Sunday, July 5, 2009

சாரு புத்தகம் ஏன் எனக்கு வேண்டாம்?

"சென்னை 2 சிங்கப்பூர்"
"வாங்க பிரபலமாகலாம்"
"உங்கள் எழுத்துகள் பரவலாக சென்றடைய"

இவை எதுக்குன்னு சரியா முதலில் சொல்லும் ஐந்து நபர்களுக்கு 250ரூபாய்க்கு புத்தகம் பரிசுன்னு தமிழ்வெளி அறிவிச்சு இருந்தது.

அதுக்கு நானும் ஒரு மெயில் அனுப்பி இருந்தேன் போனா போகுதுன்னு நமக்கும் பரிசு கொடுத்து இருக்காங்க மொத்தம் 8 பேரை வெற்றி பெற்றவர்களாக அறிவிச்சு இருக்காங்க. கடைசியா நம்ம பேரு. எப்பொழுதும் கடைசி இடம் எனக்குதான் என்று ரிசர்வ் செஞ்சு வெச்சு இருப்பாங்க போல எங்கேயும்.

1. டி.சுரேஷ்குமார்
2. அருணா
3. லக்கிலுக்
4. சென்பகராமன் பி.வி
5. முத்தமிழ்செல்வன்
6. தருமி
7. நா.ஜெயசங்கர்
8. குசும்பன்

அதுக்கு பரிசாக சாருவின் காமரூப கதைகளை அனுப்பிவிடலாமா என்று
நண்பர் கேட்டதுக்கு அய்யா ராசா அப்படி ஏதும் செஞ்சுடாதீங்க ஸ்கூல் படிக்கும் பொழுதுதான் செக்ஸ் புக்க புத்தகத்துக்குள் ஒளிச்சு வெச்சு இருந்தான், கல்யாணம் ஆகியும் நம்ம பய இன்னும் திருந்தவில்லை போல,
பார்சலில் வாங்கி எல்லாம் படிக்கிறான் என்று நினைச்சு மனசு ஒடிஞ்சு போய்விட போறார் என்றேன்!

ஆகையால் தான் சாருவின் காமரூப கதைகள் வேண்டாம் என்றேன். சரிதானே:)))

34 comments:

said...

:) வாழ்த்துகள் !

சாருவை சரோஜாதேவை ரேஞ்சுக்கு எங்கேயோ கொண்டு போய்டிங்களே......அவ்வ்வ்வ்வ்வ்வ்...அவரது வாசகர்கள் புண்படப் போறாங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

said...

அண்ணே நான் சொன்னது காமரூப கதைகள் புத்தகத்தை!

said...

அண்ணனுக்கு சாருவோட காமரூப கதைகள் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் :)

said...

:) வாழ்த்துகள் !

said...

உனக்கு பரிசு குடுக்குறதுக்காக நான் ஒரு புத்தகம் எழுதிகிட்டு இருக்கேன் மாப்பி. வெய்ட் ஃபார் 2 மந்த்ஸ்.

said...

இப்படியெல்லாம் கிளப்பிவிட்டு அப்புறம் இங்கிருக்க ஷேக்கு அமிரகத்தில அந்த புத்தகத்தை தடை பண்ணிர போறாரு தலைவா........

said...

வாழ்த்துகள் குசும்பன் !! அந்தப் புத்தகம் வேணும்னா கேட்டு வாங்குங்க... வேண்டாம்னு ஏன் நெகடிவ் பில்டப்பு? (எப்பூடி.... ப்ளேட்டைத் திருப்பி உட்டம்ல...)

said...

இதுக்கு பேசாம விஜிராம் ப்ளாக ப்ரிண்ட் போட்டு குடுத்திருக்கலாம் உனக்கு.

:))))))))))))))))))

said...

வாழ்த்துக்கள் தல

said...

விற்காத சரக்கைத்தான் இலவசமாகவோ பரிசாகவோ கொடுக்கிறாங்கன்னு மார்க்கெட்டிங்க் டெக்னிக்ன்னு கேள்வி.

ஆமா முதல்ல வந்தவங்க கடைசியா வந்தவங்க எல்லாருக்கும் அதே பொஸ்தகம்தானா?

said...

வாழ்த்துக்கள் / வாழ்த்துக்கள் பாஸ்.

said...

சரியா சொன்னீங்க பாஸூ.. வாழ்த்துக்கள், ராசியான 8 நம்பர்ல வந்ததற்க்கு!!

said...

