Tuesday, December 23, 2008

என் அம்மாவுக்காக பிராத்தனை!!!

அம்மாவுக்கு கையில் 5 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு ஆப்ரேசன் இரு தினங்களுக்கு முன்நடந்தது. ஆப்ரேசன் நல்ல படியாகமுடிந்தது கண் விழிக்க குறைந்தது 5 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்காங்க தம்பி என்று அப்பா என்னிடம் போனில் சொல்ல,அப்பா என்னிடம்தான் பேசுகிறார் என்று அந்த மயக்கத்திலும் தெரிந்துக்கொண்டு, அய்யா நல்லா இருக்கேன்யா கவலைப்படாதய்யா என்று குழறி குழறி பேச என் குரல் உடைந்தது அந்த நிலையிலும் அழுவாத ராசா நான் நல்லா இருக்கேன் என்று சொல்லியது அதற்கு மேல் பேச முடியவில்லை, நேற்று கொஞ்சம் பரவாயில்லை என்று சொன்னார்கள் ஆனால் அம்மாவுக்கு நேற்று திடிர் என்று சுவாச கோளாறு ஏற்பட்டு தற்பொழுது திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர டாக்டர்களின் கண்கானிப்பில் இருக்கிறார்கள். விரைவில் நலம் பெற எனக்காக முடிந்தால் ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்! உங்கள் பிராத்தனை நிச்சயம் பலன் கொடுக்கும்!

Monday, December 22, 2008

டரியள் டக்ளஸும் பின்னே ஞானும்!

காங்கிரஸ் தல : தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்சிகளையும் தமிழக காங்கிரசார் நன்கு அறிவர்!

டரியள் டக்ளஸ்: ஓ அப்படியா இருங்க உங்கள் அறிவு திறனை சோதிக்கும் வகையில் ஒரு கேள்வி, வேளச்சேரி அம்மன் திருவிழா நிகழ்சியில் மூன்றாவதாக ஜிமிக்கி சட்டை போட்டுகுத்தாட்டம் போட்ட நடிகை யாரு? எங்கே சொல்லுங்க பார்க்கலாம்.

காங்கிரஸ் தல :நமது கட்சி மேலிடமும் இச்சம்பங்களை கூர்ந்து கவனித்து வருகிறது!

டரியள் டக்ளஸ்: ரொம்ப கூர்ந்து பார்த்தா கண் வலி வந்துடும் கொஞ்சம் கண்ணை சிமிட்டிக்க சொல்லுங்க!

காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!

டரியள் டக்ளஸ்: அப்படி போனது உங்க தப்பு, E.C.R வழியில் சென்றால் நல்லா பீச் காத்தும் வாங்கலாம், பசிச்சா திங்க சுண்டலும் வாங்கலாம்!

காங்கிரஸ் தல :காந்திய வழியில் சென்றதால் செருப்படி வாங்கினோம்!

டரியள் டக்ளஸ்: என்னங்க இதுக்கு எல்லாம் கவலைபட்டுக்கிட்டு பாதி புஷ் ஆகிட்டீங்க இப்ப எல்லாம் ஷூவால் அடி வாங்குவதுதான் பேசன்!

காங்கிரஸ் தல :சத்தியமூர்த்தி பவனுக்கு தாக்க வருபவர்கள் தைரியமிருந்தால் தேதி சொல்லிவிட்டு வரட்டும் அப்படி வந்தால் அவர்களை நாங்கள் நேருக்கு நேர் சந்திக்க தயார்!

டரியள் டக்ளஸ்: அவுங்க என்னா வசந்த பவனுக்கு காப்பி சாப்பிட நண்பர்களோடவா வராங்க தேதி டைம் எல்லாம் சொல்லி வர!
அப்புறம் கிட்ட வாங்க ஒரு ரகசியம் முதலில் வாசனை நேருக்கு நேர் சந்தியுங்க அப்புறம் பேசுவோம்!

*********************பின்னே ஞானும்**********************************
போன வாரம் ஒரு மாலை நேரம் நானும் மனைவியும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றோம் அவர் கொஞ்சம் உறவு முறையில் கூட வரும், ஆனால் அத்தனை பழக்கம் கிடையாது. இங்கு வந்த பிறகுதான் பழக்கம் என் ஊருக்கும் அவர் ஊருக்கும் குறைந்தது ஒரு 10கிமீ தூரம் இருப்பதால் கொஞ்சம் தூரத்து சொந்தம் என்று கூட சொல்லலாம்.

அவருடைய அப்பாவும் ஊரில் இருந்து வந்து இருக்கிறார், அவர் அப்பாவிடம் இவரும் நம்ம ஊர் பக்கம் தான் என்று சொல்ல அவர் ஊர் பெயரை கேட்க நானும் சொன்னேன் பின் அப்பா பெயரை தாத்தா பெயரை எல்லாம் கேட்டார் சொன்னேன் பின் மனைவியிடம் மனைவி படிச்சது என்ன ஊர் என்று கேட்க ஊர் பெயரை சொன்னதும் அதற்கு அவர் அந்த ஊரில் என் சாதி பெயரை சொல்லி “--------” குடும்பங்களுமா இருக்கு? யார் பொண்ணுமா நீ என்று கேட்க, மனைவிக்கு ஒன்றும் சொல்லத்தெரியவில்லை, நான் உடனே அவுங்க “...........” இல்லை அவுங்க வேறு என்று சொன்னேன்.

