Monday, April 20, 2009

நல்லா எடுக்குறாங்க குறும்படம் by டரியள் டக்ளஸ்

என்னய்யா போஸ் இது ஆதி பட புரொடியூசர் மாதிரி, கையில நல்ல வேளை வாட்ச் சில்வர் கலரில் இருந்துச்சு இல்லேன்னா அங்க கை இருப்பதும் தெரிஞ்சு இருக்காது முகம் இருப்பதும் தெரிஞ்சு இருக்காது, கொஞ்சம் புரொடியூசர்கள் டார்ச் லைட்டாவது வாங்கி கொடுத்து இருந்திருக்கலாம்.

இது அந்த பொண்ணு முத்தம் கொடுக்க வந்துச்சாம் இவரு பயந்து போய் என்னான்னு கேட்டாராம் அதுக்கு ரியாக்சன்.


முத்தம் மூக்கில் கொடுத்தாட்டாங்களாம் அதான் மூக்கை காட்டுகிறார் ஹீரோ, பொற மண்டையிலேயே போட்டத சொல்லவே இல்ல! அதுவும் இல்லாம டைரக்டருக்கு ஒரு உம்மா கொடுப்பார் பாருங்க அடுத்த சீனில், அப்ப குளோசப் சாட் வைத்திருக்கலாம் ஆதி! அந்த காற்றில் வேஸ்டா போன உம்மா உங்களுக்காவது கிடைச்சு இருக்கும்!

கித்தார் எப்படி பிடிக்கனும் என்று சொல்லிக்கொடுக்கிறார்

பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அதான் அப்படி காட்டுகிறார்.

இந்த குறும்படத்திலேயே பிடிச்ச காட்சின்னா இதான், இந்த பழய படத்தில் எல்லாம் பாத்தீங்கன்னா ஹீரோயினை வில்லன் கெடுக்க வரும் பொழுது புலி மானை துரத்துவது போலவும் ரேப் முடிஞ்ச பிறகு மான் துடிப்பது போலவும் அல்லது பல்லி வாயில் மாட்டிய பூச்சி, சிலந்தி கூட்டில் மாட்டிய பூச்சி என்று காட்டுவார்கள், இதே ஹீரோயின் ஹீரோவோடு ஒன்னா இருக்க ஆரம்பிக்கும் பொழுது மழை பெய்யும் முடிச்ச பிறகு மழை தண்ணி ஓலையில் இருந்து ஒவ்வொரு சொட்டாக விழுவது போலவும் காட்சி முடியும். ஹீரோ மண்டய போட்டுவிட்டா எறியும் விளக்கு டக்குன்னு அனையும் அல்லது குங்கும சிமிழில் இருந்து குங்குமம் கொட்டும் இப்படி ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். அதே போல இங்க பாருங்க ஒரு மனுசன் கசக்கி பிழிஞ்சுட்டார் என்பதை எப்படி சிம்பாளிக்கா டைரக்டர் ஆதி காட்டுகிறார் பாருங்க. அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ சவ...சவ சவ...சவ சவன்னு தேச்ச்சு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்!
*****************************
இனி குறும்படத்தில் ஹீரோ பேசும் வசனமும் அதுக்கு வரிக்கு வரி டரியள் டக்ளஸின் பதிலும்..(அவர் பேசுவதை அப்படியே அதே மாதிரி பேச்சுவழக்கில் எழுதி இருக்கிறேன்)

ஹீரோ: அப்ப என்னை வெளியே அனுப்பமாட்டங்கள்ள எங்க அம்மா!
டரியள் டக்ளஸ்: ஏன் அப்ப தான் உட்காந்தீங்களா?


ஹீரோ: அவளும் தண்ணி உடுறா நானும் தண்ணி உடுறேன் சத்தம் மட்டும் வரவே இல்ல!
டரியள் டக்ளஸ்: யோவ் அழுதீங்களா இல்லை இருவரும் செடிக்கு தண்ணி பாச்சினீங்களா சத்தமே வரல என்று சொல்ற!


ஹீரோ: தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார் மனுசன்.
டரியள் டக்ளஸ்: இது கதைக்கு ஆவாதுன்னு நொந்து போய் இருப்பார்


ஹீரோ: முத்தத்த பத்தி ஒன்னு எழுதிந்தேன் இல்லியா?
டரியள் டக்ளஸ்: ஆமாம் ஆமாம் இவரு வாஸ்த்யாயனருக்கு அடுத்த வாரிசு!


ஹீரோ: அவளுக்கு எப்படியாச்சும் முத்தம் கொடுக்கனும் என்று ஆசை
டரியள் டக்ளஸ்: ஒரு இளைஞி ஒரு இளைஞனுக்கு கொடுக்கனும் என்று நினைப்பது சகஜம்! ஆனா உனக்கு கொடுக்கனும் என்று நினைச்சுச்சு பாரு அதான் அதோட தப்பு.


ஹீரோ: ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம் யாருமே இல்லையேன்னு ”
டரியள் டக்ளஸ்: அப்படியே பில்லு கொடுக்காம ஓடி போய்விடலாமான்னு நினைச்சியா சகா?


ஹீரோ: கிஸ் பண்ண வரா
டரியள் டக்ளஸ்: என்னய்யா கொலை செய்ய வந்த மாதிரி சொல்ற!


ஹீரோ: என்ன ஆச்சுன்னு டக்குன்னு திரும்புறேன் மூக்குல கொடுத்தா அது முத்தமா அது!
டரியள் டக்ளஸ்: அப்படியே ஒரு குத்து குத்தி சில்லு மூக்கை உடைச்சு இருக்கனும்!


ஹீரோ: அவளுக்கு எனக்கு எப்படியாச்சு முத்தம் கொடுத்து அனுப்பனும் என்று ரொம்ப ஆசை
டரியள் டக்ளஸ்: நோ கமெண்ட்ஸ்


ஹீரோ: சந்து சந்தா போகும் என் கையபுடிச்சு நிறுத்துறா என்னான்னு கேட்டேன் இங்க யாரும் வரமாட்டாங்க என்கிறா அதுனால என்னான்னு கேட்கிறேன்?
டரியள் டக்ளஸ்: அவ்வளோ சொல்லியும் அதுனால என்னான்னு கேட்டியா சகா நீ? இப்ப தெரியுது ஏன் உன்னை விட்டு போனாங்கன்னு?


ஹீரோ: உனக்கு முத்தம் கொடுக்கனும் என்கிறா!
டரியள் டக்ளஸ்: வேண்டாம் கை செலவுக்கு பத்தாயிரம் கொடுன்னு கேட்டீயா?


ஹீரோ: ”எல்லாம் முடிஞ்சுடுச்சு அந்த இடத்தில்” என்ன கிஸ் பண்ண போறா
டரியள் டக்ளஸ்: இது என்னா ரிவர்ஸபுல் டெக்னிக்கா புரியலை தயவு செய்து விளக்கவும்.


ஹீரோ: யாரும் வரல கன்பார்ம் ஆயிடுச்சு
டரியள் டக்ளஸ்: முத்தத்துக்கே கன்பார்ம் ஆயிட்டா?


ஹீரோ: என் கண்ணில் கேமிரா பட்டுவிட்டது...சரி வேண்டாம் என்று சுத்துறோம்
டரியள் டக்ளஸ்: ஆஹா செல்போன் கிளிப்பிங் ஒன்னு மிஸ் ஆயிட்டே!


ஹீரோ: கிட்டாரா கையில கொடுத்தவுடனேகிட்டார் வளைஞ்சு இருக்கும் இல்லீயா?
டரியள் டக்ளஸ்: ரோடு கூடதான் வளைஞ்சு வளைஞ்சு இருக்கும்


ஹீரோ: எல்லோரும் இப்படி புடிப்பாங்கநான் கொஞ்சம் வித்தியாசமாக உட்காந்து!
டரியள் டக்ளஸ்: ஏன் சகா பைல்ஸ் பிராபிளமா?


ஹீரோ: கடல்ல எப்பயாச்சும் கவனிச்சு இருக்கீங்களா?
டரியள் டக்ளஸ்: இந்த மலை மேலிருந்து பெரும் சத்தத்தோட தண்ணி விழுமே அதானே கடல்! கவனிச்சு இருக்கோம்!


ஹீரோ: தேவதை என்று சொல்றோமில்லியா யாராவது தேவதைய இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என்று நினைப்பாங்களா? அப்படியே வச்சி அவள பாத்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கும்.
டரியள் டக்ளஸ்: நல்லவேளை கல்யாணத்துக்கு அப்புறம் டைவோர்ஸ் வாங்குவதுக்கு முன்பே பிரிஞ்சு போய்ட்டாங்க!


ஹீரோ: அவ பூ மாதிரி நான் செடி மாதிரி அவள நான் தான் தாங்கிக்கிட்டு இருப்பேன்ஆனா காத்து அடிச்சா பூ நவுந்து போச்சு செடி நவுரமுடியலையே அப்படியேதானேஇருக்கு அந்த பலம் தானே பூவை தாங்குச்சு இப்படி நானா யோசிச்சுசொல்லிப்பேன் பூ போச்சு செடி செடியாதான் இருக்கனும் வேற பூ எல்லாம் பூக்காது இந்த செடியில.
டரியள் டக்ளஸ்: லெமன் தான் சரியான மருந்து! அல்லது மோர் கூட குடிக்கலாம்!

டிஸ்கி: போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!


அந்த குறும்படத்தையும் பார்த்து சிரிக்க இங்கே போகவும் ஆதியின் பதிவுக்கு.

Sunday, April 19, 2009

கார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 20-4-2009

மேலே இருக்கும் படம் அனுப்பிய நண்பர் ரிஷானுக்கு நன்றிதனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)

***************

ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ.


கொடுத்த நாலு சீட்டுக்கு மேல கூவுறார்டா ங்கொயாலே!!!!--- டரியள் டக்ளஸ்

*************

தைரியம் இருந்தால் அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின்


அவருக்கு தெரியும் அவன் மகன் அஞ்சா நெஞ்சன் இல்லை என்று!--- டரியள் டக்ளஸ்
**************

Friday, April 17, 2009

மொய் எங்கப்பா?

முதல் காதலியை மறக்கவும் முடியாமல் அவள் வேறு ஒருவன் மனைவி ஆன பிறகு அவளை நினைக்கவும் முடியாமல், அவளின் திருமண நாள் அன்று சாப்பிடவும் பிடிக்காமல் தூங்கவும் முடியாமல், அவளோடு சுற்றிய
இடங்களுக்கு திரும்ப போகும் பொழுது எல்லாம் அவளின் நினைவுகளும் அப்பொழுது பேசிய பேச்சும் நினைவுக்கு வந்து பாடாய் படுத்தும் பொழுது வரும் கண்ணீர் துளிகளும், எல்லோரும் காதலர் தினம் கொண்டாடும் பொழுது நான் மட்டும் இறந்த என் காதலுக்காக அஞ்சலி செலுத்த, கட்டிய
புது மனைவியோடு முதல் திருமணநாள் கொண்டாடுவது என்பது எத்தனை கொடுமை???

இப்படி எந்த கொடுமையும் இல்லாமல் முழுக்க முழுக்க சந்தோசத்தோடு திருமணநாளை கொண்டாடவைத்த இறைவனுக்கும் என் காதல் திருமணத்தில் முடிய பெரிதும் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

திருமணத்தன்று வந்து வாழ்த்திய நம் பதிவர்களுக்கு தெரியும் அன்று எத்தனை சந்தோசமாக இருந்தேன் என்று, அன்று போல் இன்றும் உணர்கிறேன் திரும்பவும் அதேபோல் உங்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

இருநாட்கள் விடுமுறை அதனால் பதிவுலகம் பக்கம் வரவில்லை பதிவு போட்டு வாழ்த்திய வடகரை வேலன் அண்ணாச்சி ,பரிசல், நாமக்கல் சிபி, புதுகை தென்றல், தூயா, சஞ்சய், புதுகை அப்துல்லா, சென்ஷி, ஜோசப் பால்ராஜ், சங்கமம் ,காயத்ரி (G3), கார்க்கி பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் ,போன் போட்டு வாழ்த்து சொன்ன மகேஷ், அப்துல்லா , G3 ஆகியோருக்கும், தனியாக மெயில் அனுப்பியும், கிரீட்டிங் கார்ட் அனுப்பியும் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி நன்றி!

டிஸ்கி: ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே? என்ன கொடுமையா இது??? பதிவு எழுதி வாழ்த்து சொன்ன மக்கள் ஒவ்வொருவரும்
ஆளுக்கு 10000ரூபாய் வீதமும், பின்னூட்டத்தில் வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 5000ரூபாய் வீதமும், போன் போட்டு வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 2500ரூபாய் வீதமும் இவனுக்கு எதுக்கு இத்தனை வாழ்த்து பதிவு என்று நிச்சயம் டென்சன் ஆகியிருப்பார்கள் சிலர் அவர்களுக்கு சிறப்பு சலுகையாக 1000ரூ மட்டும் அனுப்பினால் போதும் அனைவரும் என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு அனுப்பிவிடவும்.

