Sunday, May 31, 2009

சென்னை பதிவர்களை சுற்றி வளைத்த போலீஸ்!!!--ஒரு பகீர் ரிப்போர்ட்!!!

சென்னை பதிவர்கள் எல்லாம் ஒன்று கூடி உலக படம் பார்க்கப்போவது தெரிஞ்ச விசயம் அது பற்றி ஒரு கற்பனை! இனி....

ஞாயிறு மாலை ஹால் உள்ளே லக்கி நுழையும் முன்பே இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருக்கிறது, முதல் வரிசையில் சுந்தர், கேபிள் சங்கர், பைத்தியகாரன், அனுஜன்யா, பாலபாரதி என்று ஏகப்பட்ட இளைஞர்கள் பட்டாளம். சரி ஓரமா நின்னாவது படத்தை பார்க்கலாம் என்று ஓரமா நின்னுக்கிட்டு படம் பார்க்கிறார் லக்கி.

லைட் எல்லாம் அணைக்கப்பட்டு படம் கொரியா டைட்டிலோடு ஓட ஆரம்பிக்கிறது. கொஞ்ச நேரத்தில் மர வீட்டில் இருக்கும் பெண்ணிடம் வரும் ஹீரோ, கசமுசா செய்யும் நேரம் பார்த்து லைட் எல்லாம் எரிகிறது எவன்யா...! அது முக்கியமான கட்டத்தில் லைட்ட போட்டது என்று குரல் கொடுக்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர்!

திரும்பினால் அங்க போலீஸ்!

போலீஸ்: நாங்க ஊரல்லாம் ரவுண்டு அடிச்சு பலான படங்களை எல்லாம் புடிச்சுக்கிட்டு இருக்கோம் நீங்க என்னடான்னா தனியா இப்படி ஆரம்பிச்சு இருக்கீங்களா...? பாரு! சின்ன பையன் எவனாவது இருக்கானான்னு பார்த்தா எல்லாம் பெருசுங்க பிட்டு பட தியேட்டரிலும் இதே மாதிரி பெருசுங்கதான் இருக்கும். அதுவும் முதல் வரிசையில்.

போலீஸை பார்த்து சேர்’க்கு அடியில் ஒளிஞ்சிருக்கும் கார்க்கி சார் நான் சின்ன பையன் சார் எனக்குக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை எனக்கான ரோஜாவை தேடிக்கிட்டு இருக்கேன்..!என்று குரல் கொடுக்க...

ஏட்டு சார் சேருக்கு அடியில் ஒருத்தன் ஒளிஞ்சிருக்கான் சார்..! என்று கார்க்கியை புடிச்சு தூக்குகிறார்..

போலீஸ்: என்னது ரோஜாவை தேடிக்கிட்டு இருக்கீயா செல்வமணிக்கு தெரிஞ்சா என்னா ஆகும் தெரியுமா?

பைத்தியகாரன்: சார் என்று சொல்வதே அதிகாரத்தின் குறீயீடு அதனால் யோவ்..! என்றே அழைத்து தொடங்குகிறேன்..

போலீஸ்: என்னது யோவ்வா என்னா கொழுப்பு இருந்தா படம் பாக்குறது மட்டுமில்லாம என்னை யோவ்ன்னு வேற கூப்பிடுவியா...

பைத்தியகாரன்: இங்கே பாருங்கள் இது நீங்க நினைப்பது போல் பலான படம் இல்லை இது உலகபடம். இது கொரிய மொழி படம் .மிஷல் பூக்கோ என்ன சொல்லி இருக்கிறார் என்றால்...

(போலீஸ் வந்ததால் அப்படியே பாஸ் செய்து வைத்திருந்த ஸ்கிரீனை பார்க்கிறார் போலீஸ் அங்கு ஆதாம் ஏவாள் போல ஹீரோ ஹீரோயின் இருவரும் இருக்க...)

போலீஸ்: இதுவாய்யா உலக படம் பூக்கோ அது இதுன்னு யார் காதுல பூ சுத்துற...

பைத்தியகாரன்: இதுவந்து... கிம் கி டுக்...

போலீஸ்: என்னய்யா கெட்ட வார்த்தையில் திட்டுற..?

பைத்தியகாரன்: இல்லீங்க அது இந்த படத்தின் இயக்குநர் பெயர், கொரியாவின் சிறந்த இயக்குநர், இது மட்டும் இன்றி ஒவ்வொரு மாதமும் இப்படி உலகபடம் பார்க்க போகிறோம்.அடுத்த மாதம் சீனா.

போலீஸ்: ஓ...! இன்னைக்கு பார்த்தது மட்டும் இல்லாம இனி ஒவ்வொரு மாசமும் வேறயா..?!

பைத்தியகாரன்: தமிழ் படத்தில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் முதல் இரவு காட்சி என்றால் இருவரும் உள்ளே நுழைந்ததும் லைட்ட ஆப் செஞ்சுவிடுகிறார்கள், ஆனால் உலக படம் என்றால் அப்பதான் லைட்டை அதிகம் போட்டு கட்டை உடைக்கிறார்கள். தமிழ் படம் பார்த்து முதலிரவில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் லைட்டை அனைக்கும் ஒரு தலைமுறை உருவாகிவிடக்கூடாதே என்பதே எங்கள் நோக்கம்...

போலீஸ்: என்னது லைட்ட போட்டு கட்டை உடைக்கிறாங்களா? இருய்யா கைய உடைக்கிறேன்..

அதிஷா: சார் சும்மா சத்தம் போடாதீங்க நாங்க எல்லாம் எழுத்தாளர்கள், அதுமட்டும் இல்லாம இதோ பாருங்க இவரு பேரு கேபிள் சங்கர்,இவரு ஆதிமூலம் இவங்க எல்லாம் குறும்படம் எடுப்பாங்க..

போலீஸ்: குறும்படமா அப்படின்னா? அது எங்க ரிலீஸ் ஆகும்..


அதிஷா: சார் குறும்படம் எல்லாம் ரிலீஸ் ஆவாது இது 5 நிமிசம் ஓடுற படம்...

போலீஸ்: ம்ம்ம்ம்..! புரியுது புரியுது..இந்த மொபைலில் 5 நிமிடம் ஓடுற மாதிரி படம் எடுக்குற கும்பலாய்யா நீங்க....?? அப்ப அன்னிக்கு திரிஷாவை குளிக்கும் பொழுது எடுத்ததும் நீங்கதானா? ஏட்டு நோட் செஞ்சுக்கய்யா திரிஷா குளியயலை படம் எடுத்த அதிஷான்னு போட்டு கேஸை முடிச்சுடலாம்.. ஆமா அதுனாலதான் நீ பேர அதிஷான்னு வெச்சுக்கிட்டியா?

அதிஷா: சார் உங்களுக்கு எல்லாம் புரியாது சார் நாங்க எல்லாம் பிளாக்கர்ஸ் நெட்டில் எழுதுறவங்க...

போலீஸ்: ஓ நெட்டில் வேற இத எழுதுறீங்களா? என்று போனை போடுகிறார். (சார் பெரிய கேங் ஒன்னு மாட்டி இருக்கு பலான படம் பாக்கிறாங்க அதோட இந்த மொபைல் கிளிப்பிங் எல்லாம் எடுக்கிறாங்க அது மட்டுமில்ல சார் நெட்டில் இதை பற்றி எல்லாம் எழுதுவாங்களாம் பெரிய கேஸ் சார் ஒரு 20 தலை தேறும்)

அதிஷா: சார் புரிஞ்சுக்காம பேசாதீங்க சார், நெட்டில் போய் செக் செஞ்சு பாருங்க...

