Friday, April 3, 2009

11 ஸ்டார் கிரிக்கெட் குழு

டேய்.. மச்சான்! பேரு செம கலக்கலா இருக்கணும் என்னாடா பேர் வைக்கலாம்? என்று ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டு இருந்தது. ஜூனியர் டெண்டுல்கர்'ஸ் என்று வைக்கலாமா? என்று யோசனை சொன்னான் சுண்டைக்காய், யங் டைகர்ஸ் என்று வைக்கலாமா என்று யோசனை சொன்னான் கோழி வெங்கட், டேய்.. உமா பேன்ஸ் என்று பெயர் வைக்கலாம் என்று எதிர் வீட்டு ஃபிகரை வம்புக்கு இழுத்தான் எருமை முட்டை, இப்படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது போல் தீவிர ஆலோசனையில் இருந்தது அந்த குழு. ஏன் என்றால் இரண்டு மாதத்தில் குடவாசலில் நடக்க இருக்கும் டோர்னெமெண்டில் பெயர் கொடுக்க பெயர் வேண்டுமே! ஆமாங்க அதுவரை எங்க டீமுக்கு பேர் கிடையாது, டோர்னமெண்ட் முதல் பரிசு 250 ரூபாய் எண்ட்ரி பீஸ் 25 ரூபாய், டேய் சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கிறோம் ஒரு MRF பேட் வாங்குறோம்! என்று பேச்சு போய்க்கொண்டு இருந்தது. கடைசியில் அந்த டீமுக்கு 11 ஸ்டார் என்று பெயர் வைக்கப்பட்டது அந்த குழுவில் இருந்த ஒரு ஸ்டார் இந்த வார ஸ்டார் என்று சொல்லணுமா என்ன!

அதுவரை எங்களிடம் இருந்தது மரப்பலகையில் பேட் போல செதுக்கப்பட்ட ஒரு பேட் தான், கைப்புடி உருண்டையா எல்லாம் இருக்காது!பட்டையாகதான் இருக்கும். சில சமயம் கார்க் பாலில் விளையாடும் பொழுது கை எல்லாம் வலிக்கும் இருந்தும் விளையாடுவோம்,அப்பொழுது பேசிக்கிட்டு இருக்கும் பொழுது யோசனை சொன்னேன் டேய்.. இங்க விளையாடுவது வரைக்கும் இந்த பேட் ஓக்கே, ஆனாகுடவாசலில் போய் விளையாடப்போறோம் அங்க போகும் பொழுது இந்த பேட்டை தூக்கிட்டு போவது நல்லா இருக்காது, ரன்னருக்கு இந்த பேட்வெச்சுக்கலாம் பேட்டிங் புடிப்பவனுக்கு ஒரு நல்ல பேட் வேணும்டா என்றேன், எப்பொழுதும் எதிர் வீட்டிலேயே இருக்கும் ஃபிகரை சைட் அடிக்கணும்என்றால் தினம் தினம் மேக்கப் போட்டுக்கிட்டு போகணும் என்ற அவசியம் இல்லை, அந்த ஃபிகரோட அத்தை பொண்ணோ அல்லது வெளியூர் பிரண்டோவீட்டுக்கு வந்து இருக்கும் பொழுது சைட் அடிக்க மேக்கப் போட்டுதானே போகணும்! அதுபோலதான் இதுவும் வெளியூர் என்றால் நல்ல பேட் வேண்டும் என்ற லாஜிக்கும்!

