Thursday, May 28, 2009

கிழக்குபதிப்பக விளம்பர யுத்தியும் + பொன் அந்தியும்

எங்க ஊரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஆனந்தவிகடனோ அல்லது குமுதமோ வாங்கனும் என்றால் பஸ் புடிச்சு போகனும், பஸ் புடிக்க எவ்வளோ தூரம் போகனும் என்பது வேறவிசயம் அது நமக்கு சம்மந்தம் இல்லாதது. அப்படி இருந்த நம்ம ஊரின் சின்ன சின்ன டிப்பார்ட் மெண்ட் ஸ்டோரில் கூட இப்பொழுது சதாம், ஒபாமா, அம்பானி,ஹிட்லர், முசாரப் என்று அட்டைபடங்கள் மிளிர்கின்றன. அதுக்கு காரணம் கிழக்கு பதிப்பகம் இதை சிறந்த விளம்பர யுத்தியாகவே நான் நினைக்கிறேன்.

கிழக்கு பதிப்பகத்தின் சாதனையாக நான் கருதுவது இந்த விளம்பர யுத்தியைதான் இதுபோல் புத்தங்களை வாங்கனும் என்றால் அய்யனார் புக் டெப்போ போன்ற புத்தக நிலையங்களைதேடி அலைய வேண்டி இருக்கும் அப்படி இல்லாமல் சின்ன சின்ன கடைகளிலும் கிடைக்கிறது. விளம்பரத்தின் முக்கிய நோக்கமே பொருளை வாங்க வைப்பதை விடஅதன் பெயரை உங்கள் மனதில் பதியவைப்பதாகவே இருக்கும். திரும்ப திரும்ப அந்த பொருளின் பெயரோ அல்லது அந்த பொருளோ உங்கள் கண்ணில் பட்டுக்கொண்டு இருந்தால்அடுத்த முறை கடைக்கு சொல்லும் பொழுது வாங்கும் எண்ணம் இல்லை என்றாலும் சும்மா எடுத்து பார்ப்பீங்க என்னாதான் இதில் இருக்கு என்பது போல். அதே மாதிரிதிரும்ப திரும்ப பேப்பர் வாங்கு போகும் கடை, மளிகை சாமான் வாங்க போகும் கடை, ரயில்வே நிலையத்தில், பஸ் நிலையத்தில் என்று திரும்ப திரும்ப சில புத்தங்கள் உங்கள் கண்ணிலே பட்டுக்கொண்டு இருக்கும் ஐந்தாவது முறை என்னதான் இதில் இருக்கு என்று எடுத்து பார்ப்பீங்க. அந்த யுத்தியை சரியாக பிடித்துக்கொண்டிருக்கிறது கிழக்கு பதிப்பகம். இவர்கள் புத்தங்கள் ரயில் நிலையத்திலும் பஸ் நிலையத்தில் அதிகம் விற்பனையாகும் என்பது என் கணிப்பு . என்பது ரூபாய்க்கு அல்லது நூறு ரூபாய்க்கு தரமான பேப்பரில் புத்தங்கள் கிடைப்பதும் கூடுதல் பிளஸ்.

நான் சென்னை வந்திருந்த பொழுது காலையில் செண்ட்ரலுக்கு அருகில் இருக்கும் வசந்தபவனின் சாப்பாடு வாங்கபோனேன் அங்கே அருகில் இருக்கும்நான்கு புத்தகடைகளில் புத்தங்களின் அட்டையில் பிரபாகரனும், ஓபாமாவும் சிரித்துக்கொண்டு இருந்தார்கள் பின் புத்தககண்காட்சியின் பொழுது இவர்கள் இடத்தில் மட்டும் இன்றி பல்வேறுபதிப்பங்களிலும் பல்வேறு இடங்களிலும் இவர்கள் புத்தங்கள் அலங்கரித்துக்கொண்டு இருந்தன. பின் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றேன் அங்கு பெருட்களை விட்டு செல்லும் கடையின் நுழைவாயிலில் ஒரு முப்பது புத்தங்கள் உள்ள ஸ்டேண்டில் இருபது புத்தங்கள் கிழக்கு பதிப்பத்தினுடையது. பின் கும்பகோணம்,குடவாசல், மாயவரம் என்று பல இடங்களிலும் இவர்களுடைய புத்தங்களை காணமுடிந்தது. அதுபோல் இலவசமாக புத்தம் அனுப்பிவிட்டு அதற்கு விமர்சனம் எழுதி வாங்கியதும் அருமையான விளம்பர யுத்தி.

புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய கிழக்கு பதிப்பக புத்தங்கள் என் பெயர் எஸ்கோபர், செங்கிஸ்கான் ,விளம்பர உலகம், சதாம்.

****************************

என் பெயர் எஸ்கோபர்
பா.ராகவன் அவர்களுக்காக வாங்கியது இந்த புத்தகம் நிலமெல்லாம் இரத்தம் முதல் இவருடைய அனைத்து எழுத்துக்களுக்கும் தீவிர ரசிகன் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கியது என் பெயர் எஸ்கோபர். கொலம்பியா தேசத்தின் டான் எஸ்கோபரின் கடத்தலை விவரிக்கும் பொழுதும் அவனின் நெட் வொர்க் பற்றி விவரிக்கும் பொழுது நம் கண்முன்னே ஒரு திரைப்படம் ஓடுவது போல் இருக்கிறது ஆனால் பல இடங்களில் சென்னை பாசை வருவது போல் இருப்பது கொஞ்சம் அயற்சியை தருகிறது. அப்படி இருந்தாலும்வாங்கிய மூன்று மணி நேரத்தில் படிக்கவைத்த எழுத்து நடை பா.ராவுடையது.

****************************

பொன் அந்தி
கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த பொழுது தஞ்சை முனிசிபல் காலணியில் இருக்கும் பாவேந்தர் வாடகை நூலகத்தில் எடுத்து படித்த புத்தகம் பொன் அந்திஎஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதியது,அப்பொழுது படித்தது கமலுக்காக! என்ன கமலுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்களா? பொன் அந்தி மருதநாயகம்என்கிற யூசுப்கானை பற்றிய நாவல் அல்ல காவியம். பின் பல வருடங்கள் அந்த புத்தகத்தை வாங்க முயன்று முடியாமல் பலரிடம் சொல்லி வாங்க முனைந்த பொழுது அப்படி ஒரு புத்தகமா என்றார்கள் பலர். பின் இந்த முறை நண்பர் பைத்தியகாரனையும், குருஜி சுந்தரையும் பார்த்த பொழுது பொன் அந்தி என்ன பதிப்பகம் என்று தெரியுமா என்று கேட்ட பொழுது கலைஞன் பதிப்பகம் என்று உடனடி பதில் வந்தது பைத்தியகாரன் அண்ணாச்சியிடம் இருந்து.அதன் பின் அங்கு சென்று வாங்கினேன்.

மருதநாயகத்தின் வீரம் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதிவைத்த குறிப்புகள் அவரை பற்றிய கல்வெட்டுகள் மூலமும் அவரை பற்றிய குறிப்புகளை எழுதி இருக்கிறார் திருச்சி கோட்டை முற்றுகையை அவர் தன் தந்திரத்தால் எப்படி முறியடிக்கிறார் எப்படி எதிரிகளை பந்தாடினார் என்று ஆசிரியர் மருதநாயகத்தின் போர் தந்திரம் வீரம் பற்றி படிக்கும் பொழுது எழும் பிரமிப்புக்கு அளவே இல்லை. 684 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தின் விலை 175.

டிஸ்கி: பல மாதங்களாக எழுதி ட்ராப்டில் இருந்தது. புத்தகத்தை வைத்து போஸ் எல்லாம் கொடுத்தாச்சு படிச்சியா என்று கேட்டதால் ரிலீஸ் செய்யவேண்டியதாகிவிட்டது. புத்தகம் பற்றி விமர்சனம் எழுத சரியாக வரவில்லை என்பதால் அப்படியே வைத்திருந்தேன்.

49 comments:

said...

present

said...

//நம்ம ஊரின் சின்ன சின்ன டிப்பார்ட் மெண்ட் ஸ்டோரில் கூட இப்பொழுது சதாம், ஒபாமா, அம்பானி,ஹிட்லர், முசாரப் என்று அட்டைபடங்கள் மிளிர்கின்றன///

வாஸ்தவம்தான் !


முட்டாய் வாங்கப்போனா கண்ணில் படுகிறது கிழக்கின் புத்தக விளம்பரங்களே :)

said...

// புதுகைத் தென்றல் said...

present//

Boss
past & future in next post ????

said...

avvvvvvvvvvv

said...

நிஜமாவே படிக்கிறியா குசும்பா?

said...