போலீஸ்: சரி என்னா சொல்லு என்று அருகில் இருந்த லேப் டாப்பை ஓப்பன் செஞ்சு அதிஷாஆன்லைன்.காம் ன்னு அடிக்கிறார்.

“இன்பினிட்டி இன்ப கதைகள் என்று பதிவு இருக்க, படிச்சு பார்த்துவிட்டு டெரர் ஆகிறார்.” யோவ்..! தெரியும்யா இதுமாதிரிதான் எழுதி இருப்பீங்கன்னு..

என்னா தில் இருந்தா ட்ராப்பிக் போலீஸ் பற்றியே பலான கதை எழுதுவேன்னு, நாலு போடு போடுகிறார்.

பாலபாரதி: சார் சும்மா அடிக்காதீங்க சார் அப்புறம் நான் ரிப்பேர்ட் செய்ய வேண்டியிருக்கும் அவன் சின்னபையன் சார்.

போலீஸ்: (சுந்தரை பார்த்து) சரி அப்ப பெரியவரே நீங்களும் எழுத்தாளர் தானே எங்க உங்களோட எழுத்தை எப்படி படிக்கிறது ...

சுந்தர்: jyovramsundar.blogspot.com ன்னு அடிங்க சார்.

ஸ்கிரீனில் காமகதைகள் 44

போலீஸ்: ஒரு கதை மட்டும் இல்லாம இதை தொடராகவே எழுதுறீங்களா?

சுந்தர்: சார் காமம் என்பது ஒதுக்கப்படவேண்டியது இல்ல ஏன் இப்படி காமத்தை பற்றி எழுதினா பதறுகிறீர்கள்?

போலீஸ்: உங்களை எல்லாம் தனியாக கவனிக்க வேண்டி இருக்கும் போல இருக்கே..இருங்க டி.ஐ.ஜி வரட்டும்..

பாலபாரதி: சார் புரிஞ்சுக்காம பேசாதீங்க சார்.. என்னோட பிளாக்கை பாருங்கன்னு அவரோட பிளாக் அட்ரெஸ் கொடுக்கிறார்.

(அவரோட ”பொறாமைப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய பதிவு பாகம் II ” போட்டோவை பார்த்துவிட்டு.)

போலீஸ்: ஏன்யா..! அவனவன் யாரோ மேட்டர் செஞ்ச கதையதான் எழுதி இருக்காங்க அதுவாது பரவாயில்லை. சிலர் இன்னொருத்தவன் அரைகுறையா இருக்குற போட்டோவத்தான் போடுவான் நீ என்னடான்னா உன் படத்தையே அறைகுறையா போட்டு இருக்க..?

பாலபாரதி: சார் இல்ல சார்! உங்க படத்தை கூட அப்படி செய்யலாம்...

போலீஸ்: அடிங்க! நீ போஸ் கொடுத்ததும் இல்லாம என்னையும் அப்படி போஸ் கொடுக்க சொல்றீயா..?

பாலபாரதி: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்க தப்பாவே புரிஞ்சுக்கிறீங்க.

முரளிகண்ணன்: சார் இங்க பாருங்க நாங்க எல்லாம் ஒண்ணு கூடி இதுபோல் உலக அறிவை வளர்த்து படம் எடுக்க போகிறோம் அதுக்கு முன்னோடியாத்தான் சார் இது எல்லாம்! ஹீரோ கூட முடிவாகிவிட்டது இதோ பாருங்க இவருதான் ஹீரோன்னு நர்சிமை காட்டுகிறார், இவரு நல்லா பாடுவாரு என்று அப்துல்லாவை காட்டுகிறார்.பாருங்க சார் இவர் மும்பையில் இருந்து இங்க வந்திருக்கிறார் என்று அனுஜன்யாவை காட்டுகிறார். பாருங்க சார் நாங்க எல்லாம் நோட்டு வெச்சு நோட்ஸ் எழுதிக்கிட்டு இருக்கோம் என்கிறார்...

(அப்துல்லா மனசுக்குள் இதை ரொம்ப முக்கியமா இங்க சொல்லணுமா)


யாருங்க அது மும்பையில் இருந்து வந்தது என்று போலீஸ் கூப்பிட..
பம்பி பதுங்கி வெளியே வருகிறார் அனுஜன்யா...

போலீஸ்: கிண்டியில் இருந்து பரங்கிமலை ஜோதிக்கு போவதே ரொம்ப தூரம் ஆனா நீங்க மும்பையில் இருந்து இங்க வருகிறீர்களோ! உங்களை எல்லாம் பார்த்தா பெரியமனுசன் மாதிரி இருக்கீங்க..

அனுஜன்யா: இல்ல சார் நான் யூத்...

போலீஸ்: சேட்டை...! ம்ம்ம் அப்படியே நாலு போட்டன்னா தெரியும். ஆமா என்னா ஏதோ நோட்ஸ் எடுக்குறீங்களாமே என்னா கருமத்தை எழுதியிருக்கீங்க என்று கார்க்கி நோட்டை வாங்கி பார்க்கிறார்...

போலீஸ்: பார்த்துவிட்டு நாலு சாத்து சாத்துகிறார் கார்க்கிய... இதுவாயா நீங்க சொன்ன குறிப்பு எடுக்கிறது என்ன செஞ்சு வெச்சு இருக்கான் பாருன்னு காட்டுகிறார் முரளியிடம்...(நோட்டில் குறீயிடுகளாக குறிகள்)

கார்க்கி: இல்ல சார் அடிக்காதீங்க சார் இந்த படத்தின் காட்சிகள் குறீயீடுகளா பார்க்கனும் என்று பைத்தியகாரன் அண்ணாச்சி எழுதி இருந்தார், பாம்பு என்பது இந்த படத்தில் ஒரு முக்கிய குறீயிடுன்னு. அதுதான் சார் பாம்பு படம் வரைஞ்சேன் அதுக்கு கண்ணு வைக்கங்காட்டியும் நீங்க வந்துட்டீங்க அதுமட்டும் இல்லாம அத பார்த்து தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க என்று கார்க்கி சொல்ல.

ஆதிமூலம் மொபைல் ரிங் ஆக எடுத்து பேசுகிறார்..ம்ம்ம் ஆரம்பிச்சாச்சு வாங்க வாங்க அப்படியே லெப்டில் ஒரு ”கட்டிங்” அடிச்சா ஒரு பெரிய பச்சை கலர் பெயிண்ட் அடிச்ச இடம் தான் வாங்க வாங்க என்று பேசுகிறார்.

சிறிது நேரத்தில்

விசில் அடிச்சப்படியே உள்ளே நுழையும் வெண்பூ..ஹாய் என்னாய்யா ஆதிமுலம் சீடி சிக்கிக்கிச்சா ஏன் இப்படி ஹேங் ஆகி நிக்குது, முக்கியமான சீன் ஏதும் போச்சா என்று கேட்க..