Friday, April 10, 2009

கார்ட்டூன் குசும்பு 11-4-2009Thursday, April 9, 2009

புது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி

மச்சான் டேய் இன்னைக்கு நைட் நம்ம கோழி இருக்கான்ல அவன் புது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி தருகிறான் வாடா நைட் நம்ம உலக்கை வீட்டுல எல்லோரும் ஊருக்கு போறாங்க அங்க வந்துடு என்று சொல்லிவிட்டு போவான்.

சரக்கு சைடிஸ் எல்லாம் வந்ததும் கிளிங் சத்தத்தோடு உற்சாகமாய் ஆரம்பிக்கும் பார்ட்டி. பேச்சுகள் மச்சான் அந்த மாலதி இருக்காளே அவ என்ன ஒரு மாதிரி பாக்குறாடா! டேய் அவளே ஒரு மாதிரிதான் போடா போ என்று எதிர் குரல் விட, போடா உன்னைய ஒருத்தியும் லுக்கு விடமாட்டேங்கிறான்னு காண்டு என்று பிகரில் ஆரம்பிக்கும் பேச்சு, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுதி ஏறி டேய் மச்சான் அந்த பக்கத்து வீட்டு ஆண்டி இருக்குல்ல அதோட போன வாரம் என்று விவரிக்கும் பொழுது கிளு கிளுப்படையும். எல்லோரும் ஆர்வமாய் கதை கேட்பார்கள்.

அடுத்து எல்லா பார்ட்டியிலும் அஞ்சலைய நினைச்சு அழும் சூர்யா போல் ஒரு பெக் அடிச்சதும் ஓடி போன பழய காதலி நினைவு வந்து ஒப்பாரி வைக்கும் படலமும் நடக்கும். மச்சான் அவள எவ்வளோ சின்சியரா லவ் செஞ்சேன் தெரியுமாடா? என்னை அவ புரிஞ்சுக்கலடா! என்னை அவ கல்யாணம் செஞ்சிருந்தா , "இந்தா இந்தா இப்படி இப்படி உள்ளங்கையில் வெச்சு தாங்குவேண்டா" அவளை என்று குடிச்சுக்கிட்டு இருக்கும் பீர் பாட்டிலை கீழே வெச்சு உள்ளங்கைய காட்டிக்கிட்டு இருப்பான், உள்ளங்கையில் ஒரு சிக்கன் பீஸ் வெச்சதும் அப்படியே எரிக்கும் பார்வை பார்ப்பான். டேய் என்னா டா ஓவரா சலம்புற நான் கூடதான் லவ்வினேன் போய்டா அதுக்கு நான் என்ன பொட்டையாட்டம் அழுதுக்கிட்டா இருக்கேன் போடா போ எங்களுக்கு வலி இல்லை இவருதான் பெருசா லவ் செஞ்சாராம் என்று சொல்லிக்கிட்டே ஓ வென்று ஆரம்பிக்கும் அடுத்த பார்ட்டி. மச்சான் டேய் பாருடா நாம ஜாலியா இருக்கதானே கோழி ஜட்டி வாங்கினதுக்குன்னு பார்ட்டி கொடுக்கிறான் இப்படி அழுதா கஷ்டமா இருக்குல வாடா வா சீக்கிரம் முடி அந்த ரவுண்டை என்று அவனை ஒரு வழியா தேத்தி அடுத்த பெக் ஆரம்பிக்கும் பொழுது அடுத்தவன் ஆரம்பிப்பான்.

அடுத்து ஒரு மூடிய குடிச்சதுமே பாட்டு பாட ஆரம்பிக்கும் படலம் அதில் எப்பவும் குண்டன் ஆரம்பிப்பான் ”வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை” என்று பழய பாட்டா பாட ஆரம்பிப்பான், டேய் மச்சான் அப்படி பாக்காத டா எனக்கு போதை இல்லை சும்மா ஜாலிக்கு பாடுறேன்.. பாரு நான் எவ்வளோ ஸ்டெடியா இருக்கேன் என்று டக்கென்று நின்னுக்கிட்டு பெண்டுலம் மாதிர் ஆடிக்கிட்டே, பாருடா நான் ஸ்டெடியா இல்லையா என்பான். சரி டா சரி நீ ஸ்டெடிதான் மச்சான் என்று அவனை அமுக்கி போட்டு விட்டு அடுத்த ரவுண்ட் ஆரம்பிக்கும்.

டேய் பாருடா இவன் சிக்கன் சாப்பிட்ட கையோட என் சைடிஸ் பிளேட்டில் கைய வெச்சு மிக்ஸர் எடுக்கிறான் என்று புகார் கொடுப்பான் ஐயர். டேய் ஐய்யரே அதான் பீர் குடிக்கிறீல்ல அப்படியே ஒரு சிக்கன் பீஸை உள்ள விட்டா என்ன என்று அவனை சீண்டும் படலம் ஆரம்பம் ஆகும். பொருத்து பொருத்து பார்த்துவிட்டு டேய் உனக்கு முதலிரவில் உனக்கு ஸ்டார்டிங் டிரபுள் வரும் டா என்று ஹைடெக் சாபம் விடுவான். அதெல்லாம் சுத்தமான ஐயர் சாபம் தான் பலிக்கும் நீ டூப்ளீகேட் ஐய்யர் அதனால பலிக்காது போடா என்று அவனை சீண்டுவதும் அதுக்கு அவன் திரும்ப டென்சன் ஆவதும் என்று ஓடிக்கிட்டு இருக்கும்.

டேய் மச்சான் இத்தனை ரவுண்ட் அடிச்சும் நான் எவ்வளோ ஸ்டாராங்கா இருக்கிறேன் பாரு என்று நான் சொல்லும் பொழுது அப்படியே ஒரு டெரரர் லுக் விடுவானுங்க சரி சரி மிக்ஸிங்க்கு அந்த வாட்டர் பாட்டிலை எடு என்று மிக்ஸ் செஞ்சு ஒருமடக்கில் குடிச்சுட்டு தலைய உலுக்கி ஸ்ஸ்ஸ்ஸ் அந்த சிக்கன் பீஸை எடுடா என்றதும் அப்படியே திமு திமு திமுன்னுபோட்டு சாத்துவானுங்க. நாயே குடிப்பது பெப்ஸி அதுக்கு மிக்ஸிக்குங்கு தண்ணி அதோடு சிக்கன் பீஸுமா டேய் குடிக்கிற நாங்களே இதுவரை ஒரு சிக்கன் பீஸ் தான் சாப்பிட்டு இருக்கோம் இதோட நீ சாப்பிட்டது நாலுடா , டேய் ரொம்ப ஓவரா போர மகனே இனி சிக்கன் பீஸ்ல கைய வை கைய வெட்டுறேன் என்று மிரட்டல்.அதுக்காக நான் சைடிஸ் சாப்பிடுவதை விட மாட்டோம்!

அடுத்து கடைசியா வாமிட் எடுக்கும் படலம். நம்ம மக்களுக்கு தண்ணி அடிச்சுட்டு வாமிட் எடுப்பது என்பது சூப்பர் பிகருங்களுக்கு மத்தியில் சத்தமா டுர்ர்ர்ர்ர்ர் விடுவதற்கு சமம். டேய் ஏன் டா அதுக்குள்ள எழுந்திருச்சுட்ட எங்கே டா போற என்ற கேள்விகளுக்கு சைகாயாலே ஒன்னுக்குன்னு சொல்லிக்கிட்டு பாத்ரூம் போய் அங்க யாருக்கும் தெரியாமல் வாமிட் எடுக்க சத்தம் கேட்டு டேய் இங்க பாருடா கழுதை கக்கூஸ் போற மாதிரி நம்ம பழம் சவுண்ட் கொடுத்துக்கிட்டு வாந்தி எடுக்கிறான், என்ன மச்சான் நீ ஒன்னுக்கடிச்சா மட்டும் உவ்வே உவ்வேன்னு சவுண்ட் வருது? மச்சான் வாழ்த்துகள் அப்பா ஆக போறீயா டா என்று வெளியே வந்தவனை சீண்டுவானுங்க, டேய் இதுவரை என் லைப்பில் இதுதான் பர்ஸ்ட் டைம் வாமிட் எடுக்கிறது, அந்த சைடிஸ் ரொம்ப ஆயில், அதோட ரெண்டு பிராண்ட் மிக்ஸ் செஞ்சது ஒத்துக்கலை என்று சாமாளிபிகேசன் நடந்துக்கிட்டு இருக்கும்பொழுதே அடுத்த ஆள் உவ்வே... டேய் இவன் ஒரு மோந்து பாத்தாலே பிளாட் ஆவும் ஆள் இவனுக்கு எவன் டா ஊத்திக்கொடுத்தது என்று பேசிக்கிட்டே இடத்தை சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்கும் பொழுது எல்லாம் ஒவ்வொரு ஆளும் அப்படியே இருக்கும் இடத்திலேயே பிளாட் ஆகும்.

காலையில் எழுந்ததும் மச்சான் ஸ்மெல் வருதா பாரு என்று குளேசப் விளம்பர மாடல் மாதிரி ஊதி ஊதி பாத்துக்கிட்டு இருப்பானுங்க. டேய் பாருடா இந்த நாதாறி இங்கயே வாமிட் எடுத்து வீட்டை நாறடிச்சு இருக்கிறான் என்று வீட்டுக்காரன் சத்தம் போட, சுத்தம் செய்ய கொடுத்துவெச்சு இருக்கனும் என்று வாமிட் எடுத்தவன் தலைய சீவிக்கிட்டே...சரி சரி ஒழுங்கா துடைச்சு வை நைட் வருகிறோம் என்று அலப்பறைய கொடுத்துக்கிட்டு முடியும் பார்ட்டி.

இங்கு என்னதான் நண்பர்களோடு ஹைடெக் பாருக்கு போனாலும் அந்த சந்தோசம் வரமாட்டேங்குது.

Tuesday, April 7, 2009

சீக்கியர்கள் உணர்வு என்றால் உசத்தியா?

ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் கூறுகையில்'காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய ஜனநாயக கட்சி, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எந்த முடிவும் எடுக்கப்படும், இவர்கள் இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது பற்றி மறுபரிசீலனை செய்வோம்' என்றார்.

அரசியல் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க எனக்கு.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவேண்டும் என்று எல்லா கட்சிகளும்(???), மக்களும் போராடினாங்க அப்ப மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து என்னாத்த செஞ்சாங்க இவங்க?

இதுவரை எத்தனை முறை எப்படி ஈழமக்கள் படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதனால் என்ன பயன் விளைந்தது?

அட விடுங்க எதுக்கெடுத்தாலும் அயல் நாட்டு பிரச்சினையில் தலையிடுவது சரி இல்லை என்று சொல்லுவீங்க.

தமிழக மீனவர்கள் சுட்டபடும் பொழுது அதை தடுக்க என்ன செய்து இருக்கீங்க?

தமிழக தலைவர் உங்களுக்கு லெட்டர் எழுதுவார் திரும்ப அவருக்கு நீங்க லெட்டர் எழுதுவீங்க இதுஎன்னா சாலமன் லெட்டர் எழுதும் தொடர் விளையாட்டா? மாறி மாறி லெட்டர் எழுதி விளையாடுறீங்க?

எத்தனை தமிழர்கள் தீக்குளித்தார்கள் அதுக்கு என்ன அறிக்கை கொடுத்தீர்கள்? சீக்கியர்களின் உணர்வு என்றால் ஒசத்தியா? தமிழர்களின் உணர்வு என்றால்.......???

அதே மாதிரி இந்நேரம் வேறு ஒரு மாநில அமைச்சர் மீது ஒரு தமிழன் செருப்பு வீசி இருந்தா என்னா நடந்து இருக்கும்?

புத்தங்களை படிப்பது எப்படி?

டிஸ்கி: இந்த பதிவுக்கு சில நாட்கள் முன் வந்த இந்த பதிவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை:)

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 1 டிகிரி புத்தகத்தின் ஆசிரியர் பாரு நிவேதிதாவிடம் ஒரு கேள்வி இந்த புத்தகத்தை வாசகருடன் அமர்ந்து படித்து இருக்கிறீர்களா அந்த அனுபவம் எப்படி இருந்தது?” அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு முக்கியமாக தோன்றுகிறது.“ பொதுவாக என் புத்தங்களை நான் திரும்ப படிப்பது இல்லை,அதுவும் மக்கள் என் புத்தகங்களை படிக்கும் பொழுது அவர்களை நான் பார்ப்பது இல்லை, வாசகர்கள் தின்ன சுண்டல் கையை துடைக்க அலட்சியமாக என் புத்தகத்தில் இருந்து இரு பக்கங்களை கிழிக்கும் பொழுது அடித்துவிடலாம் என்று மிகுந்த கோவம் வந்துவிடும்” ஆகவே அப்படி நான் செய்வது இல்லை.

