Wednesday, July 22, 2009

ஒரு மேட்டர் ஜோக்கும் பதிவுலக விடைபெறுதலும்!!!

ஒரு தம்பதியனருக்கு இரு பசங்க, இருவரும் எப்பொழுதும் வீட்டுக்குள்ளேயே இருக்க அவுங்க அப்பா அம்மாவால் குஜாலாக இருக்க முடியவில்லை. அப்பா பெரியவனை கூப்பிட்டு 50 பைசாவும் சின்னவனை கூப்பிட்டு 50 பைசாவும் கொடுத்து போய் மிட்டாய் வாங்கி தின்னுட்டு மெதுவா வாங்கன்னு சொன்னாராம். இருவரும் வெளியில் வந்ததும் பெரியவன் சின்னவனிடம் இங்க வா என்று ஜன்னல் பக்கம் கூட்டிக்கிட்டு போய், பாரேன் இப்ப அப்பா அம்மாவுக்கு முத்தம் கொடுப்பார் என்று 5 பைசா பெட் கட்டினான், சின்னவன் இல்லை என்று பெட் கட்ட ஆனால் நடந்தது பெரியவன் சொன்னது போல்....அப்புறம் இதுபோல் ஒன்று ஒன்றாக பெரியவன் சொல்லிக்கிட்டே வர சின்னவனிடம் இருந்தது மீதி 5 பைசா அதுக்கும் பெரியவன் ஒன்னு சொல்லி பெட் கட்ட அவன் சொன்னது போல நடக்கும் என்று தெரிஞ்சதும் சின்னவன் ஜன்னலுக்கு வெளியில் இருந்து அப்பா அப்பா இருங்க ஒன்னும் செய்யாதீங்க அண்ணன் எல்லா காசையும் புடுங்கிக்கிட்டான் மீதி 5 பைசா தான் இருக்கு இதையும் புடுங்கிடுவான் என்று கத்தி காரியத்தை கெடுத்தானாம். அதுபோல்...

பதிவுலகில் யாராவது விடைபெறுகிறேன் என்று பதிவு போட்டால் நாமும் பெட் கட்டலாம்...

பாரேன் இப்ப ஒரு இருவது முப்பது பேர் ஐயா போவாதீங்கன்னு,அம்மா போவாதீங்கன்னு கண்ணீர் விட்டு கதறுவாங்க... இது முதல் ஸ்டெப்

பாரேன் இன்னும் பாதி பேர் தங்கள் முடிவை மறு பரீசிலனை செய்யனும் என்று சொல்லுவாங்க...இது ரெண்டாவது ஸ்டெப்

உங்கள் அன்புக்கு நன்றி, ஆனால் மிகுந்த மனவுளைச்சலில் இருக்கிறேன் என்று ரிப்ளே வரும் பாரேன்-- இது மூன்றாவது ஸ்டெப்

நீங்கள் இல்லை என்றால் பதிவுலகமே இல்லை--- இது நான்காவது ஸ்டெப்

யோசிக்கிறேன் அல்லது மறு பரீசலனை செய்கிறேன், தங்கள் அன்புக்கு கட்டுப்படுகிறேன்,விரைவில் முடிவை அறிவிப்பேன் --- இது ஐந்தாவது ஸ்டெப்

மறுநாள் அல்லது அதே நாள் ஜப்பானில் ஜாக்கிஜான் கூப்பிட்டாக, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக என்று ரீதியில் இவர் இவர்கள் எல்லாம் கூப்பிட்டாங்க அதனால் திரும்ப வருகிறேன் எப்பொழுதும் போல் இயங்குவேன் --- இது கடைசி ஸ்டெப்.

*** சில சமயம் சிலபேருக்கு அழுது கண்ணீர் விட்டு கூப்பிட ஆள் இல்லாமல் ஒருசில நாட்களில் முக்காடு போட்டுக்கிட்டு நைசா அப்படியே பதிவுலக ஜோதியில் ஐக்கியமான ஆட்களும் உண்டு அவர்களை நம்பி பெட் கட்டமுடியாது.

