Monday, April 20, 2009

நல்லா எடுக்குறாங்க குறும்படம் by டரியள் டக்ளஸ்

என்னய்யா போஸ் இது ஆதி பட புரொடியூசர் மாதிரி, கையில நல்ல வேளை வாட்ச் சில்வர் கலரில் இருந்துச்சு இல்லேன்னா அங்க கை இருப்பதும் தெரிஞ்சு இருக்காது முகம் இருப்பதும் தெரிஞ்சு இருக்காது, கொஞ்சம் புரொடியூசர்கள் டார்ச் லைட்டாவது வாங்கி கொடுத்து இருந்திருக்கலாம்.

இது அந்த பொண்ணு முத்தம் கொடுக்க வந்துச்சாம் இவரு பயந்து போய் என்னான்னு கேட்டாராம் அதுக்கு ரியாக்சன்.


முத்தம் மூக்கில் கொடுத்தாட்டாங்களாம் அதான் மூக்கை காட்டுகிறார் ஹீரோ, பொற மண்டையிலேயே போட்டத சொல்லவே இல்ல! அதுவும் இல்லாம டைரக்டருக்கு ஒரு உம்மா கொடுப்பார் பாருங்க அடுத்த சீனில், அப்ப குளோசப் சாட் வைத்திருக்கலாம் ஆதி! அந்த காற்றில் வேஸ்டா போன உம்மா உங்களுக்காவது கிடைச்சு இருக்கும்!

கித்தார் எப்படி பிடிக்கனும் என்று சொல்லிக்கொடுக்கிறார்

பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அதான் அப்படி காட்டுகிறார்.

இந்த குறும்படத்திலேயே பிடிச்ச காட்சின்னா இதான், இந்த பழய படத்தில் எல்லாம் பாத்தீங்கன்னா ஹீரோயினை வில்லன் கெடுக்க வரும் பொழுது புலி மானை துரத்துவது போலவும் ரேப் முடிஞ்ச பிறகு மான் துடிப்பது போலவும் அல்லது பல்லி வாயில் மாட்டிய பூச்சி, சிலந்தி கூட்டில் மாட்டிய பூச்சி என்று காட்டுவார்கள், இதே ஹீரோயின் ஹீரோவோடு ஒன்னா இருக்க ஆரம்பிக்கும் பொழுது மழை பெய்யும் முடிச்ச பிறகு மழை தண்ணி ஓலையில் இருந்து ஒவ்வொரு சொட்டாக விழுவது போலவும் காட்சி முடியும். ஹீரோ மண்டய போட்டுவிட்டா எறியும் விளக்கு டக்குன்னு அனையும் அல்லது குங்கும சிமிழில் இருந்து குங்குமம் கொட்டும் இப்படி ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். அதே போல இங்க பாருங்க ஒரு மனுசன் கசக்கி பிழிஞ்சுட்டார் என்பதை எப்படி சிம்பாளிக்கா டைரக்டர் ஆதி காட்டுகிறார் பாருங்க. அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ சவ...சவ சவ...சவ சவன்னு தேச்ச்சு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்!
*****************************
இனி குறும்படத்தில் ஹீரோ பேசும் வசனமும் அதுக்கு வரிக்கு வரி டரியள் டக்ளஸின் பதிலும்..(அவர் பேசுவதை அப்படியே அதே மாதிரி பேச்சுவழக்கில் எழுதி இருக்கிறேன்)

ஹீரோ: அப்ப என்னை வெளியே அனுப்பமாட்டங்கள்ள எங்க அம்மா!
டரியள் டக்ளஸ்: ஏன் அப்ப தான் உட்காந்தீங்களா?


ஹீரோ: அவளும் தண்ணி உடுறா நானும் தண்ணி உடுறேன் சத்தம் மட்டும் வரவே இல்ல!
டரியள் டக்ளஸ்: யோவ் அழுதீங்களா இல்லை இருவரும் செடிக்கு தண்ணி பாச்சினீங்களா சத்தமே வரல என்று சொல்ற!


ஹீரோ: தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார் மனுசன்.
டரியள் டக்ளஸ்: இது கதைக்கு ஆவாதுன்னு நொந்து போய் இருப்பார்


ஹீரோ: முத்தத்த பத்தி ஒன்னு எழுதிந்தேன் இல்லியா?
டரியள் டக்ளஸ்: ஆமாம் ஆமாம் இவரு வாஸ்த்யாயனருக்கு அடுத்த வாரிசு!


