Tuesday, March 25, 2008

தற்காலிக பிரிவு+ஊர் பெருமை+ சுயதம்பட்டம் + எதிர்வினை + எச்சரிக்கை + நன்றி நன்றி நன்றி

தற்காலிக பிரிவு

சில பல பிரச்சினைகளுக்கு விடிவாக இருந்தது இந்த குசும்பு ஒன்லியும், கும்மி அடிப்பதும் அதற்க்கு எல்லாம் தற்காலிகமாக விடுப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது,வரும் ஏப்ரல் 16 திருமணம் என்பதால் வரும் 28 ஆம் தேதி இந்தியா வருகிறேன். சென்னையில் இரு தினங்கள் இருந்து சக பதிவுலக நண்பர்களை எல்லாம் சந்தித்துவிட்டுஊருக்கு போக போகிறேன்.

ஊர் பெருமை

இந்த தற்காலிக விடுப்பு, பதிவுலகுக்கு டாட்டா என்று எல்லாம் பதிவு போட்டால் அதில் 1% கூட உண்மையாக இருக்காது ஆனால் நம்முடைய விசயத்தில் அப்படி எல்லாம் கிடையாதுஏன்னா நம்ம ஊரில் இந்த ரொம்ப பழய டெக்னாலாஜியான இண்டர் நெட் எல்லாம் கிடையாது .லேட்டஸ் டெக்லாஜியான போஸ்ட் மேன் மட்டும் தான்(பக்கத்து ஊரை விட நாங்க கொஞ்சம் பிபின் தங்கி தான் இருக்கோம் ஏன் என்றால் அவுங்க புறா டெக்னாலஜி யூஸ் செய்கிறார்கள்).இன்னொரு முக்கியமான விசயம்மொபைலில் பேசனும் என்றாகே வீட்டை விட்டு வெளியே வந்துதான் பேசனும், ஏன்னா வீட்டுக்குள்ள எல்லாம் சிக்னல் கிடைச்சா அனைவருக்கு தொந்திரவு என்று அப்படி ஒரு விசேச ஏற்பாடு. ஆகையால் மொபைலுக்கு கால் செய்ய நினைத்து தொடர்பு கொள்ளும் பொழுது “தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்று மெசேஜ் வந்தால் நான் வீட்டுக்குள்ள இருக்கிறேன் என்று அர்த்தம்:)

அடங்கொய்யாலே அப்படியா பட்ட ஊரா உன் ஊரு என்று கேள்வி கேட்கனும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.. எங்க ஊரின் இந்த கடைசியில் இருந்து பார்த்தால் முப்பது வீடு இருக்கும் அப்படியே ஓடி போய் அந்த கடைசியில் இருந்தா பார்த்தால் ஒரு முப்பது வீடு இருக்கும்.. அப்படியே மரத்து மேல ஏறிக்கிட்டு டாப் ஆங்கிலில் இருந்து பார்த்தா ஒரு முப்பது வீடு இருக்கும் அம்புட்டு பெரிய ஊரு. ஊரில் வந்து ஒரு சின்ன புள்ளைக்கிட்ட கேட்டாலும் எங்க வீட்டை காட்டும். (இருக்கிற முப்பது பேருல இதுகூடவா தெரியாம இருப்பாங்க). கேட்கும் பொழுது துபாய் சரவணன் என்று கேட்கவும்.

இப்படியா பட்ட ஹை பை ஊரில் இருந்து இந்த ஓல்ட் டெக்னாலாஜ் ஆன இண்டர் நெட் யூஸ் செய்யனும் என்றால் பஸ் புடிச்சு கும்பகோணம் அல்லது திருவாருர் போகனும் இரண்டுமேகுறைந்தது 20 கிலோ மீட்டர் தூரம்...(யாருய்யா அது பஸ் புடிக்க எத்தனை கிலோ மீட்டர் போகனும் என்று கேள்வி கேட்பது). ஆகையால் கல்யாணம் முடிஞ்சு இருக்கும் பல வேலைகளில்இந்த பதிவு போடுவது, கும்மி அடிப்பது என்பது எல்லாம் இயலாத காரியம்.

ஆகையால் உங்களுக்கு எல்லாம் 40 நாட்கள் விடுப்பு கொடுக்கிறேன். (***அதன் பிறகு மனைவி அனுமதி கொடுத்தால் அப்ப அப்ப கைப்புள்ள மாதிரி எட்டி பார்த்துவிட்டு போகிறேன்).