*************************

அதுமாதிரியே பிளாக் ஹேக்கிங், இதுக்கு என்ன என்ன ஸ்டெப்ஸ் என்று சரியா சொல்பவர்களுக்கு எலி புலுக்கை முட்டாய்!


முதல் ஸ்டெப் காக்கா தூக்கிக்கினு போச்சு:)

அடுத்து பதிவுகள் மீட்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன!--விமானம் காணமல் போனா கூட மீட்க நாள் கணக்கில் ஆவும்:)

அடுத்து நண்பர்கள் உதவியால் பதிவுகள் திரும்ப கிடைத்தன என்று செய்தி வரும்.

(இதுக்கு நடுவில் ஹேக்கிங் செய்தி கேட்டு பல பேர் சாப்பிட மனசு இல்லாமல் தூங்காமல் இருப்பது போல் துக்கம் விசாரிப்பார்கள்)

மீண்டும் அனைத்தும் கிடைத்தது! இது அடுத்த ஸ்டெப்! எல்லாம் சுபம்!

இப்பொழுதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் --இது கடைசி ஸ்டெப்பன்ஞ் டயலாக்: சொன்னவன் எவனும் போனது இல்ல, போனவன் எவனும் சொன்னது இல்ல!

Monday, July 20, 2009

”பிரபல” பதிவர் அடிச்ச பல்டி!

இங்கு பொது விடுமுறை நாட்கள் மிகவும் குறைவு, அப்படி என்றாவது கிடைக்கும் விடுமுறை அன்று காலையில் 11 மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு ஏதும் பாடாவதி படத்தை பார்த்து முடித்தால் அன்றைய நாள் முக்கால்வாசி முடிந்திருக்கும் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக கழிந்தது இந்த ஒருநாள் விடுமுறை.

அய்யனார் அப்பா ஆனதுக்கு நேற்று முதல் நாள் இரவு பார்பிகியு டிலைட்ஸில் ட்ரீட் கொடுத்தார் செம கட்டு கட்டிய பிறகு ஆசிப் அண்ணாச்சியோடு நண்பர் வீட்டுக்கு சென்று அங்கு சீட்டு விளையாடினோம், எதிலுமே முதலில் வந்தே பழகிய அண்ணாச்சி இதிலும் முதல் ஆளாக அவுட் ஆகும் பொழுது நானும் சின்னபுள்ளையில் இருந்தே அப்படிதான் என்று அய்யனாரும் ஒரு 80 வாங்கி அவுட் ஆனார், மீதி இருந்த மூன்று ஆட்களில் நான் மிகவும் குறைவாக இருந்தேன் மற்றவர்கள் கம்பலில் இருந்தார்கள், ஜெயிக்கவேண்டிய நான் அண்ணாச்சியின் உதவியால் வெளியேறினேன். விளையாடி முடித்துவிட்டு நான் அய்யனார் இருவரும் ஆசிப் அண்ணாச்சி வீட்டுக்கு சென்று படுக்கும் பொழுது காலை மூன்று மணி,பின் தூங்கி எழுந்து காலை அங்கிருந்து புறப்பட்டு நீச்சல் குளத்துக்கு சென்றோம் போகும் வரை ஏகப்பட்ட ”பில்டப்பு” , அங்கு போய் பார்த்தால் ஒரு ஈ காக்கா இல்லை நாங்க மூன்று பேரும் ஒரு மணி நேரம் ஆட்டம் போட்டோம் , அய்யனார் அந்த குளத்திலேயே டால்பின் பல்டி, தவக்களை பல்டி என்றுவிதவிதமாக பல்டி அடிச்சு வேடிக்கை காட்டி எங்களை மகிழ்ச்சி அடைய செய்தார். (அப்பாடா தலைப்புக்கான மேட்டர் வந்துட்டு) பின் அங்கிருந்து கிளம்பி பதிவர் சந்திப்புக்கு போனோம்.

