Tuesday, April 7, 2009

புத்தங்களை படிப்பது எப்படி?

டிஸ்கி: இந்த பதிவுக்கு சில நாட்கள் முன் வந்த இந்த பதிவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை:)

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 1 டிகிரி புத்தகத்தின் ஆசிரியர் பாரு நிவேதிதாவிடம் ஒரு கேள்வி இந்த புத்தகத்தை வாசகருடன் அமர்ந்து படித்து இருக்கிறீர்களா அந்த அனுபவம் எப்படி இருந்தது?” அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு முக்கியமாக தோன்றுகிறது.“ பொதுவாக என் புத்தங்களை நான் திரும்ப படிப்பது இல்லை,அதுவும் மக்கள் என் புத்தகங்களை படிக்கும் பொழுது அவர்களை நான் பார்ப்பது இல்லை, வாசகர்கள் தின்ன சுண்டல் கையை துடைக்க அலட்சியமாக என் புத்தகத்தில் இருந்து இரு பக்கங்களை கிழிக்கும் பொழுது அடித்துவிடலாம் என்று மிகுந்த கோவம் வந்துவிடும்” ஆகவே அப்படி நான் செய்வது இல்லை.

சரி ஒரு புத்தகத்தை எப்படி முறையாக படிப்பது? மிக எளிமையாக தோன்றும் இந்த கேள்விக்கு நம் சமூகத்தில் விசித்திரமான பல முரண்கள் ஒளிந்திருக்கின்றன, புத்தகத்திலிருந்து தம்முடைய வருங்கால வருவாயை முடிவு செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்குகிறது புத்தங்ககள். நம்மில் பலபேருக்கு புத்தங்களை எப்படி படிப்பது என்று தெரியவில்லை என்றுதான் சொல்வேன்.

ஒரு புத்தகத்தை எப்படி முறையாக அணுகுவது என்பதை என் அனுபவங்களிலிருந்து குறிப்புகளாக இங்கே தருகிறேன்.இவை அனைத்தும் நீங்கள் அறிந்தவைதான் என்றாலும் சும்மா டமாசாக எடுத்துக்கவும். பாட புத்தங்கள், இலக்கிய புத்தங்கள், செக்ஸ் புத்தங்கள் என்று அனைத்து புத்தங்களுக்கும் கலந்து கட்டி இந்த குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

()
நாம் பணம் கொடுத்துதான் நூலகத்தில் மெம்பர் ஆகியிருக்கிறோம் கொடுத்த மெம்பர் ஷிப் காசுக்கு மேல் பல புத்தங்களை ஆட்டைய போட்டு இருக்கிறோம் என்பது வேறு விசயம், இருந்தாலும் நூலகத்தில் அனேகம் பேர் இப்படிதான் பணம் செலுத்திவந்து இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும், ஏதோ நூலகத்தையோ விலைக்கு வாங்கிவிட்டோம் என்பது போல் புத்தகத்தை தலைக்கு பின் புறம் வைத்து காலை நீட்டி தூங்குவது, மற்றவர்களை தூங்கவிடாமல் கொர்ர்ர்ர் என்று குறட்டை விடுவது போன்ற அட்டூழியங்களை அறவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்திரவு தரமால் தமக்கான தூக்கத்தை அமைத்துக்கொள்பது நலம். அதுபோல் புத்தகத்தை தலைகீழா வைத்தபடி போஸ் கொடுக்ககூடாது.

