நேற்று பரிசலின் இந்த பதிவை அனைவரும் படிச்சு இருப்பீர்கள் , நண்பர் பரிசலை பல்பு வாங்க வைக்கனும் என்று ஆசைப்பட்ட சிங்கப்பூர் வாசிகளுக்காக அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
சரி பல்பு வாங்க வைக்கனும் கொஞ்சமும் டவுட் வரக்கூடாது நாதாரிதனம் செஞ்சாலும் நாசுக்காக செய்யனுமே! போன் மூலம் விளையாடுவது அலுத்துப்போச்சு அதுமட்டும் இன்றி அது காஸ்ட்லி விளையாட்டும்கூட.
அதனால் மெயில் மூலம் விளையாடலாம் என்றதும் நினைவுக்கு வந்தது அவர் ஏற்கனவே வால் பையனை நட்சத்திரம் என்று சொல்லி ஏமாற்றியது, சரி அவர் ரூட்டிலே போகவேண்டியதுதான் என்று ஒரு g mail ஐடி கிரியேட் செஞ்சேன்.
ஸ்டார் ஆக தேர்ந்து எடுத்தால் எப்படி மெயில் வரும் என்று தெரியலையே, நாமாக ஒரு மெயில் அனுப்பினால் அதை வைத்து கிராஸ் செக் செய்வார்கள் அப்பொழுது அது தெரியவந்துவிடும் என்று , ஏற்கனவே ஸ்டார் ஆன நண்பர்
ஆயில்யனிடம் கேட்டேன் அவரு எனக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சிட்டார்.
ஆஹா சரி இப்படியே மெயிண்டென் செய்வோம் பரிசலுக்கு பல்பு கொடுக்கும் முன்பு எனக்கும் பல்பு வேண்டும் என்று ஆசைப்படும் ஆயில்யனை நான் தான் அடுத்த ஸ்டார் என்று நம்ப வெச்சபிறகு மெயிலை அனுப்புய்யா என்றால் டெலிட் செஞ்சுட்டேன் என்று சொன்னார்.
சரி என்று அடுத்த ஆள் பினாத்தலாரை கேட்டால் நீ ஜட்டி போட்டு திரிஞ்ச காலத்துலேயே ஸ்டார் ஆகிவிட்டேன் அதனால் இம்புட்டு நாள் எல்லாம் அந்த மெயில் என்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டார், பின் தள சிபி வந்தார் அவரிடம் கேட்டேன் கொடுத்தார் அவரிடம் உண்மையை சொல்லித்தான் கேட்டேன் அவரும் கொடுத்துவிட்டு மற்றவர்கள் வருத்தப்படதா மாதிரி இருக்கனும் என்றார்.
சரி பரிசலுக்கு மெயில் அனுப்பினா அதை அவர் நண்பர் அதிஷாவிடமும் சொல்வார் அப்ப அவரும் நம்பும் படி இருக்கனும் என்பதர்காக அதிஷாவும் சேர்க்கப்பட்டார், தாமிராவையும் சேர்கலாம் என்று நினைச்சேன் ஆனா ஏதோ ஒரு பாசம் கண்ணை மறைத்துவிட்டது.
பின் மெயில் அனுப்பி நடந்த கதையை பரிசல் சொல்லிவிட்டார், சரி விளையாட ஆரம்பிச்ச பிறகு உண்மைய சொல்லிடலாம் என்று திரும்ப சிங்கப்பூர் நண்பர் ஒருவரிடம் பரிசல் நம்பர் கொடுங்க என்றேன் அவரும் அண்ணே அவரை கலாய்கனும் அப்படின்னு நம்பர் கொடுத்தார், பின் இன்னொருவரிடமும் நம்பர் கேட்டு இரண்டும் ஒரே நம்பரா என்று சரி பார்த்த பின் அவருக்கு போன் செஞ்சேன், மனுசன் ஜே.கே ரித்தீஸ் மாதிரி பல முகம் இருக்கு, ஒருவர் பத்திரிக்கை கொண்டு வந்து வைத்து உங்க தலைமையில் தான் கல்யாணம் நடக்கனும் என்றும், ஒருவர் அண்ணே காதுகுத்து உங்க முன்னிலையில் தான் வைக்கனும் என்றும் , ஒருவர் அண்ணே நீங்கதான் என் குழந்தைக்கு பேர் வைக்கனும் என்றும் சொல்லிக்கிட்டு இருந்தனர், நானும் போனில் அண்ணன் இப்பொழுது 2000ரூபாய் மொய் செய்வார் என்று செந்தில் மாதிரி சொல்லிப்பார்த்தேன், ம்ம் அவுங்க காதில் விழவே இல்லை.