வாழ்த்துக்கள் நண்பா.

said...

வாத்துகள்.!

said...

"கோவி.கண்ணன் said...
:) வாழ்த்துகள் !

சாருவை சரோஜாதேவை ரேஞ்சுக்கு எங்கேயோ கொண்டு போய்டிங்களே......அவ்வ்வ்வ்வ்வ்வ்...அவரது வாசகர்கள் புண்படப் போறாங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !"

அந்த புத்தகத்தை எழுதிய இலக்கியவாதி யாருங்க .......

ஹி ஹி ஹி ஹி

said...

வாழ்த்துக்கள்

said...

ஹிஹிஹி..

said...

வாழ்த்துக்கள்:)

said...

அடப்பாவிகளா சாரு புத்தகத்தை கலாய்க்கிற அளவுக்கு போயிட்டிங்களா இருங்க இருங்க சாருகிட்ட சொல்றேன்...

said...

எனக்கு பரிசு கிடைச்சிருச்சுனு ஊருலகத்துக்கு சொல்றதுக்கு-கும் தலைப்புல சாருவா?

வாழ்த்துக்கள் குசும்பன் சாரு!

said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் அண்ணே ;)

said...

VANAKAM

said...

சாருவோட அனைத்து புத்தகங்களும் உங்களுக்காகவே எழுதப்பட்டது தல!

said...

சென்னை 2 சிங்கப்பூர்"
"வாங்க பிரபலமாகலாம்"
"உங்கள் எழுத்துகள் பரவலாக சென்றடைய"
இவை எதுக்குன்னு சரியா முதலில் சொல்லும் ஐந்து நபர்களுக்கு 250ரூபாய்க்கு புத்தகம் பரிசுன்னு தமிழ்வெளி அறிவிச்சு இருந்தது. ////

ஆமா, அவை எதற்கு?

said...

nanba, kadaisi 4-5 blog padichu kanula thanni vara alavukku sirichuten. athuvum officela :-)

said...

வாழ்த்துக்கள் நண்பா , ஆமா பரிசு எதுக்காக

said...

அது சரி!

:)

எல்லாரும் கேட்டுக்குங்க!
குசும்பன்
நல்லவரு
நல்லவரு
நல்லவரு!

said...

அன்புள்ள குசும்பன்,

எல்லாவற்றையும் நகைச்சுவைப்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு அமைப்பை அதில் பங்கேற்பவர்களை ஊக்கப்படு்த்துவதற்காக வழங்குகிற பரிசை மறுப்பது அவர்களின் உற்சாகத்தை குறைப்பதோடு தார்மீக ரீதியாகவும் சரியல்ல என்றே நான் நினைக்கிறேன். மேலும் உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசை நீங்கள் விரும்பவில்லையெனில் அதை தனிமடலாக சம்பந்தப்பட்டவர்களுக்கு மாத்திரம் தெரிவித்து இருக்கலாம். இப்படி அதற்கும் ஒரு பதிவை எழுதி எல்லோரையும் கோமாளியாக்கியிருக்க வேண்டியதில்லை. ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதன் தலைப்பை மாத்திரம் கொண்டு முன்முடிவோடு அணுகுவதும் சரியல்ல.

இவ்வளவும் எதற்கு என்றால்...

உங்களுக்கு பிடிக்காத பரிசை மறுக்காமல் வாங்கி உங்களுக்கு பிடித்த நண்பருக்கு பரிசளிக்கலாம். நான் கூட உங்கள் நண்பர்தான். :-)))

said...

சென்ஷி அவ்வ்வ்வ்வ்வ்

ஜெகதீசன் நன்றி

சோசப்பு என்பெயரை 108 முறை எழுது புண்ணியமாவது கிடைக்கும், அதை விட்டு புத்தகம் எழுதி பாவத்தை சேர்த்துக்காத:))


ஆதவா மாலைமலரையே தடை செஞ்ச ஆளுங்க இதை விட்டு விடுவாங்களா?:)))

அண்ணே மகேஷ் அண்ணே ஏன் இப்படி? திரும்பி பார்சல் உங்களுக்கே வரும் சாக்கிரதை!

யோவ் மங்களூர் இப்படி அந்த பிளாக் பேரை தப்பா சொன்னா நீ விஜி பிளாக்கை படிப்பது இல்லை என்று நாங்க நம்பிடுவோமா? அடிங்க!

