Monday, May 25, 2009

IMDB பார்த்து விமர்சனம் எழுதுவது எப்படி?


முதல் பாடம் 1


ஒரு ஊருல ஒரு ஆறு இருந்துச்சாம், அதுக்கு பக்கத்துல இருந்த மரத்துமேல ஒரு புறா உட்காந்து இருந்துச்சாம், அப்ப அந்த ஆற்றில் ஒரு எறும்பு விழுந்துவிட்டதாம், அதை பார்த்த புறா ஒரு இலைய பறிச்சு போட அதுமேல ஏறி எறும்பு கரை ஏறிவிட்டதாம், கொஞ்சநாள் கழித்து அந்த வழியா வந்த வேடன் புறாவை குறி பார்க்க அதை பார்த்த எறும்பு அவன் காலில் கடிச்சுச்சாம் அதனால் குறி தவறி அம்பு எங்கயோ போச்சாம். புறா சந்தோசமாக பறந்துபோச்சாம்.

பாடம் 2ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சாம் அது என்னா செஞ்சுச்சாம் ஊருக்கு போன அதோட பிகரை பாக்க பறந்து போச்சாம், அது கோடைகாலமாம் அப்ப காக்காவுக்கு தண்ணி தாகம் எடுத்துச்சாம், அப்ப அங்க இருந்த தண்ணி பானையில் கீழே தண்ணி இருந்துச்சாம், காக்காவுக்கு அது எட்டவில்லையாம் அது என்னா செஞ்சுச்சாம் ஒரு ஒருகல்லா எடுத்து போட்டுக்கிட்டே இருந்துச்சாம் தண்ணி மேல வந்துச்சாம், காக்கா தண்ணிய குடிச்சுட்டு பறந்து போச்சாம்.


பாடம் 3

நீங்களே கதை சொல்லுங்க பார்க்கலாம்....


இப்படி படம் பார்த்து கதை எழுத பழகிக்கிட்டா ஈசியா IMDB பார்த்து பட விமர்சனம் எழுதமுடியும். 30 நாட்களில் உங்களை அப்படி தயார் படுத்த இங்கு வகுப்புகள் எடுக்கப்படும். அனுகவேண்டிய முகவரி kusumbuonly@gmail.com
ஆரம்ப நாட்களில் சில சில தவறுகள் வரும் அதை பெரிதுபடுத்த என்று சில எல்லை காவல் தெய்வங்களும், சில வால்களும் இருப்பார்கள் அவர்களை பொருட்படுத்தக்கூடாது. சிலர் அந்த காட்சியில் ஹீரோயின் என்ன பேசினாள் என்று கேட்க நேரிடும் அப்பொழுது தம் அடிக்கவெளியே போய்விட்டேன் என்றோ, அல்லது டாய்லெட் போய்விட்டேன் என்றோ சொல்லி சமாளிச்சுக்கலாம்.


டிஸ்கி: இதுக்கும் சாருவின் இந்த பதிவுக்கும் சம்மந்தமே கிடையாதுங்கோ!!!

27 comments:

said...

:PPP

said...

:))

இன்னும் பல கலைகள் கற்க ஆர்வத்துடன் இருக்கிறோம்...!

said...

வடையைக் காலில் வைத்தபடி பாட்டுப் பாடியது ...காகம் ஏமாறவில்லை.!

:)

said...

3-வது படத்துல காக்காவையும் நரியையும் எங்களுக்கு காமிச்சிட்டு அதுல இருந்த வடையை எடுத்துட்டு போய் சாப்பிட உட்காந்துட்டீங்களாக்கும் :P

said...

கொலவெறில இருக்கீங்க போல...

said...

:) :)

said...

அதிபயங்கர பிரத்தியங்கார தேவிகிட்ட வேண்டப்போறேன்

said...

ம்..கலாய்..க்கல் தல

said...

என்னன்னமோ செய்யறீங்களே மாப்பி! :)))

said...

செம நக்கல் தலைவா

said...

ggggggggrrrrrrrrrrrrrrrrrrr...........

said...

அப்படி போடு..

இதுல காமெடி என்னன்னா, ஒரு மனுஷன எழுத்துல எப்படியெல்லாம் கேவலபடுத்தும் முடியும்னு இவர்குட்ட தான் கத்துக்கனும்.. ஆனா இவரை யாராவ்து விமர்சனம் பண்ணா, அவஙக சொன்ன மேட்டர விட்டுடுவாரு.. என் மேல இந்த கோவம் ஏன்? அப்படி இப்படி எழுதிட்டு கடைசியா, என் எழுத்து ஒரு போதை. திட்டிக்கிட்டேயாவது படிக்க வைக்கும்னு சொல்லுவாரு. கடைசி வரைக்கும் அவங்க விமர்சிச்ச விஷயத்த பத்தி தொறக்க மாட்டாரு, வாயை..

வுட்டாலாக்கடி ஆயா வுழுந்து எழுந்து வாயா..

Anonymous said...

எதுக்கு இம்புட்டுச் சிரமம். அவனவன் போஸ்டரப் பாத்தே விமர்சனம் எழுதிட்டிருக்கான்.

said...

அய்யா.... என்னை வெச்சு காமிடி கீமிடி பண்ணலயே? :))))))))))

ஆமா... அந்தக் கடைசிப் படத்துல கீழ இருக்கறது கரடி... மேல இருக்கறது கொக்கு... கதைதான் தெரியல.... நாளைக்குச் சொல்றேன் !!!

said...

