Wednesday, April 1, 2009

வேண்டாம் வலிக்குது அழுதுடுவேன்!

அது ஒரு அழகிய நிலாக்காலம்! சுவாமி தயானந்த சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, எங்கள் ஊரில் இருக்கும் தனியார் நிர்வாகத்தின் கீழ் (திரு.சுவாமிஜி, TTK நரசிம்மன் அவர்களால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடம் இன்று கல்லூரி வரை வந்து பிரமாண்ட வளர்ச்சி அடைந்து நிற்கிறது. இங்குதான் பல பிரபலங்கள் படித்து இருக்கிறார்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலம் லிங்குசாமி, இன்னொரு பிரபலம் திரு.குசும்பன்(ஹி ஹி)

இனி சொய்ய்ய்ய்ய்ய்ங்ங்.........

ஓரு கீத்துக்கொட்டகை, கீழே ஆற்று மணல் கொட்டிய தரை, அதன் மேலே குட்டி குட்டியாய் பிள்ளைகள் அமரும் விதத்தில் சின்ன சின்ன பெஞ்ச்,
கருநீல டவுசரு,வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்கள் சீருடை, எங்கள் வகுப்பு ஆசிரியை கஸ்தூரி டீச்சர். டீச்சரை கண்டால்தப்பு செய்தவர்கள் அனைவரும் கால் சட்டையிலேயே மூச்சா போகும் அளவுக்கு மிகவும் கண்டிப்பானவர்.காலையில் ஸ்கூலுக்கு வரும் பொழுது தலை நிறைய எண்ணெய் தடவி, படிய தலை வாரிக்கிட்டு வரவேண்டும் போன்ற பல விதிகள் உண்டு.டீச்சரை கண்டால் இரண்டு கைகளையும் நெற்றியில் வைத்து குட் மானிங் டீச்சர் சொல்லும் அளவுக்கு பயம், பயத்துக்கு முக்கிய காரணம் டீச்சர் கையில் எப்பொழுதும் வைத்து இருக்கும் அகப்பை கம்பு, சாதாரணமாக பொங்கல் சமையத்தில் சிரட்டையில் துளை போட்டு அதில்
மூங்கிலை சிறிய சிறிய குச்சுகளாக வெட்டி நன்றாக வழு வழுன்னு சீவி அதன் முனையில் சிரட்டையை மாட்டி இருப்பார்கள், ஆனால்
பொங்கல் சமயத்தில் டீச்சர் எக்ஸ்ட்ராவாக இரு அகப்பை வாங்குவார்கள் போல சிரட்டையை மட்டும் எடுத்துவிட்டு அந்த குச்சோடுதான் வருவார்கள்.

டேய் சரவணா....!அட நான்தாங்க அப்ப என்னா குசும்பான்னா கூப்பிடுவாங்க?ரெண்டு ரெண்டும் என்னா என்பார்கள் (2 x 2) அதுக்கே நமக்கு நொண்டும்,அதுக்குள் எட்டோட்டு என்பார்கள் (8x8) நானும் ம்ம்ம்... ம்ம்ம்ம்.... ம்ம்ம்... என்று யோசிக்கங்காட்டியும், டீச்சர் எங்க சொல்லு பார்க்கலாம் ரெண்டும் ரெண்டும் நாலு , எட்டோட்டு அறுபத்தினாலு ம்ம்ம் சொல்லு.. சொல்லு.. என்று கையில் வைத்து இருக்கும் அகப்பை கம்பினால் நாலு விளாறு, வலி தாங்க முடியாது அப்படியே தடிச்சு தடிச்சு போய் இருக்கும்.


