Sunday, September 7, 2008

சரோஜாதேவி மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்!!!

இப்படி ஒரு பதிவை எழுதவே கஷ்டமாகதான் இருக்கு என்ன செய்ய நேற்று தோசை சுடும் பொழுது தோசைகல் விரலில் சுட்டுவிட்டது.

நேற்று சக பதிவர் ஆட்டோ சங்கர் பதிவில் இரவு சுந்தரிகள் பட விமர்சனம் இருந்ததைகண்டு அவரது பதிவை படிக்கப்போனேன். ஷகீலா அவ்வளோவாக திறமை காட்டவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தார், அதை நினைத்து வருத்தப்பட்டேன்.

அவரது பிளாக்கின் ஓரத்தில் இருந்த &@#@#@@# என்றோரு மேட்டர் படத்தை போட்டிருந்தார், எனக்கு அதை பார்க்கும் ஆவல் அதிகரிக்கவே, க்ளிக்கிப்பார்த்தேன். என்னுடையது உண்மைதமிழன் வைத்து இருக்கும் மானிட்டர் போன்றது ஒன்னுமே சரியாக தெரியவில்லை ஆகையால் எங்கு LCD பிளாட் ஸ்கிரீன் இருக்கு என்று தேடி அலைந்து சஞ்சய் வீட்டுக்கு சென்றேன், அங்கு ஏற்கனவே அது ஓப்பன் ஆகி இருந்தது, திரும்ப முதலில் இருந்து ஓடவிட்டு பார்க்கும் பொழுதே என்னால் உட்காரமுடியவில்லை.

அது 1979ல் வந்த சரோஜாதேவி புத்தகத்தின் காவிய படைப்பான சசியின் இரவுகள் அப்பட்டமான காப்பி என்று தெரிந்தது.

அப்படியே அச்சு அசலாக காப்பி அடித்து இருக்கிறார்கள், இதில் கொடுமையின் உச்சக்கட்டமாக காஸ்டியூம் டிசைனிங் ஆட்டோ சங்கர் என்று போட்டு இருந்தது, எங்கேயாவது காஸ்டியூம் இருக்கா அல்லது எங்கேயாவது சரோஜா தேவி பெயர் வருகிறதா என்று பார்க்கவே திரும்பி திரும்பி அதை பத்து முறை பார்த்தேன். (நம்புங்கப்பா அதுக்காகவேதான்திரும்ப திரும்ப பார்த்தேன்).

சரோஜாதேவி புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த புத்தகம் இன்றும் என்னிடம் இருக்கிறது அவ்வளோ அருமையான புத்தகத்தை படமாக்கி இருக்கிறார்களே நன்றி என்று ஒருவார்த்தை போடவில்லையே என்ன செய்யலாம்? டவுன் லோட் செய்து வீட்டில் போய் பார்கலாமா என்று டவுன் லோட் செய்யப்பார்த்தேன் முடியவில்லை, அதனால் நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை.சரி நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு படத்தில் நடிக்கதான் முடியுமா? அல்லது எடுக்கத்தான் முடியுமா என்ற விரக தீயில் அவருக்கு ஒரு பின்னூட்டம்போட்டேன் அந்த வீடியோவை எனக்கு அனுப்பமுடியுமா என்று?

இரவு திரும்ப வந்து பார்த்தால் அந்த பின்னூட்டமும் நீக்கப்பட்டு இருந்தது, அதைவிட கொடுமையாக அந்த படமும் நீக்கப்பட்டு இருந்தது.

ஆட்டோ சங்கர் ஏன் அந்த பின்னூட்டத்தையும் , படத்தையும் நீக்கவேண்டும்?
(ஆட்டோ சங்கர் பெயர் காரணம் : எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஆட்டோவில் வைத்து காலி செய்வது என்பதால் நான் எங்கும் கேள்வி கேட்கவில்லை!)

