Tuesday, December 4, 2007

2011 முதல்வர் + மந்திரி சபை ஒரு சிறப்பு பார்வை!!!

நேற்று கட்சி ஆரம்பிச்ச சரத் முதல் ராமதாஸ் வரை எல்லோருக்கும் டார்கெட் 2011ல் முதல்வர் பதவிதான். எல்லோரும் நானும் முதல்வர் என்று சொல்லும் பொழுது ஏன் நீங்கள் அல்லது நானும் இந்த போட்டியில் குதிக்க கூடாது?


என்னது மக்கள் ஆதரவு இல்லாமல் எப்படி? என்று அபத்தமான கேள்வி எல்லாம் கேட்க கூடாது ஆமா? இப்ப சரத்குமார் கட்சி பேரு என்னான்னு கூட யாருக்கும் தெரியாது அவர் சொல்லவில்லையா? அது போலதான் நம்பிக்கை தான் வாழ்கை!!!


சரி நானும் முதல்வர் ஆனா யார் யாருக்கு எல்லாம் மந்திரி பதவி கொடுக்கிறது? என்ன மந்திரி பதவி கொடுக்கிறது என்று ஒரு லிஸ்ட் போட்டலாம்.

முதல்வர்: குசும்பன் (குடும்பத்தில் குண்டுவைக்கும் துறை, கல்லூரி பெண்கள் விடுதி மேம்பாட்டு துறை)

துனை முதல்வர்கள்: அன்றைய இளம் ஹீரோயின்கள்

கல்விதுறை அமைச்சர்: திரு. தருமி

சுகாதாரம்+மருத்துவ துறை: திருமதி. டெல்பின்

தகவல் பரிமாற்ற துறை : திரு. அபி அப்பா

உணவு துறை: G3

கால்நடை துறை (கோழியும் அடக்கம்) : டாக்டர்.காயத்ரி

விவசாய துறை: இளா

வனவிலங்கு(புலி) பாதுகாப்பு துறை: நாகை சிவா

விளம்பர கட்டுபாட்டு துறை: ஜெஸிலா

கிரிக்கெட் மேம்பாட்டு துறை: பாஸ்ட் பவுலர்

குடும்ப தற்காப்பு கலை மேம்பாட்டு துறை: பெனாத்தலார்

மது ஒழிப்பு துறை : அய்யனார்

குழந்தைகள் நல துறை: குட்டீஸ்

இளம் பெண்கள் நல துறை: ஜொள்ளு பாண்டி

சுற்றுலா மேம்பாட்டு துறை: மை பிரண்ட் (யாருப்பா அது வெளிநாட்டவர் எல்லாம் அமைச்சர் ஆக கூடாதுன்னு சொல்றது?)

சுற்று சூழல் பாதுகாப்பு துறை : வெங்கட், செல்வேந்திரன்

விளம்பர மேம்பாட்டு துறை: ஓசை செல்லா

அறநிலைய துறை : ஜீ.ரா & KRS

ஆசிரியர் நல துறை : கண்மணி

போக்குவரத்து துறை: டோண்டு (சொந்த கார் வைத்து இருப்பதால்)

கடலை விவசாய மேம்பாட்டு துறை: தம்பி

ஈயம், பித்தளை துறை : அண்ணாச்சி & மோகன்தாஸ்

பசி பட்டினி ஒழிப்பு துறை: துர்கா

ஹீரோயின்கள் மேம்பாட்டு : ஆயில்யன் & ரசிகன்

ஆப்பு துறை: கைபுள்ள

குடிசை மாற்று வாரியம்+உப்புமா மேம்பாட்டு துறை: இலவசகொத்தனார்

வேறு யார் யாருக்கு என்ன என்ன துறை கொடுக்கலாம் சொல்லுங்களேன் எல்லோருக்கு பதவி என்ற ஒரு கொள்கை இருக்கு.

விரிவாக்க பட்ட மந்திரி சபை:

ஆரோக்கிய துறை + குண்டர் தடுப்பு துறை: TBCD

நெட்வெர்க் புலனாய்வு துறை : ராம்

ஆள் மாறாட்ட தடுப்பு துறை : மின்னல்

ரீமேக் பட தயாரிப்பு துறை: தேவ்

16 comments:

said...

தலைவா நீ வாழ்க.

மத்தியில ஆட்சி அமைச்ச காங்கிரஸ் கூட யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம்னு இப்படி யோசிச்சு இருக்க மாட்டாங்க.

கரெக்டா பதவி குடுத்திருக்கீங்க. . . .

said...

வெங்கட்ராமன் said...
தலைவா நீ வாழ்க.

மத்தியில ஆட்சி அமைச்ச காங்கிரஸ் கூட யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம்னு இப்படி யோசிச்சு இருக்க மாட்டாங்க.

கரெக்டா பதவி குடுத்திருக்கீங்க. . . .///

நன்றி:))))

said...

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஒரெ பதிவு இரண்டு முறை...இதில எதுனா குசும்பு இருக்கா மாம்ஸ்

said...

Baby Pavan said...
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
ஒரெ பதிவு இரண்டு முறை...இதில எதுனா குசும்பு இருக்கா மாம்ஸ்///

இரு தொகுதியில் நின்று வெற்றி பெற்றதால் இந்த முடிவு, அப்படினுன்னு வெளியில் சொல்லிக்கிலாம்.

(ரகசியமா சொல்லனும் என்றால் முதல் பதிவு நேற்றய தேதியில் வந்துவிட்டது அதை சரி செய்ய தெரியவில்லை, அதனால் தமிழ்மணம் முதல் பக்கத்தில் வரவில்லை அதான் பிரச்சினை)

said...

