Sunday, December 21, 2008

இனியும் நான் எழுதனுமா?

வணக்கம் மக்களே போன பதிவுக்கும் இந்த பதிவுக்கும் போதிய இடைவெளி விட்டுவிட்டதாலும், பூஜ்ய கணக்கான ரசிகைகளிடம் இருந்து ஆயிரகணக்கான மெயில்களும், போன்களும் வந்ததாலும் இந்த பதிவு. சஞ்சய்,கார்க்கி இருவரும் ஆண்கள் என்பதால் இவர்கள் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளபடமாட்டாது!

சரி விசயத்துக்கு வருகிறேன் ஊரில் இருந்து ஒரு பதிவர் துபாய் வருகிறேன் என்றும் சொல்லி இருந்தார், அது போல் நேற்றுவந்ததும் போன் செய்தார் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு போனேன்.

போகிற வழியில் அவர் சொன்ன ஒரு ஜோக் அவரு படித்த கல்லூரியின் நிர்வாகி பேசியதை சொன்னார்.


மீ 4 டாட்டர், 2 டாட்டர் மேரீட், ரிமைனிங் 2 டாட்டர் போத் ஆர் கேர்ள்ஸ்!
(எனக்கு நான்கு பெண்கள், இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது, இருவருக்கு திருமணம் ஆக வில்லை இதுதான் அவர் சொல்ல வந்தது!)


பின் என்ன அண்ணாச்சி நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு ஏன் என்றார்?

நானும் நான் மட்டும் இல்லை ஆசிப் அண்ணாச்சி சின்ன புள்ள மாதிரி இப்ப எல்லாம் மலையாள படம் பார்க்க போய்விடுகிறார் இங்கு நடக்கும் உலக திரைப்பட விழாவுக்கு அதானால் அவரும் எழுதுவது இல்லை, அய்யனாருக்கு ஆபிஸில் நெட் இல்லை வீட்டுக்கு வந்த பிறகு நெட் பார்க்க அனுமதி இல்லை அதானால் அவரும் எழுதுவது இல்லை, அபி அப்பா எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை, சுட சுட விமர்சனம் எழுதும் பதிவர் பினாத்தல் சுரேஸும் கையில் அடிப்பட்டு எழுதுவது இல்லை என்னமோ தெரியவில்லை அமீர பதிவர்களுக்கு திருஸ்டி போல என்றேன்.

அதுக்கு அவர்... அவுங்க எல்லாம் எழுத தெரிஞ்சவங்க எழுதுல அதுல ஒரு நியாயம் இருக்கும் நீங்க ஏன் எழுதுல என்று கேள்வியபோட்டு என்னை சாச்சுபுட்டாரு!!!கடைசி போட்டோவில் புதுகை அப்துல்லா பக்கத்தில் இருப்பது யார் என்று சொல்பவர்களுக்கு இரவு கழுகு என்று பட்டமும் ஒரு டார்ச் லைட்டும் பரிசாக வழங்கப்படும்!

போட்டோவில் அப்துல்லா மட்டுமே இருக்கிறார் போன்ற பின்னூட்டங்கள் போடுபவர்கள் டரியள் ஆக்கபடுவீர்கள்!

குசும்பனை விசாரித்ததாக சொல்ல சொல்லி அப்துல்லாவிடம் சொல்லி அனுப்பிய ரமேஸ் வைத்யா, பரிசல் அவர்களுக்கு மிக்க நன்றி!

67 comments:

said...

மீ த பர்ஸ்ட்டூ !!!???

said...

ஹய்யோ நாந்தான் பர்ஸ்ட்டூ! :))

said...

அப்துல்லா தம்பி என்ன வாங்கி வரட்டும்ம்னு கேட்டுச்சு நானும் சொல்லியிருந்தேன் வாங்கினாரா என்னான்னு தெரியல நண்பா? :(

said...

//போட்டோவில் அப்துல்லா மட்டுமே இருக்கிறார்//
ரிப்பீட்டூஊஊஊஊஊஊஊஉ.....

said...

muthala antha torch light kuncham koodunga adichi parthutooo solrean...............

said...