பிற்ச்சேர்கை: பதிவு காமத்தை லைட்டாக டச் செய்வதால் பதிவுலநீதிபடி இந்த பதிவை ஆசான் ஜ்வோராம் சுந்தருக்கு டெடிக்கேட் செய்கிறேன்.
(சும்மாச்சுக்கும் தான் எழுத்துகலர் நீலம்:)))

79 comments:

Anonymous said...

என்னடா இன்னும் யாரும் எதிர்வினை போடவே இல்லியேன்னு நெனச்சேன். உங்களுக்கு 100 ஆயுசு

Anonymous said...

ஸ்க்ரீன் சாட் என்னாச்சுப்பா?

said...

//நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு படத்தில் நடிக்கதான் முடியுமா? //

ஏன் ஏதாவது டெக்னிகல் டிஃபிகல்டியா? டாக்டர் நாராயண ரெட்டியை பாருங்க சரியா போயிடும்.

said...

பரிசல் உங்க ராசி என்ன? அந்த ராசிக்காரர்கள் எல்லாம் சில நாட்களுக்கு பதிவு எழுதாமல் இருப்பது நல்லது... கலக்கல் தல... டா டா து கி கா... (இதுக்கு விளக்கம் வேண்டுபவர்கள் 500 ரூபாய்க்கு டிடி எடுத்து என் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்)

said...

ம்ம்.. திங்க கிழமை இப்பிடி ஆரம்பிக்குதா பரிசலாருக்கு,,

நர்சிம்

said...

//Your comment has been saved and will be visible after blog owner approval. //

என்ன கொடுமை சார் இது? ஊர்ல இருக்குற எல்லா வலைப்பூலயும் கும்மி அடிக்கிற குசும்பன் வலைப்பூல இப்படியா?

said...

எதிர்பதிவு ???

said...

செம சூடு..

said...

//அது 1979ல் வந்த சரோஜாதேவி புத்தகத்தின் காவிய படைப்பான//

அடப்பாவி அப்பலயிருந்தே படிக்கிறயா? உனக்கு வயசு 30க்குள்ளாறான்னு நெனச்சிட்டு இருந்தேனே??

said...

//சஞ்சய் வீட்டுக்கு சென்றேன், அங்கு ஏற்கனவே அது ஓப்பன் ஆகி இருந்தது, //

ஒரு குருப்பாத்தான் திரியிரீங்க...

said...

////நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு படத்தில் நடிக்கதான் முடியுமா? //

ஏன் ஏதாவது டெக்னிகல் டிஃபிகல்டியா? டாக்டர் நாராயண ரெட்டியை பாருங்க சரியா போயிடும்.

//

:):):):):)

said...

//
சரோஜாதேவி புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த புத்தகம் இன்றும் என்னிடம் இருக்கிறது //

உங்க வீட்டு போன் நம்பர் என்னங்க?

said...

////அது 1979ல் வந்த சரோஜாதேவி புத்தகத்தின் காவிய படைப்பான//

அடப்பாவி அப்பலயிருந்தே படிக்கிறயா? உனக்கு வயசு 30க்குள்ளாறான்னு நெனச்சிட்டு இருந்தேனே??

//

:):):):):)

said...

//சின்ன அம்மிணி said...
என்னடா இன்னும் யாரும் எதிர்வினை போடவே இல்லியேன்னு நெனச்சேன். உங்களுக்கு 100 ஆயுசு
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்!

said...

//வெண்பூ said...
//அது 1979ல் வந்த சரோஜாதேவி புத்தகத்தின் காவிய படைப்பான//

அடப்பாவி அப்பலயிருந்தே படிக்கிறயா? உனக்கு வயசு 30க்குள்ளாறான்னு நெனச்சிட்டு இருந்தேனே??
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

said...

//வெண்பூ said...
//சஞ்சய் வீட்டுக்கு சென்றேன், அங்கு ஏற்கனவே அது ஓப்பன் ஆகி இருந்தது, //

ஒரு குருப்பாத்தான் திரியிரீங்க...
//

:)))))))))))))

said...

வெண்பூ உங்களுக்காக மாடுரேசன் நீக்கப்பட்டு இருக்கிறது.

said...