பின் அவர் இதுபோல் எனக்கு மெயில் அனுப்பி இருந்தாங்க அது நீங்களா என்றார், ஆம் என்று சொல்ல நினைத்து சொன்னேன் ஆனால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி இல்லை என்று சொல்லிட்டேன், பேசும் பொழுதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்.
பின் நேற்று பதிவில் கும்மி அடிச்சப்ப மை பிரண்ட் யாருன்னு கண்டுபிடித்துவிட்டேன் என்று சொன்னப்ப சரி நம்ம ஆயில்யன் தான் நான் மெயில் கேட்ட விசயத்தை சொல்லிட்டார் போல என்று ஆயில்யனிடம் தம்பி நான் மெயில் கேட்ட விசயத்தை யாரிடமும் சொன்னீயா என்று கேட்டேன், திரும்பவும் அண்ணே எப்ப ஸ்டார் ஆக போறீங்கன்னு சொல்லுங்க என்று திரும்வும் கேட்க ஆரம்பித்தார், சரி இவருக்கு காந்திய சுட்ட விசயம் தெரியவில்லை போல என்று அடுத்த வாரம் என்றேன்.
பரிசல் பதிவை பார்த்துவிட்டு மெயில் அனுப்பியது யார் என்று தெரிஞ்சும் சொல்லாமல் இருந்த பினாத்தல் சுரேஸ்க்கும், மெயில் அனுப்ப உதவிய சிபிக்கும் என் நன்றிகள்.
குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குதான் தண்டனை அதிகம் என்று சொல்லுவாங்க. அப்படி எல்லாம் செஞ்சு விக்கிக்கும், வால் பையனுக்கும், சஞ்சய்க்கும் அதிக தண்டனை கொடுத்துவிடாதீங்க.
டிஸ்கி: மெயில் அனுப்பி விளையாண்டா அது என்னடான்னா, பெண் பதிவர்கள், போட்டோ அது இதுன்னு ஸ்பின் ஆனப்ப கொஞ்சம் பயமாகதான் இருந்துச்சு. அப்படியே மெயிண்டெய்ன் செஞ்சாச்சு.
Subscribe to:
Post Comments (Atom)
50 comments:
அப்படி போடு
இந்த அளவுக்கு மூலைய உபயோகிச்சதால உங்க மேல எனக்கு டவுட் வரல குசும்பனாரே.. எனக்கென்ன்வ்வோ இன்னமும் நீங்க அம்புதான், வில்லு யாரோனு தோணுது.. அதுலயும் தாமிரா மேல பாசம்னு நர்சிம் மாதிரி க்ளூ வேற கொடுத்துருக்கீங்க.. பரிசல், அதிஷா பார்த்து சூதனமா நடந்துக்குங்க..
நன்றி அனானி
************************
கார்கி இன்னுமா நம்மை இந்த உலகம் நம்புது:)))
:-))
அடப்பாவி மக்கா.. :-))
நீங்க செஞ்சதா, நம்பவே முடியலயே. உங்க ரேஞ்ச் கொஞ்சம் ஜாஸ்தி இருக்கும்னு நினைச்சேன், ஆனா சப்புன்னு போய்டுச்சே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............................
இப்போல்லாம் அய்யனார் available இல்ல போல. அதான் புது ஆளை தேடி கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா?
anyways, it was interesting. ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல கும்மி ஒன்னு கெடச்சது நேத்து. ;-)
;-)))...
நல்ல நடந்துங்கப்பு....மத்தவங்கள மண்ட காய வுடறதுல என்ன ஒரு சந்தோஷம்...ஹ்ம்ம்ம்ம...பாத்து உஷாரா இருந்துக்கணும்பா...
// நண்பர் பரிசலை பல்பு வாங்க வைக்கனும் என்று ஆசைப்பட்ட சிங்கப்பூர் வாசிகளுக்காக //
இது யாரு???? இல்ல்ல..அடுத்த பல்பு கடைய சிங்கப்பூர்ல விரிக்க திட்டமா???