அப்பொழுதுதான் அங்கிருக்கும் போலீஸை கவனிக்கிறார். ஓ...! போலீஸ் பாதுகாப்பு எல்லாம் கொடுக்குதா வெரி குட் வெரிகுட் ! ஆனந்தவிகடன் புகழ் வெண்பூன்னா சும்மாவா! என்று பேசுபவரை ஆதி வெண்பூ கொஞ்சம் அடக்கி வாசி..!என்று காதை கடிக்கிறார்.

யோவ்..! ஆதி இப்பதானே இரண்டு நிமிஷம் முன்னாடி போன் போட்டு கேட்டேன் அப்பயே வராதன்னு சொல்லி இருந்தா அப்படியே எஸ்கேப் ஆகியிருப்பேனே என்று கேட்க..


ஆதிமூலம்: கம்பெனிக்கு ஆள் வேண்டாமா? அதான் கோத்துவிட்டேன்

வெண்பூ: நல்லா இருய்யா ஆமாம் யாருக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டு இருக்க..?

ஆதிமூலம்: வேலன் அண்ணாச்சிக்குதான் மெட்ராஸ் வந்திருக்கிறாராம் அதான் கொஞ்சம் இங்க வரசொல்ல லொக்கேஷன் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.

போலீஸ்: இதுக்கு எல்லாம் யாரு ஹெட்ன்னு கேட்க மக்கள் ஒட்டுமொத்தமாக பாலபாரதிதாங்க என்று கோரஸாக சொல்கிறார்கள்.
பாலபாரதி பக்கத்தில் இருந்த சுந்தரிடம் ஏன் அண்ணே நான் எங்க இதுல சம்மந்தப்பட்டேன் என்று கேட்க

சுந்தர்: ஹெட்டுன்னா தலைதானே! அப்படி தலைன்னா அது நீங்கதானே என்கிறார்...

பாலபாரதி வடிவேலு மாதிரி முரளிகண்ணனை பார்க்கிறார் ஏன் என்பது போல!


முரளிகண்ணன்: நான் பைத்தியகாரன் என்றுதான் சொல்லவந்தேன் ஆனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிட்டு என்று சொல்கிறார்.

மக்கள் எல்லோரும் பாலபாரதியை போட்டு கொடுக்க அப்துல்லா போய் போலீஸ் காதில் ஏதோ கிசு கிசுக்கிறார்...


என்ன சொன்னீங்கன்னு கேட்க அண்ணன் பாலபாரதி நாட்டுகட்டை மாதிரி சும்மா அவரை கேவலப்படுத்தும் விதமாக சின்ன லத்தியால எல்லாம் அடிச்சா எங்களுக்கு கேவலம்..அடிச்சா சவுக்குகட்டையால அடிங்கன்னு சொல்லிட்டு வந்தேன்..எதிலும் ஒரு பிரமாண்டம் வேண்டாமா என்று சொல்கிறார்.

போலீஸ்: சரி சரி தப்பு செஞ்சுட்டீங்க ஒரு 500ரூபாய் கொடுங்க நாங்க கிளம்புறோம், இல்லேன்னா இவரை அழைச்சுக்கிட்டு போய் ஒருநாள் முழுக்க லாடம் கட்டுவோம் என்று சொல்ல..

அதெல்லாம் முடியாது 1000 வேண்டும் என்றாலும் கொடுக்கிறோம் இவரை அழைச்சுட்டு போய் ரெண்டு நாள் இல்ல ஒரு வாரம் வெச்சுக்குங்க என்று பாலபாரதியை போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்புகிறார்கள்.

Friday, May 29, 2009

சொக்கா சொக்கா எனக்கில்ல எனக்கில்ல!

சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி அண்ணன் பைத்தியக்காரன் மே 15 ஆம் தேதி ஒரு பதிவு போட்டு இருந்தார் அதில் மிஷேல் ஃபூக்கோ அதிகாரம்
கொஞ்சம் காரம் என்று எல்லாம் இருந்ததால் இது நமக்கான இடம் இல்லை என்று நினைச்சேன் அதுமட்டும் இன்றி 1500ரூபாய்க்கு பரிசு என்றது அது வேற லெவல் என்று இருந்துவிட்டேன். ஏன்னா நம்ம ஒர்த் எப்பவும்
பத்து ரூபாய்க்கு மேல தாண்டியது இல்லை.

ஸ்கூலில் படிக்கும் காலம் முதல் இந்த போட்டி என்றாலே அலர்ஜி ஏன்னா நானும் ஒன்னு ஒன்னுலேயும் கலந்துக்கிட்டு கடைசி இடமே பிடிக்கமுடிந்ததால் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். பேசாம இருந்த என்னை சுந்தர்ஜீயும், யூத் அனுஜன்யாவும்
உன்னால முடியும் குசும்பா ச்சும்மா எழுது என்று உசுப்பேத்தியதன் விளைவாக இதுவரை ஒரு பத்து கதை எழுதி ஒன்னும் திருப்தியா வரவில்லை.

அனுஜன்யாவுக்கு ஒரு கதை எழுதி அனுப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கன்னா ஆமாம் கதை அனுப்புறேன்னு சொன்னீயே அது எங்கன்னு லந்தகொடுக்கிறார். என்ன செய்வது இது இனி நமக்கு சரிவராதுன்னு
நர்சிம் கிட்ட அப்படியே ஒரு கதைய இடது கையால எழுதி இப்படி குசும்பு ஒன்லிக்கு அனுப்பினா நானும் பரிசு வாங்கிப்பேன் என்று சொன்னதுக்கு டீல் ஓக்கேன்னு சொன்னவர் அதன் பிறகு ஆல் அட்ரசே இல்லை.

சொக்கா சொக்கா எனக்கில்ல எனக்கில்ல என்று புலம்பவைத்துவிட்டார்கள் போட்டி என்று சொல்லி நாம 'உ' போட்டு ஆரம்பிக்கும் முன்பே பெரும் தலைகள் எல்லாம் களத்துல குதிச்சுட்டுங்க நல்லா இருக்கட்டும்! ஒரு பெரும் மலைகளோடு மேதிய பெருமையாவது மிஞ்சுமே என்ற ஆசையில் விரைவில் கதையோடு வருகிறேன்.

என்ன செய்வது விதி வலியது!

எது எப்படி இருந்தாலும் கதை எழுதனும் என்கிற ஆர்வத்தை தூண்டிய பைத்தியகாரன் + சமூக கலை இலக்கிய அமைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்!

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

டிஸ்கி: தலைப்பை படிச்சுவிட்டு எனக்கு சொக்கா இல்லை என்று நினைத்து சொக்கா எடுத்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் 42 சைஸ் அலேன் சோலி சொக்கா எடுத்து அனுப்பலாம் ஆட்சேபனை இல்லை!

Thursday, May 28, 2009

கிழக்குபதிப்பக விளம்பர யுத்தியும் + பொன் அந்தியும்

எங்க ஊரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஆனந்தவிகடனோ அல்லது குமுதமோ வாங்கனும் என்றால் பஸ் புடிச்சு போகனும், பஸ் புடிக்க எவ்வளோ தூரம் போகனும் என்பது வேறவிசயம் அது நமக்கு சம்மந்தம் இல்லாதது. அப்படி இருந்த நம்ம ஊரின் சின்ன சின்ன டிப்பார்ட் மெண்ட் ஸ்டோரில் கூட இப்பொழுது சதாம், ஒபாமா, அம்பானி,ஹிட்லர், முசாரப் என்று அட்டைபடங்கள் மிளிர்கின்றன. அதுக்கு காரணம் கிழக்கு பதிப்பகம் இதை சிறந்த விளம்பர யுத்தியாகவே நான் நினைக்கிறேன்.

