Monday, December 31, 2007

என்ன என்ன நடந்தால் 2008 வலைபதிவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!!!

வரும் ஆண்டில் நம் வலைபதிவர்கள் இப்படி அறிவித்தால் எப்படி இருக்கும்.

இனி நான் புனைவு கவிதையோ அல்லது புரியாத கவிதையையோ எழுத போவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்று அய்யனார் அறிவித்தால்.

இனி வரும் வருடத்தில் டாக்டர்.கவிதாயினி அழுவாச்சி காவிய கவிதை எழுதமாட்டேன் என்று அறிவித்தால்.

தம்பி உமா கதிர் இனி பஸில் பயனம் செய்யும் பொழுது யாருடனும் பேசமாட்டேன் என்றால் (அப்படி சொன்னாலே போதும் பதிவு எதுவும் வராது).

ஓசை செல்லா இந்த வருடமாவது ஒரு சொக்கா தச்சு போட்டுக்கிட்டு கண்ணாடியை கழட்டி ரொம்ப நாட்களாக வெறும் கண்ணாடியோடு நின்றுகொண்டு இருக்கும் காந்தி தாத்தாவுக்கு மாட்டிவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன் என்று சொன்னால்.

நச் போட்டி முடிந்த பின்பும் "நச்சு" கதை எழுதிக்கொண்டு இருக்கு சிறுகதை சூறாவளி கோவி.கண்ணன் இனி கதை எழுத மாட்டேன் என்று சொன்னால்.

ஒரு நாளாவது யோனி, குறி என்ற வார்த்தை இல்லாத தமிழ்மணத்தை கண்டால்

எங்கேயாவது ஒரு இடத்திலாவது பதிவரை வம்புக்கு இழுக்காமல் பின்னூட்டம் இடுவேன் என்று வவ்வால் சொன்னால்.

பொங்கலில் அபி அப்பா "கள்" எடுப்பதை நிறுத்துவேன் என்று சொன்னால்

ஸ்டேட்டஸ் மெசேஜில் இனி புரியாத கவிதை போட்டு கலவரபடுத்த மாட்டேன் என்று ராம் சொன்னால்.

தினம் ஒரே ஒரு பதிவு மட்டும் குட்டீஸ் போட்டால்...

மின்னுது மின்னல் வேறு பெயரில் இனி எழுதமாட்டேன்(??) இனி பழயபடி திரும்ப அனானிபிளாக்குக்கே வருவேன் என்று சொன்னால்

வீட்டுக்கு ஒரு மரம் போல எல்லோருக்கு ஒரு விருது என்று தமிழ்மணம் அறிவித்தால்.

(நீங்களும் பின்னூட்டத்தில் வேறு ஏதும் இருந்தால் சொல்லுங்க:)

இப்படி எல்லா மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும் நீ என்னா சொல்ல போகிறாய் என்று கேட்க்கும் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு...
.
.
.
.
.
.
.
.
.
.
.


இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.

நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று ஓங்கி வாழ்க! வாழ்க வளமுடன்.

35 comments:

said...

நான் வாரத்துக்கு இரண்டு வீக் எண்ட் போஸ்ட் போட்டால்!!!!

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.//

நீங்க கோட் போடலைன்னா என்ன.. உங்க போட்டோஷோப் க்ளாஸ்ல கத்துக்கிட்டு போட்டோஷோப்லேயே உங்களுக்கு கோட் வரைவோமே! ;-)

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.//

நெசமாவா சொல்லுரிங்க! சரி, நல்லா இருப்பா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

said...

// மங்களூர் சிவா said...
நான் வாரத்துக்கு இரண்டு வீக் எண்ட் போஸ்ட் போட்டால்!!!!///

ரொம்ப நல்லா இருக்கும்:))

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//நீங்க கோட் போடலைன்னா என்ன.. உங்க போட்டோஷோப் க்ளாஸ்ல கத்துக்கிட்டு போட்டோஷோப்லேயே உங்களுக்கு கோட் வரைவோமே! ;-)///

தேடி தேடி எப்படி ஆப்பு கரெக்ட்டா என்னையே தாக்குது என்று ரொம்ப நாள் தெரியாம முழிச்சுட்டு இருந்தேன் இப்பதான் விளங்குது, நல்லா இருங்க:(

said...