மஞ்ச கலர் சட்டையும், செவப்பு கலர் பேண்டும் தெரியுது... ஆனா மேல கோட் இல்ல அதனால் பக்கத்துல இருப்பது குசுமபர் இல்லைனு மட்டும் தெரியுதுன்னு சொல்ல மாட்டேன்... ;)

said...

பிளைட் ஏறி தெடி வந்த ஆளுக்கு சபையர் கடை வடையும், சட்னியும் கொடுத்து ஏமாத்திட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;))

said...

சஞ்சய்க்கு அப்ப உண்மையிலேயே தலையில் முடி இருக்கு போல.. ;)))

said...

கடைசி போட்டோவில் யாருமே இல்லையே....அப்புறம் எப்படி சொல்லுறது???

said...

/தமிழ் பிரியன் said...

சஞ்சய்க்கு அப்ப உண்மையிலேயே தலையில் முடி இருக்கு போல.. ;)))/

தலைக்கு வெளில இருக்கிறதை பத்தி பேசுறதை விடுங்கப்பா....அவருக்கு தலைக்கு உள்ள நிறைய இருக்கு....:)

said...

/பூஜ்ய கணக்கான ரசிகைகளிடம் இருந்து ஆயிரகணக்கான மெயில்களும்/

பூஜா கணக்கான ரசிகைன்னு எழுத நினைச்சி...எதுக்கோ பயந்து பூஜ்ய கணக்கானன்னு எழுதிட்டார் போல...:)

said...

எழுத தெரிஞ்சவன் ;;))

Anonymous said...

அவ்வளோ பெரிய தட்டுல கொஞ்சூண்டு சாப்பாடுதான் இருக்கு. அப்துல்லா என்ன விரதமா.

said...

அந்த கடைசி படத்தை "நிழல்கள்" -PIT க்கு அனுப்பலாம்.:-)

said...

//"இனியும் நான் எழுதனுமா?"//

வேணாம்னு சொன்னா மட்டும் நடந்துடவா போகுது...

விடுங்க அண்ணாச்சி... எல்லாம் எங்க தலையெழுத்து... அதன் படி நடக்கட்டும் :)

said...

கடைசி படம் திகிலாக இருக்கு...

said...

அட நீங்க பெரிசா எழுதல்லாம் வேண்டாம் நாலு படத்தைப்போட்டு கீழ நச்சுன்னு ஒத்தவரியில் கமெண்ட் போட்டாலே பதிவு ஹிட்டாகிடுமே அதைத்தான் அப்படி சொல்லி இருப்பாரு ... ")

said...

அப்துல்லா அண்ணனை ரொம்ப கேட்டதாக சொல்லுங்க... பத்திரமா பாத்துக்கோங்க... :)

said...

ஓ பதிவர் மாநாடா?

குசும்பன் தம்பி நீங்க பதிவு எழுதாததுக்கு ஆணி தான் காரணம்னு நினைச்சு நானே சமாதனப்பட்டுக்கிட்டேன்.
தயவு செஞ்சு நிறைய எழுதுங்க :-):-):-)

said...

யொவ் அது நீ தான்.

அப்ப நான் தான் இரவுக்கழுகு...

said...

யோவ் என்னை ஏன்யா வம்பிழுக்கறிங்க? :(

said...

என்னாது கடைசி போட்டோல 2 பேர் இருக்கிங்களா? அதுகுள்ள ஒரு போட்டோ தானே இருக்கு.. நிஜ மனுஷங்க யாரும் இல்லையே.. :)

said...

அப்துல் மாமா மஞ்சு அக்கா சமையல் சூப்பரா? இருககாதா பின்ன.. குசும்பன் வயிறு கொசு கடிச்ச வீங்கினது மாதிரி இல்லாம பெருச்சாலி கடிச்சி வீங்கின மாதிரி இருக்கும் போதே தெரியுதே.. :)

said...

//சரி விசயத்துக்கு வருகிறேன்//
அப்போ இன்னும் வரலியா? :)

said...