//குசும்பன் said...
வெண்பூ உங்களுக்காக மாடுரேசன் நீக்கப்பட்டு இருக்கிறது.
//

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லேட்டஸ்ட் சரோஜாதேவி புத்தகத்தை அண்ணன் தொழிலதிபர் சஞ்சய்காந்து அவர்கள் குசும்பனுக்கு அனுப்பி வைப்பார்.

said...

//உண்மைதமிழன் வைத்து இருக்கும் மானிட்டர் போன்றது //

பணால் ஆனதுலதான் ஒண்ணுமே தெரியாதே அதுல என்னத்த மேட்டர் படத்த பாத்த???

said...

//திரும்ப முதலில் இருந்து ஓடவிட்டு பார்க்கும் பொழுதே என்னால் உட்காரமுடியவில்லை.//

இப்படியா பப்ளிக்கா சொல்லுவாங்க????

said...

//காஸ்டியூம் டிசைனிங் ஆட்டோ சங்கர் என்று போட்டு இருந்தது, எங்கேயாவது காஸ்டியூம் இருக்கா அல்லது எங்கேயாவது சரோஜா தேவி பெயர் வருகிறதா//

மேட்டர் படத்துல சரோஜா தேவி பேரை போட்டா சரோஜாதேவி கேஸ் போட மாட்டாங்களா? அந்த பயத்துல போடாம விட்டுருப்பாரு.

said...

//சரோஜாதேவி புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த புத்தகம் இன்றும் என்னிடம் இருக்கிறது//

நெக்ஸ்ட் டைம் மீட் பண்றப்ப மறக்காம எடுத்துட்டு வாங்க..

பரிசல் மாதிரி நீங்களும் ஸ்கேன் பண்ணி போட்டிருக்கலாம். அப்புறம் அந்த கதைக்காக சரோஜாதேவி எடிட்டர் அனுப்பின கடிதமும் மிஸ்ஸிங்

said...

//விரக தீயில் அவருக்கு ஒரு பின்னூட்டம்போட்டேன் அந்த வீடியோவை எனக்கு அனுப்பமுடியுமா என்று?

இரவு திரும்ப வந்து பார்த்தால் அந்த பின்னூட்டமும் நீக்கப்பட்டு இருந்தது,//

நடுவுல எங்க போயிட்டு வந்தீரு?

said...

//பிற்ச்சேர்கை: பதிவு காமத்தை லைட்டாக டச் செய்வதால் பதிவுலநீதிபடி இந்த பதிவை ஆசான் ஜ்வோராம் சுந்தருக்கு டெடிக்கேட் செய்கிறேன்.
//

அடப்பாவி... அவரே இப்பல்லாம் அந்த மேட்டரை தொடாம இருக்காரு.. அவரை எதுக்கு இழுத்து விடுறீங்க..

said...

:-)))....

Anonymous said...

\\நம்புங்கப்பா அதுக்காகவேதான்திரும்ப திரும்ப பார்த்தேன்\\ உங்கூட்டம்மாவைக்கேட்டுட்டு அப்பறமா நம்பறோம்.

said...

//இப்படி ஒரு பதிவை எழுதவே கஷ்டமாகதான் இருக்கு என்ன செய்ய நேற்று தோசை சுடும் பொழுது தோசைகல் விரலில் சுட்டுவிட்டது.//

:-))))

said...

இந்தப் பதிவை நான் படிச்சுக்கிட்டிருக்கப்பவே அங்கே மெக்சிகோ சலவைக்காரி ஜோக்குலே உங்க பின்னூட்டம்... வாட் எ கோ இன்சிடென்ஸ்? :-)

Anonymous said...

//என்ன செய்ய நேற்று தோசை சுடும் பொழுது தோசைகல் விரலில் சுட்டுவிட்டது//
தோசைக்கு என்ன சட்டினி செஞ்சீங்க

Anonymous said...