*
வணிக நோக்கில் சிலர் விற்கும் கதை புத்தங்களுக்காக சிலர் வாதாடுவதை கவனித்திருக்கிறேன். நாளெல்லாம் படிக்கும் மக்கள் தங்களுடைய மகிழ்ச்சிக்காக படிக்கவிரும்பு கதை புத்தங்கள் மூளையைச் சிரமப்படுத்தும் விசயமாகவோ இருப்பதை விரும்புவதில்லை. இது ஒரு மக்குமூட்டை மனநிலை. நம்மில் எத்தனை பேர் சிறுவயதில் படிச்ச அம்புலிமாமா புத்தகத்தை படிக்கிறோம் இப்பொழுது? ஆனால் புத்தகத்தை பொறுத்த மட்டில் ஏன் இன்னும் அதே மாதிரியான புத்தங்களை திரும்ப திரும்ப படித்து அந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறோம்?

*
சிலர் படிக்கும் அறையை கூட தூங்கும் அறை போன்ற சூழலாக அமைக்கும் பெருமுயற்சியோடு தலையனை பெட் சீட், கொசுவத்தி போன்ற அயிட்டோங்களோடு உள்ளே வந்து புத்தகத்தை எடுத்ததும் கொர் கொர்ர்ர் என்று சத்தம். தூக்கம் கலைந்து எழுந்ததும் இவர்கள் ஓடும் இடம் பாத்ரூம். சினிமா தியேட்டாராக இருந்தாலும் பாட்டு போட்டது அனைவரும் ஓடும் இடம் பாத்ரூம், ஒருவனுக்கு ஒன்னுக்கு வந்ததும் அடுத்தவனுக்கும் ஒன்னுக்கு வரும் மர்மம் விளங்கவில்லை. இதுகூட பரவாயில்லை முதலிரவு அறையில் தலையனை பெட்சீட்டோடு இருக்கும் தூங்கு மூஞ்சிகளை என்னவென்று அழைப்பது?

*
ஒரு புத்தகத்தை முதல் நாள் முதல் பக்கம் மட்டும் படிச்சுவிடுவதில் நம்மில் பலருக்கு அசட்டுத்தனமான பெருமையுண்டு. இது நண்பர்களிடம் உரையாடும் பொழுது “நான் இந்த புத்தகத்தை படித்துவிட்டேன்” என்று ஜம்பமாக பெருமையடித்துக் கொள்வதற்குதான் உதவுமே ஒழிய வேறெதற்கும் உதவாது.

*
மிகவும் வயதானவர்கள், சிறு குழந்தைகள் நூலகம் வருவை தவிர்ப்பது நலம் பெருசுங்களுக்கு படிச்சுகாட்டவேண்டி இருக்கும், சிறுசுகள் படித்துக்கொண்டு இருக்கும் பொழு அப்பா வா போகலாம் என்று படிச்சுக்கிட்டு இருக்கும் புத்தகத்தை வாங்கி கிழிக்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் மற்றவர்கள் புத்தங்களுக்கு என்ன நேருமோ என்று ஒரு பதற்றத்தைதவிர்ப்பது நலம்.

*
செக்ஸ் புத்தங்களை அதில் உள்ள படத்துக்காக மட்டும் பார்ப்பது முதிர்ச்சியற்ற அவசகுடுக்கை தனம், கதையோடு சேர்ந்து படம் பார்க்க பழகிக்கவேண்டும், அதுபோல்ஆண் பெண் உறுப்புகளை மாஸ்கிங் செஞ்சு மறைத்து கொடுக்கும் பொழுதுதான் ஆபாசமாக தெரிகிறது, ரோட்டோரம் அடிக்கியிருக்கு செக்ஸ் புத்தங்களை பார்த்ததுவிடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு போகும் பெண்களை பார்த்து இருக்கிறேன். பதிவிரதைத் தன்மையை பறைசாற்ற இதை விடவும் சிறந்த சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு உள்ளன. இவர்கள் ஏன் பிளாட்பார கடைக்கு வருகிறார்கள்.