உண்மை. பெரும்பாலும் அனைத்து உணவகங்களில் அவங்கள் புத்தகம் வைக்கப்பட்டு உள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி என போகும் இடம் எல்லாம் கிழக்கு பதிப்பகம் நம்மை துரத்துகிறது. புத்தக கண்காட்சியிலும், பெரிய புத்தக கடைகளிலும் புத்தகங்களை தேடுவது கடினம். ஆனால் இது போன்ற உணவகங்களில் புத்தகம் குறைவாக இருப்பதால் விரைவில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எடுக்க முடிவது இன்னும் சுலபம்.

said...

அன்பின் குசும்பன்,

புத்தகம் குறித்த விமர்சன் எழுத உங்களுக்கு வரவில்லை என யார் சொன்னது? தெளிவாகவும், சுருக்கமாகவும் நீங்கள் வாசித்ததை, புரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். தொடருங்கள்.

அப்புறம், தகவலுக்காக -

தமிழ்ச் சூழலில் மருதநாயகம் குறித்து முதலில் சிறுகதையாக பதிவு செய்தது கவுதம நீலாம்பரன். புதன்கிழமைதோறும் தினமலர் சார்பாக 'கதை மலர்' வந்தபோது, அதில் இந்தக் கதை பிரசுரமானது. இவரே பின்னர், 'குமுதம்' இதழில் 'மருதநாயகம்' என்ற தலைப்பில் ஒரு தொடர்கதையை ஆரம்பித்து, சில சிக்கல்களால் அது பாதியில் நின்று போனது.

3ம் மனிதர்கள் மூலமாக கமல், இவரிடமிருந்து மருதநாயகம் தொடர்பான குறிப்புகளையும், ஆதாரங்களையும் வாங்கினார்.

அப்புறம், இதே கவுதம நீலாம்பரனின் 'மன்னன் மாடத்து நிலவு' குறுநாவலையே எஸ். பாலசுப்பிரமணியம், தனது முதல் சரித்திர தொடராக 'தேவி'யில் எழுதினார். அந்த நாவலின் பெயர் 'மோக மலர்'

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

:-))

said...

என் பெயர் எஸ்கோபர்... ராகவன் எழுத்து நடை இருக்கட்டும்.. அவன் வாழ்ந்த வாழ்க்கை இருக்கே.. ஆச்சரியம்.. ஆச்சரியம்...

said...

:)))))))))))))))

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.
said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் விமர்சனம்

பொன் அந்தி - பக்கங்களை நினைக்கும்போதே அயர்ச்சியாக இருக்கிறது

said...

கண்டிப்பாக உங்கள் வீட்டுக்கு வந்து உங்களைக் கடத்திப் போகணும்

said...

//கிழக்கின் மீது பொச்சரிப்புன்னு எவனாவது கிளம்பிடப் போறான். புத்தக விற்பனையில் எனக்கிருக்கும் ஏழு ஆண்டு அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே!//

அய்யா எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமே சொல்லிட்டாரு. அப்புறமென்ன. அவ்வ்...

said...

ஆப்செண்ட் போட்டு விடுகிறேன் உங்களுக்கு புதுகைத் தென்றல்

ஆயிலு நன்றி

நாமக்கல் ஏமாந்தீங்களா?:)))

ஆமா சிவா எங்கும் கிழக்கின் மயம்

பைத்தியகாரன் நீங்க நடமாடும் தகவல் டெம்போ!:) தெரியாத தகவல்கள் அருமை! நன்றி!


செல்வேந்திரன் தாங்கள் அனுபவத்தில் இருந்து சொல்வது சரிதான் அவர்கள் வேறு ஏதும் பிளான் வைத்திருப்பார்கள்!

சென்ஷி :(

ஆமாம் கார்க்கி செம வாழ்வு!

நன்றி செந்தில், G3

நன்றி கார்த்திகேயன் தங்கள் தகவலால் ஒரு புத்தகம் ஆர்டர் செஞ்சுவிட்டேன்:)

அமிர்தவர்ஷினி அம்மா பொன்னியன் செல்வன் போல் படிக்க மிக சுவரஸ்யமாக இருக்கும் மிகவும் அருமையான புத்தகம்!

ஏன் ரிஷான் டெம்போ வெச்சு கடத்தி இருக்கேன் ஒரு 40 ரூபாய் போட்டு கொடுங்கன்னு கேட்டாலும் கொடுக்க யாரும் கிடையாது:)) வேறு ஆளை பார்க்கவும்

said...

செல்வேந்திரன் உங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.

அவர்கள் ( கிழக்குப்பதிப்பகம் ) கட்டாயம் உங்களைப்போன்ற உலகப்புகழ்ப்பெற்ற எழுத்தாளரை நாய்வண்டியில் கூட்டி வராமல் ஒரு புலி பிடிக்கும் வண்டியிலோ சிங்கம் பிடிக்கும் வண்டியிலோ அழைத்துப் பஞ்சுமெத்தையும் பட்டுத்தலையணையும் அளித்து தங்கப்பேனாவில் எழுத வைத்திருக்கவேண்டும்.