ஹீரோ: அவளுக்கு எப்படியாச்சும் முத்தம் கொடுக்கனும் என்று ஆசை
டரியள் டக்ளஸ்: ஒரு இளைஞி ஒரு இளைஞனுக்கு கொடுக்கனும் என்று நினைப்பது சகஜம்! ஆனா உனக்கு கொடுக்கனும் என்று நினைச்சுச்சு பாரு அதான் அதோட தப்பு.


ஹீரோ: ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம் யாருமே இல்லையேன்னு ”
டரியள் டக்ளஸ்: அப்படியே பில்லு கொடுக்காம ஓடி போய்விடலாமான்னு நினைச்சியா சகா?


ஹீரோ: கிஸ் பண்ண வரா
டரியள் டக்ளஸ்: என்னய்யா கொலை செய்ய வந்த மாதிரி சொல்ற!


ஹீரோ: என்ன ஆச்சுன்னு டக்குன்னு திரும்புறேன் மூக்குல கொடுத்தா அது முத்தமா அது!
டரியள் டக்ளஸ்: அப்படியே ஒரு குத்து குத்தி சில்லு மூக்கை உடைச்சு இருக்கனும்!


ஹீரோ: அவளுக்கு எனக்கு எப்படியாச்சு முத்தம் கொடுத்து அனுப்பனும் என்று ரொம்ப ஆசை
டரியள் டக்ளஸ்: நோ கமெண்ட்ஸ்


ஹீரோ: சந்து சந்தா போகும் என் கையபுடிச்சு நிறுத்துறா என்னான்னு கேட்டேன் இங்க யாரும் வரமாட்டாங்க என்கிறா அதுனால என்னான்னு கேட்கிறேன்?
டரியள் டக்ளஸ்: அவ்வளோ சொல்லியும் அதுனால என்னான்னு கேட்டியா சகா நீ? இப்ப தெரியுது ஏன் உன்னை விட்டு போனாங்கன்னு?


ஹீரோ: உனக்கு முத்தம் கொடுக்கனும் என்கிறா!
டரியள் டக்ளஸ்: வேண்டாம் கை செலவுக்கு பத்தாயிரம் கொடுன்னு கேட்டீயா?


ஹீரோ: ”எல்லாம் முடிஞ்சுடுச்சு அந்த இடத்தில்” என்ன கிஸ் பண்ண போறா
டரியள் டக்ளஸ்: இது என்னா ரிவர்ஸபுல் டெக்னிக்கா புரியலை தயவு செய்து விளக்கவும்.


ஹீரோ: யாரும் வரல கன்பார்ம் ஆயிடுச்சு
டரியள் டக்ளஸ்: முத்தத்துக்கே கன்பார்ம் ஆயிட்டா?


ஹீரோ: என் கண்ணில் கேமிரா பட்டுவிட்டது...சரி வேண்டாம் என்று சுத்துறோம்
டரியள் டக்ளஸ்: ஆஹா செல்போன் கிளிப்பிங் ஒன்னு மிஸ் ஆயிட்டே!


ஹீரோ: கிட்டாரா கையில கொடுத்தவுடனேகிட்டார் வளைஞ்சு இருக்கும் இல்லீயா?
டரியள் டக்ளஸ்: ரோடு கூடதான் வளைஞ்சு வளைஞ்சு இருக்கும்


ஹீரோ: எல்லோரும் இப்படி புடிப்பாங்கநான் கொஞ்சம் வித்தியாசமாக உட்காந்து!
டரியள் டக்ளஸ்: ஏன் சகா பைல்ஸ் பிராபிளமா?


ஹீரோ: கடல்ல எப்பயாச்சும் கவனிச்சு இருக்கீங்களா?
டரியள் டக்ளஸ்: இந்த மலை மேலிருந்து பெரும் சத்தத்தோட தண்ணி விழுமே அதானே கடல்! கவனிச்சு இருக்கோம்!