*
உங்கள் குழந்தைகளுக்கு இலக்கிய புத்தங்கள் பற்றிய பரிச்சயத்தை ஏற்படுத்துங்கள். அவர்களுக்குப் புரியுமா என்ற கேள்வி அநாவசியம். உங்களை வைத்து உங்கள் குழந்தைகளை எடை போடக்கூடாது.எடை கல்லை வைத்துதான் எடைப்போட வேண்டும். என்னது உங்களுக்கு குழந்தை இல்லையா முதலில் அதுக்கான செயல்களில் இறங்குங்கள். அதைவிட்டு என்ன பதிவு படிச்சுக்கிட்டு... சின்னபுள்ள தனமா!

*
என்னுடைய பதினைந்து வயதில் உறவினர் ஒருவர் ஒளித்து வைத்திருந்த காமசூத்ராவை படிக்க போனேன் அவர் வீட்டில் இல்லாத பொழுது தேடி எடுத்து படித்துக்கொண்டு இருக்கும் பொழுது நீ இதை எல்லாம் படிச்சு என்ன செய்யபோகிறாய் என்று புடுங்கி வைத்ததும் இல்லாமல் வீட்டில் போட்டும் கொடுத்துவிட்டார், அதன் பிறகு 15 வருடம் தேடினேன் தேடினேன் கிடைக்கவே இல்லை இப்பொழுதுதான் அதற்கான வாய்புகள் அமைந்தன சுந்தர்ஜீயின் காமக்கதைகள் மூலம்.
*

26 comments:

said...

மீ த ஃபர்ஸ்ட்டேய்

said...

:)))

said...

//உங்கள் குழந்தைகளுக்கு இலக்கிய புத்தங்கள் பற்றிய பரிச்சயத்தை ஏற்படுத்துங்கள். அவர்களுக்குப் புரியுமா என்ற கேள்வி அநாவசியம். உங்களை வைத்து உங்கள் குழந்தைகளை எடை போடக்கூடாது. என்னது உங்களுக்கு குழந்தை இல்லையா முதலில் அதுக்கான செயல்களில்இறங்குங்கள். அதைவிட்டு என்ன பதிவு படிச்சுக்கிட்டு... //

:-))))

இது உச்சகட்ட குசும்பு :-)

said...

//இப்பொழுதுதான் அதற்கான வாய்புகள் அமைந்தன சுந்தர்ஜீயின் காமக்கதைகள் மூலம்.//

ஹா ஹா ஹா

கலக்கிட்டீங்க..

இந்த விசயத்தை கல்வெட்டுல பதிச்சு அதுக்கு பக்கத்துலயே நீயும் உக்காந்துக்க ராசா. வருங்காலத்துக்கு ரொம்ப அவசியமா இருக்க்கும்

said...

// கதிரவன் said...

//உங்கள் குழந்தைகளுக்கு இலக்கிய புத்தங்கள் பற்றிய பரிச்சயத்தை ஏற்படுத்துங்கள். அவர்களுக்குப் புரியுமா என்ற கேள்வி அநாவசியம். உங்களை வைத்து உங்கள் குழந்தைகளை எடை போடக்கூடாது. என்னது உங்களுக்கு குழந்தை இல்லையா முதலில் அதுக்கான செயல்களில்இறங்குங்கள். அதைவிட்டு என்ன பதிவு படிச்சுக்கிட்டு... //

:-))))

இது உச்சகட்ட குசும்பு :-)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :-)

said...

மிக உபயோகமான பதிவு தல. அனைவரும் இந்த பதிவை பிரிண்டவுட் எடுத்து வீட்டில் பிரேம் போட்டு வைத்துக்கொண்டால் உபயோகமாக இருக்கும்.

said...

/வாசகர்கள் தின்ன சுண்டல் கையை துடைக்க அலட்சியமாக என் புத்தகத்தில் இருந்து இரு பக்கங்களை கிழிக்கும் பொழுது அடித்துவிடலாம் என்றுமிகுந்த கோவம் வந்துவிடும்”//

சுண்டல் துடைக்குற அளவுக்கு காஸ்ட்லி புக்கா அது :)

said...

குசும்பன் ஸார்..