//மீ 4 டாட்டர், 2 டாட்டர் மேரீட், ரிமைனிங் 2 டாட்டர் போத் ஆர் கேர்ள்ஸ்!(எனக்கு நான்கு பெண்கள், இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது, இருவருக்கு திருமணம் ஆக வில்லை இதுதான் அவர் சொல்ல வந்தது!)//

இந்த மாதிரி மேட்டர் எல்லாம் உங்களுக்கு தான் மாமா நல்லா புரியுது.. :))

said...

//துபாய் வருகிறேன் என்றும் சொல்லி இருந்தார், அது போல் நேற்றுவந்ததும் போன் செய்தார்//

அதானா.. யார்னா ஓசில சோறு போடறாங்கன்னு தெரிஞ்சா தான் நாங்க ஊர்ல வந்து எறங்கினதும் போன் போடுவமே :))

said...

இனிமேதான் நீங்க நிறைய எழுதணும்... ஏன்னா எங்களுக்கு போரடிக்குதல்லா...

said...

//அவுங்க எல்லாம் எழுத தெரிஞ்சவங்க எழுதுல அதுல ஒரு நியாயம் இருக்கும் நீங்க ஏன் எழுதுல என்று கேள்வியபோட்டு என்னை சாச்சுபுட்டாரு!!! //

உண்மைய சொன்னா சாச்சிபுட்டாரு வேச்சிபுட்டாருன்னு.. :)

said...

//"இனியும் நான் எழுதனுமா?"//
தலைப்பை இப்போ தான் பார்த்தேன்..

மீன் சாப்ட்டா - கண்ணுக்கு நல்லது..
சாப்டலைன்னா - மீனுக்கு நல்லது..

நாங்கல்லம் மீன் தானே மாமா? :))

said...

//குசும்பனை விசாரித்ததாக சொல்ல சொல்லி அப்துல்லாவிடம் சொல்லி அனுப்பிய ரமேஸ் வைத்யா, பரிசல் அவர்களுக்கு மிக்க நன்றி!//

அவங்க 2 பேரும் இந்த பக்கம் வர மாட்டாங்கன்ற தைரியத்துல சொல்லி இருக்கிங்க போல.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. :)

said...

/தலைக்கு வெளில இருக்கிறதை பத்தி பேசுறதை விடுங்கப்பா....அவருக்கு தலைக்கு உள்ள நிறைய இருக்கு....:)//

அட ரொம்ப நல்லவரே.. வெளிய இருக்க வேண்டியதெல்லாம் உள்ள இருக்குன்னு சொல்லாம சொல்றிங்களா? நல்லா இருங்க சாமி.. :(

said...

ஆயிலு நீங்களேதான் பர்ஸ்ட்!

ஆயில்யன் said...
அப்துல்லா தம்பி என்ன வாங்கி வரட்டும்ம்னு கேட்டுச்சு நானும் சொல்லியிருந்தேன் வாங்கினாரா என்னான்னு தெரியல நண்பா? :(//

ஆமாம் ஒரு கிலோ எலிபுலுக்கை முட்டாய் வாங்கினார் அது உங்களுக்காகதான் இருக்கும்
********************************
சந்தோஷ் அடுத்த முறை வரும் பொழுது இன்னும் அதிகமாக கவனிக்கபடுவாய்!
**************************
Busy அய்யா போட்டியில் குளூவோ, அல்லது டார்ச் லைட்டோ கொடுக்கபடமாட்டாது:)))
***************************
தமிழ்பிரியன் சபையர் கடை பார்சல் எல்லாம் இல்லை எங்க வீட்டு ஆய்வு கூடத்தில் செய்தவை அனைத்தும்!
****************************
தமிழ் பிரியன் said...
சஞ்சய்க்கு அப்ப உண்மையிலேயே தலையில் முடி இருக்கு போல.. ;)))//

ஹி ஹி கட்டாந்தரையில் கூட ஒன்னு இரண்டு புல்லு முளைச்சு இருக்கும் பார்த்தது இல்லையா!
********************************

said...

நிஜமா நல்லவன் said...
கடைசி போட்டோவில் யாருமே இல்லையே....அப்புறம் எப்படி சொல்லுறது???//

பாதி டேமேஜ் அப்துல்லாவுக்கும் என்பதால் தாங்கிக்கிறேன்!

