Monday, December 3, 2007

ஈரோட்டில் பஸ்ஸை எப்படி நிறுத்துவாங்க?

தீபாவளிக்கு G3 டாக்டர்.கவிதாயினியை போய் பார்த்துவிட்டு வந்ததை பற்றி ஒரு பதிவு போட்டு இருக்காங்க ஆனால்அதுக்கு முன்பு நடந்த சில முக்கிய சம்பவங்கள் இருட்டடிப்பு செய்து இருக்காங்க, அப்படி என்னா என்று கேட்கிறீங்களா?இருங்க சொல்றேன்.

முதலில் அந்த ஊரு பேரு ஈரோடோ கொசு ரோடோ என்னாவா இருந்தா நமக்கு என்னா டாக்டர்.கவிதாயினி அம்மா கையால்கோழி கறி சாப்பிடனும் என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்ட G3 என்னா செஞ்சாங்க அவுங்க அம்மாவுக்கு போன் போட்டு தான் அங்கு வரபோவதை சொல்லி எப்படிம்மா வரனும் பஸ் ரூட் என்னா எப்படி வரனும் என்று கேட்டு இருக்காங்க, டாக்டர்.கவிதாயினி அம்மா நீ தனியா வரவேண்டாம் அம்மா பையன் தீனதயாலுவை அனுப்பி வைக்கிறேன் வந்து உன்னை கூட்டிவருவான் என்றுசொன்னதும் அது ஏன் வீன் சிரமம் நான் தனியாகவே வருகிறேன் என்று சொல்லி கேட்காமல் உன்னை வந்து தம்பி கூட்டிவருவான் என்று சொல்லி போனை கட் செஞ்சுட்டாங்க.

மறு நாளை கையில் ஒரு டிராவல் பேக் உடன் ஒரு பையன் யார் என்னா என்று கேட்டால் அம்மா உங்களை கூட்டி வர சொன்னாங்க,என்று சொல்லி இருக்கிறான் தம்பி, என்ன டா நம்மளை அழைத்து வர சொன்னாங்க இவன் எதுக்கு அங்கிருந்து ஒரு பேக்கை தூக்கிட்டு வந்து இருக்கிறான் உள்ள ஏதும் திங்க கொடுத்து அனுப்பி இருப்பாங்களோ என்று கொஞ்சம் உற்சாகமாகவே G3 கிளம்பினாங்க.ஆனால் தம்பி கடைசி வரை பேக்யை திறக்கவே இல்லை, சரி அதில் என்னதான் இருக்கும் என்று ஒரு டவுட்டிலே சென்னையில் இருந்து கிளம்பி நாமக்கல் போய் அங்கிருந்து பஸ் புடிக்க காத்திருக்கும் பொழுது என்ன டா அங்கிருந்து இவ்வளோ தூரம் வந்துட்டோம் ஒன்னும் அதில் இருந்து எடுத்து கொடுக்கவில்லையே. திங்க கொடுக்க மறந்துட்டானா என்று டவுட்டோடு என்ன தம்பி வேறு எங்கயாவது போய் விட்டு வருகிறாயா என்று கேட்க? இல்லையே அக்கா ஏன் அவன் திருப்பி கேட்க?
இல்லை கையில் பேக் எடுத்து வந்து இருக்கியே அதான் என்று கேட்க, அதெல்லாம் இல்லை அக்கா சும்மாதான் என்று லேசாக சிரிச்சு வெச்சான். என்ன டா பைய திறக்க மாட்டான் போல இருக்கே என்று அவனுக்கு தெரியாம நைசா அமுக்கி பார்த்தா துணி மூட்டை மாதிரி இருக்குது.