மெய்யாலுமா?......... :)
சிங்கப்பூர் காரவுக பாசமும் என் கண்ணை மறைக்குதுண்ணே!
நன்றி சரவணகுமரன்
**************************
மை பிரண்ட் எம்புட்டு நேரம் தான் நல்லவன் மாதிரி நடிக்கமுடியும் நேற்றே சொல்லி இருப்பேன் இருந்தாலு அடிக்கடி ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது.
*********************************
ஆம் மை பிரண்ட் நேற்று மரண கும்மி அடிச்சு அடிச்சு கை வலிச்சுப்போச்சு, கவிதாயினி கவிதை எழுதினப்ப அப்படி அடிச்சது:))
*********************************
rapp said...
நீங்க செஞ்சதா, நம்பவே முடியலயே. உங்க ரேஞ்ச் கொஞ்சம் ஜாஸ்தி இருக்கும்னு நினைச்சேன்.//
ஆங் நீங்க வேற அதுக்காக மன் மோகனுக்கு மெயில் அனுப்பியா விளையாட முடியும்?
******************************
விஜய் ஆனந்த் said...
;-)))...
இது யாரு????//
அதுவா அதிஷாவுக்கு கல்யாணம் என்று சொன்னது போன் செஞ்சு பல்பு வாங்கியவர், யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
*******************************
// குசும்பன் said...
விஜய் ஆனந்த் said...
;-)))...
இது யாரு????//
அதுவா அதிஷாவுக்கு கல்யாணம் என்று சொன்னது போன் செஞ்சு பல்பு வாங்கியவர், யாருன்னு உங்களுக்கு தெரியுமா? //
ஆஹா...ஏன் இந்த க்க்க்கொலவெறி????
நா உங்கள இனி கேள்வி கேக்கல...கேக்கல...கேக்கல..
நான் நேற்றே சொன்னேன் தானே தேவ இரகசியத்த வெளிய சொல்ல வேண்டாம்னு....
இப்படிலாம் பண்ண கூடாதுடா அம்பி...
பிரிசின் பிரேக் ரே்சுக்கு யோசிச்சிருக்கீங்க!!!
:))))
வால்பையனுக்கின்னா போன மாதம் செய்யின், பரிசலுக்கின்னா இம்மாதம் குசும்பன் மூலமே வரும்னு தமிலொள்ளுவர் சொல்லியிருக்கிறார்
:)
//நீங்க வேற அதுக்காக மன் மோகனுக்கு மெயில் அனுப்பியா விளையாட முடியும்?//
அனுப்பித்தான் பாருங்களேன், பல்புன்னா என்னான்னு பொதுமக்கள் தெரிஞ்சுக்க உதவியா இருக்கும்
தல... ஒரு லட்சம் ஹிட்ஸ் தாண்டிட்டீங்க.. என் குருவா பேர காப்பாத்திட்டிங்க... ஸ்டார்ட் மீஸிக்..
" நிலா நிலா ஓடி வா
நில்லாம ஓடி வா"..
இனிமேல மீஸிக்னா இதான்.. ஓக்கேவா?
வெண்பூ அடிச்சு அடிச்சு சொன்னாரு, யோவ்.. அது குசும்பனாதான் இருக்கணும் என்று. நான் தான் "நான் சனிக்கிழமை அனுப்பிய மெயிலுக்கு, ஞாயிறு ரிப்ளை வராமல், திங்கள் வந்ததால் அது குசும்பனா இருக்கிறது அவருக்கு சண்டே வேலை இருக்குல்ல" என்று சொன்னேன்!
பரவாயில்லை.. ஒரு நல்ல மனிதரிதரிடமிருந்து பல்பு வாங்கியதில் பெருமையே!
நேற்று எவன்யா இப்படி விளையாடினது'ன்னு கேட்டப்ப, அவன் இவன்-ன்னு ஏன்
சொல்லணும்? கண்டிப்பா அது எனக்கு நெருக்கமான ஒருத்தர்தான். அக்டோபர் ஆறுக்கு
எவ்ளோ நாள் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் விளையாடலாம்-ன்னு நெனைக்காம, ஒரே ரிப்ளை-ல பாவம் பரிசல்-ன்னு நிறுத்தினதால அவரு என்னோட நல்ல நண்பர்கள்ல ஒருத்தர்தான்- அப்படீன்னு சொன்னேன்!
