நேற்று அய்யனார் விசா மாற்றும் விசயமாக இந்தியா செல்ல இருப்பதால் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதா என்று கேட்க்க அவருக்கு போன் செய்தால் ஆபிஸ் மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்தது, சரி மொபைலை ஆபிஸில் கொடுத்துவிட்டார் போல இருக்கு என்று நினைத்து அவருடைய பழய மொபைலுக்கு போன் செய்தால் ஒரு பெண் எடுத்து ஹலோ என்றது அட என்ன இது மனைவியும் இங்கு வரவில்லை குரலும் பிலிப்பைன் தேசத்து அழகி குரல் போல இருக்கே! அடடா அடர்கானக புலி அங்க உலாவுதோ என்று ஒரு டவுட் வந்தது, அதனால் ஹலோ அய்யனார் இருக்காரா என்று கேட்டதுதான் தாமதம்...
#### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** #### @@@@@@ ***** இப்படி கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுச்சு அட என்ன ஏதுன்னே சொல்லாம இப்படி திட்டினா எப்படி சொல்லிட்டு திட்டுன்னு கேட்டா இனி எவனாவது போன் செஞ்சிங்க அய்யானார் இருக்காரான்னு போலீஸ்க்கு போவேன் என்று சொல்லிட்டு கட் செஞ்சுட்டு.
நான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு சீரிய கொள்கையோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் ஆள். எப்படி இதை அப்படியே விட்டு விடுவது.
உடனே அபி அப்பாவுக்கு போன் போட்டு என்ன அபி அப்பா நம்ம தோஸ்த் ஒருத்தர் ஊருக்கு போறார் அவரைவழி அனுப்பதான் போக முடியாது அட்லீஸ்ட் போன் செஞ்சாவது பேசலாம்ல்ல என்று கேட்க பழய நம்பர் கொடுப்பா என்று அபி அப்பா கேட்க , முன்பு அவர் வைத்து இருந்த நம்பர் தான் என்று சொல்ல சரி செய்கிறேன் என்றார்.
கொஞ்ச நேரம் கழித்து அபி அப்பா என்ன குசும்பா வேற யாரோ எடுக்கிறாங்க என்ன விசயம் என்று கேட்க, அதை எல்லாம் விடுங்க இப்படி இப்படி எல்லாம் திட்டினாங்களா என்று என்னிடம் இருந்த லிஸ்டை வைத்து சரிபார்த்து கேட்க அவரோ ச்சே ச்சே அவுங்க அப்படி யாரும் இல்லை என்று சொல்லிட்டு வெச்சுட்டாங்க என்று சொன்னார். எங்களுக்கா தெரியாது அந்த அம்மணி எப்படி திட்டி இருக்கும் என்று.
இது சரியாவராது திட்டும் வாங்கனும் வாங்கிய திட்டை அப்படியே சொல்லவும் செய்யனும் அப்படி யாரு மாட்டுவா என்று யோசிக்க
உடனே நினைவுக்கு வந்தவர் சென்ஷி.
சென்ஷிக்கு போன் போட்டேன் ஏற்கனவே சென்ஷி என்னிடம் இருந்து வாங்கிய ஆப்பினால் இரண்டு நாட்கள் மொபைலை தொடாமலேயே இருந்தார். அதனால் எப்பொழுதும் நான் போன் செஞ்சாலே உசாரா இருப்பதாக அவருக்கு ஒரு நினைப்பு . அதனால் இந்த முறை வேறு முறையில் டீல் செய்யனும் என்று...
இனி பேசியது அப்படியே!!
நான்: டேய் நீ எல்லாம் ஒரு பிரண்டா?
சென்ஷி: ஏன் மச்சான் திட்டுற? ஏன்?
நான்: நம்ம ஆளு ஒருத்தன் ஊருக்கு போறார், அதுவும் விசா கேன்சல் செஞ்சுட்டு, ஒருத்தராவது போன் செஞ்சு அவரிடம் பேசினீங்களா? அப்படி என்னய்யா தப்பு செஞ்சார்? பின் நவீனத்துவ கவிதை, கதை எழுதினா தப்பா என்று கேட்க?
சென்ஷி: இல்லடா மச்சான் கோவ படதா, அவரு மொபைலை ஆபிஸில் சரண்டர் செஞ்சுடுவேன் என்றார் அதான் செய்யவில்லை!
நான்: ஏன் உன்னிடம் அவரு பழய நம்பர் இல்லையா? அதுக்கு செய்வது என்று கேட்க?
சென்ஷி: ஆமாண்டா மச்சான் இருக்குடா, மச்சான் அப்ப அப்ப நீ சில நல்ல காரியம் செய்யுறடா! ரொம்ப தேங்க்ஸ்டா, உன்னை போய் நான் தப்பா நினைச்சிட்டேன் டா!
நான் : சரி சரி என்னிடம் பேசி டைத்தை வேஸ்ட் செய்யாத அய்யனாரிடம் பேசு என்றேன்.
(கொஞ்சம் நேரம் கழித்து)
சென்ஷி: டேய் மச்சான் நம்பர் சரிதானே போனை எடுக்கவே மாட்டேங்கிறார், இதோட மூன்று முறை செஞ்சுட்டேன் ?
நான்: பேக்கேஜ் செக்கிங் செஞ்சுக்கிட்டு இருப்பார், கொஞ்ச நேரம் கழித்து முயற்சி செய்! (அப்பொழுது அய்யனார் வீட்டில் படுத்து இருந்த விசயத்தை சொல்லவே இல்லை).
சென்ஷி: சரி டா மச்சார், அப்படியே கோபி நம்பரையும் அவருக்கு மெசேஜ் செஞ்சுடுறேன் !
நான்: முடிஞ்சா கோபியையும் பேச சொல்!
சென்ஷி: சரிடா மச்சா பேசிட்டு அப்புறம் பேசுறேன்.
ஒரு 20 நிமிடம் கழித்து சென்ஷியிடம் இருந்து போன்.
சென்ஷி: ஹலோ! ஏன் டா ஏன்?
நான்: இது இது எல்லாம் வாங்கினீயா? (லிஸ்டை சரி பார்த்தேன்) நான் வாங்காததும் அதில் இருந்தது.
சென்ஷி: டேய் நான் திட்டுவாங்கினது கூட பெருசா தெரியலை, அந்த நம்பரில் இருந்து போன் வந்துச்சு பாவம் ஊருக்கு போறவன் எதுக்கு காசை வேஸ்ட் செய்யனும் என்று கால் கட் செஞ்சுட்டு, நான் என் மொபைலில் இருந்து போன் போட்டு திட்டுவாங்கினேன் டா!
நான்: ஏன்னா நீ ரொம்ப நல்லவன் என்று சொல்ல.
அப்ப அழுதுக்கிட்டே போனை வெச்சுட்ட சென்ஷியிடம் பேச திரும்ப போன் செஞ்ச்சாலே எடுக்க மாட்டேங்கிறார், அழுதுக்கிட்டு இருக்கார் யாராவது போன் போட்டு ஆறுதல் சொல்லுங்களேன்:) சென்ஷி நம்பர் யாருக்கும் வேண்டும் என்றால்என்னை தொடர்பு கொள்ளவும்!
(கடைசிவரை அய்யனார் புது நம்பர் என்னிடம் இருந்தது சென்ஷிக்கு தெரியாது, தெரிஞ்சா ரொம்ப பீல் செய்வார்)