இப்படியே நாளுக்கு நாள் டீச்சரின் அடி அதிகமாகிட்டே போக, ஒரு நாள் அந்த முடிவை எடுத்தேன். அதுக்கு துணையும் சேர்த்தேன். அவன் பெயர் விஜயன். டீச்சர் வீட்டுக்கு போகும் பொழுதுடீச்சர்ஸ் ரூமில்(அது ஒரு தனி தடுப்பு அவ்வளவுதான்) அங்கதான் அந்த கம்பை வெச்சுட்டு போவாங்க. பிளான் போட்டு அந்த கம்பை எடுத்து கீத்துக்குள்ள சொருகி வெச்சுட்டோம்ன்னா அதன் பிறகு கம்பு கிடைக்காம போய்விடும், நமக்கு அடியும் கிடைக்காது என்று பல பிளான்கள் போட்டு ஒர் நாளையும் குறிச்சேன் கம்பை கடத்தி ஒளிய வைக்க. பின்னாடிதான் தெரிஞ்சுது பிளான் போட்ட நேரத்தில் ரெண்டாம் வாய்ப்பாட்டை ஒழுங்கா படிச்சு இருந்தாலே அடி கிடைச்சு இருக்காதுன்னு!சரி விடுங்க திரும்ப பிளானுக்கு போவோம், பிளான்படி 4 மணிக்கு ஸ்கூல் முடிஞ்சதும் எல்லோரும் ஓடிவிடுவார்கள், சில பசங்க அங்க இங்க விளையாடிக்கிட்டு இருப்பாங்க, எல்லா டீச்சரும் பேசிவிட்டு கிளம்ப எப்படியும் 4.45 க்கு மேல ஆகிவிடும், எல்லோரும் போன பிறகு யாரும் பார்க்காத மாதிரி கடத்தணும் அதுக்கு வெளியே நின்னு பாத்துக்கதான் விஜயன். குரு படத்தில் கமல் மீனை கடத்துவது போல.. :-) எல்லோரும் போன பிறகு நான் நைசா ஸ்டாப் ரூம் போய் கம்பை எடுத்து அப்படியே சட்டைக்குள் ஒளிய வெச்சு எடுத்து வந்து ஸ்கூல் கீத்து கொட்டகைக்கு பக்கத்தில் இருக்கும் தட்டியில் ஏறி மெதுவாக கம்பை கீற்றுக்குள் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஏத்திவிட்டு கீழே வந்து பார்த்தால் உள்ளே அதோட முனை அப்படியே நீட்டிக்கிட்டு தெரியுது, திரும்ப போய் மேலே ஏறி பக்கவாட்டில் வைத்து கீற்றை மூடிவிட்டு வீட்டுக்கும் வந்தாச்சு.


மறுநாள் காலையில் கிளாசே அதகளமாக இருக்கு. டீச்சர் கம்பை காணவில்லை, டீச்சர் எல்லோரிடமும் கேட்கிறார்கள் டேய்... எவன்டா அதை
எடுத்தது என்று எங்கே? என்று தேட பல குழுக்களாக தேடிபார்த்துவிட்டு டீச்சருக்காக போத்துமர கம்பு ஒன்னை உடைச்சுக்கிட்டு வந்து கொடுத்தேன்.(அதுதான் பார்க்க பெருசா இருந்தாலும் அடிச்சா வலி தெரியாது), டீச்சரும் தீட்டிய மரதிலேயே கூர் பார்பது போல் என்னையே அந்த கம்பால் அடிச்சுபார்த்து சோதனை வேற செஞ்சுக்கிட்டாங்க...அடி கிடைத்தாலும் உள்ளுக்குள் ரொம்ப சந்தோசம், மக்கள் அனைவருக்கும் அகப்பை கம்பு அடியில் இருந்து விடுதலை வாங்கி கொடுத்துவிட்டதாக.

