Wednesday, May 27, 2009

பாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் பிளீஸ்!


அண்ணன் பாலபாரதி திருமணத்துக்கு பிறகு ரொம்ப அல்லகா(வடிவேலு மாதிரி படிக்கவும்) ஆகிக்கிட்டே வருகிறார்(நன்றி கார்க்கி), இன்று அவர் அழகு சிலையாக ரன் படத்தில் வரும் விவேக் மாதிரி பாவாடை சாமியார் போன்று ரொம்ப கிளாமராக கொடுத்த போஸ் கிளாமர் என்ற புத்தகத்தின் அட்டை படத்தில் வந்திருக்கிறது. அண்ணே ஓவர் அழகு உடம்புக்கு ஆவாதுன்னே!


இதில் என்ன கொடுமை என்றால் பார்ட்II என்று வேறு தலைப்பு கொடுத்திருக்கிறார், இப்படியே போனால் பல பார்ட் வரும் என்பதால் என்ன செய்து அவர் அழகை குறைக்கலாம் என்றும், டிப்ஸ் கொடுத்து அண்ணிக்கு உதவுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேன்.

அதுமட்டும் இன்றி புத்தகத்தை பிடித்திருக்கும் பெண் கையில் கிளவுஸ் போட்டு பிடித்திருப்பதும் ஏன் என்று சொல்பவர்களுக்கும் சிறப்பு பரிசு கிடைக்கும்.

தலைநகரம் படத்தில் வடிவேலுவின் அழகில் ஹீரோயின் மயங்குவது போல் அண்ணன் அழகில் மயங்கியவர்கள், மயங்கிக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம், அனஸ்தீஸியா கொடுப்பவர் வரவில்லை என்றால் அண்ணனை கூப்பிட்டு போய் குளோசப்பில் சிரிக்க வைத்தே பல ஆப்ரேசன்கள் வெற்றி கரமாக அனஸ்தீஸியா இன்றி முடிந்திருக்கிறது, இப்பொழுது வெளியூர் மருத்துவர்கள் போட்டோ காட்டி கூட ஆப்புரேசன் செய்வதாக கேள்வி, நம்முடைய சொத்தான பாலபாரதியை யாரும் ஆட்டைய போடும் முன் அவர் அழகை குறைப்பது நம் கடமை! அதுக்கு என்னுடைய டிப்ஸ்:

1) அண்ணனின் பழய காதலிகள் அட்ரஸை தேடி புடிச்சு அவர்களிடம் இருந்து அண்ணனின் குறும்புகளில் உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்டு எழுதி வாங்கி அதை ஒரு புத்தகமாக போட்டு அண்ணி கையில் கொடுக்கலாம்.


2)அண்ணன் கண் அசரும் நேரம் பார்த்து ஒரு லிப்ஸ்டிக் டாட்டூவை கண்ணத்தில் ஒட்டிவிட்டுவிடலாம், அல்லது அதிஷா போல் தைரியம் இருப்பின் லிப்ஸ்டிக் போட்டு நீங்களே முத்தம் கொடுக்கலாம்.

(பின் விளைவுகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் மந்திரிக்கும் செலவுகளுக்கும் கம்பெணி பொருப்பாகாது)

3) அண்ணன் ஆபிஸ் விட்டு வரும் பொழுது சரியா கிரிக்கெட் பாலால் பதம் பார்க்கலாம்.


4) கொலைவெறியில் இருக்கும் அபிஅப்பாவிடம் புடிச்சு கொடுக்கலாம்.

சிறப்பாக அண்ணன் பாலபாரதி அழகை குறைக்க டிப்ஸ் கொடுப்பவர்களுக்கு
அண்ணன் தோளில் போட்டு இருக்கு துண்டு பரிசு!

டிஸ்கி: அட்டையில் அண்ணனின் முன் அழகு படம் வந்திருப்பதால் பின் அட்டையின் பின் அழகு படம் இருக்குமா என்றும் அதை எப்படி பார்ப்பது என்று விரும்பும் ரசிகைகள் 1000$ அனுப்பினால் சைட் போஸ், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள் போன்ற 8 வகையான புகைப்படம் அனுப்பிவைக்கபடும்!