பயோடேட்டா

பெயர் : சரவணவேல்

வயது : திருமணம் செய்யும் வயதுதான்

தொழில் : கும்மி அடிப்பது

உப தொழில் : வெப் டிசைன் செய்வது

பிடித்த இடம் : கும்மியும் கும்மி சார்ந்த பகுதியும்

பிடிக்காத இடம்: சண்டைகளும், சண்டை சார்ந்த பகுதியும்

நண்பர்கள் : பதிவுலகில் அனைவரும்

எதிரி : அய்யனாரை ரொம்ப நல்லா எழுதுறீங்கன்னு சொல்பவர்கள்

சாதனை : ஒருவரிடமும் திட்டு வாங்காமல் நக்கல் அடித்தது

சோதனை : சமீபத்தில் தமிழச்சி வைத்தது

வேதனை : கொசு கடித்தால் சின்னதாக வீங்கி இருப்பது போல் இருக்கும் சின்ன தொப்பை, லேசா முன்னாடி விழுந்து இருக்கும் சொட்டை.

பிடித்த பாடல்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...

முனு முனுக்கும் பாடல் : எல்லோரும் மாவாட்ட கத்துகிடனும்...

போன் நம்பர் : 9486614890

எதிர்வினை

எப்பொழுதும் அய்யானார் பதிவு போடும் பொழுது எதிர் பதிவு போடுவது அவரை கலாய்பது என்று இருந்த நான் அவர் திருமணம் செய்யும் பொழுது மட்டும் எதிர் வினை செய்யாமல்இருந்தால் நாளை வரலாறு தவறாக பேசும் என்பதால் அவர் திருமணம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் செய்ய போகிறேன். இதைவிட சிறந்த எதிர் வினை எதுவும் இருக்கமுடியாது.

எச்சரிக்கை
என் மெயில் லிஸ்டில், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மறக்காமல் தனி தனியாக பத்திரிக்கை அனுப்பி இருக்கிறேன், யாருடையதாவது விட்டு போய் இருந்தால் மன்னிக்கவும்,இதையே கல்யாண அழைப்பாக வைத்துக்கவும். முக்கியமான விசயம் சிலர் மெயிலில் தானே பத்திரிக்கை அனுப்பினேன் என்பதால் மொய்யைய்யும் மெயிலிலே அனுப்பிடலாம்என்று நினைத்து பல பேர் மெயிலில் பல நாட்டு கரண்சிகளை அனுப்புகிறார்கள் அவுங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்..எங்க சின்னம்மா ஊரில் மொய் வைக்கவில்லை என்றால் மைக் செட்டில் முதலில் சொல்லுவாங்களாம் அப்படியும் வந்து மொய் வைக்காதவங்க வீட்டுக்கு அந்த ஊர் தலையாரி போய் வசூல் செய்வாராம்... அப்படியா பட்ட சொந்தகாரர்களை உடைய ஆள் நான், அம்புட்டுதான் என்னால சொல்ல முடியும் அதன் பிறகு உங்க இஷ்டம்:))) **** முக்கியமாக இம்சை, TBCD,கோவி.கண்ணன்,மங்களூர் சிறுசு, பொடியன் ,நந்து, ஸ்ரீதருக்காக.

நன்றி நன்றி நன்றி

பத்திரிக்கை அனுப்பும் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்த நண்பர்கள்,எதுவும் கேட்காமலே தானே முன்வந்து உதவிசெய்த சிவா அண்ணன், ராமசந்திரன் (இரவு கவி), அய்ஸ், ஆசிப் அண்ணாச்சி, பிரகாஷ் , சிவா மற்றும் பல நண்பர்களுக்கும்.

திருமணத்துக்காக வெள்ளி அன்று நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்து
வாழ்த்தி விடைகொடுத்த திரு. அப்துல் ஜாபர், திரு. சுல்தான் , ஆசிப் அண்ணாச்சி, பினாத்தல் சுரேஷ், லொடுக்கு,இஷாக், முத்துகுமரன்,ஜெஸில்லா, வாசி, கோபி, சென்ஷி,தம்பி, அசோக் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.


நாளை இரவு 10.30 க்கு பிளைட். வெள்ளி காலை சென்னை வருகிறேன்.
சென்னையில் பாலபாரதியும், லக்கியும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் ஞாயிறு மாலை காந்தி சிலைக்கு அருகில்.

மீண்டும் சந்திக்கும் வரை எல்லோருக்கும் டாட்டா பை பை.

Saturday, March 22, 2008

பூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....

பூங்கா இதழ் வெகு நாட்களாக வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதை புதுவடிவில் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அது எப்படி என்றுஒரு கற்பனை. முன்பு எல்லாம் பதிவு போட்ட பின்புதான் அது பூங்காவில் வரும் இனி சிறந்த எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது, அதன் பின்பேஅதை பதிவில் போட அனுமதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

முதல் ஆளாக போய் அவர்கள் சந்திப்பது நமது ஓசை செல்லா அண்ணாச்சியை...

