Tuesday, July 29, 2008

A for அசின், B for பிபாசாபாசு, C for சாய சிங், D for தீபிகாபடு கோன்

டேய் நாம படிக்கும் பொழுது ஸ்கூலில் A for Appile , B for Ball, C for Cat ன்னுதானேடா சொல்லி கொடுப்பாங்கஅது எப்படா C for Catch ஆனது என்று ஒரு காமெடி தூள் படத்தில் வரும்... அது போல எனக்கு பிடித்த சைட் பேரை சொல்லனும் என்றால்

A for அசின்,
B for பிபாசா பாசு
C for சாய சிங்,
D for தீபிகாபடு கோன்

என்றுதான் நான் சொல்லனும் அப்படி சொன்னா அடிக்கவந்துடுவீங்க இருந்தாலும் முடிந்த வரை நல்ல வெப்சைட்டா சொல்லி இருக்கேன் ஏதும் தேறுதான்னு பார்த்துக்குங்க.

A-- போட்டோசாப் பற்றி பல உபயோகமான பாடங்கள் இருக்கும் இடம் இது

A-- வர போகும் புது ஆங்கில பட டிரைலர் தமிழே அரை குறையாதான் தெரியும் இதுல உனக்கு ஆங்கில பட டிரைலரா என்று எல்லாம் கேட்க கூடாது!

B-- அழகான புகைப்படங்கள் இங்கே இருக்கும் டிசைனிங் செய்யும் பொழுது இங்கே இருந்து படங்களை எடுத்துக்கொள்ளாம்.

C-- இலவசமாக MP3 பாடல்களை இறக்குமதி செய்ய இங்கே போகலாம்.

D-- வெப்சைட் செய்யும் பொழுது தேவைபடும் ஜாவா ஸ்கிரிப்ட் மெனுவை ஜாவாவில் 90% மார்க் வாங்கிய(5 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதி அதில் 4 மதிப்பெண் வாங்கினேன்) மக்கு மாணவர்களுக்கும் ஈசியாக புரியும் படி ரெடிமேடாக இருக்கும் இடம்.


D-- புது ஆங்கில படங்களை DVD தரத்தில் பார்க்க

E--இ இ இ ஒன்னும் தெரியவில்லை Enemies of kusumban .காம் என்று புச்சா ஒன்னு ஓப்பன் செஞ்சு அதுல என்னை பார்த்து ரித்தீஸ் என்று சொன்னவங்களை காலி செய்யும் ஐடியாவில் இருக்கேன்.


F-- விளையாட்டு தளம்

G--வெப்சைட் ஹோஸ்ட் செய்ய, டொமைன் புக் செய்ய அடிக்கடி போகும் தளம்.

H-- இதுல ரொம்ப ஈசியாக HTML, PHP போன்றவற்றை படிக்கலாம்.

I-- இங்கிருந்துதான் வெப் டிசைன் செய்ய படங்களை சுடுகிறேன்.

J-- ஜாங்கிலிமாங்கிலி. காம்

k-- மிகவும் எளிமையாக புரியும் படி Flash பற்றிய பாடம் இவரிடம் இருக்குங்க.
l--எத்தனையோ டெஸ்ட் எழுதி இருப்பீங்க இதையும் கொஞ்சம் எழுதுங்களேன்.

M-- 3D மேக்ஸ் பற்றிய வலைதளம்

N--ஒன்னியிம் இல்லை

O-- நான் அடிக்கடி நுழைந்து கேள்வி கேட்கும் இடம், ரொம்ப சின்ன விசயமாக இருந்தாலும் பொருமையாக சொல்லி தருவார்கள்.கண்டிப்பாக பதில் கிடைத்துவிடும்.


O- இதுக்கு என் பிளாக்கிலே லிங் இருந்தாலும் இங்க ஒருதபா கொடுத்துக்கிறேன்.

இதுக்கு மேலே ABCD மறந்துபோச்சுங்கோ!!!

