Monday, January 28, 2008

ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?

என்னம்மா இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய் வா சேர்ந்து சாப்பிடலாம்!

இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!

**********************

என்னம்மா இன்னைக்கு ஸ்பெசல்!

சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!

அவ்வளோதானா?

முடியலைங்க!


இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!


**************************

என்னம்மா சாப்பிடலாமா?

இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன் ஆம்லேட் போடுறேன்.

இது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க!


********************************
என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்க எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே!

ஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்யனுமா?


இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!


*******************************

என்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க?


முட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய! சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!


இது ஒரு மூன்று வருடம் ஆனது!

***********************************

என்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல!

ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு! இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!


******************************

என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க!

இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!


*******************************

என்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்!

அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!


இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!

********************************

இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:)

ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது என்றும் ஆசிப் அண்ணாச்சி சொல்கிறார், பெரியவங்க சொன்னா சரியாகதான் இருக்கும் போல. (அண்ணாச்சி நீங்க பொடிசு இல்ல, பொடிசு இல்ல:) என்னை மன்னிக்கலாம்!!!)


ரெடி ஸ்டார்ட் மியூஜிக்!!!

Wednesday, January 23, 2008

வலைபதிவர்களை பற்றி வலையுலக கிசு கிசு கிசு கிசு

ஜன்னலில் வந்து அமர்ந்த சிட்டு குருவி ஏய் ஏய் என்று கூப்பிட தூக்கத்தில் இருந்து விழித்தேன் உனக்கு சேதி தெரியுமா என்று கேட்டது?

என்னா சேதி? என்று நான் கேட்க!

எல்லை காவல் தெய்வத்தின் பெயரை உடைய வலை பதிவர் ஒருவருக்கும் அவருடைய மாமன் மகளுக்கும் வரும் மார்ச் மாதம் கல்யாணம் நடந்தாலும் நடக்குமாம் வூட்டுபெருசுங்க பையனோட சிக்னலுக்காக வெயிட்டிங்காம்.
இவரும் போக ரெடி ஆயிட்டே இருக்காராம்.

ம்ம் அப்புறம் என்னா இது தெரிஞ்ச விசயம் தானே புச்சா ஏதும் இருந்தா சொல்லு என்று நான் கேட்க.

மாதவன் நடிச்ச படத்தின் பெயரை கொண்ட ஒரு பதிவருக்கு தினமும் ஒரு பெண்ணிடம் இருந்து மெயிலா வந்து குவியுதாம் சாட்டிலும் அன்பு மழை பொழிகிறார்களாம் அவரும் யாருன்னு புரியாம மெர்சாகி பாக்கிறவனை போனில் பேசுகிறவனை எல்லாம் அவளா நீ? என்று கேட்டு டார்சர் கொடுக்கிறாராம்.

ம்ம் ஓவரா பொண்ணுங்க கூட சாடியதால் சாட்டோபோபியா போல விடு நல்ல டாக்டரை பார்க்க சொல்லலாம்.

மழை பெய்யும் பொழுது மட்டும் வந்து மறையும் ஒன்றினை வலைபதிவு பெயராக கொண்ட பதிவருக்கு லீவ் கிடைக்காததால் நிச்சயம் செய்து வைத்த பெண் வெயிட்டிங் மாதம் பாதி சம்பளம் போன் பில்லுக்கே கொடுக்கிறாராம் அதனால் தான் அவரை முன்பு போல் வலை பதிவு பக்கம் பார்க்க முடிவது இல்லையாம்.

அடா அடா அதான் எப்பொழுதும் அவருக்கு போன் செய்தாலும் போனில் சார்ஜ் இல்லை என்று கட் ஆகிவிடுகிறதா? சரி அப்புறம்?

அப்புறம் சின்னபசங்க பெயரில் வலம் வந்தவரும் சமீபத்தில் பெயரை மாற்றியவருமான ஒருவர் ஸ்டேஜில் ஒரு அழகிய பெண்ணுடன் போட்ட குத்தாட்டத்தை ஒரு குட்டி பெண்ணுடைய அப்பா பதிவு செஞ்சு வெச்சு இருக்கிறார் எனக்கும் அதை போட்டு காட்டினார் அப்பா அப்பா என்னா டான்ஸ் என்னா டான்ஸ் அதை கேட்டதுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டார் ஆனால் தனியாக மெயில் அனுப்பி கேட்டால் கொடுப்பார்!!! ஆனால் செம கிளாமராக இருப்பதால் அதை பதிவில் போட முடியாது!

அப்ப அது வீக் எண்ட் பதிவு போடும் பதிவர் கையில் கொடுத்தால் போதும் என்று சொல்லு!!! அப்புறம் வேற என்னா விசயம்!