//எங்கேயாவது சரோஜா தேவி பெயர் வருகிறதா என்று பார்க்கவே திரும்பி திரும்பி அதை பத்து முறை//

ஸ்ரேயா கோசல் என்ன ஆனாங்க. இப்பல்லாம் அவங்க பஜனையைக்காணோம்

said...

வெண்பூ
//அடப்பாவி... அவரே இப்பல்லாம் அந்த மேட்டரை தொடாம இருக்காரு.. அவரை எதுக்கு இழுத்து விடுறீங்க..//

அய்யய்யோ அப்புறம் அவரு எப்படி உச்சா போறாரு?

said...

லக்கிலுக் said...
இந்தப் பதிவை நான் படிச்சுக்கிட்டிருக்கப்பவே அங்கே மெக்சிகோ சலவைக்காரி ஜோக்குலே உங்க பின்னூட்டம்... வாட் எ கோ இன்சிடென்ஸ்? :-)//

மேட்டர் பதிவு என்றால் முன்னாடி நின்னுவிடனும் இல்லை என்றால் பதிவை தூக்கி விட்டால் என்ன செய்யவது!!!

said...

சின்ன அம்மிணி said...
தோசைக்கு என்ன சட்டினி செஞ்சீங்க//

சுட்டது பொடி தோசை!!!:))


//ஸ்ரேயா கோசல் என்ன ஆனாங்க. இப்பல்லாம் அவங்க பஜனையைக்காணோம்//

கொஞ்சம் உள்ளுக்குள்ள பயம்:)))

said...

நன்றி கார்கி பரிசலுக்கு கண்ணி ராசியாம்:)))

நன்றி நரசிம்:)

சரவணகுமார் எதிர்பதிவா எங்கே:)))

said...

//அடப்பாவி அப்பலயிருந்தே படிக்கிறயா? உனக்கு வயசு 30க்குள்ளாறான்னு நெனச்சிட்டு இருந்தேனே??///

படிப்புக்கை வயசு ஒரு தடை இல்லை:))

said...

நன்றி விஜய்

said...

/
இப்படி ஒரு படத்தில் நடிக்கதான் முடியுமா? அல்லது எடுக்கத்தான் முடியுமா என்ற விரக தீயில்
/

மாப்பி நீ நடிக்க ரெடின்னா எடுக்க நா ரெடி
:))

said...

/
சஞ்சய் வீட்டுக்கு சென்றேன், அங்கு ஏற்கனவே அது ஓப்பன் ஆகி இருந்தது, திரும்ப முதலில் இருந்து ஓடவிட்டு பார்க்கும் பொழுதே என்னால் உட்காரமுடியவில்லை.
/

கொய்ய்ய்ய்ய்ய்யால
:))

said...

/
கொடுமையின் உச்சக்கட்டமாக காஸ்டியூம் டிசைனிங் ஆட்டோ சங்கர் என்று போட்டு இருந்தது, எங்கேயாவது காஸ்டியூம் இருக்கா அல்லது எங்கேயாவது சரோஜா தேவி பெயர் வருகிறதா என்று பார்க்கவே திரும்பி திரும்பி அதை பத்து முறை பார்த்தேன்.
/

பத்துமுறை ரொம்ப கம்மியாச்சே
:))))))))))

said...

/
சரோஜாதேவி புத்தகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த புத்தகம் இன்றும் என்னிடம் இருக்கிறது
/

மங்களூருக்கு ஒரு பார்சல்
:)))

said...

மங்களூர் சிவா said...
மாப்பி நீ நடிக்க ரெடின்னா எடுக்க நா ரெடி:))//

யோவ் மைனர் குஞ்சு இன்னும் நீ ஜல்லிகட்டுக்கு ரெடி ஆகலையா? அடிங்க போய் அதுக்கான ஆயத்த வேலைகளை பாரு!

said...

/
டவுன் லோட் செய்து வீட்டில் போய் பார்கலாமா என்று டவுன் லோட் செய்யப்பார்த்தேன் முடியவில்லை, அதனால் நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை
/

வீட்டுல போய் பாத்திருந்தா அதுக்கப்புறம் ஆஸ்பத்திரில இருந்துல்ல பதிவு போடவேண்டியிருக்கும்!!