விசாரித்து பார்த்ததில் 180க்கு குறைந்து நல்ல பேட் இல்லை, சரி அதான் இன்னும் இரண்டு மாசம் இருக்கிறதே பக்கத்து ஊரு பசங்களோட பெட் மேட்ச்போட்டோம் என்றால் அட்லீஸ்ட் ஒரு 5 மேட்சில் செயிச்சா ஒரு 25 தேறும் இனி ஐஸ் வாங்கி திங்குற காசு,முட்டாய் வாங்கி திங்கிற காசு,சர்பத்குடிக்கிற காசு எல்லாத்தையும் இதில் போடணும் என்று சொல்லி ஒரு பாண்ட்ஸ் டப்பாவில் ஓட்டை போட்டு காசு சேர்க்க ஆரம்பிச்சோம்!நாள்ஆக ஆக ஒண்ணும் உண்டியல் நிரம்புகிற மாதிரி தெரியவில்லை! இனி அதிரடி ஆக்சன் தான் என்று ஒரு தொழிலதிபருக்கு உண்டான மூளையோடு செயல்பட்ட ஆரம்பித்தேன்.ஆலோசனை செய்ததில் ஒவ்வொருவர் சொன்ன யோசனைகள்

சினிமா காட்டுவது
கூட்டாஞ்சோறு ஆக்குவது
விறகு விற்பது
தேங்காய் விற்பது

சினிமா காட்டுவது ஊரில் இருக்கும் நண்டு சிண்டுங்களை எல்லாம் ஒண்ணாக்கி கூடத்துக்குள்ள அடைச்சு அதுங்க வைத்து இருக்கும் 5 பைசாவை எல்லாம் வாங்கி படம் காட்டுவது என்று முடிவு செய்தேன், சித்தப்பாவின் சினிமா தியேட்டரில் ஆப்ரேட்டர் கட் செஞ்சு போடும் பிலிம் சுருள் எல்லாத்தையும் எடுத்துவந்து சேர்த்து வெச்சு,ஒரு தகர டின்னில் ஒரு சின்ன ஓட்டை போட்டு அதுக்குள்ள டார்ச் லைட்டை வெச்சு அதன் ஒளி வெளியில் இருக்கும் பிலிம் சுருளில் படுமாறு வைத்து எதிரே வெள்ளை துணியில் பிலிமில் இருக்கும் படம் விழும் அந்த சுருளை கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற்றினால் படம் ஸ்லைட் ஸ்லைடாக மூவ் ஆகும்,இப்படிதான் படம் காட்டினோம், இருக்கிற நண்டு சிண்டு எல்லாம் ஒண்ணு சேர்த்து அதுங்ககிட்ட இருந்து ஆட்டைய போட்டதில் ஒரு மாதத்துக்கு 10க்கு மேல தேறவில்லை.அப்பா டார்ஜ் லைட்டுக்கு போடும் பேட்டரி ஒரு வாரத்திலேயே தீர அப்பா எவ்ரெடி காரனை திட்டிக்கிட்டு இருந்தார் பிள்ளை தொழிலதிபர் ஆவது தெரியாமால்!(வடிவேலு ஸ்கூலில் படிக்கிற பசங்க ஐஸ் பாய் விளையாடும் பொழுது எங்க ஒளிஞ்சு இருக்கான் என்று காட்டி கொடுக்க 25 பைசா வாங்குவார் அதுதான் நினைவுக்கு வருது இப்ப).

கூட்டாஞ்சோறு அவுங்க அவுங்க வீட்டில் இருந்து அரிசி,சர்க்கரை அது இதுன்னு எது கையில கிடைக்கிறதோ அதை ஆட்டைய போட்டுக்கிட்டு வரணும் அதன் பிறகு அதைவெச்சு சமைச்சு அதை வித்தோம் என்றால் காசு கிடைக்கும் என்று தக்காளி சாதம் செஞ்சா எங்களாலயே அதை வாயில் வைக்கமுடியவில்லை இப்படியாக சரவணபவனுக்கு போட்டியாக சரவணனால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமும் தோல்வியில் முடிந்தது!