உனக்கு தெரியுமா மொக்கை பதிவரும் எல்லோரையும் கலாய்க்கும் பதிவர் ஒருவர் அவர் பத்து வருடமாக லவ்ஸ் உட்ட பெண்ணையே வரும் ஏப்ரல் மாதம் கல்லாணம் கட்டி வெச்சுடலாம் என்றுமுடிவு செஞ்சு இருக்கிறார்களாம் ஆனா இன்னும் தேதிதான் முடிவு ஆகவில்லையாம்.

அட இத முதலில் சொல்லாம வேறு எதை எதையோ சொல்லிக்கிட்டு இருக்க சரி பொண்ணு எங்க இருக்கு அந்த டீட்டெய்ல் எல்லாம் கொடு.

அவரு எப்பொழுதும் தான் மட்டும் அடிவாங்காமல் கூட இருப்பவர்களுக்கும் அடிவாங்கி கொடுத்துவிட்டு பிறகு தான் அடிவாங்கிக்கும் நல்ல உள்ளம் படைத்தவர் அதனால் தான் அப்படி சொன்னேன், அப்புறம் அந்த பெண் டீட்டெயில் எல்லாம் கொடுத்தால் என்னை புடிச்சு சூப் வெச்சு குடிக்கவா நான் மாட்டேன் பத்திரிக்கை அடிச்சு எல்லாம் முடிஞ்ச பிறகு அவரே சொல்வார் அதுவரை வெயிட்டீஸ்.
டாட்டா பை பை என்று சொல்லிட்டு பறந்து போய்விட்டது!!!

Sunday, January 20, 2008

கமலஹாசனையே நேரில் கலாய்த்த பதிவருடன் ஒரு பேட்டி!!!

நம் வலைபதிவர் ஒருவர் கமலஹாசனையே நேரில் கலாய்த்து இருக்கிறார் அவர் யார்? இதுவரை சத்தமே இல்லாமல் இது போல் ஒரு சாதனையை செய்துவிட்டு நம்மோடு உலாவி இருக்கிறார்.

அவர் தான் பொடியன் என்கிற சஞ்ஜெய் இனி அவருடன் ஒரு பேட்டி!!!

சீனா தாத்தா: ஹலோ மிஸ்டர் சஞ்செய் நேற்று நீங்க போட்ட குரல் "சோதனை" பதிவு பலரையும் சோதனை செய்துவிட்டதாக எல்லோரும் பேசிக்கிறாங்களே அது பற்றி உங்கள் கருத்து?

பொடியன்: உலகம் ஆயிரம் சொல்லும் என்னால் பல டாக்டர் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது அது உங்களுக்கு தெரியுமா?

சீனா தாத்தா: அப்படியா? ஆச்சர்யமாக இருக்கிறதே எப்படி?

பொடியன்: நேற்று என் குரல் பதிவை கேட்ட பலருக்கு காது அடைப்பு ஏற்பட்டது அதை நீக்க டாக்டரிடம் தானே செல்லவேண்டும்!!!

சீனா தாத்தா: (அடைப்பு வந்தா அதுக்காக காவா அடைப்பு எடுப்பவனையா கூப்பிடமுடியும்) ஹோ சரி சரி! நீங்க உங்க பதிவில் நீங்க பேசும் பொழுது நீங்களே காதை பொத்திக்கிட்டு பேசுவதாக சொல்லி இருக்கீங்க ஆனா எதிரே இருப்பவர்கள் மூக்கை பொத்திக்கிறார்களே ஏன்?

பொடியன்: நோ கமெண்ட்ஸ்

சீனா தாத்தா: நீங்களும் வினு சக்கரவர்தியும் சொந்தமா? உங்கள் குரல் அவர் குரல் போல் அப்படியே இருக்கிறதே!

பொடியன்: ஆமாம் அவர் மட்டும் அல்ல T.ராஜேந்தர் கூட சொந்தம்.

சீனா தாத்தா: உங்கள் குரல் வளத்தை மெயின் டெயின் செய்ய என்ன என்ன செய்வீர்கள்?

பொடியன்: தினம் ஒரு கிலோ பிளேடு, ஒரு கிலோ ஆணி அரைச்சு சாப்பிட்டு விட்டு அதை 10 எருமைகளோடு கழுத்தளவு தண்ணியில் நின்னு உய் உய்ன்னு கத்துவேன் தானா அதுபோல் இனிய குரல் வந்துடும்!

சீனா தாத்தா: இவ்வளோ திறமை இருக்கிற நீங்கள் ஏன் திரைப்படத்தில் பாட கூடாது?

