Sunday, April 29, 2012

நித்தியானந்தா ஸ்பெசல் 29-04-12




டரியள் டக்ளஸ்:

நித்தி: எனது ஆசிரமத்தில் கல்வி பணியாற்றுவது போல மதுரை ஆதீன மடத்திலும் கல்வி பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

டக்ளஸ்: நண்பன் படத்தில் விஜய் மாத்துவது மாதிரி ஒரு எழுத்த எவனோ தப்பா மாத்திட்டான்....திரும்ப சரி செஞ்சி நித்திக்கு ஒரு காப்பி அனுப்புங்கப்பா!

******************
மதுரை ஆதினம்: சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர் குணம் போன்ற தகுதியடையவனாக இருக்கிறேன். 

/நித்தியானந்த சுவாமியை நியமித்து சம்பிரதாயபடி ஏற்று உள்ளோம். இவர் எழுச்சிமிக்கவர், ஆற்றல் மிக்கவர்.


டக்ளஸ்: இப்ப தெரியுதுய்யா எப்படி இவரு செலக்ட் ஆனாருன்னு.

***********
நித்தி: மதுரை ஆதீனம் எனது வயதை விட மிக பெரியவர். அனுபவசாலி.//

டக்ளஸ்: அடப்பாவி அவருமா?

நித்தி: உலக அளவில் சிறந்த ஆன்மீகவாதிகளின் பெயர்களை வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள ஸ்ரீரவி சங்கர், அமிர்தானந்தமயி, குருதேவ், என் பெயர் இடம் பெற்றுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.//

டக்ளஸ்: ராசா நீ வெளிநாட்டு பத்திரிக்கையான வொயிட் ஹவுஸ்ல வரவேண்டிய ஆளுய்யா...என்ன கொஞ்சம் லைட்டிங் பத்தல..

*********
நித்தி: எனது ஆசிரமத்தில் உள்ள டாக்டர்கள், என்ஜினீயர்கள், படித்த சன்னியாசிகள் 50 பேரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க மதுரைக்கு அனுப்பி வைப்பேன்.

டக்ளஸ்: நீ எவ்வளோ பேரை வேண்டும் என்றாலும் அனுப்பு ராசா...நாங்க ஒரே ஒரு கேமிரா மேனை மட்டும் அனுப்பி வைக்கிறோம்.

*********
நித்தி: மதுரை ஆதீனத்துக்குட்பட்ட 4 கோவில்கள் உள்ளது. 4 கோவில்களுக்கும் இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இன்று முதல் ஆதீன மடத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படும். 24 மணி நேரமும் இது வழங்கப்படும்.

டக்ளஸ்: டாய் டாய் வருவதுக்கு முன்னாடி முதல்வன் படம் பார்த்துட்டு வந்தியா ராசா...ரொம்ப ஓவரா போற ஆமா! சன் டிவிக்கு மாசம் ஒருமுறை கேசட் வழங்க வேண்டும் என்பது என்னை மாதிரி ரசிகர்களின் வேண்டுகோள்.

*******
செய்தி: ஆதீனத்திற்குள் புகுந்த இந்து மக்கள் கட்சியினர், திருஞானசம்பந்தரின் பாடல்களைப் பாடினர். பதிலுக்கு நித்தியானந்தாவின் புகழை அவரது ஆதரவாளர்கள் பாடியதால் மோதல் சூழல் ஏற்பட்டது. 

டக்ளஸ்: அடப்பாவிங்களா போராட்டம் ஏதோ செஞ்சிருக்காய்ங்கன்னு பார்த்தா பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்காய்ங்கய்யா!

9 comments:

said...

ROTFL :)

said...

ஜெய் நித்தி டார்லிங் :)

said...

வார்த்தைக்கு வார்த்தை பின்னி பெடல் எடுத்திடீங்க போங்க

said...

pineeteenga

said...

செம ! பட கமண்ட்டை விட கீழே உள்ளது பின்னிடுச்சு !

said...

2 மாசமா தூங்கிட்டுருந்தீங்க, உங்களையே ‘எழுப்பிட்டாரு’ இந்த ப்ரேமானந்தா, இல்லை நித்யானந்தா! உண்மையிலேயே ‘எழுச்சி’ மிக்கவர் தான் இந்த ஆளு! - ஜெ.

said...

;) simply great. Enjoyable post.

said...

நிஜமாலுமே உங்களுக்கு குசும்பு அதிகம் சார்!!

said...

சிரிப்பா சிரிக்குது தமிழகமே!
பதிவர்களை வாழ வைக்கும் நித்தி வாழ்க!
நேரம் இருப்பின் கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா? வாசிக்கவும்.
http://tnmurali.blogspot.com/2012/07/Kapildev-Amnesty.html