*****************************
நிஜமா நல்லவன் said...
/பூஜ்ய கணக்கான ரசிகைகளிடம் இருந்து ஆயிரகணக்கான மெயில்களும்/

பூஜா கணக்கான ரசிகைன்னு எழுத நினைச்சி...//

பூஜோ செம செக்ஸி பிகருன்னு சொல்லி வாங்கியதே போதும் சாமி!
**************************
கோபிநாத் said...
எழுத தெரிஞ்சவன் ;;))//

நன்றி அண்ணே நானும் மாதம் ஒரு பதிவு எழுதும் உங்களை போல் ஆகிடுவேன் போல இருக்கு!
******************************
சின்ன அம்மிணி said...
அவ்வளோ பெரிய தட்டுல கொஞ்சூண்டு சாப்பாடுதான் இருக்கு. அப்துல்லா என்ன விரதமா.//

சரியாவே சாப்பிட மாட்டேங்கிறார் திடிர் என்று வந்ததால் கொஞ்சமாதான் கவனிக்க முடிஞ்சுது:)) மெனுவை அவரே சொல்லுவார்!

said...

வடுவூர் குமார் said...
அந்த கடைசி படத்தை "நிழல்கள்" -PIT க்கு அனுப்பலாம்.:-)//

ஆஹா இப்படிவேற கிளம்பிட்டீங்களா?

***********************

நாகை சிவா said...
//"இனியும் நான் எழுதனுமா?"//

விடுங்க அண்ணாச்சி... எல்லாம் எங்க தலையெழுத்து... அதன் படி நடக்கட்டும் :)//

ரைட்டு ரொம்ப நொந்து போய் இருக்கீங்க போல...இனி அப்ப தினம் ஒரு பதிவு எழுதிட வேண்டியதுதான்!
****************************
VIKNESHWARAN said...
கடைசி படம் திகிலாக இருக்கு...//

அடிங்க!
***************************
முத்துலெட்சுமி-கயல்விழி said...
பதிவு ஹிட்டாகிடுமே அதைத்தான் அப்படி சொல்லி இருப்பாரு ... ")//

அவ்வ் அப்படி எல்லாம் அதில் ஒரு மீனிங் கண்டுபிடிக்க முடியுமா?
******************************

said...

கடேசி போட்டாவுல ஒரு சட்டை மட்டும் இருக்கே, யாருது>?

said...

Mahesh said...
அப்துல்லா அண்ணனை ரொம்ப கேட்டதாக சொல்லுங்க... பத்திரமா பாத்துக்கோங்க... :)//

ரைட்டுங்க சொல்லிடுறேன்!
******************************
கபீஷ் said...
ஓ பதிவர் மாநாடா?

குசும்பன் தம்பி நீங்க பதிவு எழுதாததுக்கு ஆணி தான் காரணம்னு நினைச்சு நானே சமாதனப்பட்டுக்கிட்டேன்.
தயவு செஞ்சு நிறைய எழுதுங்க :-):-):-)//

ரைட்டுங்க , ஆனா நிறைய எழுதுங்கன்னு சொல்லிட்டு பின்னாடி ஒரு சிரிப்பான் போட்டு இருக்கீங்களே அங்கதான் ஒரு மைல்டா ஒரு டவுட்டுங்கோ!!!

said...

//ரைட்டுங்க , ஆனா நிறைய எழுதுங்கன்னு சொல்லிட்டு பின்னாடி ஒரு சிரிப்பான் போட்டு இருக்கீங்களே அங்கதான் ஒரு மைல்டா ஒரு டவுட்டுங்கோ!!!//

ஹலோ, நீங்க பதிவு எழுதுன சந்தோஷத்துல போட்ட சிரிப்பான். நோ டவுட்டிங் ப்ளீஸ் :-):-)(இந்த சிரிப்பான் ச்சும்மா லுலுலாயிக்கு)

said...

செந்தழல் ரவி said...
யொவ் அது நீ தான்.

அப்ப நான் தான் இரவுக்கழுகு...//

அவ்வ்வ்வ்வ்வ் இந்த விளாயாட்டுக்கு நான் வரல:))))

***************************
பொடியன்-|-SanJai said...
யோவ் என்னை ஏன்யா வம்பிழுக்கறிங்க? :(//

சும்மா ஒரு டைம் பாஸ்க்கு!