சந்திப்புக்கு நிறைய புதிவர்கள் வந்திருந்தார்கள் மொத்தம் ஒரு 25 பேருக்கு மேல் இருந்தது, அறிமுகத்தோடு ஆரம்பம் ஆனது,எப்பொழுதும் போல் கேலி கிண்டல்களோடு கொஞ்சம் இந்த முறை சீரியஸான விசயங்கள் பற்றியும் பேசப்பட்டது. சக்தி, வலையுலக குழு, ஆப்பு, ஆப்பரசன் பற்றியும் பேசப்பட்டது.

போனமுறை சந்திப்புக்கு வாசகராக வந்த நாகா இந்த முறை பதிவராக வந்தார் குறைந்த பதிவுகளே எழுதி இருந்தாலும் நன்றாக எழுதி இருப்பதாக அய்யனார் சொன்னார். (வேற யார் சொல்லி இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்திருக்கும் ஆனாஅய்யனார் என்கிற பொழுது கொஞ்சம் பயமாக இருக்கிறது).
போனமுறை கொஞ்சம் பேசிய வினோத் இந்த முறை மிகவும் குறைவாக பேசினார், அப்படி பேசியதும் எனக்கு ஆப்பாக அமைந்தது.

புதியவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன என்று கேட்டதற்கு

வினோத் எங்கே பேசினால் பெரிய பதிவர்கள் தொல்லையாக நினைப்பார்களோ என்றும், தொலைப்பேசி எண்கள் எல்லாம் தொலைஞ்சுவிட்டது என்று குசும்பன் போட்ட பதிவை பார்த்து போன் செய்யவும் பயம், அவரை ஆன் லைனில் பார்த்து ஒரு ஹாய் சொல்லவும் பயமாக இருந்ததுஎன்று சொல்ல இப்பொழுது வரை தொடர்கிறது அண்ணாச்சியின் ஆட்டம். “பிரபல பதிவர் குசும்பன் சார் பேசலாமா சார்” ”பயமா இருக்கு சார்” ”சார் உங்களை ஒருமுறை தொட்டு பார்த்துக்கவா சார்” என்று அய்யனாரும் ஆசிப்பும் மாறி மாறி கிண்டல் செய்தார்கள்.
செந்தில் எழுதிய ஒரு நல்ல பதிவுக்கு சென்னை பதிவர் ஒருவர் கிண்டலாக கமெண்ட் போட்டதை நாகா இப்படி செய்தால் எப்படி? என்று வருத்தப்பட்டார்.நான் எங்கேயும் ரொம்ப சீரியஸாக கமெண்ட் போட்டது இல்லை, பைத்தியக்காரன், சுந்தர் பதிவாக இருந்தாலுமே அங்கு கிண்டலாக கமெண்ட்தான் போட்டுவருகிறேன், கிண்டலோ,சீரியஸோ எதாக இருந்தாலும் லைட்டாக எடுத்துக்குங்க என்றேன். சீரியஸ் பதிவுலும் எப்படி நக்கல் செய்தார் என்று ரசியுங்கள் என்றேன்.
கலையரசன் இங்கிருந்து பழய ஆட்களே புதியவர்களான எங்களை கண்டுப்பது இல்லை ஏன் அப்படி என்றார்? அறிமுகம், பழக்கம் இல்லாமல் ஏதும் கருத்து சொன்னால்வந்துட்டாருடா பெரும் பதிவர் கருத்து சொல்லன்னு தப்பாக புரிஞ்ச்சுக்க வாய்பு இருப்பதால் தான் என்றார் அண்ணாச்சி.

ஒருவர் நீங்க எழுதிய பதிவுகளிலேயே எதை பெஸ்ட் என்று சொல்லுங்க என்றார், இப்படி எல்லாம் பொதுவில் வைத்து மானாத்தை வாங்காதீங்க என்றேன்.

