Tuesday, December 25, 2007

ஐயோ என்னை அடிக்காதீங்க! நான் இனி எழுதமாட்டேன்!!!

டேய் வெளியே வாடா ங்......அடிங்க! இப்ப வெளியே வரப்போறீயா இல்லையா. எங்கிருந்தோ பறந்து வந்த கல் ஒன்று நான் ஒளிந்து இருந்த அறை ஜன்னல் கதவை பதம் பார்க்க சிலு சிலு என்று நொறுங்கி விழுந்தது கண்ணாடி. இன்னும் சத்தம் அதிகமாகி கொண்டே போனது. உள் பக்கமாக பூட்டி இருந்த கதவை யாரோ உடைப்பது போல் சத்தம், ஆம் நினைத்தது சரிதான் கதவு உடைந்துவிட்டது டேய் எங்கிருக்கிறான் என்று தேடுங்கடா அவனை!

காலடி சத்தங்கள் அதிகமாக கேட்டது ஒரு ஐம்பது அறுபது பேர் இருப்பாங்களோ! இதயம் படபட என்று அடித்துக்கொண்டது! நான் ஒளிந்து இருக்கும் மேஜை அருகேயும் காலடி சத்தம் கேட்டது கரெக்ட்டாக பீம் பாய் போல ஒருவன் என் முன்பு வந்து இங்க இருக்கிறான் பாருங்க டா என்று சத்தம் போட.

எல்லோரும் அப்படியே அலேக்காக தூக்கி போட்டு பந்தாடினார்கள், அம்மா அடிக்காதீங்க ஐய்யோ அடிக்காதீங்க ஸ்டாப் ஸ்டாப்!

அடிங்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எதுக்கு அடிக்கிறீங்க என்று சொல்லிட்டு அடிங்க!!!

அதுல தருமி , ஆசிப், ஜெசிலா ,முத்துலெச்சுமி , இம்சை அரசி வந்தாங்க அதில் ஒரு நியாயம் இருந்துச்சு, அய்யனார் வந்தாரு பொருத்துக்கிட்டோம், அவுங்க எல்லாம் உருப்படியா எழுதி இருக்காங்க வந்தாங்க? நீ என்னா உருப்படியா எழுதி இருக்க அதில் வர? நீ எப்படிடா அதுல வரலாம்?

நான் எப்பங்க அதில் வந்தேன் நீங்க வேற யாரையோ அடிப்பதற்கு பதில் என்னை அடிக்கிறீங்க என்று சொல்ல அவர்கள் காட்டிய ஆதாரம் கீழே!!!

ஐயோ ஆனந்தவிகடனில் வந்ததுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை அதுல எதோ ஒரு சதி இருக்கு ஐய்யோ அடிக்காதீங்க. என்னை நம்புங்க இனி நான் உருப்படியா எழுதுறேன்.

டேய் இத பாருடா இத்தனை அடிவாங்கியும் இனி ஒழுங்கா எழுதுறேன் என்று சொல்லுறான் அடி பத்தாது போல இன்னும் நொங்குங்கடா!!!

ஐயோ அடிக்காதீங்க இனி எழுதவே மாட்டேன். விட்டுவிடுங்க.

அடிச்சவுங்க போனில் தம்பி இனி எழுதவே மாட்டேன் என்று சொல்லிட்டான் விட்டு விடலாமா? என்று யாரிடமோ கேட்க. அவன் இப்படிதான் சொல்லுவான் பத்தாது இன்னும் நாலு சாத்து சாத்துங்க என்று கட்டளை வர, சரி தம்பி என்றார்கள்!!!

தம்பீபீபீ நீயா?

டேய் நல்ல கனவா? மூஞ்ச கழுவிட்டு வீட்டுக்கு போ ஆபிஸ் டைம் முடிஞ்சு போச்சு என்று சகா சொல்ல கிளம்பினேன்.
குறிப்பு: போனில் வாழ்த்து சொன்ன நண்பர் உன் எல்லா பதிவையும் மொக்கை என்று சொல்லிடமுடியாது நிறைய நல்ல பதிவும் எழுதி இருக்க என்று சொல்ல?அது எப்படி எனக்கு தெரியாம நடந்துச்சு என்று நான் கேட்க?அவர்: நீ எழுதிய ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் துபாய் விசா பற்றி எழுதியது அப்புறம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் துபாய் விசா பதிவு அப்புறம் ம்ம்ம் ம்ம்ம் துபாய் விசா பதிவு இப்படி ரொம்ப யோசிச்சார். அவருக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

39 comments:

said...

//டேய் நல்ல கனவா? மூஞ்ச கழுவிட்டு வீட்டுக்கு போ ஆபிஸ் டைம் முடிஞ்சு போச்சு என்று சகா சொல்ல கிளம்பினேன்.//

:))))))))

ஓ...!இதுக்கு பேருதான் சகதோழனா?

said...

வாழ்த்துக்கள் நண்பா

said...

ஆம் ஆயில்யன்.