சரி ஒரு புத்தகத்தை எப்படி முறையாக படிப்பது? மிக எளிமையாக தோன்றும் இந்த கேள்விக்கு நம் சமூகத்தில் விசித்திரமான பல முரண்கள் ஒளிந்திருக்கின்றன, புத்தகத்திலிருந்து தம்முடைய வருங்கால வருவாயை முடிவு செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்குகிறது புத்தங்ககள். நம்மில் பலபேருக்கு புத்தங்களை எப்படி படிப்பது என்று தெரியவில்லை என்றுதான் சொல்வேன்.

ஒரு புத்தகத்தை எப்படி முறையாக அணுகுவது என்பதை என் அனுபவங்களிலிருந்து குறிப்புகளாக இங்கே தருகிறேன்.இவை அனைத்தும் நீங்கள் அறிந்தவைதான் என்றாலும் சும்மா டமாசாக எடுத்துக்கவும். பாட புத்தங்கள், இலக்கிய புத்தங்கள், செக்ஸ் புத்தங்கள் என்று அனைத்து புத்தங்களுக்கும் கலந்து கட்டி இந்த குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

()
நாம் பணம் கொடுத்துதான் நூலகத்தில் மெம்பர் ஆகியிருக்கிறோம் கொடுத்த மெம்பர் ஷிப் காசுக்கு மேல் பல புத்தங்களை ஆட்டைய போட்டு இருக்கிறோம் என்பது வேறு விசயம், இருந்தாலும் நூலகத்தில் அனேகம் பேர் இப்படிதான் பணம் செலுத்திவந்து இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும், ஏதோ நூலகத்தையோ விலைக்கு வாங்கிவிட்டோம் என்பது போல் புத்தகத்தை தலைக்கு பின் புறம் வைத்து காலை நீட்டி தூங்குவது, மற்றவர்களை தூங்கவிடாமல் கொர்ர்ர்ர் என்று குறட்டை விடுவது போன்ற அட்டூழியங்களை அறவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்திரவு தரமால் தமக்கான தூக்கத்தை அமைத்துக்கொள்பது நலம். அதுபோல் புத்தகத்தை தலைகீழா வைத்தபடி போஸ் கொடுக்ககூடாது.

*
வணிக நோக்கில் சிலர் விற்கும் கதை புத்தங்களுக்காக சிலர் வாதாடுவதை கவனித்திருக்கிறேன். நாளெல்லாம் படிக்கும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சிக்காக படிக்கவிரும்பு கதை புத்தங்கள் மூளையைச் சிரமப்படுத்தும் விசயமாகவோ இருப்பதை விரும்புவதில்லை. இது ஒரு மக்குமூட்டை மனநிலை. நம்மில் எத்தனை பேர் சிறுவயதில் படிச்ச அம்புலிமாமா புத்தகத்தை படிக்கிறோம் இப்பொழுது? ஆனால் புத்தகத்தை பொறுத்த மட்டில் ஏன் இன்னும் அதே மாதிரியான புத்தங்களை திரும்ப திரும்ப படித்து அந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறோம்?

*
சிலர் படிக்கும் அறையை கூட தூங்கும் அறை போன்ற சூழலாக அமைக்கும் பெருமுயற்சியோடு தலையனை பெட் சீட், கொசுவத்தி போன்ற அயிட்டோங்களோடு உள்ளே வந்து புத்தகத்தை எடுத்ததும் கொர் கொர்ர்ர் என்று சத்தம். தூக்கம் கலைந்து எழுந்ததும் இவர்கள் ஓடும் இடம் பாத்ரூம். சினிமா தியேட்டாராக இருந்தாலும் பாட்டு போட்டது அனைவரும் ஓடும் இடம் பாத்ரூம், ஒருவனுக்கு ஒன்னுக்கு வந்ததும் அடுத்தவனுக்கும் ஒன்னுக்கு வரும் மர்மம் விளங்கவில்லை. இதுகூட பரவாயில்லை முதலிரவு அறையில் தலையனை பெட்சீட்டோடு இருக்கும் தூங்கு மூஞ்சிகளை என்னவென்று அழைப்பது?

*
ஒரு புத்தகத்தை முதல் நாள் முதல் பக்கம் மட்டும் படிச்சுவிடுவதில் நம்மில் பலருக்கு அசட்டுத்தனமான பெருமையுண்டு. இது நண்பர்களிடம் உரையாடும் பொழுது “நான் இந்த புத்தகத்தை படித்துவிட்டேன்” என்று ஜம்பமாக பெருமையடித்துக் கொள்வதற்குதான் உதவுமே ஒழிய வேறெதற்கும் உதவாது.

*
மிகவும் வயதானவர்கள், சிறு குழந்தைகள் நூலகம் வருவை தவிர்ப்பது நலம் பெருசுங்களுக்கு படிச்சுகாட்டவேண்டி இருக்கும், சிறுசுகள் படித்துக்கொண்டு இருக்கும் பொழு அப்பா வா போகலாம் என்று படிச்சுக்கிட்டு இருக்கும் புத்தகத்தை வாங்கி கிழிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் மற்றவர்கள் புத்தங்களுக்கு என்ன நேருமோ என்று ஒரு பதற்றத்தைதவிர்ப்பது நலம்.

*
செக்ஸ் புத்தங்களை அதில் உள்ள படத்துக்காக மட்டும் பார்ப்பது முதிர்ச்சியற்ற அவசகுடுக்கை தனம், கதையோடு சேர்ந்து படம் பார்க்க பழகிக்கவேண்டும், அதுபோல்ஆண் பெண் உறுப்புகளை மாஸ்கிங் செஞ்சு மறைத்து கொடுக்கும் பொழுதுதான் ஆபாசமாக தெரிகிறது, ரோட்டோரம் அடிக்கியிருக்கு செக்ஸ் புத்தங்களை பார்த்ததுவிடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு போகும் பெண்களை பார்த்து இருக்கிறேன். பதிவிரதைத் தன்மையை பறைசாற்ற இதை விடவும் சிறந்த சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு உள்ளன. இவர்கள் ஏன் பிளாட்பார கடைக்கு வருகிறார்கள்.

*
உங்கள் குழந்தைகளுக்கு இலக்கிய புத்தங்கள் பற்றிய பரிச்சயத்தை ஏற்படுத்துங்கள். அவர்களுக்குப் புரியுமா என்ற கேள்வி அநாவசியம். உங்களை வைத்து உங்கள் குழந்தைகளை எடை போடக்கூடாது.எடை கல்லை வைத்துதான் எடைப்போட வேண்டும். என்னது உங்களுக்கு குழந்தை இல்லையா முதலில் அதுக்கான செயல்களில் இறங்குங்கள். அதைவிட்டு என்ன பதிவு படிச்சுக்கிட்டு... சின்னபுள்ள தனமா!

*
என்னுடைய பதினைந்து வயதில் உறவினர் ஒருவர் ஒளித்து வைத்திருந்த காமசூத்ராவை படிக்க போனேன் அவர் வீட்டில் இல்லாத பொழுது தேடி எடுத்து படித்துக்கொண்டு இருக்கும் பொழுது நீ இதை எல்லாம் படிச்சு என்ன செய்யபோகிறாய் என்று புடுங்கி வைத்ததும் இல்லாமல் வீட்டில் போட்டும் கொடுத்துவிட்டார், அதன் பிறகு 15 வருடம் தேடினேன் தேடினேன் கிடைக்கவே இல்லை இப்பொழுதுதான் அதற்கான வாய்புகள் அமைந்தன சுந்தர்ஜீயின் காமக்கதைகள் மூலம்.
*

சிதம்பரம் மேல் ஷூ வீச்சு--- அதன் பின்விளைவுகள்+ கார்ட்டூன்


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார். ஷூ வீசிய நிருபருக்கு அகாலிதளம் கட்சியின் இளைஞரணி ரூ. 2 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.


இனி கற்பனை கார்ட்டூன் வரைய தெரியாததால் கார்ட்டூன் மாதிரி கற்பனை செஞ்சுக்குங்க:)))கந்தசாமி: என்னங்க இங்க இவ்வளோ கூட்டம்?

பெரியசாமி:அதுவா குறைந்த நாட்களில் எப்படி குறி தப்பாமல் ஷூவை வீசுவது என்று கிளாஸ் எடுக்கிறார்களாம் கெஸ்டா ஈராக் நிருபரும் கிளாஸ் எடுக்கிறாராம். லைவ் டிரைனிங் வேற உண்டாம்!
***************
அப்பா: டேய் இது என்னடா நடுவீட்டில் பொம்மைய கட்டி அதன்மேல் இப்படி ஷூவை வீசிக்கிட்டு இருக்க?

மகன்: அப்பா இப்ப இதுதான் சீக்கிரம் சம்பாதிக்க வழி யார் மேலயாவது கரெக்டா ஷூவை வீசினா அவரை பிடிக்காதவங்க லட்சகணக்கில் பணம் தருவாங்க அதுக்குதான் ஷூவை வீசி பிராக்டிஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

*****************
மனைவி: என்னங்க நம்ம பையன திட்டிக்கிட்டே இருந்தீங்களே பாருங்க நம்ம எம்.பி மீது செருப்ப வீசி 5 லட்ச ரூபாய் சம்பாரிச்சுட்டு வந்து இருக்கான்
*****************

தொண்டன்1: என்னப்பா தலைவரை சுத்தி புதுசா ஒரு படை கருப்பு பூனை படை மாதிரி?

தொண்டன்2:அதுவா தலைவரை நோக்கி யாரும் செருப்பை வீசினா கரெக்டா கேட்ச் புடிக்கும் செருப்பு படையணி

*****************

தொண்டன்1: என்னங்க தலைவர் டெப்பாசிட் போயும் பயங்கர சந்தோசமா இருக்கார்.

தொண்டன்2:அட நீங்க வேற போற இடம் எல்லாம் வீசிய செருப்பை வச்சு
ஒரு கடை ஆரம்பிச்சு பெரும் கோடிஸ்வரர் ஆகிட்டார்.

*****************

நிருபர்: என்னங்க இது தலைவருக்கு பக்கத்தில் நான்கு நாய் இருக்கு?

தலைவர் பி.ஏ: அதுவா யாராவது ஒரு கால் செருப்பை மட்டும் வீசினா மோப்பம் புடிச்சு அது யாருதுன்னு கண்டு பிடிச்சு இன்னொரு செருப்பையும் புடுங்கிட்டு வந்துடும்.

*****************

தொண்டன்1: என்னங்க கட்சி அலுவலகம் முன் புது கடையா இருக்கு.

தொண்டன்2:அதுவா தலைவர் பேட்டி கேட்கவரும் நிருபர்கள் அனைவரும் செருப்பை அங்க விட்டுவிட்டு டோக்கனை காட்டினாதான் தலைவரை பேட்டி எடுக்கும் அறைக்குள் போக முடியும். தலைவரோட மச்சான் தான் அந்த கடையே வெச்சு இருக்கார்.

*****************

நிருபர்: என்ன சார் பூமராங் மாதிரி வீசின செருப்பு திரும்ப வரும் மாதிரி
ஒரு செருப்பு கண்டுபுடிங்கன்னா முடியாதுன்னு சொல்லுறீங்களே

கடைகாரர்:ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே
*****************
வேலைவாய்பு செய்தி: சரியா செருப்பு வீச தெரிந்த நிருபர்கள் உடனடி தேவை! தினம் ஒரு ஜோடி செருப்பும் நல்ல சம்பளமும் வழங்கப்படும்.
முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
*****************
கோபு: என்ன புதுசா ஷூ பெட்டிங் ஊழலாம் என்னா அது?

ராமு: அதுவா வீசுற ஷூ தலைவர் மேல படுமா படாதான்னு பெட்டு கட்டி பெரும் அளவில் ஊழல் செஞ்சு சம்பாரிச்சு இருக்காங்க, இதுக்கு தலைவரும் உடந்தையாம்.

Sunday, April 5, 2009

சொடலையின் லீலை

அவன் பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் எம்.ஜி.ஆர் பேசுவது போல இருக்கும், சொடலை என்கிற அவன் பெயரை சொதலை என்றுதான் சொல்வான் இருபது வயது ஆன அவன். பேச்சு கொஞ்சம் சரியாக வராது. ட வரிசை சுத்தமாக வராது ட வரும் இடத்திலும் மற்றும் பல இடங்களில் எல்லாம் "த" வரிசைதான்.