அப்படி எழுத வைத்திருந்தால் உங்களைப்போன்ற முழுமையாய் வெந்த மசால் வடை அல்லது போண்டாவாய் வந்திருக்கும். கிழக்கு விற்பனையில் பிச்சிருக்கும் பிராண்டியிருக்கும்.


விடுங்க பாசூ

உங்களுக்கு இருக்கற ஏழு வருச அனுபவத்துக்கும் தெறமைக்கும்..

said...

"மாநகராட்சி வண்டி நாய் பிடிப்பது போல எழுத்தாளர்களைப் பிடித்து மேஜை, நாற்காலி கொடுத்து குறைந்த கெடுவுக்குள் புத்தகம் எழுதி வாங்கினால் அது பாதி வெந்த மசால் வடையாகத்தான் வெளிவரும்."

சீச்சி. இந்தப்பழம் புளிப்பு!

said...

கொடூரன் உங்களின் அனைத்து பின்னூட்டங்களையும் நீக்கவில்லை தனிமனித தாக்குதல் போல் இருந்ததை மட்டும் தான் நீக்கி இருக்கிறேன். இதிலும் அவரை திட்டுவது போல் இருப்பதால் அனுமதிக்கமுடியாது.

said...

குசும்பா..

என்னடா ராசா இது.?

எதையோ பிடிக்கப் போய் எதையோ பிடிச்ச மாதிரி ஆயிருச்சு இந்தப் பதிவு.

உன்னோட தளத்திலேயே நீக்கப்பட்ட பின்னூட்டங்கள் உள்ள பதிவு இதுதான்னு நினைக்கிறேன்..

வருத்தமா இருக்கு..!

நம்ம மக்கள்ஸ்கிட்ட சகிப்புத்தன்மை குறைஞ்சுக்கிட்டே போகுது..!

said...

குசும்பன் உண்மைய தான் சொல்றிங்களா?

நீங்க புத்தகமெல்லாம் படிப்பிங்களா?

ஒருவேளை இந்தவருசம் மழை வராமா போச்சுன்னா அதுக்கு நீங்க தான் காரணம்னு ஞாபகத்துல வச்சிகோங்க!

said...

குசும்பன் புலவருக்கிடையே சச்சரவு வருவது வாடிக்கை. அது பொறாமையாக பொச்சரிப்பாக போய்விடாமல் பார்த்துக்கங்கள்.

said...

செல்வேந்திரன் said...
குசும்பன் ஒரு தகவலுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் கிராமத்து டீக்கடைகளில் கூட இருக்கின்றன என சாரு ஒருமுறை கிண்டலாக எழுதி இருந்தார். உண்மைதான். காரணம் கிழக்கு 'வித்தா காசு... அல்லாங்காட்டி திருப்பிக்கொடு...' எனும் நவீன வியாபாரத் திட்டத்தின் படி கடனுக்கு புத்தகங்களை வழங்கி வருவதால் மளிகைக்கடை, ஹோட்டல், மெடிக்கல் ஷாப் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது கிழக்கின் புத்தகங்கள்.

ஆனால், விற்பனை ரீதியாக அவர்களது இடம் என்ன என்ற கேள்விக்கு 'மெச்சிக்கொள்ளும்படி இல்லை' என்ற பதிலே உண்மை. காரணம் 'நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக்கொட்டினார் போல' உள்ளடக்கம், சந்தை தேவை போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாது அடித்துக் குவிக்கும் புத்தகங்கள்தாம். இதே பிரச்சனைதான் விகடன் பிரசுரத்திற்கும். இரண்டு பதிப்பகங்களும் புத்தகச் சந்தையில் புதுமைகளைப் புகுத்திய அளவிற்கு மார்க்கட்டை சீரழிக்கவும் செய்திருக்கிறார்கள். இரண்டு பதிப்பகங்களும் மெல்ல 'மணிமேகலை பிரசுரமாகி விடும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

எழுத்தாளர்களைப் பிடித்து மேஜை, நாற்காலி கொடுத்து குறைந்த கெடுவுக்குள் புத்தகம் எழுதி வாங்கினால் அது பாதி வெந்த மசால் வடையாகத்தான் வெளிவரும்.