விறகு விற்பது ஊரில் சும்மா பொறம்போக்கு நிலத்தில் விளைஞ்சு இருக்கும் கருவமரத்தை வெட்டி பாய் கடையில் கொடுத்தால் மனுவுக்கு 2 ரூபாய் தருவார் என்பதால் விறகு எல்லாம் வெட்டி கோழி வீட்டு வண்டியில் ஏற்றி பாய் கடையிலும் போட்டு மொத்தமாக 45ரூபாய் தேறியது ஆஹா சூப்பரு இதையே இன்னும் ரெண்டு மூணு நாள் செஞ்சா ரன்னர் பேட்டையும் வாங்கிடலாம் என்று பேராசை பட்டு அடுத்த நாள் போய் வெட்ட ஆரம்பிச்சதும் ஆயா வூட்டு மணியும் தலையாரியும் தொரத்த விழுந்தடிச்சு ஓடினோம் என்னாடான்னு பார்த்தா அது பொறம்போக்கு இடம் இல்லை அது ஆயா வூட்டு மணியோட இடம் என்று பிறகுதான் தெரிஞ்சது.

யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து அதை விற்றுவிடலாம் என்று இரண்டு நாள் செஞ்சோம் அதிலும் தலையாரி தொந்தரவு சரி இன்னும்15 நாள்தான் இருக்கு இதுவரை எம்புட்டு தேறி இருக்கு என்று பார்க்கலாம் என்று உண்டியலை உடைச்சு காசு எல்லாத்தையும் எண்ணினா 90 இருந்தது, இன்னும் 90 பேட்டுக்கு வேண்டும் கும்பகோணம் போய் வர 10 ஆக இன்னும் 100 வேண்டும் என்ன செய்யவது என்று யோசிச்சுக்கிட்டு வீட்டில் படுத்து இருக்கும் பொழுது டேய்..

காடுமாதிரி முடி வளர்ந்து இருக்கு பாரு போய் முடிய வெட்டிட்டு வா என்று அம்மா கொடுத்த 5 கையில் வந்தது கும்பகோணம் போக காசு ரெடி, வருவதுக்கு காசு என்று யோசிக்கும் பொழுது முரளி சைக்கிளில் போனான் என்னாடா என்றால் அவனும் முடி வெட்ட என்றான் ஆஹா சூப்பரு வாடா என்று அவனை அப்படியே ஸ்கூல் பக்கம் தள்ளிக்கிட்டு போய் நீ எனக்கு முடி வெட்டி விடு நான் உனக்கு வெட்டி விடுகிறேன் 10ரூபாய் கிடைக்கும் என்றேன் அவனும் அரை மனதாக சரி என்றான் முதலில் நான் அவனுக்கு வெட்டிவிட பின் அவன் எனக்கு வெட்டிவிட வீட்டுக்கு வந்ததும் என்னாடா இது எவன்டா இப்படி வெட்டினது வா போய் என்னான்னு கேட்கலாம் என்று அப்பா சத்தம் போட, அதுக்குள் சித்தப்பாவும வந்து விட நான் சொன்னதை கேட்டு சிரி சிரி என்று சிரித்துவிட்டு போய் திரும்ப ஒழுங்கா முடி வெட்டிக்கிட்டு வர சொல்லிட்டு மீதி எவ்வளோ பணம் வேண்டும் என்று கேட்டு சித்தப்பாவே போய் பேட்டும் அதோடு புது டென்னிஸ் பாலும் வாங்கிகொண்டு வந்து தந்தார்!

மேட்ச் ரிசல்டா! அத ஏன் கேட்குறீங்க புது பேட்டில் விளையாடத்தெரியாம சீக்கிரம் முதல் ரவுண்டோடு வெளியேறினோம், மரகட்டை என்றால் பிரிச்சு உதறுகிறார்கள் பேட்டை கொடுத்து விளையாடு என்றால் குச்சியை உட்டுட்டு நிக்கிறானுங்க!

31 comments:

said...

ஹைய்ய்ய்ய்ய்ய் !

said...

me the first:)

said...

எளவன் ஸ்டாரூ கிரிக்கெட்டு டீமு :)))

said...

me the first:)

said...