டிஸ்கி1: பல பல “நல்ல” வெப்சைட்டுகளை இங்கே தடை செய்துவைத்து இருக்கிறார்கள் அதனால் மேலும் பல வெப்சைட் லிங்கை தர முடியாததுக்கு வருந்துகிறேன்

ஞானவேட்கைக்கு தீனி போடும் முயற்சி அது இதுன்னு பொய்வார்த்தைகள் இருந்ததால் அதை எல்லாம் டெலிட் செஞ்சுட்டேன்!!!

மூன்று பேரை கூப்பிடனுமாம்

1) lotto tickets
2) lottery results
3) lotto 649


மேலே உள்ள நபர்கள் வெகுகாலமாக பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருக்காங்க ரொம்ப நல்லவனுங்க ,கடமைவீரர்களான அவுங்களை எழுத அழைத்து வர ஒரு சிறு முயற்சி!

புதுகைதென்றல் யக்கோவ் நீங்க என்னை A for ஆப்பிள் என்றுதான் எழுத சொன்னீங்க. சரி அப்படியே எழுதிடலாம் என்று நினைச்சா எழுத வரமாட்டேங்குது,பிறகு என்ன செய்ய A for அசின் என்று தலைப்பு வெச்சதும் சும்மா சூப்பரா எழுத வருது. அசினுக்கு எம்புட்டு பவர் என்று தெரிஞ்சுக்கிட்டேன்.

Sunday, July 27, 2008

ரோபோவில் அதிரடி மாற்றம் + புதிய ஸ்டில்ஸ்

ரோபோவில் ஷங்கர் போட்டோ ஷூட்டிங் முடிந்த பிறகு சில அதிரடி மாற்றங்களை எடுத்து இருக்கிறார், போட்டோக்கள் அவ்வளோ திருப்தி அடையாத ஷங்கர் இது பல கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்பதால் ரஜினியை மாற்றிவிட்டு புது ஹீரோவை போட போகிறார்.

இவை எல்லாம் புதிய ரோபோ ஸ்டில்ஸ். கூகிளில் தேடினால் இவைதான் வருகின்றன.






இவர்தான் புதிய ரோபோ ஹீரோ என்று கோடம்பாக்கம் பட்சிகள் சொல்கின்றன. ஜோடியாக நடிக்க ஸ்ரேயா, அசின், நமீதா, ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத், போன்றோர்கள் போட்டி போடுகிறார்கள் என்றும் பட்சி சொல்கிறது.

Wednesday, July 16, 2008

தமிழ்மண கருத்து மோதல்கள் பற்றி ... புதியவர்களுக்கு

தமிழ்மணத்தில் புதிதாக எழுத வந்து இருப்பவர்களுக்குக்கும் , எழுத வரலாமா வர வேண்டாம என்றவர்களுக்கும் இந்த பதிவு.

தமிழ்மணத்தின் நீண்ட நாள் வாசகராக இருப்பீர்களேயானால் உங்களுக்கு இப்பொழுது நடந்து வரும் சண்டைகள், கருத்து மோதல்கள், அறிக்கை போர்கள் உங்களுக்கு புரியும்.

சில வருடங்களுக்கு முன் தமிழ்மணத்தில் சாதி மோதல் நடந்தது, பின் கொஞ்ச நாட்கள் மத சண்டை, பின் தனி நபர் தாக்குதல், பின் குழு சண்டை, என்று தொடர்ந்து சண்டைகள் இருந்துதான் வருகிறது.

இந்த சண்டைகள் சீசன் பிசினஸ் போல ஒரு சில காலம் தொடர்ந்து வந்து பின் மறைந்து விடும். சிலருக்கு இது ”சீன்” பிசினசாக இருப்பதால் இது போல் இன்னும் பல சண்டைகள் வரும்.

இதோ இப்பொழுது தமிழ்மணம் அதிகார மையமாக செயல் படுகிறதா என்று சுந்தர் எழுதிய காமகதைகளை தூக்கியதால் வந்த பிரச்சினை, செல்வராஜ் அவர்கள் எழுதிய பதிவுக்கு பின் சூடு குறைய தொடங்கி விட்டது என்று நிம்மதிபெரு மூச்சு விட்டீர்கள் என்றால் நீங்கள் இன்னும் கற்றுக்க வேண்டியது நிறைய இருக்கு. அனைந்த நெருப்பையும் ஊதி ஊதி நெருப்பாக்கும் பலர் இங்கு இருக்கிறார்கள்.