:))))

said...

/
வெண்பூ said...

//நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு படத்தில் நடிக்கதான் முடியுமா? //

ஏன் ஏதாவது டெக்னிகல் டிஃபிகல்டியா? டாக்டர் நாராயண ரெட்டியை பாருங்க சரியா போயிடும்.
/

ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டு

said...

மங்களூர் சிவா said...
மங்களூருக்கு ஒரு பார்சல்
:)))//

கையில் வெண்ணைய வெச்சுக்கிட்டு நெய்க்கு யாராவது அலைவாங்களா?:)) இனி உமக்கு தேவைப்படாது!!!

said...

இதுக்கு 100 கமெண்ட் போட்டு என் நன்றியைத் தெரிவிக்கணும்! இதோ தெரிவிக்கிறேன்..

said...

100!

said...

இனி இந்த வாரம் மன்னிப்பு வாரமா?

said...

கார்க்கி, என்னமோ நாந்தான் எதிர்ப்பதிவு போடற மாதிரியும், அதை குசும்பனும், லக்கியும் திட்டறதாவும் சொன்னீங்க? இப்ப என்னாங்கறீங்க?

said...

சுஜாதாவோட புத்தகத்தை நான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டேன். சரோஜாதேவி புக்கை போடலீன்னாலும் பரவால்ல.. சரோஜாதேவியை.. ச்செ.. சரோஜாதேவி ஃபோட்டோவயாவது போடலாம்ல?

said...

யாருய்யா அது.. என் பேர்ல அசிங்க அசிங்கமா கமெண்ட் போடறது?

said...

//கார்க்கி said...

பரிசல் உங்க ராசி என்ன? அந்த ராசிக்காரர்கள் எல்லாம் சில நாட்களுக்கு பதிவு எழுதாமல் இருப்பது நல்லது..//

ஏன் இப்ப என்னாச்சு? இதெல்லாம் ஒரு அங்கீகாரம்யா! ரொம்பத்தான் ஃபீல் பண்றீங்க?!?

said...

//ஸ்க்ரீன் சாட் என்னாச்சுப்பா?//

ரிப்பீட்டு

said...

நன்றி பரிசல் 100 மார்க் போட்டதுக்கு எனக்கு பரிச்சை பேப்பரில் கூட 100க்கு முட்டை மார்க் என்று போட மாட்டாங்க வெறும் முட்டை மட்டும் தான் போட்டு இருப்பாங்க இப்பதான் 100 மார்க வாங்குகிறேன் இது 1000க்கு 100 மார்க் இல்லைதானே:)))

said...

சரோஜா தேவியில மட்டும் என்ன வாழுதாம்?
முதல் இரண்டு பாராவில் மட்டும் தான் பெயர்களும், கதாப்பாத்திரங்களும் வித்தியாசம்.
அதுக்கப்புறம் எல்லாம் ஒரே மேட்டர் தான்.

said...

//பரிசல்காரன் said...
கார்க்கி, என்னமோ நாந்தான் எதிர்ப்பதிவு போடற மாதிரியும், அதை குசும்பனும், லக்கியும் திட்டறதாவும் சொன்னீங்க? இப்ப என்னாங்கறீங்க?//

கொஞ்ச நாட்களாக மகிழ்ச்சியாக இருப்பதால் அய்யனார் பதிவு பக்கம் செல்லவில்லை அதனால் எதிர் கவிதை, எதிர் பதிவு எழுதவில்லை அதனால் என் எதிர்பதிவுகள் எதையும் கார்கி படிக்கவில்லை போல்:)) போனாபோவுது விட்டுவிடலாம் பாஸ்:)))

said...

