Sunday, January 6, 2008

மும்பை பெண்கள் மானபங்கம் படுத்தபட்ட போது எடுக்கபட்ட இதுவரை வெளிவராத புகைப்படங்கள் மற்றும் வீடியோ.


ஓசோ: அடிப்பட்டு கிடக்கும் பெண்களின் நிர்வாணத்தையும் ரசிக்கும் ஒரு மிருகம் நம்முள் ஒளிந்து இருக்கிறது. சமயம் வரும் பொழுது அது எட்டிபார்க்கிறது!
நாமும் திருந்த வேண்டும்!

18 comments:

said...

ஏன் விகடன், நக்கீரன், குங்குமம் குழுமத்தில் வேலைக்கு சேரும் எண்ணமா. . . . ?

அவிங்க தான் மானபங்கம் படுத்துனாங்கன்னா, போட்டோ போட்டு நாமளுமா. . . . .?

said...

அருமை அருமை குசும்பா,

அதுவும் ஓஷோ சொன்னதை இங்கே இந்த இடத்தில் நல்ல பொருத்தம்

said...

// வெங்கட்ராமன் said...
ஏன் விகடன், நக்கீரன், குங்குமம் குழுமத்தில் வேலைக்கு சேரும் எண்ணமா. . . . ?

அவிங்க தான் மானபங்கம் படுத்துனாங்கன்னா, போட்டோ போட்டு நாமளுமா. . . . .?///

எங்கே நண்பா போட்டோ போட்டு இருக்கேன்?

************************
நந்து f/o நிலா said...
அருமை அருமை குசும்பா,

அதுவும் ஓஷோ சொன்னதை இங்கே இந்த இடத்தில் நல்ல பொருத்தம்///

நன்றி நந்து.

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

ஒரு கண்டனம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். நீங்க வேற ஏதாவது நெனச்சுக்கப் போறீங்க..

said...

SurveySan said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

ஒரு கண்டனம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். நீங்க வேற ஏதாவது நெனச்சுக்கப் போறீங்க..///

ச்சே ச்சே அப்படி எல்லாம் நினைப்பேனா? தலைப்பில் கெட்டவார்த்தை, ஆபாசம், பெண்குறி, யோணி என்று இருந்தால் அந்த பதிவு அன்றைய சூடான இடுகையில் வருகிறதே அதுக்காகதான் இது.

said...

குசும்பரே,

இது மொக்கையா என்னன்னு தெரியலே! ஆனா, என்னப் பொருத்தவரைக்கும் ....'நச்' 'நச்' !!

இதுவும், அசாமியச் சகோதரியின் மானபங்கப் படமும், மனித வக்கிரத்தின் வெளிப்பாடு. இதுக்கு, பத்திரிகைச் சுதந்திரம் அப்பிடினு வேறு ஒரு பேரும் இருக்காம்..

said...

தஞ்சாவூரான் said...
குசும்பரே,

இது மொக்கையா என்னன்னு தெரியலே! ஆனா, என்னப் பொருத்தவரைக்கும் ....'நச்' 'நச்' !!

இதுவும், அசாமியச் சகோதரியின் மானபங்கப் படமும், மனித வக்கிரத்தின் வெளிப்பாடு. இதுக்கு, பத்திரிகைச் சுதந்திரம் அப்பிடினு வேறு ஒரு பேரும் இருக்காம்..///

நிச்சயமாக மொக்கை இல்லை தஞ்சாவூரார் என் கோவம், சரியாக வெளிப்படுத்த தெரியாததால் உங்களுக்க்கு அப்படி தெரிந்து இருக்கலாம். இந்த விசயத்தைவைத்து மொக்கையோ அல்லது காமெடி செய்யும் அளவுக்கு இன்னும் மிருகமாக மாறவில்லை!

ஒரு பதிவின் தலைப்பை பார்த்து அதை ஒதுக்க தெரியாமல்தானே நாம் இருக்கிறோம் அதை உணர்த்தவே இது!!!