நமக்கு வரும் பத்து பின்னூட்டத்துக்கே பதில் சொல்ல நேரம் இல்லாமல் நாம் அடுத்த வேலையை பார்க்க போகும் பொழுது நிர்வாகிகளின் நிலையை நாம் உணர்ந்தோம் என்றால் பிரச்சினை இல்லை.

இதோ செல்வராஜ் பதிவில்

கருத்து மோதலில் ஈடுபட்ட நண்பர்கள் சுந்தர், அய்யனார், வளர் அவர்களின் பின்னூட்டம்


//7வளர்மதி
நன்றி திரு. செல்வராஜ்,
உங்களது விளக்கம் முதல் வாசிப்பில் திருப்தி தருவதாகவே இருக்கிறது.
சுந்தரின் கதைகளுக்கு மூன்று ஸ்டார்கள் வைத்தது triple x என்று பட்டம் கட்டுவதுபோல இருந்ததாலேயே நான் உடனடியாக எதிர்வினையாற்றுவது என்று முடிவு செய்து எழுதினேன்.
மற்றது உங்களதும் பிற நிர்வாகத்தினரது சூழல்கள், வேலைப்பளுக்கள் அனைத்தும் புரிந்துகொள்ளக் கூடியதே. எனினும் இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால், நீங்களே குறிப்பிட்டதுபோல குட்டையைக் குழப்புவர்களது அவதூறுகளைத் தவிர்த்திருக்கலாம்.
என் போன்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்ததையும் தடுத்திருக்கலாம்.
மிகுந்த நன்றிகள்.
அன்புடன்வளர் …//



//அய்யனார்
/இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால்/இதுதான் என்னுடைய ஆதங்கமாகவும் இருந்தது..வேலைப் பளு நேரமின்மை என்பவைகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்.அந்தந்த நிமிடத்தின் உணர்வுகள் அந்தந்த நிமிடத்திற்கானவை..உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..//

//ஜ்யோவ்ராம் சுந்தர்
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே… உங்கள் உணர்வை (போலவே சுந்தரவடிவேலின் பின்னூட்டத்தையும்).
நான் தமிழ்மணம் குறித்தோ அல்லது அதன் நிர்வாகிகள் குறிந்தோ ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்… சில சமயம் கோபத்தில் / ஈகோவில் இம்மாதிரித் தவறுகள் நிகழ்வது சகஜம் என்பதை நீங்களும் உணர்வீர்கள்தானே… மற்றபடி, யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது என் நோக்கமில்லை.
என் பதிவை மொத்தமாக நீக்கியிருந்தாலும் இத்தனை மாதங்கள் என் இடுகைகளைத் திரட்டியதற்கு தமிழ்மணத்திற்கு நான் நன்றியுடையவனாகத்தான் இருப்பேன்.//



இதோ நாளை முதல் இவர்கள் அனைவரும் சகஜமாக எழுத ஆரம்பித்து விடுவார்கள், படித்து கொண்டு இருந்த நீங்களும் நானும் தான் ஏன் இப்படி அடிச்சிக்கிட்டாங்க என்று மண்டை குழம்பி போவோம்.

தமிழ்மண சண்டைகள் முடிந்த பின் தான் பதிவு எழுத வருவேன் என்று நீங்கள் இருந்தால் எப்ப அலை ஓய்கிறது எப்ப மீன் பிடிக்கிறது.

எழுத வாங்க அதுக்கு முன்

நான் இங்கு சாதி, மதம், தனி நபர் தாக்குதலில் ஈடுபடமாட்டேன் என்ற உறுதியோடு வாங்க.

டிஸ்கி: இந்த கும்மி பதிவர்களால் தமிழ்மணம் தரம் குறைகிறது என்று கூப்பாடு போடும் பெருசுகளே என்றாவது கும்மி பதிவர்களால் சண்டை வந்து இருக்கிறதா?

அதீதனும் அதீதாவும் சேர்ந்து புதிதா ஏதும்???

