Friday, May 29, 2009

சொக்கா சொக்கா எனக்கில்ல எனக்கில்ல!

சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி அண்ணன் பைத்தியக்காரன் மே 15 ஆம் தேதி ஒரு பதிவு போட்டு இருந்தார் அதில் மிஷேல் ஃபூக்கோ அதிகாரம்
கொஞ்சம் காரம் என்று எல்லாம் இருந்ததால் இது நமக்கான இடம் இல்லை என்று நினைச்சேன் அதுமட்டும் இன்றி 1500ரூபாய்க்கு பரிசு என்றது அது வேற லெவல் என்று இருந்துவிட்டேன். ஏன்னா நம்ம ஒர்த் எப்பவும்
பத்து ரூபாய்க்கு மேல தாண்டியது இல்லை.

ஸ்கூலில் படிக்கும் காலம் முதல் இந்த போட்டி என்றாலே அலர்ஜி ஏன்னா நானும் ஒன்னு ஒன்னுலேயும் கலந்துக்கிட்டு கடைசி இடமே பிடிக்கமுடிந்ததால் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். பேசாம இருந்த என்னை சுந்தர்ஜீயும், யூத் அனுஜன்யாவும்
உன்னால முடியும் குசும்பா ச்சும்மா எழுது என்று உசுப்பேத்தியதன் விளைவாக இதுவரை ஒரு பத்து கதை எழுதி ஒன்னும் திருப்தியா வரவில்லை.

அனுஜன்யாவுக்கு ஒரு கதை எழுதி அனுப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கன்னா ஆமாம் கதை அனுப்புறேன்னு சொன்னீயே அது எங்கன்னு லந்தகொடுக்கிறார். என்ன செய்வது இது இனி நமக்கு சரிவராதுன்னு
நர்சிம் கிட்ட அப்படியே ஒரு கதைய இடது கையால எழுதி இப்படி குசும்பு ஒன்லிக்கு அனுப்பினா நானும் பரிசு வாங்கிப்பேன் என்று சொன்னதுக்கு டீல் ஓக்கேன்னு சொன்னவர் அதன் பிறகு ஆல் அட்ரசே இல்லை.

சொக்கா சொக்கா எனக்கில்ல எனக்கில்ல என்று புலம்பவைத்துவிட்டார்கள் போட்டி என்று சொல்லி நாம 'உ' போட்டு ஆரம்பிக்கும் முன்பே பெரும் தலைகள் எல்லாம் களத்துல குதிச்சுட்டுங்க நல்லா இருக்கட்டும்! ஒரு பெரும் மலைகளோடு மேதிய பெருமையாவது மிஞ்சுமே என்ற ஆசையில் விரைவில் கதையோடு வருகிறேன்.

என்ன செய்வது விதி வலியது!

எது எப்படி இருந்தாலும் கதை எழுதனும் என்கிற ஆர்வத்தை தூண்டிய பைத்தியகாரன் + சமூக கலை இலக்கிய அமைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்!

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

டிஸ்கி: தலைப்பை படிச்சுவிட்டு எனக்கு சொக்கா இல்லை என்று நினைத்து சொக்கா எடுத்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் 42 சைஸ் அலேன் சோலி சொக்கா எடுத்து அனுப்பலாம் ஆட்சேபனை இல்லை!

21 comments:

said...

//டிஸ்கி: தலைப்பை படிச்சுவிட்டு எனக்கு சொக்கா இல்லை என்று நினைத்து சொக்கா எடுத்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் 44 சைஸ் அலேன் சோலி சொக்கா எடுத்து அனுப்பலாம் ஆட்சேபனை இல்லை!//

நீங்கள் இதைத்தான் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்ற சொல் மனப்பான்மை உங்கள் அதிகாரத்தை காட்டிக்கொடுக்கிறது. எனவே சொக்கா சொக்கா உங்களுக்கில்லை :)

said...