தேவையான அறிவுரைகள்தான்..

ஆனால் என்னைப் போன்று, உங்களைப் போன்றவர்களால்தான் இதனை உணர்ந்து அனுபவிக்க முடியும்..

எழுத்துக்கள் நிறைந்திருக்கும் எல்லாமே புத்தகம் என்று நினைக்கும் பலருக்கும் இது வேப்பங்காய்தான்..

சென்ஷி இந்தியன் (0000000000)

said...

நல்ல அருமையான யோசனைகளும் அறிவுறைகளும்.... ஜூப்பர்...

:)))))))))))))))))))))))

said...

//என்னது உங்களுக்கு குழந்தை இல்லையா முதலில் அதுக்கான செயல்களில்இறங்குங்கள். அதைவிட்டு என்ன பதிவு படிச்சுக்கிட்டு... //

அப்ப இன்னும் கல்யாணமே ஆகாதவங்கள்லாம்????

said...

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று நீ இருக்க மாட்டாயா நண்பா?
சுந்தர்ஜீ பதிவுகளுக்கு இங்க லிங்க குடுக்கலையே நீ? எப்பல்ல இருந்து நீ இப்டி கெட்டுப் போன?

said...

//புத்தகத்தை தலைக்கு பின் புறம் வைத்து காலை நீட்டி தூங்குவது, மற்றவர்களை தூங்கவிடாமல் கொர்ர்ர்ர் என்று குறட்டை விடுவது போன்ற அட்டூழியங்களை அறவே தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் தொந்திரவு தரமால் தமக்கான தூக்கத்தை அமைத்துக்கொள்பது நலம். அதுபோல் புத்தகத்தை தலைகீழா வைத்தபடி போஸ் கொடுக்ககூடாது.//

ஆமா மாப்பு, புத்தகத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல?
அதப் போயி தலையில எல்லாம் வைக்கலாமா?
அதே மாதிரி அடுத்தவங்கள தொந்தரவு செய்யிறமாதிரி கொரட்டையெல்லாம் விடக்கூடாதுல்ல

சரியான பதிவு மாப்ள.

said...

// இந்த பதிவுக்கு சில நாட்கள் முன் வந்த இந்த பதிவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை:)//

குசும்பு......
ஒவ்வொரு வசனத்துக்கும் சம்பந்தம் இருக்கு.

:)))

said...

இந்த பதிவோடு ஏனோ உடன்பாடில்லை. எப்படி சினிமாவை இப்படித்தான் பார்க்கவேண்டும் என நம்மால் சொல்ல முடியாதோ !அதுபோல்தான் புத்தகம் படிப்பதும்..

உங்கள் பதிவு ஒரு மாமியார்- எப்படி மருமகளை நடத்தவேண்டும் என கணவர்களுக்கு சொல்லித்தருவதைப்போல இருக்கிறது.

புத்தகம் படிப்பது ஒரு சுயஅனுபவம்,கனவு காண்பதைப்போல அது ஒருவருக்கொருவர் வேறுபடும். இப்படித்தான் கனவு காண வேண்டும் என அப்துல் கலாம் தவிர வேற யாரும் சொல்லவே இயலாது.

உங்களுக்கு தலையனையாய் இருப்பது பிறருக்கு தூக்க மாத்திரையாய் தெரியலாம்.

புத்தகத்தை திருடாதீர்கள், பக்கம் கிழிக்காதீர்கள் போன்றவை ஏற்கனவே எல்லா படிப்பகங்களிலும் போர்டு மாட்டப்படுபவையே!

புத்தகத்தில் ஃபிகர் பார்ப்பது சிலருக்கு கொண்டாட்டம்,சிலருக்கு பொழுதுபோக்கு,சிலருக்கு வாசிப்பைப்போல..

