Thursday, January 12, 2012

நண்பன்


இப்படி ஒரு விஜயை பார்த்து எவ்வளோ நாள் ஆச்சி. இதுக்காகவே அமீர்கானுக்கு நன்றி சொல்லனும். கடைசியாக விஜய் நடித்து பார்த்த படம் திருப்பாச்சி, அதன் பிறகு விஜய் படத்தை டீவியில் கூட பார்த்தது இல்லை. ஷங்கர் டைரக்சன், 3 இடியட்ஸ் ரீமேக் என்பதால் நம்பிபோகலாம் என்று நேற்று இரவு போனேன்.


படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை கொஞ்சம் கூட போர் அடிக்காமல் செம ஜாலியா போச்சு, இப்படி என்ஜாய் செஞ்சி, தியேட்டரில் இருந்த அனைவரும் செமயா சிரிச்சி கடைசியாக பார்த்த படம் எதுவென்று நினைவில் இல்லை.

படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவங்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருக்கலாம், என்னய்யா அப்படியே சீன் பை சீன் காப்பி அடிச்சிருக்காங்க, மில்லிமீட்டர் பேரைக்கூடவா காப்பி அடிப்பாங்க, சத்யராஜ் ஷேவ் செய்துக்கும் பொழுது போடும் பாட்டு ட்ராக்கை கூட மாற்றம் இல்ல இப்படி படம் எடுக்க எதுக்கு ஷங்கர், ஜெயம் ரவி அண்ணன் ராஜா போதுமே என்று எல்லாம் சொல்லுவாங்க. சரி சங்கர் கொஞ்சம் மாத்தி அப்படி இப்படி டிங்கரிங் செஞ்சி எடுத்தா...ச்சே திரி இடியட்ஸ் எப்படி இருக்கும் தெரியுமா? கெடுத்துட்டாங்கய்யான்னு சொல்லுவாங்க.

எனக்கு படத்துல பெருசா எதுவும் குறை இல்ல, கொடுத்த காசுக்கு சந்தோசமா சிரிச்சி ரசிச்சி படம் பார்த்தாச்சு.

சத்யராஜ் அவர் இயல்பா பேசி நடிச்சிருந்தாலே செமயா இருந்திருக்கும், அவரு ஹிந்தியில் பேசும் ஆள்மாதிரியே பேச ட்ரை செஞ்சதுதான் கொஞ்சம் சொதப்பல்.


"திருக்குறள் சைஸ்க்கு ப்ளாஷ் பேக் சொல்றான் பாரு" "நீ யாரு? இவனுக்கு அக்கா" மாதிரியான டயலாக்குகள் ரசிக்க வைக்கின்றன.

சைலன்சருக்கு சத்யன் செமயா செட் ஆவுறாரு...ஶ்ரீகாந்த் மட்டும் கொஞ்சம் சொதப்பல்.

நண்பன் பார்க்கும் பொழுது 3 இடியட்ஸ் வெச்சி கம்பேர் செய்யாம படம் பாருங்க...நிச்சயம் படம் பிடிக்கும்.
7 comments:

said...

ok

said...

சைலன்சருக்கு சத்யன் செமயா செட் ஆவுறா//// உங்க பிலாக் பேரு சைலன்சர் ரூம்ல எழுதியிருக்குமே ....

said...

ஓகே பிரதர்..!

said...

இங்கயும் ரிலீஸ் ஆகியிருக்கு பாத்துடவேண்டியதுதான்.

said...

ம்..பார்த்துட‌லாம்..

said...

ம்...

said...

அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் இரண்டுமே தொப்பை உள்ள 5 அறிவு ஜந்துக்கள்...........

தவளை:- இனி வரும் படங்களில் நடிக்க முயற்ச்சி பண்ணுவேன்.
நிருபர் :- நடக்க முயற்ச்சி பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்.

தளபதி :- எல்லாம் நன்மைக்கே ( நண்பன்)
தவளை :- யாரோ படம் எடுக்கிறார்கள் எனக்கு பெயர் வந்திடுது( வாலி, வரலாறு, பில்லா)

தளபதி சொன்னது : - நடப்பது உடல் ஆரோகியத்துக்கு நல்லது
தவளை சொன்னது :- நடப்பது ஏன் படத்துக்கு நல்லது!!!!!!!!!!!

நடிக்க சொல்லி வற்புறுத்திய சக்ரி, மூட் அவுட் ஆனா அசித்!! இயல்பாக இருக்கனும் நடிக்க கூடாதேன்கிறது அவர் கொள்கை போல!

அஜித் :- இனி கவுதம் படங்களில் நடிக்க மாட்டேன்.
நிருபர் :- சார், சும்மா காமடி பண்ணாதிங்க. வேற எந்த படத்திலை நடித்து இருக்கிறிங்க???

சக்ரி :- நீ தளபதி மாதிரி நடனம் ஆடவும் இல்லை சூர்யா அளவுக்கு நடிக்கவும் இல்லை.
தவளை :- அப்போ நான் ஓரளவாவது செய்து இருக்றேன். எல்லாரும் நல்லாக கேட்டுகொள்ளுங்க, கேட்டுகொள்ளுங்க...........

சக்ரி :- பில்லாவில் பார்வதி ஓமகுட்டான் தான் உங்களுக்கு ஜோடி.
தவளை :- பார்வதி மட்டும் போதும் ஓமகுட்டான் வேண்டாம்.

நிருபர் :- ஆக்சன் படத்தில ஏன் ராஜசேகரை ஒளிபதிவாளர் ஆக்கினீர்கள்?
சக்ரி :- அப்படியாவது தொப்பையை மறைக்கலாம என்றுதான்.

விஷ்ணுவர்த்தன் :- இந்த சீனில நீங்க கண்டிப்பா நடித்து ஆகணும்.
அசித் :- இது டூயட் சீன் எதுக்கு கண்டிப்பா? அன்பா நடிக்கிறன்...