நன்றி நர்சிம்

ராஜ நடராஜன் அப்படி இல்லை சும்மா நண்பருடன் ஜாலிக்காக பேசியது இது:) பரிசு வேற கொடுப்பாங்க!

நாஞ்சில் நாதம் நன்றி பாஸ்

நன்றி கலை

நன்றி இனியவன்

நன்றி ஆதி

Mayvee புக் நேம் ஆத்தர் நேம் எல்லாம் ஒன்னுதான், இது தெரியாம இம்புட்டு நாளா இருக்கீங்க:(((

நம்ம மோகன் நன்றி:))

நன்றி வினோத்

நன்றி குழலி, சின்னபுள்ளய இப்படியா பயமுறுத்துவது?:((


வெயிலான் ஹி ஹி ஹி சும்மா ஒரு இதுக்குதான்:)))நன்றி

நன்றி வடுவூர் குமார்

நன்றி கோபிநாத்

நன்றி அக்பர்

நன்றி வால் வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து படிப்போம்:)))

நன்றி பப்பு அது போட்டிக்கான முன்னோட்டம்:)

நண்பா இரவு கவி அங்க போனதுக்கு அப்புறம் எங்க ஆளயே கானும் என்று நினைச்சேன், ஏதும் அமெரிக்கா பொண்ணோட செட்டில் ஆயிட்டியா?

நன்றி சுந்தர்

நன்றி சுரேகா:) ஏலம் போடுவது மாதிரி இருக்கு!


**************
சுரேஷ் கண்ணன் said...
அன்புள்ள குசும்பன்,

எல்லாவற்றையும் நகைச்சுவைப்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறேன்.//

நல்லாதானே போய்க்கிட்டு இருந்துச்சு:)

//ஊக்கப்படு்த்துவதற்காக வழங்குகிற பரிசை மறுப்பது //
நான் எங்கங்க மறுத்தேன்!

//ஒரு பதிவை எழுதி எல்லோரையும் கோமாளியாக்கியிருக்க வேண்டியதில்லை. // ஆஹா எல்லோரையும் அப்படி ஆக்கியாச்சுன்னு சொல்றீங்க:)

//ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதன் தலைப்பை மாத்திரம் கொண்டு முன்முடிவோடு அணுகுவதும் சரியல்ல//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//வாங்கி உங்களுக்கு பிடித்த நண்பருக்கு பரிசளிக்கலாம். நான் கூட உங்கள் நண்பர்தான். :-)))//

அண்ணாச்சி ஆசிப்பின் மரத்தடி அறிவுஜீவி நண்பர்களில் உங்க பெயரும் இருக்கிறது(நேற்று போட்ட பதிவில்) அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி?:))) ஏதோ நீங்க சொன்னா சரிதான் எசமான்!

said...

வர வர ஹிட்ஸ் கூட்ட சாருவும் உபயோகப்படுறார். நல்லா இருங்க...

said...

//
1. டி.சுரேஷ்குமார்
2. அருணா
3. லக்கிலுக்
4. சென்பகராமன் பி.வி
5. முத்தமிழ்செல்வன்
6. தருமி
7. நா.ஜெயசங்கர்
8. குசும்பன்
//
ஆஹா..
நா கலந்துக்கவே இல்லையே..
என்னோடபேற மொதோ ஆளா போட்டிருக்காய்ங்க..

said...

வணக்கம் நண்பர் குசும்பன்
சரியான பன்ச் தான்,மழை விட்டும் தூவானம் விடவில்லை என்னும் கதையாய்
இன்னும் வேட்டுச்சத்தம் கேட்கிறதே.
நணபர் கலக்கல் கலை மூலம் உங்களை பற்றி அறிந்து இங்கு வந்தேன்.
தொடர்ந்து நட்புக்கரம் கொடுப்போம்.
துபாய் பதிவர் பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன்.
நன்றி
கார்த்திகேயன்
ஷார்ஜா

said...

வணக்கம் நண்பர் கண்ணா
அருமையான
படம்க,ஜோடீ பாஸ்டரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும்
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு கூடும்.நல்ல எழுத்து
நணபர் கலக்கல் கலை மூலம் உங்களை பற்றி அறிந்து இங்கு வந்தேன்.
தொடர்ந்து நட்புக்கரம் கொடுப்போம்.
துபாய் பதிவர் பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன்.
நன்றி
கார்த்திகேயன்
ஷார்ஜா
http://geethappriyan.blogspot.com/2009/07/reservoir-dogs199218.html