ரொம்ப குழம்பி போய் சரி போ வீட்டில் போய் தான் சாப்பாடு என்று இன்னைக்கு தலைவிதி போல என்று பஸ்ஸுக்காக காத்துக்கிட்டு இருக்கும்பொழுது கொசு ரோடு என்று பேர் போட்டு ஒரு பஸ் வர சீக்கிரம் போய் சாப்பிடும் ஆர்வ கோளாரில் ஓடி போய் பஸ்ஸில் ஏற போக தம்பி தடுத்துவிட்டான் வேண்டாம் அக்கா அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று.
சரி என்று அடுத்த பஸ் வந்து அதில் ஏறி படிக்கு பக்கதிலேயே உள்ள சீட்டில் இடம் புடிச்சு உட்கார்ந்து கிட்டாங்க கொஞ்ச நேரம் கழிச்சு தம்பி அந்த பேக்யை எடுத்து நைசா கீழ படி வழியா உருட்டிவிட்டான் G3 குழம்பி போய் பார்க்க, டக்குன்னு பேக் கீழ விழுந்துட்டு கீழ விழுந்துட்டு பஸ்ஸை நிறுத்துங்க என்று சொல்லி தம்பி கத்த பஸ் நிறுத்த பட்டது, வாங்க அக்கா என்று G3யையும் அழைச்சிட்டு கீழ இறங்கி போய்பேக்கை எடுத்துக்கிட்டு திரும்ப பஸ்ஸுக்குதான் போக போகிறோம் என்று G3 நினைக்க தம்பி அக்கா எங்க ஊருக்கு பஸ் ஸ்டாப் எல்லாம் கிடையாது பஸ்ஸை நிறுத்த நாங்க கண்டு பிடிச்சு இருக்கும் டெக்னிக் இது என்று சொல்ல!

இவுங்க bag யை எடுத்துக்கிட்டு திரும்ப வருவாங்க என்று காத்துகொண்டு இருந்த டிரைவர் சொன்னது என்ன கொடுமை சார் இது?இதுங்க பஸ்ஸை நிறுத்த செஞ்ச நாடகமா இது? என்று நாலு நல்ல வார்த்தையால் திட்டிவிட்டு பஸ்ஸை எடுத்துக்கிட்டு போனார்.

G3 அறிவு பூர்வமா கேட்ட கேள்வி போகும் பொழுது பஸ்ஸை நிறுத்த என்ன செய்வீங்க என்று கேட்க? ரெண்டு எருமை மாட்டை குறுக்க விட்டுவிடுவோம் என்று சொல்லி முடிக்கவும் வீடு வந்தது.

டிஸ்கி: இனி டாக்டர் விஜய், டாக்டர். சங்கர் வரிசையில் கவிதாயினியும் டாக்டர் என்றே அழைக்க படுவார், மூனாவதையே மூனு முறை படிச்ச புள்ள இன்னைக்கு ஏதோ தமிழில் பச்சடி, கிச்சடின்னு ஏதோ செய்கிறார்களாம் செஞ்சு முடிச்சவுடனே டாக்டர் என்று சொல்லனுமாம் அதுக்கு முன்னோட்டம் தான் இது.

26 comments:

Anonymous said...

bus stop illatha oorukku bus sai eppadi stop pannuvathu entu thiru kusumbu avarkal class edukkalam..

Mr. Kusumbarukku idea vukku enna panjama...

said...

செம்ம ROTFL போஸ்ட்.. சூப்பர் டாக்டர். குசும்பன். ;-)

said...

என்ன கொடுமை இது...

said...

"bus stop illatha oorukku bus sai eppadi stop pannuvathu entu thiru kusumbu avarkal class edukkalam..

Mr. Kusumbarukku idea vukku enna panjama..."

ஹி ஹி எடுத்துட்டா போச்சு:)

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
செம்ம ROTFL போஸ்ட்.. சூப்பர் டாக்டர். குசும்பன். ;-)///

அவ்வ்வ்வ்வ்:(((( அது ஏங்க டாக்டர் ஆப்பை எனக்கு வெச்சீங்க:(
விஜய் அளவுக்கு ரொம்ப கேவலாம போய்விட்டேனா?

said...

Baby Pavan said...
என்ன கொடுமை இது...///

போஸ்டா? இல்ல கவிதாயினி டாக்டர் ஆனதா? எது கொடுமை?

said...

:)....
டாக்டர்.குசும்பன்.... இதுகூட நல்லாத்தான் இருக்கு....
:)

said...