*************************
பொடியன்-|-SanJai said...
குசும்பன் வயிறு கொசு கடிச்ச வீங்கினது மாதிரி இல்லாம பெருச்சாலி கடிச்சி வீங்கின மாதிரி இருக்கும் போதே தெரியுதே.. :)//

தெரியும் தெரியும் வெண்பூ ஒரு மாசம் லீவ் என்ற தைரியத்தில் இப்படி எல்லாம் பேசுறீங்க!
****************************
இந்த மாதிரி மேட்டர் எல்லாம் உங்களுக்கு தான் மாமா நல்லா புரியுது.. :))//

எல்லா ”மேட்டரும்” புரியனும்:)
****************************
ஹி ஹி ஆய்வு கூடத்தில் டெஸ்டிங்குக்கு எலிக்கு கூட ஓசியிலதான் ஊசி போட்டு டெஸ்ட் செய்யுவாங்க!

said...

உண்மைதான் நானும் கவனிச்சேன் அண்ணாச்சி பண்புடன் தள வேலைகள் மட்டும்தான் கவனினக்கிறார் நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதிய பதிவு வாரணம் ஆயிரம் பதிவென்று நினைக்கிறேன்...

said...

அபி அப்பாவை காணவே இல்லை...

said...

தமிழ் பிரியன் said...
\\
மஞ்ச கலர் சட்டையும், செவப்பு கலர் பேண்டும் தெரியுது... ஆனா மேல கோட் இல்ல அதனால் பக்கத்துல இருப்பது குசுமபர் இல்லைனு மட்டும் தெரியுதுன்னு சொல்ல மாட்டேன்... ;)
\\

அண்ணே இதுக்கு நீங்க குசும்பன்னே சொல்லி இருக்கலாம்...:))

said...

பொடியன்-|-SanJai said...
\\
யோவ் என்னை ஏன்யா வம்பிழுக்கறிங்க? :(
\\
ஒரு "டெரரா" இருக்கட்டுமேன்னுதான்..:)

said...

கடைசி போட்டோவைப்பத்தியா....


..................

.........................

.............................


நான் எதுவம் பேச விரும்பல...:)

said...

அப்துல்லா தம்பியா அது..? கொஞ்சம் கலராயிட்டாரு போல தெரியுது..

பக்கத்துல யாரு காக்கா கலர்ல.. அட குசும்பனா அது..? கல்யாணத்துக்கு அப்புறமா எல்லாரும் கலராயிருவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இது என்ன உல்டாவா இருக்கு..

குசும்பா என்னாச்சு..? காந்தி சிலை மீட்டிங்குக்கு பவுடரை அப்பிட்டு வந்து ஏமாத்திட்டியோ..?

Anonymous said...

குசும்பு........... :)

said...

:-)))...

எனக்கு மெய்யாலுமே ஒண்ணுமே புரியலயே....

said...

அப்துல்லாஹ்ஜி..ஏன்பா அங்கே போனீங்க ? இங்கே வரவேண்டியதுதானே ? :)
தட்டு நிறையக் கொடுத்திருப்பேன் ல :)

said...

// சின்ன அம்மிணி said...
அவ்வளோ பெரிய தட்டுல கொஞ்சூண்டு சாப்பாடுதான் இருக்கு. அப்துல்லா என்ன விரதமா.

//

என்னா..து கொஞ்சூண்டாஆஆஆஆஆ?
அக்கா தொண்டை வரைக்கும் சாப்பாடு போட்டு மூச்சுவுட முடியாம கொல்லப்பாத்தான்க்கா அந்த ஆளு. மொதல்ல கேரட் அல்வா.அப்புறம் கார அப்பம்.அப்புறம் இனிப்பு அப்பம்.அப்புறம் இட்லி பிரை. அப்புறம் பூரி. அதுக்கப்புறம் என்னவோ பத்தூதாவோ கத்தூதாவோ. இதோட விட்டாங்கடா சாமின்னு பார்த்தா மசாலா பால் வேற குடிக்க வைக்கப்பாத்தாரு குசும்பரு. போய்யா நீயும்...னு ஓடி வந்துட்டேன்.( எங்க ஓடி வந்தேன் தின்ன தீனிக்கு உருண்டுல்ல வந்தேன்)
:)

said...