நாட்கள் வாரங்களாக உருண்டு ஓடின...சில வாரங்களுக்கு பிறகு ஒரு சோதனை வந்தது எலந்த உருண்டை வடிவில். ஐந்து பைசாவுக்கு வாங்கியஎலந்த உருண்டையில் பாதி கேட்டான் கூட்டாளி விஜயன். நான் போடா... முடியாது என்று சொன்னதோடு இல்லாம தின்ன எலந்த கொட்டைய அவன் மேலவிட்டெறிய கோவம் வந்து படுபாவி நேரா போய் கஸ்தூரி டீச்சரிடம்... டீச்சர் உங்க கம்பை ஒளிய வெச்சது சரவணன் தான் டீச்சர் என்று சொன்னதுமட்டும் இன்றி ஒளிய வெச்ச இடத்தையும் காட்டி கொடுத்துவிட்டான் எட்டப்பன். டீச்சர் கம்பு கைக்கு வந்ததும் முதல் பூசை போட்டு கொடுத்தவனுக்குதான்! இத்தனை நாள் ஏண்டா சொல்லவில்லை, நீயும் உடந்தைதானே என்று... கூட நின்னவன் வாங்கும் அடியை பார்த்ததுமே ஒண்ணுக்கு முட்டிக்கிச்சு எனக்கு, (அப்ப பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு) அப்புறம் என்னா எல்லோரும் ஆவலோடு எதிர்ப்பார்த்துகிட்டு இருக்கும் கிளைமேக்ஸ்தான் ...

டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தட்டுவது போல் என்னை போட்டு சாத்தும் பொழுது அப்ப அப்ப பக்கத்தில் இருக்கும் எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... அந்த அளவில் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டது!

ம்ம்ம் நான் மட்டும் வெள்ளையா பிறந்து இருந்தேன்னா அன்னைக்கே வரி குதிரை ஆகி இருப்பேன்...அட ஆமாங்க டீச்சர் அடிச்ச அடியில் உடம்பு முழுக்க வரி வரியா கோடுகள் கருப்பு உடம்பு என்பதால் கோடு வெளியே தெரியாம போச்சு!இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-))

54 comments:

said...

me the first?? :):)

said...

//ம்ம்ம் நான் மட்டும் வெள்ளையா பிறந்து இருந்தேன்னா அன்னைக்கே வரி குதிரை ஆகி இருப்பேன்...//

பாவம் அண்ணா நீங்க... :((

said...

//இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-)) //

நல்ல நீதி :)))

said...

கதை ஒரு நீதிக்கதை.. :)

said...

//டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தட்டுவது போல் என்னை போட்டு சாத்தும் பொழுது அப்ப அப்ப பக்கத்தில் இருக்கும் எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்.//

:))))

அனுஜன்யா

said...

:-)))))))))
நீங்க அடி வாங்கி எங்களை சிரிக்க வைச்சுட்டீங்க!

said...

//எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... அந்த அளவில் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டது!//


குட் ஃபீலிங்க்ஸ் :)))

said...

//டீச்சரை கண்டால் இரண்டு கைகளையும் நெற்றியில் வைத்து குட் மானிங் டீச்சர் சொல்லும் அளவுக்கு பயம்//

ஒ....! இதுக்கு பேரு பயமா?

குட்மார்னிங்கற பேருல அவுங்களை கலாய்ச்சுருக்கீங்க பாஸ்!

said...

// நான் போடா... முடியாது! என்று சொன்னது இல்லாமல் தின்ன எலந்த கொட்டைய அவன் மேலவிட்டெறிய //

கொஞ்சம் டெரராத்தான் நடந்துக்கிட்டிருந்திருக்கீங்க பாஸ்!

எலந்தையை விட்டெறியறதெல்லாம் கொஞ்சம் ஓவரூதான் !

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
கதை ஒரு நீதிக்கதை.. :)
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

said...

செம்ம்மகாமெடி சார் நீங்க..
:)))

said...

//டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தட்டுவது போல் என்னை போட்டு சாத்தும் பொழுது அப்ப அப்ப பக்கத்தில் இருக்கும் எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... //

படு கலக்கல் குசும்பா. யாரும் சிரிக்காம இருக்க முடியாது இதுக்கு.

said...

அடி வாங்கினத விடுங்க. இப்ப 2X2 பதில் தெரியுமா தெரியாதா??

said...

//படு கலக்கல் குசும்பா. யாரும் சிரிக்காம இருக்க முடியாது இதுக்கு./

இதுல இருக்கு நுண்ணரசியல் என்ன சகா? குசும்பன் அடி வாங்குவதை கண்டு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாதா? என்னால முடியும். கஷ்டமா இருக்கு தல.. உங்கள அடிச்ச அவர.....

said...

