மிஸ்கின் படம்+ட்ரைலரும் ஆக்சன் மூவி மாதிரி நல்லாதான் இருக்கு. ஏமாத்திட மாட்டாருன்னு நம்பி போனேன். போகும் பொழுதே மனைவியிடம் நம்ம ஆளுங்க இங்கிலீஸ் படத்தில் சூப்பர் மேன், பேட் மேன் எல்லாம் சாகசம் செஞ்சா அடாடா சூப்பருன்னு சொல்லுவாங்க, தமிழ்படத்தில் என்றால் 1000 நொட்டை சொல்லுவாங்க, மிஸ்கின் அப்படி எல்லாம் சொதப்ப மாட்டாருன்னு நினைக்கிறேன் என்று சொல்லிக்கிட்டே போனேன்.
படம் முடிந்து வெளியே வந்த +Suresh Babu அய்யய்யோ சாவடிச்சிட்டான் என்றுசொன்ன பொழுது என் நம்பிக்கை வலுத்தது..பினாத்தலார் மொக்கைன்னு சொன்னா படம் சுமாராகவாச்சும் இருக்கும் என்று நம்பினேன்
முகமூடி போட்டு ஒரு வீட்டில் கொள்ளை.. சுத்தியலால் அடித்து கொலை என்று கொஞ்சம் கிரிஸ்பியா ஆரம்பிச்சிது...வழக்கம்போல் ஜீவா இந்த படத்திலும் வேலை வெட்டி இல்லாத தறுதலையா இருக்காரு...பார்த்ததும் ஒரு பொண்ணு மேல லவ் வந்துடுது, ஆனா அந்த பொண்ணு இவரை ஒரு ரவுடியாக நினைக்குது அதுனால முகமூடி போட்டுக்கிட்டு போய் டாவ் அடிக்க நினைக்கிறாரு...கொஞ்சம் ஒர்கவுட் ஆனதும் அடுத்த நாளும் அப்படி முகமூடி போட்டுக்கிட்டு போறாரு.அந்த பொண்ணும் இவர் மூஞ்சை பார்க்கலாம் என்று நினைச்சி ஒளிஞ்சிக்கிட்டு இருந்து குஞ்சை மட்டும் பார்த்துடுது. முக்கியமான மேட்டரையே பார்த்துட்டோம் நெக்ஸ்டைம் மூஞ்ச பார்த்துடுவோம் என்று நினைச்சிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில்தான் வைக்கிறாரு ஒரு ட்விஸ்ட்..
இந்த இடத்தில் ஹீரோயினை பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும்...மார்க்கெட்ல ஜீவாவை போலீஸ்கிட்ட பிடிச்சிக்கொடுக்கும் சீன்ல மூஞ்சை காட்டாமலேயே அடுத்த சீன் போய் இருப்பார்...அதுமாதிரி கடைசி வரை அந்த மூஞ்சை காட்டாமலேயே இருந்திருக்கலாம். அஞ்சாதே படத்தில் வரும் மொட்டை கடைசி வரை முகத்தை காட்டாத மாதிரி இதையும் செஞ்சிருக்கலாம்... இல்லாட்டி ஜீவா போட்டு இருக்கும் முகமூடி மாதிரி இதுக்கும் ஒண்ணு செஞ்சி மாட்டிவுட்டு இருக்கலாம்.
சரி கதைக்கு வருவோம்..அப்படியாப்பட்ட நேரத்தில் முகமூடி ட்ரஸ்ஸோட இவர் ஓடிப்போய் கொள்ளைக்கார்களில் ஒருவனை புடிச்சி போலீஸ்கிட்ட ஒப்படைக்கிறார். வில்லன் போலீஸை கொல்ல வரும் பொழுது அந்த இடத்தில் இவரு முகமுடி இல்லாம போய் பழிய இவர்மேல வாங்கிக்கிறாரு...அதிலிருந்து இவரு எப்படி எஸ்கேப் ஆகிறார் என்கிறதுதான் கதை.
கண்ணதாசன் காரைக்குடி பாட்டும் பார் சாங்தான்..அது கொஞ்சம் ரியலா இருக்கும்...இதுலயேயும் ஒரு பார் சாங் செட்டிங் முதல் எல்லாம் ரொம்ப மோசமா தெரியுது. அதுமாதிரி எவ்வளோநாள் தான் வெளிநாட்டு சீடி பார்த்து படம் எடுப்பதுன்னு வெளிநாட்டுக்கும் போயிடனும் என்று நினைச்சிட்டாரு போல வாயமூடி சும்மா இருடா பாட்டுக்கு சம்மந்தமே இல்லாத மாதிரி வெளிநாட்டுல ஷூட்டிங்.பார்க்க ரொம்ப கேவலமா இருக்கு..மிஷ்கின் படத்துல பாட்டு இதுமாதிரி இருக்காது.
நான் லாஜிக், மண்ணாங்கட்டிக்குள் எல்லாம் போகவிரும்பவில்லை...அட்லீஸ்ட் எடுத்துக்கிட்ட கதைய சுவாரஸ்யமா சொல்லியிருக்கலாம்..ஜீவாவுக்கு நேரம் சரியில்லையா? இல்ல எனக்கு நேரம் சரியில்லையான்னு தெரியல..போய் மாட்டிக்கிட்டேன்.
வில்லன் சுத்தியலால் அடிச்சி எல்லாரையும் கொல்றாரு.. அப்படியே படம் பார்வர்களையும்.