கிழக்கு பதிப்பகத்தின் சாதனையாக நான் கருதுவது இந்த விளம்பர யுத்தியைதான் இதுபோல் புத்தங்களை வாங்கனும் என்றால் அய்யனார் புக் டெப்போ போன்ற புத்தக நிலையங்களைதேடி அலைய வேண்டி இருக்கும் அப்படி இல்லாமல் சின்ன சின்ன கடைகளிலும் கிடைக்கிறது. விளம்பரத்தின் முக்கிய நோக்கமே பொருளை வாங்க வைப்பதை விடஅதன் பெயரை உங்கள் மனதில் பதியவைப்பதாகவே இருக்கும். திரும்ப திரும்ப அந்த பொருளின் பெயரோ அல்லது அந்த பொருளோ உங்கள் கண்ணில் பட்டுக்கொண்டு இருந்தால்அடுத்த முறை கடைக்கு சொல்லும் பொழுது வாங்கும் எண்ணம் இல்லை என்றாலும் சும்மா எடுத்து பார்ப்பீங்க என்னாதான் இதில் இருக்கு என்பது போல். அதே மாதிரிதிரும்ப திரும்ப பேப்பர் வாங்கு போகும் கடை, மளிகை சாமான் வாங்க போகும் கடை, ரயில்வே நிலையத்தில், பஸ் நிலையத்தில் என்று திரும்ப திரும்ப சில புத்தங்கள் உங்கள் கண்ணிலே பட்டுக்கொண்டு இருக்கும் ஐந்தாவது முறை என்னதான் இதில் இருக்கு என்று எடுத்து பார்ப்பீங்க. அந்த யுத்தியை சரியாக பிடித்துக்கொண்டிருக்கிறது கிழக்கு பதிப்பகம். இவர்கள் புத்தங்கள் ரயில் நிலையத்திலும் பஸ் நிலையத்தில் அதிகம் விற்பனையாகும் என்பது என் கணிப்பு . என்பது ரூபாய்க்கு அல்லது நூறு ரூபாய்க்கு தரமான பேப்பரில் புத்தங்கள் கிடைப்பதும் கூடுதல் பிளஸ்.

நான் சென்னை வந்திருந்த பொழுது காலையில் செண்ட்ரலுக்கு அருகில் இருக்கும் வசந்தபவனின் சாப்பாடு வாங்கபோனேன் அங்கே அருகில் இருக்கும்நான்கு புத்தகடைகளில் புத்தங்களின் அட்டையில் பிரபாகரனும், ஓபாமாவும் சிரித்துக்கொண்டு இருந்தார்கள் பின் புத்தககண்காட்சியின் பொழுது இவர்கள் இடத்தில் மட்டும் இன்றி பல்வேறுபதிப்பங்களிலும் பல்வேறு இடங்களிலும் இவர்கள் புத்தங்கள் அலங்கரித்துக்கொண்டு இருந்தன. பின் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றேன் அங்கு பெருட்களை விட்டு செல்லும் கடையின் நுழைவாயிலில் ஒரு முப்பது புத்தங்கள் உள்ள ஸ்டேண்டில் இருபது புத்தங்கள் கிழக்கு பதிப்பத்தினுடையது. பின் கும்பகோணம்,குடவாசல், மாயவரம் என்று பல இடங்களிலும் இவர்களுடைய புத்தங்களை காணமுடிந்தது. அதுபோல் இலவசமாக புத்தம் அனுப்பிவிட்டு அதற்கு விமர்சனம் எழுதி வாங்கியதும் அருமையான விளம்பர யுத்தி.

புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய கிழக்கு பதிப்பக புத்தங்கள் என் பெயர் எஸ்கோபர், செங்கிஸ்கான் ,விளம்பர உலகம், சதாம்.

****************************

என் பெயர் எஸ்கோபர்
பா.ராகவன் அவர்களுக்காக வாங்கியது இந்த புத்தகம் நிலமெல்லாம் இரத்தம் முதல் இவருடைய அனைத்து எழுத்துக்களுக்கும் தீவிர ரசிகன் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கியது என் பெயர் எஸ்கோபர். கொலம்பியா தேசத்தின் டான் எஸ்கோபரின் கடத்தலை விவரிக்கும் பொழுதும் அவனின் நெட் வொர்க் பற்றி விவரிக்கும் பொழுது நம் கண்முன்னே ஒரு திரைப்படம் ஓடுவது போல் இருக்கிறது ஆனால் பல இடங்களில் சென்னை பாசை வருவது போல் இருப்பது கொஞ்சம் அயற்சியை தருகிறது. அப்படி இருந்தாலும்வாங்கிய மூன்று மணி நேரத்தில் படிக்கவைத்த எழுத்து நடை பா.ராவுடையது.

****************************

பொன் அந்தி
கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த பொழுது தஞ்சை முனிசிபல் காலணியில் இருக்கும் பாவேந்தர் வாடகை நூலகத்தில் எடுத்து படித்த புத்தகம் பொன் அந்திஎஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதியது,அப்பொழுது படித்தது கமலுக்காக! என்ன கமலுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்களா? பொன் அந்தி மருதநாயகம்என்கிற யூசுப்கானை பற்றிய நாவல் அல்ல காவியம். பின் பல வருடங்கள் அந்த புத்தகத்தை வாங்க முயன்று முடியாமல் பலரிடம் சொல்லி வாங்க முனைந்த பொழுது அப்படி ஒரு புத்தகமா என்றார்கள் பலர். பின் இந்த முறை நண்பர் பைத்தியகாரனையும், குருஜி சுந்தரையும் பார்த்த பொழுது பொன் அந்தி என்ன பதிப்பகம் என்று தெரியுமா என்று கேட்ட பொழுது கலைஞன் பதிப்பகம் என்று உடனடி பதில் வந்தது பைத்தியகாரன் அண்ணாச்சியிடம் இருந்து.அதன் பின் அங்கு சென்று வாங்கினேன்.

மருதநாயகத்தின் வீரம் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதிவைத்த குறிப்புகள் அவரை பற்றிய கல்வெட்டுகள் மூலமும் அவரை பற்றிய குறிப்புகளை எழுதி இருக்கிறார் திருச்சி கோட்டை முற்றுகையை அவர் தன் தந்திரத்தால் எப்படி முறியடிக்கிறார் எப்படி எதிரிகளை பந்தாடினார் என்று ஆசிரியர் மருதநாயகத்தின் போர் தந்திரம் வீரம் பற்றி படிக்கும் பொழுது எழும் பிரமிப்புக்கு அளவே இல்லை. 684 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தின் விலை 175.

டிஸ்கி: பல மாதங்களாக எழுதி ட்ராப்டில் இருந்தது. புத்தகத்தை வைத்து போஸ் எல்லாம் கொடுத்தாச்சு படிச்சியா என்று கேட்டதால் ரிலீஸ் செய்யவேண்டியதாகிவிட்டது. புத்தகம் பற்றி விமர்சனம் எழுத சரியாக வரவில்லை என்பதால் அப்படியே வைத்திருந்தேன்.