29 comments:

said...

//அதுமட்டும் இன்றி புத்தகத்தை பிடித்திருக்கும் பெண் கையில் கிளவுஸ் போட்டு பிடித்திருப்பதும் ஏன் என்று சொல்பவர்களுக்கும் சிறப்பு பரிசு கிடைக்கும்.
//

சொக்கா.. சொக்கா..என்னால இதுக்கு பதில் சொல்ல முடியாதே...எனக்கு பரிசு இல்லை. எனக்கு பரிசு இல்லை.

said...

:)))

said...

தலை பவர் அப்படி.

சாதாரணமா கட்டையில மின்சாரம் பாயாதுன்னு சொல்வாங்க.

ஆனா இப்பேர்பட்ட கட்டையிலயும் தலையோட பவரால மின்சாரம் பாஞ்சிடும்.


அதான் அந்த கட்டை கிளவுஸ் போட்டிருக்கு

said...

//1) அண்ணனின் பழய காதலிகள் அட்ரஸை தேடி புடிச்சு அவர்களிடம் இருந்து அண்ணனின் குறும்புகளில் உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்டு எழுதி வாங்கி அதை ஒரு புத்தகமாக போட்டு அண்ணி கையில் கொடுக்கலாம்.//

இதுக்கு பாகசவுல ஒவ்வொரு உறுப்பினரும் தியாக மனப்பான்மையோட பணி புரிய காத்திருக்கிறோம்.

ஹேய்.. யாருப்பா அங்க. என்கிட்ட ஒரு மூணு பேர் அட்ரஸ் இருக்குது, கேட்டு வாங்கிட்டுப்போங்க :)

said...

குசும்பு ...

said...

//அண்ணனின் பழய காதலிகள் அட்ரஸை தேடி புடிச்சு அவர்களிடம் இருந்து அண்ணனின் குறும்புகளில் உங்களுக்கு பிடிச்சது எது என்று கேட்டு எழுதி வாங்கி அதை ஒரு புத்தகமாக போட்டு அண்ணி கையில் கொடுக்கலாம்.//

:))))))

said...

சிங்கம் களம் இறங்கிருச்சே!

said...

பரிசாக அந்த பொண்ணு கையில் இருக்கும் கிளவுஸ குடுக்கிறேன்னு சொல்லு ஐடியா அனுப்புறேன். தல தோள்ல இருக்க துண்டுக்கு எல்லாம் குண்டு வைக்கிற ஐடியா கிடைக்காது.

Anonymous said...

போன பதிவின் தலைப்புக்கேற்ற பட்த்தைப் போட்டுட்டு வெளயாட்டா??

தலயோட அருமை பெருமையைத் துவங்கி வச்சதுக்காக துபாய் கிளைசார்பில் தலையோட டூத் பிரஷ் அவர் தேய்ச்சு முடிச்சதும் உனக்கு அன்பளிப்பா வழங்கப்படும்

said...

சென்ஷி பரவாயில்லை சொல்லு:)))

நன்றி புதுகை தென்றல்

முரளி பார்த்து தலைக்கு பீஸ் புடுங்கிட போறாங்க:))))

நன்றி ஜமால்

நன்றி ஆயிலு

நன்றி வால்

சோசப்பு அதைமட்டும் கேட்காத அப்புறம் அது டென்சன் ஆகிடும்!

// தலையோட டூத் பிரஷ் அவர் தேய்ச்சு முடிச்சதும் உனக்கு அன்பளிப்பா வழங்கப்படும்//
வெளங்கிடும் என் வாழ்கை!

said...

::)))))

P:))))

said...

அண்ணன் இன்ச் கணக்குல பூசி இருக்குற ரோஸ் பவுடர் கையில ஒட்டிட கூடாதுன்னு அந்த பொண்ணு கைல க்ளவுஸ் போட்டிருக்கும்னு நினைக்கிறேன்...
ஆனாலும் அவர இவ்ளோ டேமேஜ் பண்ணிட்டிங்களே...பாவமுங்க

said...