ஹீரோ: தேவதை என்று சொல்றோமில்லியா யாராவது தேவதைய இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என்று நினைப்பாங்களா? அப்படியே வச்சி அவள பாத்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கும்.
டரியள் டக்ளஸ்: நல்லவேளை கல்யாணத்துக்கு அப்புறம் டைவோர்ஸ் வாங்குவதுக்கு முன்பே பிரிஞ்சு போய்ட்டாங்க!


ஹீரோ: அவ பூ மாதிரி நான் செடி மாதிரி அவள நான் தான் தாங்கிக்கிட்டு இருப்பேன்ஆனா காத்து அடிச்சா பூ நவுந்து போச்சு செடி நவுரமுடியலையே அப்படியேதானேஇருக்கு அந்த பலம் தானே பூவை தாங்குச்சு இப்படி நானா யோசிச்சுசொல்லிப்பேன் பூ போச்சு செடி செடியாதான் இருக்கனும் வேற பூ எல்லாம் பூக்காது இந்த செடியில.
டரியள் டக்ளஸ்: லெமன் தான் சரியான மருந்து! அல்லது மோர் கூட குடிக்கலாம்!

டிஸ்கி: போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!


அந்த குறும்படத்தையும் பார்த்து சிரிக்க இங்கே போகவும் ஆதியின் பதிவுக்கு.

37 comments:

said...

கார்க்கியானந்தா சுவாமிகள் நடித்துள்ள "சொந்த செலவுல சூனியம்"......பாவம் அந்த கைப்புள்ள!!!!!!!!!!!

said...

சிரிச்சு வாயெல்லாம் வலிக்குது. கார்க்கி டோட்டல் டேமேஜ். அதுவும் அந்த டைவர்ஸ் கமெண்ட், ஏன் விட்டுட்டுப்போனாங்கற கமெண்ட் எல்லாம் சான்ஸே இல்ல. கார்க்கி எங்கப்பா இருக்க?

said...

//இங்க பாருங்க ஒரு மனுசன் கசக்கி பிழிஞ்சுட்டார் என்பதை எப்படி சிம்பாளிக்கா டைரக்டர் ஆதி காட்டுகிறார் பாருங்க. அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ சவ...சவ சவ...சவ சவன்னு தேச்ச்சு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்//


கலக்கல் நண்பா :))))

said...

//அவ்வளோ சொல்லியும் அதுனால என்னான்னு கேட்டியா சகா நீ? இப்ப தெரியுது ஏன் உன்னை விட்டு போனாங்கன்னு?//

:)))))

said...

//டரியள் டக்ளஸ்: இந்த மலை மேலிருந்து பெரும் சத்தத்தோட தண்ணி விழுமே அதானே கடல்! கவனிச்சு இருக்கோம்!///

:))))))))

said...

//ஹீரோ: அவ பூ மாதிரி நான் செடி மாதிரி அவள நான் தான் தாங்கிக்கிட்டு இருப்பேன்ஆனா காத்து அடிச்சா பூ நவுந்து போச்சு செடி நவுரமுடியலையே அப்படியேதானேஇருக்கு அந்த பலம் தானே பூவை தாங்குச்சு இப்படி நானா யோசிச்சுசொல்லிப்பேன் பூ போச்சு செடி செடியாதான் இருக்கனும் வேற பூ எல்லாம் பூக்காது இந்த செடியில.டரியள் டக்ளஸ்: லெமன் தான் சரியான மருந்து! அல்லது மோர் கூட குடிக்கலாம்!///

:)))))))))))))))))))))))))

said...

//போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!///

கடந்து போனதிருக்கட்டும் பாஸ்!

இனி வரப்போறதுக்கு இப்பவே அலர்ட்டாகிக்கோங்க ஒ.க்கேவா :)))

said...

:))))))))))

said...

காத்தடிச்சா பூ நவுந்து போச்சு.. செடியால நவுர முடியலையே.. //

இதுதான் படத்துலயே செம்ம ஹைலைட் வசனம்.. இல்ல தல.! கிளப்பிட்டீங்க.. அப்புறம் டிஸ்கியை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.
ROTFL POST..

அப்புறம் நேத்திக்கு வழக்கமா வர்ற கூட்டம் கூட வரலை. தமிழ்மணம் சொதப்பிடுச்சுன்னு நெனைக்குறேன். பாக்காதவங்களுக்கு லிங்க் தந்திருக்கலாமே..

said...
This comment has been removed by the author.
said...

nice:)

said...