உடல் உறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்காது,வீட்டில் கடைசியாக பிறந்தவன் என்பதாலும் ஒரே ஆண் மகன் இப்படி பிறந்துவிட்டானே என்று இவன் அம்மா வேண்டாத கோயில் இல்லை போகாத அரசு மருத்துவமனை இல்லை கடைசியாக காதில் போட்டு இருந்த கம்மலை விற்று சென்னை போய் வந்த பிறகு இனி விக்க ஒன்று இல்லை என்று ஆன பிறகுதான் அவள் பஸ் ஏறுவது நின்றது.இப்பொழுது கம்மல் இருந்த இடத்தில் கவரிங் தோடு போட்டு பார்த்து ஒத்துக்காமல் ஓட்டை துந்துவிடாமல் இருக்க ஓட்டையில் ஒரு வெளக்கமாத்து குச்சு சொருகி இருக்கும் தங்கமாள் தான் அவன் அம்மா!

ஒழுங்கா வேலை செய்யும் ஆட்களுக்கே என்பது ரூபாய் சம்பளத்துக்கு அறுபது ரூபாய் கொடுக்கும் கருப்பையா பண்ணையில் தான் வேலை இவனுக்கும் இவன் குடும்பத்துக்கும்.இவனுக்கு வேலை என்றால் சும்மா உப்புக்கு சப்பாணி வேலை, முடியவில்லை என்றாலும் அடுத்தவர்கள் செய்யும் வேலையை தன்னாலும் செய்யமுடியும் என்று காட்டுவதற்காகவே, கஷ்டப்பட்டும் வேலை செய்ய முயற்சி செய்வான் சொடலை, நெல் அறுவடையின் பொழுது கதிர் அறுக்க போனால் மற்றவர்கள் பத்து அடி போனால் இவன் ஒரு அடியிலேயே நின்று, ஒரு கையில் பிடித்த கதிரை இன்னொறு கையால் மரம் அறுப்பது போல் அறுப்பான், இவன் உலுக்கும் உலுப்பில் பாதி நெல் கொட்டிவிடும், இருந்தாலும் ஒண்ணும் சொல்லமாட்டார்கள் மற்றவர்கள், அதுபோல் இரு கைகளாலும் சேர்த்து ஒன்றாக கீழே கிடக்கும் நெல்லை குவிக்கமுடியாது ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு பக்கம் நிற்கும்.எல்லோருக்கும் ஐந்து மரக்கா கூலி என்றால் இவனுக்கு இரண்டு மரக்கா கூலி! ”எநாதூ எக்கு மத்தும் இதண்து மரக்கா மத்...” மற்றவர்களுக்கு மட்டும் ஐந்து மரக்கா நெல் கொடுக்குறீங்க? என்று அவன் சொல்லி கேட்பதுக்கு கூட பொறுமை இல்லாமல் போதும், போதும் நீ கிழிச்ச கிழிக்கு என்று விரட்டிவிடுவார் கங்காணியார்.

அந்த சமயத்தில் அவன் கண்களில் தெரியும் தோல்வியோ அல்லது இயலாமையோ அதை வார்தைகளில் சொல்லமுடியாது.ஒரு முறை ரோட்டில் ஓஓஓஓன்னு அழுதுக்கிட்டு இருந்தவனை ஏன் என்று கேட்டேன் கீழே கிடந்த பொட்டுகடலையை காட்டினான். கைகளில் தோல் வயன்றிருந்தது போல இருந்தது, என்னடா என்று கேட்டதுக்கு ”அம்ம பொத்துகதலை வாங்கி வத சொன்னது கீதே போத்துத்தேன்” என்று சொன்னான் ஏன் டா கை எல்லாம் தேஞ்சு இருக்கு என்றதுக்கு,கீழே ஓரமாக கொஞ்சமே கொஞ்சமாக குவிஞ்சு கிடக்கும் பொட்டுகடலைய காட்டினான். இருவிரல்களால் பொறுக்கமுடியாததால் தர தரன்னு கைய தரையில் போட்டு தேச்சு குவிச்சு வெச்சு இருந்தது புரிஞ்சுது. சரி இது வேண்டாம் மண்ணாகி விட்டது வேறு வாங்கி தருகிறேன் என்று சொல்லி அழைத்து சென்று பொட்டு கடலையும், அவனுக்கு திங்க ஏதும் வேண்டுமா என்று கேட்டதுக்கு ஐந்து பைசாவுக்கு தேன் மிட்டாய் வேண்டும் என்றான்,அதை வாங்கி கொடுத்ததும் சந்தோசமாக சென்றான்.

அன்றில் இருந்து என்னை கண்டதும் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான் அண்ணே..! அண்ணே..! என்று!மற்றவர்கள் போல அலட்சியம் காட்டாமல் அக்கறையோடு பேசியதோ,அல்லது தேன்முட்டாயோ தெரியவில்லை! ரொம்ப பாசமாக இருக்க ஆரம்பித்தான், சில நேரங்களில் நண்பர்களோடு இருக்கும் பொழுது அவன் பேசுவது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும்,ஒரு சமயம் அவனை கிண்டல் செய்ததை நான் கோவமாக திட்டியதில் இருந்து அவர்களும் இவனை கிண்டல் செய்வதை நிறுத்தினர்.

ஒரு முறை அவனிடம் என்ன வேலைக்கு போய் வருகிறாய்..? என்றேன். அவனும் “என்ண்ணா பாத்தாஆ தெயில சொங்கல் சூளைக்கு” என்றான். தெரியலை என்றேன்.பின் அடுத்த நாள் வரும் பொழுது செங்கல் பொடியில் விழுந்து பிரண்டது போல் சிகப்பாக வந்து நின்றான், சொடலை சொல்லமலேயே நான் செங்கல் சூளைக்கு போய் வருகிறாயா..?என்றதும் ரொம்ப சந்தோசம் தானும் வேலை செய்ததை சொல்லாமல் கண்டு பிடித்தது அவனுக்கு பெருமையாக இருந்திருக்கவேண்டும், அதுபோல் ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு மாதிரி வந்து நின்றான், சாந்து வேலை என்றால் சேறோடு,எரு அடிப்பது என்றால் சாணியோடு இப்படி எந்த பாகுபாடும் கிடையாது,அவனை பார்த்ததும்என்ன வேலைக்கு சென்று வருகிறான் என்பதை கண்டுபிடிப்பதே அன்று அவன் வேலை செய்ததுக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் ஆனது.அதனால் எந்த வேலைக்கு சென்றாலும்அதன் மேல் ஒரு முறை விழுந்து புரண்டுதான் வருவான்.

ஒரு நாள் நண்பர்களோடு நான் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது ஓடி வந்தான்; வந்தவன் ”அண்ணே னேத்து பண்ணஆரும் நதவாள் அமுடாவும் மோத்தார் செத்துக்குள்ளமுண்தகத்தையாக கிதந்தார்கள்” என்று சொன்னதும் அவன் என்ன சொல்லவருகிறான் என்று எனக்கு புரிந்தது பண்ணையார் பெண்கள் விசயத்தில் அப்படி இப்படி என்று பலர் சொல்லி கேள்விப்பட்டு இருந்ததால் அவன் சொன்னது டக்கென்று புரிஞ்சது , மற்றவர்கள் என்னது ”முண்தகத்தையா” அப்படின்னா என்றார்கள் அம்மன குண்டியாக என்று சரியாக சொல்லி புரியவைத்தான், டேய்..! சும்மா எல்லாரிடமும் சொல்லிக்கிட்டு இருக்காத பேசாம போ.. என்று சொன்னதும் ஏன்னா..! என்றான், போடா பேசாம போ..! என்றேன் கோவமாக.

இருதினங்கள் கழித்து பண்ணையார் வீட்டு செப்டிக்டேங்கில் குப்புற படுத்த நிலையில் மிதந்தான் அம்மணகுண்டியாக சொடலை, லூசு பய சுத்தம் செய்யுடா..! என்றேன் டவுசரையும் அவுத்து வெச்சுட்டு குதிச்சு இருக்கான் பாரு லூசு பய என்றார் பண்ணையார். கட்டி தூக்க கயிறு எடுக்க உள்ளே சென்ற பொழுது பண்ணையார் கட்டில் கீழே கிடந்தது சொடலையின்
கிழிந்த காக்கி டவுசர்.

சில மாதங்களில் எனக்கு பெங்களூரில் வேலை கிடைக்க குடும்பம் முழுவது பெங்களூருக்கு மாற்றம் ஆனது. வருடத்துக்கு ஒரு முறைமட்டும் அப்பா போய் வீட்டை எல்லாம் பார்த்துவிட்டு வருவார். எட்டு வருடங்களுக்கு பிறகு இன்றுதான் கோயில் திருவிழாவுக்கும் அண்ணன் மகள் காது குத்து விசேஷத்தை குல தெய்வ கோவிலில் வைக்கவேண்டும் என்பதாலும், ஊருக்கு நான் வர நேர்ந்தது.

துர்ர்ர் துர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சொடலை போலவே ”டு” வராத அதே போல் உடல் அசைவுகளோடு ஒரு சிறுவன் ஓடிக்கொண்டு இருந்தான்! அச்சு அசலாக சொடலை தெரிந்தான்..!

யார் இவன் என்று கேட்டதுக்கு அவன் பண்ணையாரின் மகன் என்று மாரி சொன்னான்.

நான் சிரித்தேன் அதன் அர்த்தம் புரியாமல் மாரி விழித்தான்!

தமிழ்மணத்துக்கு ஒரு கோரிக்கை+ நன்றி நன்றி நன்றி

எந்த பதிவுக்கும் இத்தனை நேரம் யோசனை செய்தது இல்லை, இப்படி எழுதி, எழுதி அழித்தது இல்லை. ஒற்றை வார்தையில் நன்றி என்று சொல்லிவிடலாமா என்றால் ச்சே.. அது அவ்ளோ நல்லா இருக்காது, சரி தமிழ்மணத்துக்கு மட்டும் நன்றி சொல்லி ஒரு மெயில் அனுப்பிடலாம் என்றால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பதுபோல தமிழ்மணத்தையும் பப்ளிக்கா கலாய்ச்சுவிட்டு ரகசியமாக நன்றி சொல்லி மட்டும் மெயில் அனுப்பினால் நல்லா இருக்காது என்று எழுதிய மெயிலும் டிராப்ட்டில் இருக்கு.

எப்பொழுதும் படிக்கும் அதே மக்கள் அதே நபர்கள் பின்னூட்டம் என்று ஸ்டார் வாரத்தில் முதல் இரு நாட்கள் ஓடிய பொழுது அதுக்கு முன்பு ஸ்டாராக இருந்த மக்களிடம் கேட்டதில் அவர்களும் அதையேதான் சொன்னார்புது ஆட்கள் மிகவும் குறைவு! அல்லது வருவது இல்லை என்று கொஞ்சம் உற்ச்சாகம் குறைந்தது. இருந்தும் சரி பரவாயில்லை என்று தொடர்ந்து எழுதியதில்,பல பல புதிய பதிவர்கள் வந்தபொழுது மிகவும் உற்சாகமாய் இருந்தது, டாக்டர் ருத்ரன் அவர்கள் பின்னூட்டம் போட்ட பொழுது அட..! நம் பதிவை கூட படித்து இருக்கிறாரே என்று மிகவும் சந்தோசமாக இருந்தது.

பின் புது புது ஆட்கள் ஃபாலோயராக ஆரம்பித்தவுடன் அட..! ஸ்டார் வாரத்திலேயே 200 தொட்டுவிட்டால் நன்றாக இருக்குமே! என்று மனம் பேராசை பட்டது.அது நடக்கவில்லை என்றாலும், ஹிட் கவுண்டர் சூடு வெச்ச மீட்டர் போல செம ஸ்பீடூ.

ஈ ஓட்டிக்கிட்டு இருந்த நம்ம கடை T-நகர் ரங்கநாதன் தெரு கடைத்தெரு போல் ஆனது,தினம் 500 பேர் வரும் இடத்தில் 3000பேர் வரை போனது ஒரே நாளில் இவை அனைத்துக்கும் காரணமாக இருந்த தமிழ்மணத்துக்கும்,ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

இது கொஞ்சம் பேராசைதான் இருந்தாலும் பரவாயில்லை, இதுபோல் தொடர்ந்து தங்கள் ஆதரவை தரும் படி கேட்டுக்கிறேன்.

தமிழ்மணத்துக்கு நான் வைக்கும் ஒரு கோரிக்கை
புதிதாக எழுத வரும் பதிவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிதாய் இணைபவர்களுக்கு முதல் பக்கத்தில் ஒரு இடம் கொடுத்தால், அவர்கள் தனியாக கவனம் பெற வாய்ப்பு இருக்கிறது, முன்பு இருந்த அண்மையில் இணைந்தவர்கள் போல கடந்தவாரத்தில் இணைந்தவர்கள் அல்லது கடந்தமாதத்தில் இனைந்தவர்கள் என்று ஒரு சிறு பகுதி இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்த ஏதுவாக இருக்கும். முதல் பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது அங்கு முடியவில்லை என்றாலும் புதிதாக வந்த சினிமா, தேர்தல் 2009 லிங்குக்கு அருகிலாவது புதியவர்களுக்கு என்று ஒரு இடம் கொடுங்கள் மிகுந்த ஆர்வமோடு எழுத வரும் பதிவர்களுக்கு பின்னூட்டம் மட்டுமே உற்சாகத்தை கொடுக்கும் அது இப்பொழுது கிடைக்க வழி இல்லை இருக்கும் கூட்டத்தில் யார் புதியவர்கள் என்பது கண்டுபிடிப்பது மிகவும்கடினம்.