//குட்டிபிசாசு said...
நெசமாவா சொல்லுரிங்க! சரி, நல்லா இருப்பா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!///

பார்த்தீங்களா சொன்னதும் உங்களுக்கு சந்தோசம், நாலு பேர் நல்லா இருக்கனும் என்றால் அந்த கோட்ட தம்பிக்கு கொடுப்பதில் தப்பே இல்ல:))

இனி அந்த கோட் போட்டுக்கிட்டு தம்பி தோன்றுவார் (நாடகத்தில் எல்லாம் இவருக்கு பதில் இனி இவர் தோன்றுவார் என்பது போல்:))))

said...

:)

said...

இலைக்காரன் அவர்கள் வாழ்க தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் என்று ஒரு பதிவு போட்டால்..

லக்கிலுக் அவர்கள் - உலகத்தமிழருக்கு ஒரு உன்னத அன்னை புரட்சித்தலைவி ஜெ என ஒரு பதிவு போட்டால்?

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே ;)

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன்//

இது ஒண்ணு போதும்டா உருப்படறதுக்கு. புள்ளைங்க இனிமேல் தைரியமா நடமாடலாம்.

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு//

குசம்பன் அண்ணாச்சி இன்னா சொல்றாருன்னா, அவரு இனிமே PIT போட்டிக்கு கோட் போட்டுக்கிட்டு மத்ததை போட்டா புடிக்க மாட்டாராம்!
இதை ஒழுங்காப் புரிஞ்சிக்காம அவசரப்பட்டு சந்தோச Champagne-இல் யாரும் மூழ்கிப் போயிடாதங்கப்பு! :-)

குசம்பனும் கோட்டும் கர்ணனும் கவச குண்டலம் போல!
மை ஃபிரெண்ட் - நீங்க போட்டோஷாப்பில் கூட அதைப் பிரிக்க முடியாது! :-)

புத்தாண்டு வாழ்த்துக்கள் குசம்பன் அண்ணா!

said...

குசும்பா,

//எங்கேயாவது ஒரு இடத்திலாவது பதிவரை வம்புக்கு இழுக்காமல் பின்னூட்டம் இடுவேன் என்று வவ்வால் சொன்னால்.//

தப்பா ஒரு தகவலை சொல்றவங்களைப்பார்த்து தப்புனு சொல்றது தப்பா?


என்ன இது...ம்ம் நான் என்னமோ சண்டியர் போல வம்பு சண்டைக்கு போறத சொல்லிட்டியே ராசா..ஆஹ் ... ஏன்ப்ப்பா....ஏன்ன்...

நான் இதைலாம் நிறுத்திக்கிறேன்...அதுக்கு முன்ன ...

கிராமத்து ஏழை சனங்களுக்கு மருத்துவம் பார்க்க போங்கப்பா, அரசாங்க காசுல தானே படிச்சிங்கனு டாக்டர்கள் கிட்டே சொன்னா.... அரசாங்கம் எங்களுக்கு செலவே பண்ணலைனு தப்பு தப்பா சொல்லி பதிவு போட்டாங்களே அவங்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன் ...

தனி மாநிலத்துக்கும், நாட்டுக்கும் வித்தியாசம் தெரியாம தப்பா பதிவு போடறவங்களை நிறுத்த சொல்லுங்க ...நான் நிறுத்திக்கிறேன்....

நடு ரோட்ல நின்னா அவங்க தான் நடுவர்னு சொல்லிக்கிறாங்களே அதை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்திக்கிறேன்...

நாளு பேருக்கு நல்ல தகவல் கிடைக்கணும்னா எதுவுமே தப்பில்ல... ஹா ஆஹ்ஹ் ...ஆஆஅ!