ஏங்க...ப்ளாக்குல படம் போடுறது குத்தமாய்யா......

அதை காப்பி பண்ணி இப்பிடி கலாய்ச்சா எப்பிடி...

said...

என்னோட அப்பாவி அண்ணனைப் போய் இப்படிக் காலி பண்ணப் பார்க்கிறீங்களே? ஏனுங் இந்தக் கொலைவெறி? :P

said...

அந்த பச்ச புள்ள முன் பக்கத்தையும் பாக்காம கடைசி பக்கத்தையும் பாக்காம நடு பக்கத்த பிரிச்சு பாக்குது ( புத்தகத்துல தான் ). இதுல இருந்து என்ன தெரியுது ? நடு பக்கம் நமக்கு தெரியல !!

said...

முரளிகண்ணனின் கமெண்டை மிக ரசித்தேன்.

said...

பாவம்ங்க அவரு, இந்த போடு போடுறீங்க என்னா பாவம் செஞ்சாரோ இப்படி வாங்கி கட்டிக்கிறார்

said...

:)))


//
தலையோட டூத் பிரஷ் அவர் தேய்ச்சு முடிச்சதும் உனக்கு அன்பளிப்பா வழங்கப்படும்//

வெளங்கிடும் என் வாழ்கை!//

LOL

said...

மின்னல் நன்றி!

//nila said...
அண்ணன் இன்ச் கணக்குல பூசி இருக்குற ரோஸ் பவுடர்//

அல்லோ தப்பு தப்பா பேசக்கூடாது அண்ணனும் நானும் இயற்கையாகவே சிகப்பு எங்க அழகு எங்க வெளியில் தெரிஞ்சா எங்கள கடத்திட்டு போய்விடுவாங்களோன்னு லைட்டா கருப்பு பெயிண்ட் அடிச்சு இருக்கோம் என்ன ஒரு வித்தியாசம் அண்ணனுக்கு ஒரு கோட்டிங்கோட நிப்பாட்டிட்டாங்க:) எனக்கு மூனு நாலு கோட்டிங் அடிச்சுவிட்டுட்டாங்க:))


கண்ணா அப்ப இனி காப்பி பண்ணாம கலாய்க்கிறேன்

ரிஷான் நன்றி

நன்றி சின்னகவுண்டர் அதில் இருந்து என்ன தெரியுதுன்னு அந்த பொண்ணுக்கிட்டதான் கேட்கனும்.

நன்றி பரிசல்

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி இராம்

said...

குசும்பனின் நக்கல்... ஆசிப் அண்ணாச்சி, முரளி அண்ணன் இருவரின் பின்னூட்டமும்... LOL ROTFL!!

said...

எலேய்.. இதுல எவன்லே மைனஸ் குத்து குத்தியிருக்குறவன்!

said...

வாவ்.. என்னா பியூட்டி.! நா அந்த பிகரச்சொன்னேன்..

said...

பாகச ஆரம்பிச்சாச்சு போல இருக்கே. இந்த ட்ரெண்டு பரவட்டும்ம்ம்ம்ம்ம்

said...

அண்ணன் அடி வாங்கினாலும், வெளியே சிரிச்சுகிட்டுத்தான் இருப்பார். அதுதான் பாலபாரதி... எப்பவுமெ இப்ப சிரிக்கிறதும் ஒரு ரகசியம்தான்

said...

அண்ணன் செம ஹாட்டுல்ல!,

அதனாலதான் பாப்பா கையில கிளவுஸு!!

said...

very good

said...

ம்ம்ம் போட்டோவைக் காணோமே???
அன்புடன் அருணா

said...

ம்ம்ம் போட்டோவைக் காணோமே???
அன்புடன் அருணா

said...

ம்ம்ம்...இப்போ படத்தைக் காணோமே!
அன்புடன் அருணா