முடிந்தால் செய்யவும்..
நன்றி...!

Saturday, April 4, 2009

துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!

பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

ஆண்களின் குளியலறைஆண்களின் குளியலறை
எப்பொழுதும் கப்பு
மிக்கதாகவே இருக்கிறது
ஓடிச்செல்கையிலும்
மூக்கை பிடித்தபடி நுழைகையிலும்


அவர்களின் ஜட்டிகள் பனியன்களில்
இருக்கும் அழுக்குகளும்
ஆப்ரிக்கா மேப் கறைகளும்
கண்ணுக்கு புலப்படாத
கிருமிகளை பரப்புகின்றன


மயங்கி விழும் பல்லிகளுக்கு கபால மோட்சமும்
அரண்டு போய் ஒளிந்துக்கொள்ளும்
எலிகளுக்கு மயக்கமும்
ஆண்களின் குளியலின்
தண்டனையாக கிடைக்கின்றன


மூன்று சுவர்களும் கதவு
இல்லாத குளியலறையில்
ஆண்களின் ரகசியங்களை எவராலும்
பாதுக்காக்க முடிவது இல்லை
பாதுக்காக்க முனைவதும் இல்லை
எப்பொழுதும் தர்ம தரிசனம்


எப்பொழுதுதாவது நீங்கள்
பார்க்கலாம் சுவர்கள் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கின்றன
தாங்கள்சுவரில் மாட்டி இருந்த
ஜட்டியை எடுத்தபிறகு என்று!


இது ஆதவனின் கவிதைக்கு எதிர்கவுஜை

Friday, April 3, 2009

11 ஸ்டார் கிரிக்கெட் குழு

டேய்.. மச்சான்! பேரு செம கலக்கலா இருக்கணும் என்னாடா பேர் வைக்கலாம்? என்று ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டு இருந்தது. ஜூனியர் டெண்டுல்கர்'ஸ் என்று வைக்கலாமா? என்று யோசனை சொன்னான் சுண்டைக்காய், யங் டைகர்ஸ் என்று வைக்கலாமா என்று யோசனை சொன்னான் கோழி வெங்கட், டேய்.. உமா பேன்ஸ் என்று பெயர் வைக்கலாம் என்று எதிர் வீட்டு ஃபிகரை வம்புக்கு இழுத்தான் எருமை முட்டை, இப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது போல் தீவிர ஆலோசனையில் இருந்தது அந்த குழு. ஏன் என்றால் இரண்டு மாதத்தில் குடவாசலில் நடக்க இருக்கும் டோர்னெமெண்டில் பெயர் கொடுக்க பெயர் வேண்டுமே! ஆமாங்க அதுவரை எங்க டீமுக்கு பேர் கிடையாது, டோர்னமெண்ட் முதல் பரிசு 250 ரூபாய் எண்ட்ரி பீஸ் 25 ரூபாய், டேய் சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கிறோம் ஒரு MRF பேட் வாங்குறோம்! என்று பேச்சு போய்க்கொண்டு இருந்தது. கடைசியில் அந்த டீமுக்கு 11 ஸ்டார் என்று பெயர் வைக்கப்பட்டது அந்த குழுவில் இருந்த ஒரு ஸ்டார் இந்த வார ஸ்டார் என்று சொல்லணுமா என்ன!

அதுவரை எங்களிடம் இருந்தது மரப்பலகையில் பேட் போல செதுக்கப்பட்ட ஒரு பேட் தான், கைப்புடி உருண்டையா எல்லாம் இருக்காது!பட்டையாகதான் இருக்கும். சில சமயம் கார்க் பாலில் விளையாடும் பொழுது கை எல்லாம் வலிக்கும் இருந்தும் விளையாடுவோம்,அப்பொழுது பேசிக்கிட்டு இருக்கும் பொழுது யோசனை சொன்னேன் டேய்.. இங்க விளையாடுவது வரைக்கும் இந்த பேட் ஓக்கே, ஆனாகுடவாசலில் போய் விளையாடப்போறோம் அங்க போகும் பொழுது இந்த பேட்டை தூக்கிட்டு போவது நல்லா இருக்காது, ரன்னருக்கு இந்த பேட்வெச்சுக்கலாம் பேட்டிங் புடிப்பவனுக்கு ஒரு நல்ல பேட் வேணும்டா என்றேன், எப்பொழுதும் எதிர் வீட்டிலேயே இருக்கும் ஃபிகரை சைட் அடிக்கணும்என்றால் தினம் தினம் மேக்கப் போட்டுக்கிட்டு போகணும் என்ற அவசியம் இல்லை, அந்த ஃபிகரோட அத்தை பொண்ணோ அல்லது வெளியூர் பிரண்டோவீட்டுக்கு வந்து இருக்கும் பொழுது சைட் அடிக்க மேக்கப் போட்டுதானே போகணும்! அதுபோலதான் இதுவும் வெளியூர் என்றால் நல்ல பேட் வேண்டும் என்ற லாஜிக்கும்!

விசாரித்து பார்த்ததில் 180க்கு குறைந்து நல்ல பேட் இல்லை, சரி அதான் இன்னும் இரண்டு மாசம் இருக்கிறதே பக்கத்து ஊரு பசங்களோட பெட் மேட்ச்போட்டோம் என்றால் அட்லீஸ்ட் ஒரு 5 மேட்சில் செயிச்சா ஒரு 25 தேறும் இனி ஐஸ் வாங்கி திங்குற காசு,முட்டாய் வாங்கி திங்கிற காசு,சர்பத்குடிக்கிற காசு எல்லாத்தையும் இதில் போடணும் என்று சொல்லி ஒரு பாண்ட்ஸ் டப்பாவில் ஓட்டை போட்டு காசு சேர்க்க ஆரம்பிச்சோம்!நாள்ஆக ஆக ஒண்ணும் உண்டியல் நிரம்புகிற மாதிரி தெரியவில்லை! இனி அதிரடி ஆக்சன் தான் என்று ஒரு தொழிலதிபருக்கு உண்டான மூளையோடு செயல்பட்ட ஆரம்பித்தேன்.ஆலோசனை செய்ததில் ஒவ்வொருவர் சொன்ன யோசனைகள்

சினிமா காட்டுவது
கூட்டாஞ்சோறு ஆக்குவது
விறகு விற்பது
தேங்காய் விற்பது

சினிமா காட்டுவது ஊரில் இருக்கும் நண்டு சிண்டுங்களை எல்லாம் ஒண்ணாக்கி கூடத்துக்குள்ள அடைச்சு அதுங்க வைத்து இருக்கும் 5 பைசாவை எல்லாம் வாங்கி படம் காட்டுவது என்று முடிவு செய்தேன், சித்தப்பாவின் சினிமா தியேட்டரில் ஆப்ரேட்டர் கட் செஞ்சு போடும் பிலிம் சுருள் எல்லாத்தையும் எடுத்துவந்து சேர்த்து வெச்சு,ஒரு தகர டின்னில் ஒரு சின்ன ஓட்டை போட்டு அதுக்குள்ள டார்ச் லைட்டை வெச்சு அதன் ஒளி வெளியில் இருக்கும் பிலிம் சுருளில் படுமாறு வைத்து எதிரே வெள்ளை துணியில் பிலிமில் இருக்கும் படம் விழும் அந்த சுருளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றினால் படம் ஸ்லைட் ஸ்லைடாக மூவ் ஆகும்,இப்படிதான் படம் காட்டினோம், இருக்கிற நண்டு சிண்டு எல்லாம் ஒண்ணு சேர்த்து அதுங்ககிட்ட இருந்து ஆட்டைய போட்டதில் ஒரு மாதத்துக்கு 10க்கு மேல தேறவில்லை.அப்பா டார்ஜ் லைட்டுக்கு போடும் பேட்டரி ஒரு வாரத்திலேயே தீர அப்பா எவ்ரெடி காரனை திட்டிக்கிட்டு இருந்தார் பிள்ளை தொழிலதிபர் ஆவது தெரியாமால்!(வடிவேலு ஸ்கூலில் படிக்கிற பசங்க ஐஸ் பாய் விளையாடும் பொழுது எங்க ஒளிஞ்சு இருக்கான் என்று காட்டி கொடுக்க 25 பைசா வாங்குவார் அதுதான் நினைவுக்கு வருது இப்ப).

கூட்டாஞ்சோறு அவுங்க அவுங்க வீட்டில் இருந்து அரிசி,சர்க்கரை அது இதுன்னு எது கையில கிடைக்கிறதோ அதை ஆட்டைய போட்டுக்கிட்டு வரணும் அதன் பிறகு அதைவெச்சு சமைச்சு அதை வித்தோம் என்றால் காசு கிடைக்கும் என்று தக்காளி சாதம் செஞ்சா எங்களாலயே அதை வாயில் வைக்கமுடியவில்லை இப்படியாக சரவணபவனுக்கு போட்டியாக சரவணனால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமும் தோல்வியில் முடிந்தது!

விறகு விற்பது ஊரில் சும்மா பொறம்போக்கு நிலத்தில் விளைஞ்சு இருக்கும் கருவமரத்தை வெட்டி பாய் கடையில் கொடுத்தால் மனுவுக்கு 2 ரூபாய் தருவார் என்பதால் விறகு எல்லாம் வெட்டி கோழி வீட்டு வண்டியில் ஏற்றி பாய் கடையிலும் போட்டு மொத்தமாக 45ரூபாய் தேறியது ஆஹா சூப்பரு இதையே இன்னும் ரெண்டு மூணு நாள் செஞ்சா ரன்னர் பேட்டையும் வாங்கிடலாம் என்று பேராசை பட்டு அடுத்த நாள் போய் வெட்ட ஆரம்பிச்சதும் ஆயா வூட்டு மணியும் தலையாரியும் தொரத்த விழுந்தடிச்சு ஓடினோம் என்னாடான்னு பார்த்தா அது பொறம்போக்கு இடம் இல்லை அது ஆயா வூட்டு மணியோட இடம் என்று பிறகுதான் தெரிஞ்சது.

யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து அதை விற்றுவிடலாம் என்று இரண்டு நாள் செஞ்சோம் அதிலும் தலையாரி தொந்தரவு சரி இன்னும்15 நாள்தான் இருக்கு இதுவரை எம்புட்டு தேறி இருக்கு என்று பார்க்கலாம் என்று உண்டியலை உடைச்சு காசு எல்லாத்தையும் எண்ணினா 90 இருந்தது, இன்னும் 90 பேட்டுக்கு வேண்டும் கும்பகோணம் போய் வர 10 ஆக இன்னும் 100 வேண்டும் என்ன செய்யவது என்று யோசிச்சுக்கிட்டு வீட்டில் படுத்து இருக்கும் பொழுது டேய்..

காடுமாதிரி முடி வளர்ந்து இருக்கு பாரு போய் முடிய வெட்டிட்டு வா என்று அம்மா கொடுத்த 5 கையில் வந்தது கும்பகோணம் போக காசு ரெடி, வருவதுக்கு காசு என்று யோசிக்கும் பொழுது முரளி சைக்கிளில் போனான் என்னாடா என்றால் அவனும் முடி வெட்ட என்றான் ஆஹா சூப்பரு வாடா என்று அவனை அப்படியே ஸ்கூல் பக்கம் தள்ளிக்கிட்டு போய் நீ எனக்கு முடி வெட்டி விடு நான் உனக்கு வெட்டி விடுகிறேன் 10ரூபாய் கிடைக்கும் என்றேன் அவனும் அரை மனதாக சரி என்றான் முதலில் நான் அவனுக்கு வெட்டிவிட பின் அவன் எனக்கு வெட்டிவிட வீட்டுக்கு வந்ததும் என்னாடா இது எவன்டா இப்படி வெட்டினது வா போய் என்னான்னு கேட்கலாம் என்று அப்பா சத்தம் போட, அதுக்குள் சித்தப்பாவும வந்து விட நான் சொன்னதை கேட்டு சிரி சிரி என்று சிரித்துவிட்டு போய் திரும்ப ஒழுங்கா முடி வெட்டிக்கிட்டு வர சொல்லிட்டு மீதி எவ்வளோ பணம் வேண்டும் என்று கேட்டு சித்தப்பாவே போய் பேட்டும் அதோடு புது டென்னிஸ் பாலும் வாங்கிகொண்டு வந்து தந்தார்!

மேட்ச் ரிசல்டா! அத ஏன் கேட்குறீங்க புது பேட்டில் விளையாடத்தெரியாம சீக்கிரம் முதல் ரவுண்டோடு வெளியேறினோம், மரகட்டை என்றால் பிரிச்சு உதறுகிறார்கள் பேட்டை கொடுத்து விளையாடு என்றால் குச்சியை உட்டுட்டு நிக்கிறானுங்க!