Anonymous said...

நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று ஓங்கி வாழ்க! வாழ்க வளமுடன்.

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.//

இது போங்கு ஆட்டம்... நாங்க ஒத்துக்க மாட்டோம்.

குசும்பன்...(என்ன‌ செய்தால் ச‌ந்தோச‌ப்ப‌டுவோம்?)

அது..அது... ச‌ஸ்பென்ஸ்

said...

உங்களை போட்டோஷாப்ல தேடுனா இங்க வந்து கும்மி அடிச்சிகிட்டு இருக்கீங்க! அடுத்த வருஷமாவது ஒழுங்கா பாடம் நடத்திறீங்களான்னு பார்ப்போம்!இந்த வருஷத்துக்கு வணக்கம் சொல்லி முடிச்சிக்கிறேன்.

said...

ஜெகதீசன் said...
:)
//

நன்றி

*********************
வீ.எம் நன்றி
***************
கோபி நன்றி
*****************
தம்பி said...
//இது ஒண்ணு போதும்டா உருப்படறதுக்கு. புள்ளைங்க இனிமேல் தைரியமா ///

இதபார்டா!!! ஆமா உனக்கு ஏன் புள்ளைங்க மேல இம்புட்டு அக்கரை?:)))
**************************

kannabiran, RAVI SHANKAR (KRS)
///குசம்பனும் கோட்டும் கர்ணனும் கவச குண்டலம் போல!
மை ஃபிரெண்ட் - நீங்க போட்டோஷாப்பில் கூட அதைப் பிரிக்க முடியாது! :-)

புத்தாண்டு வாழ்த்துக்கள் குசம்பன் அண்ணா!///

அவ்வ்வ்வ்வ் KRS நீங்களும்மா?:(((

நன்றி உங்கள் வாழ்த்துக்கு.

said...

வவ்வால் said...
குசும்பா,
///நாளு பேருக்கு நல்ல தகவல் கிடைக்கணும்னா எதுவுமே தப்பில்ல... ஹா ஆஹ்ஹ் ...ஆஆஅ!///

ஹேய் வவ்வால் என்கிட்ட சண்டைக்கு வரல அப்ப நான் பொய் சொல்லவில்லை:) சும்மா தமாசுக்கு.

நன்றி வவ்வால்

****************************
நன்றி அனானி
*************************

நட்டு said...
உங்களை போட்டோஷாப்ல தேடுனா இங்க வந்து கும்மி அடிச்சிகிட்டு இருக்கீங்க! அடுத்த வருஷமாவது ஒழுங்கா பாடம் நடத்திறீங்களான்னு பார்ப்போம்!இந்த வருஷத்துக்கு வணக்கம் சொல்லி முடிச்சிக்கிறேன்///

பாருங்க நான் லாஸ்டா 25 ஆம் தேதி போஸ்ட் போட்டு இருக்கேன் நடுவில் எம்மாம் பெரிய கேப், அம்புட்டு வேலை, இங்க போஸ்ட் போட ரொம்ப மெனக்கட வேண்டியது இல்லை அதான் அங்க வர டிலே!!!
சாரி சாரி.

உங்களை இங்கேயும் வரவழைக்க இது ஒரு ஐடியா:))))

***************************

செல்வம் said...
//இது போங்கு ஆட்டம்... நாங்க ஒத்துக்க மாட்டோம்.

குசும்பன்...(என்ன‌ செய்தால் ச‌ந்தோச‌ப்ப‌டுவோம்?)

அது..அது... ச‌ஸ்பென்ஸ்///

சொல்லிடுங்க வேற யாராவது ஏடா கூடமா சொல்லிடும் முன்பு. நல்ல பிள்ளைதானே நீங்க:))

said...


இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.


அப்ப நீங்களும் செல்லா அண்ணாச்சி மாதிரி போட்டா எடுத்து போடப் போறீங்களா. . . ?

வேணாம் அண்ணாத்த வலை உலகம் தாங்காது. . . . :-))))))))))))))

said...

இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.

அப்ப நீங்களும் செல்லா அண்ணாச்சி மாதிரி போட்டோ எடுத்து போடப் போறீங்களா. . . ?

வேணாம் அண்ணாத்த வலை உலகம் தாங்காது. . .:-)))))))))))

said...

kusumban pathivu poodaamal irunthaal enakku romba santhoosam

said...

ஹாய்,

அப்பா, எல்லாரும் என்னாமா தாக்குறாங்க... சரி சரி போட்டும்,

நான் என்ன சொல்றேன்னா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சுற்றியுள்ளவர்க்கும்

"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"

said...

இனி கோட்டு போட்டு போட்டோ பிடிக்காட்டி என்ன? இதுவரை எடுத்த போட்டோ நெகட்டிவ் எல்லாம் எரிக்கணுமே!

மேலும் சில மகிழ்ச்சிகள்:

சென்ஷி, மங்களூர் சிவா - ரிப்பீட்டேய் போடாத கமெண்டு போட்டால்

அபி அப்பா பதிவு முழுசும் படித்து பின்னூட்டம் போட்டால்

இலவசக்கொத்தனார் பின்னூட்டம் வேண்டாம் என்று சொன்னால்..

said...

குசும்பா உனக்குஒரு நற நற!! பினாத்தலாருக்கு ஒரு ஹஹ ஹஹ:-))

Anonymous said...

நல்லதுநடக்கும் விரைவில்..:)

said...

குசும்பனாருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

//ஒரு நாளாவது யோனி, குறி என்ற வார்த்தை இல்லாத தமிழ்மணத்தை கண்டால்//

சுகுணா திவாகர் மனது வைத்தால் தான் உண்டு.

:)

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.//

ரொம்ப சந்தோஷம் மாமு..நீங்க கோட் போடறத யாரும் தப்பு சொல்லல மாமு.. அட்லீஸ்ட்.. போட்டோஷாப்லயாவது கோட் கலர் மாத்தலாம்ல.. ஒரே கலர் ... கொஞ்சமே கொஞ்சம் போர் அடிக்கிது மாமு.. அம்புட்டுதான் ;))

நீங்களும் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று ஓங்கி வாழ்க! வாழ்க வளமுடன்.

நல்லா இருங்க...

said...

சீனா தாத்தா எல்லார் பதிவுக்க்ம் போய் சூப்பர் பதிவு என்று சொல்லாமல் இருந்தால்..:)

said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் நண்பரே !!

நான் என்ன செய்ய வேண்டும் - யாரும் சொல்ல வில்லையே !! ம்ம்ம்

Anonymous said...

ellorum ilaikkaranai maranthuttinkale........

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.//

இதன் ரகசியம் எனக்கு மட்டுமே தெரியுமென்பதால்! ரகசியம் அறிய விரும்புவோர் தனிமடலில் தொடர்புக்கொள்ளவும்!

அடுத்து புத்தாண்டு குட்டி குசும்பனோட கொண்டாட வாழ்த்துக்கள் :)

said...

//இனி நான் கோட்டு போட்டு போட்டோ புடிக்க மாட்டேன் என்று உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான செய்தியோடு இந்த வருட வாழ்த்தையும் சொல்லிக்கிறேன்.//

இதன் ரகசியம் எனக்கு மட்டுமே தெரியுமென்பதால்! ரகசியம் அறிய விரும்புவோர் தனிமடலில் தொடர்புக்கொள்ளவும்!

அடுத்து புத்தாண்டு குட்டி குசும்பனோட கொண்டாட வாழ்த்துக்கள் :)

said...

நல்லதொரு அலசல்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
இல்லையெனின் என் இந்த
பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

அன்புடன்
வீ எம்

anony, naan ilaikaranai marakalai.. en pinnottathai paarunga

said...

இனி சாக்குப்போக்கு சொல்லாமல் விழாகளில் குசும்பர் கலந்து கொண்டால். :-)

said...

fortune clock casino
1200 dla kazdego