//ஓரு கீத்துக்கொட்டகை, கீழே ஆற்று மணல் கொட்டிய தரை, அதன் மேலே குட்டி குட்டியாய் பிள்ளைகள் அமரும் விதத்தில் சின்ன சின்ன பெஞ்ச்,
கருநீல டவுசரு,வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்கள் சீருடை//

நினைவோ ஒரு பறவை...

said...

புது கம்பின் சோதனை அடியே உங்களுக்கு தானா?
நீங்கள் நல்லவர்,வல்லவர்...அதனால் தான்.

said...

”அஞ்சா நெஞ்சன்னு” யாராவது பட்டம் கொடுத்தாங்களா?

ஹாஸ்ய உணர்வோட ரொம்பவே அழகா எழுதறீங்க.

said...

எஸ்கியூஸ்மீ

//திரு.குசும்பன்(ஹி ஹி//

இதுல திரு' என்ற வார்த்தையில் எழுத்துபிழை இருக்கு.. திரு'க்கு அப்புறம்... "டன்" சேர்க்க மறந்துவிட்டீர்கள், பிழையை சரி செய்யவும்.....

said...

me 19th

Anonymous said...

:)

said...

உங்களோட எழுத்து நட நல்லா இருக்கு அத இப்பிடி உங்க சொந்த கதையை எழுதறதுல வீணடிக்கிறத விட்டுட்டு வேற நல்ல கதையா எழுதுங்க please.....

said...

உங்களோட எழுத்து நட நல்லா இருக்கு அத இப்பிடி உங்க சொந்த கதையை எழுதறதுல வீணடிக்கிறத விட்டுட்டு வேற நல்ல கதையா எழுதுங்க please.....

said...

//நான் மட்டும் வெள்ளையா பிறந்து இருந்தேன்னா அன்னைக்கே வரி குதிரை ஆகி இருப்பேன்.//

ஹா ஹா ஹா!

said...

இளமையில் துவங்கிய பயணம் இன்னும் முடியவேயில்லை:)

said...

// டீச்சர் உங்க கம்பை ஒளிய வெச்சது சரவணன் தான் டீச்சர் என்று சொன்னதுமட்டும் இன்றி ஒளிய வெச்ச இடத்தையும் காட்டி கொடுத்துவிட்டான் எட்டப்பன்.//

துரோகீஈஈஈஈ ................

//எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... //

ப்ப்பா இந்த டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் கேட்டவுடன் தான் நிம்மதியாச்சி ..நாம எவ்வளவு அடி வாங்கினாலும் பரவாயில்லை.. காட்டிக்கொடுத்தவன் வாங்கற டிஸ்'ஸு இருக்கே அது தனி சுகம் தான்.. :)

//கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-))//

அது கூட்டாளி இல்ல வேட்டு வைக்கற வேட்டாளி..

சூப்பரா இருக்கு அடிவாங்கினது.. ம்ம்.. நானும் நீங்களும் இனிமே அடி வாங்கறதுல பிரண்டஸ் நான் கூட இப்படி சூப்பர் சூப்பர் அடி எல்லாம் வாங்கி இருக்கேன்.. :)

said...

ada kusmbanare nanum anga thaanga padichen (swami dayanantha hsc )

ungaluku entha oorunga ?
manjakudiya?

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

said...

சிறு வயது சேட்டைகளே சுவாரஸ்யமானவைதான்.

அதை நகைச்சுவையுடன் எழுதியிருப்பதற்கு பாராட்டுகள்.

said...

ரவுண்டு கட்டி அடி வாங்கினத என்னமோ பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செஞ்ச ரேஞ்சிக்கு சொல்றதில உங்கள விட்டா அடிச்சிக்க ஆளே இல்ல என்னா ஒரு வில்லத்தனம்.

said...

ஒரு இலந்தைப் பழத்துக்காக நீங்களும் இப்படி கருமித்தனம் செய்திருக்க வேண்டாம்.
அந்த அடீ இங்க வந்து அழுது பாருங்க:)))

said...

//குரு படத்தில் கமல் மீனை கடத்துவது போல.. :-) //

கெத்து பலமாத்தான் இருக்கு :))

said...

//டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...//

:)))))))))))))))))))))))))))

said...

//இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-))//

எலந்த உருண்டை பிரண்டு கண்ணு முன்னால உட்கார்ந்து அவனுக்கு குடுக்காம சாப்பிட கூடாதுன்னு கூட சொல்லலாம் :P

said...

நன்றி ஸ்ரீமதி

நன்றி முத்துலெட்சுமி. இது ஒருகதை இதுக்கு ஒரு நீதி என்றுதானே சொல்லவருகிறீர்கள்:)

நன்றி அனுஜன்யா

நன்றி சந்தனமுல்லை

நன்றி ஆயில்யன் என்ன செய்வது எலந்தை நமக்கு ரொம்ப பிடிக்கும்:)

நன்றி வழிப்போக்கன்

நன்றி நந்து

நன்றி வித்யா! மீண்டும் அடியா அவ்வ் உடம்பு தாங்காது?

நன்றி கார்க்கி பதிவை படிக்காம பின்னூட்டம் படிக்கிற நீ!!?

நன்றி நர்சிம்

நன்றி வடுவூர் குமார்


நன்றி sindhusubash

நன்றி கவிதா இப்ப “டன்” சேர்த்தமாதிரி பெருத்துதான் போய் இருக்கிறேன்

நன்றி சுரேஷ்

நன்றி தூயா

நன்றி ravitha said...
உங்களோட எழுத்து நட நல்லா இருக்கு அத இப்பிடி உங்க சொந்த கதையை எழுதறதுல வீணடிக்கிறத விட்டுட்டு வேற நல்ல கதையா எழுதுங்க please.....//

வச்சிக்கிட்டா வஞ்சனம் செய்கிறேன்!நன்றி

நன்றி வால்

நன்றி ராஜ நடராஜன்

நன்றி கவிதா எட்டப்பன்களுக்கு விழும் பொழுது ஆஹா ஆஹா! இனி நாம பிரண்ட்ஸ்:)

நன்றி sayrabala அப்படியா? ஸ்டார் அறிமுகத்திலேயே ஊர் பேர் சொல்லியிருக்கிறேன்
ஊர் திப்பணம்பேட்டை, நீங்க?

நன்றி மஞ்சூரார்

நன்றி தஞ்சை ஜெமினி, ஒரு பில்டப்புதான் பரிவட்டம் ம்ம்கும் அது ஒன்னுதான் குறைச்சல்:)

நன்றி வல்லிசிம்ஹன் என்ன செய்வது அப்ப தெரியல:)

நன்றி G3 அப்படியும் சொல்லலாம் ஆனா கையில் நிறைய இருந்தா அப்படி சொல்லலாம்:)

said...

//இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது! //

சொல்லிட்டாருய்யா சாக்ரட்டீசு

:)

said...

படிக்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது :)) ஆனால்
//குரு படத்தில் கமல் மீனை கடத்துவது போல..//
இது கொஞ்சம் ஓவர்ன்னா.

said...

எடுக்கும்போது தலைகீழா தொங்கி இருக்கணும். அல்லது குறைந்த பட்சம் அடி வாங்கும் போதாவது.... இல்லன்னா எப்படின்னா குரு படம் மாதிரி வரும்.? :))

said...

சிறு வயது சேட்டைகளே சூப்பர்...
:)))))))))))))))

said...

நல்லாயிருந்தது தல உங்க எழுத்தோட்டம், ஹி ஹி நமக்கு அடிவாங்கியது ஞாபகம் வந்துடுச்சி

said...

//இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-)) //

தப்பு. அஞ்சு பைசா எலந்தை உருண்டைக்குக் கணக்கு பாக்காம இருந்திருந்தா உங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. அது தான் நீதி. நியாயம். தர்மம்.
:)

said...

//அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலம் லிங்குசாமி, இன்னொரு பிரபலம் திரு.குசும்பன்(ஹி ஹி)
//

நீங்க அடி வாங்கும் போது லிங்குசாமி என்ன பண்ணிட்டு இருந்தாரு? அதை சொல்லவே இல்லையே? லிங்குசாமியும் உங்களை மாதிரியே வால்பையனா?

said...