டக்கென்று ஒரு நிமிடம் பேசாமல் இருந்தவர், நானும் சாதி எல்லாம் பார்ப்பது இல்லை இதை எல்லாம் ஆதரிப்பவன் என்றார். இரண்டு மணி நேரம் 28 நிமிடம் பலான பலான மேட்டரை காட்டிவிட்டு கடைசி 2 நிமிடம் இப்படி எல்லாம் செய்யாதீங்க என்று மெசேஜ் சொல்லும் படம் போல!பேசியது எல்லாம் சாதியை பற்றி பேசிவிட்டு கடைசியில் நானும் சாதி எதிர்பாலன் என்று சப்பைகட்டு வேறு! பெருசுங்களா கொஞ்சம் திருந்துங்க!

இதை எழுதும் பொழுது சில பதிவர்கள் நினைவுக்கு வந்தார்கள் அவர்கள் எழுதும் பொழுது எல்லாம் கீபோர்ட் தேய சாதி எதிர்ப்பை பற்றி எழுதிவிட்டு, பழகும் பொழுது என்னை பார்த்து கேட்ட முதல் வார்த்தை நீ என்னசாதி?

சாதிய ஒழிக்கனும் சாதிய ஒழிக்கனும் என்று கூப்பாடு போடும் ஆட்கள்தான் சாதிய பிடிச்சுக்கிட்டு தொங்கிட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது அது சரியா!

Sunday, December 21, 2008

இனியும் நான் எழுதனுமா?

வணக்கம் மக்களே போன பதிவுக்கும் இந்த பதிவுக்கும் போதிய இடைவெளி விட்டுவிட்டதாலும், பூஜ்ய கணக்கான ரசிகைகளிடம் இருந்து ஆயிரகணக்கான மெயில்களும், போன்களும் வந்ததாலும் இந்த பதிவு. சஞ்சய்,கார்க்கி இருவரும் ஆண்கள் என்பதால் இவர்கள் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடமாட்டாது!

சரி விசயத்துக்கு வருகிறேன் ஊரில் இருந்து ஒரு பதிவர் துபாய் வருகிறேன் என்றும் சொல்லி இருந்தார், அது போல் நேற்றுவந்ததும் போன் செய்தார் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போனேன்.

போகிற வழியில் அவர் சொன்ன ஒரு ஜோக் அவரு படித்த கல்லூரியின் நிர்வாகி பேசியதை சொன்னார்.


மீ 4 டாட்டர், 2 டாட்டர் மேரீட், ரிமைனிங் 2 டாட்டர் போத் ஆர் கேர்ள்ஸ்!
(எனக்கு நான்கு பெண்கள், இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது, இருவருக்கு திருமணம் ஆக வில்லை இதுதான் அவர் சொல்ல வந்தது!)


பின் என்ன அண்ணாச்சி நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு ஏன் என்றார்?

நானும் நான் மட்டும் இல்லை ஆசிப் அண்ணாச்சி சின்ன புள்ள மாதிரி இப்ப எல்லாம் மலையாள படம் பார்க்க போய்விடுகிறார் இங்கு நடக்கும் உலக திரைப்பட விழாவுக்கு அதானால் அவரும் எழுதுவது இல்லை, அய்யனாருக்கு ஆபிஸில் நெட் இல்லை வீட்டுக்கு வந்த பிறகு நெட் பார்க்க அனுமதி இல்லை அதானால் அவரும் எழுதுவது இல்லை, அபி அப்பா எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை, சுட சுட விமர்சனம் எழுதும் பதிவர் பினாத்தல் சுரேஸும் கையில் அடிப்பட்டு எழுதுவது இல்லை என்னமோ தெரியவில்லை அமீர பதிவர்களுக்கு திருஸ்டி போல என்றேன்.

அதுக்கு அவர்... அவுங்க எல்லாம் எழுத தெரிஞ்சவங்க எழுதுல அதுல ஒரு நியாயம் இருக்கும் நீங்க ஏன் எழுதுல என்று கேள்வியபோட்டு என்னை சாச்சுபுட்டாரு!!!கடைசி போட்டோவில் புதுகை அப்துல்லா பக்கத்தில் இருப்பது யார் என்று சொல்பவர்களுக்கு இரவு கழுகு என்று பட்டமும் ஒரு டார்ச் லைட்டும் பரிசாக வழங்கப்படும்!

போட்டோவில் அப்துல்லா மட்டுமே இருக்கிறார் போன்ற பின்னூட்டங்கள் போடுபவர்கள் டரியள் ஆக்கபடுவீர்கள்!

குசும்பனை விசாரித்ததாக சொல்ல சொல்லி அப்துல்லாவிடம் சொல்லி அனுப்பிய ரமேஸ் வைத்யா, பரிசல் அவர்களுக்கு மிக்க நன்றி!