கனாகாலம் சுந்தர் மசால் வடையை மட்டும் கொடுக்க வந்தவர் போல் எதுவும் பேசாமல் இருந்தார், அதுபோல் படகும், ஈழத்து நண்பரும் அறிமுகத்தில் பேசியதோடு சரி அதன் பிறகு வாயை திறக்கவே இல்லை.
அனானி கமெண்ட் ஆப்சனை எடுங்க என்று உ.த சொன்னதை ஏன் நீங்க கேட்கவில்லை இன்னும் உங்க பிளாக்கில் அனானி ஆப்சன் இருக்கு என்றார், நான் மிகவும் விரும்புவது அனானி ஆப்சன் வேறு வேறு பெயர்களில் கமெண்ட் கிலானி,மன்மோகன் சிங், இப்படி எல்லாம் கமெண்ட் போட எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இதுவரை அதை திட்ட பயன் படுத்தியது இல்லை அப்படியிருக்க அதை ஏன் நான் நீக்கவேண்டும் அப்படி நீக்குவதற்கும் நான் எதிரி என்றேன்.

பின் 8.30 மணிக்கு எல்லோரும் எஸ்கேப் ஆனோம்!

Thursday, July 16, 2009

அமீரக பதிவர்கள் சந்திப்பு!

அண்ணாச்சி ஆசிப் அழைக்கிறார் அலை கடல் என திரண்டு வரவும்!

வரும் ஞாயிற்று கிழமை அண்ணாச்சி அனைவருக்கும் ட்ரீட் தரவேண்டும் என்று ஆசைப்படுவதாலும், சுந்தர் ராமன் வீட்டில் ஞாயிறு மாலை மசால் வடை செய்வதால் அதை சாப்பிடவும் அனைவரையும் அழைக்கவேண்டும் என்று அவர் பிரியப்படுகிறார், ஆகையால் அனைவரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு கராமா பார்க்கில் கூடி மொக்கை போடலாம்.

(சில பல பதிவுகளுக்கு முன் என் மொபைலில் ஏற்பட்ட பிரச்சினையால் அனைவரது நம்பரும் போய்விட்டது விருப்ப படுபவர்கள் நம்பர் கொடுக்கலாம் என்றேன் இதுவரை ஒருவரும் கொடுக்கவில்லை நல்லா இருங்க!) ஆகையால் இதையே நேராக அழைத்த மாதிரி கருதி அண்ணாச்சி, வந்துவிடவும்.

டிஸ்கி: சுந்தர்ராமன் தாங்களுக்கு ஏதும் அவசரவேலை வந்தாலும் வீட்டு அட்ரெஸ் சொல்லிட்டா நாங்களே போய் வாங்கி வந்துப்போம்!

இடம்: கராமா பார்க்

நேரம்: மாலை 6 மணி

தேதி 19/7/2009


துபாய் தொடர்புகளுக்கு
குசும்பன்-- 050-6940046
கலை--050-7174360
ஷார்ஜா தொடர்புகளுக்கு
சென்ஷி---050 314 60 41

ஸ்பான்சர்ஸ்: ஆசிப், சுந்தர்ராமன்,அய்யனார்

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்!

Wednesday, July 15, 2009

கொடுத்து வெச்சு இருக்கனும்!!!