நாம் பிறரை இன்ன புத்தகத்தில் நடுப்பக்கம் பார்க்கவேண்டும், இன்ன புத்தகத்தில் குப்புற படுத்து படிக்க வேண்டும் என சொல்லிதரக்கூடாது. அது அவனவன் இஷ்டம்.

said...

//ஜோசப் பால்ராஜ் said...

//என்னது உங்களுக்கு குழந்தை இல்லையா முதலில் அதுக்கான செயல்களில்இறங்குங்கள். அதைவிட்டு என்ன பதிவு படிச்சுக்கிட்டு... //

அப்ப இன்னும் கல்யாணமே ஆகாதவங்கள்லாம்????/

என்ன ஜோசப்பு..! உன்னைய எல்லோரும் கிரீன் சைல்டுன்னு சொன்னப்ப நம்பல இப்ப நம்ப வச்சுட்டே. கல்யாணத்துக்கும் குழந்தை பொறக்கறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்குது :-)

said...

ம்.. நடத்துங்க... :-)

said...

:-)))...

said...

பாவம்டா சுரேஷ் ஸார்..

ஏதோ உன்னை மாதிரி பெரிய மனுஷங்க எல்லாம் இல்லைன்னு நினைச்சிட்டு தெரியாத்தனமா ஒரு பதிவைப் போட்டுட்டாரு..

அதுக்கு இப்படியொரு தண்டனையா..?

இப்பவே அவர் ஆடிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பதிவு போடுறாரு..

இதைப் படிச்சிட்டாருல்ல.. போச்சு.. என்னிக்குத் திரும்பி வருவாருன்னு தெரியலையே..!

said...

6 பக்கத்துக்கு வியாக்கியானம் எழுதத் தெரியுதுல்ல..

தலைப்பை ஒழுங்கா எழுதத் தெரியல..?!

மொதல்ல நீ எழுதின இதையே இம்ப்போஸிஸன் மாதிரி பத்து தடவை எழுதி மனப்பாடம் பண்ணு..!

said...

குசும்பா பெங்களூர் போய்ட்டு இப்பதான் திரும்பினேன். தூக்கம் வருது அப்புறமா வர்றேன்.

said...

//என்னுடைய பதினைந்து வயதில் உறவினர் ஒருவர் ஒளித்து வைத்திருந்த காமசூத்ராவை படிக்க போனேன் அவர் வீட்டில் இல்லாத பொழுது தேடி எடுத்து படித்துக்கொண்டு இருக்கும் பொழுது நீ இதை எல்லாம் படிச்சு என்ன செய்யபோகிறாய் என்று புடுங்கி வைத்ததும் இல்லாமல் வீட்டில் போட்டும் கொடுத்துவிட்டார், அதன் பிறகு 15 வருடம் தேடினேன் தேடினேன் கிடைக்கவே இல்லை//

உசாராயிட்டாரு...

said...

சி.சி.வ.வ.

said...

எப்படியோ மூணு பேரெ இழுத்திருக்கே. (பாரு....சுரேஸ், சுந்தர்)


நல்ல யுக்தி...

said...

தல நான் அந்தபதிவ எவ்வளவு சீரியசா படிச்சேனோ.அதே மாதிரி இதையும் ரசிச்சு படிச்சேன்.

//செக்ஸ் புத்தங்களை அதில் உள்ள படத்துக்காக மட்டும் பார்ப்பது முதிர்ச்சியற்ற அவசகுடுக்கை தனம், //

:-))

// இப்பவே அவர் ஆடிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பதிவு போடுறாரு..//

அதே அதே

அப்புறம் நீங்களும் அவர் போலவே பின்னூடத்துக்கும் பதில் போடக்கூடாது.
அப்போதான் பதிவு முழுமையடையும்.

said...

//
டிஸ்கி: இந்த பதிவுக்கு சில நாட்கள் முன் வந்த இந்த பதிவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை:)
//
இந்த டிஸ்கிக்கும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ;-)

said...

really entertaining post