டிஸ்கி:

கிழக்கின் மீது பொச்சரிப்புன்னு எவனாவது கிளம்பிடப் போறான். புத்தக விற்பனையில் எனக்கிருக்கும் ஏழு ஆண்டு அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே!

said...

ஐய்யா கொடூரா செல்வேந்திரனின் சர்சைக்குரிய அந்த வரியை நீக்கிவிட்டு பின்னூட்டம் போட்டுவிட்டேன்! சாந்தி அடையும்! ஒரே நேரத்தில் 50 பின்னூட்டமா தாங்காது ராசா இந்த உடம்பு!:((

said...

ஆமாம் உண்மை தமிழன் அண்ணாச்சி! இப்படி ஆகிப்போச்சே:(

வால் நீங்களும் நம்பிட்டீங்களா அப்ப ரைட்டு! பதிவுக்கும் போட்டோவுக்கு பலன் இருக்கு!


நன்றி okka அதுக்காக மாடுரேசன் போட்டுவிட்டேன்!

FYI கொடூரன் அண்ணாச்சி //டிஸ்கி: பல மாதங்களாக எழுதி ட்ராப்டில் இருந்தது. // ஏதோ பார்த்து செய்யுங்க!

said...

மச்சி.. மச்சி..

நீ கேளேன்
மச்சி நீ கேளேன்
ச்சும்மா இதை மட்டுமாச்சும் கேளேன்ன்

:-)

said...

கடைசியில உன் நிலைமைய இப்படி மாத்திப்புட்டானுங்களே குசும்பா..

:-(

மச்சி நீ கேளேன்..
சஞ்சய் மச்சி நீ கேளேன்..
ஆயில்யா நீயாச்சும் கேளேன் :)

said...

இப்ப என்னா சொல்ல வர மாமா? நீ படுத்துனு போச் குடுத்த போட்டால வந்த பொஸ்தகம் எல்லாம் நீ காசு குடுத்து வாங்கினது தான், அய்யனார்கிட்டயும் ஆசிப் அண்ணாச்சிகிட்டயும் அடிச்சதில்லைனு நாங்க நம்பனும். அதும் இல்லாம அதை எல்லாம் நீ படிச்சியும் முடிச்சி இருக்கன்னும் நம்பனும்.. அம்புட்டு தானே.. உன்ன எல்லாம் நம்பி பொண்ணே குடுத்திருக்கோம்.. இதை நம்ப மாட்டோமா? ஃப்ரீயா விடு.. :)

said...

//உன்னோட தளத்திலேயே நீக்கப்பட்ட பின்னூட்டங்கள் உள்ள பதிவு இதுதான்னு நினைக்கிறேன்..

வருத்தமா இருக்கு..!//

எனக்கு சந்தோஷமா இருக்கு.. :))
நாம காத்தால ஒருத்தனுக்கு ஆப்படிச்சா சாய்ங்காலம் அதே ஆப்பு நமக்கும் வரும்னு திருவள்ளுவர் சும்மாவா சொன்னாரு? கொய்யால.. என் ப்ளாக்ல அழிச்சி அழிச்சி விளையாடினது ஞாபகம் இருக்கா? அந்தப் பாவம்தாண்டி இதெல்லாம்? :))))

said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

ஹிஹி... :))

said...

உங்கள் BLOG-ற்கு என் முதல் வருகை உபயோகமாய் அமைந்தது. உங்கள் அடுத்த அதிரடி விமர்சன பதிவை எதிர்நோக்கி..


:)

said...

அவர்களின் தலைப்புகளும், புத்தக அளவும் கவனிக்க செய்கின்றன.

said...

என் பெயர் எஸ்கோபார் கடைசியில் மொக்கையாக இருந்தது...

எழுத்து நடை உண்மையிலேயே அருமை...

ஆனால் இந்துத்துவ & பார்ப்பணீய கூறுகளை கண்ணுக்கு தெரியாமல் உள்ளே நுழைத்திருந்தார்...

அதெல்லாம் குசும்பனின் பேரறிவுக்கு எட்டியிருக்குமா தெரியலை...

எடுத்துக்காட்டு >> அவன் கவரிமான் ஜாதி...என்று ஒரு வரி...இதில் ஜாதியை உள்ளே கொண்டுவா..ஜாதீயம்...

பிள்ளையார் பிடிக்க குரங்காய் ஆன கதைபோல..இந்துத்துவம்...

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

படித்து முடிக்க மொத்தம் ஒரு மாதம் ஆனது..

தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு பக்கம், சில சமயம் கொஞ்சம் முக்கவேண்டியிருந்தால் அல்லது வயிறு சரியில்லை என்றால் மூன்று பக்கம் படிப்பேன்...