பொடியன்: நான் ஒரு படத்தில் பாடி கமலையே கலாய்த்து இருக்கிறேன்!

சீனா தாத்தா: அப்படியா இதுவரை யாருக்குமே தெரியாதே, நீங்களும் சொல்லவே இல்லை! எந்த படத்தில்? எப்பொழுது?

பொடியன்: எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது அதான்!

சீனா தாத்தா: பரவாயில்லை சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்!

பொடியன்: 16 வயதினிலே படத்தில் கமல் Sri தேவியோடு நடந்து போகும் பொழுது ஒரு பாட்டு பாடுவார், அவர் பாடும் பொழுது நான் தான் எதிர் குரல் கொடுத்து கலாய்த்து இருப்பேன் அதுக்கு Sri தேவி செமயா சிரிப்பாங்க, திரும்ப கமல் பாட முயற்சி செய்வார் நானும் விடாம கலாய்பேன்! அப்படி குரல் கொடுத்து கமலையே கலயாத்தவன் இந்த பொடியன் தெரிஞ்சுக்குங்க!!! என்ன பாட்டு என்று இப்பயாச்சும் புரிஞ்சுதா!!! அது என்ன பாட்டு என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன் உங்களுக்கு ஒரு பாட்டு பாடி காட்டுறேன்!!!

சீனா தாத்தா: பல்செட்டை கழட்டி விட்டு வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Monday, January 14, 2008

புஷ்க்கு ஆப்படித்த போட்டோ!!!

ஆப்பு அடிக்கும் முன்பு
ஆப்பு அடித்த பின்புமேலே இருப்பது பிளாஸ்டிக் புஷ் இது போல மெட்டல் புஷ்க்கு எப்படி ஆப்பு என்று போட்டோ போடவா? பொடியன் மொக்கை போட வேண்டும் என்று என்னை இதில் இழுத்துவிட்டதால், இதுவரை பழக்கம் இல்லாததை எப்படி செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். தயவு செய்து மொக்கை என்றால் என்ன என்று சொல்லி கொடுங்க நான் தெரிஞ்சுக்கிட்டு ஒழுங்கா மொக்கை போடுகிறேன்!!!
இதில் ஏதும் குத்தம் குறை இருந்தால் மன்னிச்சு விட்டுவிடுங்கள் சின்ன பையன்:)))
மொக்கை போட அழைக்கும் தோழிகள்
ஸ்ரேயா கோஷல்
ஷெரப்போவா
அசின்

Thursday, January 10, 2008

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போன கதை போல் தான் இதுவும்!!!
ஒரிஜினல் புகைப்படங்கள்:

இடது மூலையில் இருக்கும் துணியின் சுறுக்கம்.

புகைப்படத்தின் பேக்ரவுண்ட் கலர் மற்றும் பேனாவின் கலர் மாற்றம்.


சிகரெட் பாக்கெட் அருகில் இருக்கும் இரும்பு பட்டையின் முனை, பேக்ரவுண்ட் கலர், மற்றும் லைட்டிங்.

பேக்ரவுண்டில் இருக்கும் சிறு சிறு குப்பை, தூசு & கலர்படத்தின் கலர்


இந்த மாத புகைப்பட போட்டிக்கு பதிவு போட்டது போலவும் ஆச்சு, போட்டோஷாப் கிளாஸ்க்கு செய்முறைக்கு புகைப்படமும் ரெடி ஆச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Monday, January 7, 2008

நையாண்டி கார்டூன்ஸ் பக்னர் ஸ்பெசல்!!!

இது எங்க ஏரியா உள்ளே வராதே!!!

சொல்வதை சொல்லும் கிளி பிள்ளை பக்னர்


கூடி கும்மி அடிக்கும் டீம்


சூதுவாது தெரியாத பிள்ளை, என்னமா பாஞ்சு பாஞ்சு கேட்ச் பிடிக்குது


உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு கும்ளே சார்!!!

ஒரு பொம்மலாட்டம் இங்கு நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது!!!

எல்லாம் மாயை!!!

Sunday, January 6, 2008

மும்பை பெண்கள் மானபங்கம் படுத்தபட்ட போது எடுக்கபட்ட இதுவரை வெளிவராத புகைப்படங்கள் மற்றும் வீடியோ.


ஓசோ: அடிப்பட்டு கிடக்கும் பெண்களின் நிர்வாணத்தையும் ரசிக்கும் ஒரு மிருகம் நம்முள் ஒளிந்து இருக்கிறது. சமயம் வரும் பொழுது அது எட்டிபார்க்கிறது!
நாமும் திருந்த வேண்டும்!