Wednesday, May 27, 2009

பாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் பிளீஸ்!


அண்ணன் பாலபாரதி திருமணத்துக்கு பிறகு ரொம்ப அல்லகா(வடிவேலு மாதிரி படிக்கவும்) ஆகிக்கிட்டே வருகிறார்(நன்றி கார்க்கி), இன்று அவர் அழகு சிலையாக ரன் படத்தில் வரும் விவேக் மாதிரி பாவாடை சாமியார் போன்று ரொம்ப கிளாமராக கொடுத்த போஸ் கிளாமர் என்ற புத்தகத்தின் அட்டை படத்தில் வந்திருக்கிறது. அண்ணே ஓவர் அழகு உடம்புக்கு ஆவாதுன்னே!


இதில் என்ன கொடுமை என்றால் பார்ட்II என்று வேறு தலைப்பு கொடுத்திருக்கிறார், இப்படியே போனால் பல பார்ட் வரும் என்பதால் என்ன செய்து அவர் அழகை குறைக்கலாம் என்றும், டிப்ஸ் கொடுத்து அண்ணிக்கு உதவுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்.

அதுமட்டும் இன்றி புத்தகத்தை பிடித்திருக்கும் பெண் கையில் கிளவுஸ் போட்டு பிடித்திருப்பதும் ஏன் என்று சொல்பவர்களுக்கும் சிறப்பு பரிசு கிடைக்கும்.

தலைநகரம் படத்தில் வடிவேலுவின் அழகில் ஹீரோயின் மயங்குவது போல் அண்ணன் அழகில் மயங்கியவர்கள், மயங்கிக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம், அனஸ்தீஸியா கொடுப்பவர் வரவில்லை என்றால் அண்ணனை கூப்பிட்டு போய் குளோசப்பில் சிரிக்க வைத்தே பல ஆப்ரேசன்கள் வெற்றி கரமாக அனஸ்தீஸியா இன்றி முடிந்திருக்கிறது, இப்பொழுது வெளியூர் மருத்துவர்கள் போட்டோ காட்டி கூட ஆப்புரேசன் செய்வதாக கேள்வி, நம்முடைய சொத்தான பாலபாரதியை யாரும் ஆட்டைய போடும் முன் அவர் அழகை குறைப்பது நம் கடமை! அதுக்கு என்னுடைய டிப்ஸ்:

1) அண்ணனின் பழய காதலிகள் அட்ரஸை தேடி புடிச்சு அவர்களிடம் இருந்து அண்ணனின் குறும்புகளில் உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்டு எழுதி வாங்கி அதை ஒரு புத்தகமாக போட்டு அண்ணி கையில் கொடுக்கலாம்.


2)அண்ணன் கண் அசரும் நேரம் பார்த்து ஒரு லிப்ஸ்டிக் டாட்டூவை கண்ணத்தில் ஒட்டிவிட்டுவிடலாம், அல்லது அதிஷா போல் தைரியம் இருப்பின் லிப்ஸ்டிக் போட்டு நீங்களே முத்தம் கொடுக்கலாம்.

(பின் விளைவுகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் மந்திரிக்கும் செலவுகளுக்கும் கம்பெணி பொருப்பாகாது)

3) அண்ணன் ஆபிஸ் விட்டு வரும் பொழுது சரியா கிரிக்கெட் பாலால் பதம் பார்க்கலாம்.


4) கொலைவெறியில் இருக்கும் அபிஅப்பாவிடம் புடிச்சு கொடுக்கலாம்.

சிறப்பாக அண்ணன் பாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் கொடுப்பவர்களுக்கு
அண்ணன் தோளில் போட்டு இருக்கு துண்டு பரிசு!

டிஸ்கி: அட்டையில் அண்ணனின் முன் அழகு படம் வந்திருப்பதால் பின் அட்டையின் பின் அழகு படம் இருக்குமா என்றும் அதை எப்படி பார்ப்பது என்று விரும்பும் ரசிகைகள் 1000$ அனுப்பினால் சைட் போஸ், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள் போன்ற 8 வகையான புகைப்படம் அனுப்பிவைக்கபடும்!

Monday, May 25, 2009

பொறாமை படுபவர்கள் தவிர்கவேண்டிய பதிவு!

ஒரு படத்தில் விவேக்குக்கு தண்ணியில கண்டம் என்று ஜோசியன் சொல்லிவிடுவான் அவர் ரோட்டில் போகும் பொழுது மழை பெய்யும் அதுக்கு பயந்துக்கிட்டு பஸ் ஸ்டாப்பில் நிற்பார், அங்கு வரும் ஒருவர் ஏன் பயப்படுறீங்க வாங்க அழைச்சுக்கிட்டு போகிறேன் என்று குடைக்குள் அழைச்சுக்கிட்டு போகும் பொழுது இடி தாங்கி இந்த போஸில் தான் ரோட்டில் கிடப்பார். அது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் கூடபிரச்சினை இல்லை ஒருவருடம் முன்பு இதுபோல் என் எதிரி அய்யனார் ஒரு போஸ் கொடுத்தார் அது நினைவு இருக்கா? அப்படி இல்லாதவர்கள் பாக்கியவான்கள்.
ஆமா இது எதுக்கு இப்படி ஒரு போட்டோ ஒரு பதிவுன்னு தெரியலையா? இனி நானும் ரவுடிதான் ரவுடிதான் என்று உலகுக்கு எப்படி சொல்வது:)))

IMDB பார்த்து விமர்சனம் எழுதுவது எப்படி?


முதல் பாடம் 1


ஒரு ஊருல ஒரு ஆறு இருந்துச்சாம், அதுக்கு பக்கத்துல இருந்த மரத்துமேல ஒரு புறா உட்காந்து இருந்துச்சாம், அப்ப அந்த ஆற்றில் ஒரு எறும்பு விழுந்துவிட்டதாம், அதை பார்த்த புறா ஒரு இலைய பறிச்சு போட அதுமேல ஏறி எறும்பு கரை ஏறிவிட்டதாம், கொஞ்சநாள் கழித்து அந்த வழியா வந்த வேடன் புறாவை குறி பார்க்க அதை பார்த்த எறும்பு அவன் காலில் கடிச்சுச்சாம் அதனால் குறி தவறி அம்பு எங்கயோ போச்சாம். புறா சந்தோசமாக பறந்துபோச்சாம்.

பாடம் 2ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சாம் அது என்னா செஞ்சுச்சாம் ஊருக்கு போன அதோட பிகரை பாக்க பறந்து போச்சாம், அது கோடைகாலமாம் அப்ப காக்காவுக்கு தண்ணி தாகம் எடுத்துச்சாம், அப்ப அங்க இருந்த தண்ணி பானையில் கீழே தண்ணி இருந்துச்சாம், காக்காவுக்கு அது எட்டவில்லையாம் அது என்னா செஞ்சுச்சாம் ஒரு ஒருகல்லா எடுத்து போட்டுக்கிட்டே இருந்துச்சாம் தண்ணி மேல வந்துச்சாம், காக்கா தண்ணிய குடிச்சுட்டு பறந்து போச்சாம்.


பாடம் 3

நீங்களே கதை சொல்லுங்க பார்க்கலாம்....


