Sunday, September 7, 2008

ஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.

கடந்த ஒருவாரமாக எல்லோரும் மின்சாரத்தை எப்படி மிச்சம் படுத்துவது என்று எழுதிக்கிட்டு இருக்கிறார்கள். நண்பர் பரிசல் மின்சார காண்டம் என்று ஒரு பதிவு போட்டு அவர் பங்குக்கு கருத்து சொல்லி இருக்கிறார். இன்று (காலை டிபனுக்கு பின் போடும் பதிவு) கோவி.கண்ணன் அவர்கள் மின்சாரம் பற்றியும் அதுக்கு மாற்று யோசனை பற்றியும் எழுதி இருக்கிறார்.

இது எல்லாம் பத்தாது என்று கார்கி அவர்கள் என்னை பார்த்து உருப்படியா ஏதும் எழுதவே மாட்டியா? அய்யனார் உன் நண்பன் தானே அவரை போல் எழுதமாட்டியா என்று எல்லாம் என்னை கேள்வி கேட்டுவிட்டார். உருப்படியா எழுதமாட்டியா என்று கேட்டு இருந்தால் கூட பரவாயில்லை அய்யனார் மாதிரி என்று கேட்டதுதான் எனக்கு வருத்தத்தை தருகிறது :((
அய்யனார் மாதிரி எழுத முடியவில்லை ஆற்காடாருக்கு யோசனை சொல்லும் அளவுக்கு பதிவு எழுத தூண்டிய கார்கிக்கு இந்த பதிவு சமர்பனம்.

இனி சீரியசாக ஆலோசனைகள்:

ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கிக்கிட்டு இருந்த பொழுது லாலு மந்திரி ஆனபிறகு லாபம் ஈட்டும் துறையாக ஆனது. அது போல் முதலில் மின்சார துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

லாபம் வந்தால் தானே மின்சாரமும் வந்துடப்போவுது.
ஆலோசனை 1:
ஊர் எங்கும் துணி துவைக்கும் தொழிளார்கள் துணியை காயப்போட இடம் இல்லாமல் ஒன்றின் மேல் ஒன்று போட்டு காயவைக்கிறார்கள், அவர்களுக்கு சும்மாக கிடக்கும் லைன் கம்பிகள் மேல் துணி காயப்போட அனுமதி கொடுத்தால் அவர்களிடம் இருந்து துணி ஒன்றுக்கு 25 பைசா வீதம் வாங்கிக்கலாம். அதுபோல் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் துணி காயப்போட இடம் இல்லாமல் ஜட்டி முதல் அனைத்தையும் வீட்டுக்குள்ளேயே காயப்போடுவதால் அடிக்கடி இச் கார்ட் வாங்க வேண்டி இருக்கிறது, ஜட்டியை சூரிய ஒளியின் கீழ் காய்ப்போடுவதை கட்டாயமாக்க அன்பு மணி யோசித்து வருகிறார். அதுக்கு முன் நீங்கள் அனுமதி கொடுத்தால் அனைவரும் ஜட்டி முதல் அனைத்தையும் காயப்போட்டு அதுக்கு வாடகையும் கொடுப்பார்கள்.உங்களுக்காக பிளான் மாடல் மேலே, ஜட்டி படம் போட்டால் தமிழ்மணத்தில் சட்ட சிக்கல் வரும் அதனால் போடவில்லை.

அலோசனை 2:
விடுமுறை நாட்களில் குழந்தைகளை தூங்க வைக்க அல்லது விளையாட இடம் பற்றாக்குறை இருக்கிறது, அதை சரி செய்ய குழந்தைகளை அல்லது என்னை போன்ற வீர தீர செயல்கள் செய்ய விரும்பும் இளைஞர்கள் ஊஞ்சல் போல் ஆட மின்சார கம்பிகளை பயன் படுத்த அனுமதி கொடுத்தால்

ஒரு மணி நேரத்துக்கு என்று வாடகை வாங்கிடலாம்.
பிளான் மாடல் கீழே!
ஆலோசனை 3:

காதலிப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினை, கிராமம், நகரம் என்று எங்குமே காதலிப்பவர்கள் உட்காந்து பேச இடம் கிடைப்பது இல்லை.