இது நான் செஞ்ச அமிர்தம் (ரவா இட்லி) போட்டோ!
மனைவி வீட்டில் இல்லாத பொழுதுதாவது நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று உங்களுக்கு தோனுமா? அப்ப உங்களுக்குதான் இந்த பதிவு.மனைவி எங்கேயும் என்னை விட்டு போவது இல்லை ஆனா அவுங்க அம்மா அப்பா தங்கச்சிக்கிட்ட மட்டும் போனில் பேச மொபைல் எடுத்துக்கிட்டு மாடிக்கு போவாங்க அந்த கொஞ்ச நேர கேப்தான் கிடைக்கும் என்று சொல்பவரா நீங்க? அப்ப உங்களுக்கு இந்த பதிவு மேட்ச் ஆவும்.அவுங்க அம்மா வீட்டுக்கு போனில் பேச ஆரம்பிச்சா குறைஞ்சது ஒரு 2 மணி நேர கேப் உங்களுக்கு கிடைக்கும் அது போதும் சூப்பரா ரவா இட்லி செய்ய!ரவா இட்லி செய்வது எப்படி?இரண்டு டம்ளர் ரவாவை பொன் நிறமாக வறுக்கவும் கொஞ்சம் அசந்தாலும் ரவா நம்ம கலருக்கு வந்துடும் ஜாக்கிரதை! மனைவி இல்லாதப்ப ராவா மட்டும் தான் அடிக்க தெரியும் ரவா எல்லாம் வறுக்க தெரியாதுன்னா ஒன்னும் செய்யமுடியாது. உங்களை எல்லாம் உருட்டி உருட்டி அடிக்கனும்!ஒரு கேரட்டை எடுத்து நைஸாக சிப்ஸ் கட்டரில் வைத்து சீவிக்கவும், ஒரு நாலு பச்சை மிளகாயை எடுத்து சின்னதாக வெட்டிக்கவும், கொஞ்சம் கொத்தமல்லி இலை, பீன்ஸ் ஒரு ரெண்டு பீன்ஸ் அதையும் சின்ன சின்னதாக வெட்டிக்கனும். (மெல்லிசாக என்பதைதான் சின்னதாகன்னு சொல்லி இருக்கேன்)அடுப்பில் சட்டியை வைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடானதும் மிளகு, கடலைபருப்பு போட்டு வறுத்து பின் அதோடு வெட்டி வைத்த காய்கள் அனைத்தையும் போட்டு கொஞ்சம் வதக்கிக்கவும். பின் அது ஆறியதும் வறுத்துவெச்ச ரவாவோடு உப்பு போட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தயிர்(புளிக்காத தயிர்) சேர்த்து பிசையவும். பின் அதோடு ஒரு பாக்கெட் Eno கொட்டி பிசையவும்


இட்லிமாவு பதம் வந்ததும் தயிர் சேர்ப்பதை நிறுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும் ரவா ஊறி கொஞ்சம் கெட்டியாக இருக்கும் பின் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் தயிர் போட்டு குழைத்துவிட்டு இட்லி தட்டில் கொஞ்சம் நெய் ஊற்றி அதன் மேல் மாவை ஊற்றவும். வெந்ததும் எடுத்துவிடவும்.அப்படியே சுட சுட சாப்பிட்டா சும்மா கும்கதான்னு இருக்கும் தொட்டுக்க தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.

தேவையானவை:
ரவா இரண்டு டம்ளர்
பச்சை மிளகாய் 4
பீன்ஸ் 2
கேரட் 1
மிளகு
கடலைபருப்பு
தயிர்
Eno


டிஸ்கி: மங்களூரான், சஞ்சய் போன்ற ஆட்கள் அவசியம் செய்யவேண்டிய டிபன் ஐட்டம்!


டிஸ்கி2: சக்திவேல் போன்றவர்கள் கமெடி பதிவு எழுதும் பொழுது நாம எல்லாம் என்ன எழுதுவது அதான் சமையல் குறிப்பு பதிவு! ஒரே ஒரு பதிவின் மூலம் பதிவுல சூட்டை குறைத்த அண்ணன் சக்திக்கு ரசிகர்மன்றம் துபாயில் ஆரம்பிச்சாச்சு என்பதை உங்களுக்கு சொல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்!

Sunday, July 12, 2009

ஜ்யோவ்ராம் சுந்தரின் அத்துமீறல்+ அராஜகம்

பதிவு டெலிட்டட்!!! (இப்ப இதுதான் பேசன் என்பதால் நானும்!!!)