இப்படி படம் பார்த்து கதை எழுத பழகிக்கிட்டா ஈசியா IMDB பார்த்து பட விமர்சனம் எழுதமுடியும். 30 நாட்களில் உங்களை அப்படி தயார் படுத்த இங்கு வகுப்புகள் எடுக்கப்படும். அனுகவேண்டிய முகவரி kusumbuonly@gmail.com
ஆரம்ப நாட்களில் சில சில தவறுகள் வரும் அதை பெரிதுபடுத்த என்று சில எல்லை காவல் தெய்வங்களும், சில வால்களும் இருப்பார்கள் அவர்களை பொருட்படுத்தக்கூடாது. சிலர் அந்த காட்சியில் ஹீரோயின் என்ன பேசினாள் என்று கேட்க நேரிடும் அப்பொழுது தம் அடிக்கவெளியே போய்விட்டேன் என்றோ, அல்லது டாய்லெட் போய்விட்டேன் என்றோ சொல்லி சமாளிச்சுக்கலாம்.


டிஸ்கி: இதுக்கும் சாருவின் இந்த பதிவுக்கும் சம்மந்தமே கிடையாதுங்கோ!!!

Tuesday, May 19, 2009

எங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்!

உங்கள் வீட்டில் உங்கள் சொந்த சகோதரன் விபத்தில் இறந்திருப்பின், அப்பொழுது வந்து உங்களிடம் உங்க அண்ணன் செய்தது சரி இல்லை குடிச்சுட்டு வண்டி ஓட்டியது தவறு, அதுவும் 100கிலோ மீட்டர் ஸ்பிடில்
சென்றது தவறு, அவரால் ரோட்டில் ஒருவரும் நடக்கமுடியாமல் இருந்தது என்றும் இனி நிம்மதி என்றும் ஒருவர் பேசும் பொழுது உங்களுக்கு எப்படி
இருக்கும்...

அப்படிதான் எங்களுக்கு இருக்கிறது வாதம் செய்யக்கூடம் மனம் வரவில்லை அதற்கான நேரமும் இது இல்லை...உங்களுக்கு இந்த செய்தி சந்தோசம் தருகிறது என்றால் அதை எங்களிடம் வந்து காட்டாதீர்கள். எங்களை கொஞ்சம் மெளனமாக அழவிடுங்கள்!

Tuesday, May 12, 2009

நாகப்பட்டினம் தி.மு.க கதி???

தொகுதி வரைமுறை ஆய்வுக்கு பின் நாகப்பட்டினம் தொகுதியில் திருவாரூர்,கீழ்வேளூர்,வேதரண்யம்,திருத்துறைபூண்டி,திருவாரூர், நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நாகப்பட்டினம் தொகுதி.

இந்தமுறை திமுக சார்பில் விஜயனும் , இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள். நாகப்பட்டிணம் எப்பொழுதும் சி.பி.எம்க்கு ஆதரவாகவே இருந்து வருகிறது,அதோடு திருத்துறைபூண்டியிலும், நன்னிலத்திலும் இ.கம்யூனிஸ்ட் பலமாக உள்ளது. இப்பொழுது இருக்கும் எம்.எல்.ஏக்களும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் தான், இது போன முறை தி.மு.கவோடு கூட்டணியாக இருந்து வெற்றிப்பெற்ற இடங்கள்தான் என்றாலும் நன்னிலத்தில் பத்மாவதிக்கும், திருத்துறை பூண்டியில் இ.கம்யூனிஸ்டை சேர்ந்த உலகநாதனுக்கும் தனி செல்வாக்கும் நல்ல பெயரும் இருப்பதால் தி.மு.கவுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

அதோடு தி.மு.கவின் கோட்டையாக திருவாரூர் விளங்கினாலும், இருக்கும் மின் வெட்டு பிரச்சினையால் மிகவும் வெறுத்துபோய் இருக்கும் விவசாயிகள் ஓட்டு இந்த முறை தி.மு.கவுக்கு இல்லை என்பதால் அங்கும் பெரும் சரிவை சந்திக்க இருக்கிறது.

இங்கு தே.மு.தி.க பெரும் பிரச்சினை இல்லை, அதோடு பா.ம.கவுக்கு என்று தனி ஓட்டு வங்கி எதும் கிடையாது அதே போல் ம.தி.மு.கவுக்கு கார்த்திக் கட்சியில் இருக்கும் ஆட்கள் கூட கிடையாது என்பதால் இவர்கள் கூட்டணி உதவி செய்யாது என்றாலும் , இ.கம்யூனிஸ்டுக்கு அ.தி.மு.கவின் ஓட்டுகள் செல்வதால் கடைசி நேர கணிப்பு படி நாகப்பட்டினம் இ.கம்யூனிஸ் பாக்கெட்டில் விழும் என்று தெரிகிறது.

ஊர் ஊராக பிரச்சாரம் செய்து இருக்கும் தளபதி ஸ்டாலின் வருகை எத்தனை தூரம் ஓட்டை கொண்டு வரும் என்று சொல்லமுடியாது ஆனால் தி.மு.கவுக்கு கிடைக்கப்போகும் தொகுதியில் ஒன்று குறைவு என்று சொல்லமுடியும்.

Monday, May 11, 2009

அந்த ஆண் பதிவர் யார்? பினாத்தலாரின் க்ளு

தல போட்டாலும் போட்டார் ஒரு பதிவு பார்க்கிறவன் எல்லாம் எலேய் அவனா நீ அவனா நீ என்றே கேட்டுக்கிட்டு இருக்கிறார்கள். இங்கிருக்கும் நண்பர் ஒருவர் போன் போட்டு எலேய் குசும்பா தல சொன்ன ஆளு நீதானாடா?உனக்கும் கல்யாணம் ஆயிட்டு! அப்ப அவன் நீ தான் டா என்றார். அடபாவி பயலே அப்படியாவது ஊருக்குள்ள சொல்லுங்கடா எனக்கு அப்படியாச்சும் பெண் தோழிகள் இருப்பதாக ஊர் நம்பட்டும் என்றேன்.

ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட பேசும் பொழுது அண்ணாச்சி எலேய் யாருன்னு தெரியுமாலே என்றார். தெரியாது அண்ணாச்சி என்றேன் , எலேய் உனக்கும் எனக்கும் தெரிஞ்சவன் தான் நம்ம கூட தான் இருக்கான் என்றார். யாரு? அண்ணாச்சி என்றேன். நம்ம அய்யனாருதான்லே அது என்றார். போங்க அண்ணாச்சி அவனுக்கு இப்பதான் கல்யாணம் ஆயி இருக்கு அந்த பதிவில் பதிவருக்கு குழந்தைங்க இருப்பது போல் அல்லவா சொல்லி இருக்கார் என்றேன். இப்ப கல்யாணம் ஆவதுக்கும் குழந்தைக்கும் என்னடா சம்மந்தம் ஊர் உலகம் தெரியாதவனா இருக்கியேடா என்றார். அதுவும் சரிதான்!