வயிறு சரியில்லைன்னா ? குழம்பவேண்டாம்...

டெய்லி படிச்சது பாத்ரூம்ல ஆயி போவும்போது குசும்பா...

ஆய் போகும்போது சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினதில் இருந்து நிறைய வாசிக்க ஆரம்பிச்சிருக்கேன்...

said...

கார்த்திகேயன் தாங்கள் கொடுத்த இலவச புத்தகம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லையாம் ஆகையால் அந்த கமெண்டை நீக்குவது நல்லது என்று வந்த கோரிக்கையை ஏற்று அது நீக்கப்படுகிறது!

said...

என்னது? உங்களுக்கு நீங்க நமீதான்னு நெனப்பா?
நான் கடத்திட்டுப் போகணும்னு சொன்னது உங்களை இல்ல குசும்பா..அந்தப் புத்தகங்களை...

said...

அது சரி..என்கிட்ட தனியாப் பேசும் போது நீங்க 'மலையாளப் புத்தகங்கள்தான் விரும்பிப் பார்ப்பேன்'னு சொன்னீங்க..தமிழ்ப் புத்தகங்கள் பார்க்கிறதைப் பத்திச் சொல்லவேயில்லை..சொன்னா இரவல் கொடுக்கவேண்டி வரும்னு பயந்துட்டீங்களா? :(

said...

கிழக்கு கஸ்டமர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் பாராட்டுக்குரிய விஷயம் தான்.

ஆன்லைன்ல புத்தகம் வாங்கும் போது, வாங்கிய உடனே ஒரு மெயில். அதுல என்னைக்குள்ள அனுப்புவாங்கனு விளக்கம் இருந்தது. அதே மாதிரி சொன்ன தேதியில அனுப்பி வெச்சிட்டு, மறுபடியும் ஒரு மெயில் அனுப்பியிருந்தார்கள்.

ஆனா வேற ஒரு பதிப்பகத்துல ரெண்டு புத்தகம் ஆர்டர் செய்திருந்தேன். முதல் புத்தகம் ஒரு வாரத்துல அனுப்பனாங்க. ரெண்டாவது புத்தகம் என்னாச்சுனு மெயில் மேல மெயில் அனுப்பி, அவுங்க சைட்ல போய் கமெண்ட்ல கேட்டு, எதுவும் பயனில்லை. அவுங்ககிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை.

ஒரு மாசம் முடிந்த நிலைல ஒரு மெயில். We have Shipped your book. Sorry for the inconvenience.

இனிமே அங்க புத்தகம் வாங்க நிறைய யோசிப்பேன். ஆனா நிறைய நல்ல புத்தகங்கள் அந்த பதிப்பகத்துல இருக்கு :(

said...

செங்கிஸ்கான் புக் பத்தி எழுதலையே... ஏங்கண்ணா?

அண்நோவ்.. எங்களுக்கும் அந்த புக்ஸ் எல்லாம் குடுங்க!
(நாங்க எப்ப போஸ் குடுக்கறதாம்?)

said...

நம்ம திருப்பூர் பதிவர் ஒருத்தர் ஆன்லைன்ல புக் வாங்கினாராம். ஷிப்பிங் காஸ்ட் ஃப்ரீ என்று இருந்ததாம். ஆனால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டி இருந்ததாம். அதற்கு விளக்கம் கேட்டிருந்தாராம். பல மாதங்கள் ஆகியும் பதிலுக்காக வெய்ட்டிங்னு சொன்னார். இப்போ வந்ததா தெரியலை. இதெல்லாம் கொஞ்சம் சரி பண்ண சொல்லுங்க குசும்பனாரே.

said...

எஸ்கோபர் - இது ரிப்போர்ட்டர்ல தொடரா வந்தப்பவே படிச்சுட்டு, அந்தாளு செஞ்ச அலும்பையெல்லாம் இணையத்துல தேடி தேடி படிச்சேன் மாப்பி. ரொம்ப சூப்பர் ஆளுய்யா அவரு. அதுலயும் நான் சரணடையிறேன், ஆனா இதுதான் கண்டிசன்னு போட்டு கொலம்பியா அரசாங்கத்து செலவுல செம ஜாலியா கும்மாளமடிச்சதெல்லாம் இருக்கே, சத்தியமா எவனும் செய்ய முடியாது அதுமாதிரி.