அது என்ன ஒரு அக்காக்கு மட்டும் டாக்டர் பட்டம் அது என்ன அவங்க படிச்சி வாங்கின பட்டமா ?

Anonymous said...

your one is a childish attitude

said...

:))))))))))))))))))

said...

ஆஹா.. என்னே பாசம், நம்ம முதல்வருக்கு எம்மேல..
கேக்காமலேயே மறக்காம பதவி தந்த குசும்பருக்கு ஜே...

said...

அப்பிடியே.. இலியானா..,பாவனா மாதிரி புதுசா வர்ர ஹீரோயிங்களை நம்ம டிபார்ட்மெண்ட் பக்கம் ஒதுக்கிடுங்க..
அக்கா கேரட்டர்,அத்தை கேரட்டர் ரேஞ்சிக்கு உள்ள ஹீரோயிங்களை நம்ம ஆயில்யன் பக்கம் தள்ளிவிட்டுடலாம்.
ரொம்ப பொறுமைசாலி சமாளிச்சிப்பாரு..என்ன நாஞ்சொல்லறது குசும்பரே:))))

said...

// உணவு துறை: G3

கால்நடை துறை (கோழியும் அடக்கம்) : டாக்டர்.காயத்ரி//

மாம்ஸ் இது அவிங்களூக்கு தெரியுமா?..
உங்கள எந்த ஆஸ்பத்தரில வழக்கமா சேப்பாய்ங்கன்னு
சொல்லிபுட்டாக்கா வந்து
பாக்க வசதியா இருக்குமில்ல...ஹிஹி...

(ரகசியமா சொல்லறேன்.. மொத்தத்துல இது ரொம்ப டாப்பு..)

said...

கூல் :))

said...

Anonymous said...
your one is a childish attitude//

இருந்துட்டு போவோமே!!! குழந்தை தனமாக அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதானே!

*********************
G3 said...
:))))))))))))))))))
//

:)
***************************

ரசிகன் said...
ஆஹா.. என்னே பாசம், நம்ம முதல்வருக்கு எம்மேல..
கேக்காமலேயே மறக்காம பதவி தந்த குசும்பருக்கு ஜே...////

கத்தார் கிளை நிர்வாகிகளை மறக்க முடியுமா?

***********************

ரசிகன் said...
அப்பிடியே.. இலியானா..,பாவனா மாதிரி புதுசா வர்ர ஹீரோயிங்களை நம்ம டிபார்ட்மெண்ட் பக்கம் ஒதுக்கிடுங்க..
அக்கா கேரட்டர்,அத்தை கேரட்டர் ரேஞ்சிக்கு உள்ள ஹீரோயிங்களை நம்ம ஆயில்யன் பக்கம் தள்ளிவிட்டுடலாம்.
ரொம்ப பொறுமைசாலி சமாளிச்சிப்பாரு..என்ன நாஞ்சொல்லறது குசும்பரே:))))///

செஞ்சிடலாம் :)))

*******************************
ரசிகன் said...
// உணவு துறை: G3

கால்நடை துறை (கோழியும் அடக்கம்) : டாக்டர்.காயத்ரி////

கோழியும் அடக்கம் என்றுதானே சொன்னேன், விட்ட என்னையே அடக்கம் செய்ய வெச்சிடுவீங்க போல!!!

*************************

said...

Boston Bala said...
கூல் :))
///

நன்றி:))

said...

எங்கள் தலைவர் டிபிசிடிக்குப் பதவி தராததால் எ.ஏ.தி.க இந்த அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்கிறது...

said...

எங்கள் அன்புத் தம்பி கோபிக்கு பதவி குடுக்காததாலும் உப்புசப்பில்லாத ஆசிரிய நலத்துறை [இங்கியுமா]நான் பதிவியை ராஜினாமா செஞ்சிட்டு எதிர் கட்சிக்கு தாவுகிறேன்[புதுசா ஆரம்பிச்ச கட்சி நாந்தேன் முதல்வர் அக்கா[ம்மா] வாழ்கன்னு சொன்னாலே மந்திரி பதவி உண்டுங்கோ.

said...

ஜெகதீசன் said...
எங்கள் தலைவர் டிபிசிடிக்குப் பதவி தராததால் எ.ஏ.தி.க இந்த அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்கிறது...///

அவருக்கும் பதவி கொடுத்தாச்சுப்பா!!

*****************************

கண்மணி said...
எங்கள் அன்புத் தம்பி கோபிக்கு பதவி குடுக்காததாலும் உப்புசப்பில்லாத ஆசிரிய நலத்துறை [இங்கியுமா]நான் பதிவியை ராஜினாமா செஞ்சிட்டு எதிர் கட்சிக்கு தாவுகிறேன்[புதுசா ஆரம்பிச்ச கட்சி நாந்தேன் முதல்வர் அக்கா[ம்மா] வாழ்கன்னு சொன்னாலே மந்திரி பதவி உண்டுங்கோ///

கொஞ்சம் உப்பு வேண்டும் என்றாலும் கொடுக்கிறேன் போட்டுக்கிலாம் உப்புசப்பு வந்துவிடும்! இதுக்காக எல்லாம் நீங்க தனி கட்சி ஆரம்பிக்க கூடாது! :)))

கோபி தம்பி என்பதால் குடும்ப அரசியல் ஆகிவிடுமே என்பதால் கொடுக்கவில்லை:))

************************