))

செம்ம கலக்கல்..//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))))


//வாசகர் கடிதம் எல்லாம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆட்டோ மேட்டிக்கா ரிலிஸ் ஆயிட்டு.முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா!//

:))))

said...

க‌ல‌க்க‌ல்... ப‌ட‌ம் எப்ப‌ ரிலீஸ் ஆகுதுன்னு முன்கூட்டியே சொன்னாங்க‌ன்னா ப‌ர‌வாயில்ல‌, ஒரு வ‌ருச‌ம் அன்டார்டிக்காவிற்கோ அல்ல‌து ஆர்க்டிக்கிற்கோ போயிட‌லாம்... இந்திய‌ ம‌க்க‌ள் தொகையை குறைக்க‌ இப்ப‌டி ஒரு ஐடியா இருக்குற‌து இத்த‌னை நாளா தெரியாம போச்சே.. :)))

said...

//ஒருமாசம் டயட்டில் இருந்து 100 முறை டேக் வாங்கி மைக்கேல்சாக்சன், பிரான்ஸ் பிராமோசினான், ஜெர்மனி ஜெர்ஜியா ஆகியோருக்கு நிகராக ஆடிய ஸ்டெப் என்னன்னா இப்படி புல்லாங்குழலை வாயில் வெச்சிக்கிட்டு இடது காலை அப்படிக்கா கஷ்ட்ப்பட்டு வலதுகாலுக்கு அருகில் கொண்டு வந்து வைக்கனும். மத்தவங்க சுத்தி நின்னு கும்மி அடிப்பாங்க!//

:-))))))))))))))))))))

said...

ஃபினிஷ்ஷிங் சூப்பர்!

said...

//இன்னொன்னு உங்களுக்கு மட்டும் ரகசியமாக சொல்கிறேன் நான் வரும் காட்சியின் பொழுது பரவசத்தில் உட்சம் அடைந்ததாக பலபேர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.//


உட்சம்ன்னா டாக்டர் காமராஜ் சொல்லுவாரே. அதுவா?

ஹைய்யோ ஹைய்யோ

said...

:)

Anonymous said...

:)))))))))))))))

said...

::))

said...

இதே மாதிரி வினவை கலாய்த்து பதிவு போடவும்

said...

//அட்மின்: திரும்ப சைட்டில் வைரஸ் பிராபிளம், எழுதி வெச்சிருந்த வாசகர் கடிதம் எல்லாம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆட்டோ மேட்டிக்கா ரிலிஸ் ஆயிட்டு.//

இதுதான் ஹைலைட்டான விடயம்.

நாளைய சாருவின் சாரி பாருவின் வலையில் இந்தப் பதிவும் வரலாம்.

said...

அந்த கைரேகை மேட்டர் க்ளாஸ்!

said...

ஹா ஹா கலக்கல்..சிரிச்சு மாளலை....

said...

கலக்கிடீங்க போங்க.....
நார் நாரா கிழிச்சி தொங்கவிட்டுடீங்க....

said...

இப்படியெல்லாம் பில்டப் கொடுக்கலாம்னு குசும்பன் தளத்துக்கு வந்தால் கத்துக்கலாம் :)

said...

:-)))

said...

சூப்பர் குசும்பன் அதைப் படித்தவுடனே கலக்கமாக இருந்தது. அமீரோடு ராசியாகி விட்டாரோ?

said...

இருடி மவனே.. சாரு உன்னை ஒரு நாளைக்கு கிழிக்கத்தான் போறாரு..!

said...

உ த ’தகவல்பிழை’

பாரு தானே கிழிக்கனும் ::))

Anonymous said...

:) kalakkal

said...

கலக்கல்...

said...

பாரு போனில்
//

போனில் எப்படி பார்க்க முடியும் ::)

said...

மீ த 25

said...

கலக்கல்
செம
:))

///

போன்ற முதுகுசொறியும் பின்னுட்டங்கள் மட்டுறுத்த படும்


::))

said...

// மின்னுது மின்னல் said...
கலக்கல்
செம
:))

///

போன்ற முதுகுசொறியும் பின்னுட்டங்கள் மட்டுறுத்த படும்


::)) //

மீ த 25 போன்ற பின்னூட்டங்கள் ???

said...

Super kusumban.. சாரு ரெம்ப நல்லவர் குசும்பன்.. எவ்ளோ அடிச்சாலும் “ வலிக்காத மாதிரி” ரெம்பவே தாக்குப்பிடிப்பார்..

பாவம்.. இன்னும் எவ்ளோ பேர் அவரை நம்பி பின்னால் போறாங்களோ..

said...

ஹஹாஹஹஹா!!!!!! செம்ம கலக்கல்!!!! பின்னியெடுத்துங்க!!!

After a long time, good comedy blog!!

said...

கலக்கல்

said...

//திரும்ப சைட்டில் வைரஸ் பிராபிளம், எழுதி வெச்சிருந்த வாசகர் கடிதம் எல்லாம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆட்டோ மேட்டிக்கா ரிலிஸ் ஆயிட்டு.
//

இதான் கலக்கலோ கலக்கல் :))

said...

மாப்பி,
க்ரேட் டா. கலக்கிட்ட போ.

said...