அட மாப்பி, நானும் பாவேந்தர் நூலகத்துல உறுப்பினர், சிங்கை வர்றப்பத்தான் அட்வான்ஸ திருப்பி வாங்குனேன். பெங்களூர்ல இருந்து ஊருக்கு வர்றப்ப எல்லாம் புத்தகம் அள்ளிக்கிட்டு போவேன்ல.

புத்தக விமர்சனம் சூப்பரா எழுதியிருக்க.

said...

புக் எல்லாம் படிப்பியா குசும்பா சும்மா போஸ் மட்டும்தான்னு நெனச்சேன்
:)))

said...

அன்புத்தோழன் அதிஷாவிற்கு,

கிழக்குப் பதிப்பகத்தில் இன்றைய தேதிக்கு எனக்கு இருபதிற்கும் மேற்பட்ட நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். கிழக்கிற்கு புத்தகம் எழுதும் வாய்ப்பு இரண்டாண்டுகளுக்கு முன்னரே கிடைத்தது. புத்தகம் எழுதுகிற அளவிற்கு எனக்கு பத்தாது என்கிற சுய அளவையினால் அதைத் தவிர்த்தேன். தவிர எழுத்தாளனின் ஆகிருதி அவன் எத்தனைப் புத்தகங்களை எழுதிக் கிழித்தான் என்பதில் இல்லை. என்ன எழுதினான் என்பதில் இருக்கிறது.

விகடனில் முடியலத்துவம் தொடராக பதினைந்து வாரங்களுக்கு மேல் பீடுநடை போட்ட காலத்திலேயே இதன் இலக்கியத்தரம் குறித்த சுயமதிப்பிட்டுக் காரணங்களால் வம்படியாக நிறுத்தியவன் அடியேன். புத்தகம் எழுதுகிற நப்பாசை இருந்திருந்தால் கிழக்கு என்ன சகல திசைகளிலும் இருக்கிற பதிப்பக நண்பர்கள் உதவியோடு சாதித்திருக்க முடியும். எனவே பொஸ்தகம் போடாத பொச்சரிப்பு என கேனத்தனமாக கிளம்பக்கூடாது.

தாமதமாகத்தான் தெரிய வந்தது நீங்களும் கிழக்கிற்கு புத்தகங்கள் எழுதிக்கொண்டிருப்பவர்களுள் ஒருவரென்று. வேறு வழியில்லை. நீங்கள் என்னை கண்டித்துதான் ஆக வேண்டும். ஆனால், உங்களுக்கு கசக்கிறது என்பதற்காக 'உண்மை' இல்லையென்றாகிவிடாதில்லையா...

நீங்கள் தொடர்ந்து கிழக்கில் பல புத்தகங்கள் எழுதி பெரும் புகழடைய வாழ்த்துகிறேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

said...

உண்மைதான் நான் கூட ஒரு Departmental store ல தான் அடிக்கடி பர்த்து பாத்து அம்பானி என்ற புத்தகத்தை வாங்கினேன்..

நல்ல யுக்தி அதை சரியாக சொன்ன உங்களுக்கு ஒரு சபாஷ்

said...

மதிப்பிற்குரிய ''முடியலத்துவம் புகழ்'' செல்வேந்திரனுக்கு

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா முடியல... நல்லா பேரு வச்சிருக்கீங்கய்யா
'முடியல'த்துவம்னு )

அடங்கப்பா.. தாங்கள் எழுதிய முடியலத்துவத்தை தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்டி வைத்துவிட்டு இன்னும் அரைநூற்றாண்டுக்கு பக்கத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி நான் ஏதும் கேட்கவில்லை.

தங்களுக்கு கிடைத்த தகவலில் பிழை இருக்கிறது நண்பா. உங்களது நண்பர்களிடம் விசாரித்துக்கொள்ளுங்கள் நான் கிழக்கிற்கு புத்தகமெல்லாம் எழுதவில்லை. என்றாவதொரு நாள் கட்டாயம் எழுதுவேன் (அப்போது உங்களுக்கு ஒரு புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கிறேன் படித்து பயன்பெறுங்கள் ) என்னைப்போன்ற மூன்றாம்தர ஆரம்பநிலை எழுத்தாளனுக்கு ஆதரவு தரும் ஒரே பதிப்பகமாய் கிழக்கு மட்டுமே இருக்கிறது. ( எனக்கு தெரிந்து!). உங்களைப்போல ஏழுவருடமாய் புத்தக விற்பனை மூலம் பல பதிப்பகங்களையும் அதன் மூலமாய் கிடைத்த நண்பர்களால் புத்தகம் எழுதும் வாய்ப்பும் என்னைப்போன்றவர்களுக்கு எளிதில் கிடைத்து விடுமா நண்பா.