Thursday, April 2, 2009

பாலாவுடன் சேது அனுபவங்கள்

தம்பி சீக்கிரம் கிளம்புடா.. நம்ம கந்தசாமி அண்ணாச்சி கும்பகோணம் வந்து இருக்கிறார் நம்மளை உடனே வர சொல்கிறார் என்றார் சித்தப்பா. சரி என்று கிளம்பி கும்பகோணம் போனோம் நாளை மறுநாள் எல்லோரும் வருகிறார்கள் அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ரெடி செஞ்சுடணும். தங்க இப்ப இடம் தான் முக்கியம் என்றார் சித்தப்பாவிடம்.நான் என்ன..? ஏது..? என்று புரியாமல் இருக்க பின்னர் தான் சித்தப்பா சொன்னார் அண்ணாச்சி ஒரு படம் தயாரிக்கிறார் அதுக்கு ஷூட்டிங்கு நாளை மறுநாளில் இருந்து நடக்கப்போவுது, நம்ம ஊரு சேங்காலிபுரத்திலும் ஷூட்டிங் இருக்கு என்றார்.

அப்புறம் அண்ணாச்சி சரவணனை கூடவே வெச்சுக்குங்க என்ன வேண்டும் என்றாலு சொல்லுங்க பார்த்துக்கலாம் நான் கிளம்புறேன்..! என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சித்தப்பா.பட்டாசு எங்கே கிடைக்கும், சவுக்கு மரம் காலேஜ் பாலத்தில் கடை செட் போட எங்கே கிடைக்கும் என்று பல தேவைகளுக்கும் அவர்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருந்தேன், தட.. தட.. என்று சத்தத்தோடு வந்து நின்றன வரிசையாக பத்து பன்னிரெண்டு பஸ்கள்.

கும்பல் கும்பலாக இளைஞர்கள்பட்டாளம் என்று இறங்கிக்கொண்டு இருந்தது, அண்ணாச்சி ஹோட்டலில் ஹீரோ விக்ரம், ஹீரோயின் புதுசு, இளையராஜாதான்இசை என்று சொல்லிவிட்டு ஹோட்டலிலேயே ”கானஙகருங்குயிலே...”பாட்டை போட்டு காட்டினார். பின் அவர்புரொடெக்ஷன் மேனேஜர்,பாலா,இவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணன் பையன் இந்த ஊருதான் என்ன வேணும்னாலும்சொல்லுங்க..! என்று.

என்னடா..! இது ஒருத்தரும் தெரிஞ்ச முகமாகவே இல்லை, இதுல நம்ம ஊரில் வேற வந்து ஷூட்டிங் என்கிறார்கள் என்னத்த ஓட போவுது இந்த படம் என்று நினைச்சேன்,அதில் சுவாரஸ்யமான பல சம்பவங்களும் நடந்தன. காட்சிப்படி மோகன் வைத்யா அபிதா குஜலாம்பாலை ஒரு சின்ன மொபெட்டில் வைத்து ஓட்டிக்கிட்டு அந்த காலேஜ் பாலத்தை கடக்கணும்
அப்பொழுது விக்ரமும், மற்றவர்களும் கூப்பிட்டு வம்பிழுப்பது போல் காட்சி, மோகன் வைத்யா அப்பொழுதுதான் அந்த உண்மையைசொன்னார் பாலாவிடம், இதுவரை சைக்கிள் கூட ஓட்டியது இல்லை, எனக்கு எதுவும் ஓட்ட தெரியாது என்று, பாலாவும் சும்மா ஒரு ரெண்டு அடி ஓட்டுங்க அட்ஜெஸ்ட் செஞ்சுக்கலாம் என்று சொல்ல,ஒண்ணும் சொல்லமுடியாமல் ம்ம்ம் என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறி உட்காந்தால், ம்ம்ம்ம் ஒரு இன்ஞ் கூட காலை ஊன்றாமல் ஸ்டெடி செய்யமுடியவில்லை,பின்னாடி அபிதாவை உட்கார வெச்சு அப்படியேபின்னாடி இருந்து தள்ளி விட்ட கொஞ்ச தூரம் ஓடும் கொஞ்சம் ஸ்டெடி செய்யுங்க.. என்று சொல்லி பாலாவின் உதவியாளர் சண்முகமும்,இன்னொருவரும்தள்ளிவிட டொம்.. என்று வண்டி கீழே விழுந்தது.இது கதைக்கு ஆவாது என்று இரண்டு நாளில் ஓட்டி கத்துக்குங்க என்றார் பாலா! மோகன் வைத்யாவுக்கு வண்டி கத்துக்கொடுக்க யாரும் முன்வராததால் என்னிடம் கேட்டார் சரவணன் நீங்க கத்துக்கொடுங்க! என்று சரி என்று சொல்லிவிட்டு பழய TVS50 ஒன்றில் அவரை கிரவுண்டுக்கு அழைத்து சென்று கத்துக்கொடுத்தேன், கத்துக்கிட்ட பிறகுதான்அந்த காட்சி எடுக்கப்பட்டது.

சரணம் பவ கருணாமயி பாட்டில், அபிதா பூ கட்டுவது போல் ஒரு காட்சி வரும் அதுக்கு பாலா ஒரு பூ சொன்னார், காம்பு மட்டும் பிங் கலரில்
இருக்கும் அந்த பூ தான் வேண்டும் என்றார், சேங்காலிபுரம் அக்ரஹாரத்தில் இருக்கும் பலரிடமும் கேட்டு பார்த்துவிட்டு வடவேர் என்ற ஊரில்ஒரு கோயிலில் அந்த மரம் இருக்கிறது என்று பைக் எடுத்து போய் அந்த பூவை எடுத்துவந்து கொடுத்தோம், பின்புதான் தெரிந்தது அந்தஅபிதாவுக்கு பூவே கட்டத்தெரியாது..! என்று.பின் கொஞ்சம் கட்டிய பூவை கையில் கொடுத்து மீதியை கட்டுவது போல் சும்மா ஆக்ட்டிங்கொடுத்தாங்க அம்மணி.

அதுபோல் அந்த அக்ரஹாரத்து வீட்டில் இருக்கும் ஊஞ்சல், பூஜை சாமான்கள், நாற்காலிகள் எல்லாம் நம்ம வீட்டு பொருட்கள்.கும்பகோணத்தில் விக்ரமிடம் ஆட்டோ கிராப் வாங்கியவர்களை விட சீமானிடம் ஆட்டோ கிராப் வாங்கியவர்கள் அதிகம் அப்பொழுது ஏதோ ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தார் அவர். விக்ரம் முழங்காலில் இருந்து தொடை வரை இருக்கும் ஒரு பெரிய பள்ளம் விபத்தில் ஏற்பட்டதாம், அது தெரியாமல் இருக்கதான் ”தில்”லில் காலில் அடிப்படுவது போல காட்சியும், அதன் பிறகு காலில் பேண்டேஜும் இருக்கும்.

பாலாவுக்கு சாப்பாடு தண்ணி எல்லாமே கிங்ஸ் பில்டர் தான்,தினம் நான்கு பாக்கெட்டுக்கு குறையாமல் பிடிப்பார்.அட்வைஸ் ஆறுமுகமா இருந்தவர் அபிதாவின் அப்பா பசி சத்யா, பாலாவுக்கு இந்த ஷாட் இப்படி வெச்சா...! என்று ஆரம்பிப்பார், அவரும் ம்ம்ம் ம்ம்ம் என்று கேட்டுவிட்டுஅவர் நினைத்ததை முடித்துவிட்டு போய்விடுவார், இவரிடம் மாட்டியது அதிகம் விக்ரமின் தோழராக வரும் ஸ்ரீராம் என்ற பையன் தான் கையில் எப்பொழுது ஒரு புத்தகத்தோடு அவருக்கு ஏதேனும் போதனைகள் சொல்லிக்கிட்டே இருப்பார்.மதியம் அவர்களோடு சாப்பாடு முடிந்ததும் கொஞ்சநேரம் ரத்தினவேலு,விக்ரம்,அவுங்க அஸிஸ்டண்டோடு அண்ராம்ஸ் போட்டுஒரு சின்ன கிரிக்கெட் நடக்கும். ஐந்து மாதம் ராஜ உபசாரத்தோடு நாட்கள் கழிந்தன!

அந்த டீமில் டைரக்டர் அமீர் கானகருங்குயிலே பாட்டில் குரூப்பாக ஆடி இருப்பார் அவரை நன்றாக நினைவு இருக்கிறது, அப்பொழுது சசி கிளாப் அடிப்பார் மிகவும் ஒல்லியாக இருப்பார் சசியும் அண்ணாச்சி கந்தசாமிக்கு உறவினர் என்பதால் இவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன் இவர்கள் எல்லாம் பெரிய ஆளாக வருவார்கள் என்று அப்பொழுது தெரியவில்லை.

அண்ணாச்சி கந்தசாமி, அபிதா,ஆர்ட் டைரக்டர் ஆகியோரை தவிர மீதி அனைவரும் சக்ஸஸ் ஆகிவிட்டனர்.பாலாவின் அசிஸ்டண்டாக இருந்து டயலாக் எல்லாம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்த சண்முகம் என்பவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை, எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வார். இன்று அவர்களுக்கு என்னை நினைவு இருக்காது! ஆனால் அந்த நினைவுகள் சேது ஒரு வெற்றிப்படமாகவும் இன்று பாலாவும் விக்ரமும் ஒரு வெற்றியாளர்களாக இருப்பதாலும், என் நினைவில் அவர்கள் இருக்கிறார்கள்!

டிஸ்கி: இன்று விடுமுறை ஆகையால் ஒரே நேரத்தில் இரு போஸ்ட் இனி இன்றைக்கு இனையம் பக்கம் வரமுடியாது ஆகையால் நாளை சந்திக்கலாம்.

தேனாம்படுவை தப்பு தாளங்கள்!

பொதுவாக யாரும் இறந்து போனால் மட்டுமே அடிக்கப்படும் மேளம் வகை தப்பு.சில சமயம் எங்க ஊரில் ஊர் கூட்டம் போடப்படும் பொழுதுஅதுக்கான தேதி நேரம் ஆகியவற்றை சொல்லி ஊர் தலையாரி அடித்துக்கொண்டு செல்வார்.சாவு வீடாக இருந்தாலும், அடிக்கிற முறையில் தப்பை அடித்தால் கால் தனிச்சையாக ஆடும் எவ்வளோ பெரிய ராயல் பேமிலியாக இருந்தாலும்.

சாதாரண சரக்கு சீமை சரக்கு என்பது போல் லோக்கல் ஆளுங்க அடிக்கும் தப்பு தாளத்துக்கே ஒரு இது இருக்கும்,இதில் சீமை சரக்கு மாதிரி ஆட்கள் தான் தஞ்சாவூர் அருகில் இருக்கும் தேனாம்படுவை கிராமத்தை சேர்ந்தவர்கள். தேனாம்படுவை கிராமத்து தப்பு செட்டு ஆட்கள் என்பவர்கள் சாவு தப்பு அடிப்பவர்கள் அல்ல, கிராமத்து திருவிழாக்களுக்கு தப்பு அடிப்பவர்கள்.

கிராமத்து திருவிழா என்றால் பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் களைகட்டும், தேனாம்படுவை தப்பு செட்டு ஆட்களோடு கூடவே நாதஸ் ஆட்களும், மேளம் கொட்டுபவர்களும் வருவார்கள், கூடவே ரெண்டு ஜிகினா சுந்தரிகள்!எங்கு ஆஜர் ஆகவேண்டுமோ அங்கு சரியாக மாலை 7 மணிக்கு ஆஜர் ஆகிவிடுவார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு கொஞ்சம் லைட்டா “சுதி” ஏத்திக்கிட்டு வைக்கோல் போட்டு கொளுத்தி தப்பை தனலில் காட்டி வார் இழுத்து கட்டும் பொழுது ”டம்” டம்” என்று தட்டிப்பார்பார்கள். எல்லாம் சுதி ஏத்தலும் முடிஞ்சு , ஜிகினா சுந்தரிகளும் அப்படியே ஒரு கப் சுதி ஏத்தின பிறகு, ஊர் மைதானத்தில் வந்து சேர்ந்துவிடுவார்கள்.

தப்பு அடிப்பவர்களும் கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு,ஒரு வெள்ளை பனியன் வரிந்து கட்டிய வேட்டியோடு அவர்கள் ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டு அடிக்க ஆரம்பிப்பார்கள்,சாதரணமாக மற்ற குழுவினர் எல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் காட்டுவார்கள், ஆனால் நம்ம தேனாம்படுவை தப்பு செட்டுக்காரர்கள் அடிக்கும் முதல் அடியே 20:20 மேட்ச் போல வேகம்தான், சட சட சடன்னு வரும் பேய் மழை போல் டன்னா டர்னா ரகம் தான்.