இருவருடங்களுக்கு முன்பு எங்க ஆபிஸில் ஒரு பிலிப்பினோ இருந்தா என்னிடம் கேட்டா எத்தனை குழந்தைங்க என்று இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்றேன், அதனால் என்ன என்றாள்! அட சண்டாளி என்று நினைச்சுக்கிட்டு, உனக்கு எத்தனை குழந்தை என்றேன். இப்ப ஒன்னு இருக்கு கல்யாணத்துக்கு பிறகுதான் அடுத்த குழந்தை என்றாள். என்னது கல்யாணத்துக்கு பிறகா அப்ப அந்த குழந்தை என்றேன்? நான் 18வயசா இருந்தப்ப கொஞ்சம் கேர்லஸ்ஸா இருந்துட்டேன் இனிமே கல்யாணத்துக்கு பிறகுதான் என்று முடிவு செஞ்சு இப்ப எல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கிறேன் என்றாள். வெளங்கிடும் என்று நினைச்சுக்கிட்டேன்.

இப்ப என்னடான்னா இங்கிருக்கும் அமீரக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இரு முடிவு எடுத்திருக்கோம் ஒன்னு அனைவரது பெயரையும் சீட்டு எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் அவர் பெயரை எடுப்பது, அல்லது மை போட்டு பார்த்து கண்டுப்பிடிப்பது.

பின் கேள்விபதில் மூலமாக கண்டுப்பிடிக்கலாம் என்று முடிவெடுத்து ஆன் லைனில் யார் இருக்கிறார்கள் என்று பச்சை லைட் போட்டா ஒருத்தரும் வழக்கம் போல கண்டுக்கவே இல்லை சரி எப்படி ஆள் புடிக்கிறது என்று யோசிச்சு :((((( போட்டதும் ஆள் ஆளுக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு என்றார்கள் அப்படி கேட்டவர்களை எல்லாம் விட்டு உருமீன் வர காத்திருக்கும் கொக்கு போல காத்திருந்தேன். வந்தாரு நம்ம பினாத்தல் சுரேஷ் என்னய்யா சோகம் என்றார். காரணத்தை சொன்னதும் அடப்பாவி இன்னைக்கு நானா என்றார் ஆமாம் என்றேன். சரி இனி நான் கேட்கப்போகும்
கேள்விகளுக்கு பதில் ஆம் இல்லை என்று மட்டுமே சொல்லனும் என்றேன் சரி என்றார்.


கேள்வி :பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கீங்களா?
பினாத்தல்: ஆம்

கேள்வி: குழந்தைகள் இருக்கிறதா?
பினாத்தல்: ஆம்

கேள்வி: கல்யாணம் ஆகிவிட்டதா?
பினாத்தல்: டேய்ய்ய்! அதான் குழந்தை இருக்குன்னு சொல்லிட்டேனே!

நான்: மன்னிக்கவும் ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் சொல்லனும்.
பினாத்தல்: ஆம்

கேள்வி: எப்பொழுதாவது SMS, அல்லது மெயிலை பார்வர்ட் செஞ்சு இருக்கீங்களா?

பினாத்தல்: ஆம்

கேள்வி: உங்களுக்கு பெண் தோழிகள் இருக்கிறார்களா?
பினாத்தல்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது கைய உடைப்பேன் படுவா என்றார்.

கடைசி கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றாலும் அதிக கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லி இருப்பதால் உங்கள் பெயரும் டிஸ்டிங்சன் லிஸ்டில் ஏற்றப்படுகிறது என்றேன்.

பின் அவருக்கு அவனைப்பற்றி தெரியும் க்ளு மட்டும் கொடுக்கிறேன் என்றார்.

அவர் கொடுத்த க்ளு
அவர் பேரின் கடைசி இரண்டு எழுத்தை சாப்பிடலாம்முதல் இரண்டு எழுத்துக்கு முகம் சுளிக்கலாம் பேச்சாளர் தொடர ஊக்குவிக்க மூன்றாம் எழுத்தை பயன் படுத்துவார்கள்.

யார் அது?

Sunday, May 10, 2009

வலைபதிவர்கள் ஸ்பெசல் கார்ட்டூன்11-5-2009

முதல் படத்தை தவிர மற்ற அனைவரும் வலைப்பதிவர்களே!:))))


கானா அப்துல்லா

கதைக்கும் கைக்கும் சம்மந்தம் இல்லை- குருஜி சுந்தர்

கடப்பா கல்லுக்கு பாலீஸ் போட்டது போல் இருப்பது- அண்ணாசி ஆசிப்

லக்கி,நர்சிம்,அப்துல்லா,அதிஷா,ஆசிப், ஆதிபச்சான்


தண்ணியில் இருக்கும் வரைதான் முதலைக்கு பலம் என்று சொன்னது அந்த தண்ணி இல்ல!

யாரு ரமேஷ்வைத்யா யாரு மனோபாலா?

மாதவராஜ், அதிஷா,லக்கி,சுந்தர்,புருனோ, ஸ்ரீ(பேரே அதுதானாம் வெண்பூக்கு முன்னாடி ஸ்ரீன்னு ஆயிடுமேன்னு விளக்கம்), வெண்பூ

அடிச்ச டையில் மீதி டீசர்மேல் கோடாக! --யூத் வேடத்தில் அனுஜன்யா

அனைவரின் அனுமதியுடனே வெளிவந்திருப்பதால் தாராளமாக கும்மலாம்:)

Thursday, May 7, 2009

20:20 டீமோடு ஒன்னுக்கு அடிக்க ரெடியா? + கார்டூன்ஸ் 7-5-2009


டீவியில் நிகழ்ச்சிகள் பார்பதைவிட எனக்கு விளம்பரங்கள் பார்ப்பது ரொம்ப
புடிக்கும் ஆனா இப்ப வரும் IPL + 20:20 உலககோப்பை விளம்பரங்கள் என்னை ரொம்ப டென்சன் ஆக்குது.

எங்க பிஸ்கோத்த சாப்பிட்டு கவரை கொண்டுவந்தா பைனல்ஸ் போகும் டீமோட உட்காந்து ஆய் போகலாம்...

எங்க குளிர்பானத்தை குடிச்சுட்டு மூடிய கொண்டுவந்தா வின்னிங் டீமோட ஒன்னுக்கு அடிக்கலாம் என்ற ரீதியிலேயே அனைத்து விளம்பரங்களும் வருது. எப்படா இந்த 20:20 முடியும் என்று இருக்கு.
எல்லா விளம்பரங்களும் இதே ரீதியில் தான் வருது:(

Wednesday, May 6, 2009

ஒழுங்கா இந்த பதிவை படிக்கல அப்புறம் பாட்டுபாடிபுடுவேன்!!!

ஊரில் நம்ம பாட்டு பாடும் திறமைக்கு முதல் அங்கிகாரம் கொடுத்தது என் அம்மா, ஒரு நாள் குஜால் மூடில் அபூர்வ சகோதரர்கள் பட பாட்டு ”ராஜா கைய வெச்சா பாட்டை பெருகுரல் எடுத்து கத்திக்கொண்டு இருக்க அம்மா அங்கிருந்து தம்பி டேய் இதை எல்லாம் கொஞ்ச விரட்டி விட்டு போ நிறைய கழுதை வருது பாரு என்றார்கள்.

பின் ஸ்கூலில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மாலை பஜனை கூட்டத்தில் சரஸ்வதி நமஸ் துப்பியம் வரதே காமரூபினி..வித்யாரம்பம் கரீஸ்யாமி சித்தித்பவதுமேஸ்ததான்னு ஒரு பாட்டை பாடனும் அன்று என்னை பாட சொல்ல... பாக்கியராஜ் படத்தில் ஹீரோயின் பாடும் தேவனே தேவனே... மாதிரி பாட அப்படியே வாய் பொத்தி கடைசி வரிசையில் கொண்டு போட்டதும் இல்லாமல் இனி வெள்ளிகிழமை கடைசி பீரியடின் பொழுது நீ பஜனைக்கே வரவேண்டாம் வீட்டுக்கு போய்விடலாம் என்று அனுமதியும் கிடைத்தது.