//வேந்தன் said...
me the first:)//

அஸ்கு புஸ்கு மீ தான் பர்ஸ்ட்டூ :)))

said...

//ஆயில்யன் //

:(

said...

பல தொழில் முயற்சி செய்துட்டுத்தான் இப்பவேலை பாக்கறீங்களா சார்? :)

said...

//அதுவரை எங்களிடம் இருந்தது மரப்பலகையில் பேட் போல செதுக்கப்பட்ட ஒரு பேட் தான், கைப்புடி உருண்டையா எல்லாம் இருக்காது!பட்டையாகதான் இருக்கும். சில சமயம் கார்க் பாலில் விளையாடும் பொழுது கை எல்லாம் வலிக்கும் இருந்தும் விளையாடுவோ//

நாங்களும் அப்படித்தான் விளையாண்டோம்! பட் எங்க டீம் பேரு யங் ஸ்டார்ஸாக்கும்
:)))

said...

அருக்க தெரியாதவன் அருவாள் சரியில்லை சொன்னானாம் :)

இந்த நொண்ணநாட்டியத்துக்கு என்னிக்கு குறைச்சல் ;)

said...

//எதிர் வீட்டிலேயே இருக்கும் ஃபிகரை சைட் அடிக்கணும்என்றால் தினம் தினம் மேக்கப் போட்டுக்கிட்டு போகணும் என்ற அவசியம் இல்லை, அந்த ஃபிகரோட அத்தை பொண்ணோ அல்லது வெளியூர் பிரண்டோவீட்டுக்கு வந்து இருக்கும் பொழுது சைட் அடிக்க மேக்கப் போட்டுதானே போகணும்///

குட் இன்போ!

said...

Bulls Cricket Team கூட மேட்ச் க்கு ரெடியா?

said...

//யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து அதை விற்றுவிடலாம் என்று இரண்டு நாள் செஞ்சோம் //


என்னம்மோ பெரிய பிசினஸ் செஞ்ச மாதிரி பேசுறீங்களே உங்க ஊர்ல இதெல்லாம் பிசினஸா...!

எங்க ஊர்ல எல்லாம் திருடுறதுன்னுல்ல சொல்லிக்கிட்டிருக்கானுங்க :(((

said...

//மேட்ச் ரிசல்டா! அத ஏன் கேட்குறீங்க புது பேட்டில் விளையாடத்தெரியாம சீக்கிரம் முதல் ரவுண்டோடு வெளியேறினோம், மரகட்டை என்றால் பிரிச்சு உதறுகிறார்கள் பேட்டை கொடுத்து விளையாடு என்றால் குச்சியை உட்டுட்டு நிக்கிறானுங்க!//

ஆமாம் பாஸ்!

மரக்கட்டையை வைச்சுக்கிட்டு பயமக்க 4ம் சிக்ஸுமா தட்டுவாங்க ஆனா கிரிகெட் பேட் கொடுத்தா குச்சியை காமிச்சுத்தான் வெளையாடுவாங்க :))))

said...

//மரகட்டை என்றால் பிரிச்சு உதறுகிறார்கள் பேட்டை கொடுத்து விளையாடு என்றால் குச்சியை உட்டுட்டு நிக்கிறானுங்க! //

அப்படியா?

said...

அட நாமெல்லாம் ஒரே இனமடா தம்பி! அதிலயும் இந்த முடி வெட்டி கொண்டது பிரமாத சிரிப்பு தான்:-)))

said...

//எப்பொழுதும் எதிர் வீட்டிலேயே இருக்கும் ஃபிகரை சைட் அடிக்கணும்என்றால் தினம் தினம் மேக்கப் போட்டுக்கிட்டு போகணும் என்ற அவசியம் இல்லை, அந்த ஃபிகரோட அத்தை பொண்ணோ அல்லது வெளியூர் பிரண்டோவீட்டுக்கு வந்து இருக்கும் பொழுது சைட் அடிக்க மேக்கப் போட்டுதானே போகணும்!//

ROTFL :))) வூட்டம்மணி இந்த பதிவை படிப்பாங்களா ;)

said...