// கபீஷ் said...
ஓ பதிவர் மாநாடா?

//

மானும் ஆடல...மயிலும் ஆடல. குசும்பர்தான் ஆடுனாரு :))

said...

என்ன?????????அப்துல்லா கேப்டன் கட்சியில சேர்ந்திட்டரா? கேப்டனும் இளச்சு போய்ட்டாரு.. படத்துல பாவமா இருக்காரு..

said...

மிக்க மகிழ்ச்சி... அப்துல்லாவின் டி-சர்ட் மூலமாக நானும் உங்களை சந்தித்ததில்!

குசும்பா.. நீங்க இவ்ளோ அழகா..?

said...

ஏன் அப்துல்லா அண்ணே பக்கத்தில சட்டைய தொங்கவிட்டு இரண்டு மூணு போட்டோ எடுத்திருக்கீங்க.....

said...

ச்சின்னப் பையன் said...
இனிமேதான் நீங்க நிறைய எழுதணும்... ஏன்னா எங்களுக்கு போரடிக்குதல்லா...//

இது என்னய்யா செந்தில் கவுண்டரிடம் அண்ணே நீங்க வாசிங்க நான் தூங்கனும் என்பது போல் இருக்கு..:(((
******************************
ILA said...
கடேசி போட்டாவுல ஒரு சட்டை மட்டும் இருக்கே, யாருது?//

ம்ம் காந்தி தாத்தா கடைசியா போட்ட சொக்கா அது:)
*******************************
கபீஷ் said...
ஹலோ, நீங்க பதிவு எழுதுன சந்தோஷத்துல போட்ட சிரிப்பான். நோ டவுட்டிங் ப்ளீஸ் :-):-)(இந்த சிரிப்பான் ச்சும்மா லுலுலாயிக்கு)//

கன்பார்ம் ஆயிடுச்சு:):)
******************************
தமிழன்-கறுப்பி... said...
நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதிய பதிவு வாரணம் ஆயிரம் பதிவென்று நினைக்கிறேன்...//

ஆமாம் இப்ப எல்லாம் எப்ப போன் செஞ்சாலும் அண்ணாச்சி பிஸிதான்.
********************************
தமிழன்-கறுப்பி... said...
நான் எதுவம் பேச விரும்பல...:)//

நீங்க ரொம்ப நல்லவர்!
*********************************
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அப்துல்லா தம்பியா அது..? கொஞ்சம் கலராயிட்டாரு போல தெரியுது..// அப்துல்லா தம்பி எல்லாம் இல்லை அப்துல்லாவேதான்!

பக்கத்துல யாரு காக்கா கலர்ல.. அட குசும்பனா அது..? கல்யாணத்துக்கு அப்புறமா எல்லாரும் கலராயிருவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. //

கல்யாணத்து கணவில் ஒருவேளை கலர் ஏறி இருக்கும்:)))
//இது என்ன உல்டாவா இருக்கு..

குசும்பா என்னாச்சு..? காந்தி சிலை மீட்டிங்குக்கு பவுடரை அப்பிட்டு வந்து ஏமாத்திட்டியோ..?//

ஹி ஹி உங்களை ஏமாத்தி என்ன அண்ணே ஆக போவுது அல்ரெடி ஒரு பொண்ணை ஏமாத்தியாச்சு:)))
******************************
நன்றி கவின்
******************************
விஜய் ஆனந்த் இப்ப எல்லாம் ஒன்னுமே சொல்வது இல்லை ரொம்ப உசாராயிட்டீங்க!!!
*****************************
புதுகை.அப்துல்லா என்ன நீங்க நானும் கேரட் அல்வான்னு சொல்லிட்டு மனைவியிடம் வாங்கிய திட்டை பார்த்தீங்கள்ள கேரம் முந்திரி அல்வா அப்படி சொல்லனும் ரைட்டா!!!