நிர்வாகி : வணக்கம் ஓசை செல்லா

ஓசை : வணக்கம்!

நிர்வாகி: பூங்கா இதழில் வெளியிட ஒரு கட்டுரை எழுதி தரவேண்டும்...

ஓசை : அடா அடா கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க, இப்பதான் 5 நிமிடம் முன்பு இனி எழுத போவது இல்லை என்றும், இனி ஆடியோ பதிவு மட்டும் தான் என்றும் முடிவு செய்து இருக்கிறேன்.

நிர்வாகி: மனதுக்குள் ஆமா மனசுல பெரிய பின்லேடன், வீரப்பன் என்று நினைப்பு ஆடியோ மட்டும்தான் ரிலீஸ் செய்வார்!(சும்மா உட்கார்ந்துக்கிட்டு கடிகாரத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறார்)

ஓசை: என்னா கடிகாரத்தையே பார்கிறீர்கள்?

நிர்வாகி: இல்லை எப்படியும் இன்னும் 5 நிமிடத்தில் முடிவு மாத்திப்பீங்க அதான் வெயிட்டீங், போய் திரும்ப எல்லாம் வருவது கஷ்டமாச்சே அதான்.

ஓசை : டக்க்குன்னு ஒரு பேப்பரில் ஓல பாயில் ஒன்னுக்கு அடிக்கும் அய்யானார் என்று எழுதி தர...

நிர்வாகி: தலைப்பு ஓக்கே பதிவு?

ஓசை: அதேதான் தலைப்பு அதே தான் பதிவு.. அந்த ஒன்னுக்கு என்பதை மட்டும் சைஸ் 36ல் போட்டுக்குங்க, அடிக்கும் என்பதை 26ல் போட்டுக்குங்க. முடிஞ்சா ஒவ்வொருஎழுத்தும் ஒவ்வொரு, மாதிரி இருக்கனும்.

நிர்வாகி: ரைட்டுங்க அப்ப கிளம்புறேன்.

*****************************************************
அடுத்து அவர் போய் சந்திக்கும் ஆள் கோவி.கண்ணன்

நிர்வாகி: வணக்கம்

கோவி: வணக்கம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க, நலமா?

நிர்வாகி: மிக்க நலம், நீங்க பூங்காவுக்கு ஒரு கட்டுரை எழுதி தரவேண்டுமே!

கோவி: அடா அடா நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க,நான் இனி 9.9.9999 ல் தான் எழுத போவதாக முடிவு எடுத்து இருக்கிறேன். அதுவரை நோ அழுகாச்சி, நோ பீளிங்ஸ்.

நிர்வாகி: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க:(

கோவி: சோக ஸ்மைலி கூட வேண்டாமே!!! ஆமாங்க கடைசி வரி எப்பயும் எழுத பட்டு இருக்காது என்பது உங்களுக்கு தெரியாதா?

நிர்வாகி: ங்கே... சரிங்க அப்ப கிளம்புறேன்.

கோவி: என்னங்க கிளம்பிட்டீங்க, இருங்க இருங்க.

நிர்வாகி: அதான் எழுத மாட்டேன் என்று சொல்லிட்டீங்க அப்புறம் என்னா செய்வது.

கோவி: இருங்க சிஸ்டம் டேட்டை 9.9.9999ன்னு மாத்திட்டுட்டு எழுதி தருகிறேன்.

*******************************************
அடுத்து அவர் சந்திப்பது அய்யனார்.

நிர்வாகி: வணக்கம்

அய்யனார்: என்னய்யா இது பார்த்த உடனே வணக்கம் என்று சொல்லனும் என்று ஏதும் சட்டம் இருக்கா, எவன்யா இதை கொண்டுவந்தது, வணக்கம் சொல்லிதான் பேச்சை ஆரம்பிக்கனும் என்று எவன்யாசொன்னது, சன் டீவி நியூஸ், ரேடியோ நியூஸ் எல்லாத்திலும் இப்படிதான் வணக்கம் சொல்லிட்டு செய்தியே படிக்க ஆரம்பிக்கிறாங்க..முதல்ல இதை எல்லாம் சிதைக்கனும்.

நிர்வாகி: இவ்வளோ பேசினதுக்கு ஒரு வணக்கம் சொல்லி இருக்கலாம்.

அய்யனார்: இவ்வளோ சொல்லியும் உனக்கு புரியலையா? அப்ப நீ அதிகார மையத்தின் மேல் அமர்ந்து இருக்கிறாய்.