ஜெகதீசன் said...
:)....
டாக்டர்.குசும்பன்.... இதுகூட நல்லாத்தான் இருக்கு....///


அண்ணே ஏன்னே உங்களுக்கு என் மேல கொல வெறி, வர வர ஆப்பு மத்தவங்களுக்கு நான் வெச்சா அது நமக்கே திரும்பி வருது... முதல்ல எட்டீயுரப்பாவ பார்த்து நல்ல மந்திரவாதியா கன்சல்ட் செய்யனும்!!!

said...

நாங்களும் எதிர் பதிவு போடுவோம்ல...

Anonymous said...

டாக்டர் குசும்பன் வாழ்க.அவரின் குசும்பும் வாழ்க

Anonymous said...

//வர வர ஆப்பு மத்தவங்களுக்கு நான் வெச்சா அது நமக்கே திரும்பி வருது//

வாழ்க்கை ஒரு வட்டம் :))
புரியுதா அண்ணா.

said...

குட்டீஸ் கார்னர் said...
நாங்களும் எதிர் பதிவு போடுவோம்ல...////

நல்லா இருங்க சித்தப்புங்களா! நல்லா இருங்க!!!

********************

துர்கா|thurgah said...
டாக்டர் குசும்பன் வாழ்க.அவரின் குசும்பும் வாழ்க///

நல்லா நாலு திட்டு வேண்டும் என்றாலும் திட்டுங்க ஆனா விஜய் வாங்கின பிறகு அந்த பேரால் மட்டும் என்னை கூப்பிடாதீங்க:(((( அவ்வ்வ்

**********************

said...

பஸ்ஸ நிப்பாட்ட வழி நல்லா இருக்கே??..

இது தெரியாம 2 தடவை அங்க போனப்ப ட்ரெயின்ல போயி, அபாயச் சங்கிலிய இழுத்து தெண்டம் கட்டீட்டேனே??... இனிமேல் பஸ்லயே போறேன்...:))

said...

உன்னயெல்லாம்....

said...

சபதம் 2011ல் நானும் முதல்வர்.

எல்லோரும் சொல்லுறாங்க ஏன் நான் சொல்ல கூடாதா என்னா?

உங்களை நாங்க முதல்வர் ஆக்கியே தீருவோம் ? http://kuttiescorner.blogspot.com/2007/12/2011.html

said...

துர்கா|thurgah said...
///வாழ்க்கை ஒரு வட்டம் :))
புரியுதா அண்ணா.////

ரொம்ப நல்லாவே புரியுது:((((

***********************
ஜெகதீசன் said...
பஸ்ஸ நிப்பாட்ட வழி நல்லா இருக்கே??..

இது தெரியாம 2 தடவை அங்க போனப்ப ட்ரெயின்ல போயி, அபாயச் சங்கிலிய இழுத்து தெண்டம் கட்டீட்டேனே??... இனிமேல் பஸ்லயே போறேன்...:))////

நம்ம பதிவால் ரெண்டு பேர் பயன் அடைகிறார்கள் என்று நினைக்கும் பொழுது ரொம்ப பெருமையாக இருக்கு:))) (சினிமா காரங்க மட்டும்தான் இந்த டயலாக் சொல்லுவாங்களா என்னா?)

******************************
தம்பி said...
உன்னயெல்லாம்....////

??????????? என்னா சொல்லுங்க?

****************************
Baby Pavan said...
///உங்களை நாங்க முதல்வர் ஆக்கியே தீருவோம் ? http://kuttiescorner.blogspot.com/2007/12/2011.html///

நல்லவேளை முதல்வர் ஆக்கியே தீர்ப்போம் என்று சொல்லாமல் விட்தற்காக, கு.க.தி.கட்சியின் துனை பொது செயலாளர் ஓக்கேவா?

****************************

Anonymous said...

Kusumbar MUTHALVAR naa

THAMBI...PRIME MINISTER !

ithu eppadi irukku....

said...

ஏரோ பிளேன ஸ்டாப் பண்ண ஏ்பிதாச்சும் வழி இருக்கா. . . . ?

(கொஞ்சம் அவசரம்ன்னு பைலட் கிட்ட சொல்லுங்கன்னு சொல்லக் கூடாது ஆமா. . . )

said...