அவர் ஆபாச படம் போடுகிறார் போடுகிறார் என்று கூச்சல் போட்டுவிட்டு திரும்ப திரும்ப ஏன் அந்த பக்கம் போகவேண்டும்? இதுபோல் நம் மீதே பல தவறு இருக்கிறது

said...

மன்னிக்கவேண்டும் நண்பரே.

தங்கள் நல்ல உள்ளம் புரியாமல் தலைப்பை வைத்து திட்டி விட்டேன்.

பக்கத்தை திறந்து அது லோட் ஆகி முடிப்பதற்குள் பின்னூட்டத்திற்கு வந்து விட்டேன்.

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

said...

குசும்பன் அவர்களே , நீங்க என்னை தான் திட்டுவது போல எனக்கு ஒரு எண்ணம். உண்மை தானா?

said...

ஐயா குசும்பரே,

எந்த விஷயத்தில் குசும்பு செய்வதென்ற வறைமுறை உள்ளது. இது ரொம்ப ஒவர்.
ஆனாக்கா ஓஷோ சொன்னதை இங்கே இந்த இடத்தில் நல்ல பொருத்தம் அதுனால freeயாவிடு மாமே...

said...

வசந்தம் ரவி said...
குசும்பன் அவர்களே , நீங்க என்னை தான் திட்டுவது போல எனக்கு ஒரு எண்ணம். உண்மை தானா?///

சத்தியமாக அப்படி எல்லாம் இல்லை வசந்தம் ரவி அவர்களே! நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். இதைவைத்து வியாபாரம் செய்யும் பத்திரிக்கைகள், டீவி, நெட் அவர்களையும் என்ன உடை போட்டு இருந்தார்கள் என்றும் எங்கு கிழிந்தது என்றும் தேடி தேடி பார்க்கும் நம் மீதுதான் கோவம்.

உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்து இருந்தால் மன்னிக்கவும்.

said...

இளைய கவி said...
ஐயா குசும்பரே,

எந்த விஷயத்தில் குசும்பு செய்வதென்ற வறைமுறை உள்ளது. இது ரொம்ப ஒவர்.
ஆனாக்கா ஓஷோ சொன்னதை இங்கே இந்த இடத்தில் நல்ல பொருத்தம் அதுனால freeயாவிடு மாமே...///

ஐயா இளையகவி இதில் எங்கு குசும்பை கண்டீர்கள். ஒருவேளை என் கோவத்தை சரியாக வெளிபடுத்த தெரியாததால் உங்களுக்கு அது குசும்பாக பட்டு இருக்கலாம்.

said...

குசும்பரே, எனக்கு உங்கள் மீது துளி கூட கோபம் கிடையாது, உங்களுக்கு உள்ள ஆதங்கம் எனக்கும் இருக்கிறது, அதனால் தான் உங்கள் பதிவுக்கு ஒரு இணைப்பு கொடுத்தேன்.

said...

தஞ்சாவூரான் மறுமொழிக்கு தங்களின் பதில் அருமையான ஒன்று. நிதர்சனமான உண்மை. கோபத்திற்கு பாராட்டுகள்.

said...

தலைப்ப பாத்துட்டு உங்கள திட்டலாம்னு தான் வந்தேன். வந்த பிறகு தான்...ஹி...ஹி...

said...

//இதைவைத்து வியாபாரம் செய்யும் பத்திரிக்கைகள், டீவி, நெட் அவர்களையும் என்ன உடை போட்டு இருந்தார்கள் என்றும் எங்கு கிழிந்தது என்றும் தேடி தேடி பார்க்கும் நம் மீதுதான் கோவம் //
இப்போது உங்களை புரிந்து கொண்டேண் குசும்பரே!

Anonymous said...

நாமும் திருந்த வேண்டும்!


ovvoruvarum yosikkavendiya ontu

Anonymous said...

mudela pa,

ada satheama mudeala......!