மாமா பிஸ்கோத்து!!!
டிஸ்கி: தமிழ்மணம் புள்ளிவிபரம்மொத்தப் பதிவுகள் : 5490
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 278
(இது புதுசு) ஒரு நாளில் எழுதப்பட்டு டெலிட் செய்யப்பட்ட இடுகைகள்:10020

Sunday, July 5, 2009

சாரு புத்தகம் ஏன் எனக்கு வேண்டாம்?

"சென்னை 2 சிங்கப்பூர்"
"வாங்க பிரபலமாகலாம்"
"உங்கள் எழுத்துகள் பரவலாக சென்றடைய"

இவை எதுக்குன்னு சரியா முதலில் சொல்லும் ஐந்து நபர்களுக்கு 250ரூபாய்க்கு புத்தகம் பரிசுன்னு தமிழ்வெளி அறிவிச்சு இருந்தது.

அதுக்கு நானும் ஒரு மெயில் அனுப்பி இருந்தேன் போனா போகுதுன்னு நமக்கும் பரிசு கொடுத்து இருக்காங்க மொத்தம் 8 பேரை வெற்றி பெற்றவர்களாக அறிவிச்சு இருக்காங்க. கடைசியா நம்ம பேரு. எப்பொழுதும் கடைசி இடம் எனக்குதான் என்று ரிசர்வ் செஞ்சு வெச்சு இருப்பாங்க போல எங்கேயும்.

1. டி.சுரேஷ்குமார்
2. அருணா
3. லக்கிலுக்
4. சென்பகராமன் பி.வி
5. முத்தமிழ்செல்வன்
6. தருமி
7. நா.ஜெயசங்கர்
8. குசும்பன்

அதுக்கு பரிசாக சாருவின் காமரூப கதைகளை அனுப்பிவிடலாமா என்று
நண்பர் கேட்டதுக்கு அய்யா ராசா அப்படி ஏதும் செஞ்சுடாதீங்க ஸ்கூல் படிக்கும் பொழுதுதான் செக்ஸ் புக்க புத்தகத்துக்குள் ஒளிச்சு வெச்சு இருந்தான், கல்யாணம் ஆகியும் நம்ம பய இன்னும் திருந்தவில்லை போல,
பார்சலில் வாங்கி எல்லாம் படிக்கிறான் என்று நினைச்சு மனசு ஒடிஞ்சு போய்விட போறார் என்றேன்!

ஆகையால் தான் சாருவின் காமரூப கதைகள் வேண்டாம் என்றேன். சரிதானே:)))

குற்ற உணர்ச்சி + பதிவர்சந்திப்பும்

பதிவர் சந்திப்பு என்றாலே அவரை சந்திக்க இயலாமல் போனது பற்றியும் என் அலட்சியம் பற்றியும் தான் குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. சிங்கையில் இருந்து அவர் வரும் முன்பே நண்பன் மூலம் அண்ணன் வருகிறார் பார்த்துக்க என்றான். சரி என்றேன் வந்ததும் போன் செய்தார் அவர்கள் சொந்தகாரர் வீட்டில்தான் தங்கி இருக்கிறேன் பார்க்கலாம் என்றார், அதன் பிறகு போனிலும் சாட்டிலும் மட்டுமே பேசிக்கிட்டு இருந்தோம், பல சமயம் அவராகவே போன் செய்தார் வெளியில் ஹோட்டலுக்கு போகலாம் என்றார், ஏனோ சந்திக்கமுடியவில்லை, என் கல்யாணநாள் அன்றுகூட போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு ட்ரீட் தருகிறேன் குடும்பத்தோடு வாங்க என்றார் அன்றும் முடியவில்லை . திரும்ப நான் போன் செய்திருக்கனும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் போன் செய்யமுடியாமல் போய்விட்டது. அத்தனை மாதத்தில் நானாவது அவரை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கனும் அதுவும் செய்யவில்லை, திரும்ப போன் செய்தாவது எங்கயாவது சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கனும் அதுவும் செய்யவில்லை ஏன் என்று தெரியவில்லை. அது எதனால் என்று ஆயிரம் காரணம் கண்டு பிடித்து காரணத்தை காட்டி தப்பிக்கலாம் என்றாலும் காரணம் எதுவும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை என்னை மன்னியுங்கள் வடுவூர் குமார் அண்ணாச்சி! உங்களிடம் அதன்பிறகு பேசினாலும் அடிக்கடி இது நினைவுக்கு வருகிறது. இங்கு நடந்த பதிவர் சந்திப்பு பற்றி கூட எழுத மனம் இல்லாமல் இருந்ததுக்கு இதுதான் காரணம்.