துர்காவோட எல்லா கமெண்டுக்கும் பெரிய்யயயய ரிப்பீட்டேய் :))

said...

இன்னிக்கு காலைல தான் கவிதாயினி சொல்லுச்சு. நீங்க அவளை டாக்டர்ன்னு கலாய்ச்சு பதிவு போட போறீங்கன்னு.. ஆனா எதிர்பாத்த அளவுக்கு ஓட்டலை. ஏமாத்திட்டீங்க :(

said...

//"ஈரோட்டில் பஸ்ஸை எப்படி நிறுத்துவாங்க?"//

துபாய்ல பிரேக் போட்டு நிறுத்துறாய்ங்களாமே... நிஜமா மாமா? :O

said...

:)

டாக்டர் என்பதை அழுத்தி சொல்லனுமா... போல்ட் பண்ணி இருக்கே அதுனால் கேட்டேன்.

said...

குசும்பா

இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத போதும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

2011 ல் நான் தான் முதல்வர் என்று சொல்லக் கூட நம்பிக்கை இல்லாமல் நானும் முதல்வர் என்றுக் கூறுவது தகுமா? மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து யோசித்து பாரு நான் சொல்ல வருவது புரியும்.

said...

நீ எல்லாம்...

said...

வெங்கட்ராமன் said...
ஏரோ பிளேன ஸ்டாப் பண்ண ஏ்பிதாச்சும் வழி இருக்கா. . . . ?///

ஒரு பிஸ்டலை ஏர் கேஸ்டஸ் தலையில் வெச்சு பாருங்க ஆட்டோ மேட்டிக்கா பிளைட் ஸ்டாப் ஆயிடும்:)) அப்புறம் நீங்க என்ன ஆவிங்கன்னு எனக்கு தெரியாது!

**********************
G3 said...
துர்காவோட எல்லா கமெண்டுக்கும் பெரிய்யயயய ரிப்பீட்டேய் :))////
///எதிர்பாத்த அளவுக்கு ஓட்டலை. ஏமாத்திட்டீங்க :(///

அடுத்த முறை ஒழுங்கா செஞ்சுடலாம்:))

*************************
~பொடியன்~ said...
///துபாய்ல பிரேக் போட்டு நிறுத்துறாய்ங்களாமே... நிஜமா மாமா? :O//

ஹ ஹ என்னது துபாயில பஸ்ஸா, ஹாலோ நாங்க எல்லாம் பக்கத்து தெரு கடைக்கு போறதுன்னாலே ஹெலிஹாப்டரில் தான் போவோம்!!!:) இங்க பஸ்ஸா... ச்சீ ச்சீ அப்படினா எப்படி இருக்கும்?
(எப்பா துபாய் வாசிங்களா கொஞ்சம் "பேசாம இருங்கப்பா" கொஞ்சம் ஓவராக பேசிட்டேன்)
*************************

நாகை சிவா said...
:)

டாக்டர் என்பதை அழுத்தி சொல்லனுமா... போல்ட் பண்ணி இருக்கே அதுனால் கேட்டேன்.////

அழுத்தி எல்லாம் சொல்ல வேண்டாம் நக்கலா சொல்லனும்:)))

*******************

நாகை சிவா said...
குசும்பா

//2011 ல் நான் தான் முதல்வர் என்று சொல்லக் கூட நம்பிக்கை இல்லாமல் நானும் முதல்வர் என்றுக் கூறுவது தகுமா? மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து யோசித்து பாரு நான் சொல்ல வருவது புரியும்.///

அண்ணே புரியுதுண்ணே என்னா சொல்ல வர்ரீங்கன்னு கேட்டா மானாங்கன்னியா திட்டு விழும் சாட்டில் எதுக்கு வம்பு:)))

*************************
கோபிநாத் said...
நீ எல்லாம்...///

??????????????
என்ன சொல்லவர்ரீங்க கோபி

****************************

said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்... டோட்டல் டேமேஜ். :( வேறென்னத்த சொல்ல..

//ஆனா எதிர்பாத்த அளவுக்கு ஓட்டலை. ஏமாத்திட்டீங்க :(//

ஜி3.. நற நற நற..