//ஆயில்யன் said...

//யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து அதை விற்றுவிடலாம் என்று இரண்டு நாள் செஞ்சோம் //


என்னம்மோ பெரிய பிசினஸ் செஞ்ச மாதிரி பேசுறீங்களே உங்க ஊர்ல இதெல்லாம் பிசினஸா...!

எங்க ஊர்ல எல்லாம் திருடுறதுன்னுல்ல சொல்லிக்கிட்டிருக்கானுங்க :(((
//


ரிப்பீட்டே :)))

said...

:)

வெரி நைஸ் குசும்பா!

said...

அருக்க தெரியாதவன் அருவாள் சரியில்லை சொன்னானாம் :)

இந்த நொண்ணநாட்டியத்துக்கு என்னிக்கு குறைச்சல் ;)
--ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

said...

ஏய் மச்சி,
நீ உடனே அந்த துபாய் வேலைய எல்லாம் விட்டுட்டு சீக்கிரமா வந்து சாலிகிராமத்துல செட்டில் ஆகுடே.
என்னா ஒரு மூளை உனக்கு. ஒரு சாதாரண டப்பாக்குள்ள ஒரு டார்ச் லைட்ட வைச்சு பிலிம் காட்டுன உன் திறமைய நினைச்சா எனக்கு புல் அரிக்குது மச்சி.
நீ இருக்க வேண்டிய இடம் துபாய் இல்ல.

said...

kalakkal.

said...

இங்க ஒரு டீம் செட் பண்ணிடுவமா?ஒவ்வொரு வெள்ளியும் ஏதோ ஒரு திடலில் ஏக்கத்துடன் பார்த்துவிட்டு வரவேண்டிருக்கு.

said...

குடவாசல் 600 028...

said...

25

said...

/
அந்த குழுவில் இருந்த ஒரு ஸ்டார் இந்த வார ஸ்டார் என்று சொல்லணுமா என்ன!
/
வெறும் ஸ்டார் இல்ல சூப்பர் ஸ்டார்!!

said...

/
எப்பொழுதும் எதிர் வீட்டிலேயே இருக்கும் ஃபிகரை சைட் அடிக்கணும்என்றால் தினம் தினம் மேக்கப் போட்டுக்கிட்டு போகணும் என்ற அவசியம் இல்லை, அந்த ஃபிகரோட அத்தை பொண்ணோ அல்லது வெளியூர் பிரண்டோவீட்டுக்கு வந்து இருக்கும் பொழுது சைட் அடிக்க மேக்கப் போட்டுதானே போகணும்! அதுபோலதான் இதுவும் வெளியூர் என்றால் நல்ல பேட் வேண்டும் என்ற லாஜிக்கும்!/

நல்ல லாஜிக்!!

said...

சூப்பரு அண்ணே!
சின்ன வயசுல செய்யாத வேலையே இல்லை போல... :)

said...

/
பேட்டரி ஒரு வாரத்திலேயே தீர அப்பா எவ்ரெடி காரனை திட்டிக்கிட்டு இருந்தார் பிள்ளை தொழிலதிபர் ஆவது தெரியாமால்!
/

நல்லவேளை இன்னொரு தொழிலதிபர் வராம உங்கப்பா காப்பாத்தினாருய்ய்ய்ய்ய்யா!!!

said...

/

மேட்ச் ரிசல்டா! அத ஏன் கேட்குறீங்க
/

இல்ல குடுத்த பில்டப்புலயே தெரிஞ்சிடுச்சே சரவணா!!

said...

உமாவை பத்தி மேற்படி விவரம் ஒன்னும் இல்லியே பதிவுல!?!?!?

:)))))))))))

said...

கலக்கலா இருக்கு உங்க டீம்..