தமிழ்மணம் ஒரு பார்வை + கொஞ்சம் ஜாலி குவிஸ்



படிப்போரை எதுவும் புரியாமல் டரியல் ஆக்கும் விதத்தில் பின்நவீனத்துவ கதை, கவிதை எழுதி வந்த ஜ்வோராம் சுந்தர், புரியும் படி அழகாக எழுத ஆரம்பித்த காமக்கதைகள் தமிழ்மணத்தால் தூக்கபட்டு அதனால் இன்று வரை பிரச்சினைகள் ஓயவில்லை.

அதீதனும் அதீதாவும் சேர்ந்து ஏதும் புதிதா பெட்ரோல் கண்டுபிடிப்பார்கள் என்று ஆர்வத்தோடு காத்துகொண்டு இருந்தவர்கள் நினைப்பில் மண்.


(இனி காம கதைகளை எழுத கூடாது என்று சொல்லி திரும்ப ஜ்வோராம் இப்படி ஆய்வு கதை எழுத ஆரம்பதித்தால் என்ன ஆகும் என்று ஒரு முறைக்கு 1000 முறை யோசித்து முடிவு எடுக்கும் படி தமிழ்மணத்தை கேட்டுக்கிறேன்)

லக்கி எழுதிய ஜட்டி கதைகளை விட வந்த பின்னூட்டங்களே கிளு கிளுப்பாக இருந்தது.

அய்யனார் எழுதிய மூத்திரம் பெய்யுங்களேன் பதிவு பலராலும் பல வகையில் பாராட்டை பெற்றது, இளவஞ்சி மட்டும் தொடர்ந்து அய்யானாரோடு ஏதோ விவாதம் செய்துகொண்டு இருக்கிறார், பதிவில் இருக்கும் உள்குத்து என்னவென்று புரியவில்லை.

இவை எல்லாவற்றையும் திசை திருப்பும் விதமாக செந்தழலார் கிளப்பிய சோதிட பிரச்சினை, பின் ஆசான் சுப்பையா எதிர் பதிவு எல்லாம் சர்சையை கிளப்பினாலும், காமத்துக்கும் முன் அடங்கி போனது.

தமிழரசி என்ற பெயரில் சூட்டை கிளப்பிய பதிவர் கடைசியில் ஓசை செல்லா என்று இன்று தெரியவந்தது. அது போல் அன் செட்டில் வுமனும் அவர்தான் என்று தெரிந்த ஒரு பதிவர், கோவையில் ரூம் போட்டு அழுதுகொண்டு இருக்கிறார்.

வினாடி வினா

1) சமீப காலமாக சர்சையில் சிக்கும் பெயர்?
அ) அதீதன் ஆ) மருத்துவர் ராமதாஸ் இ) சோனியா ஈ)விஜயகாந்


2) வாஸ்தியானருக்கு பிறகு காம சூத்திரம் எழுதியவர்?

அ)கொக்கோக முனிவர் 2)சிருங்கார முனிவர் 3) ஜ்வோராம் சுந்தர் 4) ஆடுமாடு


பயோடேட்டா

நிஜ பெயர் : ஓசை செல்லா

புனைபெயர்: தமிழரசி, அன் செட்டில் உமன்

வயது : சண்டை போடும் வயது

சேர்ந்தே இருப்பது : கேமிராவும் , கீ போர்டும்

பிரிக்க முடியாதது: கூலிங்கிளாசும், செல் போனும்

பிடிக்காதது: சட்டை போட்டு போட்டோ எடுப்பது.

பிடித்தது: போட்டோ எடுப்பது, பதிவில் சூட்டை கிளப்புவது.

சமீபத்திய எரிச்சல்: ஒட்டு மொத்த தமிழ்மண நிர்வாக குழு மீது

நீண்ட கால எரிச்சல்: பெயரிலி

சாதனை : சூடான இடுகையில் இடம் பிடிப்பது.

முனு முனுக்கும் பாடல்: காமம் என்பதா காதல் என்பதா ...........