மின்னலு நன்றி

ஆயிலு நன்றி

நல்ல வேலை அந்த காக்காவே நான் என்று சொல்லாமல் இருந்தீங்களே G3:)


பரிசல் என்னங்க பாடம் சொல்லிக்கொடுத்தா தப்பா!

நன்றி டாக்டர்

ஸ்டார் ஸ்டார் என்ன ஸ்டார் வேண்டபோறீங்க!:))

நன்றி நர்சிம்

நன்றி சென்ஷி

நன்றி ஜாக்கி சேகர்

நன்றி பைத்தியகாரன்

ரங்கா கேஸ் பிராபிளமா?

கார்க்கி யாரு யாரை திட்டினா? யாருக்கு கோவம் வந்துச்சு? ஒன்னுமே புரியலீயே நைனா? வேறு எங்கும் போடவேண்டிய பின்னூட்டமோ!:)))

அண்ணாச்சி நீங்க சொல்வது வேற போஸ்டர்:))

மகேஷ் அண்ணாச்சி படிப்பு வரவில்லை நாக்கில் தர்பைய போட்டு சுட என்று சொல்வாங்க, இல்ல வசம்புவை வைச்சு தேய்க என்பார்கள் உங்களுக்கு அது கரடியாகவும் கொக்காகவும் தெரிவதால் எதைவைத்து எங்கு தேய்பது என்று தெரியவில்லை, ஒரு அரைகிலோ மிளகாய் பொடிதான் சரி வரும் என்று நினைக்கிறேன்:)))

said...

கடைசி படம் நாயும், புறாவும்தானே.. நானும் கதையை நாளைக்குச் சொல்றேன்.

said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
கடைசி படம் நாயும், புறாவும்தானே.. நானும் கதையை நாளைக்குச் சொல்றேன்.//

ஒரு ரவுண்டுக்கேவா?:) வெளங்கிடும்! இதுல வாய் காதுவரை!

said...

அந்த பிட்சரோட பீர் அடிக்கிற காக்கா(??) படம் நன்னாருக்கு...

said...

//
கார்க்கி said...


வுட்டாலாக்கடி ஆயா வுழுந்து எழுந்து வாயா..
//

கார்க்கி,

தேவா மீஜிக்ல எதுனா பட்துக்கு ஸாங் எய்தினுக்கீறீங்ளா??

:0))

said...

//
இப்படி படம் பார்த்து கதை எழுத பழகிக்கிட்டா ஈசியா IMDB பார்த்து பட விமர்சனம் எழுதமுடியும்.
//

மாஸ்டரு...மொதல்ல IMDB....ன்னா இன்னாபா??

said...

கதை சொல்லப்படாத மூன்றாவது படத்துக்கான விமர்சனம்:

இதில் நரியாகக் காட்டப்படுவது ஆணாதிக்கவாதத்தின் குறியீடு. சுயநல சந்தர்ப்பவாத ஆண்கூட்டம், மெல்லினம் ஆன காக்கைகளிடம் அவர்களின் நுண்கலைகளை ரசிப்பது போன்ற பாசாங்கை வெளிப்படுத்தி சுயலாபம் பெறுவதை ஓவியர் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். காக்கையை பறக்காததாய் வரைந்துள்ள அதே நேரத்தில் நரியின் முகத்தில் எகத்தாளத்தையும் சேர்த்தே வரைந்துள்ளார். ஆனால் வடையைக் காட்டாததில் உள்ள நுண்ணரசியல் எனக்கு 25% ஆக மூன்று முறை பார்த்தபின்பே புரிந்தது. வடை இருந்தால் என்ன, கதை இருந்தால்தான் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல், என் பார்வையைக் குறைகூறும் மக்கள், எத்தனைமுறை திட்டினாலும் இந்தப்பின்னூட்டத்தை படித்துதான் விடுகிறார்கள்.

said...

ஒரு ரவுண்டுக்கேவா?:) வெளங்கிடும்! இதுல வாய் காதுவரை!//

அடக்கமுடியாமல் சிரித்தேன்.. அதற்குள் அண்ணன் பினாத்தலின் பின்னூட்டம்.. சான்ஸேயில்ல. ROTFL..

said...

ஆத்தா நீ பாஸாயிட்டே ;)

said...

அருமையான கதை...??? நல்ல கதை.. ஆழ்ந்த கருத்துக்கள்... சான்சே இல்லை

said...

அது சரி said...
அந்த பிட்சரோட பீர் அடிக்கிற காக்கா(??) படம் நன்னாருக்கு... ////

அது சரி:))

பினாத்தல் இதுபோல் வன்முறையாக பின்னூட்டம் போட்டால் பின் விளைவுகள் விபரீதமாக இருக்கும்:)))


நன்றி வளர்மதி

நன்றி கீழைராசா

நன்றி தமிழர்ஸ்

said...

தல நான் அந்த விளையாட்டுக்கு வரலையே!

எனக்கு பதிவெழுத ஒன்னும் மேட்டர் இல்லைனா சினிமா தான் கை கொடுக்குது!

அதுக்கும் ஆப்பு வைக்காதிங்க!

said...

ஹா ஹா கலக்கல்!