கிராமத்தில் என்றால் கரும்பு காடு , பருத்தி காடு என்ற இடங்களுக்கு சென்றால் பூச்சி, கரும்பு சுணை என்று ஏகப்பட்ட பிரச்சினை, நகரம் என்றால் கூட்டம் ஒரு பிரச்சினை அடுக்கு மாடி குடியிருப்பு போல ஒருத்தர் மடி மீது ஒருவர் உட்காந்து பேச வேண்டி இருக்கு, அது மட்டும் இன்றி ரோப் கார் பார்கனும் என்றால் பழனிக்கு செல்லவேண்டி இருக்கு ஆகையால் ரோப் கார்களை சும்மாக லையன் கம்பிகளில் தொங்க விட்டு அதை தின வாடகை வாங்கினால் கூட்டம் அதிகமாக வரும், ரோப் கார்களை இயக்க மின்சாரம் தேவை படும் என்று நினைக்கிறேன் ஆனால் இங்கு சும்மா நிறுத்தி வைத்து இருந்தால் போதும்.


பிளான் மாடல் கீழே


என்னை இப்படி சீரியசாக பதிவு எழுத வைத்த பரிசல், கோவி, கார்கி அனைவருக்கும் நீங்கள் சொல்லும் பாராட்டுகள் போய் சேரட்டும்.

டிஸ்கி: பரிசல் பதிவில் சொல்லி இருப்பது போல் ஏதாவது செஞ்சு மின்சாரத்தை மிச்சம் செஞ்சு அதை ஒரு கம்பியில் எடுத்து ஆற்காடார் டிக்கியில் கொடுக்கவும் அப்பயாவது பல்பு எரிஞ்சு ஏதும் செய்கிறாரா என்று பார்க்கலாம்.

29 comments:

said...

:)))))

said...

:))))

அசத்தல்..

said...

அருமையான யோசனைகள்...

தமிழக அரசு உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து, இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். மேலும், குசும்பனாரின் முயற்சியை ஊக்கப்படுத்த்தும் பொருட்டு ஏதாவது செய்ய வேண்டும்.

said...

மங்களூர் சிவா said...
:)))))//

மாப்பி நன்றி
**************************
♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
:))))

அசத்தல்..//

நன்றி தலை!

****************************
விஜய் ஏதாவது செய்யவேண்டுமா? அவ்வ்வ்வ்:((

said...

:):):)

said...

ஏதாவது செஞ்சு மின்சாரத்தை மிச்சம் செஞ்சு அதை ஒரு கம்பியில் எடுத்து ஆற்காடார் டிக்கியில் கொடுக்கவும் அப்பயாவது பல்பு எரிஞ்சு ஏதும் செய்கிறாரா என்று பார்க்கலாம்.

ஆகா, அண்ணே கொஞ்சம் பார்த்து, ஆட்டோ வந்திடப்போகுது.
துபாய்கே வந்தாலும் கேக்கறதுக்கில்லே. . .

said...

:)

said...

யோவ்.. சூப்பர்யா!

சும்மாவா உன்னை நக்கல் நாயகன்னு சொல்றாங்க!!!

said...

:)))))))))

said...

பேசாம கொஞ்ச நாளைக்கு தமிழ் நாட்டு மின்சார அமைச்சரா லாலுவுக்கு கூடுதல் பொறுப்பு குடுத்துரலாமா?

said...

கலக்கல்:)

Anonymous said...

//ஜோசப் பால்ராஜ் said...

பேசாம கொஞ்ச நாளைக்கு தமிழ் நாட்டு மின்சார அமைச்சரா லாலுவுக்கு கூடுதல் பொறுப்பு குடுத்துரலாமா?//

லல்லு மாதிரி லொள்ளு ஆசாமி ரயில் மந்திரியாகி IIM க்கு கிளாஸ் எடுக்கும் அளவுக்குச் சாதனை புரிந்திருக்கார்.

நம்ம குசும்பன் எந்த விதத்தில் குறந்தவர்?. உடனே கலைஞரிடம் சொல்லி குசும்பனை மின்சாரத்துறை மந்திரியாக்கிட வேண்டியதுதானே?

இதுக்கு யாராவது ஒரு கருத்துப் பொட்டி வையுங்கப்பா.

said...