வால்பையன் said...
சரோஜா தேவியில மட்டும் என்ன வாழுதாம்?
முதல் இரண்டு பாராவில் மட்டும் தான் பெயர்களும், கதாப்பாத்திரங்களும் வித்தியாசம்.
அதுக்கப்புறம் எல்லாம் ஒரே மேட்டர் தான்.//

அப்படியா? அனுபவஸ்தர் சொன்னா சரியாகதான் இருக்கும்:))))

said...

//அப்படியா? அனுபவஸ்தர் சொன்னா சரியாகதான் இருக்கும்//

சுடுகாட்டுக்கு வழி தெரிய ஏற்கனவே செத்துருக்குனமா என்ன

Anonymous said...

இது எந்த பதிவுக்கான எதிர்பதிவு என்பதை சுட்டியிருந்தால் நல்லா இருந்திருக்குமே குசும்பா:-))

அன்புடன்
அபிஅப்பா

Anonymous said...

//பதிவு காமத்தை லைட்டாக டச் செய்வதால் பதிவுலநீதிபடி இந்த பதிவை ஆசான் ஜ்வோராம் சுந்தருக்கு டெடிக்கேட் செய்கிறேன்//

அதீதன் பிறக்குறதுக்கு முன்னை இந்த பதிவ படிச்சான்.
பக்கத்து தெரு சேவல் முனங்கலுடன் மூணு முட்டை போட்டுடுச்சி
குமாஸ்தாக்கள் வழக்கம் போல் கும்மி அடிக்கிறார்கள்
அவள் அவனை பார்த்து கொக்கரித் தாள்.
ஆண் எறும்பு பெட்டையின் மேல் காலை தூக்கி போட்டது

Anonymous said...

//வால்பையன் said...
சரோஜா தேவியில மட்டும் என்ன வாழுதாம்?//

கேள்வியச் சரியாக் கேளுப்பா?

//முதல் இரண்டு பாராவில் மட்டும் தான் பெயர்களும், கதாப்பாத்திரங்களும் வித்தியாசம்.
அதுக்கப்புறம் எல்லாம் ஒரே மேட்டர் தான்.//

என்னா ஒரு கண்டுபிடிப்பு.

said...

:)

said...

தல சரோஜாதேவி எழுத்தே ஓரு டெடிகேஷன் தான? அதுக்குப் போயி எதுக்கு தனியா ஓரு டெடிகேஷன்..ஹி..ஹி..ஹி..

said...

குஜும்பு.. வெளிநாட்லே உள்ள தெகிறியம்... அங்கியும் ஆட்டோ அனுப்ப ரொம்ம்ப நேரம் ஆகாதடி..

said...

நானும் மன்னிக்க மாட்டேன் !

:)

கலக்குறடா !

said...

ஆமா! எல்லோரும் ஏதோ சரோஜா தேவி புத்தகம்ன்னு சொல்றாங்களே? அது என்ன? பழம் பெரும் நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறா? கொஞ்சம் விளக்குங்க... புரியலை

said...

//நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறா? கொஞ்சம் விளக்குங்க... புரியலை //

ஒண்ணும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா

said...

ஒண்ணும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா// ஒரு மணி இல்லீங்க ஒம்போது மணிக்கு.!

said...

என்ன நடக்குது இங்க!??????

said...

ஆண்டவா.... குசும்பனுக்கு நல்ல புத்தி கொடுப்பா....
குசும்பனுக்கு நோய் சரியாச்சினா ம.சிவாவுக்கு மொட்டை போட்டுறேன்...
பரிசல்காரன் அண்ணாச்சிய காவடி எடுக்கச் சொல்றேன்.
கோவி அண்ணன் வேல் குத்துவாரு...

said...

//அய்யய்யோ !!
சாரு: ”இனி எது எப்படியிருந்தாலும் தினமும் குறைந்த பட்சம் ஒரு கட்டுரை அல்லது கதை வரும்”

ஆண்டுச் சந்தா 20 டாலர்; அரை ஆண்டுச் சந்தா 10 டாலர்!...

அவ்வ்வ் அப்ப ஒரு நாளைக்கு 7 கட்டுரை அல்லது கருத்து எழுதும் கோவி.கண்ணன் பக்கத்தை படிக்க எம்புட்டு செலவு செய்யனும்!