கூடவே வரும் ஜிகினா சுந்தரிகள் போடும் குத்தாட்டம் இளசுகளை கட்டிப்போடும் அவுங்க போடும் ஒவ்வொரு குத்து ஆட்டத்துக்கும் பறக்கும் விசில்கள் தான் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆஸ்கார், விசில் சவுண்டு எகிற எகிற இவுங்க ஆட்டத்திலும் சூடு பறக்கும் ஆனால் விரசம் இருக்காது. குழுவாக வரும் இவர்கள் சிறிது நேரத்தில்இரு குழுவாக பிரிந்து போட்டி கச்சேரி போல் நடக்கும் ஒருவகையில் அவர்களுக்கு சிறிது ஓய்வு போல தோன்றினாலும் போட்டி செம சுவாரஸ்யமாக இருக்கும். தப்பு அடித்துக்கொண்டே நெருப்பில் விளையாடுவது, கீழே வைத்து இருக்கும் குண்டு ஊசியை கண் இமைகளால் தப்பு அடித்துக்கொண்டே எடுக்கும் பொழுது நெஞ்சம் பதறும், பண்ணையார்கள் வைக்கும் 50 ரூபாய் நோட்டை கண் இமையால் கீழே இருந்து எடுப்பது போல் சாகசங்கள் பல செய்வார்கள் பின் இரு குழுக்களும் திரும்ப கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வாசிக்க ஆரம்பித்து கடைசியாக இரு குழுவும் இணையும் இடத்தில் முடிகள் சிலிர்க்கும் படி ஒரு அதகள ஆட்டம் போடுவார்கள்.

மிகவும் துள்ளல் இசை வேண்டும் என்றால் ஒரு முறை தேனாம்படுவை தப்பு செட்டை உங்க ஊருக்கு கூப்பிட்டு பாருங்கள் வித்தியாசமான இசை அனுபவம் கிடைக்கும்!

டிஸ்கி: இப்பொழுது கிராமங்களில் திருவிழாக்கள் நடப்பதே குறைந்து வருகிறது, அப்படி நடக்கும் இடங்களிலும் டிவி புகழ் நடிகை நடிகர்கள் மேடையை ஆக்கிரமித்துவிடுகிறார்கள், இதுபோல் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடியுமா என்று பாருங்கள், குத்தாட்டம் வேண்டாம் என்றால் முன்பே சொல்லிவிட்டால் அவர்கள் இல்லாமலும் வருவார்கள்!

ஒரு ஜொள்ளு போட்டி! இதில் சார்மி அடிக்கும் கொசு எத்தனை?

டிஸ்கி: மனதளவில் வயதானவர்கள் தவிர்க்கவும்! மற்றப்படி வயது தடை இல்லை, மனைவி அருகில் இருக்கும் பொழுது சார்மி கொசு அடிப்பதை மெய்மறந்து ரசிக்க வாய்பு இருப்பதால் அதன் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொருப்பல்ல!

இந்த வாரத்தில் ஒரு ஜொள்ளு போஸ்ட் கூட போடவில்லை என்றால் சங்கத்தில் சேர்க்கமாட்டார்களாம் ஆகையால் இந்த போட்டி
இந்த பாடலில் சார்மி அடிக்கும் கொசுக்கள் எத்தனை, அதுபோல் அவர் கூட்டாளிகள் அடிக்கும் கொசுக்கள் எத்தனை என்று சரியாக சொல்பவர்களுக்கு ஸ்டார் வாரம் முடிந்த மறுநாள் ஒரு பரிசு காத்திருக்கு.
http://www.youtube.com/watch?v=OdcPtg92d7A

டிஸ்கி: வீடியோவை ரெண்டு மூனு முறை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாம போற அந்த சிகப்பு சட்டைக்காரர் இரத்தம் கக்கி சாவார்.

உலக புத்தகங்கள், உலக படங்களுக்கு விமர்சனம் எழுதுவது எப்படி???

புத்தகங்கள் பற்றி ,திரைப்படம் பற்றி எழுதி எல்லோரும் உங்களை திரும்பி பார்க்கவைக்கணும் அட இவனும், என்ன என்னமோ தெரிஞ்சு வெச்சு இருக்கானே என்று பல நினைக்கணுமா கவலைய விடுங்க...! சூப்பர் சூப்பர் ஆலோசனைகள் கை வசம் இருக்கு.


முதலில் நீங்க புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை மற்றவங்களுக்கு காட்டனும் அதுக்கு முதல்ல பதிவர்கள் சந்திப்பின் பொழுது சும்மா ’தேமே’ன்னு பராக்கு பார்த்துக்கிட்டு இருக்க கூடாது! அவுங்க பேசும் பொழுது அப்ப அப்ப குறுக்க பூந்து இந்த ஜெயமோகன் எழுதிய புத்தகத்தில் பல ஓட்டைகள் இருக்கு! என்னத்த பெருசா எழுதுறார் முன்ன மாதிரி எழுதறது இல்லை! என்று பீட்டரை எடுத்துவுடணும். சில விசம ஆட்கள் அருகில் இருந்தால், ஏன் கரையான் அரிச்சு ஓட்டை விழுந்துட்டுதா..? என்று கேட்க வாய்ப்புக்கள் இருப்பதால், கொஞ்சம் உஷாராக இருக்கணும்.

அவர் புத்தகத்தை இதுவரை படிக்கவில்லை என்றாலும்,கூட பல புத்தங்கள் படிச்சதாக காட்டிக்கணும். கூடவே, அட்லீஸ்ட் லெண்டிங் லைப்ரரியிலாவது இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்துக்கிட்டு போய் கையில வெச்சுக்கணும், இப்பதான் கோணங்கியோட பிதிரா புத்தகம் படிச்சுக்கிட்டு இருக்கேன் என்னாமா எழுதி இருக்கிறார் என்று சொல்லிக்கலாம் ஆனால் அந்த புத்தகத்தின் அட்டையை மட்டும் புத்தக கண்காட்சியில் பார்த்தது என்ற ரகசியம் வெளியே தெரியகூடாது.

அடுத்து பதிவு எழுதும் பொழுது பதிவு எருமைநாயக்கன் பட்டியை பற்றியதாகவே இருந்தாலும், அதில் இலக்கியவாதிகள் சொன்னது அல்லது, அவர்களை மேற்கோள் காட்டி எழுதலாம். எடுத்துக்காட்டாக எருமைநாயக்கன் பட்டியில் வளைந்து நெளிந்து ஓடும் ஆற்றை கடப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல! சாருவின் ஜீரோ டிகிரி போன்றது என்று சொல்லணும். ஆக நீங்க ”ஜீரோ டிகிரி” படிச்சாச்சுன்னு என்று மத்தவங்களுக்கு சொல்லியாச்சு..!விமர்சனம் எழுதும் புத்தகம் குறைந்தது குட்டி தலையனை சைஸ் உள்ள புத்தகாமக இருக்கவேண்டும் அதுக்காக லிப்கோ டிக்ஸ்னரிக்கு எல்லாம் விமர்சனம் எழுதலாமா என்று கேட்பவராக இருந்தால் நீங்கள் என் தோழரே!

பெரும்பாலும் இலக்கிய புத்தங்கள் பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அதுபோல் உங்கள் பெயரையே ஆங்கிலத்தில் எழுத பிட் அடிப்பவராக இருந்தாலும் ரெண்டு மூன்று ஆங்கில புத்தங்கள் பெயர்கள் தெரிந்துவைத்துக்கொள்ளுங்க அப்ப அப்ப பெயரை ஊடால ஊடால போட்டுவையுங்க.

சரி இனி விமர்சனம் எழும் பொழுது ஒரு பக்கத்தை படிக்க ஒருநாள் ஆன கதைய வெளியே சொல்லாமல் முழு புத்தகத்தையும் ஒரே நாளில் படிச்சு முடிச்சாச்சுகீழேவைக்க முடியாத அளவுக்கு சுவாரய்ஸம் என்று சொல்லுங்க. புத்தகத்தின் அட்டைய பெருசா படம் புடிச்சு பதிவில் போட்டால் பாதி இடம் அடைத்துவிடும்மீதி நாலுவரிக்கு எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் திட்டி எழுதினால் உங்களைபோல் ஒருவர் அந்த புத்தகம் படிச்சவர் இருந்தால் எப்படி திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிடுவார் ஆகையால் புத்தகம் அருமை ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் என்று புகழ்ந்து எழுதிடுங்க. அது மிகவும் பாதுகாப்பானது.மேலும் பல புத்தங்கள் பெயர் தெரிய அமேசான்.காம் போனால் அங்கு புத்தகத்தின் அட்டைபடம், ஆசிரியர் பெயர், எத்தனை பக்கம் என்று அனைத்து விவரங்களும் இருக்கும் இது போதாதா உங்களுக்கு அடுத்த புத்தகப்பதிவு எழுத?

அடுத்து உலகதிரைப்படம் பற்றி எழுதுவது எப்படி?

உலகதிரைப்படம் என்றால் என்னான்னு தெரியாதா? வெளியே சொல்லாதீங்க அதை கண்டுபிடிக்க வழி நான் சொல்லித்தருகிறேன்

வீடியோ கடைக்கு போங்க அவனிடம் இதுவரை யாரும் பார்க்காத படம்ஏதும் இருக்கா என்று கேளுங்க அப்படி இதுவரை இருவர் மட்டுமே பார்த்த படம் ஒன்னு இருக்கு என்று தமிழ் வில்லு சீடிய கொடுத்தா வாங்காதீங்க உலகபடம் என்பது தமிழில் இருக்காது இது அடிப்படை பாடம்.

உலகப்படம் அல்லது உலகதரத்தில் இதுவரை தமிழில் வந்தது இல்லை என்ற கருத்தில் தாங்கள் பிடிவாதமாக இருக்கவேண்டும்.

வீடியோ கடை ஆரம்பித்த பொழுது வாங்கிய பழய ஆங்கில படம் ஏதும் இருக்கான்னு கேளுங்க,அவரும் ஒரு கருப்பு வெள்ளை படத்தை எடுத்துக்கொடுப்பார் அதன் ரிலிஸ் தேதியை பாருங்கள் அது உங்களை விட வயது மூத்ததாக இருக்கவேண்டும் இது இரண்டாவது விதி.

என்னது தேதி சில சீடியில் ரிலீஸ் தேதி இருக்காதா? சரி கவலைய விடுங்க சீடி கவரில் இருக்கும் படத்தில் அவர்கள் போட்டு இருக்கும் உடை,கார் ஆகியவை தாங்கள் பார்த்தது இல்லையா?ஹீரோயின் தொப்பியில் ஒரு கோழி இறகு இருக்கா? அதெல்லாம் உலக திரைப்படங்கள்தான்.

(மேலே உள்ளே படம் ஒரு சாம்பிள்,இது போல் கவர் இருக்கட்டும்)

அப்படி ஏதும் ஒன்னு இரண்டு தேறும் அதை எடுத்துவந்து போட்டு பாருங்கள் முழுவதும் பார்க்க முடியாது இருந்தாலும், ஓட்டி ஓட்டி பார்த்துவிடுங்கள் .

பார்த்துவிட்டு முக்கியமாக நீங்கள் எடுக்கவேண்டிய குறிப்புகள்
1)நடிகர், நடிகையின் பெயர்

2) இயக்குநரின் பெயர்

3) கேமிரா மேன்


பேருக்கு எல்லாம் தமிழில் சப்டைட்டில் வராது! எழுத்துக்கூட்டியாச்சும் அவுங்க பெயரை படிச்சு எழுதி வெச்சுக்குங்க.இல்லை லேப்டாப்பி படம் பார்த்தால் பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து அந்த நடிகரின் பெயரை googleல் போட்டு தேடி அவர் நடித்த மேலும் சில படங்களின் பெயர்களை தெரிந்துவைத்து இருப்பது நலம்.

இனி எப்படி பதிவு எழுதுவது..?
தாங்கள் படம் பார்த்த சூழலை விவரிப்பது முக்கியம்! மாலை நேரத்தில் பார்த்தேன் என்று சொல்லிவிடக்கூடாது, ஆதவன் கொஞ்சம் கொஞ்சமாக உலக திரைப்படத்தை பார்க்கும் ஆவல் இன்றி மறைய தொடங்கினான்; ஆதவனுக்கு கொடுத்துவைத்தது அவ்ளோதான், அமைதியான சூழல் இருக்கும், தனிமையில் இருக்கும் பொழுது எல்லாம் என் தனிமையை போக்குவது ********** இயக்குநரின் படங்கள் தான். அன்று அப்படிதான் பல இடங்களில் தேடி வாங்கி வந்த *********** படம் என் தனிமையை போக்கியது. என்று ஆரம்பிச்சு படத்தில் தாங்கள் ஓட்டி ஓட்டி பார்த்த சீன்களை நினைவு வைத்து நான்கு பத்திகள் எழுதுங்கள், பின் சாதாரண பிலிம் போட்ட கேமிராவிலேயே போட்டோ புடிக்க தெரியாத நீங்க அந்த படத்தில் அந்த ஷாட்டுக்கு வைத்த கேமிரா ஆங்கிள் சரி இல்லை அதை அப்படியே 23 டிகிரி சாச்சு வைச்சு எடுத்து இருந்தா அந்த காட்சி சிறப்பா வந்திருக்கும் என்று சொல்லணும்.