அப்புறம் கார அடைய சொல்லவே இல்ல:) ஓ அது என்ன பேருன்னு தெரியலையோ:)))) வாங்க அடுத்த முறை கவனிக்கிற கவனிப்புல:......:)
*****************************
அப்துல்லா கேப்பட கட்சியிலயா அப்ப கேப்டன் எந்த கட்சியில்?:)))
***************************
பரிசல்காரன் said...
குசும்பா.. நீங்க இவ்ளோ அழகா..?//

மூடி போட்டு வெச்சு இருக்காங்க, வெளியே தெரியுல் கால் வெளிச்சத்தில் படிச்சு பல பேர் பாஸ் ஆகி இருக்காங்க!:))))
****************************
நான் ஆதவன் said...
ஏன் அப்துல்லா அண்ணே பக்கத்தில சட்டைய தொங்கவிட்டு இரண்டு மூணு போட்டோ எடுத்திருக்கீங்க.....//

ஷார்ஜாவில் தானே இருக்கீங்க வாங்க உங்களை தொங்கவிட்டு எடுத்துடலாம்:)))

said...

//ஒரு டார்ச் லைட்டும் பரிசாக வழங்கப்படும்!//

குசும்பன் கண்டுபிடிக்கவே டார்ச் வேண்டும், சோ முதல்ல கொடுங்க அப்புறம் கண்டுபிடிச்சு கொல்றோம்.. சாரி சொல்றோம்..!!

said...

//குசும்பா என்னாச்சு..? காந்தி சிலை மீட்டிங்குக்கு பவுடரை அப்பிட்டு வந்து ஏமாத்திட்டியோ..?//

:))))))))) உண்மைத்தமிழன் !! நீங்களும் பார்த்து நம்பீட்டீங்களா?

said...

குசும்பன் ஏன் கலர் கேமரா இல்லையா?..படம் black & white ல இருக்கு....

அப்புறம் உங்க வாய்க்கு கீழே தாடி மாதிரி ஏதோ கருப்பா இருக்கு.... எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா அந்த இருட்டுல (சத்தியமா உண்மையான இருட்டை தான் சொல்றேன்)
எனக்கு தான் டார்ச் லைட் பரிசு....

said...

கடைசி போட்டாவை இந்த மாத PIT போட்டிக்கு அனுப்பியிருக்கலாம்

said...

அப்துல்லா அண்ணே சீக்கிரம் வாங்க நமக்கு ஒரு முக்கியமான வேலை காத்துகிட்டு இருக்கு

said...

59

said...

60

said...

ஹாய்,
குசும்பன், ஹவ் ஆர் யூ?

said...

//மொதல்ல கேரட் அல்வா.அப்புறம் கார அப்பம்.அப்புறம் இனிப்பு அப்பம்.அப்புறம் இட்லி பிரை. அப்புறம் பூரி. அதுக்கப்புறம் என்னவோ பத்தூதாவோ கத்தூதாவோ. இதோட விட்டாங்கடா சாமின்னு பார்த்தா மசாலா பால் வேற குடிக்க வைக்கப்பாத்தாரு குசும்பரு//

ஆக மொத்தத்துல மஞ்சுக்கு தெரிஞ்ச எல்லா சமையலையும் உங்கள வச்சி சோதனை பண்ணி பார்த்திருக்கு.. ;)

குசும்பா.. எலி நல்லா கொழுகொழுன்னு தான் இருக்கு.. டெஸ்ட் ஓகே.. :))

said...

உண்மையிலேயே ரொம்ப குசும்பு

said...

சாப்பிடுற மாதிரி போட்டோ போடக்குடாதுன்னு ஏதாச்சும் சட்டம் போடணும்ப்பா..

said...

மேலும் இதுவரை யாரும் எனக்கு டீஷர்ட் பரிசாக தந்ததில்லை என அறிவிக்கிறேன்.

said...

உலகம் சுற்றும் வாலிபன் அப்துல்லா ரசிகர் மன்றம்...!
புதுக்கோட்டை கிளையிலிருந்து இதோ ஒரு பூங்கொத்து !

அவர் கேட்ட அந்தக்கேள்விக்காக !!!!

:))))))))))))))

said...

:)