//

டேய்.....சாரு சாக்காக வச்சிக்கிட்டு எனக்கு ஏண்டா கோணி ஊசி குத்துறே !
:)

said...

//கோவி அண்ணன் வேல் குத்துவாரு...

September 8, 2008 9:00 PM
//

விக்கி,

யார் யாருக்கு வேல் குத்திவிடனும் ?
பத்துமலைக்கு வந்து குத்திவிடவா ?

said...

antha pathivoda mugavariya konjum thariyala

said...

====
பிற்ச்சேர்கை: பதிவு காமத்தை லைட்டாக டச் செய்வதால் பதிவுலநீதிபடி இந்த பதிவை ஆசான் ஜ்வோராம் சுந்தருக்கு டெடிக்கேட் செய்கிறேன்.
(சும்மாச்சுக்கும் தான் எழுத்துகலர் நீலம்:)))
====

ரெம்ப நீலமானமாதிரில்ல தெரியுது :)

Anonymous said...

///வெண்பூ
//அடப்பாவி... அவரே இப்பல்லாம் அந்த மேட்டரை தொடாம இருக்காரு.. அவரை எதுக்கு இழுத்து விடுறீங்க..//

அய்யய்யோ அப்புறம் அவரு எப்படி உச்சா போறாரு?////

யோவ்வ்வ்!!!!!!

said...

இந்த மாதம் என்னை வைத்து இரண்டாவது பதிவு.. :(

//வெண்பூ said...

//நம்மால் என்ன செய்யமுடியும் இப்படி ஒரு படத்தில் நடிக்கதான் முடியுமா? //

ஏன் ஏதாவது டெக்னிகல் டிஃபிகல்டியா? டாக்டர் நாராயண ரெட்டியை பாருங்க சரியா போயிடும்.
//

ஆகவே ..இதை நான் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.. :))

.. யோவ் மாமா.. Blog பக்கமே வரக் கூடாதுன்னு நெனைச்சிட்டு இருக்கேன்.. என்னை வச்சி காமெடி பன்றத நிறுந்த மாட்டியளா?...

உங்கள சுழுக்கெடுக்க ஒரு மாதுளை ஜூஸ் தான் ராசா செலவாகும்..ஜாக்கிரதை.. :P

said...

//வெண்பூ said...

//அது 1979ல் வந்த சரோஜாதேவி புத்தகத்தின் காவிய படைப்பான//

அடப்பாவி அப்பலயிருந்தே படிக்கிறயா? உனக்கு வயசு 30க்குள்ளாறான்னு நெனச்சிட்டு இருந்தேனே??//

ஆமா.. 25 வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு 30 வயசு தான்..

said...

//வெண்பூ said...

//குசும்பன் said...
வெண்பூ உங்களுக்காக மாடுரேசன் நீக்கப்பட்டு இருக்கிறது.
//

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லேட்டஸ்ட் சரோஜாதேவி புத்தகத்தை அண்ணன் தொழிலதிபர் சஞ்சய்காந்து அவர்கள் குசும்பனுக்கு அனுப்பி வைப்பார்.//

அடிங்க.. நானே கண்ட எடத்துல காத்து போக கடுப்புல சுத்திட்டு இருக்கேன்.. என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறிங்க?

said...

இந்த ஏரியாவுல நல்ல கூட்டம் இருக்கிறதால 2 விளம்பர போர்ட் வச்சிக்கிறேன்.. :))

ஐஸ்பைஸ் - மாலை நேர கிராமத்து விளையாட்டு - http://sanjaigandhi.blogspot.com/2008/09/blog-post.html

நேற்று..இன்று..நாளை - No Comments.. - http://podian.blogspot.com/2008/09/no-comments.html

ஆளுக்கொரு விசிட் குடுங்க சாமியோவ்.. :))

said...

//"சரோஜாதேவி மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்!!!"//

ரொம்ப உணர்ச்சிவசப் படறத பார்த்தா....... :P :P