பின் அக்காவீட்டில் அக்கா என் மாப்பிள்ளைக்கு சாப்பாடு ஊட்ட ஒழுங்கா சாப்பிடுறீயா இல்லை மாமாவை பாட சொல்லவா என்று சொல்லி சொல்லியே சாப்பாடு ஊட்டும்.

கல்லூரி நாட்களில் நண்பர்கள் என்னை பாட சொல்லி கம்பல் செய்வார்கள், நானும் ரொம்ப குஜலாகி டாலாக்கு டோல் டப்பிமா...என்று பாடுவேன், கொஞ்ச நாட்கள் கழிச்சுதான் தெரிஞ்சுது நாம பாடும் பொழுது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் பிகருங்க நெருங்கி பயந்து போய் இறுக்கமா அவனுங்களை கட்டிபுடிச்சுக்கிட்டு வர நம்மளை பாட சொல்லி இருக்கானுங்க என்று. ...சரி இப்ப எதுக்கு இத சொல்லவருகிறாய் என்று கேட்கிறீர்களா.

நம்ம புதுகை அப்துல்லா ”சொல்ல சொல்ல இனிக்குதே” படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார். காதல் ஒரு பள்ளிகூடம் நண்பான்னு செம கலக்கலா ஒரு கானா பாட்டு , நேற்று போன் போட்டு பாட்டை சத்தமாக பாட விட்டு கேட்கவைத்தார். பின் அண்ணாச்சி எப்படி இப்படி அருமையா பாடி இருக்கீங்க என்று கேட்டேன். அவரும் அதுக்கு சொன்னார் நீங்கதான் என் குருன்னு, கண்ணுல தண்ணிவந்துடுச்சு, அப்படியான்னே என்றேன் ஆமான்னே உங்கள மாதிரி பாடக்கூடாதுன்னு நினைச்சேன், நல்லபடியா வந்துட்டுன்னே என்று சொல்கிறார்.Get this widget Track details eSnips Social DNAநீங்களே கேட்டு பார்த்துவிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நம்ம சக பதிவர் ஒருவர் பாடகராக அவதாரம் எடுத்திருக்கிறார், அடுத்த முறை ஒரு ஜோடி கூட பாட வாழ்த்துவோம் அதுவும் ஸ்ரேயா கோசல் கூட சேர்ந்து பாட வாழ்த்துவோம்.

டிஸ்கி: பாட்டினை கேட்டு முதலில் பின்னூட்டம் பாட்டின் நடு வரிகளோடு பின்னூட்டம் இடும் 100 நபர்களுக்கு (எப்பதான் நானும் அம்புட்டு பின்னூட்டம் வாங்குவது?) தலா 5 பவுன் தங்க சங்கிலி தருவதாக சொல்லி இருக்கிறார். பாட்ட கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

Tuesday, May 5, 2009

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கடந்த ஒருவாரமாக இனைய தொடர்பு இல்லை, புதுசாக திறக்க போகும் ஒரு ஹோட்டலுக்காக வேலை செய்ய வந்தவர்கள் தரையை தோண்டியதில் எங்கள் ஆபிஸ் நெட் கனெக்சன் கேபிளும் கட் ஆகிவிட்டது. அவர்களிடம் போய் கேட்டால் எங்க இடம் வழியாக கேபிள் போகும் படி செய்தது ரியல் எஸ்டேட் ஆளுங்க தப்பு அவர்களிடம் போய் கேளுங்க என்றார்கள், அவர்களிடம் போனால் எங்கள் அனுமதி இன்றி எவன் அவர்களை நோண்ட சொன்னது என்கிறார்கள், எடிசலாட் ஆட்களிடம் பேசினால் யாராவது கேபிள் இழுத்து வையுங்க நாங்க வந்து கனெக்சன் கொடுக்கிறோம் என்றார்கள், கேபிள் இழுத்த பிறகு வாங்கடா என்றால் அதில் நொல்லை இதில் நொட்டை என்றார்கள், இதுக்காக கேபிள் சங்கரைய இந்தியாவில் இருந்தா அழைத்துவர முடியும் ஒருவழியாக போராடி இன்று இனைய இனைப்பு வந்துவிட்டது, ஒருவாரமாக ஊர் உலகில் என்ன நடந்தது என்றே தெரியாமல் இருந்தது. அன்றாட செய்திகள் கூட தெரிஞ்சக்கமுடியாமல் போய்விட்டது...ஆவலோடு வந்த எனக்கு முதலில் பார்த்த பதிவே ரிஷானுக்கு உடல் நிலை சரி இல்லை என்று அப்துல்லாவின் பதிவு! அடுத்து மெயிலை ஓப்பன் செஞ்சா ஜோசப்பின் அப்பா இறந்துவிட்டார் என்ற செய்தி.மிகவும் கஷ்டமான விசயம் இறந்த பொழுது அந்த துக்கத்தில் பங்கெடுக்கமுடியாமல் அதன் பிறகு போய் துக்கம் விசாரிப்பது என்பது. எப்படி? எப்பொழுது? என்ற கேள்விகளை சடங்கு போல கேட்க மனவருவது இல்லை.கடைசியாக படித்தது சுந்தர்ஜீ எழுதி இருந்த கதை. அதில் அதிதன் கீழே போகமாட்டேங்கிறான் என்பது வரை படித்திருந்தேன் அடுத்த பகுதி வந்துவிட்டதா? அதிலாவது முன்னேறினானா? என்ன ஆனது?

மும்பை தாகுதல் கசாப்புக்கு மைனரா என்று சோதனை செய்யபோகிறார்கள் என்று முன்பு படித்தேன் அதன் ரிசல்ட் என்ன ஆனது? மைனர் என்று வந்திருந்தால் தீர்பு வழங்கும் பொருப்பை விவேக்கிடம் கொடுத்திருக்கலாமே!

அப்துல்லா பாட்டு பாடி இருக்கிறாராம் அது ரிலீஸ் ஆகிவிட்டதா?

சக்கரைய பாவாக காய்ச்சும் பணியை இப்பொழுது யார் செய்கிறார்கள்?

வலையுலக கிசு கிசு ஏதும் இருக்கா? கார்க்கிக்கி பெங்களூரில் ரோஜா செட் ஆனதை தவிர வேறு ஏதும் இருந்தா சொல்லுங்க.

அதிஷா பிட்டு படம் எடுப்பது எப்படின்னு பதிவு எழுதப்போறேன் என்றார் அது வந்துவிட்டதா?

அபி அப்பாவின் ”கிழசிங்கம் கர்ஜனையில் ஆடிய இலங்கைக்கு” பிறகு ஏதும் காமெடி பதிவு வந்ததா?

புதுசா ஏதும் இருந்தா சொல்லுங்க...

உங்களுக்காக ஒரே ஒரு கார்ட்டூன் மட்டும் பின் மற்றவர்களோடதும் வரும்...
போட்டோ இருக்கும் இடம் பற்றி போட்டுக்கொடுத்த நர்சிம்முக்கு நன்றி!