நிர்வாகி: சரிங்க போதும் நான் கிளம்புறேன்...

அய்யனார்: என்னா வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்புறீங்க?

நிர்வாகி: இல்லீங்க இதுவரைக்கும் நீங்க பேசினதே போதும்...

அய்யனார்: என்னய்யா இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள டயர்ட் ஆனா எப்படி இருங்க ஒரு புல் அடிச்சுக்கிட்டே பேசலாம்.

நிர்வாகி: வேண்டாம் பிறகு அப்புறம் இந்த பதிவு எழுத ஆன செலவு என்று ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் +ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் என்று எழுதி கொடுப்பீங்க நான் ஜகா வாங்கிக்கிறேன்.

*******************************************************************
வசந்தம் ரவி

நிர்வாகி: வணக்கம்

வசந்தம் ரவி: வணக்கம், நானே உங்களை சந்திக்கனும் என்று நினைச்சேன்.

நிர்வாகி: ஏன்?

வசந்தம் ரவி: இல்லை தமிழ்மணத்துக்கு 1001 யோசனைகள் என்று ஒரு நோட்ஸ் போட்டு இருக்கிறேன் அதான்...

நிர்வாகி: இதோட நீங்க மட்டும் 10001 யோசனை சொல்லி இருக்கீங்க அதுபத்தாதுன்னு இது வேறயா?

வசந்தம் ரவி: இப்ப புதுசா Uk Top 10 ரேட்டிங் என்று இருக்கு அதுல எப்படி உங்க பதிவை வர வைப்பது எப்படின்னு யோசனை சொல்ல போறேன்.

நிர்வாகி: அது படத்துக்குதானே ரேட்டிங் கொடுப்பான் அதுல எப்படி?

வசந்தம் ரவி: அங்கதான் நிக்கிறேன் நான் உங்க போஸ்ட்ல ஒரு படத்த போட்டு அதுக்கு ஹிட் கொடுத்தா அங்க வரும்..

நிர்வாகி: சரிங்க அப்ப கிளம்புறேன்..

வசந்தம் ரவி: என்ன வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்பிட்டீங்க.

நிர்வாகி: எங்கய்யா என்னை பேச விடுகிறீர்கள் :(((

****************************************************************

சுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்கனும் என்று நிர்வாகி நினைத்தார் ஆனால் நேரம் இன்மையால் பிறகு வாங்கிக்கலாம் என்று ஜகா வாங்கிக்கிறார்.

Wednesday, March 12, 2008

செம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.

இதை பார்த்தும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் ..................ஒன்னியும் சொல்ல முடியாது.வாடா என் மச்சி வாழைக்கா பச்சி உன் தோலை உறிச்சி போட்டுவிடுவேன் பச்சி. அப்படி என்று சொல்லிக்கிட்டு அடிக்கும் பொழுது அவரு போடும் ஸ்டெப்பை பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.
கடைசியில் மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் முட்டிப்பது போல் முட்டிக்கிட்டீங்களா இல்லையா?:)

ஸ்கூலில் படிக்கும் பொழுது எல்லாம் இந்த மாதிரி வசனங்கள் மிகவும் பிரபலம்.

கும்தலக்கடி கும்மா இதை வாங்கிக்க டா சும்மா

Wednesday, March 5, 2008

ஜாலியா ஒரு கும்மி மேளா!!!

முதன் முதலாக என்னை எதிர் கவுஜனாக்கியது இவன் தான் முதன் முதலில் அவன் எழுதிய கவிதைக்கு நான் எழுதிய எதிர் கவுஜ (பிளாக் ஆரம்பிக்கும் முன்பு எழுதியது)

பின் அவன் போட்டோவை எனக்கு மெயில் அனுப்ப அதை வைத்து கார்டூன் குசும்பு இதுவும் பிளாக் எல்லாம் ஆரம்பிக்கும் முன்பு செய்தது... இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீங்களா இப்படி அவனை வைத்து நான் செய்த சோதனையின் விளைவாகவே இன்று பிளாக் எழுதுகிறேன்... அப்படியா பட்ட நல்லவனை பிளாக் ஆரம்பிக்க வெச்சாச்சு.

அவனுடைய வலைப்பூவில் நாம கும்மி மேளா நடத்தி அவனுக்கு நாமா யாருன்னு காட்டவேண்டாமா?

இரா பிச்சை சாரி சாரி இரவு கவி இங்கன கும்ம அனைவரையும் இரு கரம் கூப்பி வருக வருக என்று அன்போடு அழைக்கிறேன்.