சில வாரங்களுக்கு முன்பு புதிய பதிவர்கள் சந்திப்புக்கு மாலை ஆறு மணிக்கு கராமா பார்க்கில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, வழக்கம் போல் என்னுடைய புது மொபைலான i-mate செத்துப்போச்சு, (ஓசியில் கொடுத்தாலும் இதை வாங்காதீங்க) பதிவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சரி சமாளிச்சுக்கலாம் என்று நான் என் நண்பர் சிவராமனும் பஸ் புடிச்சு கராமா பார்க்குக்கு சரியாக 6 மணிக்கு வந்தோம், அங்கு ஏற்கனவே கண்ணா,வினோத், கலை, சுந்தர்ராமன், ஆகியோ அங்கிருந்தார்கள், பார்த்ததும் தெரிஞ்சுவிட்டது இவர்கள்தான் புது பதிவர்கள் என்று, பின் அய்யனார், ஆசாத், அசோக்,அவருடைய நண்பர், பின் நாகா, செந்தில்வேலன், பிரதீப் மற்றும் லியோ சுரேஷ் ஆகியோருடன் சந்திப்பு துவங்கியது.

சுந்தர்ராமன் கொண்டு வந்திருந்த மசால்வடையை சாப்பிட்டுக்கிட்டே பேசிக்கிட்டு இருந்தோம், அய்யனார் கட்டுடைப்பு பற்றி போட்ட மொக்கை தாங்க முடியாமல் கலையும், பிரதீப்பும் ஜூஸ் வாங்கி வருகிறோம் என்று கிளம்பியவர்கள் ஒரு மணி நேரம் கழித்து வந்தார்கள் அப்பொழுதும் அய்யனார் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்க வேறு வழி இன்றி அமர்ந்தார்கள்.

மணி 8.30 ஆகிவிட வினோத் அலைன் போகனும் என்பதால் சீக்கிரம் முடிச்சோம். அய்யனார், ஆசாத் இருவரை தவிர அனைவரும் புதியவர்கள்
புதிய பதிவர்களை பார்ப்பது இதுதான் முதல் முறை. மிகவும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.

கலந்துக்கொண்டவர்கள்

கலந்துகொண்ட பதிவர்கள் -
1. அய்யணார் 2. ஆசாத் 3. கண்ணா4. சுந்தர்ராமன்5. வினோத் கெளதம்6. பிரதீப் 7. செந்தில்வேலன்8. சிவராமன்9. கலையரசன் 10. லியோ சுரேஷ்
11 அஷோக் குமார்,12. நாகா,13. ஜெயக்குமார்