:))))

கலக்கிட்டீங்க! எல்லாரும் சொன்ன மாதிரி முடிவு செம!

said...

:)

said...

me the 35!

கலக்கல்
சூப்பர்
ஆஹா....
ஓஹோ.....
பிரமாதம்
சிறந்த நடன நடிகரை அறிமுகம் செய்துவைத்த குசும்பன் வாழ்க, வாழ்க!

said...

//திரும்ப சைட்டில் வைரஸ் பிராபிளம், எழுதி வெச்சிருந்த வாசகர் கடிதம் எல்லாம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ஆட்டோ மேட்டிக்கா ரிலிஸ் ஆயிட்டு.//

:D

said...

மூனு பெண்கள் கூட குத்தாட்டம் போட்டேன் ரொம்ப கஸ்டமா இருந்துச்சுன்னார் அதிநல்லான்

எல்லாரும் உம் முகத்துல நங்கு நங்குன்னு குத்துனதை இதை விட நாசூக்கா யாரும் சொல்ல முடியாதுன்னேன் நான்

said...

இப்ப தான் முதல் முறை உங்க வலைத்தளம் படிக்கறேன். முதலில் படித்த பதிவே வெறி. அருமை. தொடருங்கள் :)

said...

சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சு.

said...

ŃąVêέŃ said...
//இப்ப தான் முதல் முறை உங்க வலைத்தளம் படிக்கறேன். முதலில் படித்த பதிவே வெறி. அருமை. தொடருங்கள் :)
//

வெறி கொலைவெறி ஆகுறத்துக்கு முன்னாடி எல்லாரும் ஓடிருங்க. :)

said...

ஜெய் நித்யானந்தம். உங்கள் பதிவு அருமை. என்னுடைய வலைப்பூவையும் கண்டு உங்கள் கருத்துகளை கூரவும்.

said...

ஒரு தமிழ் எழுத்தாளன் அடுத்த கட்டத்துக்குப் போனால் எள்ளி நகையாடும் கூட்டம் உருப்படாது. தமிழனுக்கு தமிழனே எதிரி.

இந்த நினை பிரான்ஸிலோ, இத்தாலியிலோ, பாரீஸிலோ இல்லை. அங்கு எழுத்தளனென்றால் ஓசியில் பாரில் சரக்கு கிடைக்கிறது.

கேடு கெட்ட தமிழ்ச்சமுதாயம்!

said...

வரிக்கு வரி சூப்பர்!

said...

இறுதி அட்டகாசம் !

said...

//
புஸ்.ரா: (ஹீரோ வேசம் கேட்டதுக்கே குரூப் டான்ஸர் ஆக்கிட்டாங்க, இதுல எனக்கு வேசமாஆஆஆஆ (நன்றி சு.க) காலையில் இருந்து கொஞ்சம் பேதியாஇருக்கு அப்புறம் வருகிறேன்.
//

க்ரூப் டான்ஸர்?? எப்பிடி இருந்த பாரு இப்ப்பிடி ஆயிட்டாரு :))))

said...

கடைசி வரி டாப் டக்கரு!! :-)

said...

பாரு கூடிய விரைவில் பஸ்கின் மேல் கோபம் கொண்டு (குத்தாட்ட ஷூட்டிங் போது ‘தண்ணி’ சப்ளை இல்லையாம்) காண்டு கட்டுரைகள் 10 வெளியிடாமல் இருந்தால் சரி

said...

First time to your blog.
ஐயா சாமி! முடியலை!! ROFL!!
வேலை நேரத்தில் சத்தம் போட்டு சிரிக்க வைத்ததற்கு கண்டனங்கள்!!

said...

நன்றி ராஜூ

நன்றி Menagasathia

நன்றி வெப் தமிழன்

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி பதி

நன்றி தர்ஷன்

நன்றி உ.த அண்ணே, அவருக்கும் இந்த பதிவுக்கும்
என்ன சம்மந்தம்?

நன்றி சின்ன அம்மிணி

நன்றி இராகவன்

நன்றி Rithu`s Dad

நன்றி sasibanuu

நன்றி சிவகாசி மாப்பிள்ளை

நன்றி மாம்ஸ்

நன்றி சோசப்பு

நன்றி ஸ்ரீதர் நாராயணன்

நன்றி Sabarinathan Arthanari

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

நன்றி ஆதிரை

நன்றி ஜீவ்ஸ்

நன்றி நவீன், தங்கள் முதல் வருகைக்கு.

நன்றி ஜெய் நித்யானந்தம், நானும் உங்க
சிஷ்ய கேடி ஆக என்ன செய்யனும்?

நன்றி பரிசல்

நன்றி பாலகுமார்

நன்றி பனித்துளி

நன்றி அது சரி

நன்றி செந்தில் நாதன்

நன்றி பரிதி நிலவன்

நன்றி Tara, தங்கள் முதல் வருகைக்கு.

said...

நன்றி குசும்பன் !

said...

nandri minnal

said...

குசும்ப‌னுக்கு அரோக‌ரா... :‍))

said...

பா ருவை அங்கதம் செய்ய உங்களையும்.வால்பையனையும் விட்டால் வேறு ஆளில்லை!
சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.
அதுவும் அந்த RAW உளவுத்துறை..
ஹஹஹஹா