Tuesday, July 15, 2008

அவனுக்கு வயது 10 அவளுக்கு வயது 32

எனக்கு பக்கத்து வீட்டு நொண்டி அக்காவோடு விளையாடுவது என்றால் மிகவும் பிரியம் அப்பொழுது எனக்கு வயது 10 நொண்டி அக்காவுக்கு வயது 32. நொண்டி என்றால் கை கால் ஊனம் இல்லை சிறு வயதில் மாங்கா பறிக்க மா மரத்தில் ஏறி கீழே விழுந்து கை முறிந்து அதுக்கு டாக்டரிடம் அப்பொழுது காட்டாமல் நாட்டு மருத்துவர் கட்டு போட்டதால் வலது கை ”ட” னா வடிவத்தில் இருக்கும். ஏன் எல்லாரும் நொண்டி வீடுன்னு சொல்லுறாங்க என்று கேட்டபொழுது அக்கா என்னிடம் இதை சொன்னால் அவளால் கையை நீட்டவோ மடக்கவோ முடியாது. அதனாலயோ என்னவோ இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சில சமயம் அழுது கொண்டு இருப்பாள் என்னக்கா என்றால் சொன்னா உனக்கு புரியாது விடு என்று சொல்லி விடுவாள்.

அது போல் எனக்கு பிடித்த இன்னொரு விசயம் அக்கா வீட்டில் இருக்கும் லெட்சுமி என்கிற பசு மாடு. பசு மாடு என்றாலே சாந்தமாக இருக்கும் ஆனால் இது கொஞ்சம் முரடு, நொண்டி அக்காவையும், என்னையும் தவிர வேறு யாரையும் அருகில் சேர்க்காது வேறு யார் வந்தாலும் முட்ட வரும்.

அன்று அது போல் அக்காவோடு விளையாடி கொண்டு இருக்கும் பொழுது லேசா மழை தூறல் போட வீட்டுக்குள் வந்து பரமபதம் விளையாடி கொண்டு இருந்தோம், அப்பொழுது லெட்சுமி பெருங்குரலெடுத்து ”ம்மே” என்று தொடர்ந்து கத்த நான் அக்காவிடம் அக்கா லெட்சுமி கத்துதுவாக்கா போய் புல்லு கொடுத்துவிட்டு வருவோம் என்றேன். இல்லை அக்கா முன்னாடியே லெட்சுமிக்கு புல்லு கொடுத்துவிட்டேன் அது சும்மா மழைக்காக கத்துகிறது என்று சொல்லி விட்டு,அவுங்க அம்மா காதில் ஏதோ சொல்ல,

அவுங்க அம்மா திண்ணையில் உட்காந்து இருந்த புருசனிடம் ரெண்டு நாளா சொல்லுறேன் லெட்சுமி ஈத்தடிக்குது, ஈத்தடிக்குதுன்னு நாளைக்காவது காளைக்கு கூட்டிட்டு போங்க என்று சத்தம் போட்டாள்.

”என்னாடி மாட்டை நானா இழுத்துக்கிட்டு போக முடியும் முனியனிடம் சொல்லி இருக்கேன் வந்து கூட்டிட்டு போவான்.”

”ம்கும் நல்ல ஆளு பார்த்து சொல்லி இருக்கீங்க அவனுக்கு என்னா வீடா,வாசலா இல்லை நம்ம வீட்டு மாட்டை மட்டும்தான் கவனிச்சுக்கிறானாஅவனுக்கு ஊர்ல இருக்குற எல்லா வீட்டு மாட்டையும் கவனிக்கவே நேரம் சரியா இருக்கும், அவன் எப்ப வந்து எப்ப கூட்டிட்டு போக போறானோ!”

அப்பொழுது அந்த வழியா புல்லு கட்டை தூக்கிட்டு வந்த முனியனிடம்

“எலேய் முனியா ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கேன் லெச்சுமிய கோனார் வீட்டு காளைக்கிட்ட கூட்டிட்டு போன்னு, நாளை காலை சீக்கிரமா வந்து முதலில்அதை பாருடா, முதல் மாடா நம்ம மாடு இருக்கனும் அப்பதான் சட்டுன்னு புடிக்கும்”

”சரிங்கய்யா கருக்கலங்காட்டியும் வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு போனான் முனியன்.