//ஹீரோ: ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம் யாருமே இல்லையேன்னு ”
டரியள் டக்ளஸ்: அப்படியே பில்லு கொடுக்காம ஓடி போய்விடலாமான்னு நினைச்சியா சகா?//

ஆதி நான் தான் சொன்னேன்ல.. இந்தாளு விடுமுறைல போறாரு கல்யாண நாள கொண்டாட.. இது தான் சரியான டைம்னு.. கேட்டாத்தான..இனி எடுப்பீங்க..???

நல்லா வேணும்.. (இது போல எங்களுக்கு சிரிக்க)

said...

//அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ சவ...சவ சவ...சவ சவன்னு தேச்ச்சு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்!//

:)))) ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..எனக்கும் அப்படித்தான் தோனிச்சி.. :)))

said...

டரியல் டக்ளஸ் பேசுனதுதான் இந்த டக்ளஸ் சொல்றதும்..!

said...

கார்க்கி..

எங்கப்பா இருக்க? எதிர்ப்பதிவு உண்டா இல்லையா?

குசும்பா..
லகலகலகலகலகலக்கல்!!!

Anonymous said...

//பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அதான் அப்படி காட்டுகிறார்.//

கார்க்கி இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சு :)

said...

:-)))...

said...

வாய்ப்பே இல்லே..... :-)))))))))))))))))))))))))

said...

சூப்பர்:))

நல்லா சிரிச்சேன்:)))))))))

said...

கார்க்கிண்ணா இங்க உங்க தலை உருண்டுட்டு இருக்கறது இன்னுமா தெரியலை?!!!!!

said...

கிட்டார வீணை மாதிரி பிடித்த முதல் ஆள் கார்கி அண்ணாதான்...
நீங்க சொல்றத பார்த்தா ஃப்ரென்ச் ஸ்ட்ரீட் போல இருக்கே ம்ம்ம்....
அண்ணன் கொஞ்சம் போதைல இருந்த்ததுல தெளிவா புரியல... நன்றி லைன் பை லைனா விள‌க்கனதுக்கு.

said...

//டரியள் டக்ளஸ்: அப்படியே ஒரு குத்து குத்தி சில்லு மூக்கை உடைச்சு இருக்கனும்!//

டரியலின் கூற்றை வழிமொழிகிறேன்.

said...

\\
டிஸ்கி: போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!
\\

:)

said...

ha haa haa

//இங்க பாருங்க ஒரு மனுசன் கசக்கி பிழிஞ்சுட்டார் என்பதை எப்படி சிம்பாளிக்கா டைரக்டர் ஆதி காட்டுகிறார் பாருங்க. அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ சவ...சவ சவ...சவ சவன்னு தேச்ச்சு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்//

ha aha ha nalla sirichaen

said...

/
Sridharan said...

கார்க்கியானந்தா சுவாமிகள் நடித்துள்ள "சொந்த செலவுல சூனியம்"......பாவம் அந்த கைப்புள்ள!!!!!!!!!!!
/

ROTFL

:)))))))))))))

said...

ha ha ha :) :) :)
Pattaaasa irukku :)

said...

எப்படி இருந்த ஆதி இப்படி ஆகிட்டார் ...
படத்த பாத்து நானே ..கலங்கிட்டேன் ....

இதுக்கு வில்லு படம் நாலு தடவ பாத்திறலாம் ...

கண்டிப்பா சகா நடிப்புக்கு ஆஸ்கார் தான்...

said...

//கையில நல்ல வேளை வாட்ச் சில்வர் கலரில் இருந்துச்சு இல்லேன்னா அங்க கை இருப்பதும் தெரிஞ்சு இருக்காது முகம் இருப்பதும் தெரிஞ்சு இருக்காது,//

அண்ணே உங்களையும் கொஞ்சம் கண்ணாடியில பார்த்துகோங்க!

said...

//அந்த பொண்ணு முத்தம் கொடுக்க வந்துச்சாம் இவரு பயந்து போய் என்னான்னு கேட்டாராம் அதுக்கு ரியாக்சன்.//

இது பக்கத்துல வந்ததும் அந்த பொண்ணு பயந்து போய் கொடுத்த ரியாக்‌ஷனா இருக்கும்!

said...

//பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அதான் அப்படி காட்டுகிறார்.//

இது தான் டாப்பு கமெண்ட்

said...

//ஹீரோ: ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம் யாருமே இல்லையேன்னு ”
டரியள் டக்ளஸ்: அப்படியே பில்லு கொடுக்காம ஓடி போய்விடலாமான்னு நினைச்சியா சகா?//

அய்யா! அடுத்த காமெடிக்கு சிரிக்க கூட உடம்புல சக்தி இல்லாம போயிருச்சு!

said...

//ஹீரோ: எல்லோரும் இப்படி புடிப்பாங்கநான் கொஞ்சம் வித்தியாசமாக உட்காந்து!
டரியள் டக்ளஸ்: ஏன் சகா பைல்ஸ் பிராபிளமா? //

இந்த ஜென்மத்துல கார்க்கி இப்படி டேமேஜ பார்த்திருக்க மாட்டாரு!

said...

//போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!//

ஏன் நாங்க நல்லாயிருக்குறது பிடிக்கலையா!

ஏற்கனவே வெயில் வேற கொளுத்துது!

said...

கலக்கல் தலைவரே

said...

நன்றி ஸ்ரீதரன் அவரா கைப்புள்ள அவருக்கு ஒரு கைப்புள்ள இருக்கு தலைவரே:)


நன்றி வித்யா அவரு சாந்தியை தேடி
பொண்களூர் சென்று இருக்கிறார்.
(சாந்தி = அமைதி)


நன்றி ஆயிலு

நன்றி ஸ்ரீமதி

நன்றி ஆதி ஆமாம் அந்த டயலாக் தான் செம கலக்கல், இருந்தாலும் அந்த கடலை கவனிச்சு பார்த்திருக்கீங்களா டயாக்கும் கொஞ்சம் ஓவர் தான்:))

நன்றி லோகு

நன்றி நர்சிம், புரொடியூசர் மூன்று பேரும் சரி இல்லை ஹீரோ அனத்தும் பொழுது சேர்ந்து தண்ணி உட (கார்க்கி பாசை தண்ணி உட) ஒரு ஹீரோயின் செட்டப் செஞ்சு இருக்கலாம்:)


நன்றி கவிதா

நன்றி டக்ளஸ்

நன்றி பரிசல் எதிர்பதிவு போடனும் என்றால் அதையும் வீடியோவாகதன் போடனும்:)

நன்றி சின்ன அம்மிணி

நன்றி விஜய் ஆனந்த்

நன்றி ச்சின்னப்பையன்

நன்றி Poornima Saravana kumar

நன்றி dharshini வீனை மாதிரி இல்லை AK47 மாதிரி:)

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி தமிழன் கறுப்பி

நன்றி சுரேஸ்

நன்றி சிவா

நன்றி நாதஸ்

நன்றி panaiyeri

நன்றி வால் //அண்ணே உங்களையும் கொஞ்சம் கண்ணாடியில பார்த்துகோங்க!// கொஞ்சம் தானே அப்ப உள்ளங்கைய மட்டும் பார்த்துக்கிறேன்:)))) இது எப்படி இருக்கு?:))))

நன்றி முரளிகண்ணன்

said...

நான் ஆஃபீஸ்ல சவுண்டு இல்லாம பார்த்த குறும்படத்தோட டயலாக்ஸ் இது தானா? நல்லவேளை நான் எஸ்கேப்பு...

//ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! //

என்ன தான் அய்யனார் அனத்துனாலும்

[ஹீரோ: அவ பூ மாதிரி நான் செடி மாதிரி அவள நான் தான் தாங்கிக்கிட்டு இருப்பேன்ஆனா காத்து அடிச்சா பூ நவுந்து போச்சு செடி நவுரமுடியலையே அப்படியேதானேஇருக்கு அந்த பலம் தானே பூவை தாங்குச்சு இப்படி நானா யோசிச்சுசொல்லிப்பேன் பூ போச்சு செடி செடியாதான் இருக்கனும் வேற பூ எல்லாம் பூக்காது இந்த செடியில]

இந்த ரேஞ்சிலே அனத்த முடியுமா?

said...

கலக்கல் கமென்ட்ஸ் குசும்பா..