அப்படிச் சொன்னதுக்காக இப்போ பெருமைப் படறேன்!
தமிழ் பிரியன் நிஜமாதான்.
**********************
சிங்கப்பூர் காரர்கள் ரொம்ப நல்லவர்கள்
**********************
விஜய் ஆனந்த் said...
ஆஹா...ஏன் இந்த க்க்க்கொலவெறி????
நா உங்கள இனி கேள்வி கேக்கல...கேக்கல...கேக்கல..//
கொலவெறி இல்லை பாசம்:)
இப்படி சொன்னா எப்படி கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!!!
****************************
VIKNESHWARAN said...
நான் நேற்றே சொன்னேன் தானே தேவ இரகசியத்த வெளிய சொல்ல வேண்டாம்னு....//
ச்சே ச்சே நீங்கதான் கதை, திரைகதை வசனம் என்று இதுவரை யாரிடமும் சொல்லவில்லை!
*******************************
சுபாஷ் said...
பிரிசின் பிரேக் ரே்சுக்கு யோசிச்சிருக்கீங்க!!!
:))))//
கார் பிரேக் தெரியும், சைக்கிள் பிரேக் தெரியும், ஹாண்ட் பிரேக், தெரியும் அது என்னா பிரிசின் பிரேக்:)))
*********************************
வெயிலான் தங்கள் வருகைக்கு நன்றி
அந்த தமிலொள்ளுவர் நீங்கதானே!!!
********************************
//இரு நல்லவர்கள்//
எப்படி நாக்கு கூசாம இந்த வார்த்தையெ சொன்றிங்க
////நீங்க வேற அதுக்காக மன் மோகனுக்கு மெயில் அனுப்பியா விளையாட முடியும்?////
எங்க குசும்பனைப் பத்தி உங்களுக்குத் தெரியாது!
அவரு அப்துல்கலாம் ஜனாதிபதியாவதற்கு 10 வருஷம் முன்னாடியே ஜனாதிபதியா இருக்க சம்மதமான்னு கேட்டு லெட்டர் போட்ட ஆளு!
//நல்ல மனிதரிதரிடமிருந்து பல்பு வாங்கியதில் பெருமையே!//
ஹா ஹா ஹா இந்த ஒன்னு போதும் 4 நாளுக்கு நிம்மதியா தூங்குவோம்ல...
rapp said...
அனுப்பித்தான் பாருங்களேன், பல்புன்னா என்னான்னு பொதுமக்கள் தெரிஞ்சுக்க உதவியா இருக்கும்//
டியூப் லைட்டையே வாயில் சொருவி விட்டு விடுவார்கள்:)))
***************************
நன்றி நாதாஸ்
**************************
//anyways, it was interesting. //
அக்கா ஏதோ பீர்டர் உடுராங்க.... போதும்கா... எங்கள பார்த்து கெட்ட வார்த்தையில் தானே திட்டுறிங்க...
உள்ளேன் ஐயா
அடுத்த திட்டமாக வெயிலானுக்கு ஒரு பல்பு ரெடியாகிட்டு இருக்கு...
என்னாது 30 தானா?
கொய்ய்ய்ய்ய்யால
//
இது யாரு???? இல்ல்ல..அடுத்த பல்பு கடைய சிங்கப்பூர்ல விரிக்க திட்டமா???//
நாட்டின் பெயரைக் குறிப்பிடுவதில் குசும்பன் பிசகு செய்துவிட்டார்...
எனக்கு ஒரு லவ் மெயில் வந்திச்சே அதுவும் நீதானாய்யா!!
பரிசலுக்கே பல்ப்பா?
இதை நான் கண்டிக்கிறேன்...
பரிசல்காரனை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காரணத்தினால் அவருக்கு ஒரு குவாடர் வாங்கி கொடுக்க பரிந்துரை செய்கிறோம்...
இப்போவாவது ஒத்துகிட்டிங்க்களே
!??????????????