நல்ல டீச்சர் :)))))))))))))

said...

:))

:))))

said...

உன் சேர்க்கை சரியில்லாமா போச்சு மாப்பி.
இப்டி ஒரு 5 பைசா எலந்த வடை மேட்டருக்கெல்லாம் கூட்டணிய முறிக்கிறவனோடயெல்லாமா கூட்டணி வைப்ப.

அந்த ட்ரம்ஸ் உதாரணம் இருக்கே, நினைச்சு நினைச்சு சிரிச்சேம்லே.

said...

//டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை//

வேண்டாம் வலிக்குது வயிரு சிரிச்சி சிரிச்சி

said...

:-)))))))))
நீங்க அடி வாங்கி எங்களை சிரிக்க வைச்சுட்டீங்க!

said...

//டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை//

வேண்டாம் வலிக்குது

எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க.

said...

ஹாஹாஹா :)))

said...

மீ தி 48 - 50

said...

மீ தி 48 - 50

said...

//இதில் இருந்து தெரியும் நீதி என்னெவென்றால் கூட்டாளிய வெச்சுக்கிட்டு தப்பு தண்டா செய்யக்கூடாது!:-)) //

நல்ல நீதி :)))

said...

கலக்கல் பதிவு.
எங்களுக்கும் ஒரு ஆசிரியர் இருந்தார். அவரின் மேசையிலிருந்து மூன்று லைனைத் தொடக் கூடியதாக நீண்ட சீவிக் காய வைத்த பூவரசங் கம்பு இருந்தது.
அடி விழுமோ இல்லையோ அதைப் பார்த்தாலே எங்கள் எல்லோருக்கும் கலக்கம்தான்.

said...

அப்துல்லா அண்ணாச்சி

நல்லவேளை சாக்பீஸ் என்று சொல்லாம விட்டீங்களே!


சுல்தான் பாய் ஒரு பில்டப்தான்:) என்ன ஒரு ஆசை உங்களுக்கு:)

நன்றி படகு

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி கைப்புள்ள சங்கமே அபராதத்தில் போய்க்கிட்டு இருக்கும் பொழுது
எப்படி தல நாம டொனேசன் கொடுக்க முடியும்:) லிங்கு சாமி நமக்கு சீனியர் தல!

நன்றி வெடிகுண்டு முருகேசன்

நன்றி சோசப்பு அப்ப கூட இருந்தவன் எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆள் என்று தெரியாம போச்சு:)

நன்றி பாண்டி பரணி

நன்றி ச்சின்னப் பையன்

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி மங்களூர் மாப்பி

நன்றி மாதேவி

said...

//
டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தட்டுவது போல் என்னை போட்டு சாத்தும் பொழுது அப்ப அப்ப பக்கத்தில் இருக்கும் எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... அந்த அளவில் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டது!
//

சான்ஸே இல்லை குசும்பன்.. இப்பதான் எல்லா பதிவுகளையும் படிச்சிட்டு வர்றேன். கலக்கல்..

said...

//
டிரம்ஸ் சிவமணி கூட அந்த அடி அடிக்கமாட்டார் டிரம்ஸை... டீச்சருக்குள்ளள ஒரு டிரம்ஸ் சிவமணி இல்ல பத்து சிவமணி இருந்ததை அன்னைக்குதான் நான் கண்டு பிடிச்சேன்...டன் டன் டண்டு டன் டன் டம் ...என்று டிரம்ஸை தட்டிவிட்டு கடைசியா மேல இருக்கும் தட்டை டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று தட்டுவது போல் என்னை போட்டு சாத்தும் பொழுது அப்ப அப்ப பக்கத்தில் இருக்கும் எட்டப்பனுக்கும் டிஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு அடி விழும்... அந்த அளவில் கொஞ்சம் மனசு சந்தோசப்பட்டது!
//

சான்ஸே இல்லை குசும்பன்.. இப்பதான் எல்லா பதிவுகளையும் படிச்சிட்டு வர்றேன். கலக்கல்..