*****************
அடுத்த சந்திப்பு இராகவன் நைஜீரியா அவர்களால் நடந்தது, நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு போகும் வழியில் துபாய் வந்ததால் இந்த சந்திப்பு நடந்தது. ஹோட்டலுக்கு வந்ததும் போன் செய்தார் ஆபிஸில் கிளைண்ட் கூட மீட்டிங் என்று சொல்லிட்டு அப்படியே எஸ் ஆகி அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றேன் பின் அவர்களை அழைத்துக்கொண்டு கோல்ட் சூக் அழைத்து சென்று நகை வாங்கிக்கொண்டு பின் ரூமில் விட்டுவிட்டு திரும்ப அலுவலகம் வந்தேன், மாலை 7 மணிக்கு பதிவர்களை சந்திக்கலாம் என்று இராகவன் சொல்லி இருந்தார் அதன் படி நானும் சுந்தர் ராமன் இருவரும் சென்றோம், அங்கு ஏற்கனவே வந்திருந்த கலை தூரத்தில் நாங்கள் தூக்கி வரும் பார்சல்களை பார்த்துவிட்டு திரும்பி நின்னுக்கிட்டு கிட்டக்க போனதும் அப்பொழுதுதான் பார்த்த மாதிரி மெதுவாக ஓடி வந்து வடை இருந்த பையை மட்டும் வாங்கிக்கொண்டார். (நாலு வடை மிஸ்ஸிங்).


பின் இராகவனுக்கு கேமிராவும், சட்டையும் வாங்க சென்றோம் Sharaf DGயில் வாங்கி கொண்டு இருக்கும் பொழுதே ஆசாத் வந்துவிட அவசர அவசரமாக கிளம்பி போனோம், ஹோட்டலுக்கு அருகில் வந்துவிட்டோம் என்று நினைத்து ஒரு பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே காரை பார்க்கிங் கண்டதும் நிறுத்திவிட்டார் சுந்தர், பிறகுதான் தெரிஞ்சுது அது என் நடை அழகை ரசிக்க நடந்த சதின்னு, பதினாறு வயதினிலே கமல் மாதிரி இடுப்பில் இருந்த மூச்சுப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் நடந்ததை பார்த்து ரசிக்க கலையின் சதியினால் சுந்தர் செய்தது என்று பிறகு தெரிஞ்சுக்கிட்டேன்.


நாங்கள் அங்கு போன பொழுது பிரதீப்,கண்ணா,நாகா ஆகியோரும் வந்திருந்தார்கள் இராகவன் மகன் அரவிந் கூட அனைவரும் பேசிக்கிட்டு இருந்தார்கள். பின் அபுஅப்ஸர் வந்தார். இராகவன் அவர் இருக்கும் நைஜீரியா பற்றி சொன்னார் போனா அந்த ஊருக்குதான் போகனும் என்று முடிவு செஞ்சுட்டேன் ஏன்னா நான் அங்க போனா அங்க நான் தான் வெள்ளைகாரனாம்.


இராகவன் கூட முன்பு வேலை பார்த்த நண்பர் ஒருவர் வந்திருந்தார் அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு இருந்தார் இவர்களை ஒருவரை கூட இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா என்று, அவருக்கு ஆச்சரியம் முன்பின் பார்த்து பழக்கம் இல்லாத நபரை சந்திக்க இத்தனை பேரா என்று? அவருக்கு என்ன தெரியும் பதிவுலக சொந்தங்களை பற்றி???


டிஸ்கி: மகிழ்ச்சியான செய்தி திரும்ப என் மொபைல் செத்துபோனது அதனால் அதில் இருந்த நம்பர் அனைத்தும் போய்விட்டது, திரும்ப மொக்கை போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்க நம்பரை கொடுக்கலாம். அல்லது போன் செய்யலாம்:)

Thursday, July 2, 2009

பதிவர் சந்திப்பு கார்ட்டூன்ஸ் சென்னை + துபாய்கீழே இருப்பது துபாயில் நடந்த சந்திப்பு போட்டோ

வினோத் ஏன் அலைன் கைப்புள்ள என்று என்னிடம் கேட்காதீங்க அப்புறம் அவரை அலைனில் நாலு அரபி பசங்க அடிச்சதையும் அப்புறம் வாட்டர் சர்விஸ் செஞ்சு விட்டதையும் பற்றி சொல்லவேண்டி இருக்கும் ஆகையால் என்னிடம் எதையும் கேட்காதீங்க!