பின் சில மாதம் கழித்து

ஒரு மாலை நேரத்தில் ஊர் மக்கள் எல்லோரு கூடி இருக்க.

“எனக்கு அப்பவே தெரியும்ய்யா இந்த பய நொண்டி ஊட்டுக்கு அடிக்க போய் வரும்பொழுதே” ஒரு பெருசு.

“அப்பவே அரசல் புரசலா காதுல விழுந்துச்சு, கையும் களவுமா புடிக்கனும் என்றுதான் காத்து இருந்தேன் இன்னைக்கு வசமா மாட்டினாங்க”

பெருமிதத்தில் இன்னொரு பெருசு.

கையால் கயிறு கட்ட பட்டு முனியன் தலை குனிஞ்சு ஒரு பக்கமும், வாய் ஓரத்தில் இரத்தம் வழிந்து அழுதுகொண்டு வீங்கிய மூஞ்சோடு நொண்டி அக்காவும் நிற்க,அதை பார்த்த அக்கா ஏம்மா அழுறாங்க என்று கேட்ட என் வாய் பொத்தபட்டது.

”இதுக்கு மேல அவனை அடிச்சா செத்துகித்து போய் விடுவான் இனி அவன் ஊருகுள்ள இருக்க கூடாது அவ்வளோதான்” போங்க போங்க எல்லாம் போங்க என்று மீசை தாத்தா சத்தம் போட்டார்.

எல்லாம் முனு முனுத்தபடி கிளம்பி போனார்கள்.


காலை பக்கத்து வீட்டில் இருந்து அய்யோன்னு பெருங்குரல் கேட்க வீட்டில் இருந்த எல்லோரும் ஓடினார்கள், நானும் பின்னாடியே ஓடினேன் அங்கு மா மரத்தில் நாக்கு தள்ளி மாடு கட்டும் கயித்தில் தொங்கி கொண்டு இருந்தாள் நொண்டி அக்கா. ஒரு சிறு கூட்டம் குளக்கரைய நோக்கி ஓட அங்கு குள கரையில் வாயில் நுரை தள்ளி அசைவற்று கிடந்தான் முனியன் உடலை புரட்டி போட்ட பொழுது நெஞ்சில் ராசாத்தி என்று பச்சை குத்தி இருந்தது, நொண்டி அக்காவின் பெயர் ராசாத்தி என்று அவர் அப்பாவுக்கே தெரியாது.

**********************************************************************************
டேய் ராஜா இப்பதான் சித்ரா காலேஜ் முடிச்சு இருக்கா அதுக்குள்ள ஏன் டா கல்யாணம் செஞ்சு குடுத்து விடலாம் என்று புடிவாதமா இருக்க, நமக்கு இருக்குற கடனுக்கு அவளும் வேலைக்கு போனா சீக்கிரமா கடனை அடைச்சிடலாம் இல்லை என்றால் நீ மட்டும் தனியா எவ்வளோதான் டா கஷ்ட படுவ கல்யாண செலவுக்கு என்ன செய்வ என்று எவ்வளோ நேரமா கேட்டு கிட்டு இருக்கேன் அப்படி என்னா யோசனை உனக்கு என்று அம்மா சத்தம் போடுவது என் காதில் லேசா விழுந்தது.

நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க என்று ஒத்தை வரியில் பதில் சொல்லி விட்டு, கண்ணை துடைத்து கொண்டு வீடு பின் பக்கம் போனேன் அந்த மா மரத்தை பார்க்க.

Sunday, July 13, 2008

போட்டோ குசும்பு பதிவு கடைசி படத்துக்காக தமிழ்மணம் இந்த பதிவை தூக்குமா??



















டிஸ்கி : அய்யனார் கொலை வெறி ரசிகர்கள் எல்லாம் அய்யனாரின் நேற்றய பதிவுக்கு எதிர் பதிவு போடுங்களேன் என்று சொல்கிறார்கள் அந்த பதிவுக்கு எதிர் தலைப்பு வைத்தாலே ரொம்ப அசிங்கமா ஆயிடும்:))