//குசும்பா ச்சும்மா எழுது என்று உசுப்பேத்தியதன் விளைவாக இதுவரை ஒரு பத்து கதை எழுதி ஒன்னும் திருப்தியா வரவில்லை//

நல்லவேளை பதிவுக்கு வர்ல நாங்க தப்பிச்சோம் !

said...

ஒன் திங்க் ஐ வாண்ட் டூ டெல்யூ

உங்களுக்கு அருமையா கதை எழுதுற திறமை இருக்கே த மீன் டைம் கிளைமாக்ஸ் யாருமே எதிர்பாராத மாதிரி மாத்தி அடிச்சு நெறுக்கவும் உங்களால முடியும்

கீப் டிரையிங்க் & 1500 புடிச்சு வாங்கிடுங்க

said...

//ஆயில்யன் said...

ஒன் திங்க் ஐ வாண்ட் டூ டெல்யூ

உங்களுக்கு அருமையா கதை எழுதுற திறமை இருக்கே த மீன் டைம் கிளைமாக்ஸ் யாருமே எதிர்பாராத மாதிரி மாத்தி அடிச்சு நெறுக்கவும் உங்களால முடியும்

கீப் டிரையிங்க் & 1500 புடிச்சு வாங்கிடுங்க//

டேய் ஆயிலு.. இது உனக்கே அடுக்குமா. எல்லோருகிட்டயும் ஒரே மாதிரி டயலாக் வுட்டு டரியல் ஆக்குறியே :)

said...

விஷயம் சபைக்கு வந்ததால சொல்ல வேண்டியிருக்கு.

எப்பவும் கார்ட்டூனோட போடுற கமெண்டு எல்லாத்தையும் ஒண்ணா சேத்து வெச்சு ரெண்டு பக்கத்துக்கு அனுப்பிருக்கான். அழகிரி, சோனியா, ஒபாமா, ஷில்பா ஷெட்டி, ரித்தீஷ், விஜய்னு சகட்டு மேனிக்கு கலந்து கட்டி. இதுல ஒரு ட்விஸ்ட் வேற - தளபதி தான் இத செஞ்சது என்ற மர்ம முடிச்சு. நாம தளபதி ஸ்டாலினா, விஜய்யா இல்ல ரிதீஷா அப்பிடீன்னு குழம்ப வேண்டுமாம். இதுல மூணு மெயில் வேற - 'கதை எப்படி இருக்கு' னு. எப்படி இருக்கு கதை?

உனக்கு சொக்கா கிடைக்குதோ இல்லையோ எனக்கு டவுசர் .....

அனுஜன்யா

said...

//44 சைஸ் //

44ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ... எல்லாம் மஞ்சு சாப்பாடு.. :)

என் சொக்கா சைஸ் இன்னும் 42 தான்.. :)

said...

எங்கே மாடுரேசன்? :(

said...

அண்ணன் கொடூரன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. :)))

said...

44 சைஸ் அலேன் சோலி சொக்கா எடுத்து அனுப்பலாம்

//


ஏன்?? அதை வச்சு டெண்ட் அடிச்சு தங்கப்போறீங்களா??

said...

என்னோட சொக்கா சைஸ் 40.
இடுப்பு சைஸ் 29.
1500/= கிடைச்சதுமே நாலஞ்சு செட் ஜீன்ஸ்..சொக்கா எல்லாம் வாங்கி அனுப்புங்க.. குசும்பன் நினைவாப் போட்டுக்குறேன்..சரியா? :)

said...

//சென்ஷி said...
//ஆயில்யன் said...

ஒன் திங்க் ஐ வாண்ட் டூ டெல்யூ

உங்களுக்கு அருமையா கதை எழுதுற திறமை இருக்கே த மீன் டைம் கிளைமாக்ஸ் யாருமே எதிர்பாராத மாதிரி மாத்தி அடிச்சு நெறுக்கவும் உங்களால முடியும்

கீப் டிரையிங்க் & 1500 புடிச்சு வாங்கிடுங்க//

டேய் ஆயிலு.. இது உனக்கே அடுக்குமா. எல்லோருகிட்டயும் ஒரே மாதிரி டயலாக் வுட்டு டரியல் ஆக்குறியே :)
///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அண்ணே சூட்சுமத்தை கண்டுபுடிச்சிட்டா கம்முன்னு இருக்கணும் இப்படியா செய்யுறது :((

said...