அதுபோல, மாலை 6 மணிக்கு மேல் எதிரே லாரி வந்தால் இரண்டு பைக்தான் வருகிறது என்று குறுக்கே பூந்து போய்விடலாம் என்று நினைக்கும் அளவுக்குபார்வை சக்தி இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அந்த படத்தில் லைட்டிங் தான் ஹீரோ என்று அடிச்சு விடுங்க.

அடுத்து முக்கியமாக நீங்கள் தொடவேண்டிய டாப்பிக் இசை, குழாய் ஸ்பீக்கர் யாராவது அலறினாலும் என்னாது தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாமாதிரியாரோ பேசுகிறார்கள் என்று கேட்கும் அளவுக்கு உங்கள் கேட்கும் திறனும், என்னமா வீனை வாசிக்கிரார் குன்னங்குடி வைதியநாதன் என்றும் சொல்லும்அளவுக்கு இசை ஞானம் உள்ளவரா அப்படியே அதை எல்லாம் ஒரு குழிக்குள் போட்டு மூடுங்க, படத்தில் பட இடங்களில் இசைதான் ஆதிக்கம் செலுத்தி இருக்குபடத்தின் பின்னனி இசை படத்தின் முதுகெலும்பு, கால் எலும்பு என்று எல்லாம் சொல்லுங்க.

சில பல கலர் டோன்களின் பெயர் தெரிஞ்சு வைச்சு இருப்பது நல்லது! ஆங்காங்கே படம் முழுவதும் வரும் கிரீன் டோன் பக்காவா இருக்கு! அப்படின்னு எடுத்துவிடுங்க. இப்படி எழுதினா தாங்கள் பாதி உலக பதிவர் ஆகிட்டீங்க...!அடுத்து ஈரான் மொழி படம் ஜப்பான் மொழி படம் என்று தங்கள் எல்லையை விரிவடைய செய்யுங்கள்.

பின்நவீனத்துவ உலக படத்துக்கும் விமர்சனம் எழுதிட்டால் தாங்கள் முழுமையான உலகபதிவர். பின்நவீனத்துவ உலக படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப சிம்பிள் மேலே சொன்ன அதே உலகத்திரைப்பட டெக்னிக் ஆனா படத்தில் பேச்சு இருக்காது,இதை நீங்க ஓட்டி ஓட்டிபார்க்க அவசியம் இருக்காது சிலசமயம் திரும்ப திரும்ப அந்த “சீனை” பார்க்கும் படி இருக்கும் அதிகமாக செக்ஸ் காட்சிகள் இருக்கும். அதுவும் முறையற்ற காட்சிகளாக இருக்கும் அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுங்க, படம் பார்க்கும் பொழுது துணைக்கு பியர் போத்தல்கள் இருப்பது அவசியம்.(நன்றி அய்யனார்).
பியர் போத்தல்களோடு இந்த படங்களை பார்ப்பது என்பது வரம் என்று எழுங்க. தலைப்புகளை எப்பொழுதும் கொஞ்சம் டெரராகவே வையுங்க...!

டிஸ்கி: நாலுபேர் மதிக்கனும் என்றால் எதுவுமே தப்பு இல்லை!

Wednesday, April 1, 2009

வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன்!

அது ஒரு அழகிய நிலாக்காலம்! சுவாமி தயானந்த சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, எங்கள் ஊரில் இருக்கும் தனியார் நிர்வாகத்தின் கீழ் (திரு.சுவாமிஜி, TTK நரசிம்மன் அவர்களால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடம் இன்று கல்லூரி வரை வந்து பிரமாண்ட வளர்ச்சி அடைந்து நிற்கிறது. இங்குதான் பல பிரபலங்கள் படித்து இருக்கிறார்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலம் லிங்குசாமி, இன்னொரு பிரபலம் திரு.குசும்பன்(ஹி ஹி)

இனி சொய்ய்ய்ய்ய்ய்ங்ங்.........

ஓரு கீத்துக்கொட்டகை, கீழே ஆற்று மணல் கொட்டிய தரை, அதன் மேலே குட்டி குட்டியாய் பிள்ளைகள் அமரும் விதத்தில் சின்ன சின்ன பெஞ்ச்,
கருநீல டவுசரு,வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்கள் சீருடை, எங்கள் வகுப்பு ஆசிரியை கஸ்தூரி டீச்சர். டீச்சரை கண்டால்தப்பு செய்தவர்கள் அனைவரும் கால் சட்டையிலேயே மூச்சா போகும் அளவுக்கு மிகவும் கண்டிப்பானவர்.காலையில் ஸ்கூலுக்கு வரும் பொழுது தலை நிறைய எண்ணெய் தடவி, படிய தலை வாரிக்கிட்டு வரவேண்டும் போன்ற பல விதிகள் உண்டு.டீச்சரை கண்டால் இரண்டு கைகளையும் நெற்றியில் வைத்து குட் மானிங் டீச்சர் சொல்லும் அளவுக்கு பயம், பயத்துக்கு முக்கிய காரணம் டீச்சர் கையில் எப்பொழுதும் வைத்து இருக்கும் அகப்பை கம்பு, சாதாரணமாக பொங்கல் சமையத்தில் சிரட்டையில் துளை போட்டு அதில்
மூங்கிலை சிறிய சிறிய குச்சுகளாக வெட்டி நன்றாக வழு வழுன்னு சீவி அதன் முனையில் சிரட்டையை மாட்டி இருப்பார்கள், ஆனால்
பொங்கல் சமயத்தில் டீச்சர் எக்ஸ்ட்ராவாக இரு அகப்பை வாங்குவார்கள் போல சிரட்டையை மட்டும் எடுத்துவிட்டு அந்த குச்சோடுதான் வருவார்கள்.

டேய் சரவணா....!அட நான்தாங்க அப்ப என்னா குசும்பான்னா கூப்பிடுவாங்க?ரெண்டு ரெண்டும் என்னா என்பார்கள் (2 x 2) அதுக்கே நமக்கு நொண்டும்,அதுக்குள் எட்டோட்டு என்பார்கள் (8x8) நானும் ம்ம்ம்... ம்ம்ம்ம்.... ம்ம்ம்... என்று யோசிக்கங்காட்டியும், டீச்சர் எங்க சொல்லு பார்க்கலாம் ரெண்டும் ரெண்டும் நாலு , எட்டோட்டு அறுபத்தினாலு ம்ம்ம் சொல்லு.. சொல்லு.. என்று கையில் வைத்து இருக்கும் அகப்பை கம்பினால் நாலு விளாறு, வலி தாங்க முடியாது அப்படியே தடிச்சு தடிச்சு போய் இருக்கும்.


இப்படியே நாளுக்கு நாள் டீச்சரின் அடி அதிகமாகிட்டே போக, ஒரு நாள் அந்த முடிவை எடுத்தேன். அதுக்கு துணையும் சேர்த்தேன். அவன் பெயர் விஜயன். டீச்சர் வீட்டுக்கு போகும் பொழுதுடீச்சர்ஸ் ரூமில்(அது ஒரு தனி தடுப்பு அவ்வளவுதான்) அங்கதான் அந்த கம்பை வெச்சுட்டு போவாங்க. பிளான் போட்டு அந்த கம்பை எடுத்து கீத்துக்குள்ள சொருகி வெச்சுட்டோம்ன்னா அதன் பிறகு கம்பு கிடைக்காம போய்விடும், நமக்கு அடியும் கிடைக்காது என்று பல பிளான்கள் போட்டு ஒர் நாளையும் குறிச்சேன் கம்பை கடத்தி ஒளிய வைக்க. பின்னாடிதான் தெரிஞ்சுது பிளான் போட்ட நேரத்தில் ரெண்டாம் வாய்ப்பாட்டை ஒழுங்கா படிச்சு இருந்தாலே அடி கிடைச்சு இருக்காதுன்னு!சரி விடுங்க திரும்ப பிளானுக்கு போவோம், பிளான்படி 4 மணிக்கு ஸ்கூல் முடிஞ்சதும் எல்லோரும் ஓடிவிடுவார்கள், சில பசங்க அங்க இங்க விளையாடிக்கிட்டு இருப்பாங்க, எல்லா டீச்சரும் பேசிவிட்டு கிளம்ப எப்படியும் 4.45 க்கு மேல ஆகிவிடும், எல்லோரும் போன பிறகு யாரும் பார்க்காத மாதிரி கடத்தணும் அதுக்கு வெளியே நின்னு பாத்துக்கதான் விஜயன். குரு படத்தில் கமல் மீனை கடத்துவது போல.. :-) எல்லோரும் போன பிறகு நான் நைசா ஸ்டாப் ரூம் போய் கம்பை எடுத்து அப்படியே சட்டைக்குள் ஒளிய வெச்சு எடுத்து வந்து ஸ்கூல் கீத்து கொட்டகைக்கு பக்கத்தில் இருக்கும் தட்டியில் ஏறி மெதுவாக கம்பை கீற்றுக்குள் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஏத்திவிட்டு கீழே வந்து பார்த்தால் உள்ளே அதோட முனை அப்படியே நீட்டிக்கிட்டு தெரியுது, திரும்ப போய் மேலே ஏறி பக்கவாட்டில் வைத்து கீற்றை மூடிவிட்டு வீட்டுக்கும் வந்தாச்சு.


மறுநாள் காலையில் கிளாசே அதகளமாக இருக்கு. டீச்சர் கம்பை காணவில்லை, டீச்சர் எல்லோரிடமும் கேட்கிறார்கள் டேய்... எவன்டா அதை
எடுத்தது என்று எங்கே? என்று தேட பல குழுக்களாக தேடிபார்த்துவிட்டு டீச்சருக்காக போத்துமர கம்பு ஒன்னை உடைச்சுக்கிட்டு வந்து கொடுத்தேன்.(அதுதான் பார்க்க பெருசா இருந்தாலும் அடிச்சா வலி தெரியாது), டீச்சரும் தீட்டிய மரதிலேயே கூர் பார்பது போல் என்னையே அந்த கம்பால் அடிச்சுபார்த்து சோதனை வேற செஞ்சுக்கிட்டாங்க...அடி கிடைத்தாலும் உள்ளுக்குள் ரொம்ப சந்தோசம், மக்கள் அனைவருக்கும் அகப்பை கம்பு அடியில் இருந்து விடுதலை வாங்கி கொடுத்துவிட்டதாக.

நாட்கள் வாரங்களாக உருண்டு ஓடின...சில வாரங்களுக்கு பிறகு ஒரு சோதனை வந்தது எலந்த உருண்டை வடிவில். ஐந்து பைசாவுக்கு வாங்கியஎலந்த உருண்டையில் பாதி கேட்டான் கூட்டாளி விஜயன். நான் போடா... முடியாது என்று சொன்னதோடு இல்லாம தின்ன எலந்த கொட்டைய அவன் மேலவிட்டெறிய கோவம் வந்து படுபாவி நேரா போய் கஸ்தூரி டீச்சரிடம்... டீச்சர் உங்க கம்பை ஒளிய வெச்சது சரவணன் தான் டீச்சர் என்று சொன்னதுமட்டும் இன்றி ஒளிய வெச்ச இடத்தையும் காட்டி கொடுத்துவிட்டான் எட்டப்பன். டீச்சர் கம்பு கைக்கு வந்ததும் முதல் பூசை போட்டு கொடுத்தவனுக்குதான்! இத்தனை நாள் ஏண்டா சொல்லவில்லை, நீயும் உடந்தைதானே என்று... கூட நின்னவன் வாங்கும் அடியை பார்த்ததுமே ஒண்ணுக்கு முட்டிக்கிச்சு எனக்கு, (அப்ப பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு) அப்புறம் என்னா எல்லோரும் ஆவலோடு எதிர்ப்பார்த்துகிட்டு இருக்கும் கிளைமேக்ஸ்தான் ...

டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தட்டுவது போல் என்னை போட்டு சாத்தும் பொழுது அப்ப அப்ப பக்கத்தில் இருக்கும் எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... அந்த அளவில் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டது!

ம்ம்ம் நான் மட்டும் வெள்ளையா பிறந்து இருந்தேன்னா அன்னைக்கே வரி குதிரை ஆகி இருப்பேன்...அட ஆமாங்க டீச்சர் அடிச்ச அடியில் உடம்பு முழுக்க வரி வரியா கோடுகள் கருப்பு உடம்பு என்பதால் கோடு வெளியே தெரியாம போச்சு!இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-))