அப்போ எங்களுக்கெல்லாம் கேம்பஸ் இண்டர்வியூ லெட்டர் அனுப்பினவும் நீதானா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)
//சரி என்று அடுத்த ஆள் பினாத்தலாரை கேட்டால் நீ ஜட்டி போட்டு திரிஞ்ச காலத்துலேயே ஸ்டார் ஆகிவிட்டேன் அதனால் இம்புட்டு நாள் எல்லாம் அந்த மெயில் என்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டார், ///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்
நேற்று பரிசலிடம் பேசும்போதே "அது கண்டிப்பா குசும்பனாத்தான் இருக்கும்" என்றேன். அது சரியாக போய்விட்டது. என் சந்தேகம் இருவர் மேல் இருந்தது ஒன்று அப்துல்லா இரண்டு குசும்பன். ஆனால் அப்துல்லா ஆபிஸில் ஆணி அதிகம் என்று புலம்பிக் கொண்டிருந்ததால் நீங்கள்தான் என்று கன்ஃபர்மாக சொன்னேன். :)))))
//ஆயில்யனிடம் தம்பி நான் மெயில் கேட்ட விசயத்தை யாரிடமும் சொன்னீயா என்று கேட்டேன், திரும்பவும் அண்ணே எப்ப ஸ்டார் ஆக போறீங்கன்னு சொல்லுங்க என்று திரும்வும் கேட்க ஆரம்பித்தார், சரி இவருக்கு காந்திய சுட்ட விசயம் தெரியவில்லை போல என்று அடுத்த வாரம் என்றேன்.//
ithu super :))
கலக்கல்
இது இதுதான் உண்மையான குசும்பு
வெடிகுண்டு
முருகேசன்
//கலக்கல்
இது இதுதான் உண்மையான குசும்பு
வெடிகுண்டு
முருகேசன்/
முருகேசா, நேத்து நீதான் பண்ணியிருப்பியோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ஆனா, வெடிகுண்டு தயாரிக்கும் ஆணியில் நீ பிசியாக இருக்கிறாய் என்று தகவல் வந்ததும் நீயாக இருக்க மாட்டாய் என்று யூகித்துக் கொண்டேன். ;-)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. நம்புங்கோ.. :((
தாமிராவையும் சேர்கலாம் என்று நினைச்சேன் ஆனா ஏதோ ஒரு பாசம் கண்ணை மறைத்துவிட்டது.// பாசத்தில் என் கண்ணையும் மறைத்து கண்ணீர் வழியுதுங்க..
திரும்பவும் அண்ணே எப்ப ஸ்டார் ஆக போறீங்கன்னு சொல்லுங்க என்று திரும்வும் கேட்க ஆரம்பித்தார், சரி இவருக்கு காந்திய சுட்ட விசயம் தெரியவில்லை போல என்று அடுத்த வாரம் என்றேன்// ஜூப்பரு..
ராப் :அனுப்பித்தான் பாருங்களேன், பல்புன்னா என்னான்னு பொதுமக்கள் தெரிஞ்சுக்க உதவியா இருக்கும்// பதில் குசும்பன் :டியூப் லைட்டையே வாயில் சொருவி விட்டு விடுவார்கள்:)))// இது பிரமாதம்ங்க.. ராப் பின்ன்றீங்க..
இந்த அளவுக்கு மூலைய உபயோகிச்சதால உங்க மேல எனக்கு டவுட் வரல குசும்பனாரே
//
rppiittu :)))
அட அம்பது அடிக்காம இருக்கு? மீ த 50
அடப்பாவி குசும்பா, மலேசியால இருக்க ஒரு பையனோட சேர்ந்துகிட்டு நீ எல்லா குசும்பையும் செஞ்சுட்டு, சிங்கப்பூர்காரங்கள கோத்துவிடுறியே இது நியாயமா?
ஏற்கனவே புகைப்பட போட்டிக்கு நாங்க ஜெகதீசனுக்காக பூத் கேப்சரிங் செஞ்சதுக்கே பரிசல்காரு எங்க மேல கொலை வெறில இருக்காரு. இதுல இது வேறயா?
அய்யா அகில உலக தமிழ் பதிவர்களே, சிங்கப்பூர் பதிவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க. வேணும்ணா நீங்களே பாருங்க நிஜமா நல்லவருன்னு பெயர்கொண்ட பதிவர் கூட சிங்கை பதிவர் தான். நாங்க எல்லாம் ஏதோ அடிக்கடி சந்திப்பு நடத்துவோம், அல்வா, பஜ்ஜின்னு சாப்புடுவோம். தமிழ அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துறதுன்னு பேசுவோம். ஆனா இப்டியெல்லாம் செய்ய மாட்டோம். எனவே குசும்பர்களின் வலையில் சிக்க வேண்டாம். நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.
Post a Comment