******************
நன்றி மஞ்சூரார், கனவு நிறைவேற வாழ்த்துக்கள் என்று சொல்லாமல் விட்டதற்க்கு!

**********************

said...

தம்பி வாழ்க ;))

said...

அந்த போன் பார்ட்டி நானில்லைங்கோ :))

said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்:)))

said...

வாழ்த்துக்கள் குசும்பன்.

said...

வாழ்த்துக்கள் வாத்தியாரே!!

said...

வாழ்த்துக்கள் குசும்பன்...

said...

குசும்பர்,

1.சமர்ப்பித்தமைக்கு நன்றி.

2.விகடனில் வந்ததற்கு வாழ்த்து.

3. பாரதியார் என்ன சொன்னார்? "கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்"

4. தம்பி அவ்வளவு மோசம் கிடையாது. (மாட்டிக்கற மாதிரி செய்யமாட்டார்.)

said...

//அதுல தருமி , ஆசிப், ஜெசிலா ,முத்துலெச்சுமி , இம்சை அரசி வந்தாங்க அதில் ஒரு நியாயம் இருந்துச்சு,//

இது சரி.

//அய்யனார் வந்தாரு பொருத்துக்கிட்டோம்//

இது என்ன வகையான குசும்பு?

said...

குசும்பருக்கு வாழ்த்துக்கள் :)))

said...

:)
வாழ்த்துக்கள்!!!

said...

ஆகா தல
கலக்கீட்டிங்க. . . . .

வாழ்த்துக்கள் சொல்லி மூன்றாம் நபராக விருப்பமில்லை, நானும் உங்கள் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

said...

விகடன் கொண்டான் குசும்பர் வாழ்க !

said...

விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள் குசும்பன்...

said...

நன்றி கோபி,

நன்றி சென்ஷி

நன்றி ரசிகன்

நன்றி சுல்தான் சார்

நன்றி குட்டிபிசாசு நண்பா

நன்றி மங்கை

நன்றி பினாத்தலாரே பதிவே உங்களுக்குதானே!!! போன் போட்டு கலாச்சுவிட்டு வாழ்த்தா சொல்றீங்க இருங்க உங்களை கவனிச்சுக்கிறேன்:)))

said...

உமையணன் said...
//அய்யனார் வந்தாரு பொருத்துக்கிட்டோம்//

இது என்ன வகையான குசும்பு?////

அது என்னமோ தெரியலைங்க அய்யனார் என்று ஒரு பேர் வந்தாலே அப்படி ஆகிவிடுது:)) நல்ல நண்பர் அவர் எம்புட்டு அடிச்சாலும் தாங்கிப்பார் அதான் வேறு ஒன்றும் இல்லை:))

************************
நன்றி G3,

நன்றி ஜெகதீசன்

வெங்கட் :)))) நீங்க சொன்னதே இங்க உங்களுக்கும்:)))

***********************

கோவி சார்:) இது என்னா பட்டமா ஆப்பா ஒன்னும் புரியவில்லை:)))

**********************
நன்றி காண்டீபன்

said...

வாழ்த்துக்கள் குசும்பன்... வரலாற்றுல நின்னுட்டீங்க..!!!

said...

வாழ்த்துக்கள் தலைவா.!

இப்படியெல்லாம் கூட சொல்லவந்ததை சொல்லி பாராட்டு வாங்கிடலாம்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன்.!

எப்படியோ...கலக்குங்க..!

said...

ஆவியில் வந்ததற்கு மட்டும் இல்லை, இன்னும் கலக்கலாய் கலாய்க்கப் போவதற்கும் வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

maduraikkaran said...
வாழ்த்துக்கள் குசும்பன்... வரலாற்றுல நின்னுட்டீங்க..!!!///

அண்ணே மதுரைகாரண்ணே ஏன்னே ஏன் இம்புட்டு கொலவெறி. நன்றின்னே!:)

*************************
சுரேகா.. said...
வாழ்த்துக்கள் தலைவா.!

இப்படியெல்லாம் கூட சொல்லவந்ததை சொல்லி பாராட்டு வாங்கிடலாம்னு இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன்.!///

ஹி ஹி சும்மா ஒரு வெளம்பரம்:)))

****************************
செல்வம் said...
ஆவியில் வந்ததற்கு மட்டும் இல்லை, இன்னும் கலக்கலாய் கலாய்க்கப் போவதற்கும் வாழ்த்துக்கள் நண்பரே.///

நன்றி செல்வம் அப்படியே ஜமாய்ச்சுடலாம்:))

*****************************

Anonymous said...

வாழ்த்துக்கள் குசும்பன்!

Anonymous said...

ஹேய் குசும்பனை வாழ்த்துதுடா ஆவி!
குசும்பனை நான் வாழ்த்தலைன்னா பாவி!

said...

நான் லேட்டா வாழ்த்து சொல்றதுக்கு மன்னிச்சுக்கப்பா! வாழ்த்துக்கள்!!!

said...

பயங்கரக் கனவு போலிருக்கே...?
வாழ்த்துக்கள்...!

said...