அதைப் பயன்படுத்தி ஸ்பைடர் மேன் பயிற்சி வகுப்புகள் கூட நடத்தலாம்.

said...

சூப்பர் ஐடியா தல...

//உங்களுக்காக பிளான் மாடல் மேலே, ஜட்டி படம் போட்டால் தமிழ்மணத்தில் சட்ட சிக்கல் வரும் அதனால் போடவில்லை.//

சட்ட சிக்கலுக்கு பயந்து நீங்களே இப்ப ஜட்டி போடுறதில்லைன்னு சிவா சொல்லிட்டு இருக்காரே! நிஜமா?

//விடுமுறை நாட்களில் குழந்தைகளை தூங்க வைக்க அல்லது விளையாட இடம் பற்றாக்குறை இருக்கிறது,//

அதெப்படி உங்களுக்கு தெரியும்??? ஓ.... கங்கிராட்ஸ்..

//ரோப் கார்களை சும்மாக லையன் கம்பிகளில் தொங்க விட்டு அதை தின வாடகை வாங்கினால் கூட்டம் அதிகமாக வரும்//

உங்கள மாதிரி ஆளுங்க அதை ரேப் காரா யூஸ் பண்ணிடுவாங்களே என்ன பண்றது?

//மின்சாரத்தை மிச்சம் செஞ்சு அதை ஒரு கம்பியில் எடுத்து ஆற்காடார் டிக்கியில் கொடுக்கவும் அப்பயாவது பல்பு எரிஞ்சு ஏதும் செய்கிறாரா என்று பார்க்கலாம்//

இது கலக்கல் :)

said...

ஆற்காடார் எதோ மின்சாரத்தை வச்சிக்கிட்டு கொடுக்காத மாதிரி பேசுறிங்களே!!! நம்ம தமிழ் நாடுல எந்தனை ஆபீஸ்ல, வீட்டுல ஆட்களே இல்ல்லமா பேன், லைட், குளிர் சாதனா பெட்டி ஓடுது தெரியுமா? பொறக்கும் போதே என்ன பேன் உடன்ன பொறந்தோம் ? யாரும் மின்சாரத்தை சேமிகதனலே இந்த நிலை .நீர், பெட்ரோல், மின்சார சேமிப்பு மிக அவசியம் .

Anonymous said...

//ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கிக்கிட்டு இருந்த பொழுது லாலு மந்திரி ஆனபிறகு லாபம் ஈட்டும் துறையாக ஆனது. அது போல் முதலில் மின்சார துறையை லாபம் ஈட்டும் துறையாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.//

பேசாம லாலுவை மின்சார துறை அமைச்சரா ஆக்கிட்டா?????

அன்புடன்
அபிஅப்பா

said...

எல்லாம் பார்த்துக்குங்க அந்த கார்க்கி நான்தான் நான்தான் நானேதான்... நன்றி குசும்பா

said...

இன்னொரு முக்கியமான் ஐடியா.. மிச்சம் இருக்கும் மின்சாரத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு விற்று விடலாம்.. பிறகு மின்வெட்டே இருக்காது.. மின்சாரம் தந்தால் தானே மின்வெட்டு?

said...

//குசும்பனின் கேள்வி : பேச்சை குறைக்கனும்,அதனால் மொபைல் சார்ஜ் செய்யுற மின்சாரம் மிச்சமாகும் சொல்ற பரிசல், எழுத ஒன்னுமே இல்ல என்கிற பதிவ எழுதாம விட்டா எவ்ளோ மின்சாரம் மிச்சமாகும்? இவங்க எழுதறத விட மாட்டாங்களாம்..ஆனா நாங்க பேசக் கூடாதம்...//

சரியா கேட்டிங்க குசும்பரே..என்ன பதில் சொல்றார்னு பார்ப்போம்

said...

//சூரிய ஒளியின் கீழ் காய்ப்போடுவதை கட்டாயமாக்க அன்பு மணி யோசித்து வருகிறார்.//

நண்பா மெய்யாலுமே அப்படி ஒரு திட்டம் இருக்கு! :))))

கீரின் கான்செப்ட்ல வருது அதெல்லாம் :)

said...

இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி
ஸ்விஸ் வங்கியில்

நாம் அனைவரும் நிணைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இந்தியா ஏழை நாடு அல்ல. ஆமாம். 100 சதவிகித 'அக்மார்க' உண்மை
நம்ப முடியவில்லையா?..தொடர்ந்து படியுங்கள்.

இந்திய மக்களிடமிருந்து ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து, கணக்கு காட்டாமல் சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு (Swiss Banking Association) தனது ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த தொகை உலக வங்கி (World Bank), உலக நிதி நிறுவனம் (Internationala Monetary Fund), மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது வளர்ச்சி திட்டங்களுக்கக வாங்கியிருக்கும் வெளிநாட்டு கடனின் மொத்த மதிப்பைவிட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் ‘யோக்கிய சிகாமனிகள்' யார் தெரியுமா?

நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் அர்சியல் வாதிகள்தான்.

உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்திய வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020 ஆண்டு, இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு காணச்சொல்லியிருக்கிறார். ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த விஷயம், ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத இந்தியாவின் வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும் என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது,

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு தங்கம் பெற்ற இந்தியா, ஸ்விஸ் வங்கியில் 'கள்ள' கணக்கு வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளில் - முதலிடத்தை தட்டி செல்கிறது.
1. இந்தியா---- $1,456 billion
2. ரஷ்யா---$ 470 billion
3. UK -------$390 billion
4. உக்ரைன் - $100 billion
5. சீனா -----$ 96 billion

அது மட்டுமல்ல, இந்தியாவின் வைப்புத்தொகை ($1456 பில்லியன்) - மற்ற நான்கு நாடுகளின் மொத்த வைப்புத்தொகையை ($1056 பில்லியன்) விட அதிகம்.

இந்த பணத்தை இந்திய மக்களுக்கு பிரித்துக்கொடுத்தால், 45 கோடி பேருக்கு - ஒவ்வொருவருக்கும் 1,00,000 ரூபாய் கிடைக்குமாம்..

இந்திய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை, இந்தியா சட்ட \ரீதியாக நடவடிகையெடுத்து மீண்டும் $1456 பில்லியன் பணமும் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டால் ஒரே நாளில் நமது வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு, மீதியிருக்கும் பணத்தை Fixed Deposite -ல் போட்டால், அதிலிருந்து வரும் வட்டி - இந்திய அரசின வருடாந்திர 'பட்ஜெட்' க்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக கிடைக்குமாம். அதனால், துண்டு விழாத பட்ஜெட் போடலாம், புதிய வரிகள் போடுவதை தவிர்க்கலாம்,

வறுமைகோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களை அப்படியே 'அலாக்'காக துக்கி (வறுமை) கோட்டுக்கு மேலே வைத்து 'கோட்டும்- சூட்டும்' போட்டு பார்க்கலாம்.

said...

:-)

said...

நல்லாத்தான் குசும்பறீங்க

said...

ஆஹா! இதை, இதை தான் உங்களிடன் எதிர்பார்க்கிறேன்!

said...

//பரிசல் பதிவில் சொல்லி இருப்பது போல் ஏதாவது செஞ்சு மின்சாரத்தை மிச்சம் செஞ்சு அதை ஒரு கம்பியில் எடுத்து ஆற்காடார் டிக்கியில் கொடுக்கவும் அப்பயாவது பல்பு எரிஞ்சு ஏதும் செய்கிறாரா என்று பார்க்கலாம்.//

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

said...

சும்மா அதிருதில்ல பின்னூட்டம் பதிவை விட நீளமாக இருக்கிறது:(((((

said...

ஆலோசனை 4

கலைஞரிடம் சொல்லி அண்ணன் குசும்பரை மின்சார அமைச்சராக்குவது :)

Anonymous said...

மேட்டர் நல்லாயிருந்துச்சி


உங்கள மாதிரி பாப்புலர் பதிவுல வந்தா நல்லாயிருக்கும் அதனாலதான்

நாமலும் எதவது செய்யனும் பாஸுநன்றி
சும்மா அதுருதில

said...

வருகை தந்து ஊக்குவிச்ச அனைவருக்கும் நன்றி!!!