வழக்கம் போல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் 42தான் என் சட்டை சைஸ்! 44 என்று தவறுதலாக வந்துவிட்டது.

44 ஆஆஆஆஆஆன்னு கேட்ட பெருமக்கள் எல்லாம் 42 எடுத்து அனுப்பினால் கூட போதும்.
*****************
சென்ஷி அவ்வ்வ்வ்

ஆயிலு ஐ ஆம் யுவர் பிரண்ட் ஓக்கே!

அனுஜன்யா யூத் சபையிலா முறையிடுகிறீர் இரும் இரும் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனிச்சுக்கிறேன்

அப்துல்லா அண்ணே நான் என்னா வடிவேலு மாதிரியா துபாய் டிரஸ் போட்டு இருக்கே டெண்ட் அடிக்க!
அது ஒரு சுமால் மிஸ்டேக்:)))

ரிஷான் அப்படியே பனியன் ஜட்டி சைஸ் எல்லாம் சொல்லுங்க ஏன் அந்த குறை வெச்சுக்கிட்டு:)))


சஞ்சய் மாமா உங்களுக்கு 42தானா அப்ப அது சிம்ரன் டிரஸ் மாதிரி நெஞ்சோட நின்னுக்குமே மீதிய அப்படியே கிளாமராக அலைவீரோ!

said...

// நாம 'உ' போட்டு ஆரம்பிக்கும் முன்பே பெரும் தலைகள் எல்லாம் களத்துல குதிச்சுட்டுங்க நல்லா இருக்கட்டும்!//

இப்ப நீங்களும் குதிச்சிடீங்களா தல...

சொக்கா... சொக்கா...எனக்கில்ல..எனக்கில்ல

said...

//ஏன்னா நம்ம ஒர்த் எப்பவும்
பத்து ரூபாய்க்கு மேல தாண்டியது இல்லை.//

அச்சச்சோ.. அப்போ உங்க மதிப்பு தெரியாம நான் தான் உங்க கல்யாணத்துக்கு நிறைய மொய் வைச்சிட்டேனோ :(((

said...

//
ஒரு பெரும் மலைகளோடு மேதிய பெருமையாவது மிஞ்சுமே என்ற ஆசையில் விரைவில் கதையோடு வருகிறேன்.
//

மலையோட மோதுறீங்களா? என்னை நீங்க ரொம்ப புகழ்றீங்க குசும்பன்.. கூச்சமா இருக்கு..ஹி.ஹி.ஹி..
(ஃபோட்டோல உங்களை பாத்தா மலையாட்டம்தான் இருக்குன்னு, கவுன்ட்டர் குடுக்கக் கூடாது, ஆமா)

said...

All the best:-)

said...

//எது எப்படி இருந்தாலும் கதை எழுதனும் என்கிற ஆர்வத்தை தூண்டிய பைத்தியகாரன் + சமூக கலை இலக்கிய அமைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்!//

Repeat!

said...

/வலைதளத்துக்கு நான் புதுசு...கொஞசம் சீரியஸ் பார்டி..உங்களின் இலகுவான அனுகுமுறை ரசிக்கத்தக்க்தாயிருக்கிற்து./

said...

ஏன் மாப்ள, நானும் வேணும்ணா ஒரு கதைய எழுதிரட்டுமா?

மொதல்ல பதிவு எழுதாடான்னு பதில் போட்ட உதை விழும்.

said...

எனக்கு கூட சொக்கா இல்லை!

ஒன்னு வாங்கி அனுப்புங்க குசும்பு தலைவா?

said...

நானும் மூணு நாளா முடிய பிச்சிக்கினுருக்கேன் தல.. சுந்தர்ஜி மாதிரி ஆயிடுவேன்னு நினைக்கிறேன்.