வாழ்த்துக்கள் குசும்பன் அண்ணாச்சி!
விகட குசும்பன் என்று பட்டம் கொடுத்துறலாமா? :-)

//மூஞ்ச கழுவிட்டு வீட்டுக்கு போ ஆபிஸ் டைம் முடிஞ்சு போச்சு//

ஆபிசில் பதிவு எழுதுவது இல்லை, முக்கியமான வேலை மட்டுமே செய்கிறேன் என்பதை இப்படி இலை மறை காயாக, இவ்வளவு தன்னடகத்துடன் சொல்ல, எவ்ளோ தன்னடக்கம் வேண்டும்? அது! :-)

said...

good

said...

//
ரசிகன் said...
வாழ்த்துக்கள் மாம்ஸ்:)))

//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லிக்கிறேன்

ரிப்பீட்டேய்!!

said...

//
ரசிகன் said...
வாழ்த்துக்கள் மாம்ஸ்:)))
//

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா சொல்லிக்கிறேன்

ரிப்பீட்டேய்!!

கனவு என்னைக்கு வேணா மெய்படலாம்
உசாரு!!

said...

Congrats!!!

(Seems too late???)

said...

ஓவர் தன்னடக்க்மான போஸ்டா இருக்கே.. சரி சரி .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ..

ஆமா என் பேரு விகடன்ல இன்னும் வரலை ஆனா அபி அப்பாவும் நீங்களும் இப்படி கிளப்பிவிடறீங்களே.. குமுதத்தில் தான் வந்தது என் பேர் ... :)

said...

well done man! you deserve an applause!

said...

வாழ்த்துக்கள் குசும்பன்!

said...

வாழ்த்துகள் குசும்பன்

said...

எம்.ஜி.ஆர் , TR நல்லா இருங்க:)

***********************
அபி அப்பா said...
நான் லேட்டா வாழ்த்து சொல்றதுக்கு மன்னிச்சுக்கப்பா! வாழ்த்துக்கள்!!!///

நன்றி அபி அப்பா!

**********************

எம்.ரிஷான் ஷெரீப் said...
பயங்கரக் கனவு போலிருக்கே...?
வாழ்த்துக்கள்...///

நன்றி ரிஷான் ஷெரீப்

************************

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வாழ்த்துக்கள் குசும்பன் அண்ணாச்சி!
விகட குசும்பன் என்று பட்டம் கொடுத்துறலாமா? :-)///

பட்டம் கொடுப்பது என்று முடிவெடுத்த பின் ஒரு டாக்டர் பட்டம் கொடுங்களேன்:))))

////இவ்வளவு தன்னடகத்துடன் சொல்ல, எவ்ளோ தன்னடக்கம் வேண்டும்? அது! :-)///

ஹி ஹி ஒத்துக்க என்ன தயக்கம்:)

****************************
Mangai said...
good///

நன்றி மங்கை

****************************
நன்றி மங்களூர் சிவா!!

*************************

முத்துலெட்சுமி said...
ஓவர் தன்னடக்க்மான போஸ்டா இருக்கே.. சரி சரி .வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ..
///

அப்படின்னூ நினைக்கிறீங்க, சரி அடுத்த தபா அடிச்சு ரகளைவிட்டு விடலாம்:))))

////ஆமா என் பேரு விகடன்ல இன்னும் வரலை ஆனா அபி அப்பாவும் நீங்களும் இப்படி கிளப்பிவிடறீங்களே.. குமுதத்தில் தான் வந்தது என் பேர் ... :)///

ஓ சாரி சாரி சின்ன மிஸ்டேக்)))


*****************

நன்றி டெல்பின் அம்மா,

நன்றி திவ்யா

**********************

said...

வாழ்த்துகள் குசும்பு

said...

குசும்பன்,
ஏற்கெனவே ஒரு பின்னூட்டம் இட்டேன். காணோமே...

நினைவிலிருந்து மீண்டும்:

விடுங்க குசும்பன்; இப்படித்தான் ஏதாவது நம் கையை மீறி சில விஷயங்கள் நடந்திருது. நாம என்ன பண்ணமுடியும் அதுக்கு.

said...

//ஆடுமாடு said...
வாழ்த்துகள் குசும்பு///

நன்றி ஆடுமாடு

*****************************
தருமி said...
குசும்பன்,
ஏற்கெனவே ஒரு பின்னூட்டம் இட்டேன். காணோமே...

நினைவிலிருந்து மீண்டும்:

விடுங்க குசும்பன்; இப்படித்தான் ஏதாவது நம் கையை மீறி சில விஷயங்கள் நடந்திருது. நாம என்ன பண்ணமுடியும் ///

தருமி சார் நீங்க போட்டது படிக்கலாம் வாங்க பதிவுக்கு, இதுக்கு ஒன்னும் வரவில்லையே!, கையை மீறி இப்படி நடக்கு சில விசயத்துக்காக கை காலை எல்லாம் இழக்க முடியாதே சார், தம்பீ கொலைவெறியில் இருக்கிறார்:)