என்னை ஜப்பானில் ஜாக்கிசான் கூப்டாக அமெரிக்கால அர்னால்டு கூப்டாக என்ற ரேஞ்சில் தாங்கள் தரும் பதில் சிந்திக்க வைப்பதற்கு பதிலாய் மிக பலமாய் சிரிக்க வைக்கிறது நண்பா!

பொஸ்தகம் போடாத பொச்சரிப்பு என்று யாரும் இங்கே கிளம்பவில்லை நண்பா..

ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையே லூசுத்தனமாக வெறிபிடித்தாற்போல் வார்த்தைகளை கொட்டியதால்தான் அப்படியெல்லாம் பேசவேண்டியிருக்கிறது நண்பா!

விகடனில் ஒரு கவிதைத்தொடர் எழுதிட்டதாலேயே பெரிய கவிஞப்புடுங்கினு நினைப்பு வந்துருச்சுனா வளரவே முடியாது நண்பா.. நீங்கள் பயணிக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு நண்பா!. உங்கள் திறமைக்கு நீங்கள் வருங்கால தமிழகத்தின் ரவீந்தரநாத் தாகூர் ஆகவோ இந்தியாவின் ஜான் கீட்ஸைப் போல ஆக வேண்டியவர். என்னைப்போன்ற சில்லரைகளிடமும் அரைபொடிகளிடமும் பேசிக்கொண்டும் வீணாய்ப்போன பதிவுலகில் இயங்கிக்கொண்டும் நாசமாய்ப்போகாதீர்கள்.

இது தவிர the power of network என்கிற புத்தகத்தை வாங்கிப்படியுங்கள் . உங்களுக்கு நீங்கள் சார்ந்த துறையில் ஆயிரம் பேரைத்தெரிந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க இயலுமென்பதைக் குறித்த அத்தியாயம் மிகப்பயனுள்ளதாக இருக்கும்.


இப்படிக்கு

உங்களைப்போல ஒரு முடியலத்துவத்தைக்கூட கனவிலும் எழுத முடியாத எழுதவும் விரும்பாத

அரைப்பொடி அதிஷா

said...

:-)

பின்னூட்டங்களை தொடர்ந்து மடலில் பெறுவதற்காக இந்தப் பின்னூட்டம் :-)

said...

குசும்பரே, இதுக்கு தான் ஜீரியஸா எதுவும் பதிவெல்லாம் எழுதக்கூடாதுன்னு சொல்றது. இப்போ பாருங்க மக்கள்ஸெல்லாம் எவ்ளோ தீவிரமா கருத்துப் பரிமாற்றம் நடத்திக்கிறாங்கன்னு!!!

said...

தாலே லாலே லாலாலே...

said...

மாம்ஸ் ஒரு கமெண்ட் போட நினைச்சி மறந்துட்டேன்.. கோவை புத்தகக் கண்காட்சியில சில பல புத்தகங்கள் வாங்கினேன். அதில் கிழக்கின் 6 புத்தகங்களும் அடங்கும். அதென்னவோ போங்க மாமா, ஒரு புத்தகமும் பாதி கூட படிக்க முடியலை. அதுங்க எல்லாம் ராஜேஷ்குமார் நாவல் படிக்கிற மாதிரியே இருந்தது. ஆனா பாருங்க , ஒரு காலத்துல ராஜேஷ்குமார் நாவல்கள் கூட முழுசா படிக்க முடிஞ்சது. எழுத்துகள்ல சுவாரஷ்யம் இருக்கனும்னு மெனக்கெட்டிருக்காங்க.. ஆனா அற்பணிப்பு இல்லை.. அட்டை வடிவமைப்புல இருக்கிற வசீகரம்( இதான் அவர்கள் பலம் போல ) உள்ளடக்கத்துல இல்லை. அரசியல்வாதிகள், மாவீரர்கள் மற்றும் போர்கள் பற்றிய புத்தகங்கள் இவைகள். என்னத்த சொல்ல?. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீனத்துப் படங்களின் மொழிபெயர்ப்பை போல் இருக்கு.

இதை எல்லாம் விடக் கொடுமை. இவைகளை எல்லாம் எழுதியவர்களை சிலர் எழுத்தாளர்கள் எனக் கொண்டாடப்படுவது தான். :(

.. இந்த சோ கால்ட் எழுத்தாளர்களின் மற்ற படைப்புகளைப் பற்றி தெரியாததால், நான் படித்த வரையில் இவர்களை எழுத்தாளர்கள் என ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

said...

May I come in? :)))